இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, January 16, 2017

அமைச்சர் விளக்கம்

மாணவர்கள் கல்விக் கடன் தொடர்பாக நீங்கள் மாநிலங்களவையில் எழுப்பிய பிரச்னை குறித்து கீழ்க்காணும் விளக்கத்தை தெரிவிக்க விரும்புகிறேன்.
கல்விக் கடன் வசூலிப்பதற்கான தற்போதைய ஏற்பாடுகளுக்கு உரிய அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின்படியே அந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன. வசூலாகும் கல்விக் கடன் தொகை மீண்டும் கல்விக் கடனுக்காக செலவிடப்படுகிறது. 

மாணவர்கள் கல்விக் கடன் வட்டியில் மத்திய அரசு முழு மானியம் வழங்கி வருகிறது. பெற்றோர் ஆண்டு வருமானம் 4.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் 75 சதவீத ெதாகைக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.  கல்விக் கடன் பெறுவதை எளிமையாக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. www/ vidyalakshmi.co/in என்னும் இணையதளத்தை இதற்காக மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த இணையதளம் மூலம் எளிதாக கல்விக் கடன் விண்ணப்பிக்கவும் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கழிப்பறைகளை கணக்கெடுக்க பள்ளிகளுக்கு உத்தரவு


பள்ளி மாணவ, மாணவியரின் வீட்டு கழிப்பறை எண்ணிக்கையை கணக்கெடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய, பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டத்தில், திறந்தவெளி கழிப்பறைகளை மாற்றி, வீடுகளிலும், பொது இடங்களிலும் கழிப்பறைகள் கட்ட பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

இதையொட்டி, அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் மத்தியில், கழிப்பறை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பள்ளி மாணவ, மாணவியரின் வீடுகளில் கழிப்பறை உள்ளதா என, ஊரக வளர்ச்சித் துறையுடன் சேர்ந்து, பள்ளிக் கல்வித் துறை கணக்கெடுக்கிறது. இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் இருந்து, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், 'அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், மாணவ, மாணவியரிடம் பேசி, கழிப்பறைகள் இல்லாத வீடுகளின் பட்டியலை, ஜன., 18க்குள், ஒப்படைக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

இன்ஜினியரிங் படிப்புக்கு விரைவில் தேசிய நுழைவுத்தேர்வு


நீட்' தேர்வு போல், இன்ஜினியரிங் படிப்புக்கும், தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்த, மாநில அரசுகளிடம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., கருத்து கேட்க உள்ளது. பிளஸ் 2 தேர்வில் வெறும் தேர்ச்சி பெற்றவர்கள் கூட, தனியார் கல்லுாரிகளில் நன்கொடை கொடுத்து, மருத்துவ படிப்பில் சேர்வதாக, மத்திய அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து, மருத்துவ படிப்பில் சேர, அனைத்து மாணவர்களுக்கும், 'நீட்' எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., அறிவித்தது. அதன்படி, தேர்வு நடத்துவது கட்டாயம் என, உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டது. இதை போல, தகுதி அடிப்படையில், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர்களை சேர்க்கும் வகையில், தேசிய நுழைவுத் தேர்வு நடத்த, ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்துள்ளது. இதற்கு, மத்திய மனிதவளத் துறையும் அனுமதி அளித்துள்ளது. அதற்கு, பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

எனவே, நுழைவுத் தேர்வின் அவசியம் குறித்து, மாநிலங்களிடம் கருத்து கேட்க, ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்துள்ளது. விரைவில், இந்த கருத்து கேட்பு துவங்கும் என, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏடிஎம் மில்.இனி பத்தாயிரம் எடுக்கலாம்



ரூபாய் நோட்டுகள் தடைக்கு பின் ஏ.டி.எம்களில் பணம் எடுக்க வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது 4500 ரூபாயிலிருந்து இந்த வரம்பு உயர்த்தப்பட்டு, நாளை முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளில் வாரத்திற்கு 1 லட்சம் ரூபாய் வரை நடப்பு கணக்குகளில் எடுத்துக்கொள்ளலாம்.

Sunday, January 15, 2017

கிராமிய விளையாட்டு

*உங்களுக்கு தெரியுமா?*
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள்:
1)கிட்டிபுள்ளு
2)கிளித்தட்டு
3)சடுகுடு
4)எட்டுக்கோடு
5)வழுக்குமரம் ஏறுதல்
6)கயிறு இழுத்தல்
7)உறியடி
8)பாரிவேட்டை
9)சங்கீத கதிரை
10)போர்த்தேங்காய்
11)பல்லாங்குழி
12)ஒப்பு
13)மோடி விளையாட்டு
14) கண்ணாமூச்சி
15)குழைஎடு
16)பேணிஅடித்தல்
17)அம்பெறிதல்
18)சில்லிகோடு
19)கிச்சுகிச்சு தாம்பலம்
20)போளையடி
21)மணல் வீடு கட்டுதல்
22)தோணி விடுதல்
23) தனி நீச்சல்
24)துணை நீச்சல்
25) ஆழ் கல் எடுத்தல்
26) கால் கட்டி நீச்சல்
27)படகு ஓட்டுதல்
28) பரிசல் ஓட்டுதல்
29)பச்சை மரம் ஏறல்
30)தனி ஓட்டம்
31) துணை ஓட்டம்
32) கூட்டு ஓட்டம்
33) தொடர் ஓட்டம்
34) சாக்கு ஓட்டம்
35) நொண்டி ஓட்டம்
36) கண்கட்டி ஓட்டம்
37) கண்ணாமூச்சி
38)கள்ளன் காவல்
39) புதையல் தேடல்
40) ஏறு குதிரை
41) ஏறு யானை
42)தட்டாமாலை
43)கயிறு பாய்தல்
44)சமநிலை பேணுதல்
45)கிடுகு கோர்த்தல்
46) ஊசிநூல் கோர்த்தல்
47) மா கோலம்
48) பல்லாங்குழி
49) கிரகாட்டம்
50)ஊஞ்சல் விழுது
51) குரங்கு தாவல்
52)பன வண்டி உருட்டி
53) நாட்டு பாடல்
54) தாயகட்டை
55) கோலிகுண்டு
56)பம்பரம்
57)ஒத்தையா ரெட்டையா?
58) நொண்டி
59)சிலம்பம்
60) புலி வேடம்
61) தட்டாங்கல்
62)மஞ்சள் நீர் தெளித்தல்
63) எசைப்பாட்டு
64) விடுகதை

*விலங்குகள் விளையாட்டுக்கள்*
1 ஜல்லிக்கட்டு
2 மாட்டுசண்டை
3 ஆட்டுசண்டை
4 கோழிசண்டை
5 மாட்டுவண்டி பந்தயம்
6 காளை கட்டல்
7 சேவல் விடுதல்

பாரம்பரிய விளையாட்டுகளை
பொங்கல் நன்னாளில் நமது சந்ததியர்க்கு சொல்லிகொடுப்போம்!
🙏🙏🙏🙏🙏🙏

பள்ளிகள், மருத்துவமனைகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைத்ததில் 30 கோடி ஊழல்


தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைப்பதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தமிழக பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு மூலம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பிரிவின் மூலம் பள்ளிக்கல்வி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலம், உள்துறை, நீதிமன்றம், போக்குவரத்து, மீன்வளம், சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்கான கட்டுமான பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளை செய்து வருகிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ரூ.2000 கோடிக்கு மேல் பொதுப்பணித்துறையின் கீழ் மற்ற அரசு துறைகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரி கட்டிடங்கள், பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி, நீதிமன்றம் மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி ( ஆர்.ஓ. பிளான்ட்) அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, 200 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குறிப்பாக, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதிகள், அண்ணா பல்கலை, ஐஐடி, திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், மருத்துவமனைகள், திருவண்ணாமலை நகராட்சி பள்ளிகள், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திண்டிவனம் அரசு கலை கல்லூரி, திருவள்ளூர் தர்மபுரி ஆரம்பசுகாதார மையம், கே.கே. நகர் புறநகர் மருத்துவமனை உட்பட பல்வேறு இடங்களில் ஆர்.ஓ. பிளான்ட் அமைக்க தேர்வு செய்யப்பட்டது. இதற்காக பொதுப்பணித்துறையின் மூலம் டெண்டர் விடப்பட்டது. ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 1 ஆர்.ஓ. பிளான்ட் 6.50 லட்சம் என திட்ட மதிப்பீடு தனியார் நிறுவனத்திடம் இருந்து பொதுப்பணித்துறை பெற்றுள்ளது.

அந்த நிறுவனத்தின் அறிக்கையின் படி ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களின் மூலம் சம்பந்தபட்ட இடங்களில் ஆர்.ஓ. பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு ஆர்.ஓ. பிளான்ட் அமைக்க ரூ.2.50 லட்சம் மட்டுமே செலவாகும் நிலையில் கூடுதலாக 4 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் தகவல் வெளியாகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, January 14, 2017

காலம் கடந்து...தாஸ் கேபிட்டல் காரல் மார்க்ஸ்


உலக அரசியலில் வேறு எந்த நூலும் தாஸ் கேபிட்டல் அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தியதில்லை. மிகச் சிறந்த அறிஞரான காரல் மார்க்ஸ், ஜெர்மனி மொழியில் எழுதிய முதலாளித்துவ மற்றும் தொழிலாளி வர்க்கம் குறித்த பொருளாதார கட்டுரைகளே இந்த தாஸ் கேபிட்டல். மேலும் அரசபொருளியல் சார்ந்த ஆராய்வுக் கட்டுரைகள், மூலதனம் பற்றி பொருளியலாளர்களால் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள், முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வுகள் போன்றவற்றை உள்ளடக்கமாக இந்த நூல் கொண்டுள்ளது.

தாஸ் கேபிட்டல் நூலின் முதல் பாகத்தை 1867-ஆம் ஆண்டில் மார்க்ஸ் வெளியிட்டார். அதன் பின்னர் 2, 3, 4-ஆம் பாகங்கள் பிரெட்ரிக் எங்கெல்ஸ், காரல் கெளட்ஸ்கி ஆகியோரால் வெளியிடப்பட்டது. தமிழில் மூலதனம் என்ற பெயரில் தியாகு மொழி பெயர்த்துள்ளார். இதில் உள்ள கருத்துகளும் காரல் மார்க்ஸின் கருத்துகளும் மார்க்சிஸம் என்ற அரசியல் பிரிவை உண்டாக்கியுள்ளது. எழுதப்பட்டு சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சோவியத் ரஷியாவிலும் அதன் பின்னர் சீனத்திலும் நடைபெற்ற கம்யூனிஸ்ட் புரட்சிகளுக்கு வித்திட்ட நூல் இந்த தாஸ் கேபிட்டல்தான். அதன் பின்னர் கியூபா, போலந்து, வடகொரியா போன்ற பல நாடுகளில் கம்யூனிஸ்ட் அரசுகள் அமைந்தன என்பது வரலாறு.

இன்றளவும் பல நாடுகளில் இயங்கி வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பகவத் கீதையாக அமைந்துள்ளது இது. உலகத்தில் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் அரசுகள் மாறிவிட்டன. தற்போது கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறும் சில நாடுகளில் கம்யூனிஸ்ட் கொள்கைகள் நீர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தாஸ் கேபிட்டல் கூறும் அரசப் பொருளாதார கூறுகள் மட்டும் என்றும் மாறாமல் அப்படியே உள்ளன. உலகத்தில் ஏதாவதொரு மூளையில் கடைசி கம்யூனிஸ்ட் இருக்கும் வரையில் தாஸ் கேபிட்டல் காலம் கடந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

கோடைக்கு முன் தேர்வு: நடுநிலை பள்ளிகள் கோரிக்கை


எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, கோடை வெயிலில் இருந்து காக்க, முன்கூட்டியே தேர்வு நடத்த வேண்டும்' என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டு வரையிலான, நடுநிலை பள்ளிகளில், 220 நாட்கள்;

10 முதல் பிளஸ் 2 வரையிலான, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 210 நாட்கள், வகுப்புகள் நடைபெறும். அதாவது, நடுநிலை பள்ளிகளுக்கு, ஏப்., 30 வரை; மற்ற மாணவர்களுக்கு, ஏப்., 15 வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், நடுநிலை பள்ளிகள், அதிக நாட்கள் இயங்குவதால், கோடை வெயில் பாதிப்பில், சின்னஞ்சிறு மாணவர்கள் சிக்கி கொள்கின்றனர்.

இதை தவிர்க்க, நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, வேலை நாட்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, சென்னை, பரங்கிமலை, ஏ.பி.டி.எம்., நடுநிலை பள்ளி தாளாளர், விக்டர் கிருபாதனம் வெளியிட்ட அறிக்கை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 31க்குள் தேர்வுகள் முடிகின்றன. ஆனால், ஆறு முதல், 14 வயது வரையிலான, சிறு வயது மாணவர்களுக்கு, ஏப்., 30 வரை பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அதனால், அவர்கள் தான் வெயிலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே, எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், ஏப்., 15க்குள் தேர்வுகளை முடித்து, விடுமுறை அளிக்க வேண்டும். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், இதே முறை கடைபிடிக்கப்படுகிறது. வேலை நாட்களை சரிசெய்ய, காலாண்டு, அரையாண்டு விடுமுறை நாட்களை குறைத்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

கல்வி உரிமை சட்டம் குறித்து நிடி ஆயோக்..அதிருப்தி!: மறு ஆய்வு செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை


அனைவருக்கும், எட்டாம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி அளிக்க வகை செய்யும் கல்வி உரிமைச் சட்டம், பெயரளவுக்கு மட்டுமே செயல்படுகிறது; இந்த திட்டத்தால் உண்மையான நோக்கம் நிறைவேற வில்லை; இதுபற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும்' என, மத்திய அரசுக்கு, 'நிடி ஆயோக்' அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது.

நாட்டில், 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாக, இலவச கல்வி அளிக்க வகை செய்யும் கல்வி உரிமைச் சட்டம், 2009ல் கொண்டு வரப்பட்டது. 'அனைத்து பள்ளி குழந்தைகளையும், 8ம் வகுப்பு வரை படிக்க வைக்க வேண்டும்; தனி யார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை, ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்; அதற்கான கட்டணத்தை, அரசு செலுத்த வேண்டும்' என்பது இச்சட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.

இந்த சட்டம் அமலுக்கு வந்து, ஏழு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் அதனால் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திட்ட கமிஷனுக்கு
மாற்றாக, நீண்ட கால திட்டங்கள் தொடர்பாக, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி வரும், 'நிடி ஆயோக்' அமைப்பு ஆய்வு செய்துள்ளது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி நிடி ஆயோக் வட்டாரங்கள் கூறியதாவது:

கல்வி உரிமைச்சட்டம் குறித்து ஆய்வு செய்த, ஆண்டு கல்வி நிலை அறிக்கை, அதன் அவல நிலையை வெளியிட்டுள்ளது. 8ம் வகுப்பு பயிலும் குழந்தைகளில் பலருக்கு, தாய் மொழி எழுத்துகள் கூட தெரிய வில்லை; பெருமளவு நிதி முறைகேடு நடைபெறுகிறது. பல மாநிலங்களில், பெயரளவுக்கு தான் திட்டம் செயல்படுகிறது. மாணவர்கள் கல்வி பயிலுவதாக கணக்கு மட்டுமே காட்டப்படுகிறது.

ஆனால், அவர்களது கல்வி நிலைமையை சோதித் தால் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது. எனவே, இந்த திட்டத்தால் ஏற்பட்டுள்ள பயன் குறித்து முழுமை யாக மறு ஆய்வு செய்ய வேண்டும். தேவையான மாற்றங்கள் செய்தால் மட்டுமே குழந்தைகளுக்கு பயனளிக்கும் திட்டமாக இது இருக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

மோசடி அம்பலம்

கல்வி உரிமைச்சட்டத்தின் படி, பல்வேறு மாநிலங் களில், 8ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு உணவு, பாடப் புத்தகங்கள் மற்றும் இதர பொருட்கள் வழங்கப்படுகின்றன; இதில் பெரும் மோசடி நடந்து வருவது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, நிடி ஆயோக் வட்டாரங்கள் கூறியதாவது:

போலி ரேஷன் கார்டுகள் மூலம் பொய்யான
பெயரில் குழந்தைகளின் பெயர்கள் பட்டியலில்சேர்க்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது. இதைத் தடுக்க, கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் பயன் பெறும் பயனாளி களை, ஆதார் எண் மூலம் அடையாளம் காண வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறிஉள்ளன.

அதிர வைக்கும் அதிர்ச்சி தகவல்

ஆண்டு கல்வி நிலை அறிக்கையில் வெளி யாகியுள்ள பகீர் தகவல்கள்:

* எட்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, தாய் மொழி எழுத்துகள் முழுமையாக தெரியவில்லை
* தங்கள் பெயரைக் கூட எழுத தெரியவில்லை
*ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களில், 50 சதவீதம் பேருக்கு, தங்கள், 2ம் வகுப்பு பாடப் புத்தகங்களை வாசிக்கக் கூட முடியவில்லை
* மாணவ, மாணவியருக்கு பெயரளவுக்கு மட்டுமே கல்வி வழங்கப்படுகிறது.

பள்ளி மேலாண்மை குழுவிற்கு ரூ.3.60 கோடி ஒதுக்கீடு


பள்ளி மேலாண்மை குழுவிற்கு பயிற்சி அளிப்பதற்காக 3 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தலைமை ஆசிரியர் உள்பட 30 பெற்றோரை உறுப்பினராக கொண்ட பள்ளி மேலாண்மை குழுக்கள் ஒவ்வொரு பள்ளியிலும் செயல்படுகின்றன. பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக பெற்றோரில் ஒருவரே இருக்கிறார்.

தமிழகத்தில் பள்ளி மேலாண்மை குழு செயல்படும் 40 ஆயிரம் அரசு பள்ளிகளில், தலா ஒரு தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர், சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவரின் பெற்றோர், என ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 3 பேர் வீதம் 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு 4,088 இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக 3.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உரிமைகள், பாலின பாகுபாடு களைதல், பேரிடர் மேலாண்மை, தரமான கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், சமூக தணிக்கை, சுகாதாரம் பேணுதல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பொங்கல் விடுமுறைக்கு பின் பயிற்சி துவங்கும்,என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Friday, January 13, 2017

கடுப்பு பொங்கல்

நன்றி:tnsocialpedia

பொங்கல் சிறப்பு கவிதை-
தோழர் மணிகண்ட பிரபு

கடுப்பு பொங்கல்

ஆறு மணிக்கு
அலாரம் வைத்து எழுந்தது
மலையேறியாச்சு

டி.வி பார்த்து
முகநூலில் லைக்கிட்டு
வாட்ஸ் அப்பில் வாழ்த்து சொல்லி
பட்டி மன்றம் பார்த்தவுடன்
பாதிப் பொங்கல் முடிந்தது

தேங்கி வழிந்து கொண்டிருக்கும்
வாட்ஸ் அப் குழுக்களில்
க்ளியர் சார்ட் செய்தவுடன்
அன்ரூல்ட் நோட்டில்
எழுதிப் பழகிய நிம்மதி

ரிமூவ் டேக் செய்தபின்பும்
கேன்டி கிரஷ்க்கு தவிர்த்து
பொங்கல் தின்று படுத்தால்
நாள் முழுதும் தூக்க தண்டனை தான்

ரேசன் கடை கரும்பு
தின்னுட்டு
வீதியை பார்த்தால்
பணமில்லாத ஏடிஎம் மாதிரி
வெறிச்சோடி கிடக்குது

கட்டிடமும் கட்டிடமும்
சார்ந்த இடத்தில் இருந்துகொண்டு
வயலும் வயல்சார்ந்த
இடம் பார்த்து வருத்தமடையுது மனம்

வார விடுமுறையில் தான்
வாழ்க்கை கொஞ்சம் மிஞ்சுகிறது
வலிகளை நினைத்தால்
துக்கம் மட்டுமே எஞ்சுகிறது"!

தோழமையுடன்
மணிகண்டபிரபு, திருப்பூர் ,TNPTF

முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு சிகிச்சை பெறுவதற்கான தொகை ரூ.2 லட்சமாக உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு


தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 4 ஆண்டுகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் காப்பீடும் குறிப்பிட்ட 77 நோய்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரையிலும் காப்பீடு வழங்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் 17.60 லட்சத்திற்கும் அதிகமானோர் ரூ.3,615 கோடி காப்பீட்டு செலவில் பயனடைந்துள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் 7.11 லட்சம் பொதுமக்களுக்கு 1,286 கோடி ரூபாய் காப்பீட்டு செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டு இந்த நிதியிலிருந்து, மருத்துவமனைகளுக்கு நவீன உபகரணங்கள் மற்றும் பிற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. நவீன உயர் சிறப்பு சிகிச்சை மூலம் ஏழை மக்கள் பயன்பெற மாநில அரசு ரூ.35 கோடி தொகுப்பு நிதி ஒன்று உருவாக்கி எவ்வித செலவும் இல்லாமல் 4300 பேர் 318.42 கோடி ரூபாய் செலவில் சிறப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த 11ம் தேதி முதல் தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், சிறப்பு சிகிச்சை முறைகளுக்கு தற்போது வழங்கப்படும் 1.50 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் 312 சிகிச்சை முறைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆறு மாதத்திற்கு மேல் வசிக்கும் கட்டுமான தொழிலாளர்கள், புலம் பெயர்ந்தவர்கள் அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்டு தொழிலாளர் நலத் துறை மூலம் சேர்க்கப்படுவார்கள். மாநில அரசால் அனாதைகள் என வரையறுக்கப்பட்டவர்களுக்கு தனி காப்பீட்டு அட்டை வழங்கப்படும். தற்போதைய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை முறை தொடரப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் மையங்கள் தொடர்ந்து செயல்படும்.

தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனத்துடன் இணைந்து பயனாளிகள் ஆதார் எண்ணுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து காப்பீட்டு அடையாள அட்டை மற்றும் மின்னணு அட்டையை பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைக்கு முறையான சிகிச்சை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை


எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வரும் செவ்வாய்க்கிழமை (ஜன.17) தமிழகத்தில் உள்ள தேசிய வங்கிகள் அனைத்துக்கும் பொது விடுமுறையாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். செலாவணி முறிச்சட்டம் 1881-இன் கீழ், வரும் செவ்வாய்க்கிழமை (ஜன.17) பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இரண்டாவது சனிக்கிழமை (ஜன.14), ஞாயிற்றுக்கிழமை (ஜன.15) ஆகிய இரு நாள்கள் வங்கிகளுக்கு வார விடுமுறை தினங்களாகும். இதைத்தொடர்ந்து, உழவர் திருநாள் (ஜன.16), எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழா (ஜன.17) என, திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களும் விடுமுறையாக உள்ளதால், தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் தொடர்ந்து நான்கு நாள்கள் விடுமுறையாக அமைந்துள்ளன.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 17-1-17 விடுமுறை

Thursday, January 12, 2017

மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச பென்ஷன் ரூ.9,000 ஆக உயர்வு


மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சார்பில் தன்னார்வ அமைப்புகளின் நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், நாட்டில் 50-55 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ. 9 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. மேலும் பணிக்கொடை 2 மடங்கிற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.10-15 லட்சமாக இருக்கும் பணிக்கொடை ரூ. 25-35 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ஓய்வு பெற்ற ஊழியர்களின் திறமையை நாம் முறையாக பயன்படுத்த முடியும் என்றார்.