இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, February 08, 2013

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மே மாதம் தான் நடத்த வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

் பள்ளிகளில் மாணவர் சேர்கை மே மாதத்தில் தான் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சில தனியார் பள்ளிகளில் மார்ச் மாதம் முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றது. இதனால் தகுதியான மாணவர்களுக்கு பள்ளியில் சேர்க்கை கிடைப்பதில்லை. எனவே இதை தவிர்க்க பள்ளிகளில் மே மாதம் முதல் சேர்க்கையை ஆரம்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

218 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரை நடுநிலைப்பள்ளித் தலைமையாசிராக நிலையுயர்த்தி ஆணை வெளியீட

அரசு ஊழியர் திருமணமாகாத /விவாகரத்தான/விதவை மகளுக்கு மாதம் ரூ3050 ஓய்வூதியம்

Tuesday, February 05, 2013

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற "டிப்ஸ்' * புதிய முறையை எதிர்கொள்வது எப்படி

தயாராவது எப்படி ? : கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம். மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளில் "சி-சாட்' என்ற தாள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி.,யும் இந்த தாளை சேர்த்திருக்கிறது. பல ஆண்டுகளாக தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருப்பவர்கள், புதிதாக இப்பகுதியை படிக்க வேண்டும். முதன்முதலாக தேர்வு எழுதுவோர், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள தமிழ், அறிவியல் மற்றும் சமூகவியல் புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும்.

பொருளாதாரம் குறித்த கேள்விகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொருளாதார பாடங்களே போதும். தேர்வுகளில் தத்துவஇயல், மனத்திறன் தொடர்பான கணிதக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இப்பகுதிக்கு ஆழமாக படிக்க வேண்டியதில்லை. சந்தையில் கிடைக்கும் வழிகாட்டி நூல்களை புரட்டினாலே போதும். நடப்பு நிகழ்வுகள் குறித்த வினாக்களுக்கு, முக்கியத்துவம் தரப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு விடையளிக்க, தினமும் செய்தித்தாள்களைப் படித்து, குறிப்பு எடுக்க வேண்டும். முக்கிய செய்தி, சிறப்பு கட்டுரை, தலையங்கம் ஆகியவற்றை சேகரித்து வைக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு மற்றும் ஐந்தாண்டுத் திட்டங்களில், குறைந்தது 5 கேள்விகள் தவறாமல் இடம் பெறும்.

முக்கிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்கள், பிரிவுகள் ஆகியவை பற்றிய பட்டியலை சொந்தமாக தயார் செய்து வைத்து கொள்ளலாம். அறிவியல் பாடங்களைப் படிக்கும் போது, அதன் நடைமுறை, பயன்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் சயின்சில் அடிப்படையாக 2 கேள்விகள் இருக்கும். இதற்கு கம்ப்யூட்டர் குறித்த, இயல்பான அறிவே போதும். மொழிப் பாடம் விருப்பப் பாடமாக தமிழை தேர்வு செய்வதா, ஆங்கிலமா என்ற குழப்பம் காணப்படுகிறது. ஆரம்பம் முதல் ஆங்கிலத்தில் படித்து, புலமை பெற்றவர்கள் ஆங்கிலத்தை தேர்ந்தெடுக்கலாம். மற்றவர்கள் தமிழை தேர்வு செய்தல் நலம். பாடவாரியாக அட்டவணை தயார் செய்ய வேண்டும். தேர்வுக்கு முன் குறைந்தபட்சம், 10 மாதிரி தேர்வுகளை எழுத வேண்டும். பழைய வினாத்தாள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்திலேயே கிடைக்கின்றன. "சி-சாட்' வினாக்களை பொறுத்த வரை, சொந்தமாக படிக்க முடியாது என்பதால், பயிற்சி மையத்தில் படிக்கலாம். இந்து அறநிலையத்துறை சார்ந்த பணிகளுக்கான தேர்வுக்கு, சைவமும் வைணவமும், இந்து சமய இணைப்பு விளக்கம் போன்ற நூல்களை தேர்வு ஆணையமே பரித்துரைத்திருக்கிறது. இப்புத்தகங்கள் பெரிய கோயில்களில் கிடைக்கின்றன.

ஒரு தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால், படிப்பதை நிறுத்தி விடாதீர்கள். பணியில் சேரும் வரை என்ன வேண்டுமானாலும் நிகழலாம். கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு. வெற்றி பெற வாழ்த்துகள்.

தமிழகம் முழுவதும் 7 நாட்களுக்குள் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கலர் பென்சில

் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்னும் 7 நாட்களுக்குள் இலவச மெழுகு பென்சில், கலர் பென்சில்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் 1 முதல் 12ம் வகுப்பு வரை வகுப்பு நிலையை பொறுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பை, உபகரண பெட்டி, கலர் பென்சில், மெழுகு பென்சில், காலணி, சீருடை வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு முதல்வர் அறிவித்தார்.

இந்த கல்வியாண்டு முடிய இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் அரசு அறிவித்த இலவச பொருட்கள் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் இருந்தனர். இந்நிலையில், அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் அரசு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்கட்டமாக தொடக்கக் கல்வி மூலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 2ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மெழுகு பென்சிலும், 3 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கலர் பென்சில்களும் விரைவாக வழங்க வேண்டும்.

மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து மாவட்டங்களுக்கு பென்சில்கள் உடனே அனுப்பப்படும். அதை அடுத்த வார இறுதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை பல்கலை: இளநிலை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

் சென்னை பல்கலைக்ககழகத்தில், இளநிலை பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் நாளை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் பி.ஏ., பி.காம். பி.எஸ்சி., ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் நாளை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வரும் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் தேர்வு முடிவுகளை காண www.unom.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Monday, February 04, 2013

IGNOU TERM END EXAMINATION DECEMBER 2012

IGNOU B.ed Results

தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தற்போது நடைபெற்று வரும் 10 நாள் வட்டார அளவிலான பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளத

ு. தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தற்போது நடைபெற்று வரும் 10 நாள் வட்டார அளவிலான பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

Saturday, February 02, 2013

தனி ஊதியம் குறித்த தெளிவுரைக் கடிதம்

சீசன் டிக்கெட் வழங்கும் முறை ரயில்வே துறை புதிய முடிவு

ரயில் பயணிகளுக்கு, இனி, ஆறு மாதம் மற்றும் ஒரு ஆண்டுக்கு மட்டுமே, சீசன் டிக்கெட் வழங்குவது என, ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ரயில்களில் தினமும் பயணம் செய்வோர், ஒரு மாதம் மற்றும் மூன்று மாதம் என்ற அளவில், தற்போது சீசன் டிக்கெட் வாங்கி பயணம் செய்கின்றனர். இதில், மாற்றம் செய்யப்பட உள்ளது. ஆறு மாதம் மற்றும் ஒரு ஆண்டு என்ற அளவில் மட்டுமே, இனி, சீசன் டிக்கெட் வழங்கப்படும்

. ஒரு ஆண்டுக்கு சீசன் டிக்கெட் வாங்கினால், 10 மாதம், 8 நாட்களுக்கான கட்டணத் தொகையே, சீசன் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும். ஆறு மாதத்திற்கான சீசன் டிக்கெட் வாங்கினால், ஐந்து மாதம், 4 நாட்களுக்கான கட்டணத் தொகையை செலுத்தி, சீசன் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இந்த முறையில், சீசன் டிக்கெட் பெறும் பயணிகளுக்கு, ஒரு முறை செலுத்திய கட்டணத் தொகை, எந்தக் காரணத்திற்காகவும் திருப்பித் தரப்பட மாட்டாது. மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும், சீசன் டிக்கெட்டுகள், தொடர்ந்து வழங்கப்படும். சீசன் டிக்கெட் பெறுவதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், ஏப்ரல், 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். இத்தகவல், மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருந்ததால் தான் இன்று நீதிபதியாக உள்ளேன்: உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன்

் எனது ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருந்ததால்தான் இன்று உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளேன் என்றும், ஆசிரியர்களை மதிக்கக் கற்றுக் கொண்டவர்களின் வாழ்க்கை எதிர்காலத்தில் கண்டிப்பாக வெற்றியாகத்தான் இருக்கும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் சனிக்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூர், வள்ளுவர் வித்யாலயாவில் நடைபெற்ற 9-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் கூறினார். விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு நீதிபதி கே.வெங்கட்ராமன் மேலும் பேசுகையில் கூறியதாவது:

மாணவர்களாகிய நீங்கள் நாளை சமுதாயத்தை ஆள வேண்டும். பள்ளியில் மாணவர்கள் கல்வியுடன் ஒழுக்கத்தை அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் ஆசிரியர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். அதற்கு பின்னராவது மாணவர்கள் திருந்தி, சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகத்தான். இதனைப் பெற்றோர் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எனது ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருந்தததால்தான் இன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளேன். நான் படிக்கும் காலத்தில் உடன் படிக்கும் மாணவர்கள் தவறு செய்யும் போது ஆசிரியர்கள் கண்டித்திருக்கிறார்கள். அடித்திருக்கிறார்கள். ஆனால் அதை அப்போது பெற்றோர் குறை சொல்லவில்லை. நல்லதற்கு என்றுதான் கூறினார்கள். வீட்டில் ஒன்று அல்லது இரு குழந்தைகளை வைத்துள்ளார்கள். சனி, ஞாயிறு விடுமுறை என்றால்  பிள்ளைகளை வைத்து பெற்றோரால் சமாளிக்க முடியுமா? ஏன் பள்ளிக்கு விடுமுறை விடுகிறார்கள் என்கிறார்கள். பல்வேறு சூழ்நிலையில் வளர்க்கப்பட்டுள்ள, வெவ்வேறு குணநலன் கொண்ட பிள்ளைகளை வைத்து ஆசிரியர்கள் பள்ளியில் கற்றுக் கொடுக்கிறார்கள்.

அவர்கள் சிறந்த குடிமக்களாக உருவாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள், சில கண்டிப்பான நடவடிக்கைகளை எடுத்தால்தான் பள்ளி நிர்வாகம் நடைபெற இயலும். பத்திரிக்கைகளில் இதுபோன்ற செய்திகள் வரும்போது அதனை புறக்கணித்துவிடுங்கள்.இளம் கன்று பயம் அறியாது என்பார்கள். மாணவர்களை நல் வழிப்படுத்த கண்டிப்பு அவசியம் தேவை.உங்கள் பிள்ளைகள் எந்த பாடத்தில் சிறந்து விளங்குகிறார்களோ, அவர்கள் விருப்பப்படி பொறியியல், மருத்துவம் எடுத்து படிக்க வையுங்கள். உங்கள் எண்ணங்களை, விருப்பங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். பெற்றோர் மாணவர்களை அடுத்த மாணவர்களுடன் ஒப்பிட்டு குறை கூறாமல், ஊக்குவிக்க கற்றுக் கொள்ளுங்கள். ஆசிரியர்களை மதிக்கக் கற்றுக் கொண்டவர்களின் வாழ்க்கை என்றும் வெற்றிகரமாகத்தான் இருக்கும். கடின உழைப்பு இருந்தால் மாணவர்கள் நாளை சரித்திரம் படைக்கலாம் என்று கூறினார்.

பணியிடை பயிற்சி ரத்து செய்ய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

"பள்ளித் தலைமையாசிரியர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, உண்டு உறைவிடப் பயிற்சி வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், மாநிலச் பொதுச்செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அளவில், அனைத்து மாவட்டத் தலைநகரிலும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஃபிப்ரவரி, 4-7, 11-14 மற்றும், 18-19 என்ற அளவில், பத்து நாட்கள் நடக்க உள்ள உண்டு உறைவிடப் பயிற்சியை ரத்து செய்ய வேண்டும்.அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான உண்டு உறைவிடப்பயிற்சி நடக்கிற தகவல் அறிந்து, பள்ளித் தலைமையாசியிர்கள், பெருத்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான தலைமையாசிரியர்கள் பெண்களாக இருப்பதும், அவர்கள், தங்களது கணவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை பணிக்கனுப்புதல், குழந்தைகளை தயார்படுத்தி பள்ளிக்கு அனுப்புதல் போன்ற இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும்.

ஒரு குடும்பத்தில், கணவன் மற்றும் மனைவி இருவரும் பள்ளித் தலைமையாசிரியர்களாக இருப்பின், அவர்களின் குடும்பம் அன்றாட நடைமுறை வாழ்நிலையில் பெருத்த இன்னல்களுக்கும், நடைமுறைச் சிக்கல்களுக்கும் உள்ளாகும் அபாயம் பயிற்சியினால் ஏற்பட்டுள்ளது. பள்ளித் தலைமையாசிரியர்களின் குடும்பச் சூழ்நிலை, குழந்தை பராமரிப்பு போன்ற வேண்டுகோளை ஏற்று, உண்டு உறைவிடப்பயிற்சியை ரத்து செய்து, தற்போது நடைமுறையில் உள்ளதுபோல், 9.30 முதல், 4.30 மணி வரையிலான கால அட்டவணையைக் கொண்டு அந்தந்த வட்டார வளமையத்தில் பணியடைப் பயிற்சி வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3687 காலியிடங்களுக்கு 3.75 லட்சம் பேர்: குரூப் 2 தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியாகும்

  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-2 தேர்வை ஆகஸ்டு 12-ந் தேதி நடத்தியது.   நகராட்சி ஆணையர் சார்பதிவாளர், உதவி பிரிவு அலுவலர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், முது நிலை ஆய்வாளர், கண்காணிப்பாளர், இளநிலை கண்காணிப்பாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவியில் காலியாக இருந்த 3,687 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடந்தது.   தேர்வின் போது வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் குரூப்-2 தேர்வு முடிவு வெளியிடப்படாமலேயே ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் நவம்பர் 4-ந் தேதி மறுதேர்வு நடந்தது.   தேர்வு எழுத மொத்தம் 6,49,209 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த தேர்வை 3,74,338 பேர் மட்டுமே எழுதினர்.   தேர்வு முடிவு நேற்று வெளியிடப்படும் என்று ஆவலோடு பலர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் முடிவு வெளியாகவில்லை.   இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. அதிகாரி ஒருவர் கூறுகையில், குரூப்-1 தேர்வுக்கான கவுன்சிலிங் தற்போது நடைபெற்று வருவதால் குரூப்-2 தேர்வு முடிவை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   எனவே அடுத்த வாரம் குரூப்-2 தேர்வு முடிவை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.

Friday, February 01, 2013

ஆசிரியர்கள் நியமனத்திற்கு அடுத்த பட்டியலில் 15,000 பேர

்  இந்த ஆண்டு, ஜூன் மாதம், பள்ளி துவங்குவதற்கு முன், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்தி, அதன் வழியாக, 15 ஆயிரம் ஆசிரியர்களை, புதிதாக தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. இவர்கள் அனைவரும், ஜூன் மாதம், பள்ளி துவங்கும் போது, பணியில் சேர வழி செய்யப்படும் என, கூறப்படுகிறது. கட்டாய கல்விச் சட்டத்தின் படி, எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இதன்படி, கடந்த ஆண்டு, ஜூலை, 12ல் நடந்த முதல், டி.இ.டி., தேர்வை, எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதிய போதும், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.மொத்த தேர்வர்களில், 0.33 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றதால், தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில், கடந்த ஆண்டு, அக்., 14ல், இரண்டாவது, டி.இ.டி., தேர்வு நடந்தது.

முதல் தேர்வு கேள்வித்தாள் கடினமாக அமைந்ததும், தேர்வுக்கு, ஒன்றரை மணி நேரம் மட்டுமே வழங்கியதும், தேர்ச்சி சரிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்பட்டது.இதனால், இரண்டாவது தேர்வுக்கு, கேள்வித்தாள் கடினத்தை சற்று தளர்த்தியதுடன், தேர்வு நேரத்தை, ஒன்றரை மணியிலிருந்து, மூன்று மணி நேரமாக உயர்த்தப்பட்டது.இதன் காரணமாக, இரண்டாவது தேர்வில், 19 ஆயிரம் பேர் (3 சதவீதம்), தேர்ச்சி பெற்றனர். இரு தேர்வுகளிலும் தேர்வு பெற்றவர்களுக்கு, கடந்த டிசம்பரில், பணி நியமனம் வழங்கப்பட்டது.இந்நிலையில், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில், டி.ஆர்.பி., இறங்கியுள்ளது. ஏற்கனவே நடந்த டி.இ.டி., தேர்வுகளில், இன்னும், 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.இந்த ஆண்டு, மே இறுதியில் ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்தால், 15 முதல், 17 ஆயிரம் ஆசிரியர்கள் வரை, புதிதாக தேர்வு செய்ய வேண்டி இருக்கும்.முதலில், ஜூன் மாதத்திற்குப் பின், மூன்றாவது, டி.இ.டி., தேர்வு நடக்கும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், ஜூன் மாதத்திற்குப் பின் துவக்கினால், இறுதிக்கட்ட தேர்வு முடிய, இரண்டு, மூன்று மாதங்கள் கரைந்து விடும் என, கல்வித் துறை கருதுகிறது. புதிய ஆசிரியர்கள், ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியதும், பணியில் சேர்வதற்கு ஏற்ப, தேர்வு அட்டவணையை தயாரித்து முடிக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,யிடம், கல்வித் துறை உயர் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.எனவே, அடுத்த, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை, விரைவில் எதிர்பார்க்கலாம். பள்ளி பொதுத் தேர்வுகள், ஏப்., 10ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, ஏப்ரல் இறுதியில் தேர்வை நடத்தி, மே மாதத்திற்குள், அனைத்துப் பணிகளும் முடிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்கக் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க சிறப்பு பயிற்சி

  தொடக்கக்கல்வியில், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு 14 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் அதிகரிப்பால், அரசு தொடக்கக் கல்வித்துறையில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருவதாக,புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நடப்புக் கல்வியாண்டில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்தவும், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், நிர்வாக ரீதியில் செயல்படும், தொடக்கக்கல்வித்துறை தலைமை ஆசிரியர்களுக்கு தரமான கல்வி, சேர்க்கையை அதிகரிப்பது குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், குறிப்பிட்ட 5 இடங்களில், இப்பயிற்சி, பிப்.,4 முதல்18 வரை நடக்கிறது. சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், அரசின் புதிய உத்தரவு பற்றிய பயிற்சியை அளிக்க உள்ளதாக, அனைவருக்கும் கல்வி இயக்க, சி.இ.ஓ.,(சிவகங்கை) ஜெயலட்சுமி தெரிவித்தார்.

பிளஸ் 2 பொது தேர்வில் பிட் அடித்தால் 2 ஆண்டு தேர்வு எழுத முடியாது கருத்துகள

பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் 2 ஆண்டுக்கு தேர்வு எழுத முடியாத வகையில் நடவடிக்கை எடுக்க தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. வழக்கம் போல இந்த ஆண்டும் தேர்வு மையங்களுக்கு செல்போன் எடுத்து செல்லக் கூடாது என்று தேர்வு துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி  முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. சென்னை மாவட்டத்தில் இந்த தேர்வு சிறப்பாக நடத்துவது குறித்து மாவட்ட அளவிலான ஆய்வு அலுவலர்களின் கூட்டம்  சென்னையில் நடந்தது. அந்த கூட்டத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

சென்னையில் மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் 10 பறக்கும் படையும், தென்சென்னை, மத்திய சென்னை, கிழக்கு சென்னை, வடசென்னை மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் 4 பறக்கும் படைகள் அமைக்கப்படும். மேலும் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட் டுள்ள பறக்கும் படைகளும் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  பிளஸ் 2 தேர்வுக்காக, தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டுப்பாளர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் என சுமார் 2800 தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்கள் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள

். பிளஸ் 2 தேர்வில் ஒழுங்கீன செயலில் ஈடுபடுவோரை தடுக்க தமிழ் நாடு அரசு தேர்வுத்துறை பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இதன் படி, தேர்வு அறைக்குள் துண்டுச்சீட்டு வைத்திருந்தாலோ, அச்சிடப்பட்ட புத்தகத்தை வைத்திருந்தாலோ ஓராண்டு அவர்கள் தேர்வு எழுத தடை விதித்தும், துண்டுச்சீட்டு பார்த்து எழுதுதல் மற்ற மாணவர்களின் விடைத்தாட்களை பார்த்து எழுதுதல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும் மாணவர்களை இரண்டு ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களிடம் தேர்வு நேரத்திலோ அல்லது தேர்வு முடிந்து வெளியில் செல்லும்போதோ முறைகேடான செயல்களில் நடந்துகொள்ளும் மாணவர்கள், மற்ற மாணவர்களின் விடைத்தாட்களை வாங்கி எழுதுவது போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடும் மாணவர்களை நிரந்தரமாக தேர்வு எழுத தடைவிதித்தும், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில், தவறான முறையில் தேர்வு நடைபெறுவதாக திடீர் ஆய்வின் போது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட தேர்வு மைய தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் பள்ளிகளாக இருந்தால் தேர்வு மையம் மற்றும் அங்கீகாரம் ரத்து செய்வதுடன் அப்பள்ளி மாணவர்களை வேறொரு பள்ளியுடன் சேர்த்து தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும்

. தேர்வு அறைக்குள் அறை கண்காணிப்பாளர்,  தேர்வெழுதும் மாணவ, மாணவியர் கண்டிப்பாக  செல்போன், பேஜர் வைத்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வைத்திருந்தால் துறை அலுவலர் கள் அல்லது போலீசார்  அவற்றை பறிமுதல் செய்து  மேல்தொடர் நடவடிக்கை எடுப்பார்கள்.

பிப்.-21ல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்

  பிப்ரவரி 21-ல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கூடுகிறது.  இந்த கூட்டத் தொடரானது மே மாதம் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.பிப்.26-ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யபடுகிறது.பி.27-ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யபடுகிறது. பி.28-ம் தேதி 2013-14-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பா.சிதம்பரம் தாக்கல் செய்கிறார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீதம் அகவிலைப்படி உயர்கிறது ? -Thanthi

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை 8 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 72 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.

8 சதவீதம் அகவிலைப்படி உயர்வு குறித்து அடுத்த மாதம் மத்திய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. ஜனவரி மாதம் முதல் தேதியை கணக்கிட்டு இந்த 8 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது.