இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, December 10, 2014

ஏ.இ.இ.ஓ.,க்கள் 63 பேருக்கு தொடக்க கல்வித்துறை 'மெமோ'

ஆசிரியர் சேமநலநிதி கணக்கு தணிக்கை விவரங்களை சமர்பிக்காததால், தமிழகம் முழுவதும், 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, 'மெமோ' வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.தொடக்க மற்றும் நகராட்சி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின், வருங்கால சேம நலநிதி கணக்கு மற்றும் ஐந்தாவது ஊதியக்குழு முடிவு இருப்பு தொகை தணிக்கை ஆகியவை, ஆண்டு தோறும், தமிழக தகவல் தொகுப்பு விவர மைய கமிஷனரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த ஆண்டு, 63 உதவிதொடக்கக் கல்வி அலுவலகங்கள், தணிக்கை விவரங்களை சமர்பிக்கவில்லை. இதனால், தமிழக தொடக்கக் கல்வி இயக்குனரகம், 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், அந்த அலுவலக பணியாளர்கள் மீது, நன்னடத்தை விதிமீறல் படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

.Plz furnish the details

Click below

https://app.box.com/s/5kv5ubievzusfmiho3h2

Tuesday, December 09, 2014

TPF-தணிக்கை ஆவணங்கள் அளிக்கப்படாமல் நிலுவையில் உள்ள 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் 26.12.14 குள் கண்டிப்பாக முடிக்க வேண்டும்

Click below

https://drive.google.com/file/d/0ByAQcFNqemV0M1VVQmRxcjRjME0/view?usp=sharing

ஓய்வூதிய பலன் இல்லைஅதிருப்தியில் ஊழியர்கள்

தமிழகத்தில் 10 ஆண்டுகளில் புதிய ஓய்வு திட்டத்தில் பணிக்கு சேர்ந்த 2000 பேர் ஓய்வு பெற்றும், இறந்த 1000 பேர் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் உட்பட எந்த பயனும் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளனர்.இந்தியாவில் மேற்கு வங்காளம், திரிபுரா மாநிலத்தை தவிர்த்து அனைத்து மாநிலத்திலும் புதிய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மத்திய அரசால் 2004 ஜன., யில் கொண்டு வரப்பட்டாலும், தமிழகத்தில் 2003 ஏப்ரலில் முன் தேதியிட்டு அறிமுகப்படுத்தினர்.மத்திய அரசு பணிக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணிநியமனம் பெற்றோரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் புதிய ஓய்வூதியதிட்டத்தின் கீழ் பணிக்கு சேர்ந்தவர்களில் 2000 பேர் ஓய்வு பெற்று விட்டனர், 1000 பேர் இறந்து விட்டனர். இவர்களது குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியம், பணிக் கொடை எதுவும் தமிழக அரசு வழங்கவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கண்ணன் கூறுகையில், "

புதிய ஓய்வூதிய திட்டம் இந்தியா முழுவதும் பொதுவானது என தமிழக அரசு கூறுகிறது. தமிழகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு போல் குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும்,” என்றார்.

50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு

தமிழகம் முழுவதும் உள்ள 50 ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா பிறப்பித்துள்ளார். தரம் உயர்த்தப்படும் 50 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா ஒரு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் வீதம் 50 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களும், ஒரு பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் பணி நிரவல் மூலம் நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்புகள் தொடக்கப் பள்ளியாக நிலையிறக்கம் செய்யப்படுவதால், அந்தப் பள்ளிகளுக்கு ஒரு தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடம் வீதம் 50 தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 7 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை:

காஞ்சிபுரம் - 4, திருவள்ளூர்-2, விழுப்புரம்-2, கடலூர் -1, வேலூர் - 7, திருவண்ணாமலை - 2, தருமபுரி - 2, கிருஷ்ணகிரி -1, சேலம் -1, நாமக்கல்-1, ஈரோடு-2, திருப்பூர்-1, கோவை -1, திருச்சி-3, பெரம்பலூர் -1, அரியலூர்-1, கரூர்-1, புதுக்கோட்டை-2, தஞ்சாவூர்-2, திருவாரூர்-2, நாகப்பட்டினம்-1, மதுரை -1, திண்டுக்கல் -2, தேனி -1, சிவகங்கை -1, ராமநாதபுரம் -1, விருதுநகர் -3, திருநெல்வேலி -1.

பி.எப். கணக்குகளுக்கு ஆதார் அட்டை தேவையில்லை: மத்திய அரசு

பிராவிடண்ட் பண்ட் எனப்படும் (பி.எப்) கணக்குகளுக்கு ஆதார் அட்டை விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 5 கோடி தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு (பி.எப்) சந்தா செலுத்தி வருகின்றனர். இதற்கு ஆதார் எண்ணையே பி.எப் கணக்கு எண்ணாக பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டு பின்பு கைவிடப்பட்டது.

இந்நிலையில், மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பி.எப். சந்தாதாரர்கள் ஆதார் அட்டை விபரங்களை கட்டாயமாக அளிக்க வேண்டுமா? என்று உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பந்தாரு தத்தாத்ரேயா, பி.எப். சந்தாதாரர்கள் ஆதார் அட்டை விபரங்களை கட்டாயமாக அளிக்க தேவையில்லை என்று கூறினார்.

Monday, December 08, 2014

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை ரூ 4000 தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Click below

https://docs.google.com/uc?export=download&id=0B5Op1AjDFZGcVEFCRzlJZjdCLXc

50 SCHOOL upgradation list

CLICK below

https://app.box.com/s/xcbh78wn353xlp1kyt58

பள்ளிக்கல்வி - 2014-15ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல், மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து மகளிர் உயர்நிலைப் பள்ளிகளாக தனியாக பிரித்தல் விவர பட்டியல் வெளியீடு

Click below

https://drive.google.com/file/d/0B7_wDm1_dk21NHZZRDY2Ny1KWVE/view?usp=sharing

அக இ - உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "அறிவியல் சோதனைகள் மற்றும் செயல்திட்டம் - மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் வட்டார மைய அளவில் 06.01.2014 முதல் 08.01.2014 வரை நடைபெறவுள்ளது.

Click below

https://drive.google.com/file/d/0B7_wDm1_dk21aDdQYTBlWFBqMEk/view?usp=sharing

NMMS - 2014 - APPLICATION - UPLOAD - Extended Upto (09/12/2014)

Click below

http://www.tndge.in/login.aspx

ஆசிரியரின் பாதுகாப்பிற்கு எதிரான உத்தரவுகள்: நீக்க கோரி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

ஆசிரியரின் பாதுகாப்பிற்கு எதிரான உத்தரவுகளை நீக்க கோரியும், ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கோரியும், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு, மாநிலம் முழுவதும், நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது:

குழந்தைகள் உரிமை மற்றும் நலனை முதன்மைப்படுத்தி, அரசு உருவாக்கியுள்ள விதிகளால், மாணவர்களிடம், ஆசிரியர்கள் மீதான பய உணர்வு குறைந்து விட்டது. பல மாணவர்கள், போதை பாக்கு போட்டும், மது அருந்தி விட்டும், பள்ளிக்கு வருகின்றனர். மாணவர்கள், சரியாக படிக்காததைக் கூட, கண்டிக்காமல் இருந்து விடலாம். ஆனால், ஒழுங்காக, பள்ளிக்கு வராமல் இருப்பதைக் கூட கண்டிக்க முடியவில்லை. ஆசிரியை களை, மாணவர்கள் கேலி செய்தாலும், தட்டி கேட்க முடியவில்லை. எனவே, மாணவர்கள் உரிமையை காரணம் காட்டி, ஆசிரியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ள அரசு உத்தரவுகளை, உடனே நீக்க வேண்டும்.
அனைத்து ஆசிரியர்கள் பாதுகாப்பையும், அரசு உறுதிபடுத்தும் வகையில், தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும், வரும் 10ம் தேதி (நாளை), அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி களில் கருப்பு பட்டை அணிந்தும், பள்ளி முடிந்தவுடன், பள்ளி நுழைவாயில் முன், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடுவர். இவ்வாறு, அவர்கள் கூறினர். ஒன்றா... இரண்டா...: நிர்வாகிகள் போட்ட பட்டியல்

* சில ஆண்டுக்கு முன், ஏழாயிரம் பண்ணை அரசு நிதி பெறும் பள்ளி ஆசிரியர், செல்வராஜ், அதே பள்ளி மாணவரால் கொலை செய்யப்பட்டார். * சென்னை பாரிமுனையில், பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி, அதே பள்ளி மாணவரால் கொலை செய்யப்பட்டார்.

* சென்னையில், தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர், ரவுடி கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டார். * சென்னை மதுரவாயல், பள்ளி கணினி ஆசிரியை, லட்சுமியை, பள்ளி மாணவரே தாக்கியதில், அவரின் காது கிழிந்தது.

* திண்டுக்கல் மாவட்டம், கள்ளர் மேல்நிலைப் பள்ளி மாணவர், அதே பள்ளியை சேர்ந்த, சக மாணவரால் கொலை செய்யப்பட்டார். இப்படி, பட்டியல் தொடர்கிறது. மாணவர்களின் அராஜகத்தால், சக மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு, ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு, நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மாணவர்களுக்கு 3 சான்றிதழ்: விரைந்து வழங்க அரசு உத்தரவு

'பள்ளிகள் மூலம், ஜாதி, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றுகள் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, சான்றிதழ்களை, விரைந்து வழங்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மாணவர்கள், அரசின் இலவச திட்டங்களை பெறவும், பிற பயன்பாடுகளுக்காகவும், ஜாதி, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்று பெற, தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதை பெறுவதில், கால தாமதம், லஞ்சம் என, பல பிரச்னைகள் எழுந்ததால், பள்ளிகள் மூலமே சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து, மாவட்ட கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தலைமையாசிரியர் மூலம், தாலுகா அலுவலகங்களில், விண்ணப்பங்கள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. விசாரணைக்கு, கால தாமதம் ஆவதால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னையை, நேரடியாக, மாவட்ட கலெக்டர்களிடம் கொண்டு சென்று, சான்றிதழ்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க, உயரதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அதன்படி, நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

புதிய பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக திரு .கண்ணப்பன் அவர்கள் நியமனம்

புதிய பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக திரு .கண்ணப்பன் அவர்களை நியமனம் செய்தும், மேலும் ஏற்கெனவே பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த திரு . இராமேஸ்வர முருகன் அவர்களை மாநில ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு வெளியிடப்பட்டதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் புதன்கிழமை பதவி ஏற்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ.டி.எம். மூலம் பணம் எடுப்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது!

ஏ.டி.எம். பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், பணவர்த்தனை கணிசமாக குறைந்துள்ளது. கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏ.டி.எம்.களை மாதத்திற்கு 5 முறையும், மற்ற வங்கி ஏ.டி.எம்.களை 3 முறையும் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும் எனவும், அதற்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி கடந்த மாதம் நவம்பர் 1 முதல் கட்டுப்பாட்டை விதித்தது.

இந்த கட்டுப்பாடுகள் புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பெரிய நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த கட்டுப்பாடு காரணமாக ஏ.டி.எம்.களில் பணவர்த்தனை 9 சதவீதம் குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, ஒரு மாதத்தில் ஏ.டி.எம். மையங்களில் சராசரியாக நடக்கும் பணவர்த்தனை 86 லட்சத்திலிருந்து, 81 லட்சமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று பரிவர்த்தனைகள் குறையும் பட்சத்தில் ஏடிஎம் மையங்களை இயக்க வங்கிகளுக்கு தேவைப்படும் செயல்பாட்டு கட்டணத்தை சமாளிக்க வங்கிகள் சிரமப்பட வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

Sunday, December 07, 2014

தரமான ஆரம்பக் கல்வி தேவை By எஸ். பாலசுந்தரராஜ் -dinamani


தமிழக அரசு அனைவருக்கும் பள்ளிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவார்கள் என அறிவித்துள்ளது. தற்போது 9-ஆம் வகுப்பிலும் தேர்ச்சி செய்திட வேண்டும் என வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.

இங்கேதான் கோளாறு உள்ளது எனக் கல்வி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் தேர்ச்சி நிச்சயம் உண்டு. அவர்கள் படித்தால் என்ன படிக்காவிட்டால் என்ன என நினைக்கும் ஆசிரியர்கள் பலர் உள்ளனர் என கல்வித் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

பல ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து கையெழுத்து இட்டுவிட்டு தங்களது சொந்த வேலையைப் பார்க்கச் சென்று விடுகிறார்கள். சில ஆசிரியர்கள் பல தனியார் நிறுவனங்களில் பகுதிநேரப் பணியாளர்களாக வேலை செய்து வருகிறார்கள்.

இவர்களை ஒன்றும் செய்ய இயலாது. சஸ்பெண்டு போன்ற நடவடிக்கை எடுத்தால் சங்கம் போராட்டத்தில் இறங்குகிறது என வேதனையுடன் கூறினார் ஓர் அதிகாரி.

ஒவ்வொரு ஆசிரியரும் மனசாட்சியுடனும், சேவை மனப்பான்மையுடனும் வேலை செய்தால்தான் மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பிக்க இயலும்.

அடுத்து பாடத் திட்டங்களை எடுத்துக் கொள்வோம். அப்போதெல்லாம் தேர்வில் சாய்ஸ் என்பது மிகமிக குறைவாகவே இருக்கும்.

மேலும் ஒரு கேள்விக்கு 4 பதிலைக் கூறி, இதில் எது சரி எனக் கூறு என்ற கேள்விகள் இருக்காது. தற்போது உள்ள இந்த இரு முறைகளினால் மாணவர்கள் படிக்கும் திறன் குறைந்து விடுகிறது. அவர்களின் ஞாபகத் திறன் மழுங்கடிக்கப்படுகிறது.

மேலும், தற்போது மனக்கணக்கு என்கிற பாடம் இல்லை. இந்த மனக் கணக்கு ஞாபக சக்தியை வளர்ப்பதோடு, பிற்காலத்தில் பல வேலைகளை சுலபமாகச் செய்ய வழி செய்யும்.

தற்போது கால்குலேட்டர் வந்துவிட்டது. அந்த காலத்தில் பின்னல் கணக்கு, அல்ஜீப்ரா கணக்கு என எதையும் எழுதி பார்த்து தான் விடையளிக்க முடியும். இதனால் மாணவர்களின் சிந்திக்கும் திறன் வளர்ந்தது. தற்போது கால்குலேட்டர் பயன்படுத்தப்படுவதால், இந்தத் திறன் வளர்க்கப்படுவதில்லை.

மேலும், நோட்ஸ் புத்தகம் வாங்கி அக் காலத்தில் யாரும் படிப்பதில்லை. வகுப்பில் ஆசிரியர் கற்பிக்கும்போதே கேள்வி பதிலைக் கூறிவிடுவார். அதனை நோட்டுப் புத்தகத்தில் எழுதி படிக்க வேண்டும்.

தற்போது எங்கும் நோட்ஸ். எதற்கும் நோட்ஸ் என மாணவர்களின் கற்கும் திறனை மிகவும் குறைத்து விடுகிறது.

அடுத்து அந்தக் காலத்தில் ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு ஒரு பயம் கலந்த மரியாதை இருந்தது. தற்போது அது இல்லை. காரணம் பள்ளியில் தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்க இயலாது. அப்படி கண்டித்தால் ஆசிரியர் அடித்து விட்டார் என புகார் எழும்.

மாணவர்களை அடிக்கக் கூடாது என அரசு கூறியுள்ளதை மாணவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் பல ஆசிரியர்கள் மாணவர்களின் தவறுகளைக் கண்டும் காணாதது போல இருந்து விடுகிறார்கள்.

தற்போது பள்ளியில் வகுப்பறையை மாணவர்கள் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்தால் சிலர் மாணவர்களின் நிலை பாரீர் எனக் கூக்குரலிடுகின்றனர். இதுபோன்ற பல காரணங்களால் மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் பயமும், மரியாதையும் இல்லாமல் போய் விட்டது.

இப்படிப் படிப்பவர்கள் பின்னாளில் ஆசிரியர்களாக பணிபுரிய நேர்ந்தால் எப்படி இருக்கும்? இது போன்ற காரணங்களால்தான் ஆரம்பக் கல்வியின் தரம் குறைந்து வருகிறது.

நம் பிள்ளைகள் நம்மைவிட பல மடங்கு புத்திசாலி எனக் கூறி வருகிறோம். அப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு சிறப்பான கல்வி அளித்தால் அவர்களது வாழ்க்கை சிறப்பாக அமைவதோடு, வருங்கால சமுதாயமும் மேம்படும்.

உதவிப் பேராசிரியர் நியமனம்: டிசம்பர் 15 முதல் நேர்காணல்

அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்துக்காக தமிழ், பொருளாதாரம் உள்ளிட்ட 12 பாடங்களுக்கு நேர்காணல் டிசம்பர் 15 முதல் 19 வரை நடைபெற உள்ளது. அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்டப் பாடங்களில் விண்ணப்பித்தோருக்கான நேர்காணல் முடிந்து இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ், பொருளாதாரம், புவியியல், வணிகவியல், வணிகவியல் (சி.ஏ.), வணிகவியல் (ஐபி), வணிகவியல் (இ-காம்), தொழில் நிர்வாகம் (பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன்), தொழில் மேலாண்மை (பிசினஸ் மேனேஜ்மென்ட்), பொது நிர்வாகம், அரசியல் அறிவியல், உடற் கல்வி ஆகிய 12 பாடங்களுக்கான நேர்காணல் டிசம்பர் 15 முதல் 19 வரை நடைபெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அழைப்புக் கடிதங்கள் கிடைக்கவில்லையென்றாலும், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலிருந்து இந்தக் கடிதங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். சான்றிதழ் சரிபார்ப்பின்போது கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு, அதனடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் தேர்வர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பிற பாடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மை குழுவினருக்கு பயிற்சிதேர்வு நேரத்தில் சிக்கல்

   பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்க அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது. 6-14 வயது வரை உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை இக்குழு கவனிக்கிறது. இக்குழு உறுப்பினர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் மேலாண்மை குழு சார்பில் தலைமை ஆசிரியர் உட்பட 6 பேர் பங்கேற்க வேண்டும்.

பயிற்சி டிச. 15 முதல் 17 வரை ஒரு பிரிவு, 18 முதல் 20ம் தேதி வரை ஒரு பிரிவாக நடத்தப்படும். சாக்கோட்டை வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் அன்பரசு பிரபாகர் கூறியதாவது: டிச.15 முதல் 20 வரை தொடக்க பள்ளி மாணவருக்கான 2-ம் பருவ தேர்வு நேரம். ஈராசிரியர் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பயிற்சிக்கு சென்றால், தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்படும். இந்த மாதத்தில் 18 வேலை நாட்கள் மட்டுமே உள்ளன. அதில் 3 நாள் இப்பயிற்சிக்கும், மேலும் 2 நாள் பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய கூட்டத்திலும் கழிந்துவிடும். இதனால் தேர்வுக்கு மாணவரை தயார்படுத்துவதில் சிரமம் உள்ளது. வரும் காலங்களிலாவது இதை தவிர்க்க வேண்டும், என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பால் மாநகராட்சி பள்ளிகள் தனியாருக்கு விடுவது தற்காலிக நிறுத்தம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பால் மாநகராட்சி பள்ளிகள் தனியாருக்கு விடுவது தற்காலிக நிறுத்தம்

சென்னை மாநகராட்சி 7 பள்ளிகளை தனியாரிடம் கொடுக்க திட்டமிட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பால், அந்த முடிவை மாநகராட்சி ஒத்தி வைத்துள்ளது என்று அக்கட்சியின் அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிபிஎம் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி நடத்திவந்த 7 மாநகராட்சி பள்ளிக்கூடங்களை தனியாருக்கு ஒப்படைப்பது என்று முடிவெடுத்திருப்பதாக டிச.1அன்று பத்திரிகைகளில் செய்தி வெளியானது. பள்ளியை பொறுப்பேற்கும் தனி யாருக்கு, ஒரு மாண வருக்கும் 10 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உத வியை அளிக்கப்படும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டி ருந்தது. அதேநேரத் தில் எந்தெந்தபள்ளிகள் என்று பெயர் அறிவிக்கப்படவில்லை.மாநகராட்சியின் இடம் , கட்டிடம் உள்ளிட்ட கட்ட மைப்புகளை தனியார் பயன்படுத்த அனுமதிப்பதுடன், பணத்தையும் தனியா ருக்கு கொடுக்கும் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி வன்மையாக கண்டித் ததுடன், போராட்ட அறிவிப்புகளையும் கொடுத்தது.மேலும், கடந்த 29.11.2014 அன்றுஅரசுப் பள்ளி பாதுகாப்பு கருத்தரங்கையும் நடத்தி அதன் மூலம் பள்ளிகளை பாதுகாக்க இயக்கம் நடத்திட அறைகூவல் விடுத்திருந்தது.இந்நிலையில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பால் 7 பள்ளிகளை தனி யாருக்கு விடுவதை மாநகராட்சி தற்காலி கமாக நிறுத்தி வைத் துள்ளது. மாநகராட்சி பள்ளிகளை தனியா ருக்கு விடுவதை நிரந்தரமாக கைவிட வேண்டும். மாணவர் கள் குறைவாக உள்ள பள்ளிகளை பலப்படுத்த தேவையான முயற்சி களை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Saturday, December 06, 2014

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தாயார் பெயர் பதிவு கட்டாயம்: அரசு தேர்வுத்துறை புதுஉத்தரவு

'பிளஸ் 2, 10ம்வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை பதியும் போது தந்தை பெயருடன், தாய் பெயரையும் கட்டாயம் சேர்க்க வேண்டும்' என, அரசு தேர்வுகள்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5, 10ம்வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19ல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 32 மாவட்டங்களில் உள்ள பள்ளி வாரியாக எழுத உள்ளோர் விபரங்களை தேர்வுத்துறையின் தீதீதீ.tணஞீஞ்ஞு.டிண என்ற இணையதளத்தில் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

இதற்காக பள்ளிகளுக்கு அதற்கான சாப்ட்வேர் வழங்கப்பட்டுள்ளது. தந்தை பெயருடன், தாய் பெயரையும் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவால், மாணவரின் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், பாடம், மீடியம் உள்ளிட்ட பல்வேறு விபரங்களுடன் தாய் பெயரும் சேர்த்து புகைப்படத்துடன் ஆப்-லைனில் பதிவு செய்யும் பணி நடக்கிறது. இதன் விபரங்களை 'சிடி'யில் பதிவு செய்து நாளை(டிச.,8க்குள்) மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிரின்ட் அவுட் எடுத்து வகுப்பறைகளில் ஒட்டி மாணவர்களுக்கு தெரியப்படுத்தவும், அதில் திருத்தம் இருந்தால் திருத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், " பொதுத்தேர்வு எழுதும் மாணவரின் பெயருடன் தந்தை பெயர் மட்டுமே பதிவு செய்யப்படும். ஒரு சில மாணவர்களின் தந்தை பெயர், பிறந்த தேதி ஆகியவை ஒன்றாக இருக்கும்போது ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கவும், சட்டரீதியாக தந்தை விவாகரத்து பெற்று பிரிந்த பின் தாயிடம் மாணவர் வளர்ந்தால் அதனடிப்படையில் தாய் பெயரை பதிவு செய்யவும் இந்தமுறை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு மாணவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகொண்டுவர வேண்டும். ஆனால் அது கட்டாயமில்லை. இன்ஷியலில் தாய் பெயரை சேர்ப்பதற்கான அரசாணை ஏற்கனவே உள்ளது,”என்றார்.