இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, March 20, 2016

பிளஸ் 2 தேர்வுகளில் சிந்திக்க வைக்கும் வினாக்கள்:மனப்பாடத்தை நம்பிய பள்ளிகள் தவிப்பு


பிளஸ் 2 பொதுத்தேர்வில், சிந்திக்கும் திறன் கொண்ட வினாக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், மனப்பாட முறையில் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்திருந்த தனியார் பள்ளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

தமிழகத்தில் இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதிலிருந்து, பிளஸ் 2 வகுப்பில் எடுக்கும் மதிப்பெண், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.இதனால், மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைக்க, இரண்டு ஆண்டுகளுக்கு, பிளஸ் 2 பாடத்தையே நடத்தி, மனப்பாடம் செய்ய வைத்து தேர்வெழுத வைக்கும் வழிமுறையை, பல தனியார் பள்ளிகள் பின்பற்றி வருகின்றன.சராசரியாக படிக்கும் மாணவர்களை, அவர்கள் பலவீனமாக உள்ள பகுதிகளில் தொடர்ந்து பயிற்சியெடுக்க வைத்து மதிப்பெண் பெற வைத்தன.

இதனால், 100 சதவித தேர்ச்சி, அதிக கட் ஆப், மாவட்ட அளவிலான ரேங்க் என பேனர் வைத்து, பள்ளியின் கட்டணத்தையும் பல மடங்கு அதிகரித்து வந்தன.நடப்பு கல்வியாண்டிற்கான தேர்வு, மனப்பாடம் செய்யும் வழிமுறைக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை நடந்த வேதியியல், கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களில் வழக்கமான கேள்விகள் இல்லாமல் புதிய வகை வினாக்களும், சுயமாக சிந்தித்து பதில் எழுதக் கூடிய வினாக்களும் அதிகமாக இடம்பெற்றன. இதனால், மனப்பாடக் கல்வி மூலம் சென்டம் வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிக அரிதாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், மனப்பாட முறையில் தேர்வுக்கு தயாரான மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இம்மாணவர்களிடம் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராது என்பதால் தனியார் பள்ளிகளும் தவிக்கின்றன. இதை சமாளிக்க, சலுகை மதிப்பெண்கள் தர வேண்டும்; மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. இதுகுறித்து கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:

மாணவர்களுக்கு மனப்பாட முறையில் பயிற்சியளித்த பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், இந்த முறை பாதிக்கப்படலாம். இதனால் அட்மிஷன் குறைந்து, நற்பெயர் பாதிக்கப்படும் என்பதால் அதை ஈடுகட்ட, தனியார் பள்ளிகள் தவித்து வருகின்றன.இதேபோல், இனி வரும் தேர்வுகளும் இருக்கும் பட்சத்தில், தனியார் பள்ளிகள் மனப்பாட முறையில் பாடம் நடத்துவதை கைவிட வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, March 19, 2016

10ம் வகுப்பு தேர்வு புதிய அறிவிப்பு


தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. ஏப்ரல், 7ல் அறிவியல் தேர்வு நடக்க உள்ளது.இந்த நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், '10ம் வகுப்பு அறிவியல் தேர்வு எழுத வரும் மாணவர் அல்லது தனித்தேர்வர் யாராக இருந்தாலும், செய்முறை தேர்வை எழுதியிருக்க வேண்டும். இல்லையெனில், அவர்களை அனுமதிக்க வேண்டாம். 'தியரி' எனப்படும், கருத்தியல் தேர்வு மட்டும், தேர்ச்சிக்கான கணக்கில் எடுத்து கொள்ளப்படாது என, ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

4.23 லட்சம் அரசு ஊழியர் குடும்பங்களின் ஓட்டு யாருக்கு?


தமிழகத்தில், 2003 ஏப்., 1 முதல் பணியில் சேர்ந்த நான்-கு லட்-சத்து, 23 ஆயி-ரத்து, 441 அரசு ஊழியர், ஆசிரியர்கள், புதிய ஓய்-வூ-திய திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். ஊழியர்களிடம் வசூலித்த தொகை மற்றும் அர-சின் பங்கு தொகை என, 8,543 கோடி ரூபாயை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை.

இதனால், பணியின்போது இறந்த ஊழியர்களுக்கு பணப்பலன் கிடைக்கவில்லை; நீதிமன்றம் மூலமே சிலர் பலன் பெற்றனர். கடந்த, 2011 சட்டசபைத் தேர்தல் அறிக்-கை-யில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், புதிய ஓய்-வூ-திய திட்டம் ரத்து செய்யப்படும்,' என அ.தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆட்-சிக்கு வந்த பின், எந்த முயற்-சியும் எடுக்-கவில்-லை அதிருப்தி அடைந்த ஊழியர்கள் தொடர் வேலை-நி-றுத்த்தில் ஈடு-பட்-டனர். இதனால், 'புதிய ஓய்-வூ-திய திட்டம் குறித்து, ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்கப்படும்' என, முதல்வர் அறிவித்தார்; ஆனால், அரசாணை வெளியிடவில்லை.

இதனால் அரசு ஊழியர், ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதை பயன்படுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளைசந்தித்து, தி.மு.க., மாவட்டச் செயலர்கள் ஆதரவு கோரி வருகின்றனர். மக்கள் நலக் கூட்டணியினரும் ஆதரவு கேட்டுள்ளனர். 'வல்லுனர் குழு அமைக்கும் முன், தேர்தல் அறிவித்து விட்டனர். மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வல்லுனர் குழு அமைக்கப்படும்' என அ.தி.மு.க.,வினர், 'தாஜா' செய்-து வருகின்றனர். இதனால், 4.23 லட்சம் அரசு ஊழியர் குடும்பங்களின் ஓட்டு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

4.50 லட்சம் தபால் ஓட்டுகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


தமிழகத்தில், தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள, 4.50 லட்சம் ஊழியர்கள், தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், 3 லட்சம் பேர்; போலீசார், 75 ஆயிரம் பேர்; டிரைவர்கள், கிளீனர்கள், 75 ஆயிரம் பேர் என, மொத்தம், 4.50 லட்சம் பேர், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் அனைவரும் தபால் ஓட்டு போட, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் சேகரிக்கப்பட்டு உள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை, பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தபால் ஓட்டு போடுவோர், தபால் ஓட்டு பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அறிவியல் ஆய்வகம் இல்லாத அரசு பள்ளிகள் கணக்கெடுப்பு


அறிவியல் ஆய்வகம் இல்லாத அரசு பள்ளிகளை கணக்கெடுக்க வேண்டும் என்று, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இதில், 6,௦௦௦க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில், மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும், அறிவியல் ஆய்வகங்கள் செயல்பட்டு வந்ததாகவும், அதற்கான நிரந்த கட்டடங்கள் இருப்பதாகவும், கடந்த 2005ம் ஆண்டுக்கு முந்தைய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2006ம் ஆண்டு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்திய பின், ௧௦ம் வகுப்பிலும் அறிவியல் செய்முறைகள் அமல்படுத்தப்பட்டது. இதனால், உயர்நிலைப்பள்ளிகளிலும் அறிவியல் ஆய்வகள் அமைக்க வேண்டியது அவசியமானது என்று, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

கடந்த, 4 ஆண்டுகளில் நுாற்றுக்கணக்கான நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளுக்கு போதிய வகுப்பு அறை கட்டடங்களே, இன்னமும் கட்டப்படாமல் இருந்து வருகிறது.இதனால், அறிவியல் ஆய்வக வசதி என்பது, பெரும்பாலான உயர்நிலைப் பள்ளிகளில், அரிதாகவே இருந்து வருகிறது. ஒரு சில உயர்நிலைப்பள்ளிகளில், காலி வகுப்பு அறைகளில் தற்காலிக ஆய்வகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளிலும், அறிவியல் ஆய்வகத்துக்கு கட்டடம் தேவைப்படும் பள்ளிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், அதற்கான அறிக்கையை தயாரித்து, முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

Annamalai university DDE - Examination Results - December 2015

Click below

http://www.annamalaiuniversity.ac.in/dde/get_number.php

Friday, March 18, 2016

பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு


பி.பி.எஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பி.பி.எஃப் வட்டி விகிதத்தை 8.7 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. கிஸான் விகாஸ் சேமிப்பு பத்திர வட்டி விகிதமும் 8.7 சதவீதத்திலிருந்து 7.8 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது.

Thursday, March 17, 2016

உறுதிமொழி படிவம்; ஆசிரியர்கள் திணறல்


மாணவர் வாயிலாக அளிக்கப்பட்ட ஓட்டளிப்பு உறுதிமொழி படிவத்தை, பெற்றோர் பலர், கையெழுத்து போடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்; வாக்காளர் பட்டியலில் பெயரே இல்லாத நிலையில், எப்படி ஓட்டளிப்பது என்ற பெற்றோரின் கேள்வியால், ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்ற இலக்கோடு, தேர்தல் கமிஷன் பணியாற்றி வருகிறது. இதற்கென, பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பள்ளி குழந்தைகள் மூலம் ஓட்டளிப்பு உறுதிமொழி படிவம் வழங்கப்பட்டு, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, படிவத்தில் கையொப்பம் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி குழந்தைகளிடம், ஓட்டளிப்பு உறுதிமொழி படிவம் வழங்கி, பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி, ஆசிரியர்களிடம் தர வேண்டும், என, அறிவுறுத்தப்பட்டது."வாக்காளர் பட்டியலில் பெயரே இல்லாத நிலையில், எப்படி ஓட்டளிப்பது?' என கேட்டு, பெற்றோர் பலர், உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திடாமல், குழந்தைகள் வாயிலாக, பள்ளிக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதுபோன்ற பெற்றோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.

ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கூறுகையில்,

"படிவங்களை ஜெராக்ஸ் எடுப்பது, "ஸ்பைரல்' செய்வது என, 3,000 ரூபாய் வரை செலவாகிறது; ஆசிரியர்கள், தங்களது சொந்த பணத்தை செலவழிக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பாக, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்துள்ளோம். தேர்தல் கமிஷனே, ஒவ்வொரு மாணவருக்கும் தலா, மூன்று படிவம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்து தர வேண்டும் என, அனைவரையும் வற்புறுத்தக்கூடாது' என்றனர்.

Tuesday, March 15, 2016

G.O 59 CPS detail&form

Click below

https://app.box.com/s/m95tw92qck7bfaus6krke30o7s9fgfe6

பி.இ. கலந்தாய்வு: ஏப்ரலில் விண்ணப்ப விநியோகம்?


சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பி.இ. கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகத்தை முன்கூட்டியே ஏப்ரலில் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் 2014-இல் மே 3-ஆம் தேதியும், 2015-இல் மே 6-ஆம் தேதியும் தொடங்கியது.

இந்த நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மே 16-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 19-ஆம் தேதியும் நடைபெற உள்ளன. இதனால், மே 16 முதல் 19 வரை பெரும்பாலான மையங்களில் விண்ணப்ப விநியோகமும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதும் தடைப்படும்.

இதன் காரணமாக விண்ணப்ப விநியோகத்தை முன்கூட்டியே, ஏப்ரல் 25-இல் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டிருப்பதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆன்-லைனில் பதிவிறக்கம்: இதுதவிர, கடந்த ஆண்டைப் போலவே கலந்தாய்வு விண்ணப்பங்களை w‌w‌w.a‌n‌na‌u‌n‌i‌v.‌e‌d‌u‌t‌n‌ea என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கமும் செய்து கொள்ள முடியும்.

கலந்தாய்வு ஜூன் மூன்று அல்லது நான்காவது வாரத்தில் தொடங்கப்பட்டு, ஜூலை 30-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டுவிடும். ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் பி.இ. முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என்று பல்கலை. வட்டாரங்கள் தெரிவித்தன.

Sunday, March 13, 2016

Election form.2016

Click below

https://app.box.com/s/5xl76w5bgw599sgk34tnkzidqvc3f1jo

பின் தங்கிய பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவு


கல்வி தரத்தில் பின்தங்கிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்க கல்வித்துறை இயக்குனரகத்தில் இருந்து, முதன்மை கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ.,) மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் யல்படுகின்றன; அரசு உதவி பெறும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆய்வு நடத்த வேண்டும்.உதவி மற்றும் கூடுதல் தொடக்க கல்வி அலுவலர்கள், அறிவியல்
மற்றும் நர்சரி உதவி தொடக்க கல்வி அலு
வலர்கள், எஸ்.எஸ்.ஏ., ஆசிரிய பயிற்றுனர்கள் குழு அமைத்து, முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தலைமையில், முன்னறிவிப்பின்றி, பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து புகார் வரும் பள்ளிகள், கல்வி தரத்தில் பின்தங்கிய பள்ளிகளை தேர்வு செய்து, இத்தகைய ஆய்வை நடத்த வேண்டும்.
ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வருகின்றனரா; பணி நேரம் முழுவதும் பள்ளியில் இருக்கின்றனரா; பாடங்கள் முழுமையாக நடத்தப்படுகிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாணவர்களின் கல்வி முன்னேற்றம், நூலகம் பயன்பாடு, அரசின் நலத்திட்டங்கள் வழங்கிய விவரம், கழிப்பறை வசதி மற்றும் துப்புரவு பணி, பாதுகாப்பான குடிநீர் போன்றவை ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆய்வு அறிக்கையை, தொடக்க கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்து இலட்சம் பேர் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நாளை துவக்கம்


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, தமிழகம், புதுச்சேரியில் நாளை தொடங்குகிறது. முறைகேடுகளை தடுக்க 6600 பறக்கும் படையை தேர்வுத்துறை அமைத்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை தொடங்குகிறது. இதில் 12, 053 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரத்து 185 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். மேலும், தனித் தேர்வர்களாக 48 ஆயிரத்து 564 பேர் எழுதுகின்றனர். இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை மாவட்டத்தில் 574 பள்ளிகள் மூலம் மொத்தம் 53  ஆயிரத்து 159 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர். இவர்களுக்காக சென்னை மாவட்டத்தில் மட்டும் 209 தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 298 பள்ளிகளை சேர்ந்த 17 ஆயிரத்து 041 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்காக 48 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, திருச்சி, பாளையங்கோட்டை, சென்னை புழல் சிறையில் உள்ள 250 கைதிகளும் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர்.

தமிழ்  வழியில் படிப்போர் 6 லட்சத்து 70 ஆயிரத்து 795 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இவர்களுடன் டிஸ்லெக்ஸ்சியா, கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளிகள் என 3420 பேருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை கண்காணிக்க 6600 பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வுகள் காலை 9 மணிக்கே தொடங்கும்.

Saturday, March 12, 2016

ஓட்டுப்பதிவுக்கு முன் 2 நாள் பிரசாரம்:தேர்தல் கமிஷன் புது முடிவு


முதன் முதலாக, சட்டசபை தேர்தலில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் முடிந்ததும், ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள் வரை, இரண்டு நாட்கள் தேர்தல் கமிஷன் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

தமிழகம் முழுவதும், ஓட்டுப்பதிவை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு தேர்தலில், ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவாக உள்ள, ஓட்டுச்சாவடிகளை தேர்வு செய்து, அவற்றுக்கு மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழுவில், ஓட்டுச் சாவடி அலுவலர், ஆசிரியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இடம் பெறுவர். இவர்கள், ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று, ஓட்டு போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவர். தற்போது, சென்னையில் உள்ள கல்லுாரிகளில், தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

அதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள கல்லுாரிகள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., போன்றவற்றிலும், மாணவ, மாணவியரிடம், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.அரசு கேபிள் 'டிவி' மூலம், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர் களின் தேர்தல் பிரசாரம், மே, 13ம் தேதி மாலை நிறைவு பெறும். அதன்பின், இரண்டு நாட்களுக்கு, தேர்தல் கமிஷன் சார்பில், ஆட்டோவில் ஒலிபெருக்கி பொருத்தி, ஓட்டு போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, பிரசாரம் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Friday, March 11, 2016

CPS nominee details

Click below

http://218.248.44.123/auto_cps/public/

அதிக சப்தமுள்ள ஒலி எழுப்பான்களை ஒப்படைக்க வேண்டும்:தமிழக அரசு உத்தரவு


நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட, அதிக சப்தத்தை எழுப்பும் ஒலி எழுப்பான்களை பயன்படுத்தினால் அவற்றை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மோட்டார் வாகனச் சட்டத்தின் 119 (2)-ன் பிரிவின்படி, வாகனங்களில் 85 முதல் 105 டெசிபெல் அளவுக்குள் ஒலி எழுப்பும் கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை மீறுவோருக்கு முதலில் ரூ.ஆயிரமும், தொடர்ந்தால் ரூ.2 ஆயிரமும் அபராதம் விதிக்கலாம்.

இந்த நிலையில், அதிக ஒலி எழுப்பும் கருவிகளைப் பயன்படுத்துவோர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்து விட வேண்டும் என்று தமிழக போக்குவரத்துத் துறை ஆணையாளர் சத்யபிரத சாஹு இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Wednesday, March 09, 2016

Voters I.D get easy way

எளிய முறையில் வாக்காளர் அடையாள அட்டை: ராஜேஷ் லக்கானி தகவல்

வாக்காளர் அடையாள அட்டை பெறாதவர்கள் எளிய முறையில் அவற்றை பெறுவதற்கான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை இது வரை பெறாதவர்கள் எளிய முறையில் பெறுவதற்காக தமிழகம் முழுவதும் 363 வாக்காளர் சேவை மையம் வரும் திங்கள்கிழமை முதல் செயல்படும். இந்த வசதி அடுத்த மாதம் 15-ம் தேதி வரை இருக்கும். இந்த மையங்களுக்கு செல்ல முடியாதவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் .

Tuesday, March 08, 2016

பி.எப் வரிவிதிப்பு வாபஸ்

நாடு முழுவதும் எதிர்ப்பு எதிரொலி பி.எப். வரிவிதிப்பு வாபஸ் : நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவிப்பு

பி.எப். எனப்படும் வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறும்போது 60% தொகைக்கு வரிவிதிக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்வதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். கடந்த 29ம் தேதி நாடாளுமன்றத்தில் அருண் ஜெட்லி 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில்  ஏப்ரல் முதல் ேததிக்குப் பிறகு ‘தொழிலாளர்கள் ஓய்வு அடையும்போது பெறும், இ.பி.எப்., மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.பி.எப்., தொகையில், 60 சதவீதத்தின் மீது வரி விதிக்கப்படும் என ெதரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இதை திரும்ப ெபற வேண்டும் என அவை வலியுறுத்தின. ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது.

அரசின் வருவாயை அதிகரிக்க இந்த வரிவிதிப்பு கொண்டு வரப்படவில்லை என்றும் மாறாக அனைவரையும் குறிப்பாக தனியார் துறை ஊழியர்களை ஓய்வூதிய திட்டத்தில் சேரவைப்பதே நோக்கம் என ஜெட்லி விளக்கம் அளித்தார். பிரதமர் மோடியும் இந்த வரிவிதிப்பு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு நிதியமைச்சரை கேட்டுக் கொண்டார். பி.எப் திட்டத்தில் சேர்ந்துள்ள 3.26 கோடி உறுப்பினர்களில், 3.7 கோடி பேரின் மாத வருவாய் ₹15,000த்துக்கும் கீழ்தான் உள்ளது என அருண் ஜெட்லி கூறினார். முழு பி.எப். தொகையையும் எடுத்தால் 60% எடுப்புத் தொகைக்கு வரி  விதிக்கப்படும் என்றும் மாறாக அந்த 60% தொகை ஏதாவது பென்ஷன் திட்டத்தில்  சேர்க்கப்பட்டால் அதற்கு வரிவிதிப்பு கிடையாது என்றும் கூறினார்.
இந்நிலையில், மக்களவையில் நேற்று தாமாகவே முன் வந்து அருண் ஜெட்லி ஒரு அறிக்கையை வாசித்தார்.  அதில், ‘‘பிஎப் வரி விதிப்பு திட்டம் குறித்த கருத்துகளின் அடிப்படையில், பல்வேறு கோணங்களில் மத்திய அரசு ஆராய்ந்தது. இதையடுத்து வரி விதிப்புத் திட்டத்தை மத்திய அரசு கைவிடுகிறது’’ என்றார். அதே நேரம், தேசிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்துள்ளவர்கள் முதிர்வின்போது திரும்ப பெறும் 40 சதவீத தொகைக்கு வரி விலக்கு தொடரும் என்றார். இதில் எந்த மாற்றமும் இல்லை என அவர் தெளிவுப்படுத்தினார்.

8ம் வகுப்பு தேர்வு 'தத்கல்' விண்ணப்ப தேதி அறிவிப்பு


எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், மார்ச், 11, 12ல் விண்ணப்பிக்கலாம்.தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏப்ரலில் நடக்க உள்ள, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள், மார்ச், 11, 12ல், 'ஆன்லைன்' மூலம் சிறப்பு அனுமதி தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதற்கான அரசு சேவை மையங்களின் முகவரி விவரம், தேர்வுத்துறையின், www.tndge.in என்ற, 'ஆன்லைன்' முகவரியில் தரப்பட்டுள்ளது.மார்ச், 12ம் தேதி மாலை, 5:00 மணி வரை இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது