இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, September 05, 2013

பி.எப்., கணக்கில் பணம் : இன்று முதல் ஆன் - லைனில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்

    நாடு முழுவதும் உள்ள, ஐந்து கோடி தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின், வருங்கால வைப்பு நிதித் திட்ட கணக்கு விவரங்கள், இன்று முதல், ஆன் - லைன் மூலம் தெரிய வருகிறது. வழக்கமாக வழங்கப்படும் சிலிப்புகளுக்குப் பதிலாக, தொழிலாளர்கள் தங்களின் கணக்கு விவரங்களை, இணையதள வசதி கொண்ட கம்ப்யூட்டர்களில் பார்த்துக் கொள்ளலாம்; நகல் எடுத்துக் கொள்ள முடியும். வருங்கால வைப்பு நிதி :

தனியார் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, ஒவ்வொரு மாதமும் அவரவர் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. எவ்வளவு தொகை, அந்த ஊழியரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்ற விவரம், ஆண்டுக்கு ஒருமுறை, துண்டுச் சீட்டுகள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த முறையில் மாற்றம் செய்துள்ள, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், பி.எப்., கணக்கு விவரங்களை, கம்ப்யூட்டர்மயமாக்கி, அவற்றை, தொழிலாளர்கள், நிறுவனத்தின் ஆன் - லைனில் பார்த்துக் கொள்ள வசதி ஏற்படுத்தியுள்ளது

. இந்த வசதி, இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இ.பி.எப்., நிறுவனத்தில் கணக்கு துவக்கியுள்ள சந்தாதாரர்கள், தங்கள் கணக்கில் சேர்ந்துள்ள தொகை, அதற்கான வட்டி போன்ற விவரங்களை, இன்று முதல் ஆன் - லைன் மூலம் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். அமைச்சர் துவக்குகிறார் இந்த வசதியை, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர், சிஸ்ராம் ஓலா, டில்லியில் இன்று காலை துவக்குகிறார். இது குறித்து, இ.பி.எப்., அமைப்பின் மத்திய கமிஷனர், கே.கே.ஜலான் கூறும் போது,

""நடப்பு நிதியாண்டிற்கான வட்டி வீதம் இன்னும் முடிவாகாததால், அந்த விவரங்களைப் பார்க்க முடியாது,'' என்றார்.

அமைச்சர் வைகைச்செல்வன் அதிரடி நீக்கம்

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் இன்று அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இதனை முதல்வர் ஜெ., அலுவலக செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பழனியப்பன் கல்வித்துறையையும் கூடுதலாக கவனிப்பார். அ.தி.மு.க.,வில் இளைஞர் பாசறை செயலர் பொறுப்பில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Wednesday, September 04, 2013

ஓணம் பண்டிகை 16 ம் தேதி விடுமுறை - திருப்பூர் மாவட்டம்

     வரும் 16ம் தேதி ஓணம் பண்டிகை என்பதால்,மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள்,பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை. அதற்கு பதிலாக 21 ம் தேதி அலுவல் நாளாக செயல்படும்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவிப் பேராசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.

 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு மொத்தம் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த பணி நியமனம் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு என இரண்டு நிலைகளில் நடைபெற உள்ளது.  தமிழகம் 7 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. சென்னை, விழுப்புரம், திருச்சி, திருநெல்வேலி, சேலம், கோவை, மதுரை ஆகிய 7 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.  

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் அனுபவங்களை எவ்வாறு கணக்கிடுவது, பணி அனுபவம் மற்றும் கல்வித் தகுதிக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக விளக்கமளிக்கப்படும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.  இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவாக வரையறுத்து ஏற்கெனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் பணி அனுபவத்துக்கான மதிப்பெண் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்படும். கல்வித் தகுதிக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண்ணும், பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக 15 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.  கல்வித் தகுதியைப் பொருத்தவரையில், பி.எச்டி. முடித்தவர்களுக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண்ணும், எம்.பில். மற்றும் நெட் அல்லது ஸ்லெட் முடித்தவர்களுக்கு 6 மதிப்பெண்ணும், முதுநிலைப் பட்டத்தோடு நெட் அல்லது ஸ்லெட் முடித்தவர்களுக்கு 5 மதிப்பெண்ணும் வழங்கப்பட உள்ளது.  

அதேபோல், பணி அனுபவத்தைப் பொருத்தவரையில் யு.ஜி.சி. விதிமுறைகளின் படி உரிய தகுதிகளைப் பெற்ற பிறகு உள்ள அனுபவம் மட்டுமே கணக்கில் எடு்த்துக்கொள்ளப்படும். ஒரு ஆண்டுக்கு 2 மதிப்பெண் வீதம் அதிகபட்சம் 15 மதிப்பெண் வரை பணி அனுபவத்துக்கு வழங்கப்படுகிறது.  சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்த பிறகு, மொத்தம் 24 மதிப்பெண்ணுக்கு விண்ணப்பதாரர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்படும்.  தரவரிசைப் பட்டியலில் இருந்து 1:5 என்ற வீதத்தில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறும் எனத் தெரிகிறது.  நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் 1,093 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு விண்ணப்பம் எப்போது

விரைவில் நடக்க உள்ள பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, இன்று முதல், 10ம் தேதி வரை, இணைய தளம் வழியாக, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அறிவிப்பு விவரம்: ஏற்கனவே, தேர்வை எழுதி தோல்வி அடைந்தவர்கள், "எச்' வகை விண்ணப்பத்தையும், 10ம் வகுப்பு முடித்துவிட்டு, நேரடியாக, பிளஸ் 2 தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள், "எச்பி' வகை விண்ணப்பத்தையும் விண்ணப்பிக்க வேண்டும்.

www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக, இன்று (5ம் தேதி) முதல், 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள், விவரங்களை பூர்த்தி செய்வதுடன், தங்கள் புகைப்படத்தை, இணையதளத்தில், "அப்லோட்' செய்ய வேண்டும். புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தையும், தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய, "செலானையும்' பதவிறக்கம் செய்ய வேண்டும். தேர்வு இடத்தில், எந்த கல்வி மாவட்டத்தை குறிக்கின்றனரோ, அந்த மாவட்டத்திற்குரிய மாவட்ட கல்வி அலுவலகத்தில், பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தையும், கட்டண ரசீதையும் சமர்ப்பிக்க வேண்டும்.

வரும் 8,9 ஆகிய தேதிகளை தவிர்த்து, 11ம் தேதி மாலை, 5:45 மணி வரை, விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

குரூப் 2 தேர்வு அறிவிப்பு

"சார்பதிவாளர், வணிகவரித்துறை உதவி அதிகாரி உள்ளிட்ட பதவிகளில், காலியாகவுள்ள, 1,064 பணியிடங்களை நிரப்ப, வரும் டிச.,, 1ம்தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெறும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. குரூப் 2 நிலையில், சார்பதிவாளர், வணிகவரித் துறை உதவி அதிகாரி, தொழிலாளர் நல ஆணையர், இந்து அறநிலையத்துறை அலுவலர், வேலை வாய்ப்பு இளநிலை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள, 1,064 இடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பபடும்.

இத்தேர்வுக்கு, இன்று முதல், அக்., 4 வரை தேர்வாணைய இணைய தளமான, www.tnpsc.tn.gov.in வழியாக, விண்ணப்பிக்க வேண்டும்.

TNPSC GROUP II exam. 1064 POST NOTIFICATION

Tuesday, September 03, 2013

ஒரு கோடி மாணவர்களின் விவரங்கள் இணையதளத்தில் விரைவில் வெளியீடு

தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் 1.33 கோடி மாணவர்களின் விவரங்கள் ஒரு மாதத்துக்குள் இணையதளத்தில் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரி தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள், பள்ளிகள், மாணவர்களின் விவரங்கள் கல்வித் தகவல் சார்ந்த மேலாண் முறைமைக்காக (உஙஐந - உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்ஹப் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் ஐய்ச்ர்ழ்ம்ஹற்ண்ர்ய் நஹ்ள்ற்ங்ம்) திரட்டப்பட்டது. இதற்காக 55 ஆயிரம் பள்ளிகள், 5.5 லட்சம் ஆசிரியர்கள், 1.33 கோடி மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

இந்த விவரங்களைத் தேடும் வகையில் சாப்ட்வேரை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கி வருகிறது. இந்த சாப்ட்வேர் தயாரானதும், பரிசோதித்துப் பார்க்கப்படும். அதன்பிறகு, இந்தத் தகவல்கள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரி தெரிவித்தார். பள்ளிகள் தொடர்பான விவரங்களில் பள்ளி திறக்கப்பட்ட தேதி, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை, வகுப்பறைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மாணவர் தொடர்பான விவரங்களில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, தந்தையின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் திரட்டப்பட்டுள்ளன.

மாநில அளவிலான தேசிய திறனறிதல் தேர்வு அறிவிப்பு

மாநில அளவிலான, தேசிய திறனறிதல் தேர்வு, நவ., 17ம் தேதி நடக்கும் எனவும், இதற்கு, தற்போது, 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் எனவும், தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இயக்குனரின் அறிவிப்பு: மாநில பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் அடிப்படையில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பாடங்களில் இருந்து, கேள்விகள் அமைக்கப்படும்.

இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளியல் ஆகிய பாடங்களில் இருந்து, கேள்விகள் இடம்பெறும். மூன்று பகுதிகளாக, தேர்வுகள் நடக்கும். இதில், தகுதி வாய்ந்த, 256 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, கல்வி உதவித்தொகையாக, மாதம், 500 ரூபாய் வழங்கப்படும். மாணவ, மாணவியர், தங்கள் பள்ளிகள் மூலமாகவே, இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். பள்ளி நிர்வாகிகள், தீதீதீ.tணஞீஞ்ஞு.டிண என்ற தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து, வரும், 4ம் தேதியில் இருந்து, 16ம் தேதி வரை, தேவையான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு கட்டணமாக, மாணவர்கள், 50 ரூபாய் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மாணவர்களிடம் இருந்து, வரும், 16ம் தேதியில் இருந்து, பள்ளி நிர்வாகங்கள் பெற்று, அதன் விவரங்களை, வரும், 16ம் தேதியில் இருந்து, 21ம் தேதிக்குள், தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவு செய்ய வேண்டும். பின், அந்த விண்ணப்பங்களையும், தேர்வுக் கட்டணங்களையும் மொத்தமாக, மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். 23ம் தேதி மாலை, 5:30 மணி வரை, விண்ணப்பங்களை ஒப்படைக்கலாம். இவ்வாறு, இயக்குனர் கூறியுள்ளார்.

முதுகலை ஆசிரியர் தேர்வின் இறுதி விடைகளை, ஓரிரு நாளில் வெளியிட்டு, அடுத்த வாரத்தில், தேர்வுப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., முடிவு எடுத்துள்ளத

   அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., கடந்த ஜூலை, 21ல், போட்டித் தேர்வை நடத்தியது. 1.59 லட்சம் பேர், தேர்வை எழுதினர். தேர்வுக்கான தற்காலிக விடைகள் மீது, ஆட்சேபனை உள்ள தேர்வர்கள், அது குறித்து, உரிய சான்றுகளுடன், ஆக., 5ம் தேதி வரை, டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 1,000த்திற்கும் மேற்பட்டோர், ஆட்சேபனை தெரிவித்து விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள் மீது, பாட வாரியான நிபுணர் குழு, முடிவை எடுத்து விட்டதாகக் கூறப்படுகிறது

. இதைத் தொடர்ந்து, அந்த முடிவுகளுக்கு டி.ஆர்.பி., போர்டு ஒப்புதல் அளித்ததும், இந்த வார இறுதிக்குள், இறுதி விடைகள் வெளியிடப்படும் எனவும், அடுத்த வாரத்தில், தேர்வு செய்யப்பட்ட, 2,881 பேரின் விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்வு செய்யப்படும் புதிய ஆசிரியர், இம்மாத இறுதிக்குள்ளாகவே பணி நியமனம் செய்யப்படுவர். வட மாவட்டங்களில், அதிகளவு, முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, அனைவரும், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில், பணி நியமனம் செய்யப்படுவர்.

2.6 கோடி இரண்டாம் பருவ புத்தகங்கள் அடுத்த வாரத்தில் இருந்து வினியோகம்

  ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, அடுத்த வாரத்தில் இருந்து, இரண்டாம் பருவத்திற்கான, 2.6 கோடி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டம், அமலில் உள்ளது. பள்ளி திறந்ததும், ஜூன் முதல், செப்., வரையிலான முதல் பருவத்திற்கு, பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அக்டோபர் முதல், இரண்டாம் பருவ பாடத்திட்டங்கள், நடத்தப்படும். இதற்கு, 2.6 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி, 150 அச்சகங்களில் நடந்து வருகின்றன.

90 சதவீதம் அளவிற்கு, பாடப்புத்தகங்கள் தயாராகிவிட்டன. இதையடுத்து, அச்சகங்களில் இருந்து, நேரடியாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு, புத்தகங்கள், அனுப்பப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, பாடநூல்கழக வட்டாரங்கள் கூறியதாவது: பெரும் அளவிற்கு, புத்தகங்கள், அச்சிடப்பட்டு விட்டன. எனவே, பெரும்பாலான மாவட்டங்களுக்கு, புத்தகங்கள் சென்று விட்டன. எனவே, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச பாடப் புத்தகங்கள் வழங்குவதில், எவ்வித பிரச்னையும் ஏற்படாது. மாணவர்களுக்கு, முன்கூட்டியே, பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். காலாண்டு தேர்வு விடுமுறைக்குப்பின், அக்., 3ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இருந்தாலும், இந்த மாதத்திற்குள்ளாகவே, முழுமையான அளவில், மாணவர்களுக்கு, புத்தகங்கள் வழங்கப்படும

். சி.இ.ஓ., அலுவலகங்களில் இருந்து, அனைத்துப் பள்ளிகளுக்கும், புத்தகங்களை கொண்டு சென்று, வினியோகம் செய்வதற்கான பணிகளை, பள்ளி கல்வித்துறை, முழுவீச்சில் செய்து வருகிறது. இவ்வாறு, பாடநூல்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. இம்மாத இறுதியில் இருந்து, பாடநூல்கழக அலுவலகத்தில், இரண்டாம் பருவ புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி அக்டோபரில் தொடக்கம்

- தமிழகத்தில் 1-1-2014 நாளை தகுதி நாளாக கொண்டு, சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யப்பட உள்ளது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் 1-10-2013 அன்று வெளியிடப்படும். அதன்பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கு 1-10-2013 முதல் 31-10-2013 வரை பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். 2-10-2013 மற்றும் 5-10-2013 ஆகிய நாட்களில் அனைத்து கிராம சபை உள்ளிட்ட உள்ளாட்சி அலுவலகங்களில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை சரிபார்க்கலாம்.

6-10-2013, 20-10-2013 மற்றும் 27-10-2013 ஆகிய நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில், அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகளிடம் இருந்து கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்படுகின்றன. அதன்பின்னர் 6-1-2014 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு 1-1-2014 அன்று 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு, தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

அனைத்து அரசியல் கட்சிகளும் பூத் ஏஜெண்டுகளை நியமிக்க வேண்டும் என்றும், அவர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு பூத் அலுவலர்களுடன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு கட்சியின் பூத் ஏஜெண்ட்கள் நியமிக்கப்பட்டதும், அவர்கள் பெயர் தேர்தல் ஆணைய அலுவலக இணையதளத்தில் பதிவு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

370 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

தமிழகம் முழுவதும் 370 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது சென்னையில் வியாழக்கிழமை (செப்.5) நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது. தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 196 பேரும், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 135 பேரும், மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்கள் 25 பேரும், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மற்றும் சமூக நலத் துறை பள்ளிகளைச் சேர்ந்த தலா 2 ஆசிரியர்களுக்கும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் 10 பேரும் இந்த விருதைப் பெற உள்ளனர்.

மாவட்டங்களில் இருந்து இந்த விருதுக்கு 860 பேர் கொண்ட பட்டியல் அனுப்பப்பட்டது. அவர்களிலிருந்து விருதுக்கான 370 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்குக் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுடன் ரூ.5 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப் பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. விழா நடைபெறும் அரங்கில் ஆசிரியர் மற்றும் அவருடன் ஒருவரும் அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்குகிறார். பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கிறார்.

Monday, September 02, 2013

Uniformed Services Recruitment Board, Government of Tamil Nadu 10500 spl police post.apply last dt sep 30 - Notifications

சிறப்புக் காவல் படைக்கு 10,500 பேரை தேர்ந்தெடுக்க நவ.10-இல் எழுத்துத் தேர்வு

தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையில் இணைவதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு 25 வயதும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 வயதும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 30 வயதும் அதிகபட்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் பணி நியமனம் பெறுவதற்கு, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிறருக்கான சிறப்பு ஒதுக்கீடுகள் ஏதுமில்லை. விண்ணப்பதாரர்கள் எந்த மாவட்டத்தில் அல்லது மாநகரத்தில் தேர்வு செய்ய விரும்புகிறாரோ அந்த மாவட்டம் அல்லது மாநகரை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

விரும்பிய மாவட்டம் அல்லது மாநகரத்துக்கு மட்டுமே தேர்வு செய்யப்படுவர். இந்த விருப்பத்தை பிறகு மாற்ற முடியாது. சென்னைக்கு பத்து மடங்கு: மொத்தமுள்ள 10 ஆயிரத்து 500 இடங்களில், சென்னைக் காவலுக்கு மட்டும் 2 ஆயிரத்து 835 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக, வேலூர் மாவட்டத்துக்கு 370 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 360 பேரும் தேர்வு செய்யப்படவுள்ளனர். கோவை, மதுரை, திருநெல்வேலி மாநகரங்களுக்கு தலா 110 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பணிகள் என்ன? சிறப்புக் காவல் இளைஞர் படைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதாந்திர மதிப்பூதியமாக ரூ.7,500 வழங்கப்படும். காவல் வாகனங்களை ஓட்டுதல், அலுவலகக் கடிதங்களைப் பட்டுவாடா செய்தல் மற்றும் கம்ப்யூட்டர் விவரப் பதிவுப் பணிகள், காவலர் குடியிருப்புகளைப் பராமரித்தல், விபத்தில் உயிர்ப் பலிகள் ஏற்படாத வகையில் தடுக்கும் பணியில் காவல் படைக்கு உதவி செய்தல் போன்ற பணிகள் இளைஞர் காவல் படைக்கு அளிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு: விடைகளைத் தெரிவு செய்து எழுதும் வகையிலான கொள்குறி முறையில் கேள்விகள் கேட்கப்படும். வினாத்தாள் தமிழில் இருக்கும். குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் பெற வேண்டும். பத்தாம் வகுப்பு நிலையிலான தமிழ், ஆங்கிலம், கணிதம், பொது அறிவியல், இந்திய வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் வணிகம், இந்திய தேசிய இயக்கம், நடப்பு நிகழ்வுகள், போக்குவரத்துச் சைகைகள் மற்றும் முதலுதவி ஆகியன தொடர்பாக கேள்விகள் கேட்கப்படும். உடற்தகுதி தேர்வும் நடத்தப்படும். ஓட்டம், கயிறு ஏறுதல் போன்றவற்றிலும் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். தேர்வுக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பம் மற்றும் அறிவுரைகள் அடங்கிய கையேட்டினை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள், மாநகர ஆணையாளர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனைத்தும் செப்டம்பர் 30 ஆம் தேதி மாலைக்குள் வந்து சேர வேண்டும்.

115 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

தொடக்க கல்வித்துறையில், 115 ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக, 61 பேரும், அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக, 54 பேரும், பதவி உயர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பதவி உயர்வு உத்தரவுகளை, சம்பந்தபட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் வழங்கினர்.

பி.எட். கலந்தாய்வு: கணிதத்தில் 42 இடங்கள் காலி B

பி.எட். கணிதப் பிரிவில் மொத்தமுள்ள இடங்களில் 42 இடங்கள் மட்டும் காலியாக உள்ளன. மீதமுள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் 21 கல்லூரிகளில் 13 பாடப் பிரிவுகளின் கீழ் உள்ள 2,118 பி.எட். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி வெலிங்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி வெள்ளிக்கிழமை முதல் நடத்தி வருகிறது. கலந்தாய்வின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கணிதம் மற்றும் புவியியல் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.

கணிதத்தில் மொத்தமுள்ள 438 இடங்களுக்கு, 520 மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டனர். இதில் அரசுக் கல்லூரிகளில் உள்ள கணிதப் பிரிவு இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் 42 இடங்கள் மட்டும் காலியாக உள்ளன. இதுபோல் புவியியல் பிரிவில் மொத்தமுள்ள 38 இடங்களில், 35 இடங்கள் நிரம்பிவிட்டன. மூன்று இடங்கள் மட்டும் காலியாக உள்ளன. திங்கள்கிழமை (செப்டம்பர் 2) விலங்கியல் மற்றும் தமிழ் பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. விலங்கியல் பிரிவில் உள்ள 200 இடங்களுக்கு 250 மாணவ, மாணவிகளும், தமிழ்ப் பிரிவில் மொத்தமுள்ள 114 இடங்களுக்கு 200 பேரும் அழைக்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கைச் செயலர் ஜி. பரமேஸ்வரி கூறினார்.

Sunday, September 01, 2013

மத்திய அரசு ஊழியர்களுக்கு பத்து சதவித அகவிலைப்படி உயர்வு இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவையிடமிருந்து பெறுவதற்கான நடைமுறைகளில் நிதியமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், முப்பது லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவர். அகவிலைப்படி உயர்வு, ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிகிறது. அடிப்படை சம்பளம் நீங்கலாக இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இதுவரை 80 சதவிகிதமாக வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி, இந்த உயர்வின் மூல் 90 சதவிகிதமாக உயரும். இதற்கு முன் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி 8 சதவிகித அகவிலைப்படி உயர்வு உயர்த்தி வழங்கப்பட்டது.

தொழில் வரி கட்டணம்

Profesion tax
21000-NIL
21001-30000=95 30001-45000=240
45001-60000=470 60001-75000=710 above 75000=950