click below
Friday, June 14, 2013
வணிகவியல், பொருளியல் பட்டதாரிகள் டி.இ.டி., தேர்வை எழுத முடியாது
வணிகவியல், பொருளியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களில், இளங்கலை பட்டப்படிப்பு முடித்து, அதன்பின், பி.எட்., முடித்தவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத முடியாது. பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை, தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, புவியியல், அறிவியல் ஆகிய, ஐந்து பாடங்களுக்கு மட்டுமே, பட்டதாரி ஆசிரியர்கள், நியமனம் செய்யப்படுகின்றனர். வணிகவியல், பொருளியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்கள், 10ம் வகுப்பு வரை கிடையாது.
எனவே, இந்த பாடங்களில், இளங்கலை பட்டப்படிப்பும் அதன்பின், பி.எட்., பட்டமும் பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத முடியாது. வரும், 17ம் தேதி முதல், டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை துவங்க உள்ள நிலையில், யார், யார் விண்ணப்பிக்கலாம் என்பதை, டி.ஆர்.பி., தெளிவுபடுத்தியுள்ளது. எம்.காம்., - பி.எட்., படித்தவர்கள், நேரடியாக, முதுகலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல், பொருளியல் பாடத்தினரும் விண்ணப்பிக்கலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடமும், துவக்கத்தில் இருந்து அல்லாமல், மேல்நிலைப்பள்ளியில் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. எனவே, இந்த பாடத்தில் பட்டம் பெற்றவர்களும், டி.இ.டி., தேர்வை எழுத முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இலவச பஸ் பாஸ் பெற்றவர்கள் விபரம் தினமும் அனுப்ப உத்தரவு
அரசு,உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.பாடபுத்தகங்களை போன்று,பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ்களும், விரைவில் கிடைக்க வேண்டும் என அரசு தெரிவித்திருந்தது. தற்போது இப்பணி மந்த நிலையில் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.இதை தவிர்க்க, கல்வித்துறை அதிகாரிகள், தினமும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச பஸ் பாஸ் விபரங்கள், நிலுவையில் உள்ள பஸ் பாஸ்கள் போன்ற விபரங்களை,சேகரித்து பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும், என அரசு உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு: ஜூன் 17, 18-ல் ஹால் டிக்கெட்
பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 17), செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) ஆகிய கிழமைகளில் ஹால் டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக சிறப்புத் துணைத்தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை அந்தந்த கல்வி மாவட்டத்தில் உள்ள மையங்களில், தங்களது விண்ணப்ப எண்ணை தெரிவித்து மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணாசாலையில் உள்ள மதரசா-ஐ-ஆசாம் மேல்நிலைப் பள்ளியில் ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். புகைப்படத்துடன் கூடிய இந்த ஹால் டிக்கொட்டில் பதிவு எண், தேர்வு மையம் குறிப்பிடப்பட்டிருக்கும். இதை ஒரு நகலெடுத்து மாணவர்கள் தங்கள் வசம் வைத்துக்கொள்ள வேண்டும். திருவள்ளூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருவள்ளூர் டி.ஆர்.பி.சி.சி.சி. ஹிந்து மேல்நிலைப் பள்ளியிலும், பொன்னேரி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டர்சன் மேல்நிலைப் பல்ளியிலும், செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு செங்கல்பட்டு செயின்ட் கொலம்பஸ் மேல்நிலைப் பள்ளியிலும் ஹால் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது
தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியில் சேர்வதற்கான தகுதியை ஏற்படுத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத விண்ணப்ப படிவம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல், அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் ஜூலை 1–ந் தேதி கடைசி நாள். எந்த விண்ணப்பமும் ஆன்லைனில் விண்ணப்பித்தால் ஏற்கப்படமாட்டாது. இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
Thursday, June 13, 2013
இரட்டை பட்ட வழக்கின் நிலை
மூன்றாண்டு மற்றும் ஓராண்டு வழக்கு நேற்று விசாரணைக்கு வரவில்லை.நேற்று மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அது என்னவெனில் உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஓராண்டு முடித்தோருக்கு பதவிஉயர்வு என்று.
தற்போது ஒவ்வொரு தரப்பிலும் இரண்டு வக்கீல்கள் ஆஜாராயினர்.இவ்வாறு மேலும் வழக்கு போடுவதால் தீர்ப்பு தாமதமாகும் என்று கூறுகின்றனர்
எனவே நீதிபதி அவர்கள் ஒரே நாளில் வழக்கு விசாரணை முடிக்கும்படி கூறியுள்ளார் என கூறுகின்றனர்.திங்கட்கிழமை விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது
பிளஸ்–1 வகுப்புகள் 24–ந்தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்
மதிப்பெண் சான்றிதழ் 10–ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 27–ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12–ந்தேதி வரை நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11 லட்சத்து 19 ஆயிரத்து 478 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 10 லட்சத்து 51 ஆயிரத்து 62 பேர், பள்ளி மாணவர்களாகவும், மற்றவர்கள் தனித்தேர்வர்களாகவும் தேர்வில் கலந்துகொண்டனர். தேர்வு முடிவு மே மாதம் 31–ந்தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் 89 சதவீத மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியல் ஜூன் 20–ந்தேதி பள்ளிகளில் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்து இருந்தது.
அதன்படி மதிப்பெண் சான்றிதழ் 20–ந்தேதி வழங்கப்படும் என்றும் பிளஸ்–1 வகுப்புகள் 24–ந்தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் கே.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
பிளஸ்–1 வகுப்புகள் தொடக்கம் ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த 10–ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வின் முடிவு மே 31–ந்தேதி வெளியிடப்பட்டது. அத்தேர்வின் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவ–மாணவிகளுக்கு 20–ந்தேதி வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், 2013–2014–ம் கல்வி ஆண்டில் பிளஸ்–1 வகுப்புகள் 24–ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கும்.
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு அறிவிப்பு
் டி. என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு வரும் ஆக 25 ம் தேதி தேர்வு நடக்கிறது. இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர், தட்டச்சர் என மொத்தம் 5 ஆயிரத்து 566 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதனை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்விற்கான விண்ணப்பங்களை நாளை முதல் விண்ணப்பிக்கலாம். வரும் ஜூலை 15 ம் தேதி விண்ணப்பிக்க கடைசிநாள் ஆகும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Wednesday, June 12, 2013
கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்த குரூப் 4 தேர்வில், தேர்வு செய்யப்பட்ட 100 பேருக்கு நாளை மீண்டும் கவுன்சிலிங் நடக்கிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், கடந்த 2012 ஜூலையில், 10 ஆயிரத்து 500 இளநிலை உதவியாளர், தட்டச்சர்,சுருக்கெழுத்தர் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில் தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல், வெளியிடப்பட்டது. டிசம்பர் மாதம் கவுன்சிலிங் நடந்தது. அதை தொடர்ந்து அவர்கள் பணியில் சேரத்தொடங்கினர். இந்நிலையில் டிசம்பர் மாதம் நடந்த கவுன்சிலிங்கில், பங்கேற்று பணியிடங்களை தேர்வு செய்த 600 பேரை, மீண்டும் மறு கவுன்சிலிங்கிற்கு வருமாறு பிப்ரவரி மாதம் அழைத்தனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த 600 பேரும், மீண்டும் மறு கவுன்சிலிங் சென்றனர். அப்போது, அவர்கள் தேர்வு செய்திருந்த துறை, மாவட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, வேறு துறை, மாவட்டங்களில் காலி பணியிடம் காட்டப்பட்டது. காரணம் கேட்டபோது,அங்கு தான் காலி பணியிடங்கள் உள்ளதாக,கூறப்பட்டது. இதை தொடர்ந்து, 500 பேர் மறு கவுன்சிலிங்கில் பங்கேற்று, புதிய பணியிடங்களை தேர்வு செய்து பணியில் சேர்ந்தனர். மீதமுள்ள 100 பேர், எங்களால் புதிய இடங்களுக்கு செல்ல முடியாது. ஏற்கனவே தேர்வு செய்த மாவட்டங்களில், வேறு துறையிலாவது பணியிடம் தாருங்கள், என்று கேட்டனர். அதற்கு, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் தற்போது இயலாது. மீண்டும் உங்களை கவுன்சிலிங் அழைப்போம். அப்போது வாருங்கள், என கூறி அனுப்பினர். அதன்படி மீதம் உள்ள 100 பேருக்கும்,நாளை (ஜூன் 14) சென்னை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் கவுன்சிலிங் நடப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகைப்பதிவேட்டில் ஜாதி பெயர் நீக்கம்
மாணவர்கள் வருகைப்பதிவேட்டில், ஜாதியின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்களுக்கான வருகைப்பதிவேட்டின் முதல் பக்கத்தில், மாணவர்களின் விபரக்குறிப்பு இடம் பெறும். இதில், மாணவரின் தாய், தந்தை, தொழில், மற்றும் ஜாதி குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தாண்டு முதல் ஜாதியை குறிப்பிட வேண்டியதில்லை. அவர் எந்த மதத்தை சேர்ந்தவர், தாழ்த்தப்பட்டவரா, பிற்படுத்தப்பட்டவரா, மிகவும் பிற்படுத்தப்பட்டவரா என்பதை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது என, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 8,226 தனியார் பள்ளிகளுக்கு 2013–2016–ம் ஆண்டுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு கமிட்டி அறிவித்துள்ளது
நீதிபதி சிங்காரவேலு கமிட்டி தமிழ்நாட்டில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் அளவுக்கு அதிகமாக கல்வி கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்தி குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயிக்கும் வகையில் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. தமிழக அரசு அமைத்த இந்த கமிட்டி 2013–2016–ம் ஆண்டுக்கு தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிப்பதற்காக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளை சென்னைக்கு நேரில் வரவழைத்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தது.
இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கமிட்டியின் அலுவலகத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. பள்ளியில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வக வசதி, ஆசிரியர்–ஊழியர் சம்பவம் உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. 8,226 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 8,226 தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு தமிழக அரசின் இணையதளத்தில் (www.tn.gov.in) வெளியிடப்பட்டது. ஒவ்வொரு பள்ளிக்குமான கல்வி கட்டணத்தை மாவட்ட வாரியாக இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு பள்ளிக்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்களை மாணவர்கள்–பெற்றோர்கள் அறிந்துகொள்ளும் வகையில் தகவல் பலகையில் வெளியிட வேண்டும் என்றும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி கட்டண நிர்ணய கமிட்டியின் தலைவரான நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு நிருபர்களிடம் தெரிவித்தார்.
175 ஆண்டுகள் பழமைவாய்ந்த "தந்தி' சேவையை ஜூலை 15-ம் தேதியுடன் நிறுத்த உத்தரவ
தகவல் தொடர்பில் மிக முக்கிய பங்காற்றிவந்த "தந்தி' (டெலிகிராம்) சேவையை வரும் ஜூலை 15-ம் தேதியோடு நிறுத்துவிடுமாறு பி.எஸ்.என்.எல்.-ன் அனைத்த மாநில மற்றும் வட்ட அலுவலகங்களுக்கு தொலைத் தொடர்பு இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
Tuesday, June 11, 2013
அரசின் பல்வேறு துறைகளில் 5,500 காலி பணி இடங்களை நிரப்ப ஆகஸ்டு மாதம் குரூப்–4 தேர்வு ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும்
அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சுமார் 5,500 காலி பணி இடங்களை நிரப்ப ஆகஸ்டு மாதம் குரூப்–4 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும். 5,500 காலி இடங்கள் தமிழக அரசின் வெவ்வேறு துறைகளுக்கு தேவைப்படும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர் மற்றும் பில் கலெக்டர், வரைவாளர், சர்வேயர் ஆகிய பதவிகள் குரூப்–4 தேர்வு மூலமாக நியமிக்கப்படுகின்றன. இந்த தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்துகிறது.
இதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10–ம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குரூப்–4 தேர்வு மூலமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணி இடங்கள் நிரப்பப்படன. இந்த நிலையில், மேற்கூறப்பட்ட பதவிகளில் சுமார் 5,500 காலி இடங்கள் குரூப்–4 தேர்வு மூலமாக நிரப்பப்பட இருக்கின்றன. ஆகஸ்டு மாதம் தேர்வு இதற்கான எழுத்துத்தேர்வு ஆகஸ்டு மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது. தேர்வு பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்தன. குரூப்–4 தேர்வு பணிகளுக்கு எழுத்துத்தேர்வு மட்டுமே உண்டு. நேர்முகத்தேர்வு எதுவும் கிடையாது. எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்றாலே வேலை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் பதவிகளுக்கு தொடக்க நிலையில் ஏறத்தாழ ரூ.14 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். இப்பணிகளுக்கு தேர்வுசெய்யப்படுவோர் பட்டதாரியாக இருந்தால் இரண்டு இன்கிரிமென்ட் அதாவது கூடுதலாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பணியில் இருந்துகொண்டே துறைத்தேர்வுகள் எழுதி படிப்படியாக பதவி உயர்வும் பெறலாம்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில், இந்தாண்டு, நான்கு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம், இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்பதே, இதன் நோக்கம். அதன்படி, அனைவருக்கும் கல்வி வழங்குவதற்குத் தேவையான, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் படிப்பு, தொழில் கல்வி, மாற்றுத் திறனாளிகள் கல்விக்கு முக்கியத்துவம், மாணவியர் விடுதிகள் அமைப்பது என, நான்கு திட்டங்களை அமல்படுத்த, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இதற்கான ஒப்புதல், ஜூலை மாதத்தில் வழங்கப்படும் என, கல்வித் துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆண்டு, பாட ஆசிரியர் திறன் வளர்ப்பு பயிற்சிக்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரையாண்டு தேர்வுக்கு பின், பயிற்சி வழங்கினால், பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால், பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இந்தாண்டு பயிற்சியை, ஜூலையில் துவங்கி, ஆகஸ்டில் முடிக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.