இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, August 13, 2013

ஆசிரியர் தகுதி தேர்வை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற 17, 18–ந் தேதிகளில் (சனி, ஞாயிறு) நடைபெற உள்ளது. இந்த தேர்வை 6½ லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு 17–ந் தேதி(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு 18–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் நடக்கிறது.

பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத வசதியாக சனிக்கிழமை தமிழகம் முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது.இந்த விடுமுறைக்கு பதிலாக 31–ந் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும். இதற்கான உத்தரவை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் டி.சபிதா வெளியிட்டுள்ளார்.

குரூப்-4 தேர்வில் 3 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு : 5,500 இடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி

  தட்டச்சர், இளநிலை உதவியாளர் போன்ற பணிகளில், குரூப் - 4 நிலையில் உள்ள, 5,566 காலி பணியிடங்களை நிரப்ப, வரும், 25ம் தேதி, போட்டித் தேர்வு நடக்கிறது. இதற்கு, 17 லட்சம் பேர், விண்ணப்பித்தனர். எனினும், ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்தது, விண்ணப்ப கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்தாதது போன்ற காரணங்களால், 3 லட்சம் விண்ணப்பங்களும், உரிய தகுதியின்மை காரணமாக, 458 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன. "

ஹால் டிக்கெட்' வெளியீடு : இறுதியாக, 14 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். 4,755 தேர்வு கூடங்களில், தேர்வு நடக்கிறது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, www.tnpsc.gov.in, www.tnscexams.net ஆகிய இணைய தளங்களில், "ஹால் டிக்கெட்'கள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு மையத்தின் அமைவிடத்தை, தேர்வர்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், தேர்வு மைய முகவரியுடன், தொலைபேசி எண் மற்றும் பக்கத்தில் உள்ள முக்கியமான,"லேண்ட் மார்க்' இடத்தையும் குறிப்பிட்டுள்ளோம். சரியான முறையில் விண்ணப்பித்தும், "ஹால் டிக்கெட்' கிடைக்காதவர்கள், கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுடன், contacttnpsc@gmail.com என்ற, "இ-மெயில்' முகவரிக்கு, 19ம் தேதிக்கு முன், தகவல் தெரிவிக்கலாம்.

பதட்டமான தேர்வு மையங்கள், "ஆன்-லைன்' வழியாக, மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும், தேர்வாணைய தலைமை அலுவலகத்திலும், தொடர்ந்து கண்காணிக்கப்படும். தேர்வு மையத்திற்கு, மொபைல் உள்ளிட்ட எந்த ஒரு மின்னணு சாதனங்களையும் எடுத்துச் செல்ல, அனுமதி இல்லை. விதிமுறைகளை மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, நவநீதகிருஷ்ணன் கூறினார்.

GO 131dt 13-8-13 ஆசிரியர் தகுதித் தேர்வு நாளன்று (17-8-13) பள்ளிகளுக்கு விடுமுறை

Tamil Nadu Public Service Commision- Departmental Results May 2013

TNPSC GROUP IV Hall ticket

திருப்பூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் 2013-14 ஆண்டுக்குரிய விடுமுறை பட்டியல்


Monday, August 12, 2013

கண்காணிப்பு கேமரா பொருத்த மெட்ரிக் இயக்குனரகம் உத்தரவு

"அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும், மாணவர்கள் பாதுகாப்பு கருதி, கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவன் சூர்யாவை, சில தினங்களுக்கு முன், ஒரு கும்பல் கடத்திச் சென்றது. போலீசார், தீவிர நடவடிக்கைக்குப் பின், சிறுவன் மீட்கப்பட்டான்.

இந்த சம்பவம், பெற்றோர் மத்தியில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாணவர்கள் பாதுகாப்பு கருதி, அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறுகையில், ""பெரும்பாலான தனியார் பள்ளிகளில், கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, முன்னணி தனியார் பள்ளிகளில், அனைத்து இடங்களிலும், கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கேமராக்கள் பொருத்தாத பள்ளிகளில், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது,'' என, தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித் துறையில், நேற்று, 12 இணை இயக்குனர்கள், கூண்டோடு, இட மாற்றம் செய்யப்பட்டனர்.

பள்ளிக்கல்வித் துறையில் இயக்குனர்கள் மாற்றம் மற்றும் இயக்குனர்கள் பதவி உயர்வு ஆகியவற்றுக்கான உத்தரவுகளும் வழங்கப்பட்டன. இந்நிலையில், கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக இழுபறி நிலையில் இருந்த, இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம், நேற்று நடந்தது பள்ளிக்கல்வித் துறையில், பணியாளர் தொகுதி இணை இயக்குனராக கருப்பசாமி, மேல்நிலைக் கல்வி இணை இயக்குனராக பாலமுருகன், இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக பழனிச்சாமி நியமிக்கப்பட்டு உள்ளனர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இணை இயக்குனரான தர்ம.ராஜேந்திரன், பள்ளிக்கல்வித் துறையில், தொழிற்கல்வி இணை இயக்குனராக மாற்றப்பட்டார்.

மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனராக, சேதுராம வர்மா, தேர்வுத் துறை, மேல்நிலைக் கல்வி இணை இயக்குனராக, ராஜ ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டு உள்ளனர். மெட்ரிக் பள்ளி இணை இயக்குனராக இருந்து வந்த கார்மேகம், டி.ஆர்.பி., உறுப்பினராக, மாற்றப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட, 12 பேர் மாற்றப்பட்டுள்ளனர். பதவி உயர்வு பெற்றவர்கள்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக பணியாற்றி வந்த, ஐந்து பேர், இணை இயக்குனர்களாக, நேற்று, பதவி உயர்வு செய்யப்பட்டனர். பள்ளிக்கல்வி துணை இயக்குனர் சுதர்சன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனராகவும் (நிர்வாகம்), திருவள்ளூர் மாவட்ட கூடுதல் சி.இ.ஓ., சுகன்யா, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இணை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட சி.இ.ஓ., நாகராஜ முருகன், அனைவருக்கும் கல்வி இயக்ககத்திலும், ஈரோடு மாவட்ட சி.இ.ஓ., ஸ்ரீதேவி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், இணை இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திர தினத்தில் "டிமிக்கி': ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை "கிடுக்கிப்பிடி' dinamalar

சுதந்திர தினத்தன்று பள்ளிகளுக்கு, "டிமிக்கி' கொடுக்கும் ஆசிரியர்களுக்கு, "கிடுக்கிப்பிடி' போடப்பட்டு உள்ளது. தனிவருகைப் பதிவேட்டில் பதிவு செய்யவும், வராத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. பள்ளிகளில், ஆக., 15ம் தேதியன்று, சுதந்திர தினம் கொண்டாடப்பட வேண்டும். அன்று பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து, கொடி ஏற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்.

பெரும்பான்மையான கிராமப்புற பள்ளிகளில், பள்ளிக்கு எந்த ஆசிரியர்களும் வருவது கிடையாது. பள்ளியில் உள்ள வாட்ச்மேன்கள், பள்ளிகளில் கொடி ஏற்றி விடுகின்றனர். பல பள்ளிகளில், தலைமையாசிரியர் மட்டும் வருகை தந்து கொடி ஏற்றிச் செல்வார். இது குறித்து, பள்ளிக்கல்வித் துறைக்கு புகார்கள் சென்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தலைமையாசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளதாவது:

சுதந்திர தினத்தன்று பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் குறித்து, தனி வருகைப் பதிவேட்டில், பதிவு செய்ய வேண்டும். பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் குறித்து, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, தெரியப்படுத்த வேண்டும். முதன்மை கல்வி அதிகாரிகள், பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். பள்ளிக்கு வராத ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்படும். சரியான விளக்கம் அளிக்காதவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சுதந்திர தினத்தன்று, பள்ளிகளில், மாணவர்களுக்குக் கட்டுரை, ஓவியம், கவிதை, விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும். போட்டிகள் நடத்தப்பட்ட விவரத்தை, போட்டோவுடன், முதன்மைக் கல்வி அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

பறிக்கப்பட்ட உரிமை... மீட்டெடுக்க களம் புகுவோம். - TNPTFன் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதப் போராட்டத்திற்கான நோட்டீஸ்


Saturday, August 10, 2013

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மாதம்தோறும் 12 பள்ளிகளை பார்வையிட உத்தரவு

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்ய வேண்டிய சார்நிலை அலுவலகங்கள், பார்வையிட வேண்டிய பள்ளிகள் எண்ணிக்கையில் குறைந்தபட்ச இலக்கை பூர்த்தி செய்ய வேண்டும். மாதத்திற்கு குறைந்தபட்சம் 2 உதவி தொடக்க கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய வேண்டும். 2 அலுவலகங்களை பார்வையிட வேண்டும். செப்டம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் 8 பள்ளிகளும், இதர மாதங்களில் 12 பள்ளிகளும் பார்வையிட வேண்டும்.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஒரு கண்காணிப்பாளர், இரண்டு உதவியாளர் கொண்ட குழு ஆண்டாய்வு செய்ய வேண்டிய உதவி தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று அனைத்து கோப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும். உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மேற்கொண்ட பள்ளி ஆய்வுகள் சார்ந்த கோப்புகள், தமிழக அரசு அறிவித்துள்ள பல வகையான நலத்திட்டங்கள், மாணவர்களுக்கு சென்றடைந்தது சார்பான விபரங்கள் ஆகியவை குறித்து ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட வேண்டும். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஆண்டாய்வு தினங்களில் கடைசி நாளில் சம்பந்தப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்கு ஆய்வுக்கு சென்று பணியாளர்கள் தயாரித்துள்ள ஆய்வறிக்கை அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி ஆய்வின்போது பள்ளிகளில் குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது அமர்ந்து அனைத்து கூறுகளையும் ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களுடன் உரையாடி கற்றல், கற்பித்தல் நிகழ்வுகள் சிறந்த முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு சென்றுவிட்டதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் பள்ளிகளில் கட்டுமான வசதிகள், கழிப்பறைகள், அனைத்தும் போதுமானதாக உள்ளதா என்பதையும், கழிப்பறைகள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியம் ரத்து

திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் படித்து பெறப்படும் டிப்ளமோ, இளங்கலை, முதுகலை பட்டங்கள், முறையான படிப்புகளுக்கு சமமாக கருதி  தமிழக அரசின் வேலைவாய்ப்பு வழங்க பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அனுமதித்தது. அதன் அடிப்படையில் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க பள்ளி கல்வித்துறை கடந்த 2000ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில் அடிப்படை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறாமல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றால் பொதுப்பணிகளில் நியமனம் செய்ய இயலாது என பணியாளர் மற்றும் சீர்திருத்தத்துறை கடந்த 2010ல் புதிதாக அரசாணை வெளியிட்டது. அதனடிப்படையில் பள்ளிக் கல்வி செயலர் சபிதா வெளியிட்டுள்ள அரசாணை:

இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெறாமல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் முதுகலை பட்டம் பெற்றால் பொதுப்பணிக்கு கல்வித்தகுதியாக கருத இயலாது. எனவே பள்ளிக் கல்வித்துறையில் இளங்கலை முடிக்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் முதுகலைப் பட்டம் முடித்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதிய சலுகைக்கான பழைய அரசாணை ரத்து செய்யப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு: அதிகாரிகள் நியமனம்

தேர்வு சுமூகமாகவும், எந்தவிதப் பிரச்னையும் இன்றி நடைபெற பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட பொறுப்பாளர்கள் விவரம் (மாவட்டம், அதிகாரி):

1. விழுப்புரம் - இயக்குநர் தங்கமாரி

2. கடலூர் - இணை இயக்குநர் உமா

3. காஞ்சிபுரம் - இயக்குநர் இளங்கோவன்

4. திருவள்ளூர் - இணை இயக்குநர் உஷாராணி

5. சென்னை - இயக்குநர் அறிவொளிஉள்பட 31 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

.

திருத்தப்பட்ட ஹால்டிக்கெட்டுகள் இணையதளத்தில் பதிவேற்றம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிழைகளுடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த ஹால் டிக்கெட்டுகள் திருத்தப்பட்டுள்ளன. ஹால் டிக்கெட்டுகள் ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

முதல் தாள் தேர்வுக்கு 48 ஹால் டிக்கெட்டுகளும், இரண்டாம் தாள் தேர்வுக்கு 834 ஹால் டிக்கெட்டுகளும் திருத்தப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்களுக்கு வெவ்வேறு ஊரில் தேர்வு மையங்கள் போன்ற குறைபாடுகள் ஹால் டிக்கெட்டில் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்குப் புகார்கள் வந்தன. இதுதொடர்பாக செய்திகளும் வெளியாயின. இதையடுத்து, திருத்தப்பட்ட ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

முதுகலை ஆசிரியர் தேர்வில் தவறான கேள்வியை நீக்க முடிவு

:முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான, இறுதி, "கீ-ஆன்சர்', வரும், 20ம் தேதிக்குள் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மாதம், 21ம் தேதி, முதுகலை ஆசிரியர் தேர்வு நடந்தது. 1.67 லட்சம் பேர், தேர்வை எழுதியுள்ளனர். இதற்கான, தற்காலிக, "கீ-ஆன்சர்', டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கேள்வி மற்றும் விடைகள் குறித்து, 1,000 தேர்வர்கள், மாற்று கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

தேர்வர்களின் கருத்துக்களை, பாட வாரியான நிபுணர் குழு, ஆய்வு செய்து வருகிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங் கள் கூறுகையில், "விடை தவறாக இருந்தால், அதற்குரிய மதிப்பெண், தேர்வர்களுக்கு வழங்கப்படமாட்டாது. மாறாக, சம்பந்தபட்ட கேள்வி, தேர்வில் இருந்து நீக்கப்படும். சரியான கேள்வி, பதில்களுக்கு மட்டும், மதிப்பெண்கள் வழங்கப் பட்டு, 20ம் தேதிக்குள், இறுதி, "கீ-ஆன்சர்' வெளியிடப்படும்,' என, தெரிவித்தன. ஒவ்வொரு கேள்விக்கும், 1 மதிப்பெண் வீதம், மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு, கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், 10 முதல், 15 கேள்விகளோ அல்லது அதற்கான பதில்களோ தவறாக கொடுக்கப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது

. எனவே, 150 மதிப்பெண்களில், 15 மதிப்பெண்கள் வரை நீக்கப்பட்டு, மீதமுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

நர்சிங் பட்டய படிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் திங்கட்கிழமை முதல் 22–ந்தேதி வரை வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக மருத்துவ தேர்வுக்குழு செயலாளரும், மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குனருமான டாக்டர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

திங்கட்கிழமை முதல் விண்ணப்பம் நர்சிங் பட்டய படிப்புக்கு (டிப்ளமோ) 2013–2014–ம் கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள் திங்கட்கிழமை (12–ந்தேதி) முதல் 22–ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை மருத்துவக் கல்லூரியில் அமைந்துள்ள செமினார் ஹாலில் வழங்கப்பட உள்ளது. பிளஸ்–2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் விண்ணப்ப படிவங்களை முதல்வர், சென்னை மருத்துவக்கல்லூரி, சென்னை 600 003 என்ற முகவரிக்கு கேட்பு கடிதம் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.200. (ஆதி திராவிடர்கள், பழங்குடியினருக்கு விண்ணப்பம் இலவசம்).

தேர்வு கட்டணத்தை ‘‘செக்ரட்டரி, செலக்ஷன் கமிட்டி, கீழ்ப்பாக்கம், சென்னை–10’’ என்ற பெயரில் டிமாண்ட் டிராப்டாக எடுக்க வேண்டும். ஆதி திராவிடர்கள், பழங்குடியினர்கள் ஆகியோர் சாதி சான்றிதழின் சான்றொப்பம் பெறப்பட்ட 2 நகல்களை சமர்ப்பித்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 22–ந்தேதி ஆகும். இவ்வாறு டாக்டர் சுகுமார் கூறி உள்ளார்.

Friday, August 09, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வை கண்காணிக்க 100 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படை

ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக சென்னையில் 100 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். சென்னை மாவட்டத்தில் மட்டும் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வை 27 தேர்வு மையங்களில் 9,056 பேர் எழுதுகின்றனர்.

இரண்டாம் தாள் தேர்வை 75 தேர்வு மையங்களில் 26,043 தேர்வர்கள் எழுதுகின்றனர். இந்தத் தேர்வுக்கான கண்காணிப்புப் பணிகள் தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமையில் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தகுதித் தேர்வைக் கண்காணிக்க 100 ஆசிரியர்களைக் கொண்ட பறக்கும் படை அமைக்க இதில் முடிவு செய்யப் பட்டது. இந்தக் கூட்டத்தில் தேர்வு மையங்கள், வினாத்தாள் காப்பு மையங்களில் காவல்துறை பாதுகாப்பு, தேர்வு மையங்களுக்கு தடையற்ற மின்சாரம், தீயணைப்புத் துறையினரின் பாதுகாப்பு, கூடுதல் பஸ்கள் இயக்குதல் போன்றவை தொடர்பாக அந்தந்த துறையினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

வருவாய்த் துறை அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

முதல்வர் தகுதி பரிசுக்கான "கட்-ஆப்' மதிப்பெண் வெளியீடு

அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, பிற்படுத்தப்பட்ட நலத்துறை சார்பில் வழங்கப்படும், முதல்வர் தகுதி பரிசுக்கான, "கட்-ஆப்' மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களில், முதல், 500 இடங்களை பெற்ற மாணவர்; முதல், 500 இட மாணவியருக்கு அரசின் சார்பில், உதவித்தொகை வழங்கப்படுவது வழக்கம்.

பட்டய மற்றும், பட்டப்படிப்பு முடிக்கும் வரை, ஆண்டுக்கு, 3,000 ரூபாய் வீதம், இவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். கடந்த ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு நடந்த, பிளல் 2, பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான, "கட்-ஆப்' மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. 1,167 மதிப்பெண் பெற்ற மாணவர்களும், 1,170 மதிப்பெண் பெற்ற மாணவியரும், பரிசு பெற விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் பட்டியல், ஜாதிச்சான்று, கல்லூரி படிப்பதற்கான, "போனபைடு' சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன், அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலரை, அணுக வேண்டும்.

சிறந்த ஆசிரியருக்கான விருதுக்கு வரும் 23ம் தேதிக்குள் 360 பேர் தேர்வு

சிறந்த ஆசிரியருக்கு வழங்கப்படும், "ராதாகிருஷ்ணன் விருது'க்கு, வரும், 23ம் தேதிக்குள், 360 ஆசிரியர் தேர்வு செய்யப்பட உள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5, தேசிய அளவில், ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், கல்விப் பணியை சிறப்பாக செய்யும் ஆசிரியர்கள், ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்டு, விருதுகளும், ரொக்கப் பரிசும் வழங்கப்படுகின்றன.

தேசிய அளவில் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், விருதுகளையும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசையும் வழங்கி, ஜனாதிபதி கவுரவிக்கிறார். மாநில அளவில் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாநில அரசுகள், தனியாக, விருதுகளையும், ரொக்கப் பரிசுகளையும் வழங்கி, கவுரவிக்கிறது. அந்த வகையில், 2012ம் ஆண்டுக்கான தேசிய விருதுக்கு, தமிழகத்தில் இருந்து, 22 ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, செப்., 5ல், ஜனாதிபதி, விருதுகளை வழங்க உள்ளார். இதற்கிடையே, தமிழக அரசின் சார்பில், "ராதாகிருஷ்ணன் விருது'க்கு, 360 ஆசிரியர், விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாவட்ட அளவில், தற்போது பரிசீலனையில் உள்ள ஆசிரியர் பட்டியல், அடுத்த வாரத்தில், கல்வித் துறைக்கு வந்துவிடும்

. பின், பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையிலான மாநில குழு கூடி, தகுதி வாய்ந்த ஆசிரியரை தேர்வு செய்ய உள்ளது. வரும், 23ம் தேதிக்குள், 360 ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு விடுவர் என, உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். செப்., 5ம் தேதி, சென்னையில் நடக்கும் விழாவில் பங்கேற்பதற்கு வசதியாக, ஒரு வாரத்திற்கு முன்பே, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு, கடிதம் அனுப்பப்படும் என்றும், அந்த அதிகாரி தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி: புதிய திட்டம் விரைவில் அமல்

4340 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தகவல் தொழில் நுட்ப கல்வி கற்பித்தல் திட்டம் தொடங்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு கணினி தொடர்பான கல்வி அறிவு இருந்தால்தான் கல்லூரி படிப்பிற்கு செல்லும்போது எளிதில் எதையும் கையாள முடியும் என்பதால் மத்திய அரசு கணினிக் கல்வி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கியுள்ளது

. அதன் அடிப்படையில் தமிழக அரசு 4340 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு தனியார் மூலம் கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்ளிட்ட சாதனங்களும் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு தகவல் தொடர்பு தொழில்நுட்ப கல்வி குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் உத்தேசமாக ரூ.19 லட்சத்து 90 ஆயிரம் நிதி ஒதுக்குகிறது. மொத்தம் ரூ.86 கோடி செலவில் 5 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் கணினிக் கல்வி கற்பிக்கப்படும். இதற்கான டெண்டர் பள்ளிக்கல்வி இயக்ககம் மூலம் கோரப்பட்டுள்ளது

. திட்டத்தை செயல்படுத்துதல் மற்றும் ஒப்படைத்தல் மூலம் தனியாருக்கு கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் கணினி கல்வி அறிவை பெற முடியும். ஏற்கனவே அரசு சார்பில் பிளஸ்–2 மாணவர்களுக்கு மடிக்கணினி இலவசமாக வழங்கப்படுகிறது. மடிக்கணினியை பள்ளி மாணவர்கள் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் இத்திட்டம் உதவியாக இருக்கும்.

பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ / எம்.எஸ்.சி., பட்டப்படிப்பிற்கு பெறும் முதல் ஊக்க ஊதிய உயர்விற்கு பின் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியாக உயர்கல்வி எம்.எட்., உடன் எம்.பில்., மற்றும் பி.எச்.டி., பட்டங்களை சேர்த்தல் -




IGNOU Term End Results - June 2013