இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, July 05, 2014

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்: Thanks to-Teachers Friend Devarajan


* தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period
தள்ளிப்போகும்.

* பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை
ஒப்படைத்து பணமாகப் பெறலாம். ஆண், பெண் இருவரும்.

* தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2
வருடங்களுக்குள்)மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான 
EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன்
சேர்த்துக்கொள்ளப்படும். (உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.
எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)

* வருடத்திற்கு 17 நாட்கள் EL. அதில் 15 நாட்களை ஒப்படைத்து பணமாகப்
பெறலாம் .

* மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும் அதை ஓய்வுபெறும்
பொழுது ஒப்படைத்து பணமாகப் பெறலாம்.

* 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும்.

* வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.இதை 17ஆல் (EL) வகுத்தால் 365/17=21.

* எனவே 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL என்ற
கணக்கில் கழிக்கப்படுகிறது.

* மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள் , மற்றும் ML எடுத்த தாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும். CL, RL, தவிர வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.

* ஒரு நாள் மட்டும் EL தேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.

* அரசு ஊழியர்களுக்கு மட்டும் வருடத்திற்கு 30 நாட்கள் EL
(ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே). அதில் 15 நாட்களை ஒப்படைக்கலாம். மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச் சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம்.
அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.

*மாறுதல் / பதவி உயர்வு / பணியிறக்கம் / நிரவல் போன்ற நிகழ்வுகளின் போது பழைய இடத்திற்கும் புதிய இடத்திற்குமிடையே குறைந்தது 8
கி.மீ (ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் EL
கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். இதற்கு 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட
வேண்டும். (குறைந்தது 5 நாட்கள். 160 கி.மீக்கு மேற்படின்
அட்டவணைப்படி நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்)

*ஒருமுறை சரண்டர் செய்த அதே தேதியில் தான் ஆண்டுதோறும் செய்ய
வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கணக்கீட்டிற்கு வசதியாக
இருக்கவும் Pay Rollல் விவரம் குறிக்க எளிமையாக அமையவும் ஒரே தேதியில் ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண் செய்வது சிறந்தது. எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்பு நாளுக்கும்
அடுத்த ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15 நாட்கள் ஒப்படைப்பெனில்
ஓராண்டு / 30 நாட்கள் ஒப்படைப்பெனில் இரண்டாண்டு இடைவெளி இருக்க வேண்டும்.

* ஒப்படைப்பு நாள் தான் முக்கியமே தவிர விண்ணப்பிக்கும் தேதியோ,
அலுவலர் சேங்க்ஷன் செய்யும் தேதியோ, ECS ஆகும்
தேதியோ அடுத்தமுறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட
வேண்டியதில்லை.

* EL ஒப்படைப்பு நாளின் போது குறைந்த அளவு அகவிலைப்படியும்
பின்னர் முன்தேதியிட்டு DA உயர்த்தப்படும் போது ஒப்படைப்பு நாளில்
அதிக அகவிலைப்படியும் இருந்தால் DA நிலுவையுடன்
சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்து சுதந்தரித்துக் கொள்ளலாம். ஊக்க ஊதியம் முன்தேதியிட்டுப் பெற்றாலும் நிலுவைக் கணக்கீட்டுக்
காலத்தில் ஒப்படைப்பு தேதி வந்தால் சரண்டர் நிலுவையும் பெறத்
தகுதியுண்டு.

* பணிநிறைவு / இறப்பின் போது இருப்பிலுள்ள EL நாட்களுக்குரிய (அதிகபட்சம்240) அப்போதைய சம்பளம் மற்றும் அகவிலைப்படி வீதத்தில்
கணக்கிடப்பட்டு திரள்தொகையாக ஒப்பளிக்கப்படும்.

* அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம்.

180 நாட்களுக்குமேற்பட்ட விடுப்புக்கு வீட்டுவாடகைப்படி கிடைக்காது

விரைவில் புதிய சி.இ.ஓ., பட்டியல்

கல்விதுறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், விரைவில் புதிய முதன்ைம கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்), அவர்களுக்கு இணையான நிலையில் உள்ள கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், கடந்த மே 31, மற்றும் ஜூன் 30 ல் பணி ஓய்வு பெற்றனர்.

தற்போது 12 க்கும் மேற்பட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது.இந்த பணியிடங்களை நிரப்ப, பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பட்டியல், பணியிட மாற்றம் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் சி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பட்டியல் வெளியிடப்படும், என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

TNTET-2013:ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆங்கிலப்பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் Caste wise விபரம்.RTI -NEWS


2013 TNTET 90  and Above English= 5220

2013 TNTET  90  and Above Caste wise List
BC-2445
MBC-1744
SC-796
ST -10

2013 TNTET 82 TO 89 in English= 5386

BC-2476
MBC-1615
SC-1015
ST -26
Thanks to-Mr.Eswaran

Thursday, July 03, 2014

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை: பி.எட்., தொலைதூர கல்வி சேர்க்கை

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜனவரி முதல் ஆரம்பமாக உள்ள தொலைதூர கல்வி பி.எட். படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பவர் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் முழு நேர பணியிலுள்ள இரண்டு வருட ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட் படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதல் தகவல்களுக்கு www.tnou.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

் தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கான கலந்தாய்வு அட்டவணையை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படிப்பில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2,800 இடங்களும், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களும் உள்ளன. இந்த இடங்களில் சேர 4,520 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 464 மாணவர்கள், 4,056 மாணவியர் ஆவர். இந்தப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூலை 7 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியரின் மதிப்பெண் அடிப்படையில் தர வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வு நடைபெறும் இடம், நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதங்கள் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கடிதங்கள் கிடைக்கப் பெறாதவர்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் www.tnscert.org என்ற இணையதளத்திலிருந்து அழைப்புக் கடிதங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து அழைப்புக் கடிதங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ்களும், மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள் ராணுவத்தினரின் மகன், மகள் போன்றவர்கள் அதற்கான சான்றிதழ்களை எடுத்துவர வேண்டும்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்தவர்களுக்கு இன்று பரிசு: முதல்வர் வழங்குகிறார்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை (ஜூலை 4) பரிசு வழங்குகிறார். பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், பத்தாம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்தவர்களில் மாநில அளவில் மூன்று இடங்களில் 4 மாணவ, மாணவியர் இடம்பெற்றனர். முதலிடத்தில் எஸ்.சுஷாந்தி என்ற மாணவியும், இரண்டாவது இடத்தில் ஏ.எல்.அலமேலு என்ற மாணவியும், மூன்றாவது இடத்தில் டி.துளசிராஜன், எஸ்.நித்யா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்புத் தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்தவர்களில் மாநில அளவில் முதலிடத்தில் 19 பேரும், இரண்டாம் இடத்தில் 125 பேரும், மூன்றாவது இடத்தில் 321 பேரும் இடம்பெற்றனர். முதல் மூன்று இடங்களில் 465 மாணவ, மாணவியர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு மட்டும் முதல்வர் ஜெயலலிதா நேரில் பரிசுகளை வழங்குகிறார். இந்த ஆண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களோடு, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும் முதல்வர் நேரில் பரிசுகளை வழங்குவார் எனத் தெரிகிறது.

TNPSC CCSE-II(GROUP 2A) Tentative Answer Keys.

Engineering counsling

*Counsling begins july 7

*six batches wil be called on first day

*From july 8th counsling from 7am -8.30pm

*Each batch have abount 500students&wil take 90minutes to complete

*9 batches to be counselled each day

*buses have been arranged by anna univ

*total no.of students 1.73L

Wednesday, July 02, 2014

TNPSC Group 1 Preliminary Exam - Application Status Check.

ஆன் லைனில் பி.எப்., கணக்கு எண் பெறும் புதிய வசதி அறிமுகம்

ஆன் லைன் மூலம் விண்ணப்பித்து, தொழிலாளர் பி.எப்., கணக்கு எண் பெறும் முறை, நேற்று முதல் துவங்கப்பட்டது. இவ்வசதியை, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமர், டில்லியில் துவக்கி வைத்தார்.புதிய வசதி குறித்து, அவர் கூறுகையில், ''தொழிலாளர்கள் நலனுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து செயல்படுகிறது. மத்திய அரசு அமைந்து முதல் 100 நாளில், பி.எப்., சந்தாதாரர்களுக்கு, யுனிவர்சல் கணக்கு எண் அளிக்க வேண்டும் என, முடிவு செய்துள்ளோம்.

தொழிலாளர் சேம நல நிதித் துறை இந்த இலக்கை எட்டும்,'' என்றார்.தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் விஷ்ணு டியோ சாய்ஜி பேசுகையில், ''தொழில் நிறுவனங்கள், பி.எப்., கணக்குகளைத் துவங்குவதற்கு, ஆன் லைன் வசதி எளிதானது. மேலும், இதன்மூலம், வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்படும்,'' என்றார்.வழக்கமாக, பி.எப்., கணக்கு எண்ணை, தொழிலாளி ஒருவருக்குப் பெற, பி.எப்., அலுவலகம் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து, பி.எப்., எண்ணை ஒதுக்க சில காலம் பிடிக்கும். இந்த கால தாமதம், ஆன் லைன் வசதி மூலம் போக்கப்படுகிறது. பி.எப்., கணக்கைத் துவங்க, ஆன் லைன் மூலம் விண்ணப்பித்தால், ஒரு நாளில் கணக்கு எண் ஒதுக்கப்படும். மேலும், விண்ணப்பம் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும், ஆன் லைனில் தெரிந்து கொள்ளலாம்.

பி.எப்., கணக்கு துவங்க நீண்ட நாட்கள் ஆகிறது. அதிகாரிகள் விரைந்து செயல்படுவதில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு இனி இடம் இருக்காது.தொழிலாளர்கள் எளிதாக அணுகும் வகையில், புதிய வசதி இருக்கும் என, தொழிலாளர் நலத்துறை செயலர் கவுரிகுமார் தெரிவித்துள்ளார்.

2014-15ஆம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளுக்கும் கற்றல் அட்டைகள் மீண்டும் வழங்கிட திட்டம்

சிறுபான்மையின மாணவருக்கு கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க அழைப்பு

சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில், மேல்நிலை, உயர்நிலை மற்றும் கல்லூரி, பட்டப்படிப்பு பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த சிறுபான்மையின மாணவ மாணவியர் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற www.momascholarship.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கால வரையறை புதியதற்கு செப். 15, புதுப்பித்தலுக்கு அக். 10 வரை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவ மாணவியர் அதை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

Tuesday, July 01, 2014

பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கான பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

வாக்காளர்களுக்கு 'பிளாஸ்டிக்' அட்டை: கலரில் மிளிரப்போகுது உங்கள் முகம்

வாக்காளர்களுக்கு வண்ண 'பிளாஸ்டிக்' அடையாள அட்டை வழங்கும் பணியை, அடுத்த மாதத்தில் துவங்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படம் தெளிவாக இருப்பதில்லை; 'இது யார் நானா?' என நம்மை நாமே கேட்கும் வகையில் 'கோணல் மாணலாக' இருக்கும். மேலும், எளிதில் சேதமடைந்து விடும். இதையடுத்து வண்ண புகைப்பட 'பிளாஸ்டிக்' அட்டை வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்து, அதற்கான 'டெண்டர்' விடப்பட்டது. லோக்சபா தேர்தல் வந்ததால் இதற்கான பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், ஆகஸ்ட்டில் 'பிளாஸ்டிக்' அட்டை வழங்கும் பணியை துவங்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்கு முன்பே, புது வாக்காளர்களுக்கு இந்த அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டது. போதிய அவகாசம் இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த மார்ச்சில் நடந்த சிறப்பு முகாம்களில், பெயர் சேர்த்தோருக்கு 'பிளாஸ்டிக்' அட்டைகள் வழங்கப்படும். அதைத்தொடர்ந்து, பழைய அட்டைகள் வைத்துள்ள அனைவருக்கும் படிப்படியாக மாற்றி வழங்கப்படும். இதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை.

வாக்காளர் பட்டியலில் தொடர் திருத்தப்பணி தற்போது நடக்கிறது. பெயர் சேர்ப்பு (படிவம் 6), நீக்கல் (படிவம் 7), திருத்தம் (படிவம் 8), ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் (படிவம் 8ஏ) ஆகியவற்றில், 'ஆன்லைன்' அல்லது தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் வரை விண்ணப்பம் பெறப்பட்டு, அக்.,1ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அக்., 1 முதல் 31 வரை வாக்காளர் சுருக்கத்திருத்தப்பட்டியல் பணி நடைபெறும். பெயர் சேர்ப்பிற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்; பின், இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு கூறினார்.

ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வு வரும் 7ம் தேதி துவங்குகிறது

  ஆசிரியர் பயிற்சி சேர்க்கை கலந்தாய்வு, வரும், 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில், 29 மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் (அரசு பள்ளிகள்), 9, அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 42, அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் 400 தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 13 ஆயிரம் இடங்கள் உள்ளன. எனினும், 4,520 மாணவர்கள் மட்டும் விண்ணப்பித்துள்ளனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், இணையதளம் வழியாக, வரும், 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் மற்றும் 'ரேங்க்' பட்டியல், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் தீதீதீ.tணண்ஞிஞுணூt.ணிணூஞ் இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது. மாணவர்கள், அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து, அவரவர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, குறிப்பிட்ட தேதியில் செல்ல வேண்டும்.

Important Events in the History of  School Education Department

Important Events in the History of  School Education Department

http://www.tn.gov.in/schooleducation/statistics/table2-event.htm

Monday, June 30, 2014

01.07.2014 முதல் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு -teachertn

மே'2014 மாத விலைவாசி உயர்வுக் குறியீட்டு எண் இன்று (ஜூன் 30) வெளியிடப்பட்டது. இதன் படி அகவிலைப்படி உயர்வு 106.17% ஆக உள்ளது. ஜூன் மாத விலைவாசி உயர்வுக் குறியீட்டு எண் ஜூலை 31 ஆம் தேதி வெளியிடப்படும். அதன்பிறகே அகவிலைப்படி உயர்வு எவ்வளவு என்பது துல்லியமாக தெரிய வரும்.  இதன்பிறகு அகவிலைப்படி உயர்வு பற்றிய நடைமுறைகள் தொடங்கும்.  ஆகஸ்ட் இரண்டாம் வாரம் அகவிலைப்படி உயர்வு பற்றிய பரிந்துரைகள் மத்திய அமைச்சரவை குழுவிற்கு அனுப்பப் படும்.

  மத்திய காபினெட் இதுபற்றி முடிவு செய்து, செப்டம்பர் முதல் அல்லது இரண்டாம் வாரம் அதிகாரப் பூர்வமான அறிவிப்பை வெளியிடும்.  இதன் பிறகு அரசாணை வெளியிடப்படும்.  மத்திய அரசின் அரசாணையை பின்பற்றி மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிடும்.  மாநில அரசுகள் செப்டம்பர் 2 அல்லது 3 ஆம் வாரத்தில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என எதிபார்க்கப் படுகிறது.  மாநில அரசு ஊழியர்கள் அக்டோபர் முதல் வாரத்தில் 3 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை பெறுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. 01.07.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 7% அல்லது 8% ஆக இருக்கலாம் என கணிக்கப் பட்டுள்ளது.

District Transfer Online Counselling Website

click below

http://tndee.in/

புதிய மருத்துவ காப்பீட்டில் சேர ஓய்வூதியதாரர்களுக்கு காலக்கெடு நீட்டிப்ப

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர ஓய்வூதியதாரர்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: 1-7-2014 முதல் ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய படிவத்தை ஜூன் 30க்குள் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது இதற்கான காலக்கெடு இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, படிவங்களை இதுவரை அளிக்காத ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் 31ம் தேதிக்குள் ஓய்வூதியம் பெறும் அலுவலகத் தில் பொதுத்துறை வங்கி கிளையில் அளித்து, அதன் ஒரு நகலை ஓய்வூதியம் வழங்கும் அலுவலரின் கையொப்பத்துடன் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த நகலை, அடையாள அட்டை வழங்கப்படும் வரை பணம் செலவின்றி மருத்துவச் சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்; அதிகாரப்பூர்வ தகவல்

ஆசிரியர் தேர்வு வாரியம் துணை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.811/TET/2014, நாள்.17.06.2014ன் படி  TNTETல்தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்

தமிழ் - 9853 ஆங்கிலம் - 10716 கணிதம் - 9074 தாவரவியல் - 295 வேதியியல் - 2667
விலங்கியல் - 405
இயற்பியல் - 2337 வரலாறு - 6211 புவியியல் - 526 மொத்தம் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் : 42084

இட மாறுதல் கலந்தாய்வில் குழப்பம்: 'ஆன்லைன்' குளறுபடியால் ஆசிரியர்கள் ஆவேசம் A

: திருப்பூரில் நடந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில், நீலகிரி மாவட்டத்தில், பணியிடம் காலி இல்லை என 'ஆன்லைன்' தகவல் வந்ததால், ஆசிரியர்கள் ஆவேசம் அடைந்தனர். திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில், நேற்று, துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 'கவுன்சிலிங்' துவங்கியது. மாவட்ட கல்வி அலுவலர் கரோலின் தலைமையில், 26 உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், கவுன்சிலிங் நடத்தினர். திருப்பூர் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 582 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 195 பேர் பணி இட மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

நீலகிரி மாவட்டத்துக்கு இட மாறுதல் கேட்டு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு, அங்கு பணியிடம் காலி இல்லை என ஆன்-லைனில் வந்துள்ளது. இதனால் ஆவேசம் அடைந்த ஆசிரியர்கள், பள்ளி வளாகத்தில் திரண்டு நின்றிருந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஆசிரியர்களை சமாதானப்படுத்தினர். மாவட்ட கல்வி அலுவலர் கரோலின் கூறுகையில்,''நீலகிரி மாவட்டத்துக்கு இட மாறுதல் செய்ய, காலி பணியிடம் இல்லை என்று ஆன்-லைனில் தகவல் வந்தது. சென்னை இயக்குனரகத்தில் இருந்து, இத்தகவல் வருவதால், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. எங்கள் தரப்பில், எந்த தவறும் இல்லை,'' என்றார். ஆசிரியர்கள் மதியம் வரை காத்திருந்தனர்.

அதன்பின், மீண்டும் முயற்சி செய்தபோது, நீலகிரி மாவட்டத்தில் காலி பணியிடங்கள் இருப்பதாக காட்டியது. அதன்பின், அம்மாவட்டத்துக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, 'கவுன்சிலிங்'கில் பங்கேற்றனர். ஆசிரியர்கள் திடீர் மறியல்: ' திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை காட்ட மறுக்கின்றனர்; ஆன்லைன் கவுன்சிலிங்கில் குளறுபடி நடக்கிறது,' என, கூறி வெளிமாவட்ட ஆசிரியர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். நேற்று இரவு 8.00 மணிக்கு ஜெய்வாபாய் பள்ளி முன் ரோட்டில் அமர்ந்த ஆசிரியர்கள், 'ஆன்லைன் கவுன்சிலிங்கில் குளறுபடி நடக்கிறது; காலிப்பணியிடங்களை காட்ட மறுக்கின்றனர்,' எனக் கூறி கோஷம் எழுப்பினர்.

திருப்பூர் வடக்கு போலீசார் அவர்களை பள்ளிக்குள் அழைத்துச் சென்றனர். முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி கூறுகையில், ''மாநிலம் தழுவிய கவுன்சிலிங்; சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இன்றைய நிலை இது; நாளை (இன்று) காலை கவுன்சிலிங் 9.00 மணிக்கு துவங்கும். அதில் உள்ள பகுதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்,' என்றார்.

Sunday, June 29, 2014

பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்குவதற்கான மறு தேதி திங்கள்கிழமை (ஜூன் 30) இறுதி செய்யப்படும

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பொறியியல் கலந்தாய்வு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட உள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) நிலுவையில் உள்ள பொறியியல் கல்லூரி விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்ய ஒரு வாரம் கால அவகாசத்தை அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த 26-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து கடந்த 27-ஆம் தேதி தொடங்கியிருந்த பொதுப் பிரிவு கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்தி வைத்தது.

இதனால் கடும் பாதிப்புக்கு ஆளான, மாணவர்களும் பெற்றோரும், கலந்தாய்வு மறு தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், நிலுவையில் உள்ள கல்லூரி விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணி திங்கள்கிழமை (ஜூன் 30) முடிக்கப்பட்டு விடும் என்றும், அதன் பிறகு பொதுப் பிரிவு கலந்தாய்வு மறு தேதியை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இரு தினங்களுக்கு முன்பு ஏஐசிடிஇ அனுமதி அளித்தது. இதனடிப்படையில், கலந்தாய்வு மறு தேதியை இறுதி செய்வதற்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் திங்கள்கிழமை கூட்டுகிறது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம் கூறியது:

கலந்தாய்வு மறு தேதியை நிர்ணயம் செய்ய பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கூட்டப்பட உள்ளது. பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஏற்கெனவே கலந்தாய்வு தொடங்குவதற்கான மூன்று தேதிகள் தெரிவு செய்து வைக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இதில் ஏதாவது ஒரு தேதி இறுதி செய்யப்பட்டு உடனடியாக அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

Bharadhidasan University M.ed prospectus

M.Ed. Application & Prospectus

click below

http://www.bdu.ac.in/admission/cde2014/CDE_MED_2014.pdf

Saturday, June 28, 2014

பி.இ., கலந்தாய்வு தேதி நாளை வெளியாகுமா? -dinamalar

பி.இ., கலந்தாய்வு தேதியை, நாளை அல்லது நாளை மறுநாள், அண்ணா பல்கலை அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த, 27ம் தேதி துவங்க வேண்டிய பி.இ., பொதுப்பிரிவு கலந்தாய்வு, உச்சநீதிமன்றம் உத்தரவு காரணமாக, கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது. ஏ.ஐ.சி.டி.இ., (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு), தன்னிடம் நிலுவையில் உள்ள புதிய பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுத்ததும், அதன்பின், இணைப்பு அங்கீகாரம் வழங்க வேண்டிய பணியை, அண்ணா பல்கலை செய்யும். ஏ.ஐ.சி.டி.இ., நாளைக்குள், நிலுவை விண்ணப்பங்கள் மீது முடிவை எடுத்துவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது

. எனவே, அதற்கடுத்த ஓரிரு நாளில், தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்க, அண்ணா பல்கலை நடவடிக்கை எடுத்துவிடும்.எனவே, நாளை மாலைக்குள், ஏ.ஐ.சி.டி.இ., முடிவு தெரிந்துவிடும் என, அண்ணா பல்கலை எதிர்பார்க்கிறது. அதன்படி, நாளை, ஏ.ஐ.சி.டி.இ., முடிவு வந்ததும், கலந்தாய்வு துவங்கும் தேதியை, அண்ணா பல்கலை அறிவிக்கும். இழப்பு நாட்களை ஈடுகட்டும் வகையில், கலந்தாய்வு சுற்றுக்களை அதிகப்படுத்த, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப, ஏற்கனவே வெளியிட்ட கலந்தாய்வு அட்டவணையை மாற்றி, புதிய அட்டவணையை வெளியிடவும், பல்கலை திட்டமிட்டுள்ளது.