இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, July 22, 2013

மின்னணு நூல்களைப் பதிவிறக்கம் செய்து படிக்கலாம் வாருங்கள்_ செந்தமிழ்பாலா

இரட்டைப்பட்டம் சார்பான நீதிமன்ற விசாரணையின் தற்போதைய நிலை?

பொதுவாக சென்னை உயர்நீதி மன்றத்தில் பல நீதியரசர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. தலைமை நீதிபதி மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு பொறுப்பாக சென்ற வாரம் முழுவதும் மதுரையில் இருந்தார் எனவும், எனவே இந்த வாரம் கட்டாயம் விசாரணைக்கு வரும் என நம்பதகுந்த வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன். இரகசியம் காக்கப்படும் இந்த விசாரணை நாளை வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த வழக்கை தலமையேற்று நடத்தி வரும் திரு.ஆரோக்கியராஜ், திரு.கலியமூர்த்தி, திரு.கருணாலயபாண்டியன் ஆகியோர் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். வழக்குரைஞர் திரு.ஜி.சங்கரன் மற்றும் மூத்த வழக்குரைஞர்கள் இந்த வழக்கில் வாதாட இருக்கிறார்கள். விறுவிறுப்பாகச் செல்ல இருக்கும் இந்த வழக்கு விசாரணையை எதிர்ப்பார்த்து பல்லாயிரக்கணக்காண ஆசிரியர்கள் பதவி உயர்வுகாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கு குறித்து முகநூல் மற்றும் அலைபேசியில் விசாரிக்கும் தோழர்கள் இந்த பதிலை மற்றவர்களுக்கு பகிருமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன். வழக்கு விசாரணை பற்றி மேல்தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றப்படும். தொடர்ந்து தொடர்பில் இருக்கவும்.

ஆ.முத்துப்பாண்டியன்.
TNPTF மாவட்டத்தலைவர்,
சிவகங்கை.

Sunday, July 21, 2013

ஆகஸ்டில் தேர்வு முடிவ

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு விடைத்தாள்கள் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு ஸ்கேன் செய்யப்படும். ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு சரியான விடைகளை வைத்து விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

சிறப்பாக பணி செய்த அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முதலமைச்சரின் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

அரசுப் பணிகளில் மிகச் சிறப்பாக செயல்படும் ஊழியர்கள் முதல்வரால் கவுரவிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு சிறந்த செயல்பாடுகளுக்கான விருது மற்றும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். இதற்காக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களில் சிறந்த தகுதியுடையவர்களை தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சிறந்த தகுதிக்குரிய நபர்கள் குறித்த விவரங்களை தயாரிக்கும் படிவம் துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தங்கள் துறைகளில் சிறந்ததாக கருதப்படும் ஊழியர்கள், ஆசிரியர்கள் இருந்தால் அவர்களது விவரங்களை உரிய பரிந்துரையுடன் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க கல்வித்துறையில் உள்ள சிறந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் குறித்த விவரங்களை நாளைக்குள் (23ம்தேதி) பரிந்துரைத்து அனுப்ப தொடக்க கல்வி இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார

். இதேபோல் அனைத்து துறைகளிலும் சிறந்த  ஊழியர்கள் குறித்த விவரங்கள் 24ம் தேதிக்குள் அரசால் சேகரிக்கப்பட்டு அதில் இருந்து 3 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இறுதியாக தேர்வாகும் 3 நபர்களுக்கு ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தினத்தன்று முதல்வர் விருது வழங்கி கவுரவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியருக்கு சீருடைசுதந்திர தினத்தன்று கிடைக்கும்

சுதந்திர தினத்தன்று, மாணவ, மாணவியர் புத்தாடை உடுப்பதற்கு வசதியாக, இரண்டாவது, "செட்' சீருடை, அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது.மூன்றாவது, "செட்' சீருடை தீபாவளிக்கும், நான்காவது, "செட்' சீருடை, குடியரசு தின விழாவிற்கும் வழங்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை, அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர். இது குறித்து, சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இம்முறை தரமான சீருடை வழங்கப்பட்டு உள்ளது. ஒரு, "செட்' சீருடைக்கு, 300 ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இரண்டாவது, "செட்' சீருடை வினியோகம், அடுத்த வாரம் துவங்க உள்ளது. அனைத்து மாணவ, மாணவியருக்கும், உடனடியாக சீருடை கிடைக்க ஏற்பாடு செய்யும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

மாணவர்களின் வங்கி கணக்கிற்குகல்வி உதவித்தொகை தர ஏற்பாடு

"கல்வி உதவித் தொகையை, மாணவர்களுக்கே நேரடியாகச் செலுத்த, "கோர் பாங்கிங்' உள்ள வங்கிகளில் மட்டுமே, கணக்குத் துவக்க வேண்டும்' என, அரசு கட்டாய உத்தரவிட்டு உள்ளது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. கடந்த காலங்கள் வரை, முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு, அரசு மாணவர்களின் பெயர்ப் பட்டியல் படி, கல்வி உதவித் தொகைக்கான, "செக்கை' அரசு அனுப்பிவிடும்.

இவர்கள், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பிரித்து வழங்கி, மாணவர்களிடத்தில் வழங்குவர். சில பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்கிய, கல்வி உதவித் தொகையை முறைகேடாக எடுத்துச் செலவு செய்ததாக, அரசுக்குப் புகார் சென்றது.இது போன்று, மாணவர்களுக்கு வழங்கும் கல்வி உதவித் தொகையில் ஏற்படும் முறைகேடுகளைக் களைய, நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே, அரசு கல்வி உதவித் தொகையை ஆண்டுதோறும் செலுத்தும் வகையில், "கோர் பாங்கிங்' வசதியுள்ள வங்கிகளில் மட்டுமே, மாணவர்கள் தமது வங்கிக் கணக்குகளைத் துவக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடுமாறு, அரசு கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு உள்ளது. ஆதிதிராவிடர், பிற்பட்டோர் நலத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""2013-14ம் கல்வி ஆண்டு முதல், மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே, கல்வி உதவித் தொகை செலுத்த வேண்டும் என, அரசு கட்டாய உத்தரவிட்டு உள்ளது.

இதற்காகவே, "கோர் பாங்கிங்' வசதியுள்ள வங்கிகளில் மட்டுமே, கணக்குத் துவக்க, மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்,'' என்றார்.

டைப்ரைட்டிங் தேர்வுகள் ஆக.18ம் தேதி ஆரம்பம்

தமிழகத்தில் டைப்ரைட்டிங் தேர்வுகள் வரும் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி ஆரம்பமாகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுதோறும் இரண்டு முறை டைப்ரைட்டிங், சுருக்கெழுத்து தேர்வுகள் நடத்தப்படுகிறது. வரும் ஆகஸ்ட் மாதத்திற்கான தேர்வு 18ம் தேதி ஆரம்பமாகிறது. அன்று சுருக்கெழுத்து தமிழ், ஆங்கிலம் ஜூனியர், இன்டர்மீடியட், சீனியர் பிரிவுகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு காலை 10 மணி முதல் மாலை 4.15 மணி வரை நடக்கிறது. 19ம் தேதி காலை 10 மணி முதல் 5 மணி வரை அக்கவுன்டன்சி முதல் மற்றும் 2ம் தாள் தேர்வு நடக்கிறது.

இதே போல், வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த டைப்ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் ஜூனியர் பிரிவு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது. இத்தேர்வுகள் வரும் 31ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4.05 மணி வரை ஒன்று முதல் நான்கு பேட்ஜ் வரையிலான தேர்வு நடக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி டைப்ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் ஜூனியர் பிரிவு 5ம் பேட்ஜ் மாணவர்களுக்கும், சீனியர் பிரிவில் 1 முதல் மூன்று பேட்ஜ் மாணவர்களுக்கும் தேர்வு நடக்கிறது. அன்று காலை டைப்ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் ஹைஸ்பீடு தேர்வுகள், மாலையில் தமிழ், ஆங்கிலம் ப்ரீ-ஜூனியர் தேர்வுகளும் நடக்கிறது. தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு நடக்கிறது. இத்தேர்வை முன்னிட்டு 24ம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட டைப்ரைட்டிங் தேர்வுகள் 31ம் தேதியும், 25ம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட செப்டம்பர் மாதம் 1ம் தேதியும் நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால் ஒரே நாளில் இரண்டு தேர்வுகளை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த தேர்வர்கள் இரண்டு தேர்வுகளையும் எழுத வாய்ப்பு கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளதோடு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்ட தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்திற்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

நீலகிரியில் கனமழை: கூடலூர்,பந்தலூர் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதை அடுத்து மாவட்டத்தின் கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு:1.59 லட்சம் பேர் எழுதினர்

  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வை தமிழகம் முழுவதும் 1.59 லட்சம் லட்சம் பேர் இன்று (ஜூலை 21) எழுதினர்.இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 7,914 பேர் வரவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுக்கு 1 லட்சத்து 67 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களுக்காக தமிழகம் முழுவதும் 421 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.சென்னையில் 12 ஆயிரத்து 908 பேர் இந்தத் தேர்வை எழுதினர். 1,019 பேர் தேர்வுக்கு வரவில்லை.தமிழகம் முழுவதும் பெரிய அளவில் பிரச்னைகள் எதுவுமின்றி தேர்வு அமைதியாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ், வணிகவியல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்கள் எளிமையாக இருந்ததாகவும், வரலாறு உள்ளிட்ட சில பாடங்கள் சற்றுக் கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர்.

DEE - CM AWARD - "BEST PERFORMANCE AWARD 2013" - APPLICATION CALLED REG PROC

Saturday, July 20, 2013

தரம் உயர்ந்த பள்ளிகளில் காலியிட விதிமுறை தளர்வு?

தரம் உயர்ந்த பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களை முழுவதுமாக நிரப்பும் நோக்கில், விதிமுறையில் ஒரு சில தளர்வு காட்டலாம் என, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தமிழகம் முழுவதும் உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்ந்த பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, நேற்று சிறப்பு கவுன்சிலிங் நடந்தது. தரம் உயர்ந்த ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 5 முதல் 9 முதுகலை ஆசிரியர் பணி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன.

அந்தந்த சி.இ.ஒ., அலுவலகங்களில் நேற்று உள் மாவட்ட முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது. சிவகங்கை உட்பட ஒரு சில மாவட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்கள் மட்டுமே மாறுதல் உத்தரவு பெற்றனர். இந்நிலையில்,நாளை (ஜூலை22)மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. எந்த மாவட்டத்தில் பணிபுரிந்தாலும், மாறுதல் கோரும் மாவட்ட சி.இ.ஒ., அலுவலகத்தில் நடக்கும் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. சில மாவட்டத்தில் உள் மாவட்ட மாறுதலை சில ஆசிரியர்கள் விரும்பாததால்,தரம் உயர்ந்த பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதில் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது. பொதுமாறுதல் விதிமுறைகளை கடைபிடித்த போதிலும், தரம் உயர்ந்த பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பற்றாக்குறை தவிர்க்க,போட்டி இல்லாத இடங்களில் பணியில் சேர்ந்து, ஓராண்டு நிறைவு பெறாமல் இருந்தாலும்,தேவையின் அடிப்படையில் மாறுதல் பெற வாய்ப்பளிக்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Friday, July 19, 2013

தலைமை ஆசிரியர் சாப்பிட்ட பின்னரே சத்துணவை வழங்க வேண்டும

பள்ளிகளில் சத்துணவை தலைமை ஆசிரியர் சாப்பிட்ட 30 நிமிடம் கழித்த பிறகுதான் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பீகார் மற்றும் நெய்வேலி சம்பவத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளில் சத்துணவை பள்ளி தலைமை ஆசிரியர்கள், சத்துணவு அமைப் பாளர், சமையலர் சாப்பிட்டு அரை மணி நேரத்துக்கு பிறகு மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள், கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

பள்ளிகளில் சத்துணவு விநியோகிக்கும் முறையை தீவிரமாக கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அவசரமாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதைத் தொடர் ந்து மாவட்ட கலெக்டர்கள் கல்வித் துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் சத்துணவு தயாரிக்கும் பணியை தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். மேலும், சத்துணவை ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர் ஆகியோர் சாப்பிட வேண்டும். இவர்கள் சாப்பிட்டு அரை மணி நேரத்துக்கு பிறகு தான் மாணவிகளுக்கு வழங்க வேண்டும். இந்த விதிமுறையை கடைப்பிடிக்காத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுற்றிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவை அமைப்பா ளர் சாப்பிட்டு பார்த்த பிறகுதான் வழங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அந்த விதிமுறையை யாரும் கடைப்பிடிக்கவில்லை. இப்போது நெய்வேலி சம்பவத்துக்குப் பிறகு, இந்த உத்தரவை பள்ளி தலைமை ஆசிரியரும் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதியாத 2,824 பள்ளிகளுக்கு கெடு

தமிழகத்தில் 55,667 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் படிக்கும் பள்ளி, மாணவர்களின் விவரங்களை கல்வித்தகவல் மேலாண்மை முறையின் (இஎம்ஐஎஸ்) கீழ் இணையதளத்தில் பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனி அடையாள குறியீடு, பாஸ்வேர்டு கொடுக்கப்பட்டது. அதில் 2012,13 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களின் விவரங்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டன.

கடந்த பிப்.15ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் 2,824 பள்ளிகள் மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதியவில்லை. இதையடுத்து பதிவு செய்யாத பள்ளிகளை ஜூலை27ம் தேதிக்குள் பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை உத்தரவு: கல்வித் தகவல் மேலாண்மை முறையின் கீழ் 2,824 பள்ளிகள் பதிவு செய்யப்படவில்லை என தெரிகிறது. எனவே பதிவு செய்யப்படாமல் உள்ள பள்ளிகளுக்காக மீண்டும் மாவட்டம், ஒன்றியம் வாரியாக குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த குறியீட்டை பயன்படுத்தி இஎம்ஐஎஸ் இணையதளத்தில் புதிய பதிவுகளை உருவாக்க வேண்டும். அதில் 2012,13ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களின் விவரங்களை மட்டுமே வகுப்பு வாரியாக பதிவு செய்ய வேண்டும். மாணவர் பெயர், பிரிவு, தாய், தந்தை, முகவரி, தொழில், குடும்ப வருமானம் உள்ளிட்ட 30 விவரங்களை பதிய வேண்டும். இப்பணிகளை ஜூலை 27ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்:ஜனவரி முதல் வழங்க அரசு உத்தரவு

பட்டதாரி ஆசிரியர்களுக்கு, கடந்த ஜனவரி, 18ம் தேதியை கணக்கிட்டு, இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வை வழங்கலாம்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது."பட்டதாரி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பதவியில் பணிபுரியும் பட்ட தாரி ஆசிரியர், எம்.எட்., - எம்.பில்., மற்றும் பிஎச்.டி., தகுதிகளை, கூடுதலாக பெற்றிருந்தால், இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்கலாம்' என, கடந்த ஜன., 18ம் தேதியிட்ட அரசாணையில், தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

ஊதிய உயர்வு:

ஆனால், எந்த தேதியில் இருந்து ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை, அரசாணையில் கூறவில்லை. இதனால், 20 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர், ஊக்க ஊதிய உயர்வு பெற முடியாமல், அவதிபட்டு வந்தனர். . இதைத் தொடர்ந்து, அரசாணையில் இருந்த குழப்பத்தை சரிசெய்து, பள்ளிக்கல்வி துறை செயலர் சபிதா, புதிய உத்தரவை வெளியிட்டு உள்ளார். உத்தரவு விவரம்:

கடந்த ஜனவரியில் வெளியிட்ட அரசாணையின்படி, பட்டதாரி ஆசிரியர்கள், எம்.எட்., அல்லது எம்.பில்., அல்லது பிஎச்.டி., பட்டம் பெற்றிருந்தால், அது, இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான, உயர் கல்வி தகுதியாக கருதி, அரசாணை வெளியான தேதியில் இருந்து வழங்கலாம்.ஒரு ஆசிரியரின் மொத்த பணிக் காலத்தில், அதிகபட்சமாக, இரு ஊக்க ஊதிய உயர்வுகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், இந்த, இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்படுகிறது.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

அரசாணை வெளியிடப்பட்ட நாள் (18.01.2013) முதலே பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phill அல்லது M.Ed அல்லது P.Hdக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்படும் - பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி உத்தரவு

Thursday, July 18, 2013

TNPSC hindu relegious dept executive oficer grade

Post code:1655
vacancy ;23
last dt :16-8-13
exam:26-10-13
paper I&  II

TNPSC anounce TN hindu relegious posts

EXECUTIVE OFFICER GRADE III

VACANCY: 58
SALARY ;5200-20200*2800
LAST DT;16-8-13
LAST DT PAYMENT-20-8-13
EXAM -19-10-13
PAPER I&II
AGE:25 TO35
QUA;DEGREE
Exam fee;100
app;50
Post code;1654

Training Module for Istd English medium

கூடுதல் ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழாசிரியர்களுக்கு முன்னுரிமை  

உயர்நிலைப்பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யும் போது, தமிழாசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க, அரசு பரிசீலனை செய்து வருகிறது. உயர்நிலைப்பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம், பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. 160 மாணவர்கள் இருந்தால், ஐந்து ஆசிரியர்கள் இருப்பார்கள். 160 க்கு மேல் மாணவர்கள் இருக்கும் போது, கூடுதலாக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய வேண்டும். அப்படி பணி நியமனம் செய்யும் பட்சத்தில், முதலில் தமிழாசிரியர்கள், இரண்டாவதாக கணித ஆசிரியர், மூன்றாவதாக அறிவியல் ஆசிரியர், நான்காவதாக சமூக அறிவில் ஆசிரியர், ஐந்தாவது ஆங்கில ஆசிரியர் என்ற வரிசைப்படி, பணி நியமனம் செய்ய, அரசு பரிசீலனை செய்து வருகிறது.
முன்பு, தமிழாசிரியர்கள் நியமனமானது, ஐந்தாவது நிலையில் இருந்தது. தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இதை மாற்றி, முதல் இடத்திற்கு கொண்டு வர, அரசு பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் கூடுதல் ஆசிரியர்கள் பணி நியமனம் வரவிருப்பதால், தமிழாசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

2015-ல் கல்வி அறிவு 80 சதவீதம் இலக்கு: அமைச்சர்  

ி: வரும் 2015-ம் ஆண்டிற்குள் நாட்டின் மக்கள் தொக‌ையில் சுமார் 80 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாக இருப்பர் என மனிதவள மேம்பாட்டு்ததுறை அமைச்சர் பல்லம் ராஜூ தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நடைபெற்ற விழாவில் பேசியதாவது: வரும் 2015-ம் ஆண்டிற்குள் 80 சதவீதம் கல்வி அறிவு பெற்றவர்களாக மாற்றுவது மேலும் அடுத்த பத்தாண்டிற்குள் முழு கல்வி பெற்ற நாடாக மாறும் நிலை ஏற்படும் ‌என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2001-ம் ஆண்டு மக்கள தொகை கணக்கெடுப்பின் படி படித்தவர்களின் எண்ணிக்கை வெறும் 20 ‌கோடியாக மட்டுமே இருந்தது. இதில் பாதி பேர் பெண்களாவர்.பல்வேறு கட்ட முயற்சிக்கு பின்னர் தற்போது 70 ‌கோடி மக்கள் வாசிக்கவும், எழுதவும் கற்று தேர்ந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் நியமனம்

தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கான புதிய தலைமையாசிரியர்கள் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டனர். பதவி உயர்வுப் பட்டியலில் இருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களிலிருந்து இவரகள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடைபெற்றது.

அதேபோல், இந்த 100 உயர் நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக இருந்தவர்கள், காலியாக இருந்த பிற உயர்நிலைப் பள்ளிகளுக்கு இடமாற்றம செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 100 அரசு உயர் நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டது. இந்தப் பள்ளிகளில் 100 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களும், 900 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களும் ஏற்பட்டன. முதல் கட்டமாக 100 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளைத் தொடங்க ஏதுவாக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிக் கல்வித் துறையில் 400 பேர் கருணை அடிப்படையில் நியமனம்

பள்ளிக் கல்வித் துறையில் 400 பேர் விரைவில் கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கருணை அடிப்படையிலான பணி நியமனம் கோரி 2002-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை விண்ணப்பம் செய்தவர்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களில் தங்களுடைய பெயர்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கெனவே 1997-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை கருணை அடிப்படையிலான நியமனத்துக்குத் தகுதி வாய்ந்த 397 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Wednesday, July 17, 2013

தொடக்க/ நடுநிலைப் பள்ளிகள் வாரத்திற்கு குறைந்தபட்சம் 5 பாட வேளைகள் கணினி மூலம் பாடம் கற்பிக்க பாட வாரியாக அறிவுரைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

"ஹால் டிக்கெட்' பிரச்னையா? : டி.ஆர்.பி., புதிய நடவடிக்கை  

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, "ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்வதில் இருந்த பிரச்னையை, டி.ஆர்.பி., சரி செய்துள்ளது. டி.ஆர்.பி., அறிவிப்பு: வரும், 21ம் தேதி, முதுகலை ஆசிரியர் பணிக்கான, போட்டித் தேர்வு நடக்கிறது. இதற்கு, 1.67 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில், நேற்று வரை, 1.32 லட்சம் பேர் மட்டுமே, டி.ஆர்.பி., இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) இருந்து, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்துள்ளனர்.

8,000 பேர், "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்ய முயற்சித்துள்ளனர். 27,500 பேர், பதிவிறக்கம் செய்ய, முயற்சிக்கவே இல்லை. பல தேர்வர்கள், விண்ணப்பத்தில், பிறந்த தேதியை, தவறாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், "ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யும்போது, சரியான பிறந்த தேதியை பதிவு செய்கின்றனர். இதனால், பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. தேர்வர்களின் நலன் கருதி, பிறந்த தேதியை பதிவு செய்வதில் இருந்த விதிமுறை, தளர்த்தப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்ப எண்களை மட்டும் சரியாக பதிவு செய்து, "டம்மி'யாக, ஏதாவது ஒரு, பிறந்த தேதியை பதிவு செய்தால் கூட, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்ய முடியும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அனைத்து தேர்வர்களும், "ஹால் டிக்கெட்'டை, உடனடியாக, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.