இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, August 28, 2018

பிறந்த தேதி தவறாக இருந்தால் பணி நீக்கம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியில் தவறு இருந்தால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்' என அதிகாரிகள் எச்சரித்துஉள்ளனர்.மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசு பணிகளுக்கு, சரியான பிறந்த தேதி ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த விஷயத்தில், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை ஆதார மாக பயன்படுத்தி, பிறந்த தேதி நிர்ணயிக்கப்படுகிறது.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.தமிழக அரசின் தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவுப்படி, அனைத்து இன்ஜி., கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் பள்ளி கல்வி அலுவலகங்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், கூறப்பட்டுள்ள தாவது:

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களின் பிறந்த தேதியில் தவறு உள்ளதாக, திருத்தம் கோரி விண்ணப்பித்தால், அதற்கான ஆதார ஆவணமாக, சம்பந்தப்பட்டவர்களின், 10ம் வகுப்பு சான்றிதழை ஆய்வு செய்ய வேண்டும்.பத்தாம் வகுப்பு முடிக்க, 1977 வரை, 15 வயதும்; 1978 முதல், 14 வயதும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.எனவே, பத்தாம் வகுப்பு சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே, வயதில் திருத்தம் செய்ய வேண்டும்.வயது மாற்றமாக இருந்தால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், விசாரணை முடியும் வரை, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.இறுதி விசாரணைக்கு பின், வயதில் தவறு இருந்தால், பணி நீக்கம் செய்வதுடன், அவருக்கான அரசு பலன்களும் ரத்து செய்யப்பட வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment