இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, August 21, 2018

(தனித்தேர்வர்கள்) எஸ்.எஸ்.எல்.சி. தேறியவர்கள், பிளஸ்-2 தேர்வு, இனி நேரடியாக எழுத முடியாது அரசு தேர்வு இயக்குனர் அறிவிப்பு


தமிழகத்தில் இதுவரையில் எஸ்.எஸ்.எல்.சி. (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு எழுதி தேறியவர்கள், தனித்தேர்வர்களாக பிளஸ்-2 தேர்வை நேரடியாக எழுதலாம் என்ற நிலை இருந்து வந்தது.

இப்போது கடந்த மார்ச் மாதம் முதல் பிளஸ்-1 தேர்வு அரசு பொதுத்தேர்வாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்-2 தேர்வை நேரடியாக எழுத முடியாது. இவர்கள் பிளஸ்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின்னர்தான், பிளஸ்-2 தேர்வு எழுத முடியும்.

நடைபெறவுள்ள செப்டம்பர் மாத பிளஸ்-2 தேர்விற்கு, இத்துறையால் நடத்தப்பட்ட பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மற்றும் தனித்தேர்வர்கள் தோல்வியுற்ற அல்லது வருகை புரியாத பாடங்களில் தேர்வு எழுத ஆன்லைனில் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கலாம். இவர்களுக்கு செப்டம்பர் 2018 தவிர்த்து, இன்னும் ஒரு வாய்ப்பு (2019 மார்ச்) மட்டும் தரப்படும்.

இவர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு சேவை மையங்களுக்கு சென்று 27-ந் தேதி முதல் செப்டம்பர் 1-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பிட்டுள்ள தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தனித்தேர்வர்கள் ஆயிரம் ரூபாய் கூடுதல் கட்டணத்துடன் ‘சிறப்பு அனுமதி திட்டத்தில்’ செப்டம்பர் மாதம் 3 மற்றும் 4-ந் தேதி ஆகிய இரு தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த தகவல்கள், அரசு தேர்வு இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டு உள்ள அறிக்கையில் இடம் பெற்று உள்ளன.

No comments:

Post a Comment