இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, January 06, 2013

2012-2013 | TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT | LIST OF DEO PROMOTION

1. மாவட்டக் கல்வி அலுவலர், தக்கலை சி.பால்ராஜ் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முதன்மைக் கல்வி அலுவலகம், திண்டுக்கல்     2. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், வேலூர் எஸ்.அருண்மொழி 
 3. மெட்ரிக் பள்ளிகள் ஆய்வர், மதுரை செ.எமரல்சி
4. மாவட்டக் கல்வி அலுவலர் பெரியகுளம் டி.சி.அனந்தநாயக
5. மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர்,தூத்துக்குடி சீ.வசந்தா   6. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், நாகப்பட்டினம் கா.பழனிவேல்
 7. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,திருப்பூர் கு.மா.காந்திமதி
8.மாவட்டக் கல்வி அலுவலர், சேலம் அ.சுப்பிரமணியன்
9. மாவட்டக் கல்வி அலுவலர், ஈரோடு சு.மாலதி

்  10. மெட்ரிக் பள்ளிகள் ஆய்வர், சேலம்       வி.செல்வராஜ்
  11. மாவட்டக் கல்வி அலுவலர் நாகப்பட்டினம் ஏ.இராஜமாணிக்கம் 

  12. மாவட்டக் கல்வி அலுவலர் பட்டுக்கோட்டை சி.நரேந்திரன்
13. மெட்ரிக் பள்ளிகள் ஆய்வர் திருவள்ளூர் நா.கண்ணன்
  14. மாவட்டக் கல்வி அலுவலர், தர்மபுரி டி.துரைசாமி
15. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,திருவள்ளூர் வி.எம்.கலாவல்லி
16. மாவட்டக் கல்வி அலுவலர் மயிலாடுதுறை வீர.வெள்ளைச்சாமி
  17. மாவட்டக் கல்வி அலுவலர்,முசிறி வி.எஸ்.பார்த்திபன்
18. மாவட்டக் கல்வி அலுவலர் திருவண்ணாமலை எம்.சசிகலாவதி  19. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், திருவண்ணாமலை ம.பொ.கணேசன்
  20. மாவட்டக் கல்வி அலுவலர் திருவாரூர்
21. மாவட்டக் கல்வி அலுவலர்,பழனி ச.கலையரசி
22. மெட்ரிக் பள்ளிகள் ஆய்வர் கோயம்புத்தூர் கே.கைலாஸ்       23. மாவட்டக் கல்வி அலுவலர் அறந்தாங்கி        சி.தாமரை
24. மாவட்டக் கல்வி அலுவலர், பெரம்பலூர் டி.வனஜாசலோமி
  25. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,திண்டுக்கல் பொ.சிவானந்தம்
26. மாவட்டக் கல்வி அலுவலர் விழுப்புரம் டி..செங்குட்டுவன்                                                            27. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,விருதுநகர் தி.

28. மாவட்டக் கல்வி அலுவலர் உசிலம்பட்டி ச.இரவிக்குமார்
  29. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,கடலூர் த.குணசேகரன்   30. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,விழுப்புரம்            வி.மல்லிகா
31. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், ஈரோடு   ஆர்.கந்தசாமி  32. மாவட்டக் கல்வி அலுவலர் உத்தமபாளையம் இல.ஜெயலட்சுமி 
  33. மாவட்டக் கல்வி அலுவலர் அருப்புக்கோட்டை பி.சுப்ரமணி  34. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,தஞ்சாவூர் க.கணேசன்   35. மாவட்டக் கல்வி அலுவலர் கிருஷ்ணகிரி எஸ்.முகமதுகலீல் 36. மாவட்டக் கல்வி அலுவலர்,தேவக்கோட்டை ம.சு.செந்தமிழ்செல்வி 
   37. மாவட்டக் கல்வி அலுவலர்,புதுக்கோட்டை. வே.இராமச்சந்திரன்
38. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,திருநெல்வேலி. ஆ.வசந்தி  
39. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,கிருஷ்ணகிரி ஆர்.கமலம் ்  40. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,கரூர் மு.பொன்னம்மாள் 
  41. மாவட்டக் கல்வி அலுவலர்,குன்னூர் சி.ஏ.சண்முகவடிவு
  42. மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர்,கரூர் சி.கதிர்வேலு         43. மாவட்டக் கல்வி அலுவலர்,திருப்பத்தூர் பா.வெள்ளையம்மாள்                         44. மாவட்டக் கல்வி அலுவலர்,பொள்ளாச்சி எஸ்.முகமதுசலீம்   45. மாவட்டக் கல்வி அலுவலர்,விருத்தாசலம் பொ.வடிவேல்      46. மாவட்டக் கல்வி அலுவலர்,தென்காசி. என்.வீரமணி   
47. மாவட்டக் கல்வி அலுவலர்,மதுரை கே.ஜெயமீனாதேவி           48. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,பெரம்பலூர் பி.தங்கவேல்
  49. மாவட்டக் கல்வி அலுவலர்,விருதுநகர் வி.பழனியாண்டி           50. மாவட்டக் கல்வி அலுவலர்,செய்யார்  கே.தாமோதரன்
51. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,தேனி சி.பத்மாவதி   

தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் 100 பள்ளிகள் வீதம் 3,200 ஆங்கில வழி இணைப்பு பள்ளிகள் தொடங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் 100 பள்ளிகள் வீதம் 3,200 ஆங்கில வழி இணைப்பு பள்ளிகள் தொடங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை தமிழகம் முழுவதும் அடுத்த கல்வி ஆண்டில் 3,200 ஆங்கில வழி இணைப்பு பள்ளிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆங்கில வழிக் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. இதை தவிர்க்க, அனைத்து குழந்தைகளுக்கும் சமவாய்ப்பு கிடைக்க நடப்பு கல்வி ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள துவக்கப் பள்ளிகளில், தேர்வு செய்யப்பட்ட 320 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை பெற்றோர்கூட தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் தலா 2 பிரிவுகள் ஆங்கில வழி கல்வியில் இருக்கும்.

இதுவரை ஊராட்சி தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி இல்லை. தற்போது இந்த பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 லட்சத்து 23 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆங்கில வழியில் கல்வி கற்கிறார்கள். துவக்கப் பள்ளி நிலையிலேயே இந்த ஆண்டு ஆங்கில வழி தொடங்கப்பட்டதால் 24 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக ஆங்கில வழியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் கோவையில் தொடக்கக் கல்வி இயக்குனரின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், 24 வகையான உத்தரவுகள் மற்றும் ஆலோசனைகளை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கியுள்ளனர். அதன்படி, ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறைந்தது 10 துவக்கப் பள்ளிகளை ஆங்கில வழி இணைப்பு பள்ளிகளாக தேர்வு செய்ய வேண்டும். அதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ள பள்ளிகளின் முழு விவரங்களையும் ஜனவரி மாதத்திற்குள் மாநில தொடக்கக் கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் அவரவர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தலா 10 துவக்கப்பள்ளிகள் வீதம் மாவட்டம் முழுவதும் 100 பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து அனுப்பி வருகின்றனர். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூறுகையில், ‘மாவட்டத்திற்கு 100 பள்ளிகள் என்றாலும் 32 மாவட்டத்திற்கும் 3,200 தொடக்கப் பள்ளிகள் ஆங்கில வழி இணைப்புப் பள்ளிகளாக அடுத்த கல்வி ஆண்டில் நடைமுறைக்கு வரும். ‘ என்றனர்.

இணைப்பு பள்ளி என்றால் என்ன? தொடக்க பள்ளிகளில் தமிழ் வழி படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களில், ஆங்கில வழியில் படிக்க விருப்பம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து, அதே பள்ளியில் அவர்களுக்கு ஆங்கில வழியில் தனியாக வகுப்புகளை நடத்துவது இணைப்பு பள்ளி (பேரலல் இங்கிலீஷ் மீடியம்) என்று அழைக்கப்படுகிறது. ஆங்கில வழியில் கற்க மாணவர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினால், பின்னர் அதே வளாகத்தில் தனியாக கட்டிடமும் கட்டப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Saturday, January 05, 2013

பி.எட்., சேர்க்கை தேதி நீட்டிப்பு

தஞ்சாவூர் தமிழ் பல்கலையில், நுழைவுத் தேர்வின்றி தமிழ் வழி பி.எட்., படிப்புக்கான சேர்க்கை, ஜன.,19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இளங்கலை, முதுகலை படிப்பு முடித்தவர்கள், சேரலாம்.

அங்கீகாரம் பெற்ற நர்சரி, பிரைமரி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை, மெட்ரிக் பள்ளிகளில் குறைந்த பட்சம் இரண்டாண்டுகள் பணியும், தற்போது பணியில் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். முகவரி: தமிழ்ப் பல்கலை கல்வி மையம், 10, கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், மதுரை - 2, 36, மேல வடம் போக்கித் தெரு, மதுரை-625 001. போன்: 90433 43743.

Friday, January 04, 2013

2006 முதல் 2009ம் ஆண்டு வரை டிஎன்பிஎஸ்சி நடத்திய வனத்துறை சார்நிலை பணியாளர் தேர்வு ரத்து கருத்துகள

    வனத்துறையில் காலியாக உள்ள சார் நிலை பணிகளை நிரப்ப, டிஎன்பிஎஸ்சி 2006 முதல் 2009ம் ஆண்டு வரை குரூப்&4 தேர்வு நடத்தியது. இதில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. எனவே,  தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து பிறப்பித்த உத்தரவு:

டிஎன்பிஎஸ்சி நடத்திய வனத்துறை சார் நிலை பணித்தேர்வு முறையாக நடைபெறவில்லை. எனவே, 2006 முதல் 2009ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட வனத்துறை சார் நிலை பணித்தேர்வு பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி இறுதி பட்டியல் வெளியிடும்போதுதான் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், நேர்காணலின்போது இடஒதுக்கீடு அமல்படுத்தக்கூடாது.தமிழ் வரூ. கல்வி பயின்றவர்களுக்கு சிறப்பு ஒதுக் கீடு வழங்கும்போது, அந்த ஒதுக்கீடு பெற தகுதியானவர் ஒருவர் தேர்வில் தோல்வி அடைந்தால், அவருக்கு அடுத்த தகுதியுடைய நபருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

 தமிழ் வரூ. கல்வி பயின்றவர்களுக்கு நேரடி நியமனத்தில் 20 சதவீதம் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அரசாணை குறித்து அரசிடம் டிஎன்பிஎஸ்சி விளக்கம் பெற்று, அதன் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.தியாகிகள், கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க தேவையில்லை. எம்எஸ்சி அப்ளைடு பயாலஜி, வனவியல் பட்டத்திற்கு சமமானதா என்பதை அரசிடம் டிஎன்பிஎஸ்சி விளக்கம் பெற வேண்டும். இரு படிப்புகளும் சமமானதாக இருந்தால், தகுதியான சான்றிதழ் வழங்க வேண்டும். வனவியல் பட்டதாரிகள், வனவியல் பட்டத்திற்கு சமமான பட்டம் பெற்றவர்களுக்கு தனித்தனியாக நேர்காணல், இறுதித் தேர்வு நடத்தி காலியிடங்களை நிரப்ப வேண்டும். அதன் பிறகும் காலியிடம் இருந்தால், அதில் வனவியல் தொடர்புடைய பட்டம் பெற்றவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டார்.

வாக்காளர் விழிப்புணர்வு தினத்தில் போட்டிகள் : தேர்தல் கமிஷன் உத்தரவு

வாக்காளர் விழிப்புணர்வு தினங்களில், ஓட்டுச்சாவடிகளில், மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த ,தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஆண்டு தோறும் ஜன., 25 ல் வாக்காளர்கள் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

வாக்காளர் விழிப்புணர்வு தினங்களில்,புதிய வாக்காளர்களாக சேர்க்கப் பட்டவர்களுக்கு ,அடையாள அட்டை வழங்க,தேர்தல் அதிகாரிகளை, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. ஓட்டுச்சாவடி மையங்களில், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள், பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப்போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் இணைந்து, விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்திட வேண்டும். இதில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய, துண்டு பிரசுரங்கள் வழங்க வேண்டும். வாக்காளர் விழிப்புணர்வு குறித்து, புதிய வாசகங்களை உருவாக்கும் போட்டிகளும் நடத்திட வேண்டும்.

இதற்காக,சிறந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, சான்றிதழ் வழங்க வேண்டும் என ,தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.அதன்படி போட்டி நடத்த உதவ ,முதன்மை கல்வி அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், நேரு யுவகேந்திரா, தொண்டு நிறுவனங்களை தேர்தல் அதிகாரிகள் கேட்டு உள்ளனர்.

அரசுப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் கல்வியை மேம்படுத்த புதிய உத்தரவு

  அரசு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளிகளின் கல்வியை மேம்படுத்த தனிக்கவனம் செலுத்த, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கென, தனியாக கல்வி நிறுவனங்கள் செயல்பட்டாலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மற்ற மாணவர்களுடன் இணைந்து படிக்கும் மாற்றுத்திறனாளிகளின் கல்வியை மேம்படுத்தும் வகையில்,

"மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி' எனும் திட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகளின் பாதிப்பு நிலைக்கேற்ப ஆய்வு செய்து, அதற்கு தகுந்தவாறு அந்தந்த பாட ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.எஸ்.ஏ., திட்ட தலா 4 பயிற்றுநர்களுக்கு,சென்னையில் 3 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

இவர்கள் மூலம் அந்தந்த மாவட்ட பயிற்றுநர்களுக்கு பயிற்சி தரப்பட்டு, பின்னர் ரெகுலர் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்படும். சிவகங்கை எஸ்.எஸ்.ஏ.,திட்ட கூடுதல் முதன்மை கல்வி ஜெயலட்சுமி கூறுகையில், ""ரெகுலர் அரசு பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தன்மையை புரிந்து, அவர்களுக்கான கல்வியை அளிக்க இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. படித்தல்,கேட்டல், எழுதுதல், தேர்வுக்கு தயாராகுதல் என்ற அடிப்படையில் இவர்களுக்கு தனிக்கவனம் செல்லும் வகையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எங்களது திட்ட பயிற்றுநர்கள் பயிற்சி அளிப்பர்,'' என்றார்.

TN Ministerial service Grade I,II - orders issue gov employees-Extend to Grade I&II public sector undertakings

Thursday, January 03, 2013

பத்தாம் வகுப்பு தனிதேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர், விரும்பும் பாடங்களில் மறுகூட்டல் செய்ய, "ஆன்-லைன்' வழியில், 7,8 தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தேர்வுத்துறையின் அறிவிப்பு:

செப்டம்பர், அக்டோபர், 10ம் வகுப்பு தனித்தேர்வு முடிவு, சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்வர்கள், தாங்கள் விரும்பிய பாடங்களில், மறுகூட்டல் செய்ய விரும்பினால், 7,8 தேதிகளில், ஆன்-லைன் வழியில் விண்ணப்பிக்கலாம். இரு தாள் கொண்ட பாடங்களுக்கு, 305 ரூபாயும், ஒருதாள் கொண்ட பாடத்திற்கு, 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வுத்துறையின், www.dge.tn.nic.in இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, விண்ணப்ப எண்ணுடன் கூடிய ஒப்புகை சீட்டு மற்றும் வங்கி படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின், அதை பூர்த்தி செய்து, ஐ.ஓ.பி., வங்கியில், "அரசுத் தேர்வுகள் இயக்குனர், சென்னை-6' என்ற பெயரில், கட்டணத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மூன்றாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் விற்பனை: விலை ரூ.70 முதல் ரூ.100 வரை

  மூன்றாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் தமிழகம் முழுவதும் வட்டார அலுவலகங்கள் மூலமாக பள்ளிகளுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.கோபால் தெரிவித்துள்ளார்.

இந்தப் புத்தகங்கள் ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படும். பாடநூல்களுக்கான தொகையில் 5 சதவீதம் தள்ளுபடி போக, மீதமுள்ளத் தொகையை பள்ளி முதல்வர்கள் அந்தந்த வட்டார அலுவலகங்களில் வரைவோலையாகச் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை முப்பருவ முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாம் பருவம் ஜனவரி 2-ம் தேதி தொடங்கிய நிலையில், பெரும்பாலான மாணவர்களுக்கு இந்தப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

மூன்றாம் பருவ புத்தக விநியோகம் தொடர்பாக டாக்டர் கே.கோபால் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மூன்றாவது பருவத்துக்கு மொத்தம் 2.17 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதில் 1.40 கோடி இலவசப் புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுவிட்டன. தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக 77 லட்சம் புத்தகங்கள் 22 வட்டார மையங்களுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன. 1, 2 ஆம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் ரூ.70-க்கும், 3, 4, 5, 6 ஆம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் ரூ.85-க்கும் விற்பனை செய்யப்படும். 7, 8 ஆம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் ரூ.100-க்கும் விற்கப்படும். வட்டார மையங்களில் பள்ளிகள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் புத்தகங்களுக்கான விலையை மொத்தமாக வரைவோலையாகச் செலுத்தி பள்ளி முதல்வர்கள் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம். புத்தகங்களை வசதியாக எடுத்துச் செல்லும் வகையிலும், குழந்தைகள் விரும்பும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பிளஸ் டூ எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 30மதிப்பெண்களும், செய்முறை தேர்வில் குறைந்தபட்சம், 40 மதிப்பெண்களும்பெற வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தான் இந்த ஆண்டும் தொடர்கிறது.

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் எழுத்து தேர்வில், 75க்கு, 20 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வில், 25க்கு, 15 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும் என்பதும் கடந்த ஆண்டு நடைமுறையே. குறும அளவு மதிப்பெண்களில் தேர்வுத்துறை இந்த ஆண்டு எந்த மாற்றமும் செய்யவில்லை. பிளஸ் டூ எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 30மதிப்பெண்களும், செய்முறை தேர்வில் குறைந்தபட்சம், 40 மதிப்பெண்களும்பெற வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தான் இந்த ஆண்டும் தொடர்கிறது. பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் எழுத்து தேர்வில், 75க்கு, 20 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வில், 25க்கு, 15 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும் என்பதும் கடந்த ஆண்டு நடைமுறையே. குறும அளவு மதிப்பெண்களில் தேர்வுத்துறை இந்த ஆண்டு எந்த மாற்றமும் செய்யவில்லை.

Wednesday, January 02, 2013

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திட்டம் : விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை

"வரும் கல்வியாண்டில், மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறை, ஆரம்பப் பள்ளி மாணவர் சேர்க்கையில், 100 சதவீதத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற முனைப்புடன், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வரும் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தற்போதே, விழிப்புணர்வு முகாம், பேரணி மற்றும் விழா நடத்த, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

: தொடக்கக் கல்வி இயக்குனரகம் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் இணைந்து, தமிழகம் முழுவதும், "சிறப்பு சேர்க்கை மற்றும் விழிப்புணர்வு முகாம்'களை நடத்த திட்டமிட்டுள்ளது. விழிப்புணர்வு பேரணியில், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், கல்வி அலுவலர்கள், பெற்றோர் - ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் பங்கேற்க வேண்டும். இதற் கான பேரணி முன்னேற்பாடுகள், அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் நடத்தி முடிவு செய்ய வேண்டும். பள்ளிக்கு, 100 சதவீதம், குழந்தைகளை அனுப்பும் கிராமங்களுக்கு, பரிசு வழங்கி கவுரவித்தல், நலத் திட்ட உதவிகள் சார்ந்த அனைத்து திட்டங்கள், இலவச சலுகைகள் போன்றவற்றை விளம்பரப்படுத்த வேண்டும். வீதி நாடகங்கள், பாடல்கள், சிறு நாடகங்கள், பேரணி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

CPS New Abstact form

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு, பேரணிகள் குறித்த இயக்குநர் செயல்முறைகள்

Tuesday, January 01, 2013

அறிவியலில் பாடத்தில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச, "மார்க்' பெற வேண்டும

் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ள மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற, நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்களை, கட்டாயமாக பெற வேண்டும். இல்லாவிடில், இந்த தேர்வில், தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்படுவர். பிளஸ் 2 தேர்வில், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, மொத்தமுள்ள, 200 மதிப்பெண்களில், 150 மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வுக்கும், 50 மதிப்பெண்கள், செய்முறைத் தேர்வுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, தேர்ச்சிக்குரிய, 70 மதிப்பெண்களை பெற, எழுத்துத் தேர்வில், 40 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வில், 30 மதிப்பெண்களும் கட்டாயம் பெற வேண்டும். தேர்ச்சிக்குரிய, 70 மதிப்பெண்களையும், எழுத்துத் தேர்வில் பெற்று, செய்முறைத் தேர்வில், 30 மதிப்பெண்கள் பெறாவிட்டால், அறிவியல் பாடத்தில், சம்பந்தபட்ட மாணவர் தோல்வி அடைந்ததாக, தேர்வுத் துறை அறிவிக்கும். இதேபோல், 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும், அறிவியலில் செய்முறைத் தேர்வு, 2011 - 12ம் ஆண்டு கல்வியாண்டு முதலே, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

மொத்தம் உள்ள, 100 மதிப்பெண்களில், எழுத்துத் தேர்வுக்கு, 75 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வுக்கு, 25 மதிப்பெண்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில், எழுத்துத் தேர்வில், 25 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வில், 10 மதிப்பெண்களும், குறைந்தபட்ச மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. அறிவியல் பாடத்தில் தேர்ச்சிக்குரிய, 35 மதிப்பெண்களை பெற, மேற்கண்ட குறைந்தபட்ச மதிப்பெண்களை, மாணவர்கள் கட்டாயம் பெற வேண்டும்.

பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு தலைவராக நீதிபதி சிங்காரவேலு நியமனம்

தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயக் குழுத் தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயக் குழுத் தலைவராக கடந்த ஆண்டு முதல் சிங்காரவேலு பதவி வகித்துவந்தார்.

டிசம்பர் 7-ம் தேதியுடன் நிர்ணயக் குழுவின் பதவிக்காலம் முடிவடைந்ததால் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் சூழல் உருவானது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து மீண்டும் அப்பதவிக்கு சிங்காரவேலு நியமிக்கப்பட்டுள்ளார். வரும் கல்வியாண்டில் சுமார் 10 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணத்தை சிங்காரவேலு தலைமையிலான குழு  நிர்ணயிக்க உள்ளது.

மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வுக்கு மதிப்பெண் அதிகரிப்பு: டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 தேர்வுமுறையில் அதிரடி மாற்றம்

   டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 தேர்வுமுறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. முதல்நிலைதேர்வில், ‘ஆப்டிடியூட்’ என்ற புதிய பாடமும், மெயின் தேர்வு பொதுஅறிவு தாளில் ஆங்கில பாடமும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அதோடு மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வுக்கான மதிப்பெண் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

குரூப்–1 தேர்வு துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், வணிகவரி உதவி கமிஷனர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், பத்திரப்பதிவு மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி (டி.எப்.ஓ.) ஆகிய 8 விதமான உயர்பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக குரூப்–1 தேர்வு நடத்தப்படுகிறது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்துகின்ற இந்த தேர்வை எழுத பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு, முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முக தேர்வு என 3 நிலைகளை உள்ளடக்கியது ஆகும். இதுவரையில், முதல்நிலை தேர்வில் பொது அறிவு தொடர்பாக 200 வினாக்கள் கேட்கப்படும். மெயின் தேர்விலும் பொது அறிவில் தலா 2 தாள்கள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் 300 மதிப்பெண். நேர்முகத்தேர்வுக்கு 80 மார்க் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிரடி மாற்றம

் இந்த நிலையில், குரூப்–1 தேர்வில் டி.என்.பி.எஸ்.சி. அதிரடியாக பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி, முதல்நிலை தேர்வில் பொதுஅறிவில் புதிதாக ‘ஆப்டிடியூட்’ என்ற பாடம் சேர்க்கப்படுகிறது. ஆப்டிடியூட் என்பது ஒருவரின் சிந்தனைத்திறன், பொதுவிழிப்புணர்வு, பகுத்து ஆராயும் திறன் சம்பந்தப்பட்டது ஆகும். பொதுஅறிவில் கேள்விகள் 150 ஆக குறைக்கப்பட்டு எஞ்சிய 50 கேள்விகள் ஆப்டிடியூட் பாடத்தில் இருந்து கேட்கப்படும்.முதல்நிலை தேர்வை போன்று மெயின் தேர்விலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன்படி, கூடுதலாக 300 மதிப்பெண்ணுக்கு பொதுஅறிவு தாள் ஒன்று புதிதாக சேர்க்கப்படுகிறது. அதோடு பொது அறிவில் ஆங்கில பாடமும் (கட்டுரை எழுதுதல், சுருக்கி வரைதல் போன்றவை) புதிதாக இடம்பெறுகிறது. விண்ணப்பதாரரின் ஆங்கில மொழித்திறனை சோதிக்கும் வகையில் இதில் கேள்விகள் கேட்கப்படும். நேர்முகத்தேர்வுக்கு 120 மார்க் மெயின் தேர்வில் புதிதாக 300 மதிப்பெண்ணுக்கு கூடுதலாக ஒரு தாள் சேர்க்கப்பட்டு இருப்பதால் மெயின் தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 600–லிருந்து 900 ஆக உயர்ந்துவிடும். தற்போது, நேர்முகதேர்வுக்கு 80 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது 120 ஆக அதிகரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான குரூப்–1 தேர்வு வரும் 27–ந்தேதி நடத்தப்பட உள்ளது. இதில் புதிய தேர்வுமுறை பின்பற்றப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 7–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம், 8 துணை கலெக்டர்களும், 4 டி.எஸ்.பி.க்களும், 7 வணிகவரி உதவி கமிஷனர்களும், மாவட்ட பதிவாளர் ஒருவரும், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிகளும் என மொத்தம் 25 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

குரூப் 1 தேர்வு: கால அவகாசம் நீட்டிப்பு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கு ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கான தேதி ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9ம் தேதி வரை பணம் செலுத்தலாம். தேர்வு தேதி டிசம்பர் 31லிருந்து ஜனவரி 27க்கு ஏற்கனவே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.