இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, December 28, 2013

தனியார் பள்ளிகளின் விதிமீறலை தடுக்க பிளஸ்1வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை

'தனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளை மதிக்காமல், பிளஸ் 1 வகுப்பில், முழுக்க முழுக்க, பிளஸ்2 பாடத்தையே நடத்துகின்றன. இதை தவிர்க்கவும், பிளஸ்1 வகுப்பிற்கு, உரிய முக்கியத்துவம் அளிக்கவும், முப்பருவ கல்வி முறையை, தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்' என, கல்வித் துறை வலியுறுத்தி உள்ளது. பிரமாண்ட வளர்ச்சி: தனியார் பள்ளிகளின் வளர்ச்சி யில், பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள், 100 சதவீத பங்கை வகிக்கின்றன. 100 சதவீத தேர்ச்சி மற்றும் மாநில அளவில், குறிப்பிடத்தக்க இடங்களை பெறுவதன் மூலம், நாமக்கல், கிருஷ்ண கிரி, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள், பிரமாண்ட வளர்ச்சியை பெற்றுள்ளன.

வட மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரும், தங்கள் பிள்ளைகளை, இந்த மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்து, லட்சக்கணக்கில் செலவழிக்கின்றனர். தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பிலும், பிளஸ்1 வகுப்பிலும், அந்த வகுப்பிற்குரிய பாடங்களுக்கு, முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒன்பதாம் வகுப்பில், 10ம் வகுப்பு பாடத்தை நடத்துவதை யும், பிளஸ்1 வகுப்பில், பிளஸ்2 பாடத்தை நடத்துவதையும், பல ஆண்டுகளாக, கடைப்பிடித்து வருகின்றனர். இரு ஆண்டுகள், ஒரே பாடத்தை படிப்பதன் மூலம், மாணவர்களுக்கு, பாடப் பகுதிகள், நன்றாக மனப்பாடம் ஆகிவிடுகின்றன. தேர்வில், சாதிப்பதற்கு, இதுவே காரணமாக உள்ளது. இதுபோன்ற விதிமீறலை தடுக்கவும், பிளஸ்1 வகுப்பிற்கு, உரிய முக்கியத்துவம் அளிக்கவும், இந்த வகுப்பிலும், முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தலாம் என, கல்வித் துறை கருதுகிறது. அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பிளஸ்1 வகுப்பு, பெயர் அளவிற்குத் தான் உள்ளது. பாடமும், சரியாக நடத்துவதில்லை; தேர்வும், முறையாக நடப்பதில்லை. முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தினால், தனியார் பள்ளிகள் உட்பட, அனைத்து வகை பள்ளிகளிலும், முறையாக, பிளஸ்1 வகுப்புகள் நடக்கும். குழப்பம்: அந்தந்த பருவ பாடங்களை, ஆசிரியர் நடத்துவர்; தேர்வும் முறையாக நடக்கும். இதனால், முன்கூட்டியே, பொது தேர்வு பாடங்களை நடத்துவதையும் தடுக்க முடியும். தற்போது, ஒன்பதாம் வகுப்பிலும், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால், அனைத்து பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பு பாடங்கள், சரியாக நடக்கின்றன. 10ம் வகுப்பு பாடத்தை, முன்கூட்டியே நடத்துவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பிற்கு, முப்பருவ கல்வி முறை வருவதே, பெரும் குழப்பத்தில் உள்ள நிலையில், பிளஸ்1 வகுப்பிற்கு வருமா என்பது, கேள்விக்குறியே.

முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு "புரமோஷன்'

முதுகலை ஆசிரியராக, 733 பேருக்கு, நேற்று நடந்த கலந்தாய்வில், பதவி உயர்வு, உத்தரவுகள் வழங்கப்பட்டன. பட்டதாரி ஆசிரியரில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த, 897 பேருக்கு, பதவி உயர்வு வழங்க, மாநிலம் முழுவதும், நேற்று, கலந்தாய்வு நடந்தது. 3,000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக இருந்தும், கடைசியில், 733 பேர் மட்டுமே, பதவி உயர்வு பெற, முன் வந்தனர். இவர்களுக்கு மட்டும், பதவி உயர்வுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. பதவி உயர்வு இடம், எதிர்பார்ப்பிற்கு மாறாக, நீண்ட தொலைவில் இருந்ததால், 164 பேர், பதவி உயர்வை புறக்கணித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40, திருவள்ளூரில், 31, வேலூரில், 47, சேலத்தில், 48 பேர், பதவி உயர்வு பெற்றனர். சென்னை மாவட்டத்தில், ஐந்து காலி பணியிடங்கள் மட்டுமே இருந்தன. கலந்தாய்வில், 26 பேர், பங்கேற்றபோதும், "சீனியர்' ஐந்து பேர், காலியிடங்களை தேர்வு செய்தனர். இதனால், 21 பேர், பதவி உயர்வை புறக்கணித்தனர்.

TNPSC Group I Notification

Friday, December 27, 2013

500 நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை

500 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளது. ரூ.177 கோடி ஒதுக்கீடு பின்தங்கிய ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகளை தொடங்கும் மத்திய அரசின் திட்டப்படி, தமிழ்நாட்டில் 44 மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் 11 பள்ளிகளுக்கு கட்டிடம் கட்டும் பணி முடிந்துவிட்டது. 7 பள்ளிகளுக்கு கட்டிட பணி முடியும் நிலையில் உள்ளது. 2–வது கட்டமாக 26 பள்ளிகளுக்கும், விடுதிகளுக்கும் கட்டிடம் கட்டப்பட உள்ளது.

இதற்காக மத்திய அரசு கொடுத்த நிதியுடன், கட்டிட செலவு அதிகரித்துள்ளதால் மத்திய அரசு கொடுத்த நிதி போக, தேவைப்படும் எஞ்சிய நிதியையும் தமிழக அரசு ஏற்றுள்ளது. அதன்படி ரூ.177 கோடியே 44 லட்சத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கி உள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 500 பள்ளிகளை தரம் உயர்த்த இடைநிலை கல்வி திட்டத்தின்படி வருகிற கல்வி ஆண்டில் 500 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம் என்றும் அவர் கூறினார்.

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடையாள அட்டை அவசியம்: தமிழக அரசு அதிரடி உத்தரவ

   மாவட்டங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் முதல் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு உயரதிகாரி வரை அனைவரும் பணியின்போது கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த உத்தரவு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள துறைகளின் செயலாளர்கள், மாவட்ட நீதிபதிகள், குற்றவியல் தலைமை நீதிபதிகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என அரசு ஊழியர்கள் பணியாற்றும் அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

. இதற்கான உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் அடையாள அட்டை அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையில் அரசு பணியாளரின் பெயர் மற்றும் பதவி ஆகியன ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு பதிலாக, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒன்றின் கீழ் ஒன்று இடம் பெறுமாறு மாற்றி அமைத்து உரிய அடையாள அட்டைகளை வழங்குமாறு அனைத்துத் துறைத் தலைவர்களும் மாவட்ட ஆட்சியர்களும் ஏற்கெனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அனைத்து அரசுப் பணியாளர்களும் அலுவலகத்தில் பணியாற்றும் நேரங்களில் அடையாள அட்டையை தவறாது அணிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அனைத்துத் துறைத் தலைவர்களும் மாவட்ட ஆட்சியர்களும் தங்களுக்குக் கீழேயுள்ள சார்நிலை அலுவலகங்களுக்கு இது தொடர்பாக உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று தனது உத்தரவில் டேவிதார் கேட்டுக் கொண்டுள்ளார். யாரும் அணிவதில்லை: தலைமைச் செயலகம், சட்டப் பேரவைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அனைத்திலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு தனித்தனியே புகைப்படத்துடன் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த அடையாள அட்டைகளை பெரும்பாலான பணியாளர்கள் அணிவதில்லை என்று புகார்கள் கூறப்பட்டு வந்தன. இந்தப் புகார்களைத் தொடர்ந்து அரசு பணியாளர்கள் அனைவரும் அடையாள அட்டையை அணிய வேண்டும் என்ற மாநிலம் தழுவிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

பணி நிரவலுக்கு பிறகே ஆசிரியர் நியமனம்

   உபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே, புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஆக.,17, 18 தேதிகளில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில், 27ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். "தேர்ச்சி பெற்றவர்கள், மதிப்பெண் அடிப்படையில், பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரம் பணியிடங்களில் நிரப்பப்படுவர்' என, தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி களில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் (ஆசிரியர் இல்லாத இடங்களில், உபரி ஆசிரியர்களை நியமித்தல்) செய்த பிறகு, புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

ஆக.,1 மாணவர்களின் வருகைப்பதிவேடு படி, ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கும் பணி நடந்து வருகிறது. விதிமுறைப்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் 160 மாணவர்களுக்கு, ஐந்து ஆசிரியர்களும் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் குறைவான மாணவர்களே வருகின்றனர். இதையடுத்து, உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர்; பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளது. இதனால், தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணியிடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இன்று இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை விண் டி.வி தொலைக்காட்சியில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளியின் மாநிலத் தலைவர் திரு.கண்ணன் அவர்கள் பேசுகிறார்கள். காணத்தவராதீர்கள

Thursday, December 26, 2013

பட்டதாரி ஆசிரியருக்கு நாளை கவுன்சிலிங்

பட்டதாரி ஆசிரியர், 961 பேருக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங், நாளை, 32 மாவட்டங்களிலும் நடக்கிறது. ஜன., 1ம் தேதி முதல், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியருக்கு, இந்த கவுன்சிலிங் நடக்கிறது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், ஆன் - லைன் வழியில் நடக்கும் இந்நிகழ்ச்சியில், சம்பந்தப்பட்ட ஆசிரியர், அந்தந்த மாவட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்றும், நாளையே, பதவி உயர்வுக்கான உத்தரவுகள் வழங்கப்படும் என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார்.

இன்றைய டிடோஜாக் கூட்டத்தின் முக்கிய முடிவுகள

் இன்று (26.12.2014) சென்னை திருவல்லிக்கேணி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், பேராசிரியர் நரசிங்கம் நிலையத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.வின்சென்ட் பால்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து சங்கங்களும் பங்கு பெற்றன. பேரணியை ஏற்கெனவே தாங்கள் நடத்திவிட்டோம் எனவும், மீண்டும் பங்கு கொள்ளமாட்டோம் என முக்கிய சங்கம் பாதியிலேயே வெளியேறியது. பின்பு மற்ற 5 சங்கங்கள் கூடி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.   வருகிற 30.12.2013 அன்று தமிழக அரசுடன்  சந்தித்து கோரிக்கை வைக்கப்பட உள்ளது. அதையடுத்து 10.01.2014ல் மாவட்ட அளவில் டிடோஜாக் கூட்டம் நடத்தவும், 11.01.2014 அன்று டிடோஜாக் சார்பில் செய்தியாளர்களுடன் சந்திப்பு (PRESS MEET)ம், 02.02.2014 அன்று மாவட்ட தோறும் பேரணி நடத்தி மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் வெளியேறிய சங்கத்துடன் மீண்டும் சந்தித்து பேரணியில் பங்க்பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Wednesday, December 25, 2013

தேடுங்கள் கண்டடைவீர்கள். பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் தொகுப்பு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வுகளில் முறைகேட்டை தடுக்க ஒவ்வொரு அறையிலும் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

   தமிழ்நாட்டில் மார்ச் மாதம் பிளஸ்–2 தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு முடிந்ததும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வுகளை 19 லட்சம் மாணவ–மாணவிகள் எழுத உள்ளனர். இந்த தேர்வுகளில் எந்த வித முறைகேடும் நடந்துவிடக்கூடாது என்பது கருதி மாணவர்களின் விடைத்தாள்களில் பக்கங்கள் அதிகரிக்கப்பட்டு விடைத்தாள் புத்தகம் போல வழங்கப்பட உள்ளது. அதுபோல மாணவர்கள் விடைத்தாளில் அவர்களின் தேர்வு பதிவு எண், பெயர் எதுவும் எழுதத்தேவை இல்லை. விடைத்தாளின் முன்பகுதியில் ஒரே வித ரகசிய குறியீடு 4 இடங்களில் அச்சடிக்கப்பட்டுள்ளது

. மேலும் தேர்வு நடக்கும் போது எந்த வித முறைகேடும் நடந்து விடக்கூடாது என்பதில் பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுபடி அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன், இணை இயக்குனர்கள் ராஜராஜேஸ்வரி, ராமராஜன் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். தேர்வு அறையில் 20 பேர்கள் மட்டும் அதன் ஒரு பகுதியாக தேர்வு அறைகளில் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். ஒரு பள்ளியில் 400 மாணவர்கள் தேர்வு எழுதினால் அவர்கள் ஒரு அறைக்கு 20 பேர் வீதம் 20 அறைகளில் தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும்.

மேலும் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க அந்தந்த மாவட்டங்களில் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்படுவது வழக்கம். அவ்வாறு அமைக்கும்போது தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. நேரடியாக பறக்கும்படைகள் இதை கருதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பறக்கும் படைகளையும் நேரடியாக தேர்வுத்துறை இயக்குனரே நியமிக்க உள்ளார். தேர்வு அறை கண்காணிப்பாளர்களையும் அவ்வாறே நியமிக்கபட உள்ளனர். அதுபோல விடைத்தாள் திருத்தும் பணியிலும் அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் நியமிக்கும் ஆசிரியர்கள்தான் ஈடுபட உள்ளனர். இதனால் எந்த வித முறைகேடும் நடக்காமல் தேர்வு நடத்தவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

NMMS விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் ஒத்திவைப்பு.


அரையாண்டு தேர்வு விடுமுறையால் NMMS விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து 02.01.2014 முதல் 04.01.2013 வரை www.tndge.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கு "ஆன்லைன்'னில் பதிவு செய்யாத பள்ளிகளுக்கு வாய்ப்பு

தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை "ஆன்லைன்' மூலம் பதியாத பள்ளிகள், புதிய பள்ளிகளுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மற்றும் 10 ம் வகுப்பு, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை, டிச.,10 க்குள் ஆன்லைனில் பதிய, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், சில பள்ளிகள் பதிவு செய்யவில்லை. பதிவு செய்யாத பள்ளிகள், சரிபார்ப்பு பெயர் பட்டியல் (நாமினல் ரோல்) பெறாத பள்ளிகள், தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை, நாளைக்குள் சென்னை அரசு தேர்வுத்துறை அலுவலகத்தில் கொடுக்க வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "ஆன்லைன்'ல் பதிவு செய்த பள்ளிகள், சரிபார்ப்பு பெயர் பட்டியலில் உள்ள மாணவர்களின் பெயர், "இன்சியல்", மதம், இனம் ஆகியவற்றை சரிபார்த்து, 2014 ஜன.,4 ல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலங்களில் ஒப்படைக்க வேண்டும். அதேபோல் "ஆன்லைன்' மூலம், ஜன.,1 முதல் 3 ம் தேதி மாலை 5:00 மணிக்குள் மாணவர்கள் பட்டியலில் உள்ள திருத்தங்களை சரிசெய்து கொள்ள வேண்டும் எனவும், தலைமைஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tuesday, December 24, 2013

பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட விபரம்: வாக்காளர் வீட்டிற்கு வருது தபால் தகவல்

புதிய வாக்காளராக சேர மனுசெய்தவர்களுக்கு, அவர்களது பெயர், பட்டியலில் இடம்பெற்றது குறித்த தகவல், அவரவர் வீட்டிற்கே, தபால் மூலம் அனுப்ப, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. 2014 ஜன.,1 ஐ, தகுதி நாளாகக்கொண்டு, 18 வயது நிரம்பியவரின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட, வாக்காளர் சுருக்கத்திருத்தப்பட்டியல் பணிகள், அக்.,1 முதல் 31 வரை நடந்தன. ஏராளமானோர் மனு செய்தனர். அவர்களின் விபரங்களை சரிபார்க்கும்பணி, இறுதிக்கட்டத்தில் உள்ளது.

ஜன.,6 ல், வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் சார்பில், நேற்று, சென்னையில் இருந்து, வீடியோகான்பரன்சிங் மூலம், ஆலோசனை நடந்தது. அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலக , தேர்தல் பிரிவு புரோகிராமர்கள், உதவி புரோகிராமர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு, தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், புதிய வாக்காளராக சேர மனுசெய்தவர்களுக்கு, அவர்களது பெயர், பட்டியலில் இடம்பெற்றது குறித்து, வீட்டிற்கே, தபால் மூலம் தகவல் அனுப்ப, முடிவு செய்யப்பட்டது. தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "" சம்பந்தப்பட்டவரது பெயர், வாக்காளர் பட்டியலில் எந்த சட்டசபை தொகுதி , பாகம் எண், வரிசை எண்ணில் இடம் பெற்றுள்ளது எவ்பதை குறிப்பிட்டு, வீட்டு முகவரிக்கு, ஜன.,6க்குப்பின், தபால் அனுப்பப்படும். இப்பணியை, மாவட்ட, தாலுகா தேர்தல் பிரிவு அதிகாரிகள் மேற்பார்வை செய்வர். தேர்தலில் ஓட்டளிப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் ஒருபகுதியாக, இம்முறை கையாளப்படுகிறது,''என்றார்.

ஆசிரியர் பயிற்சி தேர்வு: அடுத்த வாரம் 'ரிசல்ட்'

ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, அடுத்த வாரத்தில் வெளியாகிறது. ஜூனில் நடந்த ஆசிரியர் பயிற்சி, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வை, 'ரெகுலர்' மாணவர் மற்றும் தனி தேர்வு மாணவர் என, 40 ஆயிரம் பேர் எழுதினர். தற்போது, விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்ததை அடுத்து, அடுத்த வாரத்தில், முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்களில், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை வழங்க, தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

Directorate Of Technical Education results

Monday, December 23, 2013

100 கோடி விடைத்தாள்கள் வீணாவது தவிர்ப்பு - அரையாண்டு தேர்வுக்கு பயன்பாடு

தமிழகத்தில் வரும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் புகைப்படம், பார் கோடு அச்சிடப்பட்ட 38 பக்கங்கள் அடங்கிய விடைத்தாள்கள் வழங்கப்படவுள்ளன. இதனால், டம்மி எண் போடும் பணியும் அதற்கான நேரமும் தவிர்க்கப்படும். மேலும், பேப்பர் சேஸிங் உள்ளிட்ட குளறுபடிகளையும் தடுக்கலாம். கடந்த அக்டோபர் மாதம் நடந்த தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வில் இம்மாதிரியான விடைத்தாள்கள் அளிக்கப்பட்டு முன்னோட்டம் பார்க்கப்பட்டது. இந்த புதுத் திட்டத்தின்படியே வரவுள்ள பொதுத்தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.

இதனால் பழைய தேர்வு முறைக்காக இந்த ஆண்டின் துவக்கத்திலேயே தயாரித்து வைக்கப்பட்டிருந்த விடைத் தாள்கள் பயன்படுத்தப்படாமலே வீணாகும் நிலை ஏற்பட்டது. அவற்றை என்ன செய்வது என்று கல்வித் துறை அதிகாரிகள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வுகளில் அனைத்து பாட தேர்வுகளுக்கும் இந்த விடைத்தாள்களை விநியோகிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி எழுதும் சுமார் 20 லட்சம் மாணவர்களுக்கு ஏற்கெனவே தயாரிக்கப்பட்டிருந்த விடைத்தாள்கள் அளிக்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 100 கோடி விடைத்தாள்கள் வீணாவது தவிர்க்கப்பட்டுள்ளது.

Provitional List for cert.verification center name. 30,31-12-13

TRB PG Result released

குரூப்–4 தேர்வு முடிவு ஜனவரி 2–வது வாரத்தில் வெளியிடப்படும் ஏ.நவநீதகிருஷ்ணன் பேட்டி

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந்தேதி நடந்தது. இந்த தேர்வு மூலம் 5 ஆயிரத்து 556 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வை 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதினார்கள்.காலி பணியிடங்களில் 3 ஆயிரத்து 531 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1738 தட்டச்சர் பணியிடங்கள், 242 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் ஆகும். 30 வரைவாளர் பணியிடங்களும், 6 நில அளவர் பணியிடங்களும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்து 566 பணியிடங்கள் ஆகும். தேர்வு முடிவை வெளியிடுவதற்காக அனைத்துப் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. என்றும் ஜனவரி 2–வது வாரத்தில் குரூப்–4 தேர்வு முடிவு வெளியிடப்படும். என்று ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

Saturday, December 21, 2013

வாக்காளராக சேர மீண்டும் வாய்ப்பு: ஜன.,7 முதல் விண்ணப்பிக்கலாம்

லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க வசதியாக, ஜன.,7 முதல், புதிய வாக்காளர் சேர்க்கைக்காக மனுதரலாம், என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. 2014 ஜன.,1ஐ தகுதி நாளாகக்கொண்டு, 18 வயது நிரம்பியோர், தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் உள்ளிட்ட வாக்காளர் சுருக்கத்திருத்தப்பட்டியல் பணிக்காக, அக்.,1 முதல் 31 வரை மனுக்கள் பெறப்பட்டன. ஆன்லைனிலும் விண்ணப்பம் செய்யப்பட்டது. இதை சரிபார்க்கும் பணி நடக்கிறது. அடுத்தாண்டு, ஜன.,6ல், திருத்தப்பட்ட வாக்காளர் பெயர்பட்டியல் வெளியிடப்படுகிறது. இதனிடையே, விண்ணப்பிக்க தவறியோர் லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க வசதியாக, ஜன.,7 முதல், அந்தந்த தாலுகா அலுவலகங்களில், வாக்காளர் பெயர் சேர்ப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, தேர்தல் கமிஷன் அறிவுரை வழங்கி உள்ளது.

அது சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் துணைப்பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இருபட்டியல்களும் தொகுக்கப்பட்டு, லோக்சபா தேர்தலுக்கான வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட உள்ளன. ""இப்பணிகளை விரைந்து முடிக்க, தேர்தல் கமிஷன் அறிவுரை வழங்கி உள்ளது.

அரசு பள்ளிகளில் 'கனெக்டிங் கிளாஸ் ரூம்': முதல்கட்ட நடவடிக்கை துவக்கம்

தமிழக அரசு பள்ளிகளில், கற்றலை நவீனப்படுத்தும் விதமாக, அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகளையும் ஒருங்கிணைக்கும் விதமாக, 'கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில், இணையதள வசதி மூலம், புராஜக்டர் மற்றும் ஆடியோ சிஸ்டம் கொண்டு, ஒரு வகுப்பறையில் நடத்தும் பாடத்தை, அனைத்து பள்ளிகளிலும், அதே பிரிவை சேர்ந்த மாணவர்கள் கவனிக்கவும், விவாதம் நடத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதில் முன்னோட்டமாக, மாவட்டத்துக்கு, ஐந்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் இதற்கான உபகரணம் வாங்கவும், வகுப்பறை அமைக்கவும், 42 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கு, ஐந்து பள்ளி வீதம், இத்திட்டம் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்டு, அதில் உள்ள குறைபாடுகள், சிக்கல்கள் களையப்பட்டு, மேம்படுத்திய பின், அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

தற்போது, கனெக்டிங் கிளாஸ் ரூம் எப்படி அமைக்க வேண்டும்? எதன் செயல்பாடுகள் எவ்வாறு அமையும் என்பது குறித்த, பயிற்சி முகாம் ஏற்பாடு செயப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆங்கிலத்திறன், கம்ப்யூட்டர் திறன் படைத்த ஆசிரியர் ஆகியோருக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, நாமக்கல் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு, கோவை, ராஜாவீதி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், டிச., 30ம் தேதி நடக்கிறது. இப்பயிற்சி முடிந்த பின், பள்ளிகளில் கனெக்டிங் கிளாஸ் ரூம் அமைக்கப்பட்டு, செயல்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.