இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, October 11, 2013

CERTIFICATE VERIFICATION CENTRE LIST on 22-10-13&23-10-13

PG TRB Provisional List for certification verification Subjects wise

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு 10 நாட்களில் வெளியிட ஏற்பாடு

ஆசிரியர் தகுதி தேர்வு ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த மாதம் 17 மற்றும் 18–ந் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இடை நிலை ஆசிரியர்களுக்கான தேர்வை 2 லட்சத்து 67 ஆயிரத்து 950 பேர் 677 மையங்களில் எழுதினார்கள். இவர்களில் 17 ஆயிரத்து 974 பேர் மாற்றுத்திறனாளிகள்.  பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை 4 லட்சத்து 11 ஆயிரத்து 600 பேர் 1060 மையங்களில் எழுதினார்கள்.

தேர்வு எழுதிய காட்சி வீடியோ எடுக்கப்பட்டது. தேர்வு முடிவு உடனடியாக வெளியிடப்பட இருந்தது. ஆனால் முதுகலை பட்டதாரிகள் பணிக்கான எழுத்துத்தேர்வில் தமிழ் தேர்வில் உள்ள வினாத்தாளில் எழுத்து பிழை இருந்தது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்தது. இதன் காரணமாக ஆசிரியர் தகுதி தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி பாதிக்கப்பட்டது. பின்னர் தமிழ் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கான முதுகலை பட்டதாரி பணிக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

10 நாட்களுக்குள் முடிவு ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி முடிந்துவிட்டது. தற்போது சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. எப்படியும் இன்னும் 10 நாட்களுக்குள் தேர்வு முடிவை வெளியிட அதற்கான பணியில் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் உள்ளனர்.

இரட்டைப்பட்டம் வழக்கு சார்பான 24.10.2013 அன்றைய தினத்திற்கு ஒத்தி வைப்ப

இன்று (11.10.2013) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் 38வது வழக்காக பட்டியலிடப்பட்ட இந்த வழக்கு தலைமை நீதியரசர் இராஜேஷ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சுந்தரேஷ் முன்னிலையில் முற்பகல் 11.45க்கு விசாரணைக்கு வந்தது. இதில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் திரு.பிரகாஷ் அவர்கள் இதுவரை இவ்வழக்கை விசாரித்த நீதியரசர் சத்தியநாரயணன் அவர்கள் இல்லாத நிலையில் இந்த வழக்கில் வாதாட இயலாது எனவும், எனவே மறு தேதி வேண்டும் எனவும் கோரினார். எனவே நீதியரசர்கள் வருகிற 24.10.2013  வியாழக்கிழமை ஒத்தி வைத்தனர். இது பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஆசிரியர்களை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. விரைவில் இவ்வழக்கு நிறைவு பெற வேண்டுகிறோம். 

Thursday, October 10, 2013

2nd TERM 1-8th std weekly SYLLABUS

INTERNATIONAL Day of CHILD proceedings

இரட்டைப்பட்டம் வழக்கு ஏமாற்றமே இன்று

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு முதல் அமர்வில் வரிசை எண்-42ல்பட்டியலிடப்பட்டது .வழக்கு விசாரணை மாலையில் தான் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது .ஆனால்  வழக்கு  விசாரணை 41 உடன்  முடிவு  அடைந்ததால் இன்று வழக்கு விசாரணைக்கு வர வில்லை.ஏமாற்றமே  நாளையாவது விசாரணைக்கு  வரும்

GO.401 FINANCE 10%D.A

Wednesday, October 09, 2013

கல்வியில் பின்தங்கிய 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மாத சிறப்பு வகுப்புகள்: அரசு முடிவு

    பின்தங்கிய மாணவர்களையும் சராசரி மாணவர்களோடு இணைக்கும் இந்த வகுப்புகள் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கப்படும். எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கட்டாய தேர்ச்சியினாலும், போதிய ஆசிரியர்கள் இல்லாததாலும் 9-ஆம் வகுப்புக்கு வரும் பல மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை வாசிப்புத் திறன் கூட இல்லாமல் வருகின்றனர்.

இவர்களின் கணிதத் திறனும் மிக மோசமாக உள்ளது. இந்த மாணவர்கள் 10-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெறுவது என்பது மிகவும் கடினம். எனவே, இவர்களுக்கு உதவுவதற்காக அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் இணைப்புப் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டது. பிற மாணவர்களுக்கு இணையாக அவர்களையும் உயர்த்துவதற்காக இந்த இணைப்புப் பயிற்சி (பிரிட்ஜ் கோர்ஸ்) வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறை மற்றும் அனைவருக்கும் கல்வி இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் மூன்று மாதங்களுக்கு அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்புகளில் உள்ள சுமார் 25 சதவீத மாணவர்கள் இந்த சிறப்பு வகுப்புகளில் சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்கு பள்ளி நேரத்திலோ, பள்ளி முடிந்த பிறகோ இந்த வகுப்புகள் நடைபெறும். தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. அடிப்படை மொழியறிவு, அறிவியல் அறிவு மற்றும் கணிதத் திறனை மேம்படுத்தும் விதத்தில் இந்த வகுப்புகள் இருக்கும். அந்தந்தப் பகுதிகளில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அறிவியல் கண்காட்சிகள்:

மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் மாவட்டம்தோறும் அறிவியல் கண்காட்சிகளை நடத்தவும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் முடிவு செய்துள்ளது. குறைந்த செலவில் அறிவியல் பரிசோதனைகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சென்னையில் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வினை வழங்க முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை 1-ஆம் தேதி முதல், முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வால் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் ஆசிரியருக்கும் கூடுதலாக அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை கிடைக்கும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் நேரங்களில் எல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அதே அளவில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இந்த நிலையில், அதே அளவில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படவுள்ளது. இதற்கான ஒப்புதலை முதல்வர் ஜெயலலிதா அளித்துள்ளதாக தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்த அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. எவ்வளவு கிடைக்கும்?

: 10 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படும் போது, மாதம்தோறும் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர். மேலும், இந்த அகவிலைப்படி உயர்வு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் கிடைக்கும்.

கல்வி பாதிப்பு, நிதி பற்றாக்குறையால் ஆசிரியர்களுக்கான பயிற்சி குறைப்பு

தமிழ்நாடு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அனைவருக்கும் கல்வி இயக்ககம் இணைந்து, தொடக்கப் பள்ளிகல்வித்துறை ஆசிரியர்களுக்கு துவக்க நிலை, உயர்நிலை கற்பித்தல் குறித்த சிறப்பு பயிற்சிகளை அளிக்கிறது.

ஒவ்வொரு மாதமும் 10 நாட் களுக்கு மேல் இப்பயிற்சி நடந்தது. இதில், சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். தொடர் பயிற்சியால் மாணவர்களின் கல்வி பாதிக்கிறது என்ற புகாரால் பயிற்சி நாட்களை குறைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில்,மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு ஒதுக்கிய நிதியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டும், தொடர் பயிற்சியால் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்கவும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை குறைக்க திட்டமிட்டனர்.

மாதந்தோறும் 3 நாட்கள் மட்டுமே பயிற்சி அளிக்கப்படும் என, அனைவருக்கும் கல்வி இயக்கக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கல்வியில் பின்தங்கிய எட்டு மாவட்டங்களை சேர்ந்த, 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச "நோட்ஸ்' வழங்க,'' அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அளவில்,10,பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகளில், பின்தங்கிய மாணவர்களை ஊக்கப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க,அரசு உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திண்டுக்கல், சிவகங்கை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய எட்டு மாவட்டங்களை, சேர்ந்த மாணவர்கள் கல்வியில் பின்தங்கியிருப்பதாக, அரசுக்கு தகவல் சென்றது. இலவச "நோட்ஸ்':

இதையடுத்து, பிற்பட்டோர் நலத்துறை மூலம், அரசு,உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், பிற்பட்ட, மிக பிற்பட்ட, சீர்மரபினர் பிரிவை சேர்ந்த 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவசமாக "நோட்ஸ்'கள் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. பிற்பட்டோர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"

" கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, மாணவர்களுக்கு, இலவசமாக "நோட்ஸ்' வழங்கப்பட உள்ளது. இதற்காக, மாணவர்கள் பட்டியலை, முதன்மை கல்வி அலுவலகம் மூலம் சேகரிக்கிறோம். மாணவர்கள் பட்டியல் சென்றபின், அரசு உடனே, இலவச "நோட்ஸ்களை' வழங்கும். அரசு தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் விதத்தில், நவம்பர் 15க்குள் நோட்ஸ்கள் வழங்கப்படும்,'' என்றார்

Tuesday, October 08, 2013

பெண் ஆசிரியர்களுக்கு போன் மூலம் தொல்லை- TNPTF கண்டனம்

திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதி,ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பாகம் எண் மற்றும் அவர்களது பெயர்,மொபைல் எண் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள போன் எண்களுக்கு நள்ளிதவில் மர்ம நபர்கள் போன் செய்து தகாத வார்த்தையில் பேசுகின்றனர்.
      இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிளைகள் சார்பில் மாநகராட்சி கமிஷனிடம் புகார் கொடுக்கப்பட்டது.இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறப்பட்டது.
       கனகராஜா,ஜோசப்,மோகன்,மணிகண்டபிரபு,பாலு,முத்துச்சாமி,ராஜ்குமார்,சரவணன்.கென்னடி போன்றோர் இணைந்து கோரிக்கை மனு கொடுத்தனர். தினமலர் நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.நன்றி

122 ஆசிரியர்கள் நியமிக்க அனுமதி

திருப்பூர் மாவட்டத்தில், தொகுப்பூதிய அடிப்படையில் 122 ஆசிரியர் தற்காலிக பணி யிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதுகலை ஆசிரியர்கள் 2,645 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 3,900 பேர் என தமிழகம் முழுவதும் 6,545 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அரசு அறிவித்தது.

முதுகலை ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக 5,000 ரூபாய், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 4,000 ரூபாய் வழங்கவும், அதற்காக 20.18 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியது. பணியிடங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே நிரப்பவும், அரசு அனுமதித்துள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில், 122 ஆசிரியர் பணியிடங்கள், தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன. முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி கூறுகையில், "" பட்டதாரி ஆசிரியர்கள் 87, முதுகலை ஆசிரியர்கள் 35 என 122 ஆசிரியர் பணியிடங்கள், தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன;

பி.எட்., முடித்தவர்கள், அருகில் உள்ள பள்ளிக்கு சென்று, இப்பணியில் சேரலாம்,'' என்றார். திருப்பூர் மாவட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில், 122 ஆசிரியர்கள் பணியிடங்கள், தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. முதுகலை ஆசிரியருக்கு ரூ.5 ஆயிரம், பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.4 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.

"ஆன் லைனில்' வாக்காளர் பெயர் சேர்த்தல்: கட்டணம் நிர்ணயம்

. 2014 ஜன., 1 ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணியை, தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது; அக்., 31 வரை, இப்பணிகள் நடக்கும். திருத்த பணிகளுக்கு பின், ஜன., 6 ல், இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். தாலூ, ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்க்கும் பணிகள் நடக்கின்றன. தனியார் "பிரவுசிங்' மையங்களிலும், "ஆன் லைன்' மூலம், பெயர் சேர்க்க, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது.

கட்டணம்: பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள், இடமாற்றம், புகார்களுக்கு, 10 ரூபாய் மட்டுமே வசூலிக்கவேண்டும். வாக்காளர் பட்டியல் நகல் (ஒரு பக்கத்திற்கு) 3 ரூபாய்; பெயர், ஓட்டுச்சாவடி பெயர், விண்ணப்பத்தின் நிலை, புகார் மனுவின் நிலை விபரங்கள் அறிய, 2 ரூபாய் என்ற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கவேண்டும் என, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

பள்ளிகளில் 14 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்

பசுமைப்படுத்தல் திட்டத்தில், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி வளாகங்களில், 13 லட்சத்து 93 ஆயிரத்து 695 மரக்கன்றுகள் நட, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதில், வனத்துறை மூலம் 3 லட்சத்து 75ஆயிரத்து 545 கன்றுகளும், தொண்டு நிறுவனங்கள் மூலம் 10 லட்சத்து 18 ஆயிரத்து 150 கன்றுகளும் நடப்பட உள்ளன.

இவை அனைத்தும், அக்.,31க்குள் நடப்பட உள்ளது. இந்த மரக்கன்றுகளை வகுப்பு வாரியாக மாணவர்கள் பராமரிக்க வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 11 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

காஸ் சிலிண்டர் விலை ரூ.3.50 உயர்த்த முடிவு

சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்யும் டீலர்களுக்கு, அளிக்கப்படும் கமிஷனை உயர்த்தி வழங்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில், சிலிண்டருக்கு, 3.50 ரூபாய் உயர்த்த, பெட்ரோல் திட்டம் மற்றும் மதிப்பீடு குழு, மத்திய பெட்ரோலிய அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது.

பொதுவாக, டீலர்களுக்கான கமிஷன் உயர்த்தப்படும் போது, அது வாடிக்கையாளர்கள் தலையில் தான் கட்டப்படும். கடந்தாண்டு அக்டோபர் மாதம், டீலர்களுக்கான கமிஷன், 11.50 ரூபாய் உயர்த்தப்பட்டது. அப்போது, டில்லியில், 399 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை, 410.50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து மற்ற நகரங்களிலும் விலை உயர்வுக்கு அமலுக்கு வந்தது. தற்போது, சிலிண்டருக்கு, 3.50 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதால், இதற்கான அறிவிப்பு இரண்டொரு நாட்களில் வரவிருக்கிறது.

தற்போது, ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள விலையில் இருந்து, 3.50 ரூபாய் அதிகமாக கொடுக்க வேண்டியிருக்கும்.

அங்கீகாரம் இல்லாத பள்ளி மாணவர் பொது தேர்வு எழுத தடை இல்லை: இயக்குனர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும், 750 பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில், 4 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், அதிக அளவில் உள்ளனர். தமிழக அரசு நிர்ணயித்துள்ள அளவை விட குறைவாக இடம் உள்ள, பள்ளிகள் மற்றும் இரு இடங்களில் இயங்கும் ஒரே பள்ளிகள் ஆகியவை, பிரச்னையில் சிக்கி உள்ளன.

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர், பொதுத் தேர்வை எழுத முடியுமா என, சந்தேகம் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில், பள்ளிகள் மீது, தேர்வுத் துறை, கடுமையான கெடுபிடி நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது. இதனால், மாணவர், பெற்றோர் மத்தியில், பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை, நேற்று கூறுகையில்

, ''அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவர், பொதுத் தேர்வை எழுதுவதில், எவ்வித பிரச்னையும் இருக்காது. தேர்வை எழுதுவதற்கு, அவர்களுக்கு, எவ்வித தடையும் இல்லை. தடை விதிப்பது போன்ற எந்த உத்தரவும், தேர்வுத் துறையிடம் இருந்து, எங்களுக்கு வரவில்லை. எனவே, மற்ற பள்ளி மாணவ, மாணவியரைப் போல், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும், பொதுத் தேர்வை எழுதலாம்,'' என்றார்.

HM Meeting form 3

HM Meeting 3

HM Meeting form 2

HM Meeting form 1

தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - தேர்வுநிலை / சிறப்புநிலை பணிக்கு 3% கூடுதல் ஊதியம் வழங்கிய உத்தரவிற்கு தெளிவுரை வழங்கி தமிழக அரசு உத்தரவு.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்  கீழ் இயங்கும் 100 மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் திட்டத்தை அறிமுகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் தாங்கள் கற்கும் கல்வியுடன், பொது அறிவான தாங்கள் வசிக்கும் மாவட்டம், மாநிலம், நாடு பற்றிய விவரங்களை நன்கு அறிந்திருக்க வேண்டியது அவசியம். இந்த அறிவு அவர்களுக்கு உயர் கல்வி பயிலும் போதும், பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவதற்கும் உதவிகரமாக இருக்கும். இதனை அறிந்துக் கொள்ள மிகவும் உதவிகரமாக இருப்பது வரைப்படங்களேயாகும்.  எனவே, பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும்  3,246 அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 3 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான 48,247 வகுப்பறைகள் மற்றும் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள  ஒரு லட்சம் வகுப்பறைகள் என மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து  247 வகுப்பறைகளுக்கும் தேசிய வரைபடம், தமிழ்நாடு வரைபடம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட வரைபடம் என மூன்று வரைபடங்கள் வாங்கி மாட்டுவதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக  11 கோடியே 56 லட்சத்து 32 ஆயிரத்து 660 ரூபாய் செலவிட அனுமதி வழங்கியுள்ளார்.

கணினியின் இன்றியமையாத் தன்மையையும், தற்பொழுது பெரும்பான்மையான பணிகள் கணினியைச் சார்ந்தே அமைந்துள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கணினி வழியில் கல்வி வழங்கி, தமிழகத்தில் கணினிப் புரட்சியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகின்றார்.

அந்த வகையில், மாணாக்கர்களுக்கு கணினி வழியாக கல்வி கற்பித்து அவர்களின் புரிதல் திறனை மேம்படுத்தும் வகையில் ‘SMART CLASS ROOM’ என்ற புதிய தொழில்நுட்பத்தினை  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்  கீழ் இயங்கும் 100 மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  இந்த திட்டத்தின் கீழ் இப்பள்ளிகளில் ஏற்கெனவே இருக்கும் வகுப்பறைகளில் ஏதேனும் ஒரு வகுப்பறை (20’x20’) ஸ்மார் கிளாஸ் ரூம்களாக மாற்றியமைக்கப்படும்.  இத்திட்டத்தின்படி கல்வி கற்பிக்க ஆர்வமுள்ள, இத்துறைப் பள்ளிகளில் ஏற்கெனவே பணிபுரியும் ஆசிரியர்களில், ஒரு பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் வீதம் பயிற்சி அளிக்கப்படும்.

 ஒவ்வொரு பள்ளியிலும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைப்பதற்கு தேவையான கணினி உள்ளிட்ட அறிவியல் சாதனங்கள் வாங்கிட  ஒரு பள்ளிக்கு 5,05,000 ரூபாய் வீதம் 100 பள்ளிகளுக்கு 5 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

: மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், மாற்றுத்திறனா ளிகளுக்கு மத்திய, மாநில அரசு பணிகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.