இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, February 06, 2015

டி.ஆர்.பி சார்பில் நிரந்தர மையம்

ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில் தேர்வர்கள் வசதிக்காக நிரந்தர தகவல் மையம் திறக்கப்பட்டு உள்ளது. டி.ஆர்.பி., சார்பில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரி உதவி பேராசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு - டி.இ.டி., அறிமுகப்படுத்தப்பட்ட பின் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான டி.இ.டி., தேர்வையும் டி.ஆர்.பி., நடத்தி, ஆசிரியர்களை தேர்வு செய்து வருகிறது.

ஒவ்வொரு தேர்வு முடிந்த பின்னரும் தேர்வு குறித்த பல்வேறு சந்தேகங்கள், குழப்பங்கள் தேர்வர்களுக்கு ஏற்படும். சில நேரங்களில் தேவையில்லாமல் தேர்வர்கள் முற்றுகையிடும் சம்பவங்களும் நடக்கும். இப்பிரச்னையை போக்க தேவைப்படும் நேரத்தில் மட்டும் டி.ஆர்.பி.,சார்பில் தகவல் மையம் திறக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நிரந்தர தகவல் மையத்தை டி.ஆர்.பி., வளாகம் அமைந்து உள்ள டி.பி.ஐ., வளாக கட்டடத்தின் கீழ் தளத்தில் திறந்து உள்ளது.

இந்த தகவல் மையத்தில் இரண்டு அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தகவல் தேவைப்படும் தேர்வர்கள், விண்ணப்பதாரர்கள், அந்த மையத்தை அலுவலக வேலை நாட்களில் காலை 10:00 மணிமுதல் மாலை, 5:45 மணிவரை தொடர்பு கொள்ளலாம். மேலும் அந்த மையத்தில் இருந்து தகவல்கள் பெற 2827 2455, 73730 08134 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு முடிவுகள் வெளியீடு

கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான தேர்வுகள் முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமி்ழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 868 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மாதம் 10-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 922 பேர் எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் சான்றிதழ் சரிபார்ப்பதற்கு தேர்வர்கள் 1:1 என்ற கணக்கில் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்த பட்டியலும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும் தேதி மற்றும் இடம் பினனர் வெளியிடப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

2014-DECEMBER-IGNOU GRADE CARD STATUS RESULT

Click below

https://webservices.ignou.ac.in/GradecardR/

Thursday, February 05, 2015

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு



 
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்கள். இக்காலியிடங்களில் 50 சதவீதம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய பட்டியல் துறை வாரியாக தமிழக அரசின் நிதித்துறைக்கு அனுப்பப்படும். ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை (கிராஜுவிட்டி) உள்ளிட்ட பணப்பயன்கள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டியதிருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

அரசுப் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலமாகவும், ஆசிரியர்கள் டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாகவும் தேர்வுசெய்யப்படுகிறார்கள். மேலும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) மற்றும் கருணை அடிப்படையிலும் பணி நியமனம் நடைபெறுகிறது.

இந்த நிலையில், 2015-16-ம் நிதி ஆண்டில் அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களில் ஏறத்தாழ 24 ஆயிரம் பேர் ஓய்வுபெற இருப்பதாக நிதித்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காவலர், அலுவலக உதவியாளர் தொடங்கி, குரூப்-சி பணியாளர்கள், குரூப்-பி, குரூப்-ஏ அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைத்து வகை ஊழியர்களும் இதில் அடங்குவர். ஒரே ஆண்டில் இவ்வளவு பேர் ஓய்வுபெறுவது அரிதான ஒன்றாகும்.

பொதுவாக, அரசுப் பணியில், 50 சதவீத காலியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்படும். அந்த வகையில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் சூழல் இருப்பதால் படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும். இதற்காக டிஎன்பிஎஸ்சி மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக அதிகளவில் பணி நியமனங்கள் நடைபெறும். இந்த ஆண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் அண்மையில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காவலர், அலுவலக உதவியாளர் தொடங்கி, குரூப்-சி பணியாளர்கள், குரூப்-பி, குரூப்-ஏ அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைத்து வகை ஊழியர்களும் இதில் அடங்குவர். ஒரே ஆண்டில் இவ்வளவு பேர் ஓய்வுபெறுவது அரிதான ஒன்றாகும்.

Wednesday, February 04, 2015

RATION card,aadhaar card& SPF details

Click below

https://app.box.com/s/fskpe58ba91db9wualu4gaz6obcou636

ஆசிரியர் கூட்டுக்குழு ஜேக்டோ ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து ஆசிரியர் சங்கங்களும் முடிவு செய்துள்ளன.

அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜேக்டோ) கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறியது: மத்திய அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

பணியிடங்களில் ஆசிரியர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதையடுத்து, ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் மார்ச் 8-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் இயக்கங்களும் பங்கேற்க உள்ளன.

நெட் தேர்வு பழைய முறை பின்பற்ற உத்தரவு

பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதி தேர்வில் (நெட்) பழைய நடைமுறையையே பின்பற்ற பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முடிவு செய்துள்ளது.

பேராசிரியர்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில் "நெட்' தேர்வை சீர்திருத்தம் செய்வதற்காக அமைக்கப்பட்ட பேராசிரியர் டி.என். ரெட்டி தலைமையிலான இரு நபர் குழு, பல்வேறு பரிந்துரைகளை சமர்ப்பித்திருந்தது. அதில், இப்போது நடைமுறையில் உள்ள முழுவதும் கொள்குறி தேர்வு கேள்வி, பதில் முறைக்கு பதிலாக எழுத்துத் தேர்வு முறையையும் அறிமுகம் செய்வது. விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது. தவறான பதில்களுக்கு "நெகடிவ்' மதிப்பெண் முறை அறிமுகம் செய்வது என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டன.

இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்த யுஜிசி, அதுதொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்தது. மேலும், 2014 டிசம்பர் மாத "நெட்' தேர்விலேயே மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் யுஜிசி அதிகாரிகளும் தெரிவித்தனர். ஆனால், டிசம்பர் மாதத் தேர்வில் பழைய நடைமுறையே பின்பற்றப்பட்டது. இந்த நிலையில், யுஜிசி கவுன்சில் கூட்டம் இரு தினங்களுக்கு முன்பு தில்லியில் நடைபெற்றது. இதில் "நெட்' தேர்வு நடைமுறை மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில், தேர்வில் தொடர்ந்து பழைய நடைமுறையையே பின்பற்ற முடிவு செய்யப்பட்டது.

தகுதித் தேர்வை நாடு முழுவதிலுமிருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். இந்த நிலையில், எழுத்துத் தேர்வு முறையை அறிமுகம் செய்தால், விடைத் தாள்களை திருத்த அதிக நேரம் தேவைப்படும் என்பதோடு பல்வேறு சிக்கல்களும் எழ வாய்ப்பு உள்ளது என்பதால் பழைய நடைமுறையையே தொடர்ந்து பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என கூட்டத்தில் பங்கேற்ற யுஜிசி அதிகாரி ஒருவர் கூறினார்.

உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் சிறப்பு தர ஊதியம் தர உத்தரவு

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு தர ஊதியம் உள்ளிட்ட பயன்களை 10 முதல் 20 ஆண்டுகள் நிறைவு செய்த அரசு மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை ஊதியம், சிறப்பு தர ஊதியம் ஆகியவற்றை வழங்கி கடந்த 1993-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22-ஆம் தேதி தமிழக அரசு ஆணை வெளியிட்டது. அவர்களுக்கு வழங்கும் தேர்வு நிலை ஊதியம், சிறப்பு தர ஊதியம் ஆகியவற்றை பெறுவதற்கு எங்களுக்கும் உரிமை உள்ளது. நாங்கள் பணியில் சேர்ந்து பல ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. எனவே, எங்களுக்கும் அந்த சிறப்புச் சலுகைகள் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ஜி.ஈஸ்வரன், எம்.நாகேஸ்வரி உள்பட 27 இடைநிலை ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சிறப்பு சலுகை ஊதியங்களை வழங்கக் கோரியும் 27 ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் வி.தனபாலன், புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: 1993-ஆம் ஆண்டு அரசாணையின்படி தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேர்வுநிலை ஊதியம், சிறப்பு தர ஊதியம் ஆகிய பயன்களைப் பெற உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் உரிமை உள்ளது. இதை உயர் நீதிமன்ற அமர்வும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளன. ஆனால், இது தொடர்பாக முன்தேதியிட்டு நிலுவைத் தொகையை வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது.

அது அரசின் நிதிநிலையைப் பொறுத்தது. அதுகுறித்து அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம். அரசு இதுபோன்று கொள்கை முடிவெடுக்கும்போது, தகுதியான நபர்களுக்கும் வழங்க வேண்டும். அரசு, தானாகவே அவ்வாறு செய்யவில்லையெனில் பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறுகின்றனர். எனவே, 1993-ஆம் ஆண்டு அராசணையின் பயன்களை 10 முதல் 20 ஆண்டுகள் நிறைவு செய்த உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் தேர்வுநிலை ஊதியம், சிறப்பு தர ஊதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளில் ஒழுக்கத்தை போதிக்கும் புத்தகம்

மாணவர்களிடையே அறநெறி, ஒழுக்கத்தை போதிக்க தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் இலக்கியங்களில் இருந்து தொகுக்கப்பட்ட பொன்மொழிகள் வடிவிலான 'அறநெறிக் கருவூலம்' என்ற புத்தகம் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. சமீபகாலமாக பள்ளிகளில் குழு மோதல்கள் அதிகரித்துள்ளன.

சமுதாயத்தில் நடக்கும் பிரச்னைகள் பள்ளிக்குள் எதிரொலிப்பதால் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்கின்றன. தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'அறநெறிக்கருவூலம்' என்ற புத்தகத்தில் தொல்காப்பியம், திருக்குறள், நாலடியார்,நான்மணிக்கடிகை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள், ஆத்திச்சூடி, நல்வழி, உலகநீதி, நன்னெறி போன்ற சிற்றிலக்கியங்கள், பாரதியார் புதிய ஆத்திச்சூடி, பாரதிதாசன் ஆத்திச்சூடி போன்ற இக்கால இலக்கியங்களில் இருந்தும் அறநெறியை உணர்த்தும் சிறந்த சிந்தனை கருத்துக்கள் ஓரிரு சொற்றொடரிலேயே பொன்மொழிகளாக தரப்பட்டுள்ளது.61 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகம் முதன்மைக்கல்வி அலுவலகங்கள் மூலம் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்கப்பட உள்ளது.

காலை இறைவணக்கம், நீதிபோதனை வகுப்புகளில் இக்கருத்துக்கள் மாணவர்களுக்கு கூறப்பட உள்ளன. இதன் மூலம் அவர்களிடையே நன்னெறி, ஒழுக்கம் வளர வாய்ப்பாக இருக்கும் என ,கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Upper primary crc 14-2-15

Click below

https://app.box.com/s/6lxvtu1x7jo0pn4tzg7tx0gx2o6ms013

Tuesday, February 03, 2015

செய்முறை தேர்வுகள் 24க்குள் முடிக்க உத்தரவு

பிளஸ் 2 செய்முறைத்தேர்வுகளை பிப். 6ல் துவங்கி 24க்குள் முடிக்க அரசு தேர்வுகள்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5ல் துவங்குகிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. இந்நிலையில் மாவட்டங்களில் இம்மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வை பிப்.,6ல் துவங்கி 24ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என அரசு தேர்வுகள்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "அறிவியல், புவியியல், புள்ளியியல், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நடத்த முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம் மாவட்ட வாரியாக பள்ளிகளை இருபிரிவாக பிரித்து வெவ்வேறு தேதிகளில் கால அட்டவணை தயாரித்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வக வசதி இல்லாத பள்ளிகளின் மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்பதற்கான பள்ளிகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. பணிகள் அனைத்தையும் முடித்து மாணவர்களின் தேர்வு மதிப்பெண்களை பிப்.,28க்குள் சென்னை இயக்குனரகத்திற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்.

25ம் தேதி முதல் 28 ம் தேதி வரை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, இம்மாதம், 25ம் தேதி முதல், 28ம் தேதி வரை, நான்கு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை, வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

காப்பீடு திட்டம்: வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு; வாரத்தில், ஐந்து நாட்கள் வேலை; வரையறுக்கப்பட்ட வேலை நேரம்; காப்பீடு திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர், நவம்பர் முதல், மூன்று கட்ட போராட்டத்தை அறிவித்து இருந்தனர். ஜனவரி, 21, முதல், 24ம் தேதி வரை தொடர் வேலை நிறுத்தம் அறிவித்திருந்தனர். வங்கிகள் சங்கம் மற்றும் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இதனால், வேலைநிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது. இரு தரப்புக்கும் இடையே, மும்பையில் உள்ள வங்கிகள் சங்கத்தில், நேற்று மதியம், மீண்டும் பேச்சு நடந்தது. இதில், '13 சதவீதத்துக்கு மேல், ஊதிய உயர்வு அளிக்க முடியாது' என, வங்கிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டமைப்பினர், '19.5 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.

இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே, வரும், 25ம் தேதி முதல், 28ம் தேதி வரை வேலைநிறுத்தம் நடத்தப் போவதாக, வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தோல்வி அடைந்ததால்...: இதுகுறித்து, கூட்டமைப்பின் துணை செயலர் சீனிவாசன் கூறியதாவது: ஊதிய உயர்வு பேச்சு தோல்வி அடைந்ததால், நான்கு நாள் வேலை நிறுத்தத்தை மீண்டும் அறிவித்துள்ளோம். இதன் பின்பும், ஊதிய உயர்வு அளிக்க, வங்கிகள் சங்கம் முன்வரவில்லை எனில், மார்ச், 16 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

விலை உயர்ந்த ஆபரணங்களை பள்ளிக்கு அணிந்து வருதல் கூடாது

மாணவ, மாணவியர் பள்ளி முடிந்ததும், பெற்றோருக்கு தெரியாமல் எங்கும் செல்லக் கூடாது; விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிந்து வரக் கூடாது; மொபைல் போன் எடுத்து வருதல் கூடாது' என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே, மொளசூர் கிராமத்தை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவி ஒருவர், சில தினங்களுக்கு முன் மாயமாகி, விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில், பிணமாக மீட்கப்பட்டார். அவர் அணிந்திருந்த நகைகள், மாயமாகி இருந்தன. விசாரணையில், உடன் படித்த தோழியே, சசிரேகாவை நகைக்காக கிணற்றில் தள்ளி கொன்றது தெரியவந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, மாணவ, மாணவியர் பாதுகாப்பு தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

* பள்ளி மாணவ, மாணவியர் வீட்டில் இருந்து பள்ளிக்கு வரும் போதும், மீண்டும் வீடு திரும்பும் போதும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

* விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிந்து வரக் கூடாது; மொபைல் போன் போன்ற உபகரணங்களை எடுத்து வரக் கூடாது.

* வீட்டில் இருந்து பள்ளிக்கு தனியாக வருவதை தவிர்த்து, குழுவாக இணைந்து வரவேண்டும்.

* பள்ளிக்கு வரும் வழியில், நீர்நிலைகள் இருந்தால், அதனருகில் செல்லக் கூடாது.

* ரயில்வே பாதை, நெடுஞ்சாலை இருப்பின் கவனமாக, எச்சரிக்கையுடன் கடக்க வேண்டும். ரயில், பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்க கூடாது.

* பள்ளிக்கு வரும் வழியில், அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசக் கூடாது; அவர்கள் தரும் உணவு பொருட்களை வாங்கக் கூடாது.

* பள்ளி நேரம் முடிந்த பின் வீட்டிற்கு செல்ல வேண்டும். இந்த அறிவுரைகளை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், இறைவணக்க கூட்டத்தின் போது, மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

செல்வமகள் சேமிப்புத் திட்டம் தபால் நிலையத்தில் துவக்கம்

மத்திய அரசின் 'செல்வமகள் சேமிப்புத் திட்டம்' அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் துவக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் 9.1 சதவீதம் வட்டி வழங்கப்படும். பெண்குழந்தைகளை பாதுகாக்க 'செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை' அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் துவக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் ?? வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சேரலாம். நடப்பு ஆண்டில் மட்டும் 11 வயது வரை உள்ள குழந்தைகள் சேமிப்பு கணக்கு துவக்கலாம்.

கணக்கில் குறைந்தபட்சம் ???? ரூபாய் செலுத்தலாம். ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சம் ?.? லட்சம் ரூபாய் வரை டிபாசிட் செய்யலாம். இத்தொகைக்கு 9.1 சதவீதம் வட்டி வழங்கப்படும். 18 வயது அடைந்த உடன் கல்வி செலவிற்காக தொகையில் பாதியை எடுத்துக் கொள்ளலாம். 21 வயதில் முதிர்வு தொகை முழுதும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு பாதுகாவலர் இரண்டு குழந்தைகளுக்கு கணக்கு தொடங்க முடியும். ஜன.,?? ல் இத்திட்டம் சென்னையில் துவக்கப்பட்டது. நேற்று முதல் இத்திட்டம், நகர் பகுதி முழுநேர போஸ்ட் ஆபீஸ்களில் துவக்கப்பட்டது.

Saturday, January 31, 2015

ப்ளஸ் 2, பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களில் மாற்றம்

மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில் விடைத்தாள்களில் பல்வேறு மாற்றங்களைச் செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடத் தேர்வுகளுக்கு முதன்மை விடைத்தாள் 30 பக்கங்களைக் கொண்ட கோடிட்ட தாளாக இருக்கும். இதில், HSC-LANGUAGE எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். கூடுதல் விடைத்தாள்களும் கோடிட்ட விடைத்தாள்களாகவே வழங்கப்படும்.

கணக்கியல் தேர்வுக்கு 46 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் வழங்கப்படும். இதில் 1 முதல் 14 பக்கங்கள் கோடிடப்படாமலும், 15 முதல் 46 பக்கங்கள் கோடிடப்பட்டும் இருக்கும். இதில், HSC- ACCOUNTANCY எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

கணினி அறிவியல் தேர்வுக்கு 32 பக்கங்கள் கொண்ட (30 பக்கங்கள் எழுதும் வகையில்) முதன்மை விடைத்தாள் வழங்கப்படும். இதில் HSC- COMPUTER SCIENCE எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

உயிரியல் பாடத்தில் உயிர்- தாவரவியல், உயிர்- விலங்கியல் என இரண்டு முதன்மை விடைத்தாள்களுக்கும் இரண்டு டாப் சீட் (Top Sheet) வழங்கப்படும். அவற்றை இரண்டு விடைத்தாள்களிலும் தனித்தனியாக வைத்து தைத்த பின்னர், துளைபோட்டு நூல் கட்டி ஒரே விடைத்தாளாக வழங்கவேண்டும். தேர்வர்கள் கூடுதல் விடைத்தாள் கேட்கும்போது, அவற்றை உரிய விடைத்தாள் பகுதியுடன் வைத்து 2 விடைத்தாள்களையும் ஒன்றாகச் சேர்த்து நூலினால் கட்டவேண்டும். மற்ற பாடங்களுக்கு 38 பக்கங்கள் எழுதும் வகையில் விடைத்தாள்கள் வழங்கப்படவுள்ளன. இந்த முதன்மை விடைத்தாளில் HSC எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

வரலாறு பாடத் தேர்வுக்கு ஓர் இந்திய வரைபடமும், புவியியல் தேர்வுக்கு ஓர் உலக வரைபடமும் வழங்கப்பட்டிருக்கும். இவற்றை 36, 37-ஆவது பக்கங்களுக்கு நடுவில் வைத்து தைத்து வழங்கவேண்டும். படத்துடன் கூடிய முகப்புச் சீட்டு உள்ளிட்டவை கடந்த ஆண்டைப் போலவே வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கு. தேவராஜன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

10-ஆம் வகுப்பு: தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடத் தேர்வுகளுக்கு முதன்மை விடைத்தாள் 22 பக்கங்கள் எழுதும் வகையில் கோடிட்ட தாளாக இருக்கும். இதில், SSLC-LANGUAGE எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். கூடுதல் விடைத்தாள்களும் கோடிட்ட விடைத்தாள்களாகவே வழங்கப்படும்.

தமிழ் இரண்டாம் தாள் தேர்வுக்கு 22 பக்கங்கள் கொண்ட முதன்மை விடைத்தாளுடன், 3 படிவங்களும் அச்சிட்டு வழங்கப்படும். இதில், SSLC TAMIL-II எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

கணிதம், அறிவியல் பாடத் தேர்வுகளுக்கு 32 பக்கங்கள் கொண்ட முதன்மை விடைத்தாள்கள் வழங்கப்படும். இதில், SSLC எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

சமூக அறிவியல் தேர்வுக்கு முதன்மை விடைத்தாளில் முதல் 4 பக்கங்களில் நான்கு வரைபடங்கள் அச்சிடப்பட்டிருக்கும். மீதமுள்ள 26 பக்கங்களில் எழுதும்படி வழங்கப்படும். இதில், SSLC - Social Science எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.