இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, December 02, 2013

60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, "கெடு!'

   கடந்த பொதுத்தேர்வில், 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி கண்ட, 617 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், வரும் பொதுத்தேர்வில், 80 சதவீதத்திற்கும் அதிகமாக, தேர்ச்சியை அதிகரிக்க வேண்டும்' என, பள்ளி கல்வித் துறை, "கெடு' விதித்துள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், சராசரியாக, 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. ஆனால், அரசு பள்ளிகளில், அதிகமான பள்ளிகள், 60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சியே பெறுகின்றன. கடந்த பொதுத்தேர்வில், 5,767 பள்ளிகளில், 329 பள்ளிகள், பத்தாம் வகுப்பில், 60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சியை பெற்றன.

2,595 மேல்நிலைப் பள்ளிகளில், 288 பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில், 60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சியை பெற்றன. இந்த, 617 பள்ளிகளின் தலைமை ஆசிரியர், வரும் பொதுத்தேர்வில், 80 சதவீதத்திற்கும் அதிகமாக, தேர்ச்சியை உயர்த்தி காட்ட வேண்டும் என, பள்ளி கல்வித் துறை, கெடு விதித்துள்ளது. இலக்கை எட்டுவதற்காக, தலைமை ஆசிரியர் முதல், பாட ஆசிரியர் வரை, அனைவருக்கும், பேராசிரியர்களைக் கொண்டு, சிறப்பு பயிற்சியை, கல்வித் துறை அளித்து வருகிறது. பள்ளிகளுக்கு அருகில் உள்ள பொறியியல் கல்லூரி மற்றும் கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் உதவியுடன், பள்ளி ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கபடுகின்றன.

இதில், அரசு மற்றும் தனியார் கல்லூரி பேராசிரியர்களும், ஈடுபடுகின்றனர். மாணவர்களுக்கு, பள்ளிகளில், சிறப்பு வகுப்புகள் நடத்துவதுடன், முக்கிய பாடங்கள், திரும்ப திரும்ப, கேட்கப்படும் கேள்விகள், கேள்விகளுக்கு, விடை அளிக்கும் முறைகள் குறித்தும், விளக்கப்படுகின்றன. இவ்வளவிற்குப் பிறகும், தேர்ச்சி அதிகரிக்கவில்லை எனில், முதல்கட்டமாக, தலைமை ஆசிரியர், "பலிகடா' ஆக்கப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, சம்பந்தபட்ட பள்ளி தலைமை ஆசிரியர், வேறு பள்ளிகளுக்கு, மாற்றப்படுவர். இதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவாவது, கடுமையாக உழைப்பதாக, தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

Sunday, December 01, 2013

TNPSC GROUP II tentative answer key tamil

ரேஷன் கார்டு செல்லத்தக்க காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு : விரைவில் அரசாணை வெளியிட முடிவு

. தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள், மானிய விலையில் விற்கப்படுகின்றன. இவற்றை பொது மக்கள் வாங்குவதற்கும், அரசின் நல திட்டங்களை பெறுவதற்கும், ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக திகழ்கிறது. உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, ரேஷன் கார்டு வழங்கும் பணியை செய்து வருகிறது. நடப்பில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம், 2011, டிசம்பருடன் முடிவடைந்து விட்டது. "போலி ரேஷன் கார்டை ஒழிக்க, "ஸ்மார்ட் கார்டு' திட்டம் செயல்படுத்தப்படும்' என, சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

ஆதார் அட்டை வழங்கும் பணி இன்னும் முடிவடையாததால், 'ஸ்மார்ட் கார்டு' வடிவில், ரேஷன் கார்டு வழங்கும் பணியை, அரசு, இதுவரை துவக்கவில்லை. மேலும், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, காலம் அவகாசம் தேவைப்படுவதால், தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில், உள்தாள் ஒட்டப்பட்டு, செல்லத்தக்க காலம், 2013, டிச., 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதை மேலும், ஓராண்டுக்கு நீட்டிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தற்போது, ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. ஆதார் அட்டையில், ஐந்து வயதுக்கு கீழ் உள்ளவர்களின் விவரம் சேகரிக்கப்படுவதில்லை. "ஸ்மார்ட் கார்டு' வடிவிலான ரேஷன் கார்டில், அவர்கள் விவரம் சேர்க்க வேண்டியுள்ளது. ஆதார் அட்டை பணி முடிந்ததும், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணி துவங்கும். ஏற்கனவே, உள் தாள் ஒட்டப்பட்ட போது, கடைசி பக்கத்தில், "2014ம் ஆண்டு' என, குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில், அரசாணை வெளியிடப்பட்டு, அதை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார். எத்தனை ரேஷன் கார்டுகள் உள்ளன? :

தற்போது, 1.84 கோடி அரிசி கார்டு; 10.50 லட்சம் சர்க்கரை கார்டு; 62 ஆயிரம் காவலர் கார்டு; 61 ஆயிரம், "என்' கார்டு (எந்த பொருளும் வாங்க விரும்பாதவர்) என, மொத்தம், 1.96 கோடி ரேஷன் கார்டுகள், தமிழகம் முழுவதும் புழக்கத்தில் உள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் இரும்புச்சத்து மாத்திரை : சுகாதாரத்துறை திட்டம்

""ரத்த சோகை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டம் உள்ளதாக,'' சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக அளவில், அரசு, உதவி பெறும் பள்ளிகளில் சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில், அரசு பள்ளிகளில் படிக்கும் வளரிளம் (14-18 வயது) மாணவ,மாணவிகள் பலருக்கு உடலில் இரும்பு சத்து குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. இச்சத்து குறைவால் மாணவிகளுக்கு மாதவிடாய் பிரச்னை, திருமணத்திற்கு பின் கர்ப்பம் தரித்தலில் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, ஆண்களுக்கு ரத்த சோகை போன்று பல்வேறு பாதிப்புகள் ஏற்படும

். இதை தவிர்க்க, அரசு பள்ளி மாணவர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறையினருக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது; அரசுபள்ளி மாணவர்களிடம் இரும்பு சத்தை அதிகரிக்க, சத்துணவு வழங்கப்படுகிறது. இருப்பினும், சிலருக்கு இரும்பு சத்து குறைவாக இருக்கிறது. இந்த மாத்திரைகளை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்குவோம். அவர்கள், மதிய உணவு முடித்த, மாணவர்களுக்கு வழங்கவேண்டும். இதற்காக, ஆசிரியர் குழுவை ஏற்படுத்தவேண்டும், என்றார்.

Saturday, November 30, 2013

தமிழ் வழியில் முதுகலையில் படித்திருந்தாலும் ஆசிரியர் பணி:ஐகோர்ட் உத்தரவு

முதுகலை பட்டம் தமிழ் வழியிலும். இளங்கலை படிப்பை ஆங்கில வழியிலும் முடித்திருந்தாலும், மனுதாரரின் பிற தகுதிகள் திருப்தி அளிக்கும் பட்சத்தில் ஆசிரியர் பணிக்கு டி.ஆர்.பி பரிசீலிக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது

சமையல் சிலிண்டர் விலை ரூ. 15 உயருகிறது; மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உயர்த்தவும் ஒப்புதல்!

  சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் ரூ. 15 அதிகரிக்க மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ள நிலையில்,  மூன்று மாதங்களுக்கு ஒருமுறை  சிலிண்டர் விநியோக கட்டணத்தை திருத்தியமைத்துக்கொள்ளவும் ஒப்புதல் அளித்துள்ளது.

சிலிண்டர்களை விநியோகம் செய்வதற்கான கட்டணம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் இந்த கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்றே  சிலிண்டர் கட்டணத்தில் 15 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி, மிசோராம், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் வருகிற டிசம்பர் மத்தியில் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காலாண்டுக்கு ஒருமுறை உயர்வு
இதுதவிர மாதாமாதம் உயர்த்தப்படும் டீசல் விலையால், சிலிண்டர்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பதன் காரணமாக, ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை சிலிண்டர் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டணத்தை இனி எண்ணெய் நிறுவனங்கள் தாங்களாகவே திருத்தியமைத்துக்கொள்வதற்கான உரிமையை வழங்கவும் பெட்ரோலியத் துறை அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பெட்ரோலியத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், "கொள்கை அளவில் நாங்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறோம். அதே சமயம் இதற்கு அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை கமிட்டியின் ஒப்புதல் தேவையா என்பது குறித்தும் நாங்கள் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்" என்றார்.

இதுவரை பெட்ரோல், டீசல் விலையை மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல் உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இனி சமையல் எரிவாயு சிலிண்டரும் 3 மாதங்களுக்கு ஒருமுறை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ள தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்க ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ்.மேகநாதன் தலைமையில் சனிக்கிழமையன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது.
கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் எம்.பிரபு, பொருளாளர் வி.சோலை, இணைச் செயலாளர் கே.முத்துக்குமார், துணைத் தலைவர் டி.கலைச்செல்வன் ஆகியோர் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியா சங்க மாவட்டத் தலைவர் கி.ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் 15 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணியமத்தப்பட்ட தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 2012-13 ஆண்டில் மறுநிர்ணயம் செய்யப்பட்ட ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

விருப்ப அடிப்படையிலான பணியிட மாறுதல்களை வழங்க வேண்டும். விழாக்கால முன்பணமும், போனசும் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 5.12.2013 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொருந்திரள் முறையீடு போராட்டம் நடத்துவது. அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக 4.12.2013 அன்று மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திலும், 28.12.2013 அன்று திண்டுக்கல்லில் நடைபெறும் சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பூதிய ஒழிப்பு மாநாட்டிலும் திரளான ஊழியர்களைப் பங்கேற்கச் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்வு

டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை.

Friday, November 29, 2013

திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 பள்ளிகள் தேர்ச்சியை அதிகரிக்க தனியார் அமைப்புடன் ஒப்பந்தம

திருவண்ணாமலை மாவட்டத்தில் 193 அரசு உயர்நிலை பள்ளிகள், 131 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. கடந்த ஆண்டு 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சியில் மாநில அளவில் கடைசி இடத்தை இம்மாவட்டம் பெற்றது. எனவே இந்த ஆண்டு தேர்ச்சியை அதிகரிக்க மாவட்ட கல்வித்துறை பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னையை சேர்ந்த ஜெ.கே. அறக்கட்டளை எனும் தனியார் அமைப்புடன் மாவட்ட கல்வித்துறை ஒருங்கிணைந்து, பின்தங்கியுள்ள 20 அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது

. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. தொடர்ந்து முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.அருண்பிரசாத் தெரிவித்தாவது: தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பள்ளிகளில் 36 முதுநிலை ஆசிரியர்கள் மாதம் ரூ.6 ஆயிரம் என்ற மதிப்பூதியத்தில் நியமிக்கப்படுகின்றனர். அதற்காக இக்கல்வி ஆண்டு முடியும்வரை மாதந்தோறும் ரூ.2.16 லட்சத்தை அறக்கட்டளை வழங்கும். மேலும், கல்வியில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 500 பேருக்கு சிற்றுண்டியுடன் கூடிய மாலை நேர வகுப்புகள் நடத்தவும், ஒவ்வொரு பள்ளியிலும் நன்றாக படிக்கும் 3 மாணவர்களை ஊக்கப்படுத்த சிறப்பு பயிற்சி அளிக்க ரூ.2.32 லட்சம் செலவிடவும், ரூ.5.69 லட்சம் மதிப்பில் பயிற்சி கையேடுகளையும் வழங்கவும் அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எஸ்.எஸ்.ஏ., திட்டத்திற்கு ரூ.136 கோடி நிதி ஒதுக்கீடு : மத்திய அரசு கரிசனம்

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்காக (எஸ்.எஸ்.ஏ.,) மத்திய அரசு ரூ.136 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலத்தில், 2002 முதல் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. நடப்புக் கல்வியாண்டில், இத்திட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பொது கழிப்பறைகள் கட்டுதல், மாணவிகளுக்கு தனிக் கழிப்பறைகள், பள்ளிகளில் குடிநீர் வசதிகள் மேற்கொள்ள ரூ.44.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் முடிவுயும் நிலையில் உள்ளன.

இந்நிலையில், குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பள்ளிகளில் போதிய கழிப்பறை மற்றும் குடிநீர் வசதியை மேம்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியது. இது தொடர்பாக, மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளில் மேலும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள சிறப்பு நிதி ஒதுக்க, மாநில அரசு சார்பில் மத்திய அரசுக்கு சிறப்பு கருத்துரு அனுப்பப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்திற்கு நடப்புக் கல்வியாண்டில் 2வது முறையாக ரூ.136 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இத்திட்ட உயர் கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. இதற்காக மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கி வருகிறது. கல்வித் துறை செயலர் சபிதா, திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி ஆகியோரின் முயற்சியால், நடப்புக் கல்வியாண்டில், 2வது முறையாக ரூ.136 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில், பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஊனமுற்ற மாணவர்களுக்கான கழிப்பறைகள் கட்ட முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில், தற்போது தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தேவைப்படும் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள், குடிநீர் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

தமிழ் ஆசிரியர்கள் இனி பட்டதாரி தமிழாசிரியர்கள்: அரசு உத்தரவு

   தமிழ் பண்டிட் என அழைக்கப்பட்ட தமிழாசிரியர்கள், பட்டதாரி தமிழாசிரியர்கள் என்றே அழைக்கப்படுவர் என, அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில், 1988ல் உதவி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட தமிழாசிரியர்கள், 2000ல் பட்டதாரி தமிழாசிரியர்கள் என, அழைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் அரசாணை, 263ன் படி தமிழாசிரியர்கள், தமிழ் பண்டிட் என, அழைக்கப்படுவர் என, அரசு உத்தரவிட்டது. ஊதியத்தில் சிக்கல்: தமிழ் பண்டிட் என, அழைக்கப்பட்ட தமிழாசிரியர்களுக்கு தர ஊதியம், 4,400 ரூபாய், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 4,600 ரூபாய் என, அரசு நிர்ணயம் செய்தது.

தமிழாசிரியர்களாக பணியாற்றுபவர்கள், தமிழ் பண்டிட் என்பதால் தர ஊதியம், 4,600 ரூபாய் பெற்றவர்கள், தணிக்கையின் அடிப்படையில் கூடுதலாக பெற்ற தொகையை திரும்ப செலுத்த, தலைமையாசிரியர்கள் தமிழாசிரியர்களை வலியுறுத்தினர். தமிழக தமிழாசிரியர்கள் கழகம் கோரிக்கை: தமிழாசிரியர்கள் அனைவரும், தமிழ் பண்டிட் என்பதை விடுத்து, பட்டதாரி தமிழாசிரியர்கள் என, அழைக்கப்பட வேண்டும். பட்டதாரிஆசிரியர்கள் பெறும் தர ஊதியம் 4,600, தமிழாசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். தமிழாசிரியர்களின் கோரிக்கையினை ஏற்று, தமிழ் பண்டிட் என்ற சொல் நீக்கப்பட்டு தமிழ் ஆசிரியர்கள், பட்டதாரி தமிழாசிரியர்கள் என அழைக்கப்படுவர், என்று பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்

சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு நாளை துவங்குகிறது

: சிவில் சர்வீஸ், மெயின் தேர்வு, நாளை துவங்கி, ஒரு மாதம் வரை நடக்கிறது. தமிழகத்தில், 2,000 பேர், இந்த தேர்வை எழுதுகின்றனர். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு உயர் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு, நாடு முழுவதும், மே மாதம் நடந்தது. இதை, ஒன்பது லட்சம் பேர் எழுதினர். இதையடுத்து, மெயின் தேர்வு, நாளை துவங்கி, ஒரு மாதம் வரை தொடர்ந்து நடக்கிறது. ஒவ்வொரு தேர்வரும், ஒன்பது தாள்களை எழுதுவர். நாடு முழுவதும், 16 ஆயிரம் பேர், மெயின் தேர்வில் பங்கேற்கின்றனர். தமிழகத்தில், 2,000 பேர் எழுதுகின்றனர்.

IGNOU B.Ed. Entrance Result , 2013

FIRE EQUIPMENT Detail Format

Thursday, November 28, 2013

இடைநிற்றல் மாணவர்களை பள்ளியில் சேர்க்க சிறப்பு கவனம்

""தமிழகத்தில் இடைநிற்றல் மாணவர்களை, பள்ளிகளில் மீண்டும் சேர்க்க, அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) முதன்மை கல்வி அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்,'' என, அத்திட்ட இணை இயக்குனர் நாகராஜ முருகன் வலியுறுத்தினார். மதுரையில், 9 மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது

. முதன்மை கல்வி அலுவலர் (மதுரை) பார்வதி முன்னிலை வகித்தார். நாகராஜ முருகன் பேசியதாவது: மாநிலம் முழுவதும் மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுத்துத் திறனை மேம்படுத்தும் பணியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இடைநிற்றல் மாணவர்கள் விவரம் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க முதன்மை கல்வி அலுவலர்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களில் மாணவர்களின் அடைவுதிறனை மேம்படுத்த கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். கூட்டத்தில், எஸ்.எஸ்.ஏ., திட்ட ஆசிரியர்கள் சம்பளம், காலிப் பணியிடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. மாநில திட்ட ஆலோசகர் சபரிநாதன், சி.இ.ஓ.,க்கள் ராஜேந்திரன் (தேனி), சகுந்தலா (ராமநாதபுரம்), கணேசமூர்த்தி (சிவகங்கை) சுவாமிநாதன் (விருதுநகர்), சரோஜா (தூத்துக்குடி), கஸ்தூரிபாய் (நெல்லை), முருகன் (கன்னியாகுமரி), கலாவள்ளி (பெரம்பலூர்) ஆகியோர் பங்கேற்றனர்.

திறந்த நிலை பட்டங்கள் நிலை : மீண்டும் தெளிவுபடுத்திய யு.ஜி.சி.,

தொலை தூர கல்வி மற்றும் திறந்த நிலை கல்வி முறையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் கல்லூரிகளில் படித்து பெறும் பட்டங்களுக்கு சமமானது என, யு.ஜி.சி., மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது. நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்கள், தொலை தூர கல்வி, திறந்த நிலை கல்வி முறைகளில் பட்டங்களை வழங்கி வருகின்றன. அடிப்படை கல்வி முடித்தவர்களும், இந்த முறைகளில் பயி?ன்று பட்டதாரியாக உயர்த்துள்ளனர். இதில், பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களும் இடம் பெற்றுள்ளனர்.

திறந்த நிலை மற்றும் தொலை தூர கல்வி முறையில் பட்டங்களை பெற்று பணியாற்றுவோர், தாங்கள் பட்டதாரிகள் என்பதால், உரிய பதவி உயர்வு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். ஆனால், இவ்வகையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் பெற்ற பட்டங்களுக்கு சமமானது அல்ல என, தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, இவ்வகை பட்டம் பெற்றவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இவ்வகை பட்டங்கள் ரெகுலர் முறைக்கு சமமானது என, யு.ஜி.சி., தெளிவுபடுத்திஉள்ளது. இதுகுறித்து, நாடெங்கிலும் உள்ள மத்திய பல்கலைக் கழகங்கள், மாநில பல்கலைக் கழகங்கள், நிகர்நிலை பல்கலைக் கழகங்களுக்கு, யு.ஜி.சி., அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பல்கலைக் கழகங்கள் திறந்த நிலை மற்றும் தொலை தூர கல்வி முறைகளில் பட்டம், பட்டய படிப்புகளை நடத்தி, அதற்கான சான்றுகளை வழங்கியுள்ளன.

இவ்வகை பட்டங்கள் ரெகுலர் முறையில் பெறப்படும் பட்டங்களுக்கு சமமானவை என, யு.ஜி.சி., ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. என்றாலும், சில இடங்களில் இது குறித்த சர்ச்சை நீடிப்பதால், இவ்வகை பட்டங்கள் ரெகுலர் முறைக்கு சமமான பட்டங்களே என, மீண்டும் அறிவிக்கப்படுகிறது. அவர்கள் பெற்ற பட்டங்களும் அங்கீகரிக்கப்படும் என, அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 தேர்வு பணிக்காக நவ.30-இல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் குரூப் 2 தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குரூப் 2 தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் செய்ய வேண்டியுள்ளதால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி மற்றும் மெட்ரிக் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு வருகிற சனிக்கிழமை (நவ.30) விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளு.

எனவே, அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Wednesday, November 27, 2013

10 ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு : டிச., 3 ல் சென்னையில் ஆலோசனை

  ""10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் டிச.,3ல் நடக்கிறது,'' என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார். அவரது உத்தரவு: 2014 மார்ச், ஏப்ரலில், 10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், டிச.,3ல் சென்னையில் நடக்கிறது.

இதில், புதிய தேர்வு மையங்கள் அமைப்பதற்கான கருத்துரு, தற்போதுள்ள தேர்வு மையத்தை வேறு தேர்வு மையத்துடன் இணைத்தல், சில தேர்வு மையத்தை நீக்குதல், சிறைத் தேர்வர்களுக்கு தேர்வு மையம் அமைத்தல், மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் மற்றும் அவர்களுக்கு செய்முறைத் தேர்வில் விலக்கு அளித்தல், மாணவர்களுக்கு தேவையான விடைத் தாளின் முதன்மை பகுதி, வினாத்தாள் கட்டுக்காப்பாளர் மையத்தை மாற்றியமைத்தல், பள்ளி மற்றும் அதில் பணிபுரியும் ஆசிரியர்கள் விபரப்பதிவேடு, பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் எண்ணிக்கை உட்பட, பல்வேறு அம்சங்கள் குறித்து, ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும், தேவையான விபரத்துடன் பங்கேற்கவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் நகலை நாளை பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தனி தேர்வர்கள், இன்று முதல், 30ம் தேதி வரை, இணையதளத்தில் இருந்து, விடைத்தாள் நகல்களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இயக்குனர், தேவராஜன் அறிவிப்பு: செப்டம்பர், அக்டோபரில், பிளஸ் 2 தனி தேர்வுகள் நடந்தன. தேர்வு முடிவிற்குப்பின், விடைத்தாள் நகல் கேட்டு, மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

அவர்கள், www.examsonline.co.in என்ற இணையதளத்தில் இருந்து, விடைத்தாள் நகல்களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவு எண், பிறந்த தேதி மற்றும் தனி தேர்வு மதிப்பெண் சான்றிதழில் உள்ள குறியீட்டு எண்ணை பதிவு செய்து, விடைத்தாளை, பதிவிறக்கம் செய்யலாம். மறுகூட்டல் முடிவுகள், விரைவில் வெளியிடப்படும். விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யும் தேர்வர்கள், மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டல் செய்ய விரும்பினால், www.tndge.in என்ற இணையதளத்தில், இன்று முதல், விண்ணப்பத்தை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், உரிய கட்டணத்தையும் சேர்த்து, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், டிச., 2, 3 தேதிகளில், நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கட்டணத்தை, ரொக்கமாக செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.