இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, November 26, 2013

3ம் பருவ பாடப்புத்தகங்கள் வந்தாச்சு

   திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக, மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வந்துள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்று பிரிவுகளாக பாடங்களை பிரித்து, மாணவ, மாணவியருக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவம் என்ற அடிப்படையில், தேர்வு நடத்தி, மாணவ, மாணவியரின் கற்றல் திறன் மதிப்பிடப்படுகிறது. தற்போது இரண்டாம் பருவ பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் நிலையில், வரும் டிச., 10 முதல் 23 வரை, பள்ளிகளில் இரண்டாம் பருவ தேர்வு நடக்கிறது

. தேர்வு விடுமுறைக்குபின், பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. அதற்காக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு, நகராட்சி மற்றும் மாநகராட்சி, ஊராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்க, மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வந்துள்ளன. சென்னையில் உள்ள அரசு பாடநூல் கழகத்தில் அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அப்புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட கல்வி அலுவலர் கரோலின் கூறுகையில்,

""மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள், சென்னையில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. புத்தகங்கள் தொடர்ந்து வருவதால், மொத்த எண்ணிக்கை விவரம், இன்னும் தெரியவில்லை. சில தினங்களில், அனைத்து புத்தகங்களும் வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். இரண்டாம் பருவ தேர்வு முடிந்தபின், பள்ளிகளில் வகுப்பு வாரியாக மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும்,'' என்றார்.

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு அரசுக்கு கோரிக்கை

பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய மதிப்பெண் தளர்வுகளை தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசு தனியார் கூட்டு மாதிரிப் பள்ளி திட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். இந்த திட்டத்தை தமிழத்தில் செயல்படுத்த முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறையின் 181 உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டுமூக நீதிக்கு எதிரான அரசாணை 252ஐ திரும்ப பெற வேண்டும். இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.

எட்டாம் வகுப்பு தேசிய திறனாய்வு தேர்வு-2012,

Monday, November 25, 2013

அரசு /அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு RBSK திட்டத்தின் மூலம் மருத்துவ பரிசோதனை நடத்த அனுமதித்தும் ஒத்துழைப்பு நல்கவும் அரசு கடிதம் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறை வெளியீடு

இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை மீண்டும் டிசம்பர் 13ஆம் தேதி அன்று வருகிறது


இன்று ( 25.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மதிப்புமிகு ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சத்தியநாரயணா முன்னிலையில் 12.15க்கு விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பு வழக்குரைஞர் தன்னுடைய எதிர் உரையை தாக்கல் செய்ய குறைந்தது ஒரு வார கால அவகாசம் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் அரசு தரப்பு எதிர் உரையை தயார் செய்து அதற்கான பதிலை பெறுவதற்கு இரட்டைப்பட்ட வழக்கறிஞர்களிடம் 10 தினங்களுக்குள் அளிக்க வேண்டும்.

அவர்கள் அதற்கான பதிலை 13.12.2013க்குள் தயார் செய்து முடித்திருக்க வேண்டும் எனவும், அடுத்த கட்ட விசாரணை 13.12.2013க்கு முதல் அமர்வில் நடைபெறும் எனவும் தெரிவித்தனர். டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நீதிபதிகள் தங்கள் துறைகளை  மாற்றிக்கொள்ளும் சூழலில் நீதியரசர் சத்தியநாரயணன் அவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிகிறது. எனவே வருகிற 13.12.2013 அன்று நீதியரசர் சத்தியநாரயணன் அவர்கள் இவ்வழக்கிற்காக சிறப்பு வரவாக சென்னை உயர்நீதிமன்றம் முதல் அமர்விற்கு வர உள்ளார். அன்று மதியம் 2.15க்கு வழக்கு விசாரணைக்கு வரும். அன்று விசாரணை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Sunday, November 24, 2013

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நீக்க ஐகோர்ட் தடை

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய, பள்ளி கல்வி இயக்குனர் நவ. 7ல் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் சார் பிலும் ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, பள்ளி கல்வி இயக்குனரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளார்.

இந்நிலையில், தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஆறுமுகம் உட்பட 10 ஆசிரியர்கள், ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். ஆறுமுகம் தனது மனுவில், ‘நான் பணி நியமனம் செய்யும்போது ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறவில்லை. இதனால் என்னால் தகுதி தேர்வு எழுத முடியவில்லை. என் பணி நியமனத்தை அங்கீகரித்த மாவட்ட கல்வி அதிகாரி, 5 ஆண்டில் தகுதி தேர்வில் வெற்றிப்பெற வேண்டும் என நிபந்தனை விதித்தார். அந்த 5 ஆண்டு காலக்கெடு முடியவில்லை. அதை கருத்தில் கொள்ளாமல் என்னை விசாரிக்காமலும், முன்கூட்டி நோட்டீஸ் அளிக்காமலும் என் பணி நியமனத்தை ரத்து செய்து மாவட்ட கல்வி அதிகாரி கடந்த 14ல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை நீதிபதி டி.ராஜா விசாரித்தார். மனுவை விசாரித்த நீதிபதி, தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யக்கோரி பள்ளி கல்வி இயக்குனர் பிறப்பித்த உத்தரவுக்கும், அந்த உத்தரவை தொடர்ந்து மனுதாரர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மனுவுக்கு பதிலளிக்க பள்ளி கல்வி செயலாளர், இயக்குனர், தஞ்சாவூர் மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டா

Friday, November 22, 2013

பதவி உயர்வுக்காக 104 தலைமை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

தமிழ்நாட்டில் புதிதாக 54 தொடக்கப்பள்ளிகள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தொடங்கப்பட்டுள்ளன. அந்த பள்ளிகளுக்கும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உயர்நிலைப்பள்ளிகளுக்கும் பதவி உயர்வு பெற்று சென்றனர். அவ்வாறு சென்ற காரணத்தால் நடுநிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே மொத்தம் 104 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கலந்தாய்வு நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி அந்தந்த மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) கலந்தாய்வு நடக்கிறது.

2013-14 ல் தரம் உயர்த்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு நாளை கலந்தாய்வு

தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டு - ஊராட்சி ஒன்றியம் /நகராட்சி நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்வு மற்றும் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடக்கம் -அனுமதிக்கப் பட்ட தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 23.11.2013 அன்று நடத்த இயக்குநர் உத்தரவு

Thursday, November 21, 2013

Tirupur North -Court case detail forms

8–வது வகுப்பு மாணவர்கள்: உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

   8–வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 9–வது முதல் பிளஸ்–2 வரை உதவித்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் என்று அழைக்கப்படுகிறது. உதவித்தொகை வழங்குவதற்காக தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது.

இந்த தேர்வை 7 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதினார்கள். இந்த தேர்வுக்கான முடிவுகள் நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வாளர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tndge.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

3625 ஆசிரியர்கள் பணிமூப்பு பட்டியல் "ரெடி' : பதவி உயர்வு அறிவிக்காத "மர்மம்' என்ன

. மாநில அளவில், 525 உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர், 1100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியலை, 1.1.2013ல் பள்ளிக் கல்வித்துறை தயாரித்தது. உயர்நிலை பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பாக, பட்டதாரி மற்றும் தமிழாசிரியருக்கு இடையே நிலவும் சில பிரச்னையால், கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால், முதுநிலை பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு அளிப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை.

கடந்த மே மாதம் அறிவிக்க வேண்டிய இந்த பதவி உயர்வு, "என்ன காரணத்தால்' இதுவரை வெளியிடவில்லை என்ற குழப்பத்தில் ஆசிரியர்கள் உள்ளனர். இதில், பலர் ஓய்வு பெறும் நிலையை எட்டியுள்ளனர். இப்பிரச்னை குறித்து தமிழ்நாடு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சங்க பொதுச் செயலாளர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:

பத்தாம் வகுப்பு தேர்வு நெருங்குகிறது. ஆனால், 525 உயர்நிலை பள்ளிகளில், தலைமையாசிரியர்கள் இல்லை. ஆசிரியர்களுக்குள் நிலவும் பிரச்னையை அதிகாரிகள் எளிதாக பேசி முடிவு எட்டலாம். அதேபோல், 2013ம் ஆண்டிற்கான, முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பட்டதாரி பதவி உயர்வு "பேனல்' தயார் நிலையில் இருந்தும், பதவி உயர்வு அறிவிப்பு இல்லை. இதனால், பலர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 2014ம் ஆண்டிற்கான ஆசிரியர் பணிமூப்பு பட்டியல் தயாரிக்கும் பணியும் துவங்கிவிட்டது. மாணவர்கள் நலன், கல்வி முன்னேற்றம், தேர்ச்சி விகிதம் பாதிக்காமல் இருக்க கல்வித்துறை அதிகாரிகள் இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டும், என்றார். காரணம் என்ன : "பேனலில்' உள்ள ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: பள்ளிக் கல்வித் துறையில் அமைச்சர்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றனர். பதவி உயர்வு பிரச்னை குறித்து ஒரு அமைச்சரிடம் முழு விவரத்தையும் விளக்கிய ஒரு சில நாட்களில், அந்த அமைச்சர் வேறு துறைக்கு திடீரென மாற்றப்படுகிறார். அதேபோல், தேவராஜன் இயக்குனராக இருந்த போது, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்போன நிலையில் அவரும் மாற்றப்பட்டார். பலமுறை நேரடியாக சென்று, கல்வித்துறை செயலாளரிடம் விவரம் தெரிவித்தும் முன்னேற்றம் இல்லை, என்றனர்

அரசு பள்ளி மாணவர் 6,700 பேர் கல்வி உதவித்தொகை பெற தேர்வு

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், தற்போது, 9ம் வகுப்பு பயிலும், 6,700 மாணவர், மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற, தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு, கடந்த ஆண்டு, டிசம்பரில் நடந்தது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படித்த மாணவ, மாணவியர், தேர்வில் பங்கேற்றனர்.

"இதன் முடிவு, 23ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, www.tndge.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும்' என, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், நேற்று தெரிவித்தார். இந்த தேர்வில், 6,700 பேர், தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மாணவர்களுக்கு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, 1,500 ரூபாய் வீதம், பிளஸ் 2 வரை, உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகையை, மத்திய அரசு வழங்குகிறது. தேர்வு நடந்து, ஒரு ஆண்டு முடியும் நிலை உள்ளது என்றாலும், இந்த ஆண்டிற்கான உதவித்தொகை, சம்பந்தபட்ட மாணவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பிளஸ் 2, 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு

   மாநில அளவில், பொதுத் தேர்வாக, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, டிசம்பர், 10ம் தேதியில் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வு, டிசம்பர், 12ம் தேதியில் இருந்தும் துவங்குகின்றன. மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வை போலவே, இந்த தேர்வுகளும் நடக்கும். காலை, 10:00 மணி முதல், 10:10 வரையான 10 நிமிடம், கேள்வித்தாளை படித்துப் பார்க்க வழங்கப்படும்.

அடுத்த, 5 நிமிடம், விடைத்தாளில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்ய வழங்கப்படும். விடை எழுதுவதற்கான நேரம், 10:15ல் துவங்கும். இந்த 15 நிமிடங்கள், இரு தேர்வுகளுக்கும் பொருந்தும். எனினும், பிளஸ் 2 தேர்வு, மூன்று மணி நேரம் என்பதால், 10:15க்கு துவங்கி, 1:15க்கு முடிவடையும். 10ம் வகுப்பு தேர்வு, 10:15க்கு துவங்கி, 12:45க்கு முடியும். 10ம் வகுப்பு தேர்வை, 11 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேரும் எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிகளில் காலியிட விபரங்கள் சேகரிப்பு

    அரசு, நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர், தலைமை ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் விபரங்களை பள்ளி கல்வித்துறை சேகரித்து வருகிறது.2013 நவ.,1ல், தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து வகை ஆசிரியர் காலிப் பணியிடங்கள், 2013 நவ.,1 முதல் 2014 மே 31 வரை பணிநிறைவு காரணமாக ஏற்படும் காலி பணியிட விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.இதேபோல்,தொடக்க கல்வி அலுவலகங்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 2013 நவ.1 வரை காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், உதவியாளர், கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், 2013 நவ.,1 முதல் 2015 மார்ச் 14 வரை, ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலி பணியிட பட்டியலை அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Wednesday, November 20, 2013

ஹலோ - அமைதியின் ஆரம்பம் : இன்று சர்வதேச ஹலோ தினம்-

   எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் 1973ம் ஆண்டு, தங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை முடிந்த தினத்தை, உலக ஹலோ தினமாக கொண்டாடினர். அதன் பிறகு தற்போது 180 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தின் முக்கிய நோக்கம், ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதே. இன்று கொண்டாடப்படும் உலக ஹலோ தினத்தில், குறைந்தது 10 பேரிடம் "ஹலோ' சொல்வதன் மூலம், இத்தினத்தில் நீங்களும் பங்கேற்கலாம்.

சக மனிதர்களுடனான உறவை மேம்படுத்துவதன் மூலமாக, உலக மக்களிடம் அமைதியை நிலை நாட்ட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சாதனையாளர்களும், "ஹலோ' தினத்தின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

டி.இ.டி.,தேர்வானவர்களுக்கு நவ.23 ல் சான்றிதழ் வினியோகம்

கோர்ட் உத்தரவையடுத்து, கடந்த ஆண்டு டி.இ.டி.,தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் அந்தந்த சி.இ.ஓ., அலுவலகத்தில் நவ.23 முதல் வழங்கப்படுகிறது. அக்., 2012 ஜூலையில், டி.ஆர்.பி.,சார்பில், டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) நடந்தது. தாள் 1, 2 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்தது

. தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்க உத்தரவிடவேண்டும் என, சிலர் கோர்ட்டை அணுகினர். இதையடுத்து, டி.இ.டி., தேர்ச்சிக்கான முடிவு, மதிப்பெண்களை இணையதளத்தில் வெளியிடப்பட்டாலும், தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்க வேண்டும் என, கல்வித்துறைக்கு கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், 2012 ல், டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட சி.இ.ஓ.,அலுவலங்களில் நவ., 23 முதல் டிச.,15 வரை தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அந்தந்த மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வெழுதி, வெற்றி பெற்றவர்கள், ஏற்கனவே, பணி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, கல்வித்துறை அனுப்பிய அழைப்பு கடிதத்துடன் நேரில் வர வேண்டும். தேர்வர்கள் தவிர, பிறரிடம் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என்றும், தபாலிலோ, கொரியர் மூலமோ சான்றுகளை அனுப்ப இயலாது எனவும்,சி.இ.ஓ.,க்கள் தெரிவித்தனர்.

தேர்வறையில் 20 பேர் மட்டுமே

்: தேர்வறையில் 20 மாணவர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது என, அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார். பிளஸ்2, பத்தாம் வகுப்பு அரசு தேர்வு முன்னேற்பாடு தொடர்பான 4 மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. தேர்வுத்துறை இணை இயக்குனர் பேசிதாவது:

தேர்வறைகள் 20க்கு20 அடி அளவுள்ள அறையாகவும், ஒரு அறையில் 20 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். கடைசி அறையில் மட்டும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, குறைவாக இருக்கலாம். குடிநீர், கழிப்பறை, இருக்கை வசதிகள், சுற்றுச்சுவர் இருக்க வேண்டும் பெஞ்சுகளை மற்ற பள்ளிகளில் இருந்து கொண்டு வர கூடாது. வசதி இல்லாத பள்ளிகளுக்கு தேர்வு மையம் அனுமதிக்க கூடாது, என்றார்.

டிசம்பர் 19-ந்தேதி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்

- சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுத் துறை வங்கி ஊழியர்கள், டிசம்பர் 19-ந்தேதி அன்று நாடு தழுவிய வேலை நிறுத்த எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற வங்கி ஊழியர்கள் சங்க சம்மேளன கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, வங்கி ஊழியர்களின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் அஸ்வினி ராணா தெரிவித்தார்.

வங்கித்துறையில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்களுக்கு எதிராகவும் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுவதாக அவர் கூறினார். கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து கிடப்பில் போடப்பட்டுள்ள சம்பள உயர்வு கோரிக்கையை விரைவில் நிறைவேற்றக்கோரியும், ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய திட்ட மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

04.12.2013 (புதன்) - டிட்டோஜேக் கூட்டமைப்பு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம மாவட்டத் தலைமையேற்போர் : ்.

I). தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-
i) சிவகங்கை ii) தர்மபுரி iii) இராமநாதபுரம் iv) பெரம்பலூர்
v) திருவள்ளூர் .

II). தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-
i) நாமக்கல் ii) ஈரோடு iii) திருப்பூர் iv) மதுரை v).சென்னை ஆ

III)தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
i). நாகை ii)திருவாரூர் iii) கிருஷ்ணகிரி iv) திருநெல்வேலி

IV) தமிழக ஆசிரியர் கூட்டணி-
i) அரியலூர் ii) திண்டுக்கல் iii) சேலம் iv) நீலகிரி

V) தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-
i) தேனி ii) காஞ்சிபுரம் iii) விருதுநகர் iv) தூத்துக்குடி v) கன்னியாகுமரி

VI) தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-
i)தஞ்சாவூர் ii) திருச்சி iii) புதுக்கோட்டை iv) கரூர்

VII)தமிழ்நாடு தொடக்க ந.நி.பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்
i) திருவண்ணாமலை ii) வேலூர் iii) விழுப்புரம் iv)கடலூர்

கோரிக்கைகள் :
1. தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊதிய விகிதம் - 01.01.2006 முதல் வழங்கிட வேண்டும்.

2. பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை இரத்து செய்திட வேண்டும்.

3. ஆறாவது ஊதியக் குழுவில் தேர்வுநிலை, சிறப்பு நிலைக்கு தனியாக ஊதிய விகிதமும், தர ஊதியமும், நிர்ணயம் செய்திட வேண்டும்.

4. (அ) FR 22 ன் படி பதவி உயர்வுக்கு 6% வழங்கிட வேண்டும்

(ஆ) FR 4(3) விதியை நடைமுறைப்படுத்திட வேண்டும்.

5. ஆசிரியர் தகுதித் தேர்வை கைவிட வேண்டும்.

6. இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி தொடக்கக் கல்வியில் தமிழ்வழி கல்வி முறை தொடர்ந்திட வேண்டும்.

7 . அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் தமிழ் ஆசிரியர், வரலாறு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, பதவி உயர்வின் மூலம் நிரப்பிட வேண்டும்.

மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு திட்டம் தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.8 ஆயிரம் செலவு -TNPTF

பள்ளிக் கல்வித் துறையில் அரசு 16 வகையான இலவச திட்டங்களை செயல்படுத்துகிறது. இது போக மாணவர்கள் பற்றிய முழு விபரங்களை பதிவு செய்யும், தகவல் மேலாண்மை முறைமை (இஎம்ஐஎஸ்) திட்டத்தையும் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களின் விபரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அந்த கார்டு மூலம் மாணவர் பற்றிய முழு விபரங்களையும் எளிதாக கண்டறிய முடியும

்.தற்போது, இந்த பணிகளுக்காக தமிழகம் முழுவதும் ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் விபரங்கள் 30.9.12ம் தேதி அடிப்படையில் சேகரிக்கப்பட்டுள்ளது. இவற்றை இணையதளத்தில் பதிவு செய்ய ஒரு மாணவருக்கு ரூ.15 வீதம் தலைமை ஆசிரியருக்கு செலவாகியுள்ளது. அதன்பின், மேலும் மாணவர்கள் விபரங்களை சேர்ப்பதற்கு ஒவ்வொரு பள்ளிக்கும் குறுந்தகடு வழங்கப்பட்டு, 2 நாள் அவகாசத்தில் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான செலவையும் பள்ளி தலைமை ஆசிரியர்களே செய்தனர்.இந்நிலையில் 30.4.2013 நிலவரப்படி தகவல் தருமாறு கோரப்பட்டது.

மேலும், மாணவர்களின் புகைப்படமும், ஆதார் எண்ணும் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் ஒரு மாணவருக்கு மேலும் ரூ.20 என்ற வீதம் தலைமை ஆசிரியர்கள் செலவு செய்துள்ளனர்.இது தவிர ஆரம்பப்பள்ளிகளில் கடந்த ஆண்டு 5ம் வகுப்பும், நடுநிலைப்பள்ளிகளில் 8ம் வகுப்பும் முடித்த மாணவர்கள் உயர்கல்விக்காக வேறு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

இந்த வகை மாணவர்களின் புகைப்படத்தையும், ஆதார் எண்ணையும் சேகரிப்பதில் மிகுந்த நடைமுறை சிக்கல்களை தலைமை ஆசிரியர்கள் சந்தித்துள்ளனர். சேகரிப்பதற்கான கால அவகாசமும் வழங்கப்படவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்பட்டதாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன், செயலாளர் சுடலைமணி உள்ளிட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.இந்த பணிகளை செய்வதற்கு கிராமப்பகுதியில் வசதி குறைவாக உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், புகைப்பட கலைஞர் மற்றும் கணினி படித்தவர்களை தேடி அலையும் நிலை உள்ளதால் கற்றல், கற்பித்தல் பணியும் பாதிக்கப்படுகிறது என அவர்கள் கூறுகின்றனர்.

அதேபோல பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் புத்தகப்பை, புத்தகங்கள், காலணி, சீருடை போன்ற பெரிய இலவச திட்டங்களை கல்வித்துறை செயல்படுத்தும் போது அவற்றை பள்ளிகளுக்கு எடுத்து செல்வதற்கான வழிச் செலவினங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் அரசை வலியுறுத்தி உள்ளனர்.