இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, June 18, 2013

உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு இன்றுமுதல் விண்ணப்பம் விநியோகம்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக கல்லூரி உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள், திருப்பூர், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் புதன்கிழமை (இன்று) முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படுகின்றன. இதுகுறித்து எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் ஆர்.ஜெயகோபால் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: கல்லூரி கல்வித் துறையில் 2012-ஆம் ஆண்டிற்கான காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்புவதற்கான விண்ணப்பங்கள், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஜூன் 19 முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன.

இத்தேதிகளில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிற்பகல் 3 மணி வரை மட்டும் பெற்றுக்கொள்ளப்படும். கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிக்க வேண்டும். மஎஇ,இநஐத, ஒதஊ, சஉப, நகஉப தேர்ச்சி அல்லது பி.எச்.டி. பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை சம்பந்தப்பட்டவர்கள் நேரில் பெற்றுச்செல்ல வேண்டும். வழிகாட்டி நெறிமுறைகளின் படி ரூ. 250, ரூ. 500-க்கான செலுத்துச்சீட்டுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.  

TNPSC Group IV advertisement

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION ( TNPSC ) Advertisement June 2013

Vacancies :

3469 Junior assistant

1738 Typist

242 Steno Typist

View advertisement : http://bankexamrecruitment.blogspot.in/2013/06/tnpsc-group-iv-vacancies-3469-jr.html

Gk Updates like General knowledge

கல்லூரிகள் நாளை திறப்பு

கோடை விடுமுறை முடிந்து, நாளை (20ம் தேதி) கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில், 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 133 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 438 சுயநிதி கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில், லட்சக்கணக்கான மாணவர்கள், கல்வி பயின்று வருகின்றனர். கடந்த மே மாதம், கல்லூரிகளில் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை துவங்கியது. தற்போது, 65 நாட்களுக்கு பின், நாளை, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. மாணவர் சேர்க்கை : அரசு மற்றும் அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரிகளில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விற்பனை முடிந்த நிலையில், தற்போது மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. முதலாமாண்டு மாணவர்களுக்கு, ஜூலை, முதல் வாரத்தில் வகுப்புகள் துவங்குகின்றன.

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்புத் துணைத்தேர்வு புதன்கிழமை (ஜூன் 19) தொடங்குகிறது.

மாநிலம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் 98 ஆயிரத்து 500 பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். இந்தத் தேர்வு ஜூலை 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு... பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு ஜூன் 24-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜூன் 21, 22 ஆகிய தேதிகளில் ஹால் டிக்கெட் விநியோகிக்கப்பட உள்ளது. செங்கல்பட்டு கல்வி மாவட்ட மாணவர்களுக்கு செங்கல்பட்டில் உள்ள செயின்ட் கொலம்பஸ் மேல்நிலைப் பள்ளியிலும், காஞ்சிபுரம் கல்வி மாவட்ட மாணவர்களுக்கு காஞ்சிபுரம் அரசு சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியிலும், பொன்னேரி கல்வி மாவட்ட மாணவர்களுக்கு டி.வி.எஸ். ரெட்டி மேல்நிலைப் பள்ளியிலும், திருவள்ளூர் கல்வி மாவட்ட மாணவர்களுக்கு கௌடி மேல்நிலைப் பள்ளியிலும் ஹால் டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

சென்னை தெற்கு கல்வி மாவட்ட மாணவர்கள் அந்த மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்திலேயே (டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி, எழும்பூர்) விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். சென்னையில்... மத்திய சென்னை கல்வி மாவட்ட மாணவர்கள் மயிலாப்பூர் சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியிலும், கிழக்கு சென்னை கல்வி மாவட்ட மாணவர்களுக்கு ஹிந்து மேல்நிலைப் பள்ளியிலும், வட சென்னை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் வேப்பேரியில் உள்ள பெனடிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் ஹால் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வியாழக்கிழமை வழங்கப்படுகின்றன. அதே நாளில் அந்தந்தப் பள்ளிகளில் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

  சான்றிதழ் வழங்கப்படும் வியாழக்கிழமை முதல் 15 நாள்களுக்கு பதிவு செய்யும் மாணவர்களுக்கு ஜூன் 20-ஆம் தேதிக்கான பதிவு மூப்பே வழங்கப்படும். இதற்கு குடும்ப அட்டை, ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் வழங்க வேண்டும். இதன்மூலம், மதிப்பெண் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றை ஒரே நாளில் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆட்சியர் எ. சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

Letter No. 28079 Dt: June 14, 2013 Issuance of certificate for tax deducted at source in Form 16/16A with the provisions of section 203 of the Income-tax Act 1961-regarding

Monday, June 17, 2013

ஆசிரியர் தகுதித்தேர்வு: எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை?

் தகுதித்தேர்வில் எந்தெந்த பட்டப்படிப்புகள் இணையான கல்வித்தகுதி கொண்டவை? என்ற பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–

தமிழ்–ஆங்கிலம் பி.ஏ. தமிழ் – பி.ஏ. பயன்பாட்டு தமிழ் (திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் தமிழ் (நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) பி.ஏ.

ஆங்கிலம் – பி.ஏ. கம்யூனிகேஷன் இங்கிலீஷ் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் ஆங்கிலம், பி.ஏ. பங்ஷனல் இங்கிலீஷ், பி.ஏ. சிறப்பு ஆங்கிலம், பி.ஏ. ஆங்கிலம் (தொழிற்கல்வி) (காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்)

கணிதம்–இயற்பியல் பி.எஸ்சி. கணிதம் – பி.எஸ்சி. புள்ளியியல், பி.எஸ்சி. கணிதம் (கம்ப்யூட்டர் பயன்பாடு) பி.எஸ்சி.

இயற்பியல் – பி.எஸ்சி. இண்டஸ்ட்ரியல் எலெக்ட்ரானிக்ஸ் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.எட். படிப்பில் இயற்பியல் படித்திருக்க வேண்டியது கட்டாயம், பி.எஸ்சி. இயற்பியல் (சி.ஏ.) (கோவை பாரதியார் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. இயற்பியல் (இன்ஸ்ட்ருமென்டேஷன் டிப்ளமோ கட்டாயம்) (பாரதியார் பல்கலைக்கழகம்)

தாவரவியல்–விலங்கியல் பி.எஸ்சி. தாவரவியல் – ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி, லைப் சயின்ஸ் பட்டம் (பிளான்ட் சயின்ஸ், மைக்ரோ–பயாலஜி, பயோ–டெக்னாலஜி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று சிறப்பு பாடம்) (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. பிளான்ட் பயோ–டெக்னாலஜி (சென்னை பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. சுற்றுச்சூழல் உயிரியல் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. பிளான்ட் பயாலஜி, பயோ–டெக்னாலஜி (பாரதியார் பல்கலைக்கழகம்) பி.எஸ்சி. விலங்கியல் – ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி. லைப் சயின்ஸ் பட்டம் (அனிமல் சயின்ஸ் சிறப்பு பாடம்) (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி சுற்றுச்சூழல் விலங்கியல் (சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம்)

வரலாறு பி.ஏ. வரலாறு – பி.ஏ. வரலாறு மற்றும் சுற்றுலா (பாரதியார் பல்கலைக்கழகம்) மேற்கண்ட பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Allogation of periods pri&upper primary

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விற்பனை தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன

. தருமபுரி மாவட்டத்தில் அதிகபட்சமாக முதல் தாளுக்கு 6 ஆயிரம் விண்ணப்பங்களும், இரண்டாம் தாளுக்கு 10 ஆயிரம் விண்ணப்பங்களும் விற்பனையானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டதால் பெரும்பாலான விண்ணப்ப மையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படவில்லை. திங்கள்கிழமை காலையில் மட்டும் பல இடங்களில் வரிசையில் நின்று தேர்வர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றனர்.

கடந்த ஆண்டு முதல்முறையாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டதாலும், இரண்டு தாள்களுக்கும் ஒரே விண்ணப்பம் என்பதாலும் முதல் நாளில் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் விற்பனையாகின. சில இடங்களில் விண்ணப்பங்களும் தீர்ந்துவிட்டன. இந்த ஆண்டு விண்ணப்ப விநியோக மையங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருந்தாலும்,  முதல் நாளில் விற்பனை சற்றுக் குறைவாக உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். எனினும், ஓரிரு நாள்களில் விண்ணப்ப விற்பனை அதிகரிக்கும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டாலும், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் நேரில் மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 5,600 விண்ணப்பங்கள் விற்பனை: சென்னை மாவட்டத்தில் முதல் தாளுக்கு 2,107 விண்ணப்பங்களும், இரண்டாம் தாளுக்கு 3,517 விண்ணப்பங்களும் விற்பனையாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூலை 1 வரை விநியோகம்: அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 1-ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அன்று மாலையே கடைசி நாள் ஆகும். ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ஆம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட் 18-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

Sunday, June 16, 2013

Ele director&Minister arange all federation meeting on 20-6-13 at5.30pm


மத்திய அரசு ஊழியர் ஓய்வு வயதுஉயர்த்தப்படாது என அறிவிப்பு

ி:"மத்திய அரசு ஊழியர்கள் ஒய்வு பெறும் வயதை, 62 ஆக அதிகரிக்கும் திட்டம் ஏதும் தற்போதைய அரசில் இல்லை' என, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய அரசு ஊழியர்கள் தொடர்பான, நல விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு, மத்தியப் பணியாளர் நலத் துறை வசம் உள்ளது. ஊழியர்களின் தனிப்பட்ட புகார்கள், பென்ஷன் தாரர்களின் கோரிக்கைள் ஆகியவற்றை இந்த துறை தான் கவனித்து வருகிறது. மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது, 60 ஆக உள்ளது.

இதை, 62 ஆக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.இந்நிலையில், மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை, 62 ஆக உயர்த்தும்படி, பிரதமருக்கு அனுப்பியுள்ளதாகச் செய்திகள் வெளியாயின.இது குறித்து, மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் திட்டம் ஏதும் இப்போது இல்லை. இது பற்றி, எவ்வித குறிப்பும், பிரதமருக்கு அனுப்பப்படவில்லை; அப்படியொரு திட்டம் ஏதும் அமைச்சகத்திடம் இல்லை' என்றார்.மத்திய அரசின் பல்வேறு துறைகளில், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது என்றால், பல்வேறு துறைகளிடும் நிதி அமைச்சகம் ஆலோசனை நடத்த வேண்டும். மேலும், நிதி அமைச்சகத்தின் ஆலோசனை இல்லாமல் இந்த திட்டத்தைச் செயல்படுத்த முடியாது. நிதி பற்றாக்குறையை சமாளிக்க, பல்வேறு பொருளாதார சிக்கன நடவடிக்கைகளை நிதி அமைச்சகம் எடுத்துவரும் நிலையில், இது சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது.

15,000 பணி இடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் இன்று முதல் விநியோகம் ஆரம்பம்

தமிழகத்தில் காலியாக உள்ள சுமார் 15,000 ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் இன்று தொடங்குகிறது. ஆகஸ்டு 17 மற்றும் 18ம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என கடந்த 22ம் தேதி டிஆர்பி அறிவித்தது. இதன் மூலம் சுமார் 15,000 காலி பணி இடங்கள் நிரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் இன்று (17ம் தேதி) தொடங்குகிறது. இந்த ஆண்டு 7 லட்சம் பேர் தகுதி தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  விண்ணப்பங்கள் ஏற்கனவே அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு அனுப்பப் பட்டு தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளன. ஜூலை 1ம் தேதி மாலைக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் விலை ஸீ50, தேர்வுக் கட்டணம் ஸீ500 ஆகும். ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் விண்ணப்ப கட்டணமாக ஸீ250 செலுத்தினால் போதும். பணி நியமனத்துக்கு இந்த ஆண்டு புதிய முறை அமல்படுத்தப்படுகிறது

. முதலில் தகுதி தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்படும். அதன்பிறகு தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். தொடர்ந்து காலி இடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை தகுதி தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ் 2, டிகிரி, பிஎட்., மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயார் செய்யப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவார். இடைநிலை ஆசிரியர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

Saturday, June 15, 2013

வாக்கெடுப்பு முறை எப்படி நடைபெறும்?

் மாநிலங்களவைத் தேர்தலில் காலியாகும் இடங்களுக்கு அதிகமாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் வாக்கெடுப்பு நடத்தப்படுவது நிச்சயம். இந்த வாக்கெடுப்பு பொது மக்கள் தேர்தலில் வாக்களிப்பது போன்று இருக்காது. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும். அந்த வாக்கும் முன்னுரிமை அடிப்படையில் இருக்கும். அதாவது, முதல் வேட்பாளராக ஒருவரைத் தேர்வு செய்வது, இரண்டாவது வேட்பாளராக பட்டியலில் உள்ள மற்றொருவரைத் தேர்வு செய்வது என்று வரிசைக் கிரமமாக இருக்கும். அவ்வாறு வரிசைப்படி வாக்களித்த பிறகு அந்த வாக்குகள் எண்ணப்படும்.

அதன் விவரம் வருமாறு: மாநிலங்களவையின் ஒரு தேர்தலில் ஏழு இடங்களுக்கு பதினாறு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். அந்த வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையை 54 பேர் பெற்றுள்ளதாகக் கொள்ள வேண்டும். அப்போது, முதலில் தேர்வு பெறும் வேட்பாளருக்கு அதிகபட்ச வாக்கு மதிப்பு வழங்கப்படும். அதாவது, "அ' என்ற வாக்காளர் முன்னுரிமைப்படி முதலில் தேர்வு செய்யப்பட்டால் 11 வாக்கு மதிப்பைப் பெறுவார். மொத்தமுள்ள வாக்காளர்களான 54 என்பது 100-ஆல் பெருக்கப்பட்டு, அதனால் வரும் மதிப்பான 5,400 என்பதை எட்டால் (எட்டு என்பது காலியாக உள்ள 7 மாநிலங்களவை இடங்களுடன் ஒன்றைக் கூட்டி வருவது ஆகும்.) வகுக்க வேண்டும். அவ்வாறு வகுத்த பிறகு கிடைக்கும் மதிப்பு 675-டன், மீண்டும் ஒன்றைக் கூட்ட வேண்டும். அப்படிக் கூட்டினால் 676 என்ற மதிப்பு கிடைக்கும்.

இந்த மதிப்புதான் ஒருவர் எம்.பி. பதவியைப் பெறுவதற்கான வாக்கு மதிப்பாகும். மேலும் மாநிலங்களவைத் தேர்தலில் முன்னுரிமை அடிப்படையில் வெற்றி பெற்ற வேட்பாளர் வாக்கு மதிப்பு 11 என வைத்துக் கொண்டு, அதை 100-ஆல் பெருக்கினால் 1100 என்ற மதிப்பு வரும். அதில் வெற்றி பெறத் தேவையான 676-ஐ கழித்தால் 424 என்ற வாக்கு மதிப்பு மீதம் இருக்கும். இந்த மதிப்பு, அதிக வாக்குகள் பெற்றும்கூட வெற்றி வாய்ப்பைப் பெற முடியாத வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும். அவ்வாறு சேர்க்கப்படும்போது, வெற்றி பெறும் வாய்ப்பை அந்த வேட்பாளர் பெறுவார். இதுவே முன்னுரிமை அடிப்படையிலான வாக்கு முறையாகும்.

இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு: ஜூன் 24 ல் துவக்கம்

  இடைநிலை ஆசிரியர் பட்டயப் பயிற்சி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஜூன் 24 முதல் தேர்வுகள் துவங்குகிறது. இடைநிலை ஆசிரியர் பட்டயபயிற்சி படிக்கும் மாணவர்களுக்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு தேதிகளை அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: இரண்டாம் ஆண்டு:
ஜூன் 24 ல் இந்திய கல்வி முறை, 25 ல் கற்றலை எளிதாக்கலும் மேம்படுத்தலும்,
26 ல் தமிழ் கற்பித்தல்,
27 ல் ஆங்கிலம் கற்பித்தல்,
28 ல் கணக்கு கற்பித்தல்,
29 ல் அறிவியல் கற்பித்தல், ஜூலை 1ல் சமூக அறிவியல் கற்பித்தல்.

முதலாம் ஆண்டு:
ஜூலை 4 ல் கற்கும் குழந்தை
, 5 ல் கற்றலை எளிதாக்கலும் மேம்படுத்தலும்,
6 ல் தமிழ் கற்பித்தல்,
8 ல் ஆங்கிலம் கற்பித்தல்,
9 ல் கணக்கு கற்பித்தல்,
10 ல் அறிவியல் கற்பித்தல், ஜூலை 11 ல் சமூக அறிவியல் கற்பித்தல்.

தேர்வுகள் காலை 10 முதல் 1 மணி வரை நடைபெறும்.

23-8-2010 பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தோர் டி.இ.டி தேர்வு எழுதவேண்டியதில்லை.தகவல் அறியும் உரிமை சட்டம்


இன்று இரவு அமல் பெட்ரோல் விலை ரூ.2 உயருகிறது

- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சமீப காலமாக மிகவும் சரிவை சந்தித்தது. இது இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக எண்ணை நிறுவனங்களுக்கு லேசான இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை சரிகட்ட பெட்ரோல், டீசல் விலையை சற்று உயர்த்த முடிவு செய்துள்ளனர். பெட்ரோல் விலையை 15 நாட்களுக்கு ஒரு தடவை அதாவது 1-ந்தேதி மற்றும் 15-ந்தேதி மாற்றி அமைக்க எண்ணை நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தப்படும் என்று தெரிகிறது. டீசலுக்கான மானியத்தை முழுமையாக நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால் கடந்த ஜனவரி மாதம் முதல் டீசல் விலை லிட்டருக்கு 50 காசு உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் டீசல் விலை 50 காசு உயர வாய்ப்புள்ளது.

இன்றிரவு இந்த விலை உயர்வு அமலுக்கு வர உள்ளது. கடைசியாக கடந்த 31-ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசும், டீசல் விலை லிட்டருக்கு 50 காசும் உயர்த்தப்பட்டது.

Friday, June 14, 2013

HM meeting on 15-6-13 regarding free things


15-6-2013 dir.procedings conduct hm meeting

Directorate of Government Examinations HSC 2013 retotal

வணிகவியல், பொருளியல் பட்டதாரிகள் டி.இ.டி., தேர்வை எழுத முடியாது

வணிகவியல், பொருளியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களில், இளங்கலை பட்டப்படிப்பு முடித்து, அதன்பின், பி.எட்., முடித்தவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத முடியாது. பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை, தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, புவியியல், அறிவியல் ஆகிய, ஐந்து பாடங்களுக்கு மட்டுமே, பட்டதாரி ஆசிரியர்கள், நியமனம் செய்யப்படுகின்றனர். வணிகவியல், பொருளியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்கள், 10ம் வகுப்பு வரை கிடையாது.

எனவே, இந்த பாடங்களில், இளங்கலை பட்டப்படிப்பும் அதன்பின், பி.எட்., பட்டமும் பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத முடியாது. வரும், 17ம் தேதி முதல், டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை துவங்க உள்ள நிலையில், யார், யார் விண்ணப்பிக்கலாம் என்பதை, டி.ஆர்.பி., தெளிவுபடுத்தியுள்ளது. எம்.காம்., - பி.எட்., படித்தவர்கள், நேரடியாக, முதுகலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல், பொருளியல் பாடத்தினரும் விண்ணப்பிக்கலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடமும், துவக்கத்தில் இருந்து அல்லாமல், மேல்நிலைப்பள்ளியில் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. எனவே, இந்த பாடத்தில் பட்டம் பெற்றவர்களும், டி.இ.டி., தேர்வை எழுத முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இலவச பஸ் பாஸ் பெற்றவர்கள் விபரம் தினமும் அனுப்ப உத்தரவு

அரசு,உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.பாடபுத்தகங்களை போன்று,பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ்களும், விரைவில் கிடைக்க வேண்டும் என அரசு தெரிவித்திருந்தது. தற்போது இப்பணி மந்த நிலையில் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.இதை தவிர்க்க, கல்வித்துறை அதிகாரிகள், தினமும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச பஸ் பாஸ் விபரங்கள், நிலுவையில் உள்ள பஸ் பாஸ்கள் போன்ற விபரங்களை,சேகரித்து பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும், என அரசு உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு: ஜூன் 17, 18-ல் ஹால் டிக்கெட்

பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 17), செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) ஆகிய கிழமைகளில் ஹால் டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக சிறப்புத் துணைத்தேர்வு நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை அந்தந்த கல்வி மாவட்டத்தில் உள்ள மையங்களில், தங்களது விண்ணப்ப எண்ணை தெரிவித்து மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணாசாலையில் உள்ள மதரசா-ஐ-ஆசாம் மேல்நிலைப் பள்ளியில் ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். புகைப்படத்துடன் கூடிய இந்த ஹால் டிக்கொட்டில் பதிவு எண், தேர்வு மையம் குறிப்பிடப்பட்டிருக்கும். இதை ஒரு நகலெடுத்து மாணவர்கள் தங்கள் வசம் வைத்துக்கொள்ள வேண்டும். திருவள்ளூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருவள்ளூர் டி.ஆர்.பி.சி.சி.சி. ஹிந்து மேல்நிலைப் பள்ளியிலும், பொன்னேரி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டர்சன் மேல்நிலைப் பல்ளியிலும், செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு செங்கல்பட்டு செயின்ட் கொலம்பஸ் மேல்நிலைப் பள்ளியிலும் ஹால் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது

தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியில் சேர்வதற்கான தகுதியை ஏற்படுத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத விண்ணப்ப படிவம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல், அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் ஜூலை 1–ந் தேதி கடைசி நாள். எந்த விண்ணப்பமும் ஆன்லைனில் விண்ணப்பித்தால் ஏற்கப்படமாட்டாது. இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.