இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, November 07, 2014

தமிழகம் முழுவதும் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.


இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 10 முதல் 26 வரை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் விநியோகம் செய்யப்படும். ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும்.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை விவரம்:

தமிழ்ப் பாடத்தில் 277 பேர், ஆங்கிலப் பாடத்தில் 209 பேர், கணிதப் பாடத்தில் 222 பேர், இயற்பியல், வேதியியலில் தலா 189 பேர், உயிரியலில் 95 பேர், விலங்கியலில் 89 பேர், வரலாறு பாடத்தில் 1989 பேர், பொருளாதாரத்தில் 177 பேர், வணிகவியலில் 135 பேர், உடற்கல்வி இயக்குநர்களாக 27 பேர் என மொத்தம் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம். படிப்போடு, பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும். இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் ஒரே பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஒரு ஆண்டுப் பட்டப் படிப்பை முடித்திருந்தாலோ, ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் அதிகமான படிப்புகளைப் படித்திருந்தாலோ அவர் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.

எனினும், வேறு பிரிவில் பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் அவர்களது படிப்பு, அறிவிப்பாணையில் உள்ள பாடங்களுக்கு இணையானது என்ற சான்றிதழ் பெற்றிருந்தால் போட்டித் தேர்வு எழுதலாம். இந்த அறிவிப்பாணை வெளியாவதற்கு முன்பே இணையானது என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் எந்த இடத்தில் விண்ணப்பத்தை வாங்கினாரோ அதே இடத்தில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

மொத்தம் 150 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்படும். பிரதான பாடம், கல்வி முறை, பொது அறிவு ஆகியவை தொடர்பாக 150 கேள்விகள் கேட்கப்படும். இந்தத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.

பதிவு மூப்புக்கு 4 மதிப்பெண்: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்புக்காக மொத்தம் 4 தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் வரை வழங்கப்படும். ஒராண்டு முதல் மூன்றாண்டு வரை 1 மதிப்பெண், 3 முதல் 5 ஆண்டுகள் வரை 2 மதிப்பெண், 5 முதல் 10 ஆண்டுகள் வரை 3 மதிப்பெண், 10 ஆண்டுகளுக்கு மேல் 4 மதிப்பெண் என வழங்கப்படும்.

பணி அனுபவத்துக்கு 3 மதிப்பெண்: அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கு ஆசிரியர்களாகப் பணியாற்றியிருந்தால் பணி அனுபவத்துக்கு 3 தகுதிகாண் மதிப்பெண் வரை வழங்கப்படும்.

1 முதல் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவத்துக்கு 1 மதிப்பெண்ணும், 2 முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவத்துக்கு 2 மதிப்பெண்ணும், 5 ஆண்டுகளுக்கு மேல் 3 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

செஸ் இறுதிப்போட்டிசென்னையில் நடக்கிறது A

:பள்ளி மாணவ, மாணவியரிடையே, மாநில அளவிலான, செஸ் இறுதிப் போட்டி, வரும், 13ம் தேதி, சென்னையில் நடக்கிறது.கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் நினைவுத்திறனை வளர்க்கும் வகையில், செஸ் போட்டி நடத்தப்படுகிறது.ஏற்கனவே, கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம், மண்டலம் என, பல நிலைகளில், போட்டி நடந்தது.இதையடுத்து, மாநில அளவிலான இறுதிப் போட்டி, வரும், 13ம் தேதி, சென்னை, வேப்பேரியில் உள்ள டவுட்டன் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இதில், முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, 360 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, மறுநாள், 14ம் தேதி, சென்னை, சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் குழந்தைகள் தின விழாவில், பரிசு வழங்கப்படும்.

பிளஸ் 2 தனித்தேர்வுஅறிவிப்பு வெளியீடு

வரும் மார்ச்சில் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனித் தேர்வாக எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், வரும், 10ம் தேதி முதல், 21ம் தேதி வரை, இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன் விவரம்: தனித் தேர்வர்கள், தேர்வுக்கு பதிவு செய்ய வசதியாக, கல்வி மாவட்ட வாரியாக, சேவை மையங்களை, தேர்வுத் துறை அமைத்துள்ளது.

இதன் விவரங்களை, www.tndge.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். வரும், 10ம் தேதி முதல், 21ம் தேதி மாலை, 5:00 மணி வரை, சேவை மையங்களுக்கு, நேரில் சென்று மாணவர்கள், தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

100 சதவீத தேர்ச்சிக்கு உழைக்காதஆசிரியர்கள் மீது நடவடிக்கை:இணை இயக்குனர் எச்சரிக்கை


      “பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ல் 100 சதவீத வெற்றிக்கு உழைக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை தயங்காது,” என மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் கார்மேகம் எச்சரித்துள்ளார்.கடந்த கல்வியாண்டில் பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 80 சதவீதம் அதற்கு குறைவான தேர்ச்சியை பெற்ற அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் காரைக்குடியில் நடந்தது. முதுகலை ஆசிரியர்கள் ஆய்வு கூட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் கார்மேகம் ஆலோசனை வழங்கினார். அவர் பேசியதாவது:

பிளஸ் 2 ல் 80 சதவீத தேர்ச்சி என்பது போதாது.100 சதவீத தேர்ச்சியை பெற ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கவேண்டும். படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். கல்வித் துறை ஆலோசனைகளை பெற வேண்டும். அடுத்த பொதுத் தேர்விற்குள் இன்னொரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். இதில், தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும் இதன் பின்னரும் 100 சதவீத தேர்ச்சியை எட்டாத பள்ளி களில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை தயங்காது, என்றார்.

Thursday, November 06, 2014

TRB PG

TRB PG EXAM notification

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வை அறிவித்தது TRB
விண்ணப்ப விநியோகம் 10.11.2014 கடைசி தேதி 26.11.2014
எழுத்துத் தேர்வு 10.1.2015
மொத்த பணியிடம் 1807

தமிழ்-227,
ஆங்கிலம்-209,
கணிதம்-222,
இயற்பியல்-189,
வேதியியல்-189,
தாவரவியல்-95,
விலங்கியல்-89,
வரலாறு-198,
பொருளியல்-177,
வணிகவியல்-135,
உடற்கல்வி இயக்குநர்-27

EMIS students Profile data form

Click below

https://app.box.com/s/gaizy4yu72z8hjnn7rjr

பிளஸ் 1 வகுப்பு: அடுத்த கல்வியாண்டிலும் புதிய பாடத் திட்டத்துக்கு வாய்ப்பில்லை?


பி.இ., எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள் திணறி வரும் நிலையில், அடுத்த கல்வியாண்டிலும் (2015-16) பிளஸ் 1 வகுப்புக்கான பழைய பாடத் திட்டம் மாற்றப்படாது எனத் தெரிகிறது.

பிளஸ் 1 வகுப்புக்கு 2014-15-ஆம் கல்வியாண்டிலும், பிளஸ் 2 வகுப்புக்கு 2015-16-ஆம் கல்வியாண்டிலும் பாடத் திட்டங்களை மாற்ற திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், பல்வேறு காரணங்களால் இது தள்ளிப்போனது. பிறகு, பிளஸ் 1 வகுப்புக்கு 2015-16-ஆம் ஆண்டிலிருந்தும், பிளஸ் 2 வகுப்புக்கு 2016-17-ஆம் ஆண்டிலிருந்தும் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், புதிய பாடத் திட்டம் அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டு ஓராண்டாகியும் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, அடுத்த கல்வியாண்டிலும் புதிய பாடத் திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பில்லை என வல்லுநர் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

தொழில் பிரிவுப் படிப்புகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறவே தடுமாறுகின்றனர். இதை மனதில் வைத்தே கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பல்வேறு பாடத் திட்டங்களில் இந்த முறை பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

புதிய பாடத் திட்டத்துக்கு இப்போது அனுமதி வழங்கப்பட்டாலும்கூட, பாடப் புத்தகங்களை எழுதுதல், பிழை திருத்துதல், வடிவமைப்பில் மாறுதல் என புத்தகம் எழுதும் பணிகளை முடிக்கவே குறைந்தபட்சம் 4 முதல் 6 மாதங்கள் வரை ஆகும்.

அதன் பிறகு, புத்தகங்களை அச்சிட வழங்க வேண்டும். எனவே, அடுத்த கல்வியாண்டில் புதிய பாடத் திட்டத்தை அமல்படுத்துவது மிகவும் கடினம் என வல்லுநர் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

இப்போதுள்ள பிளஸ் 1 பாடத் திட்டம் 2004-05 ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) விதிகளின்படி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத் திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் மேல்நிலைக் கல்வியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழையப் பாடத் திட்டமே தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

புத்தகம் எப்போது? முப்பருவ முறையின் கீழ் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மூன்றாவது பருவத்துக்கான புத்தகங்கள் அச்சிடும் பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் மாதத்தில் பிளஸ் 2 புத்தகங்களை அச்சிடும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. பிளஸ் 1 பாடத் திட்டம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கப்பட்ட பிறகு, அவற்றை அச்சிடும் பணிகள் தொடங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

துணைக் குழு: இதற்காக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குரிய 24 பாடங்களுக்கான பாடத் திட்டத்தை மாற்றியமைப்பதற்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நாகபூஷண ராவ் தலைமையில் துணைக் குழு அமைக்கப்பட்டது.

இந்தத் துணைக்குழு மேல்நிலைக் கல்வி பாடத் திட்டத்தை மேம்படுத்துவதற்காக 24 பாடங்களுக்குரிய குழுக்களைத் தேர்வு செய்து புதிய பாடத் திட்டத்தை உருவாக்கியது. இந்தப் பாடத் திட்டத்துக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் பொறுப்பை அப்போது கூடுதலாக வகித்த அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையிலான வல்லுநர் குழு கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து, அந்தக் குழுவின் ஆலோசனைகளின்படி, புதிய பாடத் திட்டம் இறுதி செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்காக கடந்த ஆண்டு அனுப்பப்பட்டது.

10ம்வகுப்பு கணித ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் அனிமேஷன் பயிற்சி : சென்னையில் நவ.,10, 11ல் நடக்கிறது

மாவட்டங்களில் சிறப்பாக பாடம் நடத்தும் 10ம் வகுப்பு கணித ஆசிரியர்களுக்கு சென்னையில் நவ.,10, 11ல் கம்ப்யூட்டர் அனிமேஷன் பயிற்சியளிக்கப்படுகிறது. இதில் 96 பேர் கலந்து கொள்கின்றனர். 10ம் வகுப்பில் கணித பாடத்தை சிறப்பாக நடத்தும் ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் அனிமேஷன் தொடர்பான பயிற்சி சென்னையில் நவ.,10, 11 ஆகிய இரு நாட்கள் அளிக்கப்பட உள்ளது என பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார்.

இதில் ஒரு மாவட்டத்திற்கு தமிழ் மற்றும் ஆங்கிலவழிப்பிரிவு ஆசிரியர்கள் 3 பேர் என 96 பேர் கலந்து கொள்கின்றனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை தேர்வு செய்து பயிற்சிக்கு அனுப்புமாறு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில்," கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் பொருட்டும், பாடம் தொடர்பாகவும் முதற்கட்டமாக இந்த ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. பின்னர் இவர்கள் மாவட்டங்களில் மற்ற பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அதுகுறித்து பயிற்சியளிப்பர்,” என்றார்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு விண்ணப்பம் : நவ.,10 முதல் விற்பனை

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிட போட்டித்தேர்விற்கான விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நவ., 10 முதல் விற்பனை செய்யப்பட உள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. அதன் அறிவிப்பு: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான(2013--14, 2014--15) போட்டி எழுத்துத்தேர்வு அடுத்தாண்டு ஜன., 10ல் நடக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் அத்தேர்விற்கான விண்ணப்பங்கள் நவ.,10 காலை 10 மணி முதல் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாய். தேர்வுக் கட்டணம் 500 ரூபாய்; எஸ்.சி., எஸ்.டி.,க்கு 250 ரூபாய். விண்ணப்பங்கள் பெற மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் நவ.,25 மாலை 5.30 மணி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான போட்டி எழுத்து தேர்வு 10.01.2015 அன்று நடைபெறவுள்ளது

விண்ணப்பங்கள் 10.11.2014 அன்று காலை 10மணி முதல் விற்பனை செய்யப்படவுள்ளது I இதற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடவுள்ளது I ஆசிரியர் தேர்வு வாரியம்

ந.க.எண்.9287/ அ3/2014 நாள்.05.11.2014ன் படி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான (2013-14 மர்றும் 2014-15) போட்டி எழுத்து தேர்வு 10.01.2015 அன்று நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 09.11.2014க்குள் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. விண்ணப்பங்கள் 10.11.2014 அன்று காலை 10மணி முதல் உரிய மையங்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதற்கான அறிவிக்கை ஆசிர்யர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடவுள்ளது.

Children s day celebration

https://app.box.com/s/fots4z1g0s93inu51w3p

கல்வி தகவல் மேலாண்மை முறை (EMIS) இணையதளத்தில் உள்ளீடு செய்தல் சாா்பு - இயக்குனரின் செயல்முறைகள்

https://app.box.com/s/3guhyfqhxh2yqhfu062q

Bharathiar university m.ed selection list

https://app.box.com/s/ielr8yc1ygovrqj5l4vm

தொடக்க கல்வித் துறையில் பணிநியமனம்

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுபாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய நகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால், ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றவர்களில் தெரிவு செய்யப்பட்ட தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் உருது ஆகிய சிறுபான்மை மொழிவழி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 8–ந் தேதி நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு இணைய தளம் மூலமாக நடைபெறும்.

இந்த கலந்தாய்வின் சிறுபான்மை மொழிவழி இடைநிலை ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ள 144 பணிநாடுநர்கள் பங்கேற்கிறார்கள். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் இருப்பிட முகவரி குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகத்தில் 8–ந் தேதி அன்று காலை 9.00 மணிக்கு, தங்களது அசல் கல்விச் சான்றுகள் மற்றும் 2 நகல்களுடன் பணியிட ஒதுக்கீட்டு கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவலை தொடக்கக்கல்வி இயக்குனர் டாக்டர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Wednesday, November 05, 2014

1988 - 1995 காலகட்டத்தில் ஓய்வு: 60 ஆயிரம் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் திருத்தி அமைப்பு


1988-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதிக்கும், 1995 -ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற சுமார் 60,000 தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட ஓய்வூதியர்களின் ஓய்வூதிய கருத்துருக்கள் இந்திய தணிக்கை, கணக்குத் துறை மாநில முதன்மை கணக்காயர் (கணக்கு, பணிவரவு) அலுவலகத்தில் பெறப்பட்டுள்ளன.

இதில் தங்கள் கருத்துருக்களை திரும்பப் பெற்றவர்களும், இனி அனுப்பும் ஓய்வூதியதாரர்களும் தங்கள் துறை அலுவலர்கள் மூலம் ஓய்வூதிய கொடுப்பாணை எண், பணிப் பதிவேடு, திருத்திய ஓய்வூதிய விண்ணப்பத்துக்கான முகாந்திரம், அரசு ஆணை எண். 363-ன்படி திருத்திய ஓய்வூதியத்துக்கு பணிப் பதிவேடு கிடைக்கவில்லை எனில், 4-ஆவது ஊதியக் குழுவின் அடிப்படையில் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்ட அட்டவணை, ஓய்வூதியதாரரின் விருப்பப் படிவம், இருப்பிட முகவரி, தற்போது ஓய்வூதியம் பெறும் கருவூலத்தின் சார் கருவூலத்தின் பெயர் ஆகிய விவரங்களுடன் அனுப்ப வேண்டும்..

மேலும் விவரங்களுக்கு "துணை மாநில கணக்காயர் (ஓய்வூதியம்), மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம், 361, அண்ணா சாலை, சென்னை - 18' என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

அடுத்தாண்டு முதல், புதிய கல்விக் கொள்கை

அடுத்தாண்டு முதல், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

ஒரு கல்வி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் இதுகுறித்து கூறியதாவது: புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு விரைவில் தொடங்கும். கல்விக் கொள்கையில், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் ஆகியோர் மட்டுமே பங்களித்தால் போதாது, பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கெடுக்க வேண்டும்.

இந்த நாட்டின் தலைவிதி, நெடுங்காலமாக, அரசியல் செய்தோரிடம் சிக்கிக் கொண்டிருந்தது. இப்போதுதான், அது விடுதலையடைவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

கல்வித் தொடர்பான மாற்றம் என்பது ஒரு அரசில் மட்டுமே நிகழ்ந்துவிடாது. அது அடிமட்ட அளவிலும் நிகழ வேண்டும் மற்றும் மாற்றத்தைக் கொண்டுவரும் வாகனங்களாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அந்த நிகழ்ச்சியில், பள்ளிகளில், முழுமையான சுய-மதிப்பாய்வை மேற்கொள்ளும் வகையிலான, சரன்ஷ் என்ற அம்சத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த அம்சத்தின் மூலம், கற்றலில் குறைபாடுள்ள மாணவர்கள், பெரிதும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Toilet detail form-avvaiyar font

CLICK BELOW

https://app.box.com/s/v1y1mmgt02qvzzjulsqd

Tuesday, November 04, 2014

தமிழகத்தில்2014-15 கல்வி ஆண்டில் 1,800 முதுகலை ஆசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் தெரிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்த வாரம் TRB வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் விரைவில் 1,800 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் மற்றும் இயக்குநர் அறிவொளியிடம் நேரில் கேட்டபோது, '

'அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைஆசிரியர் பணியிடங்களில் கடந்த ஆண்டு 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல், இந்த ஆண்டு 1,800 முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்.முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்ய சிறப்பு எழுத்து தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு 150 மார்க்குகளும், வேலை வாய்ப்பு அலுவலக சீனியாரிட்டிக்கு 4 மார்க்குகளும், ஆசிரியர்களின் பாடம் நடத்தும் அனுபவத்திற்கு 3 மார்க்குகளும் வழங்கப்படும். மொத்தத்தில் 157 மார்க்குகளை அடிப்படையாக கொண்டு முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்'' என்றார்.

ரேஷன் கார்டில் இந்தாண்டும் உள்தாள் தான் இணைப்பு


    ரேஷன்கார்டில் உள்தாள் இணைப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த ஆண்டும் 'ஸ்மார்ட் கார்டு' வழங்குவது ஒவ்வொரு ஆண்டாக தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. . தற்போதுள்ள ரேஷன்கார்டின் பயன்பாட்டுக்காலம் டிச., 31 ல் முடிவடைகிறது. போலி ரேஷன்கார்டுகளை ஒழிக்க 'ஸ்மார்ட் கார்டு' வடிவில் ரேஷன் கார்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதற்கு ஆதார் அட்டைக்காக எடுக்கப்பட்ட குடும்பத்தலைவர், உறுப்பினர்களின் பெயர் இதர விபரங்களை பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஆதார் அட்டைப்பணி பல மாவட்டங்களில் முழுமையாக முடியாததால் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணியும் காலதாமதம் ஆகி வருகிறது.இதனால் இந்த ஆண்டும் 'ஸ்மார்ட் கார்டு' வழங்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் தற்போதுள்ள ரேஷன் கார்டையே பொதுமக்கள் தொடர்ந்து மேலும் ஓராண்டிற்குப்பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக அதில் உள்தாள் இணைப்பு வழங்க முடிவுசெய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. மாவட்ட வழங்கல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"தற்போதுள்ள ரேஷன்கார்டில் உள்தாள் இணைப்பது குறித்த அறிவிப்பு இம்மாத மத்தியில் வெளியாக உள்ளது,” என்றார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - கல்வியாண்டின் இடையில் வயதுமுதிர்வு காரணமாக ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு இறுதிவரை மறு நியமனம் வழங்க பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

Click below

https://app.box.com/s/g6dde3miq75v8kuib8ni

ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி இல்லாததால் பாதிக்கப்படும் மாணவர்கள்; வீணாகும் லேப்டாப்

      தொடக்கக் கல்வித்துறையின்கீழ், மாநிலம் முழுவதும் கற்பித்தல் பணிக்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப், கம்ப்யூட்டர் சார்ந்த நவீன பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு இல்லாத காரணத்தால், பயனற்று பள்ளிகளில் வீணாகி வருகிறது. தொடக்கல்வித்துறைக்கு உட்பட்ட 8,026 நடுநிலைப் பள்ளிகளுக்கு நான்கு கட்டங்களாக, லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பிலும், பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன.

இன்றைய உலகில் அனைத்து செயல்பாடுகளும் தொழில்நுட்பத்தை சார்ந்தே உள்ளது என்பதை உணர்ந்த பள்ளிக்கல்வித்துறை, கனெக்டிவ் கிளாஸ் ரூம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் உட்பட பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. இதன்படி, ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்தபட்சம் வாரத்தில் ஐந்து பாடவேளைகள் கற்பித்தலுக்கு, லேப்டாப் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும், ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை மேற்கொள்வதை முறையாக, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேற்பார்வையில், கண்காணிக்கவும், உணவு இடைவேளைக்கு முன்பு அல்லது பின்பு வகுப்புகளை கம்ப்யூட்டர் வழி கற்பித்தல் முறைக்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு, அதற்கான தொகுப்புகளும் வழங்கப்பட்டன. லேப்டாப் சார்ந்த அடிப்படை பயிற்சிகள் இல்லாத பெரும்பாலான ஆசிரியர்கள், கற்பித்தல் பணிக்கு லேப்டாப் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர்களும் தொழில்நுட்பம் சார்நத அறிவை தொடக்க நிலைகளில் பெற இயலாமல், உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சமயங்களில் சிரமப்படும் சூழல்கள் உருவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில், 244 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு சில பள்ளிகளை தவிர பெரும்பாலான பள்ளிகளில் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் வெறும் அலங்கார பொருட்களாகவே வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி கூறுகையில்,

"கற்பித்தல் பணிக்கு, லேப்டாப் பயன்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பள்ளி தலைமையாசிரியர்களிடம் தொடர்ந்து இதுகுறித்து அறிவுறுத்தப்படுவதுடன், நடுநிலைப் பள்ளிகளில் மூன்று அல்லது நான்கு லேப்டாப் இருக்கும் பட்சத்தில், தொடக்கப் பள்ளிகளுக்கு ஒன்று வழங்குமாறும் தெரிவித்துள்ளோம். உதவி தொடக்க கல்வி அலுவலர் மூலம், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

Monday, November 03, 2014

TRB NEWS | ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், அக்குவாகல்சர் ஆகிய பாடங்களில் தேர்ந்து எடுக்கப்பட்ட கல்லூரி உதவி பேராசிரியர்கள் 277 பேர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Click below

http://trb.tn.nic.in/CollAP2012/03112014/msg1.htm

பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இதில் மூன்றாண்டு டிப்ளமோ முடித்து, பணிபுரிந்து கொண்டு இருப்பவர்கள் மட்டுமே இந்தப் படிப்புகளில் சேர முடியும். கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

மூன்றரை ஆண்டுகள் கொண்ட இந்தப் படிப்புக்கான வகுப்புகள் தினமும் மாலை 6.15 முதல் இரவு 9.15 வரை நடத்தப்படும்.

படிப்பில் சேர விரும்புபவர்கள் ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன்ல்ற்க்ஷங்2014 என்ற இணையதளத்தில் ஆன்-லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்து, அதை நவம்பர் 22-ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை, உரிய கட்டணத்துக்கான வரைவோலையுடன் -இயக்குநர், மாணவர் சேர்க்கை மையம், அண்ணா பல்கலை, சென்னை - 25- என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க நவம்பர் 28 கடைசித் தேதியாகும்.

கலந்தாய்வு அழைப்புக் கடிதம் நேரடியாக விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டும். கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.