இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, June 15, 2015

2015-16ஆம் கல்வியாண்டிற்கான தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கான வேலை நாட்கள் விவரம் ›

குரூப் 1பதவிக்கு 10நாளில் தேர்வு அறிவிப்பு

குரூப் 4 பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெறும். குரூப்1 பதவிக்கு இன்னும் 10 நாளில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் இளநிலை உதவியாளர் (பிணையம்) ( காலி பணியிடம் 39), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது)- 2133, தட்டச்சர்-1683, சுருக்கெழுத்து தட்டச்சர்-331, வரித் தண்டலர்-22, வரைவாளர்-53, நில அளவர்-702 உள்ளிட்ட 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை கடந்த டிசம்பர் 21ம் தேதி நடத்தியது. இதில், மதிப்பெண், தரவரிசை நிலை அடிப்படையில் 7,030 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று காலை சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற இடத்திற்குள் தேர்வாளர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. சான்றிதழ் சரிபார்ப்பு பணியை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியம் அளித்த பேட்டி: சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒவ்வொரு நாளும் 200 பேர் வீதம் அழைக்கப்பட்டுள்ளனர்.

வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சான்றிழ் சரிபார்ப்பு பணி நடைபெறாது. குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர்(19 இடம்), போலீஸ் டிஎஸ்பி- 26, வணிகவரித்துறை உதவி ஆணையர்- 21, மாவட்ட பதிவாளர்- 8 உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்னும் 10 நாட்களில் வெளியிடப்படும். அதே போல, நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள இன்ஜினீயர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு பாலசுப்பிரமணியம் கூறினார். இன்ஜினியர் ரிசல்ட் டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு நடத்திய 98 இன்ஜினியர் பணியிடத்துக்கான ரிசல்ட் இம்மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலசுப்பிரமணியம் கூறினார்.

Sunday, June 14, 2015

பிளஸ் 2 மறுமதிப்பெண்,மறுகூட்டல் விண்ணப்பித்தவர் பதிவெண் பட்டியல் இன்று வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் மறு கூட்டல், தேர்வுத் தாள் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண் பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 15) வெளியிடப்பட உள்ளது. scan.tndge.in என்ற இணையதளத்தில் மாலை 4 மணி முதல் மாணவர்கள் இந்தப் பட்டியலைக் காண முடியும். 2015 மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வை 8 லட்சத்து 82 ஆயிரத்து 260 பேர் எழுதினர்.

இவர்களில் மதிப்பெண் மறு கூட்டல், விடைத்தாள் நகல் கோரி ஒரு லட்சத்து 566 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் மதிப்பெண் மறு கூட்டலுக்கு 2,835 பேர், தேர்வுத்தாள் மறு மதிப்பீடுக்கு 3,502 பேர் என மொத்தம் 6,337 பேர் விண்ணப்பித்தனர். இதில் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களில் 2,782 பேரின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் 696 பேரின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஜூன் 16-இல் மதிப்பெண் மாற்றம் தெரியும்: மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண் பட்டியல் வரும் திங்கள்கிழமை (ஜூன் 15) மாலை 4 மணிக்கு scan.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மதிப்பெண் மாற்றம் இல்லாத பதிவெண்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்காது.

மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) காலை 10 மணி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தேர்வுப் பதிவெண், பிறந்த தேதி விவரங்களைப் பதிவு செய்து, திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தாற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்று முடிகிறது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி சிறுபான்மை அந்தஸ்து பெற்ற பள்ளிகள் தவிர தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில், மொத்த இடங்களில் 25 சதவீதத்தை 6 முதல் 14 வயது வரையிலான மாணவர்களுக்கு இலவசமாக ஒதுக்க வேண்டும்.

இந்நிலையில் இலவச இடங்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவிக்கக் கோரி சமூக ஆர்வலர் 'பாடம்' நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதையடுத்து இலவச இட விவரங்களை இணைய தளத்தில் வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தின் டttணீ:/tணட்ச்tணூடிஞிண்ஞிடணிணிடூண்.ஞிணிட்/ இணையதளத்தில் இலவச இடங்களின் எண்ணிக்கை மாவட்டம் மற்றும் பள்ளி வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.

இதில் 32 மாவட்டங்களிலுள்ள 3,720 பள்ளிகள் இடம் பெற்றன. சென்னையில் 371 தொடக்கப் பள்ளிகளில் 11,130 இடங்களில் 2,903 இடங்களில் இலவச சேர்க்கை ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்றுடன் முடிகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான படிவத்தை இலவசமாக பெறலாம். அதை உரிய ஆவணங்களுடன் நிரப்பிக் கொடுத்து ஒப்புகைச்சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.'பள்ளிகள் தவிர மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் ஆகியவற்றிலும் விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து தரலாம்' என மெட்ரிக் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

விண்ணப்பப் பரிசீலனை விண்ணப்பத் தேர்வு குலுக்கல் மற்றும் இறுதிப் பட்டியல் வெளியிடும் தேதியை மெட்ரிக் இயக்குனரகம் ஓரிரு நாளில் அறிவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

எந்த வங்கியிலும் கல்விக்கடன் கேட்கலாம்

சேவை எல்லைகளைக் கடந்து, கல்விக் கடன் கேட்டு வரும் அனைத்து விண்ணப்பங்களையும் ஏற்க வேண்டும்' என, வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.'கல்விக் கடனைப் பெற, பெற்றோர் அல்லது மாணவர் கள், கணக்கு வைத்துள்ள வங்கி கிளைகளையே அணுக வேண்டும்; வங்கிக் கணக்கு இல்லாதோர், வீட்டிற்கு அருகே உள்ள கிளையைத் தான் அணுக வேண்டும்' என, வங்கியாளர்கள் கூறுகின்றனர்

.மேலும், 'ஒவ்வொரு வங்கி கிளைக்கும், அதற்கான சேவைப்பகுதி உள்ளது. சேவைப் பகுதிக்குள் வசிப்பவர்களுக்கு மட்டுமே, அக்கிளைகள் கடன் வழங் கும்' எனவும், வங்கியாளர் கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், வட்டார அலுவலர்களுக்கு, இந்தியன் வங்கி அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'கல்விக்கடன் பெற, சேவைப் பகுதி எல்லை களை வலியுறுத்தக் கூடாது. கல்விக் கடன் கேட்டு வரும் அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலிக்க வேண்டும்' என, அறிவுறுத்தி உள்ளது

.இதுதொடர்பாக, கல்விக் கடன் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் பிரைம் பாயின்ட் சீனிவாசன் கூறியதாவது:வங்கியாளர்கள், பெற் றோர், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம், தர்மபுரியில் நடந்தது. அப்போது, சேவைப் பகுதிகளைக் கூறி, கல்விக் கடன் விண்ணப்பங்களை, வங்கிக் கிளைகள் ஏற்க மறுப்பதாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து, அம்மாவட்ட முன்னோடி வங்கியான, இந்தியன் வங்கி மண்டல மேலாளர், 'இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இதற்கிடையில், இந்தியன் வங்கி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருக்கு, இதுபற்றி கடிதம் எழுதினேன். இந்தியன் வங்கி அனுப்பிய பதில் கடிதத்தில், 'சேவைப் பகுதிகளைக் கணக்கில் கொண்டு, கல்விக் கடன் விண்ணப்பங்களை ஏற்க மறுக்கக் கூடாது; கல்விக் கடன் கேட்டு வரும் அனைத்து விண்ணப்பங்களையும், பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளோம்' என, தெரிவித்து உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்

Saturday, June 13, 2015

ஏ.டி.எம் கார்டு தேவை கவனம்

ஏ. டி.எம். கார்டு என்பது நமக்கு மிகவும் வசதியாகிவிட்டது. அதுபற்றி தனியாகக் கூற வேண்டியதில்லை. ஆனால் எது மிகவும் வசதியாக இருக்கிறதோ, அதில் ஜாக்கிரதையாகவும் இருப்பது அவசியம். இல்லாவிட்டால், பாதிப்பும் பலமாக இருக்கும். இந்த விதி, ஏ.டி.எம். கார்டுக்கும் பொருந்தும். ஏ.டி.எம். கார்டு தொடர்பாக எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?

ஒரு பார்வை… கார்டு தொலைந்தால்… சிலர் ஏ.டி.எம். கார்டை தொலைத்துவிட்டு, அது தொலைந்தது கூடத் தெரியாமல் பல மணிநேரம் இருப்பார்கள். பிறகு ஞாபகம் வந்து தேடிப் பார்த்துவிட்டு, வங்கியின் உதவி எண்ணுக்கு தகவல் சொல்வதற்குள், கிட்டத்தட்ட நான்கு, ஐந்து முறையாவது அந்த கார்டு பயன்படுத்தப்பட்டு பணம் திருடப்பட்டிருக்கும். ‘பின் நம்பரை’ அறிவதற்கு எல்லாம் இன்று பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. எனவே அலட்சியமாக இருக்காமல், ஏ.டி.எம். கார்டு தொலைந்துவிட்டால் அதை உடனே சம்பந்தப்பட்ட வங்கிக்கு தெரியப்படுத்தி கார்டை ‘பிளாக்’ செய்வது மிகவும் முக்கியம்.

இப்படியும் நடக்கலாம் சில சமயங்களில் ஏ.டி.எம். மையத்தில் நம் பின்னால் நிற்கும் ஆட்களோ, காவலாளி போன்று தோன்றுபவர்களோ இயல்பாக எட்டிப் பார்த்து நம் பாஸ்வேர்டை தெரிந்து வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே அதற்கு இடம்கொடாதீர்கள். ஏ.டி.எம். மையத்தை விட்டு வெளியில் வரும்போது, நம்மிடம் கார்டு இருக்கிறதா என்று உறுதி செய்துகொண்டு வெளியேறுவது நல்லது. சில நேரங்களில் உங்கள் செல்போன் எண்ணுக்குச் சிலர் அழைத்து, பின் நம்பர் உள்ளிட்ட தகவல்களை ‘பாதுகாப்புக்காக’ விசாரிப்பதற்காக கூறி கேட்பார்கள். யோசிக்காமல் நாம் அந்தத் தகவல்களை அளித்துவிட்டால், உடனடியாக டூப்ளிகேட் கார்டை தயாரித்து மோசடியில் ஈடுபடக்கூடும். வங்கி அல்லது அது சார்ந்த நிறுவனங்களிடம் இருந்து இதுபோல தொலைபேசியில் விசாரிப்பதில்லை. எனவே, ஒரு நொடி கூட யோசிக்காமல் மறுத்துவிடுங்கள்.

அதேபோல, நமது ஏ.டி.எம். கார்டை பிறரிடம் கொடுத்து பணம் எடுக்கச் சொல்வதையும் தவிர்க்க வேண்டும். ‘பின் நம்பர்’ கவனம் முடிந்தவரை ஏ.டி.எம். பின் நம்பரை யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத மாதிரி அமைத்திருப்பது அவசியம். பிறந்த நாள், திருமண நாள், வண்டி நம்பர், அலுவலக தொலைபேசி எண் போன்ற எளிதில் கணிக்கக்கூடிய எண்களைத் தவிர்க்க வேண்டும். பாஸ்வேர்டு மறந்துவிடும் என ஏ.டி.எம். கார்டின் பின்புறத்திலேயே அதை எழுதிவைக்க வேண்டாம். ‘ஸ்கேனிங்’ திருட்டு நாம் பயன்படுத்தும் ஏ.டி.எம். கார்டு பிளாஸ்டிக்கால் ஆனது. அதில் உள்ள ‘சிப்’பில்தான் விவரங்கள் பதிந்திருக்கும். ஒரிஜினல் கார்டை ஒரு கருவியில் செருகி, அதிலுள்ள தகவல்களை காப்பி எடுத்துக்கொண்டு, அதை வேறொரு பிளாஸ்டிக் கார்டில் பதிவு செய்து டூப்ளிகேட் கார்டு தயாரித்து மோசடி செய்ய அதிக வாய்ப்பிருக்கிறது.

எனவே கார்டை கொடுத்து பில் போடச் சொல்லும் இடங்களில் ஒரு கண் வைத்திருங்கள். ஆன்லைனில்… ஏ.டி.எம். எண், பாஸ்வேர்டை இணையத்தில் அளித்து, டிக்கெட், ஷாப்பிங் என்று பல தேவைகளுக்கும் பயன்படுத்தும்போது, அது பாதுகாப்பான வலைதளமா என உறுதிப் படுத்திக்கொள்வது அவசியம். இணையத்தில் பாதுகாப்பில்லாத தளங்களில் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதை அறவே தவிர்த்துவிடுங்கள்.

பிளஸ் 2 தனித்தேர்வர்கள் நாளை முதல் நுழைவுச்சீட்டு


  அரசுதேர்வுகள் இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட அறிக்கை: நடைபெறவுள்ள ஜூன், ஜூலை-2015 பிளஸ் 2 தேர்வெழுத அரசு தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) நாளை முதல் www.tndge.in. என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

www.tndge.in. என்ற இணையதளத்துக்கு சென்று HIGHER SECONDARY EXAM JUNE-JULY-2015 pRIVATE CANDIDATE HALL TICKET PRINT OUT-ஐ கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது மார்ச் 2015 பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் அவர்களுடைய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறை தேர்வினை மீண்டும் செய்வதோடு எழுத்துத் தேர்விற்கும் வர வேண்டும்.

அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறை தேர்விற்கு வருகை தர வேண்டும். மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ் )பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறை தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தாம் தேர்வெழுதும் தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மாணவர் சேர்க்கைக்கு ஆதார் எண் கட்டாயமில்லை

புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பள்ளிகளில் நடந்து வருகிறது. பல மாவட்டங்களில், மாணவர் சேர்க்கையின் போது, பிறப்புச் சான்றிதழ் அல்லது பதிவுச் சான்றிதழ், இடைப்பட்ட வகுப்பாக இருந்தால் மாற்றுச் சான்றிதழ் ஆகியவை கேட்கப்படுகின்றன. அதேநேரம், மாணவர்களின் ஆதார் எண் மற்றும் ஆதார் அட்டை நகலும், பள்ளிகளில் கட்டாயம் கேட்கப்படுவதாகவும், ஆதார் எண் இல்லாதவர்களுக்கு சேர்க்கை தர மறுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலகங்களில், பெற்றோர் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு எச்சரிக்கை கடிதங்களை, கல்வித்துறை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். மாணவர் சேர்க்கைக்கு பிறப்புச் சான்றிதழ் அல்லது பதிவுச் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் தவிர, ஆதார் எண் அல்லது நகல் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளில் கழிப்பறையை பயன்படுத்த துப்புரவாளர் நியமனம்

தமிழக சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா, 110வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 'அரசு தொடக்க, நடுநிலை நகராட்சி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் கழிப்பறைகளை பராமரிக்க, உள்ளாட்சி துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இதற்கு, 160.70 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்' என்று தெரிவித்திருந்தார்.இதற்கான அரசாணை அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. கழிப்பறை பராமரிப்பு தொடர்பாக, உடனடியாக உள்ளாட்சி அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பணிகளை துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் 24ம் தேதி வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, வரும், 24ம் தேதி, ஒருநாள், நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க, சேலம் மாவட்ட தலைவர் சுவாமிநாதன் கூறியதாவது:

பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகள், 3,000க்கும் மேற்பட்டவை உள்ளன. இவை, 'சமஸ்தானம்' காலத்தில், அந்தந்த எல்லைக்கு உட்பட்ட மக்களின் தேவையை நிறைவேற்றவும், சேவையாற்றவும் உருவாக்கப்பட்டன; பின், அரசுடைமை ஆக்கப்பட்டன. மக்களின் தேவையறிந்து உருவாக்கப்பட்ட, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் டிகானிர் ஜெய்ப்பூர் உள்ளிட்ட, பல துணை வங்கிகளை, பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்க முயற்சி நடக்கிறது; அதை செய்யக் கூடாது

.அப்படி செய்வதால், வங்கியின் முக்கியத்துவமும், வங்கி துவங்கப்பட்ட நோக்கமும் இல்லாமல் போய்விடும். வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, நல்ல நிலையில் லாபத்தில் இயங்கும் துணை வங்கிகளை இணைக்க வேண்டிய அவசியமோ, கட்டாயமோ கிடையாது. துணை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து, வரும், 24ம் தேதி ஒருநாள், தேசிய அளவில், வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

மேத்ஸ்,பயாலஜி குருப்பில் சேர ஆர்வம் குறைவு

கடந்த ஆண்டு, உயிரியல் தேர்வு கடினமாக வந்ததின் எதிரொலியாக, பிளஸ் 1 சேர்க்கையில், 'மேத்ஸ், பயாலஜி' பிரிவில் சேரும் ஆர்வம், மாணவர்களிடையே குறைந்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில், பயாலாஜி தேர்வில் வினாத்தாள் மிக கடினமான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால், நன்கு படித்த மாணவ, மாணவியரும் தடுமாறும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சுயநிதி பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பிளஸ் 1 சேர்க்கையை பொறுத்தவரை, கணிதம், உயிரியல், வேதியியல், இயற்பியல் அடங்கிய தேர்வு செய்வதில், மாணவர்கள் முன்னுரிமை கொடுப்பது வழக்கம். ஏனெனில், இன்ஜினியரிங் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட எந்த பிரிவையும் தேர்வு செய்ய வசதியாக இருக்கும்.

இதனால், இந்த பிரிவில் சேர, அதிக போட்டியும் இருந்து வந்தது. நடப்பு கல்வியாண்டில்:ஆனால், கடந்த ஆண்டு வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் ஆகியவற்றால், கடந்த ஆண்டை விட, நடப்பு கல்வியாண்டில், மேத்ஸ், பயாலஜி அடங்கிய முதல் பிரிவில் சேர்வதற்கான ஆர்வம், மாணவ, மாணவியரிடையே கணிசமாக குறைந்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:மேல்நிலைக்கல்வியில், உயிரியல் பிரிவில், விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகிய இரு பாடங்கள் உள்ளன. இதில் விலங்கியல் பாடத்தை பொறுத்தவரை, 75 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுவதாக இருந்தாலும், 150 மதிப்பெண் அளவுக்கு பாடம் அதிக அளவில் உள்ளது.

அதாவது பியூர் சயின்ஸ் குரூப்பில் உள்ள விலங்கியல் தேர்வுக்கு, 150 மதிப்பெண்களுக்கு, 8 பாடம் படிக்க வேண்டும் என்றால், 'உயிர்-விலங்கியல்' தேர்வுக்கு, 75 மதிப்பெண்களுக்கு, 7 பாடங்கள் படிக்க வேண்டும். இதனால், சராசரியாக இருக்கும் மாணவர்களிடையே தடுமாற்றம் ஏற்படுகிறது.நான்கு பாடங்களிலும், 'சென்டம்' எடுக்க முடியும் என்ற மாணவர்களுக்கு, முதல் குரூப் எடுப்பதில், எவ்வித சிரமமும் இருப்பதில்லை. சராசரி மாணவர்களுக்கு, இயற்பியல், வேதியியல் பாடம் நடத்தும் ஆசிரியர்களும், 'உயிரியல்' எடுத்து ஏன் கஷ்டப்படுகிறீர்கள். கம்ப்யூட்டர் சயின்ஸூக்கு அதிக உழைப்பு தேவையில்லை' என, திசை திருப்பிவிடுகின்றனர். சிறந்த சாய்ஸ்:இதனால், சராசரியாக படிக்கும் மாணவர், இன்ஜினியரிங் செல்ல வேண்டும் என, ஆசைப்படும் பட்சத்தில், அவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் அடங்கிய குரூப் சிறந்த சாய்ஸாக உள்ளது. எம்.பி.பி.எஸ்., கிடைக்காவிட்டாலும், நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட மருத்துவத்துறை தான், என்னுடைய சாய்ஸ் எனக்கூறும் மாணவர்களுக்கு, விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல் அடங்கிய பியூர் சயின்ஸ் குரூப் கைக்கொடுக்கும்.

ஊரக பகுதிகளில், பியூர் சயின்ஸ் குரூப்பில் சேர, அதிக அளவில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். நகர்ப்புறங்களில், கடந்த ஆண்டை விட, நடப்பு ஆண்டு, உயிரியல், கணிதம் அடங்கிய குரூப்பில் சேர, ஆர்வம் குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Friday, June 12, 2015

கடந்தாண்டு பிளஸ் 2தேர்வெழுதியோர் இந்த ஆண்டு மருத்துவம் படிக்கலாமா?

சேலத்தை சேர்ந்த மாணவி ரம்யா என்பவர் சார்பாக அவர் தந்தை கருணாநிதி உள்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரியில் சேர விண்ணப்பித்துள்ளோம். ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு படித்த மாணவர்கள் பலர் குறைவாக கட் ஆப் மார்க் பெற்றுள்ளனர்.

இயற்பியல் பாடத்தில் குறைவான மாணவர்கள்தான் 200க்கு 200 மார்க் பெற்றுள்ளனர். அதுபோல உயிரியல் பாடத்திலும் குறைவான மாணவர்கள்தான் 200க்கு 200 மார்க் பெற்றுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் 200க்கு 200 மார்க் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு கட் ஆப் மார்க் அதிகமாக இருந்ததால் பல மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் இந்த ஆண்டு மருத்துவக்கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளனர். எனவே எங்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்களை அந்த மாணவர்களுக்கு கிடைத்து விடும்.

இதனால் நாங்கள் பாதிக்கப்படுவோம். எனவே கடந்த ஆண்டு மாணவர்கள் இந்த ஆண்டு விண்ணப்பித்தால் அதை ஏற்க கூடாது. அவர்களை தேர்வு செய்ய மருத்துவ கவுன்சிலுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவை நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்து மனுதாரர்களின் கோரிக்கையை அரசு பரிசீலித்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

வரும் 27ம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ராகவாச்சாரி, கே.செல்வராஜ் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

பிளஸ் 2 மறுமதிப்பீடு 15ல் வெளியீடு

பிளஸ் 2 தேர்வில் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் முடிவுகள் வரும் 15ம் தேதி வெளியிடப்படுகின்றன.பிளஸ் 2 தேர்வில், மறு கூட்டலுக்கு 2,835 பேர் விண்ணப்பித்ததில் 696 பேருக்கும் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்த 3,502 பேரில் 2,782 பேருக்கும் மதிப்பெண் மாற்றம் உள்ளது.

இந்த முடிவுகள் வரும், 15ம் தேதி http:/www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப் படுகிறது. மதிப்பெண் வராதவர்களுக்கு மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டும். மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களுக்கு வரும், 16ம் தேதி தற்காலிக மதிப் பெண் சான்றிதழ் வழங்கப்படும் என, தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.