இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, February 03, 2017

முற்றுகை போராட்ட செய்தி

*💪🏼TNPTF👍🏼*

*சென்னை முற்றுகையாக மாறிய 10,000 TNPTF போராளிகளின் இயக்குநரக முற்றுகையின் வரலாறு!*

CPS ஒழிப்பு, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசிற்கிணையான ஊதியம், 8-வது தமிழக ஊதியக்குழு அமைத்தல் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி TNPTF அழைப்பு விடுத்த இயக்குநரக முற்றுகைப் போருக்கு 2.2.2017 முதலே பல தோழர்கள் சென்னையில் குழுமத் தொடங்கினர்.

இரவு முதலே TNPTF மாநில அலுவலகம் காவல்துறை கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது.

3.2.2017 அதிகாலை மாநிலத் தலைவர் தோழர்.மோசஸ் சென்னை மாநகரத் துணை ஆணையரால் அழைத்துச் செல்லப்பட்டு போராட்டத்தைக் கைவிட பொறுப்பாளர்களிடம் பேச நிர்பந்திக்கப்பட்டார். ஆனால் மறுத்து விட்டார்.

*சென்னை நுழைவுகளான தாம்பரம், வண்டலூர், பூவிருந்தமல்லி, மகாபலிபுரம், எண்ணூர், பெருங்களத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மதுரவாயல உள்ளிட்ட பகுதிகளில் தோழர்கள் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.*

வாகன மறுப்பை எதிர்த்து மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்கள் அந்தந்தப் பகுதிகளில் எதிர்ப்பு முழக்கமிட காவலர்கள் விடுவித்தனர்.

வாகன மறுப்பை அறிந்த ஏனைய தோழர்கள் இரயில் மூலம் DPI விரைந்தனர். இதனால், *மேல்மருவத்தூர் முதல் நுங்கம்பாக்கம் வரை இரயில் பேரணி*யாகப் போராட்ட வடிவம் மாறியது.

ஒருபுறம் நுங்கம்பாக்கம் முதல் DPI வளாகம் வரையிலும் மறுபுறம் எழும்பூர் முதல் *DPI  வளாகம் வரையிலும் சாரைசாரையாகத் தொடர் பேரணி*யாகத் தோழர்கள் தொடர்ந்தனர்.

மற்றொருபுறம் சென்னை புறநகர் பகுதிகளிலேயே பல தோழர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

DPI வளாகத்தைத் தங்களின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்த சென்னை மாநகரக் காவல்துறை, தங்கள் பிடியில் இருந்த தோழர்.மோசஸ்-யிடம், "*DPI-ல் உங்கள் பொதுச் செயலாளர் உள்ளிட்ட யாருமே இல்லை. முற்றுகைக்கு வழியில்லை மற்றவர்களை வர வேண்டாமெனக் கூறுங்கள்*" என்றார் மா.து.ஆணையர்.

"*முற்றுகை நடைபெறுகிறது*" என்றார் *தோழர்.மோசஸ்*, முன்னரே அவ்வளாகத்திற்குள்ளும் எதிர்ப்புறமிருந்த மருத்துவமனையிலும் பிரிந்து இருந்த தோழர்களை அறிந்து. விளங்க முடியாத குழப்பத்துடன் காவல்துறை கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் பறந்தன.

சற்று நேரத்தில்,

*முற்றுகைக் களத்தில், தமிழ் நாாாா. . . .டு ஆரம்பப்பள்ளி  ஆசிரியர் கூட்டணி என்ற விண்ணதிரும் போர் முழக்கத்துடன் காட்சிக்குள் வந்தனர் பொதுச்செயலாளர் தோழர்.பாலசந்தர், பொருளாளர் தோழர்.ஜீவானந்தம்* உடன் சில முன்னணிப் பொறுப்பாளர்கள்!

*அடுத்த நொடி போர் முரசின் எதிரொலியாக ஒலித்த வாழ்க! என்னும் முழக்கத்துடன் தேனீ போல உடன் குழுமினர் காவலர் கண்படாது பிரிந்திருந்த 500-க்கும் மேற்பட்ட தோழர்கள்.*

காவலர்கள் திகைத்துத் திரும்பும் முன் போராளிப் பாசறையின் *போர் முழக்கங்களுடன் இனிதே தொடங்கியது இயக்குநரக முற்றுகை!*

DPI வளாக நுழைவுச் சாலையில் தடுத்து நிறுத்தப்பட்ட தோழர்களும் அவ்விடத்திலேயே கோரிக்கைப் பேரொலி முழங்க முற்றுகையிட்டனர்.

ஒரு மணி நேரத்திற்குள் அனைவரும் கைது செய்து வாகனங்களில் ஏற்றி தற்காலிகச் சிறையாக, *சிந்தாதிரிப் பேட்டை, சூளைமேடு, புதுப்பேட்டை, சேப்பாக்கம்* உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனால், சென்னையின் சாலைகளில் வாகன ஒலிகளுக்கும் மேல் நம் தோழர்களின் கோரிக்கைக் குரல் ஒலித்தது.

தற்காலிகச் சிறைகளில் சிறைவைக்கப்பட்ட தோழர்கள் அவ்விடத்தின் சீர்கேட்டைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட மாநிலப் பொறுப்பாளர்களை விடுவிக்கக் கோரியும், ஆசிரியர்களை உள்நோக்கத்துடன் பிரித்து வைத்த சூழ்ச்சியைக் கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், *இயக்குநரக முற்றுகையாகத் தொடங்கிய போராட்டம் ஆயிரம்விளக்கு, சூளைமேடு, புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம், சேப்பாக்கம், செம்பரம்பாக்கம் என விரிந்து சென்னை முற்றுகையாக மாறியது.*

இதனைத் தொடர்ந்து நேரில் வந்து மாநிலப் பொறுப்பாளர்களைச் சந்தித்த இயக்குநர் அவர்கள், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளருடனான சந்திப்பிற்கு அழைத்துச் சென்றார்.

அதற்கு முன்புவரை *தமிழக ஆசிரியர் இயக்கங்களின் வரலாற்றில் நிகழாத, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளருடனான சந்திப்பு 1:30 மணி நேரங்களுக்கும் மேலாக நிகழ்ந்தது.*

கோரிக்கைகளைத் தனித்தனியே விளக்கிப் பேசித் தீர்விற்காக வலியுறுத்தியதோடு தனித்தனியே சிறைவைக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் ராசரத்தினம் மைதானத்திற்கு அழைத்துவர உறுதி பெறப்பட்டது.

*சென்னையின் பல்வேறு இடங்களில் சிறைவைக்கப்பட்ட & மறியலில் ஈடுபட்ட தோழர்கள், ஒலிபெருக்கி வசதி தடை செய்யப்பட்ட சூழலிலும் மேனாள் பொதுச் செயலார் தோழர்.முருக.செல்வராசனின் போர்க்குரலுடன் ராசரத்தினம் மைதானத்திற்குள் வரவேற்கப்பட்டனர்.*

காவல் துறையால் வாகனங்கள் மறுக்கப்பட்டு  சென்னையின் பல்வேறு இடங்களில் சிறைவைக்கப்பட்ட & மறியலில் ஈடுபட்ட தோழர்கள், சுமார் *இரண்டு மணி நேரமாகத் தொடர்ந்து காவல் துறையின் சொந்த வாகனங்களின் மூலமாகவே அழைத்து வரப்பட்டுக் கொண்டே இருந்தனர்.*

முதன்மைச் செயலாளருடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவுற்று மைதானம் திரும்பிய மாநிலப் பொறுப்பாளர்கள், இவ்வியத்தகு வரலாற்று நிகழ்விற்குக் காரணமான அனைத்து ஆசிரியத் தோழர்களும் இங்கு அழைத்துவரப்பட்ட பின்னர் பேச்சுவார்த்தை முடிவை அறிவிப்பதாகக் கூறினர்.

மாநிலத் துணைப் பொறுப்பாளர்கள் தோழர்.ரோஸ் தோழர்.மயில் முன்னிலையில் பல்வேறு சக இயக்கங்களின் பொறுப்பாளர்கள் மைதானத்திற்கு நேரில் வந்து தங்களின் ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிறுவனர் *தோழர்.மாயவன்*

பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் *திரு.சேகர்*

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணித் தலைவர் *திரு.தாஸ்*

ஆசிரியர் முன்னேற்றச் சங்கத் தலைவர் *திரு.தியாகராஜன்*

உள்ளிட்டோர், டிட்டோஜாக் & ஜேக்டோவில் TNPTF எடுத்த உறுதியான நிலைப்பாட்டைப் பாராட்டியதோடு,

ஆசிரிய இயக்கங்களின் வரலாற்றுச் சாதனையான இயக்குநரக முற்றுகையை மனதார வாழ்த்தியதோடு,

*ஜேக்டோ-ஜியோ பயணிக்க வேண்டிய போராட்டப் பாதையை இயக்குநரக முற்றுகையின் வழி TNPTF உணர்த்தியுள்ளதைத் தாங்கள் உணர்ந்துள்ளதாகவும் கூறினர்.*

போராட்ட நிறைவுரையாக மேனாள் மாநிலத் தலைவரும், STFI-ன் அகில இந்தியத் தலைவருமான *தோழர்.கண்ணன் காவல் துறையே அதிர போராளிகளை வாழ்த்தி, இப்போராட்டத்தைத் தற்காலிகமாக விளக்கிக் கொள்வதாக* அறிவித்து நிறைவு செய்தார்.

பொருளாளர் *தோழர்.ஜீவானந்தம் இயக்குநரக முற்றுகையைச் சென்னை முற்றுகையாக மாற்றித் தந்த சென்னை மாநகரக் காவல் துறைக்கும் தமிழக அரசிற்கும் நன்றி தெரிவித்ததோடு,* இவ்வரலாற்றுப் போரின் படைத் தளபதிகளான மாவட்ட வட்டாரப் பொறுப்பாளர்களுக்கு நன்றி கூறியதோடு, சிறப்புர முடித்துக் கொடுத்த பாசறைப் போராளிகளுடன் தனது மகிழ்வைப் பகிர்ந்து போராட்டத்தை முடித்து வைத்தார்.

*முதன்மைச் செயலாளர் & முதல்வர் அலுவலக முற்றுகைக்கும் தயாரெனக் கூறி கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றியை விளக்கிய மாநிலத் தலைவர் & பொதுச்செயலாளரின் உரை அடுத்த பதிவில். . . .*

_வரலாற்றுச் சாதனையை இயன்றவரை சொற்படுத்திய மகிழ்வில்,_
✒செல்வ.ரஞ்சித்குமார்
*தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

நீட் நுழைவு தேர்வு சிபிஎஸ்சி அறிவிப்பு

மூன்று முறை தோல்வியடைந்தாலும் இந்த ஆண்டு நீட் நுழைவுத்தேர்வு எழுதலாம் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீட் தேர்வை மூன்று முறை எழுதுவது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. அதன்படி, 2017 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்வே முதல் நீட் தேர்வாக கணக்கில் கொள்ளப்படும் என்றும், அதற்கு முன் எத்தனை முறை நீட் தேர்வு எழுதியிருந்தாலும் அது கணக்கில் கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு எழுதப்படுவதே முதல் நீட் என்ற அறிவிப்பு, சி.பி.எஸ்.இ. ஆன்லைன் விண்ணப்பத்தில் செய்யப்பட்டிருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு கடந்த 31ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் வகையில், சட்டப்பேரவையில் சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

நன்றி: விகடன்



முற்றுகைப் போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள் கைது'! டி.பி.ஐ.வளாகத்தில் பரபரப்பு



பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும் என்பது உட்பட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை கல்லூரி சாலையில் உள்ள மாநில தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை (டி.பி.ஐ) முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டத்தின்போது போலீசாருக்கும், போரட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுதவிர, போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்துள்ள ஆசிரியர்களை, டி.பி.ஐ. செல்லும் வழியில் ஆங்காங்கே வழிமறித்து போலீஸார் கைதுசெய்தனர். கைது செய்யப்பட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமூக நலக்கூடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களின் வருகை தொடருவதால் நுங்கம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


போராட்டம் குறித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் செ.பாலசந்தர் நம்மிடம் கூறுகையில்,"தமிழக இடைநிலை ஆசிரியர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட ஊதியத்தை மீண்டும் வழங்கவேண்டும். தனி பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துச் செய்யவேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும். எட்டாவது ஊதியக் குழுவை உடனடியாக நடைமுறைத்தப்பட வேண்டும்.



ஆசிரியர்களுக்கு முரணாக அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் தொடக்கக் கல்வி இயக்குனரின் ஆணைகளை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும். இவைதான் எங்கள் கோரிக்கை.இவற்றை வலியுறுத்திப் பலமுறை போராடிவிட்டோம்.மனுக்கள் அனுப்பியும் விட்டோம். ஆனால் எதையும் தமிழக அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. எனவே உடனடியாக எங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தரவேண்டும்" என்று தெரிவித்தார்.

- சி.தேவராஜன்

படங்கள்: அசோக்

நன்றி தமிழ் முரசு&மாலை மலர்


தோழமை சங்க நிர்வாகிகள் பாராட்டுரை

தோழர் பாலச்சந்தர் உரை



நன்றி:அரசு ஊழியர் சங்கம்

Thursday, February 02, 2017

2வது வீட்டுக்கடனுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் மட்டுமே இனி வரிக்கழிவு


இரண்டாவதாக வீட்டு கடனுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் மட்டுமே வரிக்கழிவு என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கடனுக்கு வருமான வரியில், வட்டிக்கும், முதலுக்கும் முழு வரிக்கழிவு வழங்கப்படுகிறது. இந்நிலையில், பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி முதல் வீட்டுக்கடனுக்கு பின்னர், இரண்டாவது முறையாக வீட்டுக்கடன் பெற்றவர்களுக்கு வரிச்சலுகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 2வது வீட்டுக்கு கடன் பெற்றவர்கள் இனிஆண்டுக்கு ரூ.2 லட்சம் மட்டுமே வரிச்சலுகை பெற முடியும். இது வருமான வரிச்சட்டம் 71ன் படி இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி கல்வி அலுவலர்களுக்குஊக்க ஊதிய உயர்வு இல்லை


நேரடியாக நியமிக்கப்பட்ட 64 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு இல்லை' என, கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் பட்ட மேற்படிப்பு முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வும், எம்.பில்., அல்லது எம்.எட்., முடித்தால் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வும் வழங்கப்படும்.

இவர்கள் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டாலும் ஊக்க ஊதிய உயர்வு தொடரும். சில ஆண்டுகளுக்கு முன், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 64 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு கேட்டு, தொடக்கக் கல்வி இயக்குனரகத்திற்கு மனு அனுப்பினர். ஆனால், இதற்கு தொடக்கக் கல்வி இயக்குனரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ெவளியிடப்பட்ட உத்தரவில், 'நேரடியாக நியமன உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடம், 'நிர்வாக அலுவலர் பணியிடமாக' கருதப்படுகிறது. இதனால், பதவி உயர்வு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களை போன்று ஊக்க ஊதிய உயர்வு வழங்க முடியாது' என தெரிவித்துள்ளது.

புதிய வாக்காளர்களுக்கு பிப்., 15ல் அடையாள அட்டை


'புதிய வாக்காளர்களுக்கு, பிப்., 15 முதல், அடையாள அட்டை வழங்கப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி கூறினார். அவரது பேட்டி:தமிழகம் முழுவதும், ஜன., 5ல், புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், புதிதாக, 15.26 லட்சம் பேர் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில், 2.32 லட்சம் பேர், தங்கள், மொபைல் போன் எண்களை கொடுத்திருந்தனர். அவர்களுக்கு, ரகசிய குறியீடு எண், எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்பட்டு உள்ளது. அதை, அருகில் உள்ள, இ - சேவை மையங்களில் காண்பித்து, இலவசமாக, வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெறலாம். அதற்குரிய பணத்தை, இ - சேவை மையங்களுக்கு, தேர்தல் கமிஷன் வழங்கும். மொபைல் எண் கொடுக்காத வாக்காளர்களுக்கு, பிப்., 15 முதல், இலவசமாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். அதற்கு முன், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்பினால், இ - சேவை மையங்களில், 25 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம்.

வாக்காளர்கள், '1950' என்ற, கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்கள் மொபைல் எண்களை கொடுக்கலாம். அவர்களுக்கும், எஸ்.எம்.எஸ்., தகவல்கள் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிகளில் உபரி பணியிடம்திருப்பி ஒப்படைக்க உத்தரவு


அரசு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத உபரி பணியிடங்களை திருப்பி ஒப்படைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

அதன்படி 2016 ஆக., 1 ல் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டன. இதில் உபரி ஆசிரியர்களாக கணக்கிடப்பட்டோர் வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்யப்பட்டனர். ஆனால் ஆசிரியர் இல்லாத உபரி பணியிடங்கள் அப்படியே இருந்தன. தற்போது அந்த பணியிடங்களை காலியிடங்களாக காட்டி ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது;

அப்பணியிடங்களை பள்ளிக் கல்வி இயக்குனரின் பொதுத் தொகுப்பில் ஒப்படைக்க வேண்டும். அதனை பள்ளி அளவை பதிவேட்டில் (ஸ்கேல் ரிஜிஸ்டர்) பதிவு செய்ய வேண்டும் என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

டெட்' தேர்ச்சி பெறாதவர்களை பள்ளிகளில் நியமிக்க தடை


ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு முடிக்காதவர்களை, தனியார் பள்ளிகளில் நியமனம் செய்ய, தமிழக பள்ளி கல்வித்துறை தடை விதித்துள்ளது.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில், அனைத்து பள்ளிகளிலும், ஆசிரியர் பணி நியமனத்துக்கு, 2011 முதல், 'டெட்' தேர்வு கட்டாயமானது.

ஆனால், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், 'டெட்' தேர்வு முடிக்காதவர்கள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களில், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, 'டெட்' தேர்வில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர். மற்ற பள்ளிகளில், 'டெட்' தேர்வு முடிக்காதோருக்கு, சம்பளம் நிறுத்தப்பட்டு உள்ளது. 'இனி டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது' என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், பிறப்பித்துள்ள உத்தரவு:தமிழக அரசு உத்தரவுப்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாத பள்ளிகளில், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' கட்டாயம். 2012, 2013ல், 'டெட்' தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனாலும், பல பள்ளிகளில், 'டெட்' தேர்ச்சி பெறாதவர்களை, ஆசிரியர் பணிக்கு சேர்த்துள்ளனர். இது குறித்த ஆய்வில், 159 பேர், 'டெட்' தேர்ச்சி இன்றி, பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களில், 113 பேர் வழக்கு மூலம் சம்பளம் பெறுகின்றனர். மீதம், 43 பேருக்கு இதுவரை சம்பளம் தரவில்லை. அவர்களுக்கு, அரசின் மானியம் பெற்று, சம்பளம் வழங்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. எதிர்காலத்தில், சிறுபான்மை அந்தஸ்து பெறாத, தனியார் பள்ளிகள், 'டெட்' தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. அரசு அனுமதி பெற்றே, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ரேஷனில் 'ஆதார்' பதிவு கடைசியாக ஒரு வாய்ப்பு


ரேஷனில், 'ஆதார்' விபரத்தை பதியாதவர்கள், உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். தமிழகத்தில், வரும், ஏப்., முதல், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து, ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் பெறப்படுகின்றன.

இவை, ரேஷன் கடையில் உள்ள, டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற, 'மொபைல் ஆப்'பில், பதியப்படுகிறது.இதுவரை, நான்கு லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள், குடும்பத்தில் உள்ள ஒருவரது, ஆதார் விபரங்களை கூட பதியவில்லை. ரேசன் கார்டுகள் முடக்கம்: உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆதார் விபரம் வழங்க, 10 மாதங்களுக்கு மேல் அவகாசம் தரப்பட்டு வருகிறது. ஆனால், பலர் விபரம் தராமல் அலட்சியமாக உள்ளனர். தற்போது, ஒரு குடும்பத்தில், ஒருவரின் ஆதார் கார்டு கூட பதியாதவர்களின், ரேஷன் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன.

அவர்கள், ரேஷன் கடைக்கும், உணவு வழங்கல் அலுவலகத்துக்கும், அலைவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் சிரமத்தை போக்க, ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்கள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு நகல்களுடன், ரேஷன் கடை எண், மொபைல் எண்ணை ஒரு தாளில் எழுதி, உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கலாம். அவற்றை, அலுவலக ஊழியர்களே பதிவு செய்து, அந்த விபரத்தை தெரிவிப்பர். இந்த வாய்ப்பை விட்டுவிட்டால், 'ஸ்மார்ட்' கார்டு கிடைப்பது சிரமம். இவ்வாறு அவர் கூறினார்.

TNPTF

நன்றி:டேவிட்

*"சங்கமா நமக்கு சோறு போடுது ! "*

வீதியில இறங்கி போராடுறவன் ஒரு சில பேராவது இருப்பதால மட்டும் தான் நம்மில் பல பேர் வீட்டுக்குள்ள இருந்து நிம்மதியா சாப்பிட முடியுது

"நாம உழைச்சாத்தான் நமக்குச் சோறு "

"நமக்கு ஏம்ப்பா சங்கம்,  போராட்டமெல்லாம் ?"

இது  வெகுளித்தனமான பேச்சா இல்ல! வெவகாரமான பேச்சா என்பது நபரை பொறுத்தது . எப்படி இருந்தாலும் இது ஒரு வெளங்காத பேச்சு ...

  உழைச்சா சோறு உண்டுன்னு உனக்கு உத்திரவாத படுத்தினது எது ?

உழைச்சா கூலி கொடுக்கனும்னு நிர்ணயம் பன்னினது எது ? 

நீ செய்யிற வேலைக்கு கட்டாயமா இவ்வளவு ஊதியம் வாங்கணும்னு உனக்கு சொல்லி கொடுத்தது யாரு ?

மூனு வேள கஞ்சிக்கு மட்டும் இருபத்தினாலு மணி நேரமும் வேலை பாத்த அடிமை சமூகம் தான இது!

இத மாத்தினது சங்கங்கள் இல்லையா ? அந்த சங்கங்களில் தீர்மாணிக்கிற போராட்டம் இல்லையா ?

சங்கங்களை ஒதுக்கி வச்சிட்டு இங்க எதுவுமே கிடையாது.

*"சங்கங்களில்  நீங்கள் தலையிடாவிட்டாலும்
அது உங்கள் பிரச்சனைக்காக தலையிடும் "*

தன்னுடைய சுகத்தையும் இழந்து இந்த சமூகத்திற்காக வீதியில் இறங்கி போராடுபவனை பாராட்டாவிட்டாலும் தயவு செய்து கொச்சை படுத்தாதீர்கள் !

உலகை இயங்குவது இரண்டு... ஒன்று மனிதன்... மற்றொன்று ...மனிதனுக்கான மனிதன்...

இலவச கல்வித்திட்டத்தில் ரூ300 கோடி பாக்கி


தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய ரூ.300 கோடியை வழங்கினால்தான், இந்த கல்வி ஆண்டில் இலவச கல்விக்கான மாணவர்களை சேர்ப்போம் என்று தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன. கடந்த 2009ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதில் இடம் பெற்றுள்ள பல்வேறு அம்சங்களில்,சமூகத்தில் நலிந்த இயலாத பிரிவு மற்றும் ஆதரவற்ற பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி வழங்கப்பட வேண்டும். அதற்கான செலவை மாநில அரசு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த சட்டத்தின் கீழ் அந்தந்த மாநில அரசுகள் அரசாணைகள் பிறப்பித்தன. தமிழகத்தில் 2011ம் ஆண்டு முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி தனியார் பள்ளிகள் நடத்துவோர், தங்கள் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவ மாணவியரை சேர்க்கும் போது, அதில் 25 சதவீதம் இடங்கள், நலிந்த பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கி இலவச கல்வி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அரசாணை நடைமுறைக்கு வந்த பிறகு, தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. அதற்கான நிதியை தமிழக அரசு வழங்கவில்லை என்று தனியார் பள்ளிகள் குற்றம்சாட்டி வந்தன.

இதையடுத்து கடந்த 2014-2015ம் ஆண்டு வரை உள்ள பாக்கியை அரசு வழங்கியது. 2015-2016ம்   ஆண்டு 25 சதவீத அடிப்படையில் தமிழகம் முழுவதும் சுமார் 40  ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். அந்த ஆண்டுக்கான செலவுத் தொகை ரூ.125 கோடி, 2016-2017ம் ஆண்டும் அதே அளவு குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். அதற்கு ரூ.125 கோடி என மொத்தம் ரூ.250 கோடி அரசு தரப்பில் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது. பாக்கியுள்ள தொகையை அரசு வழங்கினால் தான் இந்த ஆண்டில் 25 சதவீதத்தின் கீழ் குழந்தைகளை சேர்ப்போம். இல்லை என்றால் சேர்க்கமாட்டோம் என்று தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன. இது குறித்து, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் தரப்பில் கூறப்படுவதாவது: கடந்த 2015-2016ம் ஆண்டுக்கான செலவுத் தொகை ரூ.125 கோடியை வழங்க சட்டப் பேரவையில் அறிவித்தனர். அதனால் அந்த தொகை விரைவில் வழங்கப்படும். மற்ற ஆண்டுக்கான தொகையும் அரசு விரைவில் வழங்க ஏற்பாடு செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

Wednesday, February 01, 2017

தமிழில் இணைய வார்த்தைகள்

WhatsApp - புலனம்
Facebook - முகநூல்
Youtube - வலையொளி
Instagram - படவரி
WeChat - அளாவி
Messanger - பற்றியம்
Twitter - கீச்சகம்
Telegram - தொலைவரி
Skype - காயலை
Bluetooth - ஊடலை
WiFi - அருகலை
Hotspot - பகிரலை
Broadband - ஆலலை
Online - இயங்கலை
Offline - முடக்கலை
Thumbdrive - விரலி
Hard disk - வன்தட்டு
Battery - மின்கலம்
GPS - தடங்காட்டி
CCTV - மறைகாணி
OCR - எழுத்துணரி
LED - ஒளிர்விமுனை
3D - முத்திரட்சி
2D - இருதிரட்சி
Projector - ஒளிவீச்சி
Printer - அச்சுப்பொறி
Scanner - வருடி
Smartphone - திறன்பேசி
Sim Card - செறிவட்டை
Charger - மின்னூக்கி
Digital - எண்மின்
Cyber - மின்வெளி
Router - திசைவி
Selfie - தம்படம்
Thumbnail - சிறுபடம்
Meme - போன்மி
Print Screen - திரைப்பிடிப்பு
Inkjet - மைவீச்சு
Laser - சீரொளி.

நடப்பு ஆண்டில் 28 தேர்வுகள்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு


தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 3,781 பணியிடங்களை நிரப்ப, இந்தாண்டு, 28 தேர்வுகள் நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

28 தேர்வுகள்: நடப்பு கல்வி ஆண்டுக்கான, தோராய தேர்வு அட்டவணை பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில், 28 தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதில், எட்டு தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவை; 20 தேர்வுகள் புதியவை. இதன் மூலம், 28 வகை பணிகளில், 3,781 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 494 வி.ஏ.ஓ., பணியிடங்கள் மற்றும் குரூப் 2 தேர்வு ஆகியவற்றின் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

நுழைவுத் தேர்வுக்கு தனி அமைப்பு


உயர் கல்வியின் தரத்தை உயர்த்தும் விதத்தில், பல்வேறு நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு, தேசிய தேர்வு முகமை உருவாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறியதாவது: தரமான உயர் கல்வி, தற்போது முக்கிய தேவையாக உள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதத்தில், உயர் கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு, தனியாக, தேசிய தேர்வு முகமை உருவாக்கப்படும்.

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம், ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உட்பட, மத்திய அரசின் பிற நிறுவனங்கள், நிர்வாகத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகின்றன. அதேசமயம், உயர் கல்வி நிறுவனங்களுக்கான தேர்வில், கல்வியின் தரத்தை கவனத்தில் கொள்ள, தனி அமைப்பு தேவைப்படுகிறது; இதற்காகவே, தேசிய தேர்வு முகமை உருவாக்கப்படுகிறது. அதுபோலவே, தரமான கல்வி மற்றும் புதிய பாடத் திட்டங்களில், கவனம் செலுத்தப்படும்; நாடு முழுவதும் குறிப்பிட்ட சில பகுதிகளில், புதிய கல்வி முறையை அமல்படுத்த பரிசீலித்து வருகிறோம். இணையதளங்கள் மூலம், தானாக பயிலும், மத்திய அரசின், 'ஸ்வயம்' திட்டத்தின் கீழ், 350 பாட வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.

பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தும், பல்கலைக்கழக மானியக் குழுவின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கல்லுாரிகளின் தரம் மதிப்பீடு செய்யப்பட்டு, தரவரிசை பட்டியல் வழங்கப்படும்; அதன் அடிப்படையில் கல்லுாரிகளுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்வியாளர்கள் வரவேற்பு : மத்திய பட்ஜெட்டில், நுழைவுத் தேர்வுக்கு, தனி முகமை அமைக்கும் அறிவிப்பை, கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர். ஜெயப்பிரகாஷ் காந்தி, கல்வி ஆலோசகர்: நுழைவுத் தேர்வுகளை நடத்த, தனியாக ஒரு அமைப்பு வேண்டுமென, பல ஆண்டுகளாக கல்வியாளர்கள் கோரினர். அதன்படி, தேசிய தேர்வு முகமை அமைக்கப்பட்டு உள்ளது.

இதில், அரசியல் குறுக்கீடுகள் இன்றி, தேர்வுகளை நடத்த வேண்டும். அனைத்து பாடத் திட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், தேர்வு நடத்த வேண்டும். 'கல்விக்கடனின் உச்சவரம்பு, 10 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்படும்' என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நான்கு லட்சம் ரூபாயில் இருந்து, கல்விக் கடன் உயர்த்தப்படவில்லை. திறன் அடிப்படையிலான தேசிய கல்வி நிறுவனங்கள் அமைக்கவோ, ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.டி., போன்று, பொருளியல், வணிகவியல் தொடர்பான, தேசிய கல்வி மையம் குறித்த அறிவிப்புகளோ இல்லை. அஜீத் பிரசாத் ஜெயின், கல்வியாளர் மற்றும் சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர்: பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக, மத்திய அரசு கூறியுள்ளது. இது, கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கும். இதுவரை, சி.பி.எஸ்.இ., நடத்தி வந்த பல நுழைவுத் தேர்வுகள், தேசிய தேர்வு மையம் மூலம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சி.பி.எஸ்.இ., அமைப்பு மற்றும் பள்ளிகளுக்கு, சுமை குறையும் என்பதால், அவை, மாணவர் நலனில் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.

என்.பசுபதி, பொதுச்செயலர், அனைத்து பல்கலை ஆசிரியர் சங்கம்: 'பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., சீரமைக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, யு.ஜி.சி.,யின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. உயர் கல்வியின் தரத்தை இன்னும் உயர்த்த, பல்வேறு அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்டன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், மத்திய பல்கலைகள் கூடுதலாக திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. தேசிய அளவில் உயர் கல்வியில் மாற்றம் கொண்டு வருவது குறித்து, இன்னும் பல திட்டங்களை அறிவித்திருக்கலாம். கல்லுாரிகளுக்கு, தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது குறித்து, கட்டுப்பாடுகளும் கொண்டு வந்திருக்க வேண்டும்.

இவ்வாறு கல்வியாளர்கள் கூறினர்.

TNPSC annual recruitment planner- 2017