ஆசிரியர்களுக்கு ஏற்படுகிற இழப்புகளும்..,ஒவ்வொரு கல்வியாண்டிற்கும் 365 நாட்கள்(365/21.47=17days)அதற்கு 17 நாட்கள் EL வழங்கப்படுகின்றது தற்போது ஒரு கல்வியாண்டில் 21 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்திருந்தால் (365-21=344,344/21.47=16days)16 நாட்கள் EL வழங்கப்படுகின்றது அதே சமயத்தில் ஒரு கல்வியாண்டில் வெறும் 3 நாட்கள் மட்டுமே ML எடுத்தவர்களுக்கும்(365-3=362,362/21.47=16.86)16.86 என்பதில் தசம இலக்கம் கணக்கில் கொள்ளப்படாமல் 16 நாட்கள் மட்டுமே EL வரவு வைக்கப்படுகின்றது,...3 நாள் Ml க்கு 1 நாள் EL கழிக்கலாமா?இதே போல் ஒவ்வொரு கல்வியாண்டிலும் குறைவான மருத்துவ விடுப்பிற்கெல்லாம் (2முதல் 10நாட்கள்)1நாள் ஈட்டிய விடுப்பு கழிக்கப்பட்டு அதனால் ஒவ்வொரு ஆசிரியருக்கும் 3முதல் 10 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பு இழப்பு ஏற்படுகிறது.....21நாட்கள் மருத்துவ விடுப்புக்கு மட்டுமே 1ஈட்டிய விடுப்பு கழிக்கப்பட்டு இழப்பு ஏற்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு சார்ந்த ஆசிரியர் கணக்கில் மீள வரவு வைக்கப்படல் வேண்டும்.
Tuesday, December 20, 2016
ஈட்டிய விடுப்பிலிருந்து மருத்துவ விடுப்பை கழித்தலில் குறைபாடுகளும்.
_NCERT புத்தகம் முழுவதும்_
https://www.dropbox.com/sh/daeo2ngnp47cd1i/AABH-an3yFktkDtdReYbopiOa?dl=0
_NCERT E BOOK APP_
https://play.google.com/store/apps/details?id=com.philoid.ncert&hl=en
_கைபேசியில் புத்தகம் படித்தால் கண்ணு வலிக்கா இந்த app பயன்படுத்துங்கோ_
https://play.google.com/store/apps/details?id=com.urbandroid.lux&hl=en
_புத்தகம் படிக்க எந்த pdf READER பயன்படுத்தலாம் யோசிக்கவேண்டாம் இதுதான் பெஸ்ட்_
https://play.google.com/store/apps/details?id=com.xodo.pdf.reader&hl=en
OR
https://play.google.com/store/apps/details?id=com.foxit.mobile.pdf.lite&hl=en
வாட்ஸ்-அப் வழக்கும், நீதிமன்ற தீர்ப்பும்..!
2018-ம் ஆண்டு முதல் சி.பி.எ.ஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது
2018-ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது என சி.பி.எஸ்.இ. நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது. சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்தில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டு வரை பொதுதேர்வு நடைப்பெற்றது.
ஆனால் பல்வேறு காரணங்களுக்கு இந்த பொது தேர்வு நடைமுறை 2010-ஆம் ஆண்டோடு கைவிடப்பட்டது. இதனால் சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் நேரடியாக 12-ம் வகுப்பில் பொது தேர்வை ஏதிர்கொள்வதால் அவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக கல்வியாளர்கள் கருத்தை முன் வைத்தனர்.
இந்நிலையில், 2018-ம் ஆண்டு முதல் சி.பி.எ.ஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது என்றும், பொதுத்தேர்வை கட்டாயமாக்கும் பரிந்துரையை சி.பி.எஸ்.இ. நிர்வாகக்குழு ஏற்றதாத தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய நிலையில் சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் தேர்வு எழுதலாம் எனவும் கூறப்பட்டுள்ளது
Monday, December 19, 2016
தேர்வு மாற்றம்
டிச. 7 மற்றும் 8-ல் தள்ளிவைக்கப்பட்ட 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு ஜன. 2, 3 தேதிகளில் நடைபெறும்-பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன்
#HSC
டிச.14-ம் தேதி #Chennai, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட +2 அரையாண்டு தேர்வு, ஜன.5-ல் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை
தொழில்கல்வி பாடத்திட்டம் முடக்கம்
: கோவையில், 35 அரசுப் பள்ளிகளில், தொழில்கல்வி
ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்ற பின், காலிப் பணியிடங்களை நிரப்பாததால், பாடத்திட்டத்தை முடக்கியதாக புகார் எழுந்துள்ளது.
கோவையில், 70 அரசு மேல்நிலைப்பள்ளிகளில், தொழில்கல்வி பாடத்திட்டம், கடந்த 1985ல் துவங்கப்பட்டது. அக்கவுன்ட் ஆடிட்டிங், டைப் ரைட்டிங், ஊட்டச்சத்து, மனையியல் உள்ளிட்ட, 12 தொழிற்கல்வி பாடப்பிரிவுகள், பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றன.
இப்பிரிவுகளுக்கு, 1990ல், ஆசிரியர் பணியிடம் நிரந்தரமாக்கப்பட்டது. அதற்கு பின், புதிய ஆசிரியர் பணியிடம் உருவாக்கவில்லை. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளிலும், தொழிற்கல்வி பாடத்திட்டம் கொண்டுவரவில்லை.
கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பாடத்திட்டம், வரப்பிரசாதமாக உள்ளது. இதில், பொது இயந்திரவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு, இன்ஜி., கவுன்சிலிங்கில், மெக்கானிக்கல் படிப்பு தேர்வு செய்ய, முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மேலும், 400 மதிப்பெண்கள் வரை, செய்முறை பகுதிகள் உள்ளதால், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம். இதனால், உயர்கல்வியில் சிறந்த கல்லுாரிகளில், மாணவர்களுக்கு சீட் கிடைக்கும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்கல்வி பாடத்திட்டத்தை, மற்ற பள்ளிகளில் விரிவுப்படுத்தாமல், பள்ளிக்கல்வித்துறை அலட்சியம் காட்டி வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட, புதிய கல்வி கொள்கை உள்ளீட்டில், தொழில்கல்வி பாடத்திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. ஆனால், மாநில அளவில், புறக்கணிக்கும் பாடத்திட்டமாக, தொழிற்கல்வி உள்ளது.
இப்பிரிவில், பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடத்தில், புதிய ஆசிரியர்கள் நியமிப்பதில்லை. இதனால், ஆசிரியரில்லாத பாடப்பிரிவுகளுக்கு, தற்காலிக பணி அடிப்படையில், ஆசிரியர்கள் நியமித்தால், ஊதியம் வழங்குவதில், சிக்கல் ஏற்படுகிறது. நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, ஆசிரியரில்லாத பள்ளிகளில், தொழிற்கல்வி பாடப்பிரிவு முடக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, தொழிற்கல்வி பாட ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும், தொழில்கல்வி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு இல்லை. கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்காததால், பணி ஓய்வு பெறும் வரை, ஒரே பள்ளியில் கற்பிக்கும் நிலை நீடிக்கிறது.
மேலும், கோவையில், குறிச்சி, தொண்டா முத்துார், மதுக்கரை உள்ளிட்ட, 35 பள்ளிகளில், ஆசிரியர் ஓய்வு பெற்றதால், பாடப்பிரிவு முடக்கப்பட்டுள்ளது. மற்ற பள்ளிகளிலும், விரைவில் ஆசிரியர்கள், ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர்.
காலிப்பணியிடத்தை நிரப்பாமல், தொடர்ந்து கல்வித்துறை மெத்தனம்காட்டினால், தொழில்கல்வி பாடத்திட்டமே இல்லாத நிலை உருவாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
பொதுத்தேர்வு முறைகேடு தடுக்க தனியார் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு
பிளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடு நிகழாமல் தடுக்க, தனியார் பள்ளி தேர்வு மையங்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. ஆண்டு தோறும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், 2,500 மையங்களில் நடத்தப்படும். இரு வகுப்புகளிலும், 20 லட்சம் பேர் எழுதும் இத்தேர்வு, பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளுடன் நடத்தப்படுகிறது.
ஆனால், தேர்வு மையங்கள் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலான நிபந்தனைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. தங்களுக்கு தேவையான வசதிகள் வேண்டும் என்பதற்காக, அதிகாரிகளும், ஆசிரியர்களும், தனியார் பள்ளிகளை கண்டு கொள்வதில்லை. இதனால் கடந்த ஆண்டுகளில், பல தனியார் பள்ளி தேர்வு மையங்களில் காப்பியடித்தல், ஆள் மாறாட்டம் போன்ற முறைகேடுகளும், வினாத்தாள், 'லீக்' சம்பவங்களும் நடந்தன. இது தொடர்பாக, உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், தனியார் பள்ளிகளில் முறைகேடுகள் நிகழாமல் தடுப்பதற்கான, பல புதிய நிபந்தனைகள் விதிக்க, தேர்வுத்துறை ஆலோசித்து வருகிறது.
அதாவது, முறைகேடு புகாருக்கு ஆளாகும் பள்ளியின் தேர்வு மையங்களை நிரந்தரமாக ரத்து செய்யப்படும்; மையங்களில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; விதிமீறல் நிரூபணமானால், பள்ளி அங்கீகாரத்தை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்பது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படலாம் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கல்வித்துறையில் முடங்கிய 'ஆன்லைன்' தகவல் பரிமாற்றம்
தமிழக கல்வித்துறையில் ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் உத்தரவு, அறிவிப்பு, அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் தகவல்கள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் செயலாளர், இயக்குனர் அலுவலகங்களில் இருந்து 'ஆன்லைன்' மூலம் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வரவேண்டிய சுற்றறிக்கை, உத்தரவு, அறிவிப்புகள், தபால்கள் குறைந்து விட்டன. இதனால் கல்வி அலுவலகப் பணிகளும் மந்தமாகிவிட்டது.
'ஆன்லைனில்' தினமும் கற்றல் கற்பித்தல், நலத் திட்டங்கள் வழங்கல், ஆசிரியர்களுக்கான சுற்றறிக்கை, உத்தரவுகள், அறிவுறுத்தல், நலத் திட்டம் தொடர்பான விவரம், புகார்கள் மீதான விசாரணை என பல தகவல் பரிமாற்றங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு 'ஆன்லைன்' மற்றும் தபால் மூலம் அனுப்பப்படும். பெரும்பாலும் உடனுக்கு உடன் வேண்டிய தகவல்கள்'ஆன்லைனில்' தான் கேட்கப்படும். அதற்கு கல்வி அலுவலகங்கள் மூலம் உடன் பதில் அனுப்பப்படும்.
ஆனால் பத்து நாட்களுக்கும் மேலாக இதுபோன்ற 'ஆன்லைன்' தகவல் பரிமாற்றம் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டிச., 7, 8ல் நடக்க வேண்டிய அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதற்கு மாற்றாக அத்தேர்வுகள் எப்போது நடத்த வேண்டும் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. நலத் திட்டம் வழங்குவதற்கான வழிகாட்டுதல், கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையால் கல்வித்துறை பணிகள் பாதிக்கிறது என ஆசிரியர்கள்தெரிவித்தனர். இதுகுறித்து உயர் கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதா இறந்த பின் டிச., 6, 7, 8ம் தேதிகள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்போது 7, 8ம் தேதிகளில் நடக்க இருந்த அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதன் பின் 9ம் தேதியில் இருந்து, இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய வழக்கமான அறிவிப்பு, தபால் தகவல் மற்றும் 'ஆன்லைன்' அறிவுறுத்தல்களும் குறைந்து விட்டன. சாதாரண மற்றும் பதிவு தபால்களும் குறைந்த எண்ணிக்கையிலேயே வருகின்றன.இதையடுத்து வர்தா புயல் சீற்றத்தாலும் சென்னையில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. மின் கம்பங்கள், அலைபேசி டவர்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகின. இதனால் இணையதள சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 'ஆன்லைன்' தகவல் பரிமாற்றங்களும் குறைந்து விட்டன. இதே சூழ்நிலை அனைத்து துறைகளிலும் உள்ளன, என்றார்.
வருமான வரி செய்தி தவறானது-விளக்கம்
வருமான வரி செலுத்துவதில் மாற்றம் ஏற்பட்டதாக சில ஆங்கில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. அதன்படி, வருமானவரி செலுத்தும் அடிப்படை ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. அதே போல், அனைத்து விதமான வருமானங்களுக்கும் வரி விகிதம் மாற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதை அரசு செய்தி தொடர்பாளர் ஃப்ராங்க் நோரோன்ஹா மறுத்துள்ளார். இதுகுறித்து ANI-க்கு பேட்டியளித்துள்ள அவர், "அந்த செய்தி பொய்யானது மற்றும் அடிப்படை ஆதரமற்றது" எனக்கூறியுள்ளார்.
Sunday, December 18, 2016
ப்ளஸ் 2,பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களே உஷார்.... பெயர், பிறந்த தேதியை சரி பாருங்க: கல்வித் துறை அறிவுரை
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், மதிப்பெண், டிசி உள்ளிட்ட வற்றில் இடம் பெறும் பெயர், இனிஷியல், பிறந்த தேதி ஆகியவை சரியாக உள்ளதா என்பதை திருத்தம் செய்வதற்கான கடைசி வாய்ப்பை தேர்வுத் துறை வழங்க உள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 8ம் தேதியும் தொடங்க உள்ளன. இத்தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தயாரித்தனர். அவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த பட்டியல்கள் தற்போது தேர்வுத்துறையில் உள்ளது. அவற்றின் அடிப்படையில் கடந்த 16ம் தேதி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், மாணவர்களின் இனிஷியல் பிரச்னை, பிறந்த தேதி, வயது, ஊர், பெற்றோர் பெயர் உள்ளிட்டவற்றில் சில சந்தேகங்கள் இருப்பதாக தேர்வுத்துறை கருதுகிறது. அதனால் பள்ளிகள் மூலம் வரப் பெற்ற மாணவர்கள் பட்டியல்களை திரும்பவும் பள்ளிகளுக்கு அனுப்பி உரிய முறையில் திருத்தம் செய்ய தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. திருத்தம் செய்ய இதுதான் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்பதால், மாணவர்கள் தங்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.
பிஎப் வட்டி விகிதம்: 8.8 சதவீதமாக தொடர வாய்ப்பு
நடப்பு நிதி ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.8 சதவீதமாக தொடர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015-16 நிதி ஆண்டிலும் இதே வட்டி விகிதம் இருந்தது.
பிஎப் வட்டி விகிதம் நிர்ணயம் செய்வதற்காக, அறங்காவலர் குழு கூட்டம் இன்று பெங்களூருவில் நடக்கிறது.
பிஎப் அமைப்புக்கு நடப்பு நிதி ஆண்டில் ரூ.39,084 கோடி வருமானம் கிடைக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. 8.8 சதவீதம் வட்டி கொடுக்கும் பட்சத்தில் 383 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும். மாறாக 8.7 சதவீதம் வட்டி கொடுக்கும் பட்சத்தில் ரூ.69.34 கோடி உபரி ஏற்படும். ஆனால் ஏற்கெனவே உபரியாக இருக்கும் தொகையை பயன்படுத்தி 8.8 சதவீத வட்டி வழங்க பிஎப் அமைப்பு முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. சிறு சேமிப்பு திட்டங்களுக்காக வட்டி விகிதம் கடந்த செப்டம்பரில் 0.1 சதவீதம் அளவுக்கு மத்திய அரசு குறைத்தது.
அதனால் பல முதலீட்டு திட்டங்களின் வட்டி விகிதம் குறைந்தது. இதற்கு இணையாக வட்டி கொடுக்க பிஎப் அமைப்பிடம் மத்திய அரசு வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பிஎப் அமைப்பு 8.8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்ய முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. தவிர நிர்வாக செலவுகளை 0.85 சதவீதத்தில் இருந்து 0.65 சதவீதமாக குறைக்க திட்டமிட்டிருக்கிறது. இந்த பரிந்துரை அமல்படுத்தப்படும் பட்சத்தில் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி மீதமாகும். முன்னதாக கடந்த நிதி ஆண்டில் வட்டி விகிதத்தை 8.7 சதவீதமாக குறைக்க வேண்டும் என மத்திய அரசு பரிந்துரை செய்தது. ஆனால் தொழிற்சங்கங்களின் போராட்டத்துக்குப் பிறகு 8.8 சதவீதமாக வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டது.
3ம் பருவப் பாடப்புத்தகம் மாணவர்களுக்கு 28ம் தேதிக்குள் வினியோகிக்க உத்தரவு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு பாடப்புத்தக சுமையை குறைப்பதற்காக முப்பருவ முறை நடைமுறையில் உள்ளது. இதையடுத்து பாடப்புத்தகங்கள் 3 பருவங்களாக பிரிக்கப்பட்டு தனித்தனியே அச்சிட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான இரண்டு பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு தற்ேபாது இரண்டாம் பருவத் தேர்வுகள் நடக்கின்றன. இந்நிலையில், வரும் 24ம் தேதி முதல் கிறிஸ்துமஸ் விடுமுறை வருகிறது. ஜனவரி மாதம் தான் பள்ளிகள் இயங்கும் என்பதால் 3ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். முன்னதாக 52 தலைப்புகளில் சுமார் 6 கோடி இலவச பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் பாடப்புத்தகங்களை பெற்று 22க்கும் மேற்பட்ட கிடங்குகளில் வைத்துள்ளனர். இன்னும் சில மாவட்டங்களுக்கு புத்தகங்கள் சென்று சேரவேண்டிய நிலை உள்ளது. இரண்டு நாட்களில் முழுமையாக புத்தகங்கள் சென்று சேர்ந்துவிடும். ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கும் போது அனைத்து மாணவர்களுக்கும் இலவச புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், 28ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்களை அனுப்ப மாவட்ட கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
Saturday, December 17, 2016
பிளஸ் 2 தனித்தேர்வு 19ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ்-2 தனித்தேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்புவோரிடம் இருந்து ‘ஆன்-லைனில்’ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டு உள்ள அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு சென்று வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
தனித்தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை ‘ஆன்-லைனில்’ பதிவு செய்திட கல்வி மாவட்ட வாரியாக தனித்தனியே சேவை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டு உள்ள சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ‘ஆன்லைனில்’ விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான அறிவுரை ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.
ஒப்புகை சீட்டு
‘ஆன்-லைனில்’ விண்ணப்பத்தை பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசு தேர்வு துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்ய முடியும். எனவே ஒப்புகைச் சீட்டை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டும்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்கு தேர்வு எழுத வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்த பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காலவரையற்ற போராட்டம்: அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான, அரசு உத்தரவை வெளியிடாவிட்டால், ஜனவரியில் நடைபெறும் மாநில மாநாட்டில், காலவரையற்ற போராட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்,'' என அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி தெரிவித்தார்.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் சங்கம் சார்பில் திருமங்கலத்தில் நடந்த ஓய்வூதியர் தின விழாவில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 2003ம் ஆண்டிற்கு பின்னர், அரசு ஊழியர் சங்க அமைப்புகளின் சார்பில் வலுவான போராட்டம் நடத்தப்படவில்லை. அரசு ஊழியர்களையும், பெண் ஊழியர்களையும், தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களையும் ஒன்று திரட்டுவதில் பிரச்னையும், பலகீனமும் உள்ளது. அரசு நிர்வாக பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்களின் உண்மை நிலை மற்றும் கோரிக்கை குறித்து முறையாக ஆட்சியாளர்களிடம் கொண்டு செல்வதில்லை. அவர்கள் ஆட்சியாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடைவெளி ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையை மாற்ற நாம் முன்பு போல் ஒன்று திரள வேண்டும். நமக்குள் கூட்டு சக்தியை உருவாக்க வேண்டும். பெண் ஊழியர்கள் உட்பட அத்தனை அரசு ஊழியர்களும் சென்னையில் ஒன்று திரண்டால், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்து விடலாம். 3.5 லட்சம் தொகுப்பூதிய பணியாளர்களும் ஒன்று திரண்டால் தொகுப்பூதிய முறையை மாற்றி விடலாம். புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகளில் 20 சதவீதம் உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்குவது, தொகுப்பூதிய திட்டத்தை ஒழிப்பது, மீண்டும் நிர்வாக தீர்ப்பாய சிறப்பு குழு அமைப்பது தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
இவை நிறைவேறாவிட்டால், திருவண்ணாமலையில் ஜனவரி 6, 7, 8, தேதிகளில் நடக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில், காலவரையற்ற போராட்டம் நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
அரசு பள்ளிகளுக்கு கழிப்பறை வசதி : பின்னலாடை துறையினர் முடிவு
அரசு பள்ளிகளுக்கு, கழிப்பறை வசதி செய்து கொடுக்க, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:
ஆயத்த ஆடை நிறுவனங்கள், பெறும் லாபத்தில், 2 சதவீதத்தை, தனித்தனியே சிறிய அளவிலான பயன்பாடுகளுக்கு செலவிடுகின்றன. அனைத்து நிறுவனங்களில் இருந்தும் இந்த தொகையை பெற்று, சமூக பயன்பாட்டு நிதியாக சேமிக்கப்படும். வளர்ச்சி திட்டங்களுக்கான செலவினங்கள் அடிப்படையில், 'பையர்'கள், பையிங் ஏஜன்சிகளிடம் இருந்தும், நிதியுதவி பெறப்படும். திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கு தொழிலாளர்கள் முதுகெலும்பாக உள்ளனர்.
அனைத்து தேவைகளுக்கும் அரசு உதவியை நாடுவதை விட, தொழில் துறையினர் இணைந்தால், சில வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையில், சுகாதாரத்துக்கு முதல் முக்கியத்துவம் அளித்து, அரசு, மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரப்படும். கல்வித்துறை வாயிலாக, கழிப்பறை இல்லாத பள்ளிகள் விபரங்கள் சேகரிக்கப்படும். வரும் ஜன., முதல், இந்த பணியை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.