இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, August 28, 2012

செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்ப

விரிவுரையாளர் பணிக்கான "செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.பாரதியார் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செந்தில்வாசன் அறிக்கை:டில்லி, பல்கலை மானியக்குழு அனுமதியுடன் உதவி பேராசிரியர் மற்றும் விரிவுரையாளர் பணிக்கான மாநில தகுதி தேர்வு(செட்) பாரதியார் பல்கலை நடத்தி வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், 2012ம் ஆண்டுக்கான "செட்' தேர்வு வரும் அக்.,7ல் நடக்கிறது. 10 முதன்மை தேர்வு மையங்கள் உட்பட மொத்தம் 23 தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. இத் தேர்வுக்கு, இணையதளம் வழியாக மட்டும் ஆக., 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டது.விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் செப்., 7ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்டு, இணைப்புகளோடு நகல்களை பல்கலைக்கு வரும் செப்., 14ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

முதுகலை ஆசிரியர்கள் 1,185 பேர் தேர்வு

பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட, முதுகலை ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில், 1,185 பேர் இடம் பெற்றனர். கடந்த 2010-11ம் ஆண்டு, 1,347 முதுகலை ஆசிரியரை, பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த தேர்வு தொடர்பாக, ஏற்கனவே ஒரு முடிவு வெளியிடப்பட்டு, பதிவுதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட விளக்கங்கள், விடுபட்ட பதிவுதாரர்கள் என, பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டது. இந்தப் பட்டியலில், 1,185 பேர் இடம் பிடித்தனர். 162 பணியிடங்களுக்கு, குறிப்பிட்ட சில பிரிவுகளில் பதிவுதாரர்கள் இல்லாததால், இந்தப் பணியிடங்கள் காலியாக இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்த தேர்வில் இருந்து, இந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிகிறது.

பள்ளிகளில் திங்கட்கிழமை மட்டும் பொது இறை வணக்கம்: அரசு புது உத்தரவு

"பள்ளிகளில் திங்கட்கிழமை மட்டும், பொது இறைவணக்கம் நடத்தினால்போதும்' என, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளில், தினமும் காலை, பள்ளியில் இறைவணக்கம் நடைபெறும். பள்ளி துவங்கும் நேரத்திற்கு, மாணவ, மாணவியர் அனைவரும், பள்ளி வளாகத்தில் உள்ள கொடிக்கம்பம் முன் கூடுவர். தலைமை ஆசிரியர் தலைமையில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பர். அனைவரும் வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவர். அடுத்து தலைமை ஆசிரியர் தேசியக் கொடியேற்றுவார். கொடியேற்றப்பட்டதும் அனைவரும் கொடிக்கு வணக்கம் செலுத்தி, கொடி பாடலை உரக்கப் பாடுவர். அதன்பின், தினம் ஒரு மாணவர் அன்று பத்திரிகைகளில் வந்த முக்கிய செய்திகளை வாசிப்பார். ஒரு மாணவர் திருக்குறள் கூறி அதற்குரிய பொருளை எடுத்துரைப்பார். அதைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் அல்லது ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஏதேனும் நீதிக்கதைகளைக் கூறி அறிவுரை வழங்குவர். அதன்பின் தேசிய கீதம் பாடி, இறைவணக்கத்தை நிறைவு செய்வர். இதில் பங்கேற்பதற்காக மாணவ, மாணவியர், பள்ளி துவங்குவதற்கு, 10 நிமிடங்களுக்கு முன்பாகவே, பள்ளிக்கு வர வேண்டும். தாமதமாக வரும் மாணவ, மாணவியரை, உடற்கல்வி ஆசிரியர் முட்டிப்போட வைத்து, எச்சரித்து வகுப்புகளுக்கு அனுப்புவார். இது தொன்று தொட்ட வழக்கமாக இருந்து வந்தது.

ஒரு நாள் போதும்: இது மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பள்ளிக்கு வர தூண்டுகோலாக இருந்தது. தினம் ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகள், திருக்குறள், செய்தி வாசிப்பு, போன்றவை மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. இதற்கு தற்போது அதிகாரிகள் வேட்டு வைத்துள்ளனர். சமீபத்தில் பள்ளி கல்வித் துறையிலிருந்து, அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், "இறைவணக்கம் திங்கட்கிழமை மட்டும், பொதுவாக நடத்தினால் போதும். மற்ற நாட்களில் வகுப்பறைகளிலே நடத்திக் கொள்ளுங்கள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெற்றோர் கூறும்போது,""இறைவணக்கத்திற்கு அதிகபட்சம் 15 நிமிடங்கள் செலவாகும். இதனால் யாருக்கும் பாதிப்பில்லை. இதனால் நன்மையே அதிகம். இந்த நடைமுறையை ஏன் மாற்றினார்கள் என்று தெரியவில்லை. மாணவர்கள் நலன் கருதி, முன்புபோல் தினமும் இறைவணக்கம் நடத்த, முதல்வர் உத்தரவிட வேண்டும்,'' என்றனர்.

பள்ளிக்கு தாமதமாக வந்த ஆறு ஆசிரியர்களுக்கு, ஒரு நாள் சம்பளம், "கட்' செய்யப்பட்டது

. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில், நேற்று முன்தினம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அய்யண்ணன், திடீர் ஆய்வு நடத்தினார். காலை, 9.30மணிக்கு, எடப்பாடி அரசு நடுநிலைப் பள்ளிக்கு சென்றார். அப்போது, இறை வணக்கம் கூட்டம் நடக்கவில்லை. ஆசிரியர்களும் பணியில் இல்லை. மிகவும் தாமதமாக வந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், தாமதமாக பள்ளிக்கு வந்த இடைநிலை ஆசிரியர் குணசேகரன், பட்டதாரி ஆசிரியர் திருமுருகன் ஆகியோரின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிட்டார். காலை, 11 மணிக்கு, கணேசபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில், ஆய்வு நடத்தினார். விடுமுறை விண்ணப்பம் அளிக்காமல், முன் அனுமதியும் பெறாமல், கையெழுத்திடாமல், வருகைப் பதிவேடு வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இது தொடர்பாக, தலைமை ஆசிரியர் விளக்கம் அளிக்கவும், பட்டதாரி ஆசிரியர் சுதா, இடைநிலை ஆசிரியர் செல்வராணி, வேலவன் ஆகியோரின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்யவும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அய்யண்ணன் உத்தரவிட்டார்.

தகுதி தேர்வில் வெற்றி பெற்றாலும் ஆசிரியர் பணி கிடைக்குமா? : இரட்டைப் பட்டம் (Double Degree) படித்தவர்கள் கலக்கம

இரட்டை பட்டம் (Double Degree) பெற்றவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆசிரியர் பணி கிடைக்குமா என்று பட்டதாரிகள் கலக்கத்தில் உள்ளனர். இரட்டைப் பட்டம் (Double Degree)  படித்தவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 3 ஆண்டுகள் கொண்ட பட்டப்படிப்பே முறையானது. அந்த முறையில் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் பெறும் தகுதி உள்ளது. மேலும், டபுள் டிகிரி படித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கூடாது, பணிநியமனமும் வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டது.

இதற்கிடையே 25ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி, ‘மீண்டும் தகுதித் தேர்வு அக்டோபர் மாதம் 3ந் தேதி  நடக்கும்‘ என்று தெரிவித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் பலர் ‘டபுள் டிகிரி‘ முடித்துள்ளனர். அவர்கள் அக்டோபர் மாதம் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றுவிட்டால், அவர்களுக்கு ஆசிரியர் வேலை கிடைக்குமா என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கவில்லை. உயர் நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பின்படி டபுள் டிகிரி படித்தவர்கள் ஆசிரியர் பணியை பெற முடியாது.

இதனால் டபுள் டிகிரி படித்தவர்கள் மேலும் கலக்கம் அடைந்துள்ளனர்.

பாரதிதாசன் பல்கலை எம்.பில் விண்ணப்பப் படிவம். கடைசி தேதி 31-8-12

Monday, August 27, 2012

பணி நிரவல் 10,000 ஆசிரியர்கள் அதிரடி மாற்றம்

குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில், அதிகமான ஆசிரியர்களும், அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்களும் பணிபுரிந்து வந்தனர். இந்த அவல நிலையை களைய, சமீபத்தில் நடந்த பணி நிரவல் மூலம், 10 ஆயிரம் ஆசிரியர்கள், அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

விருப்பம் போல் பணி: துவக்கப்பள்ளியாக இருந்தால், 30 மாணவருக்கு, ஓர் ஆசிரியர்; ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளில், 35 மாணவருக்கு, ஓர் ஆசிரியர்; ஒன்பது, 10ம் வகுப்புகளில், 40 மாணவருக்கு, ஓர் ஆசிரியர் என்ற வீதத்தில், பாட வாரியாக, ஆசிரியர் இருக்க வேண்டும். இதற்கு மாறாக, குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளில், அதிகமான ஆசிரியரும்; மாணவர்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில், ஆசிரியர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலைமை, பள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களில் பெரும்பாலானோர், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள், தென் மாவட்டங்களில் காலி இடங்கள் ஏற்படுவதை கண்காணித்து, அதற்கேற்ப நடைமுறைகளை மேற்கொண்டு, அங்கே பறந்து விடுகின்றனர். இதனால், வட மாவட்டங்களில், காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மாநகரங்கள் மற்றும் அதையொட்டிய புறநகர்ப் பகுதிகளில், தேவையை விட, அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்த வகையில், மாணவ, மாணவியர் குறைவாக உள்ள பள்ளிகளில், 10 ஆயிரம் பேர் இருந்தது கண்டறியப்பட்டது.

இதுகுறித்த ஆய்வுக்குப் பின், ""ஆசிரியர் இல்லாததால், மாணவர் படிப்பு பாதிக்கக் கூடாது. தேவையுள்ள பள்ளிகளில், போதிய ஆசிரியரை நியமிக்கவும், கூடுதலாக உள்ள ஆசிரியரை, மாறுதல் செய்யவும் தயங்க வேண்டாம்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு, முதல்வர் பச்சைக்கொடி காட்டினார். கடந்த மாதம் நடந்த கலந்தாய்வில், தொடக்க கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறைகளில், 10 ஆயிரம் ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு தூக்கி அடிக்கப்பட்டனர். அனைவருமே, வட மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாவட்டத்தில் இருந்து மட்டும், 150 ஆசிரியர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர்.

தொடக்கக் கல்வித் துறையில், 3,200 ஆசிரியர்கள், பணி நிரவல் மூலம் மாற்றப்பட்டனர். பள்ளிக் கல்வித் துறையில், 6,500 ஆசிரியர்கள் வரை, பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். "அரசின் அதிரடியால், ஆசிரியர்கள் புலம்பினாலும், அனைத்து மாணவ, மாணவியரும் கல்வி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது' என, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய நியமனம் எப்போது? தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறும் போது, ""தொடக்கக் கல்வித் துறையில், 3,000 இடைநிலை ஆசிரியர்களும்; பள்ளிக் கல்வித் துறையில், 6,000 ஆசிரியர்களும், விரைவில் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். மாணவ, மாணவியர் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் பணியிடங்களில், இந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதனால், மாணவர்கள் மேலும் பலன் பெறுவர்,'' என்றார்.

மாநிலம் முழுவதும் ஆய்வு: சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்தாத பள்ளிக்கு "நோட்டீஸ்'

தமிழக அரசின் அங்கீகாரத்துடன் இயங்கும் பிரபல தனியார் பள்ளிகள், சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தாமல், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களை நடத்தி வருகிறது. சமீபத்தில், பிரபல தனியார் பள்ளி ஒன்றில், இத்தகைய முறைகேட்டை கண்டுபிடித்த, மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம், அதன் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து,"நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற, பிரபல தனியார் பள்ளிகள், சமச்சீர் கல்வி திட்டத்தையே பின்பற்ற வேண்டும். ஆனால், பிரபல தனியார் பள்ளிகள், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களையே அமல்படுத்துகின்றன. மெட்ரிக் பாடத் திட்டத்திற்கு நிகராக, சமச்சீர் கல்வி திட்டம் இல்லை என, குறைபடும் இத்தகைய பள்ளிகள், சமச்சீர் பாடத் திட்டத்தை புறக்கணித்துள்ளன. இது, அரசின் விதிமுறைகளுக்கு எதிரானது. ஆனால், உள்ளூரில் உள்ள கல்வி அதிகாரிகளை, "சரிக்கட்டி' தொடர்ந்து சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஐவர் குழு: சமீபத்தில், சென்னை, முகப்பேரில் உள்ள பிரபலமான மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி திட்டத்திற்குப் பதிலாக, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் செயல்படுத்தப்படுவது, அரசின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து, ஐந்து பேர் கொண்ட சிறப்பு அதிகாரிகள் குழுவை அமைத்து, திடீரென பள்ளியில் ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க, மெட்ரிக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. அதன்படி, பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்ட, குழுவைச் சேர்ந்த, திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளியில் விதிமீறல் நடந்துள்ளதாக, கடந்த 1ம் தேதி, இயக்குனரகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

நோட்டீஸ்: அறிக்கையில் அவர் கூறிஇருப்பதாவது: ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப் படுத்தவில்லை. ஆறு, ஏழாம் வகுப்புகளுக்கு, சமச்சீர் கல்வி திட்ட பாடப் புத்தகங்களுடன், கூடுதலாக, சி.பி.எஸ்.இ., கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. தமிழக அரசின் அங்கீகாரத்தை பெற்று, பொதுக்கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி திட்டத்தை பின்பற்றாமல், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை நடத்தி வருவது, மெட்ரிக் பள்ளிகளின் விதிமுறைகளுக்கு முரணானது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், விதிமுறையை கடைபிடிக்காத பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் எனவும், இயக்குனருக்கு அவர் பரிந்துரைத்தார். இதன் அடிப்படையில், கடந்த 14ம் தேதியிட்ட இயக்குனரின், "நோட்டீஸ்' பள்ளிக்கு அனுப்பப்பட்டது. ஆய்வு தொடரும்...: நேற்று மாலை, பள்ளி நிர்வாகம் இதற்கு பதிலளித்து உள்ளதாகவும்; அதில், செய்த தவறுக்கு உரிய பதிலை அளிக்காமல், பள்ளியின் சாதனைகளை அளந்துள்ளதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரத்தில், அரசின் ஆலோசனையைப் பெற்று, விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், மாநிலம் முழுவதும் உள்ள பிரபலமான தனியார் பள்ளிகளை பட்டியல் எடுத்து, சிறப்பு குழுக்கள் அமைத்து ஆய்வு செய்து, முறைகேடு செய்துள்ள பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை: அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு ஒன்பது மாதம் "கெட

"இலவச, கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகாரம் பெறாத, 1,022 பள்ளிகள், வரும் மே மாதத்திற்குள், தொடர் அங்கீகாரம் பெற, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், சம்பந்தபட்ட அதிகாரிகளே இதற்குப் பொறுப்பாவர்' என, பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அனுப்பிய சுற்றுஅறிக்கை விவரம்: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், 1,022 பள்ளிகள், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, தொடர் அங்கீகாரம் பெறாதது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், இத்தகையப் பள்ளிகளை நேரடியாக ஆய்வு செய்து, தொடர் அங்கீகாரம் பெறுவதற்கான ஆவணங்களைப் பெற, பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும். அடுத்த கல்வியாண்டு துவங்குவதற்குள், இந்தப் பள்ளிகள், அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை, முதன்மைக் கல்வி அலுவலர்கள் எடுக்க வேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட ஆய்வு அதிகாரிகளே, அனைத்திற்கும் பொறுப்பேற்க நேரிடும்.

சிறுபான்மை பள்ளிகளாக இருந்தால், அந்தப் பள்ளி குறித்த ஆவணங்களை, பள்ளிக்கல்வி இணை இயக்குனருக்கு (இடைநிலைக் கல்வி) அனுப்ப வேண் டும். சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகாரம் வழங்குவது குறித்த முடிவை, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே எடுக்கலாம். இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், தொடக்கக் கல்வித் துறையின் கீழும், 500க்கும் மேற்பட்ட பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளும், அங்கீகாரம் பெற வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது. புதிய விதிமுறைகள் காரணமாக, தொடர் அங்கீகாரம் பெற முடியாத நிலையில், 700க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளன.

25 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட இந்தப் பள்ளிகள், குறைந்த இடப்பரப்பில் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளை, மூடவும் முடியாத நிலை உள்ளது. எனவே, இந்தப் பள்ளிகளின் பிரச்னை குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில், அரசு தன் முடிவை விரைவில் அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, August 26, 2012

2ம் கட்ட தேசிய வங்கி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம


Institute Of Finance, Banking and Insurance-ன் சார்பில் தேசிய வங்கி நுழைவுத் தேர்வு 2-வது கட்டமாக நடைபெற உள்ளது. ஐ.எப்.பி.ஐ. நடத்தும் இந்த நுழைவுத்தேர்வை எழுதுபவர்கள் வங்கியியல் பிரிவில் முதுநிலை பயில தகுதி உடையவர் ஆவார்கள். தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு 16 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை கிடைக்கும். முதுநிலை வங்கியியல் படிப்பை வெற்றிக்கரமாக முடித்தவர்களுக்கு இந்தியாவில் உள்ள முன்னனி வங்கிகளில் IFBI வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும். இதற்கு பட்டப்படிப்பை முடித்தவர்கள் அல்லது இறுதி ஆண்டு பட்டப்படிப்பை படித்து கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பட்டப்படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்று, 1987 ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 30ம் தேதி வரை இணையதளத்தில் தேர்வு நடைபெறுகிறது. கூடுதல் விபரங்களை www.ifbi.com என்ற இணையதளத்தில் பெறலாம். அல்லது 1800-266-8000 என்ற தொலைபேசி எண்ணில் தகவல்களை பெறலாம். « முதல் பக்கம்

வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போர் 75 லட்சம்

தமிழகத்தில், 75 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கின்றனர். இவர்களில், 36,85,000 பேர் பெண்கள். இந்த புள்ளி விவரம், கடந்த மார்ச், 31ம் தேதி வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் விவரங்கள். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரில், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், மற்றவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் ஆகியோரின் விவரங்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளன.

அதேபோல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமா, ஆசிரியர் பயற்சி முடித்தவர்கள், இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் என, கல்வித் தகுதி வாரியாகவும் விவரங்கள் வேலைவாய்ப்பு இயக்குனரகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் கல்வியில், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், 1,79,000 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் பொறியியல் இளம்நிலை பட்டம் (பி.இ.,) பெற்றவர்கள், 1,39,000 பேர். முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்

'ஒளிவுமறைவின்றி ஆசிரியர் கலந்தாய்வு நடத்த வேண்டும்''


ஒளிவுமறைவின்றி ஆசிரியர் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலர் முருக செல்வராசன் வலியுறுத்தியுள்ளார்.

 ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  இடமாறுதல், பதவி உயர்வு, உபரி பணியிட நிரவல்கள் ஆளும்கட்சியின் குறுக்கீடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2011-12-ம் கல்வி ஆண்டில் நிர்வாக இடமாறுதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2012-13-ம் கல்வி ஆண்டு  ஆசிரியர் இடமாறுதலில் முன்னுரிமை அளிப்பதில் பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இந்த குளறுபடிகளுக்கு தீர்வுகாண வேண்டும்.

மாநில அளவிலான மாவட்ட தலைநகரங்களில் 30-8-2012 பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

மாறுதல் கலந்தாய்வு முறைகேடுகளை கண்டித்தும்,
காலி பணியிடங்கள் இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க 30-8-2012 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

முதன் முதலில் சந்திரனில் இறங்கிய வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம

அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங், அப்பல்லோ-11 விண்கலம் மூலம் கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி (நியூயார்க் நேரப்படி) இரவு 10.50 மணிக்கு சந்திரனில் இறங்கினார். இதன் மூலம் சந்திரனில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அப்போது இவரது சாதனையை உலகம் முழுவதிலும் இருந்து 5 கோடியே 28 லட்சம் மக்கள் கண்டுகளித்து பரவசம் அடைந்தனர்.

உலகப் புகழ்பெற்ற விண்வெளி வீரர் ஆம்ஸ்ட் ராங் “நாசா” குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நாசா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் இருதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தனர். இதைத் தொடர்ந்து அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. அதைத் தொடர்ந்து குணம் அடைந்த அவர் சமீபத்தில் வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று அவர் மரணம் அடைந்தார். அப்போது அவரது குடும்பத்தினர் உடன் இருந்தனர். நீல் ஆம்ஸ்ட்ராங்கின் முழு பெயர் நீல் ஆல்டென் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 1930-ம் ஆண்டில் ஆகஸ்டு 5-ந்தேதி ஒகயோவில் உள்ள வபாகொனெட்டாவில் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தை ஆடிட்டராக பணிபுரிந்தார். எனவே அவர் பல இடங்களுக்கு சென்று பணிபுரிந்தார். ஆகவே இவர் வபாகொனெட்டாவில் உள்ள தனது தாத்தா - பாட்டியுடன் தங்கியிருந்தார். அவர்களுடன் குழந்தை பருவத்தை கழித்தார். சிறு வயதில் இவருக்கு விமானம் என்றால் கொள்ளை பிரியம். எனவே, அது குறித்த படிப்பை படித்தார். பின்னர் அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்தார். இவருடன் விமானி எட்வின்புஷ் அல்டிரின், மற்றொரு விண்வெளி வீரர் மைக்கேல் கொலினல் ஆகியோரும் சந்திரனுக்கு சென்று இருந்தனர். நீல் ஆம்ஸ்ட்ராங் இறங்கிய 20 நிமிடங்கள் கழித்து ஆல்டிரின் சந்திரனில் இறங்கினார்.

மைக்கேல் கொலினஸ் அப்பல்லோ-11 விண்கலத்தில் இருந்து அதை இயக்கி கொண்டிருந்தார். சந்திரனில் இறங்கிய நீல்ஆம்ஸ்ட்ராங்குடன் அல் டிரினும் சேர்ந்து சோதனை யில் ஈடுபட்டார். அங்குள்ள பாறைகளை இருவரும் சேகரித்தனர். அமெரிக்க தேசிய கொடியையும் சந்திரனில் பறக்க விட்டு சாதனை படைத்தனர். சந்திரனில் காலடி எடுத்து வைத்து நீல் ஆம்ஸ்ட்ராங் சாதனை செய்த விவகாரம் 20-ம் நூற்றாண்டின் மிகப் பெரும் சாதனையாக கருதப்படுகிறது. சந்திரனில் இருந்து பூமி திரும்பிய நீல்ஆம்ஸ்ட்ராங் நாசாவின் விண்வெளி மையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது காற்று மண்டலம் அல்லாத சந்திரனில் தான் எடுத்து வைத்த முதல் காலடி, குழந்தை தவழ்வது போன்று மகிழ்ச்சியாக இருந்தது என வர்ணித்தார். நீல்ஆம்ஸ்ட்ராங் “நாசா” விண்வெளி மையத்தில் அதிகாரியாக பணி புரிந்து வந்தார். சின்சினாட்டி பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராக இருந்தார். அவரது மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.