இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, July 31, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிபெற வழிவகை செய்யும் வகையில்; 55 லட்சம் ரூபாய் செலவில் தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்படும் : ஜெயலலிதா அறிவிப்பு


 சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்ப தாவது:–ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் மேம்படுத்தும்
வகையில் கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

1) 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ – மாணவியர்கள் தொழில் நுட்பக் கல்வி பயில ஏதுவாக, கடலூர் மாவட்டம், நந்தனார் ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப் பேட்டை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் இரு தொழில் நுட்பக் கல்லூரிகள் 24 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

2) 10-ம் வகுப்பு முடித்த மாணவ-மாணவியர்கள் தொழிற் பயிற்சி பெற ஏதுவாக, திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப் பேட்டை ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு தொழிற் பயிற்சி நிலையம் 10 கோடி ரூபாய் செலவில் துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

3) ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு, சரி விகித உணவுப் பட்டியலில் உள்ளபடி உணவு வழங்கப்பட்டு வருகிறது. விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் வகையிலும், ஒரே நேரத்தில் சூடான உணவு தயாரித்து பரிமாற வழிவகை செய்யும் வகையிலும், 150 மாணாக்கர்களுக்கு மேல் தங்கியுள்ள 200 விடுதிகளுக்கு 8 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் நீராவி கொதிகலன்கள் வாங்கி வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

4) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப்பள்ளிகளில், தங்கி பயிலும் மாணாக்கர்களுக்கு சூடாகவும், சுவையாகவும் இட்லி தயாரித்து வழங்கும் வகையில், 1 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவில் 1,577நீராவி இட்லி குக்கர்கள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

5) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு பாய் மற்றும் போர்வை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணாக்கர்களுக்கும் 4 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் உறையுடன் கூடிய தலையணை வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

6) மலைப் பகுதிகளில் உள்ள பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் மழைக் காலங்களில் பள்ளிகளுக்கு நனையாமல் செல்ல ஏதுவாக அனைவருக்கும் 2 கோடி ரூபாய் செலவில் தலா ஒரு ரெயின் கோட்டும், குளிர் காலங்களில் மாணவ, மாணவியரின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் 1 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் தலா ஒரு கம்பளிச் சட்டையும் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

7) தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளில் கல்வி பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதால் 2014–-2015 ஆம் கல்வி ஆண்டில், பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு விடுதிகள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, வேலூர், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய எட்டு மாவட்டங்களில் தலாஒன்று வீதம் 8 விடுதிகள் என மொத்தம் 10 கல்லூரி விடுதிகள் 2 கோடியே 60லட்சம் ரூபாய் செலவில் துவங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

8) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியின உண்டி உறைவிடப் பள்ளிகளில், பயன்பாட்டில் உள்ள குழல் விளக்கு, மின் விசிறி மற்றும் தண்ணீர்க் குழாய் ஆகியவற்றினை பராமரிக்க ஒரு விடுதிக்கு ஆண்டொன்றுக்கு 15,000- ரூபாய் வீதம் 1647 விடுதிகளுக்கு 2 கோடியே47 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

9) பி.எட். படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 906 பழங்குடியினப் பட்டதாரிகளுக்கு, அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற ஏதுவாக, 66 லட்சம் ரூபாய் செலவில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வாயிலாகவும், ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பி.எட். பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிபெற வழிவகை செய்யும் வகையில்; 55 லட்சம் ரூபாய் செலவில் தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்படும

11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் இன்று வெளியீடு


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) வெளியிடப்பட உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம் இந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு மொத்தம் 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர்.

கடந்த மே மாதம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 935 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம் ஜூலை 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இந்த முகாம்களுக்கு வந்தவர்களில் சுமார் 600 பேர் சரியான ஆவணங்களுடன் மதிப்பெண்ணில் திருத்தம் கோரியிருந்தனர். அவர்களது மதிப்பெண்ணில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.தேர்வுப் பட்டியல் தயாரிப்பதற்கான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் அநேகமாக வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்கள் அநேகமாக அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பெட்ரோல் விலை குறைப்பு; டீசல் விலை அதிகரிப்பு

நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.09 குறைக்கப்பட்டது. அதேவேளையில், டீசல் விலையில் வழக்கம்போல் 50 பைசா அதிகரிக்கப்பட்டது.

உள்ளூர் வரி மற்றும் வாட் வரிக்கு ஏற்ப மாறுபடும் இந்த புதிய விலை மாற்றம், வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, பாஜக மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பெட்ரோல் விலை முதல் முறையாக குறைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உள்ளிட்ட சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாள்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அதன் அடிப்படையில், பெட்ரோல் விலை நாடு முழுவதும் லிட்டருக்கு ரூ.1.09 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.

இந்த விலைக் குறைப்பு, உள்ளூர் வரி மற்றும் வாட் வரிக்கு ஏற்ப அந்தப் பகுதிகளில் அமலுக்கு வருகிறது.

அதேநேரத்தில், வழக்கம்போல் இம்முறையும் டீசல் விலையில் 50 பைசா அதிகரிக்கப்பட்டது.

பள்ளிக்கல்வி - மாணவர் சேர்க்கை 2014-15ம் கல்வியாண்டில் உயர் நிலை / மேல் நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலகெடு 30.09.2014 வரை நீட்டித்து ஆணை வெளியீடு

Wednesday, July 30, 2014

ஒரு நபர் குழு திரு . ராஜீவ் ரஞ்சன் .இ .ஆ .ப. .அவர்களால் டிப்ளமோ கல்வித்தகுதியை காரணம் காட்டி ஊதியம் 5200-20200+2800 -இருந்து 9300-34800+4200 மாற்றி அமைக்கப்பட்ட பணியிடங்கள்.


 1) Training Instruc

5200-20200+2800 - 9300-34800+4200

2) Hostal Superintendent and Physical Training Officer

5200-20200+2800 - 9300-34800+4200

3) Laboratory Assistant

5200-20200+2800 - 9300-34800+4200

4) Laboratory Technician Grade-1

5200-20200+2800 - 9300-34800+4200

5) Laboratory Technician Grade-II

5200-20200+2800 - 9300-34800+4200

6) Dental Hygienist/Dental Mechanic
5200-20200+2800 - 9300-34800+4200

7) Refractionist/opthalmic Assistant/Opticial / Optometrist
5200-20200+2800 - 9300-34800+4200

8)Leprosy physiotherapist Physio therapy Technician
5200-20200+2400 - 9300-34800+4200

9) Pharmacists
5200-20200+2800 - 9300-34800+4200

10) Health Inspector Grade-I
5200-20200+2800 - 9300-34800+4200

11) Food Inspector
5200-20200+2800 - 9300-34800+4200

12) Technician Grade-I
5200-20200+2800 -9300-34800+4200

13) Audio-Visual Technician
5200-20200+2400 - 9300-34800+4200

14) Librarian
5200-20200+2400 - 9300-34800+4200

15) Orthotic Technician
5200-20200+2800 - 9300-34800+4200

16) Pharmacist(Rural Develop)
5200-20200+2800 - 9300-34800+4200

17) Junior Foreman
5200-20200+2800 - 9300-34800+4200

18) Grading Assistant
5200-20200+2800 - 9300-34800+4200

19) Colour Processing Asst.
5200-20200+2800 - 9300-34800+4200

20) Boom Assistant 5200-20200+2800 - 9300-34800+4200

21) Junior Draughting Officer
5200-20200+2800 - 9300-34800+4200

22) Technician Assistant
5200-20200+2800 - 9300-34800+4200

23) Sanitary Inspector 5200-20200+2800 - 9300-34800+4200

24) Draughtsman Grade 5200-20200+2800 - 9300-34800+4200

25) Pharmacist 5200-20200+2800 - 9300-34800+4200

26) Sanitary Inspector 5200-20200+2800 - 9300-34800+4200

27) Over Seer 5200-20200+1900 - 9300-34800+4200

28) Pharmacist(Corporation) 5200-20200+2800 - 9300-34800+4200

29) Sanitory Inspector 5200-20200+2800 - 9300-34800+4200

தகவல்- TATA,கிப்ஸன் அவர்கள்.

தாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்விக்காக வைப்பீடு செய்யப்படும் நிதி ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படும் முதல்வர் அறிவிப்பு


"புதிதாக 1,382 ஆசிரியர் பணியிடங்கள்' தமிழகத்தில் புதிதாக 1,382 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.மேலும் தாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்விக்காக வைப்பீடு செய்யப்படும் நிதி ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75
ஆயிரமாக உயர்த்தப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
இது குறித்து சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:
நிகழ் கல்வியாண்டில் 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டோரும் பழங்குடியினரும் அதிகமுள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகளுக்கு தலா ஒரு தொடக்கப் பள்ளி வீதம் 128 பள்ளிகள் தொடங்கப்படும். இதற்கென 256 ஆசிரியர்கள் (ஒரு தலைமை ஆசிரியர், ஓர் இடைநிலை ஆசிரியர்) நியமிக்கப்படுவர். இந்தப் பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மூன்று கி.மீட்டருக்கு ஒரு நடுநிலைப் பள்ளி அவசியம். அதன்படி, பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. நிகழாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இதற்கென 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.
மேலும், நிகழ் கல்வியாண்டில் 50 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இந்தப் பள்ளிகளுக்கென 50 தலைமை ஆசிரியர்கள், 250 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும்.
1,000 பணியிடங்கள்: கடந்த மூன்று ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
நிகழ் கல்வியாண்டில் 100 பள்ளிகள் அதுபோன்று தரம் உயர்த்தப்படுகின்றன. இதற்கென 900 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் ஆயிரம் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.
வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை விபத்தில் இறந்தாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அவர்களுடைய குழந்தைகள் கல்வியைத் தொடர்ந்து கற்கும் வகையில், ரூ.50 ஆயிரம் வைப்பீடாக வைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தொகை ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையும் அதன் முதிர்வுத் தொகையும் மாணவ-மாணவியரின் கல்விச் செலவு, பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படும்.

கழிவறைகள் பராமரிப்பு: தமிழகத்தில் கழிவறைகள் இல்லாத 2 ஆயிரத்து 57 பள்ளிகளுக்கு கழிவறை வசதிகள் செய்யப்பட்டன. இந்தக் கழிவறைகளைப் பராமரிக்க ரூ.160.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதனால், 56 லட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பள்ளிக் குழந்தைகளுக்கு பயிற்சிக் கையேடுகள் முதல் குறிப்பேடுகள் வரை பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.


இது குறித்து சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியரிடையே அழகாக எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், 1 முதல் 7 வரை பயிலும் 45.76 லட்சம் மாணவர்களுக்கு முதல் முறையாகக் கையெழுத்துப் பயிற்சி ஏடுகளும், 1 முதல் 9 வரை படிக்கும் 63.18 லட்சம் பேருக்கு கலைத் திறன், கற்பனை வளத்தை ஊக்குவிக்கும் வகையில் ஓவியப் பயிற்சி ஏடுகளும் அளிக்கப்படும்.

9, 10-ஆம் வகுப்பில் பயிலும் 10 லட்சம் பேருக்கு அறிவியல் பாடங்களுக்கான செயல்முறைப் பயிற்சி ஏடுகள் அளிக்கப்படும். தொலைதூர, மலைப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் நிகழாண்டில் 500 குழந்தைகள் பயன்பெற ஐந்து உண்டு, உறைவிடப் பள்ளிகள் நீலகிரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்படும். சமூக விழிப்புணர்வைக் குழந்தைகளிடம் எடுத்துச் செல்ல பள்ளிகளில் போட்டிகள், விழிப்புணர்வுப் பேரணி, கிராம கல்வித் திருவிழா ஆகியவற்றை பள்ளிக்கல்வித் துறையும், காவல் துறையும் இணைந்து நடத்தி வருகின்றன. நிகழாண்டிலும் இந்தத் திட்டங்கள் தொடரும். குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்க வசதியாக அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆயிரத்து 175 கூடுதல் வகுப்பறைகளும், பெண் குழந்தைகளுக்கென தனியாக 270 கழிப்பறைகளும் கட்டித் தரப்படும்.

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 46 ஆயிரத்து 737 பள்ளி செல்லாத குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 24 ஆயிரத்து 638 பேருக்கு சிறப்புப் பயிற்சி தேவைப்படுகிறது. அவர்களில் 9 ஆயிரத்து 641 குழந்தைகளுக்கு உறைவிட வசதியுடன் கூடிய சிறப்புப் பயிற்சியும், மீதமுள்ளவர்களுக்கு உறைவிட வசதியின்றியும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். சிறப்புக் கவனம் தேவைப்படும் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 641 குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சிகள், உதவும் உபகரணங்கள் வழங்கப்படும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாள்கள், தேர்வுகள் போன்றவற்றை அறிந்து கொள்ள வசதியாக நாள்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு நிகழ் கல்வியாண்டில் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

எஸ்.எஸ்.ஏ., - ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில், எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்), ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) திட்டங்களுக்காக, நடப்பாண்டில், 2,400 கோடியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளி கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் ஆகியவற்றுக்கான பெரும் அளவு நிதியை, மத்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் வழங்குகிறது. நடப்பு (2014 - 15) கல்வியாண்டில், எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களுக்கு தேவைப்படும் நிதி குறித்த அறிக்கையை, பல மாதங்களுக்கு முன், தமிழக அதிகாரிகள், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் வழங்கி இருந்தனர்.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து, புதிய ஆட்சியாளர்களிடம், தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர். இதன் அடிப்படையில், சமீபத்தில், நடப்பு கல்வி ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆர்.எம்.எஸ்.ஏ., : அதன்படி, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனரகத்திற்கு, 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 12 ஆயிரம் ஆசிரியர் சம்பளத்திற்கு, 288 கோடி ரூபாய்; ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்க, 5 கோடி; பள்ளிகளுக்கு மானியமாக, 28 கோடி (ஆய்வக உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்கள் வாங்க) உள்ளிட்ட செலவுகள் அடக்கம்.

எஸ்.எஸ்.ஏ., : இந்த இயக்குனரகத்திற்கு, 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஆசிரியர் சம்பளத்திற்கு மட்டும், 900 கோடி ரூபாய் செலவிடப்படும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதிய ஆரம்ப பள்ளிகள், ஏற்கனவே உள்ள பள்ளிகளில், கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், பள்ளிகளில், சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட, உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு, கணிசமான தொகை செலவிடப்படும் எனவும், அந்த அதிகாரி தெரிவித்தார். 'கேட்பது கிடைக்கும்!' அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கல்வி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. கேரளாவிற்கு அடுத்து, தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக, சமீபத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி தெரிவித்தது குறிப்பிடதக்கது. எனவே, மத்திய அரசிடம், தமிழகம் கேட்கும் நிதி, தாராளமாக கிடைக்கும். கடந்த ஆண்டு, எஸ்.எஸ்.ஏ., திட்டத்திற்கு, 1,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு, 500 கோடி ரூபாய், கூடுதலாக ஒதுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடதக்கது. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

'நடப்பாண்டில் 300 பள்ளிகள் தரம் உயர்வு'

சட்டசபையில், நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்

: 25 மாவட்டங்களில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரின், 128 குடியிருப்புப் பகுதிகளில், 128 துவக்கப் பள்ளிகள் துவக்கப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு இடைநிலை ஆசிரியர் நியமிக்கப்படுவர். பள்ளிக்கு, சத்துணவு சமையலறை, குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்படும். இதற்காக, ஆண்டுக்கு, 19.43 கோடி ரூபாய் செலவாகும

். 19 மாவட்டங்களில் உள்ள, 42 துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இவற்றுக்கு, தலா, மூன்று பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு பள்ளிக்கும், மூன்று கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும். இதற்கு, ஆண்டுக்கு, 9.28 கோடி ரூபாய் செலவாகும். நடப்பு கல்வியாண்டில், 50 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக, தரம் உயர்த்தப்படும். இவற்றுக்கு, தலா ஒரு தலைமை ஆசிரியர், ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இதன்மூலம், 1.20 கோடி ரூபாய் ஆண்டுக்கு செலவு ஏற்படும்

. மேல்நிலைப் பள்ளிகளாக, தரம் உயர்த்தப்பட்ட, மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில், தமிழ், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். நடப்பாண்டில், 100 மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு, 100 தலைமையாசிரியர்கள், 900 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடம் உருவாக்கப்படும். இதற்காக, ஆண்டுக்கு, 31.82 கோடி செலவாகும். விபத்தில் பெற்றோர் இறந்துவிட்டாலோ, நிரந்தர முடக்கம் ஏற்பட்டாலோ, அவர்களின் குழந்தைகளை, பிளஸ் 2 வரை படிக்க வைக்க, அரசு டிபாசிட் செய்யும், 50 ஆயிரம் ரூபாய், 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்

. 2,057 பள்ளிகளின் கழிப்பறைகளை பராமரிக்க, 160.77 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். 1 முதல் 7ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கையெழுத்து பயிற்சி ஏடுகள்; 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஓவியப் பயிற்சி ஏடுகள்; 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் செய்முறை பயிற்சி ஏடுகள், இலவசமாக வழங்கப்படும். நீலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், ஐந்து உண்டு உறைவிட பள்ளிகள் அமைக்கப்படும். இவற்றுக்கு, ஐந்து முழுநேர ஆசிரியர்களும், மூன்று பகுதி நேர ஆசிரியர்களும் நியமிக்கப்படுவர். துவக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு, 72.90 கோடி ரூபாயில், 1,175 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10, பிளஸ் ? மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, நாட்காட்டியுடன் கூடிய குறிப்பேடு வழங்கப்படும். இவ்வாறு, ஜெயலலிதா அறிவித்தார்.

ஆக.,4ல் கல்வி அதிகாரிகள் கூட்டம்

சென்னையில் ஆக.,4ல் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின் நேர்முக உதவியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. பள்ளிகல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், அத்துறை உயரதிகாரிகள், 32 மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின் நேர்முக உதவியாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதில், "மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ், சைக்கிள், காலணிகள், சீருடை உள்ளிட்ட 14 வகை நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது, கடந்த கல்வியாண்டில் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், அதை அதிகப்படுத்துவது எப்படி, கோர்ட்டில் உள்ள வழக்குகள், பள்ளிகளில் மழை நீர் சேகரிப்பு அமைக்கப்பட்டது உள்ளிட்ட, பல்வேறு விபரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக,”கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

128 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் , 42 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி முதல்வர் உத்தரவு

புதிய ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 382 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், தாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்விக்காக வைப்பீடு செய்யப்படும் நிதியானது ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

     இதுகுறித்து, சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:

       நடப்புக் கல்வியாண்டில் 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகமுள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளுக்கு தலா ஒரு தொடக்கப்பள்ளி வீதம் 128 பள்ளிகள் தொடங்கப்படும். இதற்கென 256 ஆசிரியர்கள் (ஒரு தலைமை ஆசிரியர், ஒரு இடைநிலை ஆசிரியர்) நியமிக்கப்படுவர். இந்தப் பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

       இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மூன்று கிலோமீட்டருக்கு ஒரு நடுநிலைப் பள்ளி அவசியம். அதன்படி, பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இதற்கென 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

       மேலும், நடப்பு கல்வியாண்டில் 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இந்தப் பள்ளிகளுக்கென 50 தலைமை ஆசிரியர்கள், 250 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும்.

   ஆயிரம் பணியிடங்கள்: கடந்த மூன்று ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. நடப்பு கல்வியாண்டில் 100 பள்ளிகள் அதுபோன்ற தரம் உயர்த்தப்படுகின்றன. இதற்கென 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் ஆயிரம் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

      வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை விபத்தில் இறந்தாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அவர்களின் குழந்தைகள் கல்வியை தொடர்ந்து கற்கும் வகையில், ரூ.50 ஆயிரம் வைப்பீடாக வைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொகை ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை மாணவ-மாணவியரின் கல்விச் செலவு, பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும்.

       கழிவறைகள் பராமரிப்பு: தமிழகத்தில் கழிவறைகள் இல்லாத 2 ஆயிரத்து 57 பள்ளிகளுக்கு கழிவறை வசதிகள் செய்யப்பட்டன. இந்தக் கழிவறைகளை பராமரிக்க ரூ.160.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதனால், 56 லட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.