இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, January 09, 2013

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; புதிதாக 22 லட்சம் பேர் சேர்ப்பு!

    தமிழகம் முழுவதும் திருத்தியமைக்கப்பட்ட  இறுதி வாக்காளர் பட்டியல்  இன்று வெளியிடப்பட்டது.புதிதாக விண்ணப்பித்தோருக்கு வருகிற 25 ஆம் தேதி  அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி, 2013 ஆம் ஆண்டு ஜனவரி  1 ஆம் தேதியை அடிப்படையாக கொண்டு நடந்து முடிந்தது.அதன்பின், வரைவு  வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதில் புதிதாக  பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய கடந்த ஆண்டு நவம்பர் 20 ஆம்  தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில், புதிதாக பெயர் சேர்க்க 23 லட்சத்து 37,934 பேர், பெயர் நீக்க 2 லட்சத்து  38,617 பேர், திருத்தம் செய்ய 2 லட்சத்து 66,225 பேர், பெயர் முகவரி இடம்  மாற்ற ஒரு லட்சத்து 12,596 பேர் விண்ணப்பித்திருந்தனர். நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் இருந்து பெறப்பட்ட அனைத்து படிவங்களின் விவரமும்  கணினியில் பதிவு செய்யப்பட்டு, கள விசாரணைகள் மேற்கொள்ள்ப்பட்டன.

இந்நிலையில்,இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தமிழகம் முழுவதும்  வெளியிடப்பட்டது.மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகள்,இறுதி வாக்காளர் பட்டியலை  வெளியிட்டனர். சென்னையில் ரிப்பன் மாளிகையில் ஆணையர் விக்ரம் கபூர்,சென்னை மாவட்டத்தில்  உள்ள 16 சட்டமன்ற தொகுதிக்கான பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியலை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி அமைவிடங்கள்,அந்தந்த மண்டல  அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். புதிதாக  விண்ணப்பித்தோருக்கு வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் தினமான வரும் 25  ஆம் தேதி வழங்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறுகையில்,"தமிழகம்  முழுவதும் 5.15 கோடி வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக சுமார் 22 லட்சம் பேர்  வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர்  தினமான வரும் 25 ஆம் தேதி அடையாள அட்டை வழங்கப்படும்.

புதிய வாக்காளர் அடையாள அட்டையை வாக்குச் சாவடி அமைவிடங்கள்,அந்தந்த  மண்டல அலுவலகங்கள்,தாலுகா அலுவலகங்களில் பெற ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன" என்றார்.

வங்கித் துறையில் ஒரு லட்சம் பேருக்கு பணி வாய்ப்ப

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் இந்த நிதி ஆண்டுக்குள், 20 ஆயிரம் புதிய ஊழியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அதேபோல் 1,200 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். மற்ற பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பணி விரைவாக நடைபெற்று வரும் நிலையில், மேலும் 20 ஆயிரம் எழுத்தர் பணியிடங்களுக்கு ஊழியர் தேர்வு நடைபெற உள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் கூடுதலாக 22 ஆயிரம் அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட இருப்பதாக வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், புதிய வங்கி மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறி விட்ட நிலையில், புதிய தனியார் வங்கிகள் தொடங்குவதற்கான உரிமம் அளிப்பதற்கான நடைமுறைகளை ரிசர்வ் வங்கி வேகப்படுத்தி உள்ளது. அடுத்த 4 முதல் 6 வாரங்களுக்குள் அதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ளது. இதனால், அடுத்த நிதி ஆண்டான ஏப்ரல் முதல் புதிய வங்கிகள் தொடங்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளன. எனவே, புதிதாக தொடங்கப்படும் வங்கிகள் மூலம் இந்த ஆண்டில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு வங்கிப் பணியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இந்த ஆண்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர், வங்கிகளில் வேலை பெறுவார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தர் நியமனம்

   தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக மதுரையைச் சேர்ந்த முனைவர் சந்திரகாந்தா ஜெயபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணியிடம் பல மாதங்களாக காலியாக இருந்துவந்தது.

இப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் சந்திரகாந்தா ஜெயபாலனை நியமித்து, தமிழக ஆளுநர் ரோசய்யா உத்தரவிட்டார். இவர் மதுரை பசுமலையைச் சேர்ந்தவர். பியுசி படிப்பை பாத்திமா கல்லூரியிலும், பி.எஸ்சி., பட்டத்தை மதுரை டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரியிலும், எம்.எஸ்சி., பட்டத்தை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் பெற்றவர்.

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு ரூ.3000 பொங்கல் போனஸ்!

  தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3000 ரூபாய் பொங்கல் போனஸ்  வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"அரசுக்கும், மக்களுக்கும்  இடையே பாலமாக செயல்படுபவர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்று  சொன்னால் அது மிகையாகாது.

அரசின் நலத் திட்டங்களுக்கும், நாட்டின்  முன்னேற்றத்திற்கும் அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.இதன்படி, 1. 2011-2012 ஆம் ஆண்டிற்கு, ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த அலுவலர்கள்  மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் என்ற உச்ச வரம்பிற்குட்பட்டு 30 நாட்கள்  ஊதியத்திற்கு இணையாக மிகை ஊதியம் வழங்கப்படும்.

  2. ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்,  நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து  சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும்  முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள்,  சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள்,  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி  பணியாளர்கள்,  கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்  துறையில் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து  உதவியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த  அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில்  பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக் கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தரப்  பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு 1,000 ரூபாய் சிறப்பு  போனஸ் வழங்கப்படும

். 3. உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில்  பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக் குழு /  அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு / இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்  ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின்  கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்தப் போனஸ் வழங்கப்படும். 

4. ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், முன்னாள் கிராம நிர்வாக  அலுவலர்கள் (தலையாரி மற்றும் கர்ணம்) ஆகியோருக்கு 500 ரூபாய் பொங்கல்  பரிசாக வழங்கப்படும். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவிற்கிணங்க அரசு  ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவதன் மூலம், அரசு  ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை  மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு 311 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்" என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ரயில் கட்டணம் 20% அதிகரிப்பு; 21 ஆம் தேதி முதல் அமல்

  பயணிகள் ரயில் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர்,10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் ரயில் கட்டணம் உயர்tத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சரக்கு ரயிலுக்கான கட்டணமும் உயர்த்தப்படுவதாக கூறிய அவர், இந்த கட்டண உயர்வின் மூலம் 12,000 கோடி ரூபாய் வருவாய் திரட்ட முடிவு செய்யப்ப்பட்டிருப்பதாக தெரிவித்தார். கட்டண உயர்வு விவரம்  தூங்கும் வசதி கொண்ட ரயிலுக்கு கி.மீ.க்கு 6 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.சாதாரண வெளியூர் ரயில்களுக்கு கி.மீ.க்கு 3 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.நகர்ப்புற ரயில்களுக்கு கி.மீ.க்கு 2 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 ஆம் வகுப்பு கட்டணம் கி.மீ.க்கு 4 காசும்,ஏ.சி.3 டயர், ஏ.சி. இருக்கை வசதி கொண்ட ரயிலுக்கு கி.மீ.க்கு 10 காசும் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

21 ஆம் தேதி முதல் அமல் இந்த கட்டண உயர்வு வருகிற 21 ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலாவதாக அவர் மேலும் கூறினார். கட்டண உயர்வு ஏன்? மேலும் ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு ஏதும் இருக்காது என்று தெரிவித்த அவர், 6 ஆவது ஊதிய கமிஷன் செலவினம், ரயில்வே பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வு செய்யப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

GO 5. Pongal gift for Teachers & govt Employees

GO.6 Pongal gift for Pensitioners

Tuesday, January 08, 2013

1167 மதிப்பெண் மேல் எடுத்தால் வருடம் ரூ. 3,000 உதவித்தொகை

  தமிழ் மொழியைப் பாடமாகப் படித்து, பிளஸ் 2 வகுப்பில், அதிக மதிப்பெண்கள் பெறும் முதல், 500 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, பட்டப்படிப்பு முடியும் வரை, 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந்த ஆண்டு முதல், தமிழ் மொழியைப் பாடமாகப் படித்து, பிளஸ் 2 வகுப்பில், 1167 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, உதவித்தொகை அளிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு, பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில், முதல், 500 மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்கள் பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடிக்கும் வரை, வருடம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வில், 1167 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள், 1168 பெற்ற மாணவியர், மதிப்பெண், சாதி சான்றிதழ் மற்றும் கல்லூரியில் படிக்கும் சான்றிதழ்களுடன், அவர்கள் பிளஸ் 2 படித்த மாவட்டத்தில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

HSC 2013 Time table

HSC 2013 General Instractions

Monday, January 07, 2013

1,060 காலி பணி இடங்கள்: அரசு கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தை கண்காணிக்க தனி அதிகாரி -

   அரசு கல்லூரிகளில் புதிதாக நியமிக்கப்பட உள்ள 1,060 உதவி பேராசிரியர் நியமனத்தை கண்காணிக்க கல்லூரி கல்வி இயக்குனர் தேவதாஸ் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். உதவி பேராசிரியர்கள் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் 1,060 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

உதவி பேராசிரியர் பதவிக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுநிலை பட்டப்படிப்புடன் ஸ்லெட் அல்லது நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி. பட்டதாரிகளாக இருந்தால் ஸ்லெக்ட, நெட் தேர்ச்சி அவசியம் இல்லை. ஸ்லெட், நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி, பி.எச்டி. பட்டம், பணி அனுபவம், நேர்முகத்தேர்வு என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆசிரியர் நியமனத்திற்கு போட்டித்தேர்வு நடத்தப்படுவதால் உதவி பேராசிரியர் நியமனத்திற்கும் போட்டித்தேர்வு நடத்துவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முந்தைய ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட பழைய நடைமுறையின்படியே நியமனம் நடைபெற உள்ளது.

தனி அதிகாரி நியமனம் உதவி பேராசிரியர் நியமன பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம்தான் மேற்கொள்ள உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிலையில், உதவி பேராசிரியர் நியமன பணிகள் அனைத்தும் தனி அதிகாரி தலைமையில் நடைபெற உள்ளது. இதற்காக கல்லூரி கல்வி இணை இயக்குனர் தேவதாஸ் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார்.

நேரடி தேர்வு மூலம் 24 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமனம் விரைவில் அறிவிப்பு

   நேரடி தேர்வு மூலமாக விரைவில் 12 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகளும், 12 மாவட்ட கல்வி அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளனர். நேரடி நியமனம் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலமாக உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளாக (ஏ.இ.இ.ஓ.) பணி அமர்த்தப்படுகிறார்கள். ஏ.இ.இ.ஓ. பணி காலி இடங்களில் 40 சதவீத இடங்கள் நேரடி தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.

இதற்கான போட்டி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் 12 ஏ.இ.இ.ஓ. பணி இடங்கள் நேரடி தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிட உள்ளது. இதே போல், மாவட்ட கல்வி அதிகாரி நியமனத்தை பொறுத்தவரையில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்தும் (75 சதவீதம்) நேரடி நியமனம் (25 சதவீதம்) மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.

விரைவில் அறிவிப்பு பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 40 சதவீதமும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 35 சதவீதமும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. பள்ளி கல்வித்துறையில் காலியாக இருந்த 75 டி.இ.ஓ. காலி இடங்களில் பதவி உயர்வு மூலமாக 53 இடங்கள் நேற்று முன்தினம் நிரப்பப்பட்டன. இதன்மூலம் 53 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. 12 டி.இ.ஓ. பணி இடங்களை நேரடிதேர்வு மூலமாக நிரப்ப முடிவு செய்துள்ளனர். டி.இ.ஓ. தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.இ.ஓ.) நடத்துகிறது. கடந்த சில ஆண்டுகளாக டி.இ.ஓ. பதவிகளுக்கு நேரடி தேர்வு ஏதும் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில், 12 டி.இ.ஓ. காலி இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளது.

On upgradion Kallar Reclamation of schools

Sunday, January 06, 2013

ஓராண்டில் இரட்டை பட்டப்படிப்பு : தகுதியில் சேர ஆசிரியர்களுக்க தடை ு

தமிழகத்தில், அரசு பள்ளிகளில் நேரடி நியமனம், பதவி உயர்வுக்கு இரட்டை பட்டப்படிப்பு செல்லாது என, சி.இ.ஓ.,க்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் ஒரே ஆண்டில் இரட்டை பட்டப்படிப்பு பெற்றிருந்தால், அந்த தகுதி அடிப்படையில், நேரடி நியமனம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை விடுத்துள்ள உத்தரவில், தொடக்க கல்வித்துறையில் பல்வேறு தொகுப்பு வழக்குகள் தொடர்பாக, சென்னை ஐகோர்ட் 2012 ஆக.,14ல் தீர்ப்பு வழங்கியது. அதில், அனைத்து பல்கலை.,களில் ஏற்கனவே பட்டம் பெற்ற ஒருவர், இரட்டை பட்டப் படிப்பு மூலம் ஓராண்டில் (2 டிகிரி) பெறும் பட்டத்தை 3 ஆண்டு பட்ட படிப்பிற்கு இணையாக கருத முடியாது. எனவே, பணி நியமனம், பதவி உயர்வுக்கு, இத்தகுதிகளை ஏற்க கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.

2012-2013 | TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT | LIST OF DEO PROMOTION

1. மாவட்டக் கல்வி அலுவலர், தக்கலை சி.பால்ராஜ் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முதன்மைக் கல்வி அலுவலகம், திண்டுக்கல்     2. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், வேலூர் எஸ்.அருண்மொழி 
 3. மெட்ரிக் பள்ளிகள் ஆய்வர், மதுரை செ.எமரல்சி
4. மாவட்டக் கல்வி அலுவலர் பெரியகுளம் டி.சி.அனந்தநாயக
5. மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர்,தூத்துக்குடி சீ.வசந்தா   6. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், நாகப்பட்டினம் கா.பழனிவேல்
 7. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,திருப்பூர் கு.மா.காந்திமதி
8.மாவட்டக் கல்வி அலுவலர், சேலம் அ.சுப்பிரமணியன்
9. மாவட்டக் கல்வி அலுவலர், ஈரோடு சு.மாலதி

்  10. மெட்ரிக் பள்ளிகள் ஆய்வர், சேலம்       வி.செல்வராஜ்
  11. மாவட்டக் கல்வி அலுவலர் நாகப்பட்டினம் ஏ.இராஜமாணிக்கம் 

  12. மாவட்டக் கல்வி அலுவலர் பட்டுக்கோட்டை சி.நரேந்திரன்
13. மெட்ரிக் பள்ளிகள் ஆய்வர் திருவள்ளூர் நா.கண்ணன்
  14. மாவட்டக் கல்வி அலுவலர், தர்மபுரி டி.துரைசாமி
15. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,திருவள்ளூர் வி.எம்.கலாவல்லி
16. மாவட்டக் கல்வி அலுவலர் மயிலாடுதுறை வீர.வெள்ளைச்சாமி
  17. மாவட்டக் கல்வி அலுவலர்,முசிறி வி.எஸ்.பார்த்திபன்
18. மாவட்டக் கல்வி அலுவலர் திருவண்ணாமலை எம்.சசிகலாவதி  19. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், திருவண்ணாமலை ம.பொ.கணேசன்
  20. மாவட்டக் கல்வி அலுவலர் திருவாரூர்
21. மாவட்டக் கல்வி அலுவலர்,பழனி ச.கலையரசி
22. மெட்ரிக் பள்ளிகள் ஆய்வர் கோயம்புத்தூர் கே.கைலாஸ்       23. மாவட்டக் கல்வி அலுவலர் அறந்தாங்கி        சி.தாமரை
24. மாவட்டக் கல்வி அலுவலர், பெரம்பலூர் டி.வனஜாசலோமி
  25. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,திண்டுக்கல் பொ.சிவானந்தம்
26. மாவட்டக் கல்வி அலுவலர் விழுப்புரம் டி..செங்குட்டுவன்                                                            27. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,விருதுநகர் தி.

28. மாவட்டக் கல்வி அலுவலர் உசிலம்பட்டி ச.இரவிக்குமார்
  29. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,கடலூர் த.குணசேகரன்   30. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,விழுப்புரம்            வி.மல்லிகா
31. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், ஈரோடு   ஆர்.கந்தசாமி  32. மாவட்டக் கல்வி அலுவலர் உத்தமபாளையம் இல.ஜெயலட்சுமி 
  33. மாவட்டக் கல்வி அலுவலர் அருப்புக்கோட்டை பி.சுப்ரமணி  34. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,தஞ்சாவூர் க.கணேசன்   35. மாவட்டக் கல்வி அலுவலர் கிருஷ்ணகிரி எஸ்.முகமதுகலீல் 36. மாவட்டக் கல்வி அலுவலர்,தேவக்கோட்டை ம.சு.செந்தமிழ்செல்வி 
   37. மாவட்டக் கல்வி அலுவலர்,புதுக்கோட்டை. வே.இராமச்சந்திரன்
38. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,திருநெல்வேலி. ஆ.வசந்தி  
39. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,கிருஷ்ணகிரி ஆர்.கமலம் ்  40. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,கரூர் மு.பொன்னம்மாள் 
  41. மாவட்டக் கல்வி அலுவலர்,குன்னூர் சி.ஏ.சண்முகவடிவு
  42. மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர்,கரூர் சி.கதிர்வேலு         43. மாவட்டக் கல்வி அலுவலர்,திருப்பத்தூர் பா.வெள்ளையம்மாள்                         44. மாவட்டக் கல்வி அலுவலர்,பொள்ளாச்சி எஸ்.முகமதுசலீம்   45. மாவட்டக் கல்வி அலுவலர்,விருத்தாசலம் பொ.வடிவேல்      46. மாவட்டக் கல்வி அலுவலர்,தென்காசி. என்.வீரமணி   
47. மாவட்டக் கல்வி அலுவலர்,மதுரை கே.ஜெயமீனாதேவி           48. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,பெரம்பலூர் பி.தங்கவேல்
  49. மாவட்டக் கல்வி அலுவலர்,விருதுநகர் வி.பழனியாண்டி           50. மாவட்டக் கல்வி அலுவலர்,செய்யார்  கே.தாமோதரன்
51. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,தேனி சி.பத்மாவதி   

தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் 100 பள்ளிகள் வீதம் 3,200 ஆங்கில வழி இணைப்பு பள்ளிகள் தொடங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் 100 பள்ளிகள் வீதம் 3,200 ஆங்கில வழி இணைப்பு பள்ளிகள் தொடங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை தமிழகம் முழுவதும் அடுத்த கல்வி ஆண்டில் 3,200 ஆங்கில வழி இணைப்பு பள்ளிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆங்கில வழிக் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. இதை தவிர்க்க, அனைத்து குழந்தைகளுக்கும் சமவாய்ப்பு கிடைக்க நடப்பு கல்வி ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள துவக்கப் பள்ளிகளில், தேர்வு செய்யப்பட்ட 320 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை பெற்றோர்கூட தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் தலா 2 பிரிவுகள் ஆங்கில வழி கல்வியில் இருக்கும்.

இதுவரை ஊராட்சி தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி இல்லை. தற்போது இந்த பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 லட்சத்து 23 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆங்கில வழியில் கல்வி கற்கிறார்கள். துவக்கப் பள்ளி நிலையிலேயே இந்த ஆண்டு ஆங்கில வழி தொடங்கப்பட்டதால் 24 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக ஆங்கில வழியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் கோவையில் தொடக்கக் கல்வி இயக்குனரின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், 24 வகையான உத்தரவுகள் மற்றும் ஆலோசனைகளை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கியுள்ளனர். அதன்படி, ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறைந்தது 10 துவக்கப் பள்ளிகளை ஆங்கில வழி இணைப்பு பள்ளிகளாக தேர்வு செய்ய வேண்டும். அதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ள பள்ளிகளின் முழு விவரங்களையும் ஜனவரி மாதத்திற்குள் மாநில தொடக்கக் கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் அவரவர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தலா 10 துவக்கப்பள்ளிகள் வீதம் மாவட்டம் முழுவதும் 100 பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து அனுப்பி வருகின்றனர். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூறுகையில், ‘மாவட்டத்திற்கு 100 பள்ளிகள் என்றாலும் 32 மாவட்டத்திற்கும் 3,200 தொடக்கப் பள்ளிகள் ஆங்கில வழி இணைப்புப் பள்ளிகளாக அடுத்த கல்வி ஆண்டில் நடைமுறைக்கு வரும். ‘ என்றனர்.

இணைப்பு பள்ளி என்றால் என்ன? தொடக்க பள்ளிகளில் தமிழ் வழி படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களில், ஆங்கில வழியில் படிக்க விருப்பம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து, அதே பள்ளியில் அவர்களுக்கு ஆங்கில வழியில் தனியாக வகுப்புகளை நடத்துவது இணைப்பு பள்ளி (பேரலல் இங்கிலீஷ் மீடியம்) என்று அழைக்கப்படுகிறது. ஆங்கில வழியில் கற்க மாணவர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினால், பின்னர் அதே வளாகத்தில் தனியாக கட்டிடமும் கட்டப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.