இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, February 09, 2017

தகுதி தேர்வில் பங்கேற்கமாவட்ட நிர்வாகம் அழைப்பு


திருப்பூர்:பழங்குடியினர் உறைவிடப்பள்ளிகளில் காலி யாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பட உள்ளது; இது தொடர்பாக, கோவையில் நாளை நடக்கும் தகுதி தேர்வில், தகுதியானவர்கள் பங்கேற்கலாம். இது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:

சென்னை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் நல உண்டு, உறைவிடப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. பழங்குடியினத்தை சேர்ந்த, தகுதியான தேர்வாளர்களை கொண்டு, ஒப்பந்த அடிப்படையில், முற்றிலும் தற்காலிமாக, தொகுப்பூதியத்தில் நிரப்புவதற்கான தகுதி தேர்வு, கோவை அவிநாசி ரோடு பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரியில், நாளை நடக்கிறது.

இத்தேர்வில் பங்கேற்க தகுதியான, பழங்குடியினத்தை சேர்ந்த தேர்வாளர்கள், காலை, 7:00 மணிக்கு, அசல் மற்றும் நகல் சான்றுகளுடன், கல்லூரி அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும். கல்வி சான்றுகள், ஆதார், வாக்காளர் அட்டை, சாதிச்சான்று, இருப்பிடச்சான்று, ரேஷன் கார்டு, ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி சான்று, முன் அனுபவச்சான்று, வேலைவாய்ப்பு பதிவு அட்டை உள்ளிட்டவற்றுடன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரை அணுகலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

EMIS -tirupur ceo instruction

Wednesday, February 08, 2017

ஏடிஎம் களில் பணம் எடுக்கும் கட்டுப்பாடு மார்ச் 13ல்..நீக்கம்!


வங்கி மற்றும் ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுப்பதற்கு உள்ள கட்டுப்பாடு, மார்ச், 13ல் முழுவதுமாக நீக்கப்படுகிறது. தற்போது வாரத்துக்கு, 24 ஆயிரம் ரூபாயாக உள்ள பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு, வரும், 20 முதல், 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப் படுகிறது,'' என, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர், ஆர்.காந்தி தெரிவித்தார்.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, 2016, நவ., 8ல் வெளியானது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு காரணமாக, வங்கி, ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது, படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நடப்பு கணக்குகளுக்கு உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கப்படுவ தாக, பிப்., 1ல் அறிவிக்கப்பட்டது. சேமிப்பு கணக்குகளுக்கு, ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுக்கும் கட்டுப்பாடு விலக்கப்பட்டாலும், ஒரு வாரத்தில், 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு மட்டும் தொடர்கிறது.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியாகி, 90 நாட்கள் ஆன நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைகளை, ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல், நேற்று அறிவித்தார்.

அப்போது, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர், ஆர்.காந்தி கூறியதாவது: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, பணம் எடுப்பதற்கு விதிக்கப் பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது, தேவையான அளவுக்கு புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளன; இதனால், பணத் தட்டுப்பாடு வெகுவாக குறைந்துள்ளது. அதனால், சேமிப்பு கணக்கு களுக்கு, வாரத்துக்கு, 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடி யும் என்ற கட்டுப்பாடு, மேலும் தளர்த்தப்படுகிறது. வரும், 20ம் தேதி முதல், இது, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

வரும், மார்ச், 13 முதல் இந்தக் கட்டுப்பாடு முழுவது மாக விலக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். செல் லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும், மார்ச், 13 முதல் விலக்கி கொள்ளப்படுவது, மக்களிடையே பெரும் மகிழ்ச்சியைஏற்படுத்தி உள்ளது.

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டுள்ள நிலையில் நடக்கும் ரிசர்வ் வங்கியின் முதல் நிதி கொள்கை கூட்டம் என்பதால், வட்டி விகிதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6.25 சதவீதம் என்ற, 'ரெப்போ' எனப் படும், வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றத்தை யும் செய்யவில்லை.

இதன் மூலம் தொடர்ந்து, இரண்டாவது முறையாக, வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைகளை வரையறுக்க, ஆறு பேர் அடங்கிய குழு அமைக்கப் பட்ட பின் வெளியிடப்படும், மூன்றாவது நிதிக் கொள்கை இது.செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப் பைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறைக் கும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடப்பு நிதி ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி, 7.1 சதவீதத்தில் இருந்து, 6.9 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில், இது, 7.4 சதவீத மாக உயரும் என, நம்பிக்கை தெரிவிக்கப் பட்டுள்ளது.

புதிய அமைப்பு உருவாக்கம்

ரிசர்வ் வங்கிகளின் கொள்கைகள் செயல்படுத்தப் படுவதை உறுதி செய்யும் வகையில், தனியாக அமலாக்கப் பிரிவு உருவாக்கப்படுகிறது; இது, வரும் நிதியாண்டு முதல் செயல்படும்என, அறிவிக்கப் பட்டுள்ளது.இது குறித்து ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

கொள்கைகளை வகுப்பதுடன், அதை செயல்படுத்து வதை கண்காணிக்கவும், அவ்வாறு முறையாக செயல்படுத்தாவிட்டால் நடவடிக்கையும் எடுக்கப் பட வேண்டும். அந்த வகையில், ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் செயல்படுத்தபடுவதைகண்காணித்து, செயல்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தனியாக அமலாக்கப் பிரிவு உருவாக்கப் படுகிறது.

வரும் நிதியாண்டின் தொடக்கமான, ஏப்., 1 முதல், இந்த பிரிவு செயல்பட துவங்கும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கை களும் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

'சைபர்' பாதுகாப்புக்கு குழு

சைபர் குற்ற அபாயத்தை தடுக்கும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஆலோசனை வழங்கவும், செயல்படுத்தவும், ஒரு தனி சிறப்பு குழுவை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தங்களுடைய வங்கிக் கணக்கு உள்ளிட்ட விபரங்களைபாதுகாக்க, வங்கிகள் தனித்தனியாக, 'சைபர்' பாதுகாப்பு நடவடிக்கை களை எடுத்து வருகின்றன.

அதே நேரத்தில், சமீபத்தில் நடந்த சில சைபர் குற்றங்கள், வங்கிகளுக்கு இடையே மற்றும் அமைப்புகளுக்கு இடையேயான தகவல்கள், விபரங்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பி உள்ளன. அதனடிப்படையில், பல்துறை சிறப்பு குழு உருவாக்கப்படுகிறது; இந்தக் குழு, சைபர் பாதுகாப்பு குறித்து விரிவாக ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்கும்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, பல்வேறு வங்கிகளின், 32.14 லட்சம், 'டெபிட்' கார்டுகள் குறித்த விபரங்கள் திருடப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த திருட்டின் மூலம், 19 வங்கிகளின், 641 பேரின் கணக்குகளில் இருந்து, 1.3 கோடி ரூபாய் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TNPSC group I hall ticket

Click below

http://182.18.164.63:8080/TNPSCADMITCARD_EN_192016/FrmLogin192016.aspx

CPS NEWS: அரசு ஊழியர், ஆசிரியர் பணம் 15,000 கோடி என்ன ஆனது?

Tuesday, February 07, 2017

சாந்த ஷீலா நாயர் ராஜினாமா எதிரொலி: பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படுமா? அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் ஏமாற்றம்


முதல்வரின் சிறப்பு அதிகாரி சாந்தா ஷீலா நாயர் ராஜினாமா செய்துள்ளதால், பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்திருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.2004ம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். இதுபற்றி, ஜெயலலிதா கடந்த முறை முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினர்.

இந்நிலையில், கடந்த 17-2-2016 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திட சிறப்பு குழு அமைக்கப்படும். அந்த குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும் என்று கூறினார்.அப்போதைய முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து, முதலமைச்சர் அலுவலக சிறப்பு அதிகாரியான சாந்தா ஷீலா நாயர் தலைமையில் 5 பேர் குழு 26-2-2016 அன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவினர், தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசினர். குழு அமைக்கப்பட்டு 4 மாதம் ஆகியும் அரசுக்கு பரிந்துரை செய்யாததால் இந்த குழு முறையே 25-6-16 மற்றும் 25-9-2016 என இரண்டு முறை 3 மாதம் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக இந்த குழுவின் நீட்டிப்பு காலம் 26-12-2016 அன்று முடிவடைந்தது. ஆனால், கடந்த 40 நாட்களாக நீட்டிக்கப்படாமல் அந்த கோப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறையிலேயே தூங்கியது.

இந்நிலையில் முதல்வரின் அலுவலக சிறப்பு அதிகாரி சாந்தா ஷீலா நாயர் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம், அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் குழுவின் தலைவர் பதவியும் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இதுகுறித்து சென்னை தலைமை செயலக சங்க தலைவர் ஜெ.கணேசன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சண்முகராஜன், அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில சங்க தலைவர் கே.கணேசன் ஆகியோர் கூறும்போது, “புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில், அந்த குழுவின் தலைவர் ராஜினாமா செய்துள்ளது ஏமாற்றத்தை அளிக்கிறது.

குழுவின் தலைவர் ராஜினாமா செய்தாலும், அந்த குழுவின் அறிக்கையை அவரிடம் இருந்து பெற்று தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். 2004ம் ஆண்டுக்கு பிறகு, புதிய பென்ஷன் திட்டத்தால் சுமார் 5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு கொடுத்த உத்தரவாதத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்றனர்.

Sunday, February 05, 2017

100 சதவீதம் தேர்ச்சிக்காக பள்ளியில் இருந்து மாணவர்களை வெளியேற்ற கூடாது


மெட்ரிக் இயக்ககம் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவுதேர்ச்சி சதவீதம் குறைந்துவிடும் என்ற அச்சத்தால், மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் தனியார் பள்ளிகள் ஈடுபடக்கூடாது என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தனியார் சுயநிதியில் இயங்கும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை காட்ட வேண்டும் என்பதற்காக பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கற்பித்தல் முறைகளை தனியார் பள்ளிகள் கையாண்டு வருகின்றன. இருப்பினும், சில மாணவர்கள் பாடத்தில் அதிக கவனம் செலுத்தாமல் குறைந்த அளவில் மதிப்பெண் பெறும் நிலையும் தொடர்கிறது. சுமாரான மதிப்பெண் பெறும் மாணவர்கள் இருந்தால் தேர்ச்சி சதவீதம் குறைந்துவிடும் என்று தனியார் பள்ளிகள் கருதுகின்றன. இதையடுத்து, 9ம் வகுப்பிலும், பிளஸ் 1 வகுப்பிலும் மாணவர்களை வடிகட்டும் போக்கை தனியார் பள்ளிகள் கடைபிடித்து வருவதாக பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், அந்த மாணவரின் பெற்றோரிடம் எழுத்துபூர்வமாக கடிதம் கேட்கின்றனர். அதாவது, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பிலும் மேலும் ஓராண்டு எங்கள் பிள்ளைகள் படிக்க சம்மதிக்கிறோம் என்று முன்னதாகவே எழுதி வாங்குகின்றனர். இது ஒவ்வொரு ஆண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. இது குறித்து மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்குநர் கருப்பசாமி கூறியதாவது: இது போல எழுதி வாங்கும் நடைமுறையை பள்ளிகள் பின்பற்ற விதிகள் இல்லை. அதை யாரும் அனுமதிக்க கூடாது.

அப்படி ஏதாவது பிரச்னை எழுந்தால் பெற்றோர் புகார் தெரிவிக்கலாம். மேலும் இவற்றை மீறும் பள்ளிகள் குறித்து பெற்றோர் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு இயக்குநர் கருப்பசாமி தெரிவித்தார்.

இன்று முதல் ரூபல்லா தடுப்பூசி முகாம்


தமிழகத்தில் திங்கள்கிழமை (பிப். 6) முதல் ரூபல்லா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், பால்வாடி மையங்கள், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலும் பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெறும்.

பிறந்த 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகளில் இருந்து 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இந்த முகாமில் தடுப்பூசி வழங்கப்படும். தமிழகம் முழுவதும் மொத்தம் 1.8 கோடி குழந்தைகளுக்கு ரூபல்லா தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வழங்கப்பட்ட குழந்தைகளின் இடது கை பெருவிரலில் அடையாளத்துக்காக மை வைக்கப்படும்.

முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், கோவா, லட்சத்தீவு ஆகிய 5 மாநிலங்களில் முகாம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறும். அதன் பின்பு வழக்கமான தேசிய தடுப்பூசித் திட்டத்தில் இது சேர்க்கப்படும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதார செவிலியர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் என 12 ஆயிரம் பேர் தடுப்பூசி வழங்க உள்ளனர்.

ரூபல்லா தடுப்பூசி போட்ட ஒரு வாரத்துக்குப் பின்பு சில குழந்தைகளுக்கு காய்ச்சல், ஒவ்வாமை போன்றவை ஏற்படலாம். வழக்கமாக தடுப்பூசிகளால் ஏற்படும் விளைவுகள் தான் இவை. இதனால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம். முதன்முறையாக இந்தத் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படுவதால், இது குறித்த தகவல் குறிப்பேடு பெற்றோர், ஆசிரியர் உள்ளிட்டோருக்கு அளிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாணவர்களின் சுகாதாரம் கேள்விக்குறி


அரசுப்பள்ளி துப்புரவு பணியாளர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப் படாததால் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.அரசு பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்ய 2016 ஜன. முதல் பள்ளி மேலாண்மைக்குழுவால் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

துவக்கப்பள்ளிக்கு மாதம் 750 ரூபாய், நடுநிலைப்பள்ளி க்கு 1000 ரூபாய், உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளுக்கு 1,500 ரூபாய் என பணியாளர்களுக்கு மாத சம்பளமாக வழங்கப்பட்டது. அக்டோபர் முதல் நான்கு மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. அனைவருக்கும் கல்வி திட்டத்தில் இவர்களுக்கான சம்பளத்தொகை வழங்கப் படுவது வழக்கம். நான்கு மாதங்களாக இந்த தொகை நிறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி கழிப்பறைகள் மட்டுமின்றி, வளாகத்தையும் இந்த துப்புரவு பணியாளர்களே கவனிக்கின்றனர். இதனால், பணிக்கு வருவதை தவிர்க்கும் நிலையில் துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இதனால் மாணவர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

Saturday, February 04, 2017

தமிழகப் பாடத் திட்டம் விரைவில் மாற்றியமைக்கப்படும்


தமிழகப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டம் விரைவில் மாற்றியமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தமிழக பள்ளிக் கல்வியின் எதிர்காலம் குறித்த கல்வியாளர்கள் மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது: தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்கள் 45 சதவீதமாக உள்ளனர். தற்போது அது 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழக அரசு கல்வி வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்று, தரமான கல்விக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் காரணமாக கற்றல் சார்ந்த பல்வேறு மதிப்பீடுகளுக்கு தமிழக அரசு தானாகவே தன்னை உட்படுத்தி வருகிறது.

தனியார் பள்ளிகள் அரசோடு கைகோர்த்து பள்ளிக் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும். ஒவ்வாரு தனியார் பள்ளியும் தனக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளியைத் தத்தெடுத்து அதன் கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். தனியார் பள்ளிகள் அரசுக்கு எதிரிகள் இல்லை என்றாலும், தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்துவதும் அரசின் கடமையாகும். கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்குச் சென்றுவிட்டது. கல்வி மாநிலப் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு ஆகும்.

பொதுப்பட்டியலில் இருக்கும் பட்சத்தில் கல்விக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதி, திட்டங்கள் 100 சதவீதம் மாநில அரசின் மூலமாக நிறைவேற்றப்பட வேண்டும். தமிழகத்தின் பாடத்திட்டங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. தமிழக பாடத்திட்டங்கள் விரைவில் மாற்றியமைக்கப்படும். பாடத்திட்டங்கள் நவீன காலத்துக்கு ஏற்ப அவ்வப்போது புதுப்பிக்கவும், மாற்றியமைக்கப்படவும் வேண்டும். சிறந்த கல்வி, அறிவியல், விளையாட்டு, கலாசாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம், கல்வியில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துதல், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையிலான கல்வி ஆகியவற்றை முக்கியக் இலக்காகக் கொண்டு பள்ளிக் கல்வித் துறை செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.

டிப்ளமோ தேர்வு மறுகூட்டல் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்


தொடக்கக் கல்விக்கான, டிப்ளமோ தேர்வு எழுதியோர், மறுகூட்டலுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தொடக்கக் கல்விக்கான, டிப்ளமோ தேர்வு எழுதிய மாணவர்கள், மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற, நாளை முதல், 8 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுத் துறையின், http:/www.tndge.in என்ற இணையதளத்தில், விண்ணப்ப நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பின், அவற்றை பூர்த்தி செய்து, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில், கட்டணம் செலுத்தி, ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கல்வி அதிகாரிகளுக்கு தணிக்கை துறை.. கண்டனம் 4,000 பள்ளிகள் அங்கீகாரமின்றி செயல்படுவதாக புகார் ● பல ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதில் சிக்கல்


தமிழகத்தில், 4,000த்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், அங்கீகாரமின்றி செயல்படுவதால், அவற்றில் படிக்கும் பல ஆயிரம் மாணவர்கள், அரசு பொதுத்தேர்வு எழுத முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையறிந்த, தணிக்கை துறை, கல்வி அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், 5,600 உயர்நிலை மற்றும் 6,300 மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன; இவற்றில், 1,800 பள்ளிகள் அரசு உதவி பெறுபவை. இதுதவிர, 4,600 தனியார் பள்ளிகள், மெட்ரிக் இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றுக்கு, ஆண்டுதோறும் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும். ஆனால், இரு ஆண்டுகளாக, அங்கீகாரம் வழங்கும் பணி முடங்கியுள்ளது. இதனால், 4,000த்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், அங்கீகாரமின்றி இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத முடியுமா என்ற அச்சத்தில் உள்ளனர்.

காரணம் என்ன? பள்ளிகளுக்கு இதுவரை விதிகளை மீறி, அங்கீகாரம் வழங்கிய கல்வி அதிகாரிகள், கோர்ட்டில் பல வழக்குகளை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே, 'அங்கீகாரம் கொடுத்தால் தானே பிரச்னை' என, அங்கீகாரமின்றி பள்ளிகளை இயங்க விட்டுள்ளனர். அங்கீகாரம் கோரிய விண்ணப்பங்கள், கல்வித் துறையின் பல அலுவலகங்களிலும் முடக்கப்பட்டு உள்ளன. அரசு உதவிபெறும், 500 தனியார் பள்ளிகளுக்கும், அங்கீகாரம் இல்லாததால், ஆசிரியர்களுக்கு, அரசு மானியத்தில் இருந்து, சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை ஜன., 10ல், பள்ளிக்கல்வி செயலர் சபிதா தலைமையில் நடந்த, பள்ளிக்கல்வி தணிக்கை அதிகாரிகள் கூட்டத்தில், அங்கீகாரமின்றி பள்ளிகள் இயங்குவது குறித்து, தணிக்கை துறையினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நிலைமையை சமாளிக்க, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மட்டும், உடனே அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது. 'கல்வி ஆண்டு முடியும் நிலையில், இன்னும் பள்ளிகளுக்கு அங்கீகாரமே வழங்காதது, தமிழக அரசின் மெத்தனத்தையே காட்டுகிறது' என, கல்வியாளர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

ஆசிரியர்கள் முற்றுகை: பணிந்தது அரசு



TNPTF கோரிக்கைக்கு பணிந்தது தமிழக அரசு'!ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்ற அதிகாரிகள்

நன்றி:விகடன்

ஜல்லிக்கட்டுக்காக நடந்த மெரினா போராட்டத்தின் எழுச்சியில் , யார் பாடம் கற்றுக்கொண்டு இருக்கிறார்களோ இல்லையே தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை கற்றுக்கொண்டுள்ளது என்கிறார்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்.
நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட ஆசிரியர்கள் முடிவு செய்தி இருந்தனர்.

இதற்காக மாநில அளவில் இருந்து 10 ஆயிரம் ஆசிரியர்கள் திரண்டு வந்திருந்தனர்.அவர்களை செங்கல்பட்டு,கிழக்குக் கடற்கரை சாலை ,பூந்தமல்லி என்று சென்னைக்கு வெளியே மடக்கி தமிழகக் காவல்துறை கைது செய்தனர்.ஆனாலும் திட்டமிட்டப்படி சுமார் 4,000 பேர் தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் அரண்டு போன காவல்துறை அதிகாரிகள் உடனடியாகப் பள்ளிக்கல்வித்துறை செயலருக்குத் தகவல் தெரிவித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

போராட்டம் நடத்திய ஒரு மணி நேரத்தில் பேச்சுவார்த்தைக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இறங்கி வந்தது இன்றுதான் என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தினர் ஆச்சரியத்தோடு.
இது தொடர்பாக,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ச.மோசஸிடம் பேசினோம்.அவர் கூறுகையில்,

"எங்களின் கோரிக்கைகளை நேரில் அழைத்துக் கேட்டு நிறைவேற்றுவதாக உறுதியளித்த பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.எங்களின் 15 அம்ச கோரிக்கைகளில்,4 அடிப்படைக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அரசு உறுதியளித்துள்ளது.அதன்படி,புதிய பென்சன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை விரைந்து பெறப்பட்டு அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பை 8வது ஊதியக்குழு பரிந்துரையில் ஈடுசெய்யப்படும், அரசாணைக்கு முரணாக தொடக்க கல்வித்துறை இயக்குநர் பிறப்பித்த 5 ஆணைகள் திரும்ப பெறப்படும்.
ஊராட்சிகளைத் தவிர்த்த மற்றப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சுகாதார அலுவலர்களை நியமிக்க உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும்.உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலக காலிப்பணியிடங்கள் ஓரிரு நாட்களில் நிரப்பப்படும்,காலிப்பணியிடங்கள் நிரப்ப அடுத்தவாரம் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என்று உறுதியாகத் தெரிகிறது.
இது எங்களுக்கு,எங்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.அதில் மகிழ்ச்சியே.

ஆனால் இந்த நிலையை எட்ட நாங்கள் பெரிய பெரிய போராட்டங்களையெல்லாம் நடத்தவேண்டி இருந்தது.10 ஆயிரம் பேரைத் திரட்டி சென்னையில் தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிடுகிறோம் என்று அறிவித்தாலும் அறிவித்தோம்.அதில் இருந்து எங்களை போலீசார் துருவித்துருவி விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர்.போராட்ட நாளான இன்று காலையிலேயே என்னை சென்னை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்துக்கொண்டனர்.

எங்கள் சங்கத்தின் மற்ற நபர்களோடு எனக்கு தொடர்பு எதுவும் இல்லாமலும் போலீசார் செய்துவிட்டனர்.
உங்களின் கோரிக்கைகள் என்ன சார்,சொல்லுங்க நாங்க பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளோடு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்கிறோம் என்றும் அவர்கள் கூறினார்கள்.எனக்கு இருந்த போன் தொடர்பையும் நீங்க பறித்துக்கொண்டீர்கள்.அப்புறம் எப்படி நான் போராட வருபவர்களை நிறுத்த முடியும் என்றேன்.உடனே அவர்கள் செய்த ஏற்பாட்டின்படி வேறு ஒரு போன் கிடைத்தது.அதில் மற்றவர்களை தொடர்பு கொண்டு பேசுவதற்குள் காலை மணி 11 ஆகிவிட்டது.அதற்குள் சுமார் இரண்டாயிரம் பேர் டி.பி.ஐ. அலுவலகத்தை முற்றுகையிடத் தொடங்கிவிட்டனர்.இன்னும் 8 ஆயிரம் பேர் செங்கல்பட்டு வழியாகவும்,கிழக்குக் கடற்கரை சாலை வழியாகவும்,பூந்தமல்லி வழியாகவும் வந்து கொண்டு இருக்கிறார்கள் என்ற தகவலும் கிடைத்தது.கூட்டம் பெருகினால் பிரச்னை பெரிதாகும் என்று கருதிய போலீசார் உடனடியாக என்னையும் எங்கள் சங்கத்தின் முதன்மைப் பிரதிநிதிகளையும் அழைத்துக்கொண்டு தலைமைச் செயலகம் சென்றனர்.

அங்கு,பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அறையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, முதன்மைச் செயலாளர் டி.சபீதா, தொடக்கக்கல்வி இயக்குநர் இளங்கோவன், இணை இயக்குநர் சசிகலா ஆகியோர் இருந்தனர்.எங்களின் கோரிக்கைகளை அவர்கள் கேட்டனர்.முதலில் அவர்கள் மிகக் கடுமையாகப் பேசினர்.பின்னர் எங்களின் சிக்கல்களை புரிந்துகொண்டு இறங்கி வந்தனர்.அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர்" என்று விவரித்தார் பரபரப்பாக.

- சி.தேவராஜன்