இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, May 23, 2014

பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம்- மாவட்ட வாரியாக

மாவட்ட வாரியாக தேர்வு விகிதம்

ஈரோடு -97.88
கன்னியாகுமரி-97.78
நாமக்கல்-96.58
விருதுநகர்-96.55
கோவை-95.6
கிருஷ்ணகிரி-94.58
திருப்பூர்-94.38
தூத்துக்குடி-94.22
சிவகங்கை-93.44
சென்னை-93.42
மதுரை-93.13
ராமநாதபுரம்-93.11
கரூர்-92.71
ஊட்டி-92.69
தஞ்சாவூர்-92.59
திருச்சி-92.45
பெரம்பலூர்-92.33
சேலம்-91.89
திருநெல்வேலி-91.88
தர்மபுரி-91.66
புதுக்கோட்டை-90.48
திண்டுக்கல்-89.84
திருவள்ளூர்-89.19
காஞ்சீபுரம்-89.17
தேனி-87.66
வேலூர்-87.35
அரியலூர்-84.18
திருவாரூர்-84.13
கடலூர்-83.71
விழுப்புரம்-82.28
நாகபபட்டினம்-82.28
திருவண்ணாமலை-77.84
புதுச்சேரி-91.69
 

Thursday, May 22, 2014

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 1 லட்சம் உயர் கல்வி வழிகாட்டி புத்தகங்கள

   அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக ஒரு லட்சம் உயர் கல்வி வழிகாட்டி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களிடம் உயர் கல்வி வாய்ப்புகள் தொடர்பாக பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்தப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல் படிப்புகள், சட்டப் படிப்புகள், கல்விக் கடன் பெறுவது தொடர்பான விவரங்கள், வேலைவாய்ப்புக்கு உதவும் படிப்புகள், மாணவர்களுக்கு பயனுள்ள இணையதளங்கள் உள்ளிட்ட விவரங்கள் இந்த வழிகாட்டி புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

டி.இ.டி., சான்றிதழ் வாங்கலையா?


   டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) சான்றிதழ் வாங்காத தேர்வர்கள், தங்களது விவரங்களை, ஜூன், 7ம் தேதிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும்' என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அறிவித்து உள்ளது. அறிவிப்பு விவரம்:கடந்த, 2012, ஜூலை 12ம் தேதி, மற்றும் அதே ஆண்டில், அக்டோபர், 14ம் தேதி நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது.

எனினும், டி.இ.டி., தகுதி சாறிதழ் கிடைக்காதவர் யாராவது இருந்தால், அவர்கள், தங்களது விவரங்களை, வரும், ஜூன் 7ம் தேதிக்குள், சம்பந்தபட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை சந்தித்து, தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு கடந்தாண்டு வழங்கிய பஸ் பாஸ் ஆகஸ்ட் வரை செல்லுபடியாகும

 
   நடப்பு கல்வியாண்டு தொடங்கி 3 மாத காலத்திற்கு கடந்தாண்டு பயன்படுத்தப்பட்ட பழைய பஸ் பாஸ் செல்லுபடியாகும் என போக்குவரத்து கழகங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பஸ் பாஸ்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு 2 மாதங்கள் கழித்துதான் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலை யை தவிர்க்கும் வகை யில், நடப்பு கல்வியாண்டிற்கான இலவச பஸ் பாஸ் முன்கூட்டியே வழங்கிட பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.

    இதற்காக பஸ் பாஸ் தேவை பட்டியலை ஒவ்வொரு பள்ளியும் முன்கூட்டியே தயாரித்து போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தேவை பட்டியல் தயாரித்து பஸ் பாஸ்கள் அச்சடித்து மீண்டும் மாணவர்களுக்கு வழங்க காலதாமதம் ஏற்படும் என்பதால் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பஸ் பாஸ் 3 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பள்ளி மாணவர்களுக்கு கடந்த கல்வியா ண்டில் வழங்கப்பட்ட இலவச பஸ் பாஸ் நடப்பு கல்வியாண்டில் ஆகஸ்ட் வரை 3 மாத காலத்திற்கு பயன்படுத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது.கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பழைய பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்களை அரசு பஸ்கள் ஏற்றி செல்ல வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பழைய பஸ் பாஸ் காணாமல் போயிருந்தால், பள்ளி சீருடையில் மாணவர்கள் இருந்தால் அந்த மாணவர்களை அரசு பஸ்கள் கட்டாயம் ஏற்றி செல்ல வேண்டும். பஸ் பாஸ் இல்லை என்பதற்காக எக்காரணம் கொண்டும் மாணவர்களை ஏற்றாமல் பஸ்கள் செல்லக்கூடாது என்று போக்குவரத்து கழகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது என்றனர்.

NHIS Form 2

NHIS Form 1

Wednesday, May 21, 2014

ஆசிரியர் தகுதி.தேர்வு தாள் 2 எழுதுவதற்கான சரியான கல்விதகுதி. தகவல் அறியும் கடிதம்

அரசு ஊழியர் விடுமுறை நாட்களை குறைக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு


அரசு ஊழியர்கள் விடுமுறை நாட்களை குறைக்க கோரிய வழக்கில் உத்தரவை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.திருச்சி, வயலு£ரை சேர்ந்தவர் இளமுகில். ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:அரசு ஊழியர்களுக்கு குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதோடு சனி மற்றும்
ஞாயிற்று கிழமைகளில் வார விடுமுறையாக 104 நாட்களும், மத்திய, மாநில அரசு விடுமுறை, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட 164 நாட்கள் விடுமுறையாக கிடைக்கிறது. ஆண்டில் 196 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கின்றனர். பள்ளிகளில் 230 நாட்கள் வரை வேலைபார்க்கிறார்கள்.இதோடு தேர்தல் காலங்களில் தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

இதனால் பொதுமக்களின் மனுக்கள் அரசு அலுவலகங்களில் ஆண்டுகணக்கில் தேங்குகின்றன. அரசு ஊழியர்களால் மக்கள் பணியாற்ற முடியாமல் போகிறது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பது மேற்கத்திய நாடுகளின் வழக்கம். அங்கு மக்களும் குறைவு, மக்கள் பிரச்னையும் குறைவு. இதனால் உடனுக்குடன் பிரச்னைகள் தீர்க்கப்படும்.பட்டா மனுக்கள் லட்சக்கணக்கில் நிலுவையில் உள்ளன. ஓட்டுநர் உரிமம், கட்டிட வரைபட அனுமதி, மின்சார இணைப்புகள், ஓய்வூதியம், கருணை வேலை மனுக்கள் உள்ளிட்டவை ஆண்டு கணக்கில் நிலுவையில் உள்ளன. மத்திய ஊதிய குழு கடந்த 24.3.2008ல் ஓர் அறிக்கையை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதில், தேசிய விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் அரசு அலுவலகங்கள் திறந்திருக்க வேண்டும். அரசிதழில் வெளியிடப்பட்ட விடுமுறை நாட்களை குறைக்க வேண்டும். விழாக்காலங்களில் மற்ற மதத்தினரும், விருப்பமுள்ளவர்களும் பணிக்கு வரலாம் என்று கூறியுள்ளனர்.

இந்த பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை.சனிக்கிழமையை வேலை நாளாக அறிவிக்க வேண்டும். அப்படி செய்தால் மக்கள் குறைகளை விரைவாக தீர்க்க முடியும். இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களை குறைந்தது 2 நாளாகவும், அதிகபட்சம் 8 நாளாகவும் மாற்ற வேண்டும். அரசிதழில் வெளியிட்ட 18 நாள் விடுமுறையை ரத்து செய்ய வேண்டும். ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் அரசு அலுவலகங்கள் திறந்திருக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

ஜூன் 18 முதல் 30 வரை பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு: பத்தாம் வகுப்புக்கு ஜூன் 23 முதல் தேர்வ

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 18 முதல் 30 வரை நடைபெற உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 முதல் 30 வரை சிறப்பு துணைத்தேர்வு நடைபெற உள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மே 9-ஆம் தேதி வெளியனது. மொத்தம் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய இந்தத் தேர்வில் 76,913 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் சிறப்பு துணைத் தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர்.

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 23) வெளியிடப்பட உள்ளன. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் சிறப்பு துணைத் தேர்வுக்கு தனியாக விண்ணப்பிக்கலாம்.

 

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு அட்டவணை

 

ஜூன் 18 - புதன்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்

ஜூன் 19 - வியாழக்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்

ஜூன் 20 - வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

ஜூன் 21 - சனிக்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

ஜூன் 23 - திங்கள்கிழமை - இயற்பியல், பொருளாதாரம்

ஜூன் 24 - செவ்வாய்க்கிழமை - கணிதம், விலங்கியல்,

மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷன் அண்டு டயட்டிக்ஸ்

ஜூன் 25 - புதன்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல்

ஜூன் 26 - வியாழக்கிழமை - வேதியியல், கணக்குப் பதிவியல்

ஜூன் 27 - வெள்ளிக்கிழமை - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்

ஜூன் 28 - சனிக்கிழமை - கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, தமிழ் சிறப்புப் பாடம், தட்டச்சு (ஆங்கிலம், தமிழ்)

ஜூன் 30 - திங்கள்கிழமை - தொழில் பாட எழுத்துத் தேர்வு, பொலிட்டிகல் சயின்ஸ், நர்சிங் (பொது), புள்ளியியல்

 

 

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு அட்டவணை

 

ஜூன் 23 - திங்கள்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்

ஜூன் 24 - செவ்வாய்க்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்

ஜூன் 25 - புதன்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

ஜூன் 26 - வியாழக்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

ஜூன் 27 - வெள்ளிக்கிழமை - கணிதம்

ஜூன் 28 - சனிக்கிழமை - அறிவியல்

ஜூன் 30 - திங்கள்கிழமை - சமூக அறிவியல்

மருத்துவம், பொறியியலில் அதிக "கட்-ஆப்' : அரசு பள்ளி மாணவர்கள் 3,000 பேர் சாதனை

    தமிழக அரசு பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், 3,000 பேர், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில், "கட்-ஆப்' மதிப்பெண், 185க்கும் அதிகமாக பெற்று, சாதனை படைத்து உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவு, கடந்த, 9ம் தேதி வெளியானது. ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியது.
இந்த தேர்வில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், பொறியியல், மருத்துவ படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்கள் பெற்ற, "கட்-ஆப்' மதிப்பெண் ஆகிய புள்ளி விவரங்களை சேகரிக்க, பள்ளிகல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டார். மாவட்ட வாரியாக, புள்ளி விவரங்கள் பெறப்பட்டு, இறுதி செய்யப்பட்டன. அதன்படி, மருத்துவம், பொறியியல், "கட்-ஆப்' மதிப்பெண் வரிசையில், 185 முதல் 200 வரை, 2,837 மாணவர்கள் இடம் பிடித்து, சாதனை படைத்தது தெரிய வந்துள்ளது. மாநிலம் முழுவதும், 2,595 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், 113 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்றிருப்பதாகவும், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், இந்த ஆண்டு, 84.1 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும், பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 5.1 சதவீதம், தேர்ச்சி
அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மருத்துவம், பொறியியல் இரண்டிலும், அதிகபட்சமாக, நெல்லை மாவட்ட மாணவர்கள், 216 பேர், 185க்கும் அதிக மாக, "கட்-ஆப்' மதிப்பெண் பெற்று உள்ளனர்.
மிக குறைவாக, நீலகிரி மாவட்ட மாணவர்கள், 13 பேர் இடம் பெற்றுள்ளனர்.
கன்னியாகுமரி, நாமக்கல், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, வேலூர், ஈரோடு, காஞ்சிபுரம், தருமபுரி, திருவள்ளூர், சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், மூன்று இலக்க எண்ணிக்கையில், "கட்-ஆப்' மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.



"கட் - ஆப்' மதிப்பெண் விவரம்

பி.இ.,

185 முதல் 190க்குள் 930 பேர்
190 முதல் 195 வரை 659
195 முதல் 200 வரை 294
மொத்தம் 1,883

எம்.பி.பி.எஸ்.,

185 முதல் 190 வரை 558 பேர்
190 முதல் 195 வரை 291
195 முதல் 200 வரை 105
மொத்தம் 954

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் இணையதளங்கள் -தினமணி

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in www.dge3.tn.nic.in இவற்றில் http://www.dge1.tn.nic.in என்ற இணையதள முகவரி மூலம் தேர்வர்கள் எளிதாக தேர்வு முடிவுகளை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணையதளங்களில் தேர்வு முடிவுகளை காண மாணவர்கள் தங்களது தேர்வெண்ணுடன் பிறந்த தேதியையும் அளிக்க வேண்டும்.   எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அறிய: எஸ்.எம்.எஸ் குறுந்தகவல் மூலம் முடிவுகளை அறிய 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD, தகவல் அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டாக, “TNBOARD 1234567,25/10/1996” என்று குறுந்தகவல் அனுப்பினால், பதிவு எண் 1234567 என்றும், 25/10/1996 என்பது பிறந்த தேதி எனவும் கொள்ளப்படும்.  23ம் தேதி காலை 10 மணிக்குப் பிறகுதான் எஸ்.எம்.எஸ் வசதி துவக்கப்படும் என்பதால், அதற்கு முன்னதாக யாரும் குறுந்தகவல் அனுப்ப வேண்டாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centre), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.   தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்தல்: தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் 23.05.2014 அன்றே மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்றே தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் அவர்களின் தேர்வுமுடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. எனவே, தனித்தேர்வர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.   மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை : மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு (Retotalling) Online முறையில் விண்ணப்பங்கள் வரவேற்றல் குறித்த செய்திக்குறிப்பு : மார்ச்/ஏப்ரல் 2014 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு (சுநவடிவயடடiபே) விண்ணப்பிக்கலாம். மார்ச்/ஏப்ரல் 2014 எஸ்.எஸ்.எல்.சி தேர்வெழுதி விடைத்தாள்களின் மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர் 26.05.2014 (திங்கட்கிழமை) முதல் 31.05.2014 (சனிக் கிழமை) மாலை 5.00 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.   மறுகூட்டல் கட்டணம் : இருதாட்கள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் : ரூ.305/- (மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம்) ஒரு தாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் : ரூ.205/- (கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல்)   மறுகூட்டலுக்கான கட்டணம் செலுத்தும் முறை : மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணாக்கர் தாங்கள் பயின்ற பள்ளியிலும் தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாக செலுத்த வேண்டும்.   இடைநிலை சிறப்பு துணைத்தேர்வு, ஜூன் 2014 : மார்ச்/ஏப்ரல் 2014-ல் நடைபெற்ற இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கு நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள், அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் 26.05.2014 (திங்கட்கிழமை) முதல் 30.05.2014 (வெள்ளிக்கிழமை) வரை தேர்வுக்கட்டணம் ரூ.125/-ஐ பணமாக செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கென தனி விண்ணப்பம் எதுவும் கிடையாது. தேர்வுக் கட்டணம் தவிர பதிவுக் கட்டணமாக ரூ.50/-ஐ பள்ளியில் செலுத்த வேண்டும்.

Tuesday, May 20, 2014

உதவித்தொடக்ககல்வி அலுவலர் பதவியில் இருந்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக செல்ல விரும்புவோர் விவரம் உடனே சேகரித்தி அனுப்ப இயக்குனர் உத்திரவு

click here to download the DEE proceedings

https://app.box.com/s/m2awa3xgyvqzsgi7ogg2

Departmental Examinations, May, 2014 Memorandum of Admission (Hall Ticket)

To know your VAO application Status

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வினியோகம்

பிளஸ் 2 தேர்வு முடிவு, கடந்த, 9ம் தேதி வெளியானது. 8.21 லட்சம் பேர் தேர்வெழுதியதில், 7.44 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். 77 ஆயிரம் பேர், தோல்வி அடைந்தனர். அனைத்து மாணவர்களுக்கும், இன்று முதல், மதிப்பெண் பட்டியல் வினியோகிக்கப்படுகின்றன. பள்ளி மாணவர்கள், அவரவர் பள்ளிகளுக்கு சென்றும், தனித்தேர்வு மாணவர்கள், தேர்வெழுதிய மையங்களுக்கு சென்றும், மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்

Monday, May 19, 2014

ஆசிரியர் காலியிட விபரம் சேகரிப்பு

அனை த்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது.தொடக்கக் கல்வி இயக்குநர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொள்ளப்பட நடவடிக்கைகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் விவரம், ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க உள்ள பள்ளிகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

முக்கியமாக இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிட விவரங்களுடன் ஆஜராக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த காலி பணியிட விவரங்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப் படுவர் என தெரிகிறது.

வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட வேண்டிய மேல்நிலைபள்ளிகள் பட்டியல

வரும் கல்வியாண்டில் உயர்நிலை பள்ளியில் இருந்து மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டிய அரசு பள்ளிகளின் பட்டியல் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் வரும் 2014-15ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை பள்ளிகளில் இருந்து மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட வேண்டிய பள்ளிகளின் பட்டியலை தயாரித்து அனுப்ப பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே அரசு மேல்நிலை பள்ளிகள் உள்ள இடங்களில் ஒரு அரசு உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்துவதை விட, அரசு மேல்நிலை பள்ளிகளே இல்லாத இடத்தில் உள்ள உயர்நிலை பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் தரம் உயர்த்த பொதுமக்கள் பங்குத்தொகையாக ரூ.2 லட்சம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அருகருகில் மேல்நிலை பள்ளிகள் இருந்து பங்கு தொகை கட்டியிருந்தாலும் அந்த பகுதியில் புதிதாக ஒரு அரசு உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 கி.மீ. தூரத்திற்குள் ஒரு மேல்நிலை பள்ளி இருக்க வேண்டும் என்று அரசாணை உள்ள நிலையில், அப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை அதிகம் இருப்பின் அதன் அருகில் மற்றொரு உயர்நிலை பள்ளியை மேல்நிலைபள்ளியாக தரம் உயர்த்தலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் கடந்த காலங்களில் பள்ளிகள் தரம் உயர்வதற்காக பொதுமக்களால் பங்குத்தொகை செலுத்தப்பட்டு இதுவரை தரம் உயர்த்தப்படாத பள்ளிகளின் விவரங்களை பட்டியலிட்டு அந்த பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர்கள் தரம் உயர்த்தப்பட உள்ள பள்ளிகள் பட்டியல், முன்னுரிமை பட்டியல் விபரங்களை மாவட்ட வாரியாக தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

UPSC சிவில் சர்வீஸ் தேர்வின் முதல் கட்டமான Preliminary தேர்வு விரைவில் நடைபெறவுள்ளதால், அதற்கான விண்ணப்பத்தை www.upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது:

மே 17ம் தேதி முதல், Preliminary தேர்வுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம். Preliminary தேர்வுக்கான விண்ணப்பத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தவுடன், நீங்கள் தேர்வெழுத பதிவு செய்யப்படுவீர்கள். அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, தகுதியுடைய நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.மே 17ம் தேதி தொடங்கும் விண்ணப்பித்தல் செயல்பாடு, ஜுன் 16ம் தேதி நிறைவடைகிறது. ஆகஸ்ட் 24ம் தேதி தேர்வு நடைபெறும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.அதேசமயம், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. அது விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்), சென்னை மண்டல, 10ம் வகுப்பு தேர்வு முடிவு, நேற்று மாலை வெளியானது.


மார்ச் மாதம், நாடு முழுவதும், 10ம் வகுப்பு தேர்வு நடந்தது. சி.பி.எஸ்.இ.,யை பொறுத்தவரை, பள்ளி அளவிலான தேர்வு, சி.பி.எஸ்.இ., போர்டு அளவிலான தேர்வு என, இரு வகையாக நடக்கிறது. இதில், போர்டு தேர்வில், அதிக மாணவர்கள் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கோவா, புதுச்சேரி உள்ளிட்ட, மேலும் சில மாநிலங்கள் அடங்கிய, சென்னை மண்டலத்தின், 10ம் வகுப்பு தேர்வு முடிவை, சி.பி.எஸ்.இ., நிர்வாகம், நேற்று மாலை வெளியிட்டது. தமிழகத்தில், இந்த தேர்வை, 50 ஆயிரம் பேர் எழுதி உள்ளனர். www.cbseresults.nic.in என்ற இணையதளத்தில், மாணவர்கள், தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, தேர்வை முடிவை அறியலாம்.

மதிப்பெண் அடிப்படையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'கிரேடு' வழங்கப்படுகிறது. மதிப்பெண் பட்டியலில், மாணவரின், 'கிரேடு' மட்டுமே இடம்பெற்றிருக்கும். மேலும், 'ரேங்க்' போன்ற விவரங்களும், சி.பி.எஸ்.இ.,யில் கிடையாது. தேர்வு முடிவு குறித்து, சென்னை மண்டல, சி.பி.எஸ்.இ., செயலர், சுதர்சன் ராவ் கூறுகையில், ''மண்டல அளவிலான தேர்ச்சி சதவீதம் உள்ளிட்ட முழுமையான விவரம், இன்று தான் தெரியும். மாணவர்கள், இணையதளம் வழியாக, தேர்வு முடிவை அறியலாம்,'' என்றார். சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு, வரும், 26ம் தேதி வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்: பிரவீண்குமார்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறுகையில், மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அதற்கான உரிய படிவங்களை வட்டாட்சியர் அலுவலகங்கள் அல்லது மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்.

இந்தப் படிவங்கள் பெறப்பட்டு, 45 நாள்களுக்குள் அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும். மக்களவைத் தேர்தல் நேரத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களைச் சேர்த்தவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படாமல் இருந்தது. அவர்களுக்கு அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படும்.

மேலும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். அப்போதும் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க படிவங்களை அளிக்கலாம் என்றார்.

2015-16 ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் கல்வியியல் கல்வியில் மிகப் பெரிய சீர்திருத்தம் ஏற்படும

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 6 மாத காலத்துக்குள்ளாக ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான வழிகாட்டு நெறிகளை என்.சி.டி.இ. உருவாக்கி வருகிறது.

இந்தப் பணி விரைவில் முடிக்கப்பட்டு, வருகின்ற ஜூன் மாதத்துக்குள்ளாக புதிய வழிகாட்டு நெறிகளுக்கு ஒப்புதலும் பெறப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. எனவே, ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிகள் ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வந்துவிடும்.

இந்த புதிய வழிகாட்டு நெறிகள் மூலம் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்களில் தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் தொடர் ஆய்வு மற்றும் கண்காணிப்பு முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கு விண்ணப்பிப்பது, அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் எந்த நிலையில் உள்ளன என்பதை அறிவது என அனைத்து விவரங்களும் மின் ஆளுமையின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன. இதன் மூலம் ஊழல் நடைபெறுவது தடுக்கப்படும்.

தேசிய அங்கீகார மையம்:ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்களை ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்கும் முறை இதுவரை என்.சி.டி.இ.-யிடம் இல்லை. எனவே, பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலுடன் (நாக்) புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு தேசிய ஆசிரியர் கல்வி ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்.ஈ.ஏ.ஏ.சி.) என்ற புதிய மையம் உருவாகக்ப்படும்.

வரும் 2015-16 கல்வியாண்டு முதல் இந்த புதிய மையம் மூலம் ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.

மாநில அரசுகளுடன் இணைந்து அடுத்த ஓராண்டில் தேசிய ஆசிரியர் கல்வித் தகுதி திட்ட வடிவம் ஒன்று உருவாக்கப்படும் என்பதோடு, ஆசிரியர் தணிக்கை முறையும் அறிமுகப்படுத்தப்படும்.

அங்கன்வாடிகளுக்கு வருகிறது கட்டுப்பாடு: அங்கன்வாடிகளை ஒழுங்குபடுத்தும் வகையிலும், அங்கு குழந்தைகளுக்கு சிறப்பான பயிற்சிகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலும் "குழந்தை பாதுகாப்பு மற்றும் கல்வி (இசிசிஇ)' என்ற திட்டத்தை கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும்.

இந்த நடவடிக்கைகள் மூலம் 2015-16 ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் கல்வியியல் கல்வியில் மிகப் பெரிய சீர்திருத்தம் ஏற்படும் என்றார் அவர்.