இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, July 04, 2018

கற்றதும் பெற்றதும்-2

கற்றதும் பெற்றதும் -2
*மணி

ஒரு சிறுகதை இப்படி ஆரம்பிக்கும்..

"Life is like a snooker game.you hit one ball. It hits another.that hits another and that hits another.Ultimately some other ball gets into pocket.

எவ்வளவு நுட்பம் பாருங்கள். வாழ்வும்
கே யாஸ் தியரி போல எப்படியோ ஆரம்பித்து ஒரு காரண காரிய தொடர்புடன் முடிந்துவிடும்.நினைத்துப்பார்த்தால் ஒரு வலைப்பின்னல் போல்.சிறுகதையும் இப்படித்தான்.ஒரு கதை என்பது மூனு சீட்டு விளையாடுவது போல கண்கட்டி வித்தைதான் என்பார் சுஜாதா.

பாவண்ணன்

ஒரு புத்தகத்தை பற்றி பேசுவது என்பது எப்போதும் ஒரு நல்ல வாசகனுக்கு உற்சாக மூட்டும்.அதை பேசும் ஒவ்வொரு கட்டத்திலும் அவன் காலத்தை கடந்து சென்று அதை படித்த காலத்தின் படிக்கட்டில் உட்கார்ந்து திரும்பும் அனுபவம் அவனுக்கு கிடைக்கிறது.
கதையின் மூலம் அவனுக்கு ஏற்பட்ட அனுபவங்களுடன் பொருத்துப் பார்க்கிறான்.

எழுத்தாளர் பாவண்ணனின் வரிகள் இதுபோல் எளிமையானது. நுட்பமானது. ஒவ்வொரு வரிகளையும் அலசுவார்."ஒரு மனிதனின் முதல் 23 வயது முக்கியம்.எல்லாவற்றை பற்றியும் சொந்தமாய் ஒரு பார்வையை உருவாக்கிகொள்ளும் காலம்.பின் எஞ்சிய காலத்தை இந்த அனுபவ ஒளியே கலங்கரை விளக்காய் மாற்றும்.
இப்படிப்பட்ட அனுபவத்தை நல்ல நண்பர்களும் புத்தகங்களுமே எனக்குத் தந்தது.

ஒருநாள் எதெச்சையாய் நூலகத்திலிருந்து எடுத்து வாசித்ததுதான் பாவண்ணனின் ஆழத்தை அறியும் பயணம்" புத்தகம்.காலச்சுவடு பதிப்பகம்

மற்றவர்களின் சிறுகதைகளை தன்னுடைய பாணியில் விளக்கி,
அக்கதைகளின் பின்புலத்தை மிகத்தெளிவாய் வரைவார்.எழுத்தாளர்களே அப்பிடியா சொன்னேன் எனக் கேட்கும் அளவிற்கு அதில் உள்ள உண்மையை உச்சத்தை தொட வைப்பார்.

அவரின் சிறுகதைகள் இன்னும் அபாரமாய் இருக்கும்.இருப்பினும் மற்றவர்களின் சிறுகதைகளை ஆய்வு நோக்கில் எழுதியிருப்பார்.

# "மாடும் மனிதனும் "
விந்தன் எழுதிய கதை.

கதையின் ஆரம்பத்தில் தன் அனுபவத்தை சொல்லி.கதையை கூறுவதால் நிகழ்காலத்தையும்.
அக்கதையையும் ஒப்பிட்டு அறியலாம்."எழுத்தாளர் நாள்தோறும் பெங்களூருவில் கணினி மையத்துக்கு செல்வார். அது அவர் வழக்கமாய்ச் செல்லும் .நண்பரின் கடை.அங்கே தலைமை பொறுப்பில் ஒரு பெண்மணி இருப்பார் முதலாளிக்கே தெரியாத விசயம், பண பரிமாற்றம் என சகலமும் அவள்தான்..ஒரு நாள் திருமண அழைப்பிதழை நீட்டினாள்.அன்று ஊரில் இருந்ததால் நானும் திருமணத்துக்கு சென்றேன். அப்பெண்மணிக்கு ஒரே மகிழ்ச்சி.அன்று அவளின் முதலாளி நண்பர் வராதது ஆச்சர்யமாய் இருந்தது. இருப்பினும் அப்பெண் அதனை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

மேலும் அப்பெண்மணி மணமேடையிலேயே தான் இனி அலுவலகத்துக்கு வர இயலாது. முதலாளிதான் பாவம் என வருத்தப்பட்டு கொண்டிருந்தாள். நானும் வருத்தத்துடன் சரி என சொல்லிவிட்டு அடுத்த வாரம் மையத்துக்கு போனேன். வேறு ஒரு பெண்மணி இருந்தார்.எனக்கு ஆச்சர்யம்.

ஏன் திருமணத்திற்கு வரவில்லை என முதலாளியிடம் கேட்டபோது கணினி பழுதானதால் வரமுடியல.எனக்கு இதுதான் முக்கியம்.என்றார். எனக்கு திகைப்பாய்  இருந்தது.இவ்வளவுதானா ஒரு மனிதனின் உழைப்புக்கு கிடைக்கும் மரியாதை எனத் தோன்றியது.

நாமும் நம்மால் தான் இந்த நிறுவனம் இயங்குதுனு நினைச்சிருப்போம்.ஆனா நாம ஒரு 751வது எலும்பிச்சம் பழ ஸ்பேர் பார்ட்ஸ் என்பது நம்மிள் எத்தினி பேருக்குத் தெரியும்.

"மாடும் மனிதனும்" இக்கதையில் பண்ணைவீட்டில் பல ஆண்டாய் உழைத்துவரும் வேலைக்கார செவலை மாட்டை பராமரித்து வருவான்.ஒருநாள் மாடும் செவலையும் நோயில் விழுந்திடுவார்கள்.இறுதியில் இருவரும் இறந்துவிடுவர். முதலாளி மாடு இறந்ததற்காகதான் அதிகம் வருத்தப்படுவார்.ஏன்? ஏனா மாடு காசாச்சே என்பார்.மனித உழைப்பு எளிமையா கிடைக்கும். மாடு கிடைக்குமா? என்பார்.

அப்படியே அந்த கணிப்பொறி வேலை பார்க்கும் பெண்மணியும் இந்த பண்ணையாளும் ஒருகணம் கண்ணில் வருவார்கள்.

"இத்தொகுப்பில் உள்ள எல்லா கதைகளும் வாழ்வியல் எதார்த்தத்தை பிரதிபலிக்கும். கரிச்சான் குஞ்சு சீட்டாட்டத்தில் பாசிடிவாய் எழுதிய நூறுகள் கதை, இந்திரா பார்த்தசாரதியின் நாசகாரக்கும்பல், பிரபஞ்சன்-பிரும்மம்,கிருஷ்ணன் நம்பியின் மருமகள் வாக்கு, இந்துமதியின் துணி.

#ஒரு கூடைக்கொழுந்து

ராமையா எழுதிய தேயிலை தோட்ட கதையில் தேயிலை கூடுதலாய் பறித்த லட்சுமி எனும் பெண்ணை கங்கானி உதாசினம் செய்ய அடுத்த நாள் நடக்கும் போட்டியில் மீண்டும் ஆணை விட அதிக தேயிலை பறித்து ஜெயிக்கிறாள்

இப்போதும் ஒரு பெண் வாகனத்தில் ஒரு ஆணை முந்திசென்றாலோ, கார் ஓட்டி நடுவழியில் நின்றாலோ ஏளன சிரிப்போடு வெறுப்புடன் பார்ப்பதை இக்கதை காட்டுகிறது.பெண்ணின் வலிமையை இக்கதையில் காணலாம்.

இதே தொகுப்பில் எனக்கு பிடித்த கதை உண்டு.ஒரு பாம்பை அடிக்க ஐந்துபேர் போவார்கள். இரை விழுங்கிய பாம்பு நகரமுடியாமல் கிடக்கும்.இறுதியில் யாரும் பாம்பை அடிக்காமல்
ஐந்து பேரும் வெவ்வேறு காரணம் சொல்லி பயந்துகொண்டு சென்றுவிடுவார்கள்.இது ஒரு படிமம்.நேர்மையும் நேர்மையின்மையும் சந்திக்கும்போது நேர்மையை சந்திக்க அச்சப்பட்ட மனிதன் நழுவுவது போல குறியீடு வைத்திருப்பார்.

பாவண்ணனின் கட்டுரைகள் மிகவும் நுட்பமானதும் அழகியலானதும் ஆகும்.
இதுபோல் ஒட்டகம் கேட்ட இசை முதலிய பல கட்டுரைகளும் வந்துள்ளது.
வாசியுங்கள்

-தொடரும்

தோழமையுடன் மணிகண்டபிரபு

கற்றதும் பெற்றதும்

கற்றதும் பெற்றதும்-1

*மணி

இன்றைய தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியில் மனிதனை உயிரோட்டமாக வைத்திருப்பது புத்தக வாசிப்பே. தொழில்நுட்ப மின்னூலில் காட்சிப்படுத்த முடியாத கற்பனைகளை வாரித்தரும் அன்னையாக விளங்குபவை புத்தகங்களே.அவ்வகையில் சம்பாதித்த பணத்தை சிறிது தானம் செய்வது போலத்தான் ஒரு சிறுபிள்ளை முயற்சியாக மறுவாசிப்பு செய்த புத்தகங்களையும் படித்து ரசித்த பதிவுகளையும் பதிவிடுவது எனும் முடிவு. இப்படி எழுத தூண்டிய நண்பர்களுக்கும்,கற்றதும் பெற்றதும் வாட்ஸப் குழுவில் அனைவருக்கும் காணிக்கையாக்குகிறேன். இதில் குறையோ பிழையோ இருந்தா கோபிச்சுக்காதீங்க.அப்படியே கோபிச்சாலும் வெளிய காட்டிக்காதீங்க.

நூல்:சிறிது வெளிச்சம்

விகடன்

கிழமைகளிலே அவள் வியாழக்கிழமை என்பேன்.அன்று தான் விகடன் வரும் என்பது ஆழ்மனசில் அடித்த ஆணி போல் மனதில் பதிந்தது.2009 ல் பி.எட் பயிலும்போது ஆனந்தவிகடனில் தொடராக வந்தபோதே இத்தொடரை வாரந்தோறும் படித்துவிடுவேன்.

ஒரு தலைப்பு எடுத்துக்கொண்டு அதனை சற்று இயல்பாய் விளக்கி, அதற்கு இணையாக ஒரு குறும்படத்தையோ அல்லது மேலை நாட்டு ஆங்கிலப்படத்தையோ ஒற்றி எடுத்ததுபோல் கூறி முடிவில் சொல்ல வந்த கருத்தை வாசிப்பு உலகத்தில் மேயவிட்டு தருவது எஸ்.ரா வின் ஸ்டைல். பெட்டிச்செய்தியில் ஒரு ஆளுமையின் தகவலுடன். கருத்துச்செறிவுடன் ஒவ்வொரு படைப்பும் புதிய புதிய சிந்தனைகளையும் எண்ணங்களையும் தாங்கி வரும்.

அவ்வப்போது கட்டுரைகளில் வரும் வாழ்வியல் வரிகள் எப்போதும் இனிக்கும் தேனாகும்.உ.ம்

#வீட்டுச்சண்டை

அன்றாடம் ஒவ்வொரு வீட்டில் நடக்கும் பிரச்சனைதான்.

இந்தச்சண்டையில் யார் எதிரி,யார் பெரியவர் என அறிந்துகொள்ளவே முடியாது.நானே வீட்ல சண்டைபோட்டுட்டு வந்திருக்கேன் நீ ஏன் உயிரை வாங்குற என்ச் மற்றவர் மீது எரிந்து விழுவாங்க.

இதுபற்றி பிரேம்சந்த் எழுதிய உறவு எனும் கதை எழுதியிருப்பதாக எஸ்.ரா கூறுகிறார்.

"கிராமத்தில் பெற்றோரைவிட்டு நகரத்தில் இருக்கும் மகன் ஒரு நாள் கிராமத்துக்கு வருகிறான். அம்மா கோபித்துக்கொள்கிறார்.

ஒரே கோபம்.இவனுக்கு புரியவில்லை.அப்பா விளக்குகிறார்.உன் மேல் உள்ள பாசம்தான் சண்டைபோட வைக்குது.அப்பா காரணத்தை கூறி அவனை வழியனுப்பி வைக்கிறார்.அவனும் அதை உணர்ந்து அடிக்கடி வருவதாய் கூறி செல்கிறார்.

"கோபத்தில் இருந்து உருவானதை விட சிரிப்பில் இருந்தே அதிக சண்டை உருவாகின்றன.இதை தவறாய் புரிந்துகொள்வோர் அதிகம்.குறிப்பாக ஸ்மைலிகள் இன்றைய நாளில்..

ஒரு உரையாடலில் சிரிப்பதாய் நண்பருக்கு ஸ்மைலி அனுப்பினேன்.அதை தவறாய் புரிந்துகொண்டு இருநாள் பேசாமல் இருந்தார்.பின்பு விளக்கியபின்பே சமாதானம் அடைந்தார்.ஒருவரை ஆன்லைனில் சமாதானத்தபடுத்துவது அவ்வளவு இயல்பான காரியமல்ல என புரிந்துகொள்ள முடிந்தது.

#தத்துவார்த்த வரிகள்

*நோயைவிட கொடியது தனிமை

*சொற்கள் விதையாக்குவதும் வீணாக்குவதும் நம் கையில்தான் இருக்கிறது

*கஷ்டத்தைவிடவும் அதை மூடி மறைப்பதுதான் பெருந்துயரம்

*நோயும் மரணமும் பெண்களை நெருங்கி வரும்போது அதை தடுக்க எவருக்கும் விருப்பம் இருப்பதில்லை 

*கடவுளின் மெளனத்தைவிட மனிதர்களின் மெளனம் கொடுமையானது

#இவரால் அறிமுகம் ஆன what is it எனும் குறும்படம்.அப்போது மிகுந்த அதிர்வலை ஏற்படுத்தி அதனை மேடைப் பேச்சாளர்களே இல்லை எனலாம்.

எஸ்.ரா வின் அனுபவ மொழிகளும் சம்பவங்களும் ஒவ்வொரு கட்டுரையும் இன்னும் உயிர்ப்பிக்கும்.உலகில் அதிகம் புரிந்துகொள்ளாதது எது எனும் கேள்விக்கு..

"உலகில் அதிகம் புரிந்து கொள்ளப்படாதது திரும்ணமாகி 10 வருடங்கழித்து பெண்ணுக்குள் உருவாகும் தனிமையும் வெறுமையுமே ஆகும். என்பார்.எவ்வளவு உண்மை மொழிகள் என கட்டுரையின் இறுதியில் தெரியும்.

இதுபோல் எண்ணற்ற சுவாரஸ்ய தகவல்கள் இதில் உள்ளன.பல நண்பர்களுக்கு பரிந்துரைத்து, அவர்கள் இதனை கொண்டாடியுள்ளனர். ஒருவர்  மட்டும் முதலில் ஒன்றும் கூறாமல் பின்பு என் தொல்லை தாங்காமல் ஒரு மூன்று பக்கத்திற்கு இப்புத்தகம் பற்றி கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்.

.ஆரம்பநிலையில் ஒருவர் வாசிப்பின் சுவை அறிய வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

-தொடரும்

நன்றியுடன் மணிகண்டபிரபு

5-7-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் :

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.


உரை:

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை

பழமொழி :

A drawing man will catch at a straw

நீரில் மூழ்குபவனுக்கு துரும்பும் தெப்பமாகும்

பொன்மொழி:

உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து
வரவேண்டும். -மான்ஸ்பீல்டு.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28 ஆம் நாள்

2.நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?
இந்தியா

நீதிக்கதை :

காகமும் நாய்க்குட்டியும் - நீதிக் கதைகள்
(Crow and Dog Moral Story)

ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது. ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது. இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.

என்ன காக்கையாரே! ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது.

அதற்கு காகம், மனிதர்கள் மற்றப் பறவைகளை அன்புடன் வளர்க்கின்றார்கள். அவைகளின் செயல்களைப் பாராட்டுகின்றார்கள் ஆனால் என்னை வெறுத்து. கல்லால் எறிந்து துரத்துகிறார்களே ஏன்? என்று கேட்டது காகம்.

இதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான். இதை நீங்கள் இல்லாது செய்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள், என்றது நாய்க் குட்டி

எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் உள்ளன? கடைமை, சுத்தம், இப்படிப் பல நல்ல குணங்களில் நாங்கள்தான் சிறந்தவர்கள்!என்று சொன்னது காகம்.

உண்மைதான்! என்றது நாய்க் குட்டி

பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத்தந்ததும் நாங்கள்தான்! என்று பெருமையோடு சொன்னது காகம்.

ஆமாம் அதுவும் உண்மைதான்! என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி.

இப்படி நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும், மற்றப் பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்?

குயில் கூவும்போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள். மயிலாடும் போது அதை இரசித்துப் பாராட்டுகிறார்கள். கிளியை வீட்டில் வளர்த்து பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள்.அனால் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தும் எம்மினத்தைக் கண்டாலே துரத்துகிறார்களே ஏன்? என்று மீண்டும் கேட்டது காகம்.

ஏன் என்று நான் சொல்லுகிறேன். உங்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும். உங்களிடம் இருக்கும் சில தீய குணங்களால் தான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள், என்று கூறியது நாய்க்குட்டி

அப்படி என்ன தீய குணங்கள்? என்று கேட்டது காகம்.

திருடுதல், ஏமாற்றுதல், என்று சொன்னது நாய்க்குட்டி. காகம் தலை குனிந்தது.

நீதி: ஒருவரிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தாலும். அவரின் ஒரு சிறு தீயசெயல் அவரை, அவரின் அத்தனை நல்ல பண்புகளில் இருந்தும் மறைத்து அந்தத் தீயசெயலே முன்னிற்கும்.

இன்றைய செய்தி துளிகள் :

1. நீட் தேர்வு பயிற்சியில் சேருமாறு மாணவர்களை தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தக்கூடாது : தமிழக அரசு உத்தரவு.

2.எம்.இ படிப்புகளுக்கு ஜூலை 7 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை அறிவிப்பு.

3.வீட்டில் இருந்தபடியே சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறும் புதிய செயலி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

4.நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.200 அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

5.கிரிக்கெட்டில் தோற்றாலும் கால்பந்தில் வெற்றி கண்ட இங்கிலாந்து! பெனால்டியில் வென்று காலிறுதிக்குத் தகுதி!

Tuesday, July 03, 2018

டி.எல்.எட்., தேர்வு தேர்ச்சி: ஆசிரியைகளுக்கு சிக்கல்


தேசிய அளவில் தனியார் பள்ளிகளில் பி.எட்., தகுதி இல்லாத ஆசிரியர் மத்திய அரசின் தேசிய திறந்த வெளி கல்வி நிறுவனத்தின் (தி நேஷனல் ஓபன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கூலிங் - என்.ஐ.ஓ.எஸ்.,) டி.எல்.எட்., (ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு) கல்வி தகுதி பெற வேண்டும், என மத்திய அரசு உத்தரவிட்டது.

டி.எல்.எட்., தகுதியை 2019க்குள் பெற வேண்டும் என்ற நிபந்தனையால் உடல் ரீதியான மற்றும் மகப்பேறு காலங்கள் போன்ற காரணங்களால் ஆசிரியைகள் பலர் இத்தகுதி பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் 1 - 8 ம் வகுப்பு கற்பிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் தங்கள் பணியாற்றும் பள்ளியில் இருந்து என்.ஐ.ஓ.எஸ்., மூலம் விண்ணப்பித்து முதலாம் ஆண்டு தேர்வு எழுதினர்.தற்போது இரண்டாம் ஆண்டு பாடத்திட்டங்கள் சனி, ஞாயிறு அன்று ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட பயிற்சி மையங்களில் நடத்தப்படுகிறது.

ஓராண்டு நிறைவு செய்த நிலையில் ஆசிரியைகள் பலர் மகப்பேறு காலத்தை சந்திக்க நேர்ந்ததால் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டி.எல்.எட்., தகுதி இல்லாமல் பள்ளியில் பணியை தொடர முடியுமா என குழப்பம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு இத்தேர்வை முதன் முறையாக கொண்டு வந்துள்ளது. தற்போது வரை முதலாம் ஆண்டு வரையான வழிகாட்டுதல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

மகப்பேறு காலம் மற்றும் வேறு பள்ளிக்கு மாறிச் செல்லுதல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் தடை படும் படிப்பை எவ்வாறு முடிக்க வேண்டும் என்ற வழிமுறை குறித்து தெளிவுபடுத்தவில்லை. இச்சர்ச்சைக்கு பின் ஏதாவது வழிகாட்டுதலை மனித வள மேம்பாட்டு துறை வெளியிட வாய்ப்புள்ளது, என்றார்.

Monday, July 02, 2018

இன்று

Covai women ICT

*03.07.2018*

*பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:*

*திருக்குறள் :*

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.

விளக்கம் :

மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே நாட்டின் அரண் (பாதுகாப்பு)ஆகும்.

*பழமொழி :*

Behind an ableman there are always other able man.

ஒரு வித்தகனுக்குப் பின்னால் ஓராயிரம் வித்தகர்கள்.

*பொன்மொழி:*

,ஒரு மனிதன் தன் பிள்ளைகளுக்கு செல்வத்தை சேர்த்து வைப்பதைவிட, உழைக்கும் பழக்கத்தை கற்றுகொடுப்பது அவர்களுக்கு வெற்றியைத் தரும்.
1- ரிச்சர்ட் வாட்லி

*இரண்டொழுக்க பண்பாடு :*

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

*பொது அறிவு :*

1.  மரகதத்தீவு என அழைக்கப்படுவது எது ?

அயர்லாந்து

2.  அண்டார்டிகாவில் இந்தியா அமைத்த 3 ஆவது ஆராய்ச்சி நிலையத்தின் பெயர் என்ன ?  

பாரதி ஆராய்ச்சி நிலையம்

*நீதிக்கதை :*

எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும்.

அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது.

ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும், அது தன்னால் வெளிவர முடியாத ஏதோவொரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும்.

நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும்.

அதற்கே உயிர் பிழைக்க வழி தெரிந்தாலும்  அந்த பதட்டத்தில் அதனது மூளை வேலை செய்யாது.

மனிதனும் பல நேரத்தில் இப்படித்தான் பல பிரச்சினைகளிலிருந்து வெளியே வர தெரிந்தும் பொறுமை இல்லாததால் தனது வாழ்க்கையை துறக்கிறான்.

பிரான்ஸ் மன்னர் மாவீரன் நெப்போலியன் புரட்படையினரால் கைது செய்யபட்டு செயின்ட் ஹெலினா தீவில் தனிமையில் அடைக்கபட்டார் அவரை பார்க்க வந்த அவரது நண்பர் ஒரு சதுரங்க போர்டும் காயின்களும் கொடுத்துவிட்டு போனார் தனிமையில் சதுரங்கத்தில் விளையாடியே நாட்களை கழித்து இறந்தும் போனார் சிறிது காலத்திற்கு முன் அவர் விளையாண்ட சதுரங்க அட்டையை பிரான்ஸ் அரசு ஏலம் விட்டது அதை வாங்கிய நபர் அதை பிரித்து பார்த்த போது ஹெலீனா தீவிலிருந்து தப்பிப்பதற்கான வரைபடம் இருந்தது எப்பேற்பட்ட திறமையான மாவீரன் ஆனால் இனிமேல் தப்பிக்க முடியாது என்ற எண்ணமே நெப்போலியனை அடுத்த கட்ட நகர்விற்கு செல்ல முடியாமல் தடுத்து விட்டது...

சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி 💐

*இன்றைய செய்தி துளிகள் : 03.07.2018*

1.  தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை உத்தரவிட்டுள்ளது.

2.மதுரையில் அரசு அலுவலகங்களில் ஜூலை 2 ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவிட்டிருந்தார். இந்த தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அரசு அலுவலகங்கள், கடைகள், ஓட்டல்களில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுக்கள், கப்கள், பிளாஸ்டிக் ஸ்டிரா போன்ற பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக வாழை, தென்னை மட்டைகள், பாக்கு மற்றும் மூங்கில் பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3.
சேலம் பகுதிகளில் பெய்த மழையை அடுத்து 60 அணியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்

4.: ''அஞ்சல் காப்பீடு திட்டத்தில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது,'' என, தமிழக அஞ்சல் வட்ட முதன்மைத் தலைவர், சம்பத்  கூறியுள்ளார்.

5. சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி வெள்ளி பதக்கத்தை வென்றது.

6. உலக்கோப்பை கால்பந்து போட்டி : காலிறுதிக்குள் நுழைந்தது பிரேசில் அணி

2,283 பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறை


மாநிலம் முழுவதும், 2,283 அரசு தொடக்கப் பள்ளி களில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கும் பணிகள், 42 கோடி ரூபாயில் துவங்க உள்ளன. தமிழக பள்ளிக் கல்வித் துறையில், அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வரிசையில், அரசு பள்ளிகளில், கணினி வசதியுடன் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள, 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன.

இந்நிலையில் புதிதாக, 2,283 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 42 கோடி ரூபாய் செலவில், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன; இதற்கான பள்ளிகளை கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது. இது குறித்து, தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாவட்ட வாரியாக, ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும். ஒரு சரகத்திற்கு, ஐந்து பள்ளிகள் வரை, 403 சரகங்களில் தேர்வு செய்யலாம். இதன்படி, 75க்கும் மேல் மாணவர்கள் உள்ள தொடக்கப் பள்ளிகள்; 100 மாணவர்களுக்கு மேல் உள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கு, பட்டியலில் இடம் தர வேண்டும்.

கூடுதல் மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளுக்கு, முன்னுரிமை தர வேண்டும். தரமான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும். வகுப்பறைகள் நல்ல முறையில் இருக்க வேண்டும். குடிநீர், கழிப்பறை, சுற்றுச்சுவர் மற்றும் மின் வசதிகள் இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளின் படி, பள்ளிகளை தேர்வு செய்து, பட்டியல் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது