இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, May 03, 2013

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தமிழகத்திலிருந்து 97 பேர் வெற்றி

  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தமிழகத்திலிருந்து 97 பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்டப் பணிகளுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 3) வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் 998 பேர் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றனர். கேரளத்தைச் சேர்ந்த ஹரிதா வி. குமார் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். வெற்றி பெற்றவர்களில் சுமார் 10 சதவீதம் (97 பேர்) தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழ் வழியில் எழுதிய 2 பேர் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 29 பேர் இந்த ஆண்டு கூடுதலாக சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

தமிழக அளவில் ஏ.அருண் தம்புராஜ் 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் தற்போது ஐ.பி.எஸ். அதிகாரியாக கர்நாடகத்தில் பணியாற்றி வருகிறார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் டாக்டர் டி. பிரபு ஷங்கர் (29) அகில இந்திய அளவில் 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றது தொடர்பாக அவர் கூறியது: நான் எம்.பி.பி.எஸ்., எம்.டி. முடித்துள்ளேன். சமூக நல மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்றுள்ளேன். சிறிய வயதிலிருந்தே ஐ.ஏ.எஸ்.-ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இப்போது 2-ஆவது முயற்சியிலேயே அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் தேர்ச்சியடைந்துள்ளேன் என்றார் அவர். ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற மொழி முக்கியமல்ல: ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழ் வழியில் எழுதி 91-ஆவது ரேங்க் பெற்றுள்ளார் காஞ்சிபுரம் மாவட்டம், அனகாபுத்தூரைச் சேர்ந்த கங்காதரன் (30).

சிஇஓ அலுவலகம் வர தேவையில்லை வினாத்தாள் மையங்கள் மூலம் பிளஸ் 2 மார்க் சீட் விநியோகம்

பள்ளிகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வினாத்தாள் மையங்களில் வழங்கப்படும் என்பதால் தலைமையாசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு வர தேவையில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது. கடந்த ஆண்டு வரை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை பெற்றுச் சென்றனர்.

இந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.அதன்படி, மாவட்டங்களில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் உதவி தொடக்க கல்வி அலுலர்களுக்கான கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில் பள்ளிகளின் தலைமையாசியர்கள், முதல்வர்களிடம் இருந்து பள்ளிகள் குறித்த விவரங்கள் சேகரித்து கணினியில் பதிவு செய்து அரசு தகவல் மையத்திற்கு அனுப்பப்பட்டது.மே 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்படும் நேரத்திற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். உரிய நேரம் வரை பட்டியலை பிரிக்க கூடாது.

6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வு வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்ட மையங்களின் (குறிப்பிட்ட பள்ளிகள்) பொறுப்பாளர்களுக்கு மதிப்பெண் பட்டியல்கள் அனுப்பி வைக்கப்படும். அந்தந்த பள்ளிகளின் பெயரில் சீலிடப்பட்ட கவர்களில் மதிப்பெண்கள் பட்டியல் வைக்கப்பட்டி ருக்கும். வினாத்தாள் மையங்களில் இருந்து மதிப்பெண்கள் பட்டியலை தலைமையாசிரியர்கள் காலை 9 மணிக்கு முன்பாக வந்து பெற்றுச் செல்ல வேண்டும். இதனால் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் அனைவரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை. தலைமையாசிரியர்கள் தங்களது பள்ளிகளில் மே 9ம் தேதி காலை 10 மணிக்கு மதிப்பெண் பட்டியலை ஒட்ட வேண்டும். இந்த மதிப்பெண் பட்டியலை, இணையதளங்களில் வெளியாகும் மதிப்பெண் பட்டியலுடன் ஒப்பிட்டு பார்த்து கொள்வதற்காக, அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் பிராட்பேண்ட் இணைப்பு வசதி ஏற்படுத்த முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்த வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளிகள் அனைத்திலும் பிராட்பேண்ட் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த இணைப்புகளுக்கான கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் இருந்தால், பள்ளி வசதி கட்டணத்தில் செலுத்தி பிராட்பேண்ட் இணைப்பை உபயோகத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளி கல்வி இயக்குநர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

10, 12–ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. முடித்த மாணவர்களுக்கு நேரடி இரண்டாமாண்டு பட்டய படிப்பு விண்ணப்ப படிவங்கள் 6–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை வழங்கப்படுகிறது

  தமிழக அரசு இன்றிரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– 2013–14–ம் கல்வியாண்டிற்கான, 12–ம் வகுப்பு மற்றும் 10–ம் வகுப்பு, 2 வருட ஐ.டி.ஐ. பயின்ற மாணவர்களுக்கு நேரடி 2–ம் ஆண்டு பட்டய படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் 6–ந்தேதி(திங்கட்கிழமை) முதல் 24–ந்தேதி வரை வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  

Thursday, May 02, 2013

அரசு ஆணை எண்.145 அகவிலைப்படி உயர்வு May 2, 2013

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் அரசு இணையதளங்கள்

  பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் அரசு இணையதள முகவரிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in, http://dge3. tn.nic.in ஆகிய இணையதளங்களில் மே 9-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் http://dge3.tn.nic.in என்ற இணையதள முகவரியில் ஜி.பி.ஆர்.எஸ். வசதியுடன் செல்போனிலும் தேர்வு முடிவுகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் உடனடியாக அறிந்துகொள்ளும் வகையில் தேசிய தகவல் மையத்தில் 16 சர்வர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தனியார் இணையதளங்களில் வெளியிடப்படாது என்று அரசு அறிவித்துள்ளது.

எனவே, அரசு இணையதளங்களின் வேகம் குறையாமல் இருக்க 16 சர்வர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டணமில்லை: மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், மாநிலத்தில் உள்ள அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் மாணவ, மாணவியர் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செல்போன், எஸ்.எம்.எஸ். மூலமும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகளைப் பெறுவதற்கான நடைமுறைகள் மே 8-ஆம் தேதி அறிவிக்கப்படும். மாணவர்கள் தங்களது பள்ளிகளில் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி திறந்து முதல் வாரத்திலேயே இலவச பொருட்களை வழங்க கல்வித்துறை உத்தரவு

் அரசு மற்றும் அரசு உதவி சார்ந்த பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறந்து முதல் வாரத்திலேயே அரசின் இலவச பொருட்களை வழங்க வேண்டுமென்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், சீருடை, காலணி, புத்தக பை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஒவ்வொரு வருடமும் அரசு வழங்கி வருகின்றன. அந்த வகையில் வரும் கல்வியாண்டில் அரசின் இலவச பொருட்களை பள்ளி திறந்து முதல் வாரத்திலேயே வழங்குமாறு அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. அரசு உத்தரவின் படி இந்தாண்டு முதல் மாணவர்களுக்கு உலக வரைபடம் வழங்கப்பட உள்ளன.

GO.72 Equal of varous subjects

தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் அரசுப் பள்ளிகளில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வம் தமிழகத்தில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், அரசுப் பள்ளிகளில் சேர மாணவ-மாணவிகள் இடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அரசு, பள்ளிக் கல்வித்துறையை மேம்படுத்த பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி நியமனம், பள்ளிக் கல்வித் துறைக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா புத்தகப் பை, சீருடை மற்றும் கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப் பெட்டி, வண்ணப் பென்சில்கள், புவியியல் வரைபடங்கள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. கல்வி மட்டுமின்றி, மாணவர்களிடையே விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு சதுரங்கம், கைப்பந்து, கேரம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொடர் நடவடிக்கைகளால் அரசுப் பள்ளிகளில் சேர மாணவ-மாணவியர்கள் பெரும் ஆர்வம்காட்டி வருகின்றனர். அரசின் இந்த நடவடிக்கை, அனைத்து மாணவ-மாணவிகளும் சிறந்த கல்வி அறிவு பெறுவதோடு, ஆங்கில அறிவும் பெற வழிவகை செய்யும் என பள்ளித் தாளாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதற்கு, இப்பிரிவினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுதவிர, முப்பருவத் தேர்வு முறை மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், பாடச்சுமையும் குறைந்து அதிக மதிப்பெண் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மாணவ-மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி, சாதிச்சான்றிதழ்களை பள்ளியிலேயே வழங்கும் நடைமுறை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுக்கு மாணவர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழக கல்வித்துறையில் நிகழ்த்தப்பட்டுவரும் முன்னேற்றப் பாதையிலான மாற்றங்கள் மற்றும் அளிக்கப்பட்டு வரும் சலுகைகளுக்கு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளதுடன், முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற மகாகவி பாரதியின் வாக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சீர்மிகு நடவடிக்கைகளால் மெய்யாகி வருகிறது என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் துவங்க தமிழக அரசு தடை

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, தமிழகத்தில், வரும் கல்வி ஆண்டில், புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் துவங்க அனுமதி கிடையாது என, ஆசிரியர் கல்விக்கான தேசிய குழு அறிவித்துள்ளது. ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு, போதிய அளவிற்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, இந்த முடிவை எடுத்துள்ளது. தமிழகத்தில், ஏற்கனவே தேவைக்கும் அதிகமான எண்ணிக்கையில், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருவதையும், குறிப்பாக, இரண்டு ஆண்டு பட்டயப் படிப்பை வழங்கும் ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களுக்கு, மாணவர் மத்தியில், போதிய வரவேற்பு இல்லாத நிலையையும், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலிடம், தமிழக அரசு சுட்டிக் காட்டியது. இதனால், "வரும் கல்வி ஆண்டில் (2013-14), புதிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டாம்" என தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், வரும் கல்வி ஆண்டில், தமிழகத்தில், புதிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள் துவங்க, அனுமதி கிடையாது என, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (என்.சி.டி.இ.,) அறிவித்துள்ளது. 

அதே நேரத்தில், புதிதாக, பி.எட்., கல்லூரிகள் துவங்க, எவ்வித தடையும் இல்லை. எட்டு ஆண்டுகளுக்கு முன் வரை, ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சிக்கு, நல்ல வரவேற்பு இருந்தது. அப்போது, அரசுப் பள்ளிகளில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான வகுப்புகளில், ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு படித்தவர்கள், நியமனம் செய்யப்பட்டனர்.  அதன்பின், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே, நியமனம் செய்யப்படுகின்றனர். ஆறாம் வகுப்பில் இருந்து, பி.எட்., படித்தவர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.இதனால், ஆசிரியர் கல்வி பயிற்சி பெற்றவர்களுக்கு, வேலை வாய்ப்பு, 90 சதவீதம் அளவிற்கு குறைந்துவிட்டது.  இதனால், இந்த பயிற்சியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. ஏற்கனவே இந்த பயிற்சியை முடித்துவிட்டு, 1.5 லட்சம் பேர், ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எட்டு ஆண்டுகளுக்கு முன், 750 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் இருந்தன.

தற்போது, 500ஆக குறைந்துவிட்டது.  ஒவ்வொரு ஆண்டும், 50 முதல், 100 கல்வி நிறுவனங்கள் வரை மூடப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் இருந்த போதும், வெறும், 8,000 இடங்கள் மட்டுமே நிரம்பின என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற காரணங்களினால், புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் துவங்க, தமிழக அரசு தடை விதித்துள்ளது. 

தமிழக அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு : முதல்வர்

தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 8% உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் இன்று அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 8% உயர்த்தப்படும். இது கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்பட உள்ளது. இது குறித்து முதல்வர் விதி எண் 110ன் கீழ் அறிவித்தது..

. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 1.1.2013 முதல் அவர்களுடைய அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் எட்டு விழுக்காடு உயர்த்தி, தற்போதுள்ள 72 விழுக்காடிலிருந்து 80 விழுக்காடாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது போல், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியையும், அவர்களது அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் எட்டு விழுக்காடு உயர்த்திட உத்தரவிட்டுள்ளேன். இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள்; ஆசிரியர்கள்; வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள்; அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள்; ஊராட்சி உதவியாளர்; எழுத்தர்; ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும்.

இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என சுமார் 18 லட்சம் பேர் பயனடைவார்கள். இந்த அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி 1.1.2013 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1,639 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் - என்று கூறியுள்ளார்.

Tuesday, April 30, 2013

TNOU Term End Results.January 2013

ரயில் டிக்கெட் முன்பதிவு, 60 நாட்களாக குறைப்பு *இன்று முதல் அமல்

ரயில் டிக்கெட் முன்பதிவு, இன்று முதல், 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. காலை, 8:00 மணியிலிருந்து, இந்த மாற்றம், அமலுக்கு வருகிறது. ரயிலில் பயணம் செய்வதற்கு, 120 நாட்கள் வரை, முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருந்தது. இவ்வசதியில், இடைத்தரகர்கள் மற்றும் டிராவல் ஏஜன்ட்கள் மூலம், முறைகேடு நடப்பதாக, ரயில்வே அமைச்சகத்திற்கு, புகார் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி, பயணிகள் வசதி கருதி, ரயில் டிக்கெட் முன்பதிவு, இன்று முதல், 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, இன்று காலை, 8:00 மணியிலிருந்து அமலுக்கு வருகிறது. நேற்று வரை, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களால், 120 நாட்கள் வரை, முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பயணிகளுக்கான, 120 நாட்கள் பயன்பாட்டில், எந்த மாற்றமும் இல்லை.

வெளிநாட்டினர், 360 நாட்கள் வரை, முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இவ்வசதியிலும் எந்த மாற்றமும் இல்லை என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அடையாள அட்டை முறை வருமா? ரயில் டிக்கெட் முன்பதிவு மாற்றம் குறித்து, பயணிகள் தரப்பில் கூறுகையில், "ரயில் டிக்கெட் முன்பதிவு, 60 நாட்களாக குறைக்கப்பட்டதால், இடைத்தரகர்கள், டிராவல் ஏஜன்ட்களின் முறைகேடு குறையும். ரயில்வேயின் முடிவு, வரவேற்கத் தக்கது' என்றனர். மற்றொரு தரப்பினர் கூறியதாவது: முன்பதிவு நாட்களை குறைத்து இருக்க @வண்டாம். 120 நாட்கள் முன்பதிவு அமலிலிருந்த போது, விழா காலங்களில் பயணம் செய்ய, பல நாட்களுக்கு முன், முன்பதிவு செய்து, பயணத்தை உறுதி செய்ய முடிந்தது. முன்பதிவில், முறைகேடு நடப்பதை தவிர்க்க, இந்த மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது

. முறைகேடுகளை தடுக்க, "தத்கால்' டிக்கெட் முன்பதிவிற்கு , அடையாள அட்டை எண் கேட்பது போல, சாதாரண முன்பதிவிற்கும், அடையாள அட்டை எண்ணை, விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும் என, கட்டுப்பாடு கொண்டு வரலாம். புதிய நடைமுறையை, மூன்று மாதத்துக்கு ஆய்வு செய்து, பிரச்னை தீராவிடில், பழையபடி, 120 நாட்களாக மாற்றியமைக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

களைப்பு இல்லாத உழைப்பு : -இன்று உலக தொழிலாளர் தினம்-

   தொழிலாளர் இல்லையெனில் உலகம் இயங்காது. எத்தனையோ வித தொழிலாளர்கள் உலகளவில் உள்ளனர். அவர்களுக்கு உரிய உரிமைகள் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதே இத்தினத்தின் நோக்கம். சமூக, பொருளாதார உலகில் தொழிலாளர்களின் பங்களிப்பை பாரட்டும் விதமாகவும், அவர்களை கவுரவிக்கும் விதமாகவும் மே 1ம் தேதி, உலக தொழிலாளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு "8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர தூக்கம்' என்ற வகையில் இருக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

இந்தியா உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தினத்துக்காக விடுமுறை விடப்படுகிறது. எப்படி வந்தது முன்பெல்லாம், தற்போது உள்ள நடைமுறைகள் தொழிலாளர்களுக்கு கிடைத்ததில்லை. 18ம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் கட்டாயம், வேலை செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. தகுதியான ஊதியமும் வழங்கப்படுவதில்லை. இதை எதிர்த்து, தொழிலாளர்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அதன் மூலம் அவர்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. இப்போராட்டங்கள் தான், தொழிலாளர் தினம் உருவாக காரணமாக அமைந்தன.

ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன்10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது- இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு மே-வில் நடைபெறுமா? - ஆசிரியர்கள் எதிர்பார்பு

இரட்டை பட்டப்படிப்பு குறித்த வழக்கு மீண்டும் இடைக்கால தீர்ப்பை இரத்து செய்ய கோரி மனு செய்யப்பட்டு, வரிசை எண்.26-வது இடத்தில் நீதியரசர்கள் K.N.பாஷா மற்றும் S.நாகமுத்து ஆகயோரின் முன்னிலையில் இன்று (30.04.2013) "சிறப்பு வழக்கு" (SPECIALLY ORDERED CASE) ஆக விசாரணை நடைப்பெற்றது.

இரட்டை பட்டம் மற்றும் மூன்றாண்டு பட்டம் முடித்தோர் அகிய இரு தரப்பிலும் வாதங்கள் வைக்கப்பட்டது. நீதிபதிகள் அரசின் நிலை குறித்து அரசு வழக்கறிஞரிடம் கேட்கையில், அரசிடம் ஆலோசித்துவிட்டு பதிலளிப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து. இரு தரப்பு இறுதி விசாரணை ஜுன் 10க்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். அதுவரை  இடைக்கால தடை மற்றும் விசாரணை நீடிப்பதால், பதவியுயர்வு மற்றும் பணி நியமனம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என நீதிபதிகள் அரசு தரப்பிற்கு தெரிவித்ததாக இவ்வழக்கை தொடுத்தவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. Share

அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

் அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களை மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்த இயலும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட ஓர் அரசாணையில், அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களை நியமிப்பதற்காக தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வில் அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களோடு, தனியார் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களும் கலந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. அந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், தமிழக அரசின் அந்த அரசாணை செல்லாது என்று கூறி, அதனை ரத்து செய்துள்ளார். அரசுக் கல்லூரிகளில் பயிலும் செவிலியர்களுக்காக மக்களின் பணத்தை அரசு பெருமளவு செலவு செய்கிறது. மக்கள் பணத்தில் பயின்று செவிலியர்களாக தகுதி பெற்ற அவர்களின் சேவை மக்களுக்கு திரும்பக் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஆகவே, அந்த செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட வேண்டும். தங்களின் சொந்த செலவில் தனியார் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்கள், அரசுப் பணத்தில் அரசுக் கல்லூரிகளில் பயின்றவர்களுக்கு இணையாக தங்களையும் கருத வேண்டும் என்று கோருவதை ஏற்க இயலாது.

இதே போன்று வேறொரு வழக்கில் ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளது. அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களை மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்த வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உயர் நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பை சற்றும் கவனத்தில் கொள்ளாமலேயே தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களும் அரசு மருத்துவமனைகளில் பணி நியமனம் பெறுவதற்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கலாம் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இது உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு முரணாக உள்ளதால், அரசாணை ரத்து செய்யப்படுகிறது. அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி ராமசுப்பிரமணியன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.