இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, December 18, 2012

வங்கி ஊழியர்கள் நாளை "ஸ்டிரைக்':நாடு முழுவதும் பணிகள் பாதிக்கும்

:வங்கி நடைமுறை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொது துறை வங்கிகளை தனியார் மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், நாளை, ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு, பொதுத்துறை வங்கி பணியாளர் சங்கங்கள், அழைப்பு விடுத்துள்ளன.

இதே போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் மாதம், 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட வங்கிகள், நேற்று மீண்டும் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. வேலைநிறுத்தத்திற்கு, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், இந்திய வங்கிகளின் பணியாளர் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், தேசிய வங்கி ஊழியர்கள் யூனியன் ஆகிய, நான்கு சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது சயலர், சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:வங்கி துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிக்கும் போதெல்லாம், அதை எதிர்த்து நாங்கள், போராடி வருகிறோம். மத்திய அரசின் இந்த முயற்சி, நாட்டின் பொருளாதாரத்திற்கோ அல்லது நாட்டிற்கோ, எந்த விதத்திலும் நன்மை அளிக்காது. அந்த வகையில், நாளை, ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.நாளைய போராட்டத்தில், நாடு முழுவதும், 5 லட்சம் வங்கி ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இதனால், வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று அரையாண்டு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரையாண்டு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. பிற வகுப்பு மாணவர்களைப் போல, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கும், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள், மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வந்தன.

இதனால், அவர்கள், ஆண்டு பொதுத் தேர்வை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாக, அரசுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளையும், ஆண்டு பொதுத் தேர்வை போல் நடத்த உத்தரவிடப்பட்டது. இதன்படி, செப்டம்பரில், காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட் டன. இன்று முதல், அரையாண்டு பொது தேர்வுகள் துவங்குகின்றன. மாநில அளவிலான இத்தேர்வில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஒரே கேள்வித்தாள் மற்றும் தேர்வு அட்டவணை வழங்கப்படும். மற்ற வகுப்பு மாணவர்களுக்கு, வழக்கம் போல், மாவட்ட அளவில் தேர்வு நடைபெறும் என, பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பிளஸ் 2 மாணவர்களின் விவரம் குறித்து ஆன்-லைனில் திருத்தம் செய்ய உத்தரவு

அரசு பொது தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, தவறில்லாத மதிப்பெண் பட்டியல் வழங்க, தேர்வுத்துறை வெளியிட்டுள்ள, "ஆன்-லைன்' பட்டியலில், மாணவரின் விவரங்களை சரி பார்த்து, அந்தந்த தலைமையாசிரியரே திருத்தம் செய்து கொள்ள, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும், பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கொடுத்த தகவலின் அடிப்படையில், பள்ளி தேர்வு துறை சரிபார்த்து, பட்டியல் தயாரித்துள்ளது.

இதில், ஆன்-லைன் மூலம், ஒவ்வொரு பள்ளிக்கும் தரப்பட்டிருக்கும், "ரகசிய சொல்லை' தலைமையாசிரியர்கள் பயன்படுத்தி, திருத்தம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக, தேர்வுத்துறை கூறியிருப்பதாவது: தேர்வு எழுதுபவரின் பெயர், பிறந்த தேதி, இனம், மொழி, தேர்வு எழுதும் மொழி ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மாணவரின் புகைப்படம், மாறாமல் இடம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு எழுதுவோரின் குரூப் எண், பாட எண் வரிசையாக உள்ளதா என்பதை, தலைமையாசிரியர்கள் சரிபார்க்க வேண்டும். இதில் தவறு இருப்பின், ஆன்- லைனில் வெளியிடப்பட்டுள்ள சரிபார்ப்பு பட்டியலில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.

மையத்தின் பெயர், எண் மற்றும் பள்ளி எண் ஆகிய மூன்றில், எவ்விதமான திருத்தங்களை செய்ய கூடாது. இதன் மூலம், மாணவர்களுக்கு தவறில்லா மதிப்பெண் பட்டியல் வழங்க முடியும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Department December 2012. Hall ticket download

+2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஒரு வாரத்திற்குள் தேர்வு அட்டவணை வெளியீடு

் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆண்டுதோறும் மார்ச் முதல் வாரத்தில் துவங்கும். கடந்த ஆண்டு 8ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை தேர்வுகள் நடந்தது. இந்தாண்டு பொதுத் தேர்வுகள் தொடங்குவது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி கூறியது, அரசு பொதுத் தேர்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. தேர்வு நடத்தப்படும் தேதியை விரைவில் அறிவிக்கப்படும்.

கடந்த ஆண்டு முதல் தேர்வுகளின் சான்றிதழ்கள் புகைப்படத்துடன் வழங்கப்படுகிறது. பள்ளிகள் மூலம் விண்ணப்பித்த மனுக்கள் அரசு தேர்வுத்துறைக்கு வந்துள்ளன. அவற்றில் உள்ள திருத்தங்கள் செய்வதற்கு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சி.டி. வடிவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்திற்குள் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று தேர்வு இயக்குனர் கூறியுள்ளார்.

Monday, December 17, 2012

9.5 கோடி பாடப்புத்தகம் தயாரிப்பு பணி மும்முரம் : 140 அச்சகங்களில் வேலை நடக்க ஏற்பாடு

  ""அடுத்த கல்வியாண்டுக்கு, 1 முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்காக, 9.5 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணியை, பொங்கலுக்கு முன்னதாக துவக்கி, ஏப்ரலில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்,'' என, பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் கோபால் தெரிவித்தார்.

நடப்பு கல்வியாண்டு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 1 முதல், 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, 3ம் பருவ பாடப் புத்தகங்கள், அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, ஜன., 2ம் தேதி, பள்ளிகள் திறந்ததும் வழங்குவதற்கு, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டு : அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, இலவசமாக வழங்குவதற்காக, 2.5 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி, மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே, அடுத்த கல்வியாண்டுக்கு தேவையான பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கான பணியை, பாடநூல் கழகம் துவக்கி உள்ளது.

இது குறித்து, பாடநூல் கழக நிர்வாக இயக்குனர், கோபால் கூறியதாவது: தற்போது, மூன்றாம் பருவ பாடப் புத்தகங்களை அச்சிடும் பணியில், தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்த கல்வியாண்டுக்கு, 1 முதல், பிளஸ் 2 வரை, 9.5 கோடி பாடப் புத்தகங்கள் தேவை. தற்போது, 12 சதவீத புத்தகங்கள், இருப்பு இருக்கின்றன. மீதமுள்ள புத்தகங்கள் அச்சிடும் பணி, பொங்கலுக்கு முன், துவங்கும். 140 அச்சகங்களில், இந்தப் பணிகள் நடக்கும். அடுத்த ஆண்டு, ஏப்ரலில், அச்சடிப்பு பணியை முடித்து, மே மாதம், பள்ளிகளுக்கு அனுப்ப, திட்டமிட்டுள்ளோம்.

ஜூன் மாதம், பள்ளிகள் திறந்ததும், மாணவ, மாணவியருக்கு, இலவச பாடப் புத்தகங்கள் கிடைக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சர் உத்தரவிட்டுஉள்ளார். அதன்படி, பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு, 9ம் வகுப்பிற்கு, முப்பருவ கல்வி முறை திட்டம், அமலுக்கு வருகிறது. இதற்கு, பாட வாரியாக, "சிடி'க்கள், வந்து கொண்டிருக்கின்றன. பருவத்திற்கு இரண்டு : ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை, ஒவ்வொரு பருவத்திற்கும், இரண்டு புத்தகங்களாக வழங்குகிறோம். 9ம் வகுப்பிற்கு, பாடத் திட்டங்கள் அதிகம் இருக்கும் என்பதால், மூன்று புத்தகங்களாக வழங்கலாமா என, ஆலோசித்து வருகிறோம். புத்தகங்களின் விலையில், எந்த மாற்றமும் இருக்காது. இவ்வாறு கோபால் தெரிவித்தார்.

6ம் வகுப்பிற்கு மட்டும் தான்...: நடப்பு கல்வியாண்டில், 6 முதல், 10ம் வகுப்பு வரை பயிலும், 46 லட்சம் மாணவ, மாணவியருக்கு, 80 பக்கங்கள் கொண்ட, அட்லஸ் புத்தகங்கள், இலவசமாக வழங்கப்படுகின்றன. பல்வேறு தகவல் புதையல் கொண்ட இந்த புத்தகங்கள், தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில், தரமானதாக, பாடநூல்கழகம் உருவாக்கி உள்ளது. நடப்பாண்டில், அட் லஸ் பெறும் மாணவ, மாணவியருக்கு, அடுத்த ஆண்டு, மீண்டும் வழங்கப்பட மாட்டாது. அடுத்த ஆண்டில் இருந்து, 6ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மட்டும், இலவச அட்லஸ் வழங்கப்படும் என, பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

வி.ஏ.ஓ., நியமன கலந்தாய்வு விரைவில் துவங்கும்: நடராஜ

்  ""வி.ஏ.ஓ., பணி நியமன கலந்தாய்வு, இம்மாத இறுதிக்குள் நடக்கும்,'' என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர், நடராஜ் தெரிவித்தார். குரூப்-4 தேர்வில், தேர்வு பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் துறை வாரியாக பணி ஒதுக்கீடு பணி, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடந்து வருகிறது.

ஏற்கனவே, தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு, உத்தரவுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, இளநிலை உதவியாளர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கலந்தாய்வு, தேர்வாணைய அலுவலகத்தில், நேற்று துவங்கியது. அப்போது, தேர்வாணைய தலைவர் நடராஜ், நிருபர்களிடம் கூறியதாவது: இளநிலை உதவியாளர்கள் பணி நியமன கலந்தாய்வு, 10 நாட்கள் வரை நடக்கும். தினமும், 300 பேர் வீதம் அழைக்கப்படுவர். "ரேங்க்' அடிப்படையில், அனைவருக்கும், பணி ஒதுக்கீடு வழங்கப்படும். வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள், நவ.,30ல் வெளியானது.

இதையடுத்து, இம்மாத இறுதியில் இருந்து, கலந்தாய்வு நடக்கும். அதன்பின், குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அடுத்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை, ஜனவரியில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரெயில் நிலையங்களில் குப்பை வீசினால் ரூ. 500 அபராதம்: ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

  ரெயில்வே நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள் என்று கூறிக்கூறி ரெயில்வே துறைக்கு சலித்து விட்டதால், ரெயில்வே நிர்வாகம் கடந்த வெள்ளிக்கிழமை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி, ரெயில்களின் உள்ளே போஸ்டர் ஒட்டுபவர்கள், வியாபாரம் செய்பவர்கள், அசுத்தப்படுத்துபவர்கள் ரூ. 500 அபராதம் கட்ட நேரிடும்.

மேலும் ரெயில் நிலைய நடைமேடைகளில் குப்பை போடுதல், சிறுநீர் கழித்தல், குளித்தல், பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களையும் பிடித்து ரூ. 500 அபராதம் விதிக்க வேண்டும் என ரெயில்வே துறையின் தலைமை அலுவலகம், மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அபராத நடவடிக்கை விரைவில் செயல்படுத்தப்படும். ரெயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் பரிசோதகர் ஆகியோர் அபராதம் விதிக்கும் அதிகாரம் படைத்தவர்கள் எனவும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது: 206 உறுப்பினர்கள் ஆதரவு

    பதவி உயர்வில் எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதா கடந்த வாரம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யபட்டது. அதன்பின்னர் விவாதம் நடத்தப்பட்டது. அப்போது முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சி இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அவர்களுக்கு ஆதரவாக, உ.பி.யில் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கிலும் ஈடுபட்டனர்.  

இந்த மசோதாவில் சில திருத்தங்கள் செய்ய அரசு சம்மதம் தெரிவித்ததையடுத்து, அதனை நிறைவேற்றுவதற்கு, பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா ஒத்துக்கொண்டது.   இன்று மக்களவையில் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி மாநிலங்களவையில் சமாஜ்வாடி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.   இந்நிலையில் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டு சட்டத்திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் விவாதம் முடிவடைந்த நிலையில், இன்று மாலை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

206 உறுப்பினர்கள் மசோதாவை ஆதரித்து வாக்களித்தனர். காங்கிரஸ், பா.ஜனதா, தி.மு.க., அ.தி.மு.க., பகுஜன் சமாஜ், இடது சாரி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். 10 பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர்.   மூன்றில் இரண்டு பங்குக்கு அதிகமான வாக்குகள் கிடைத்ததால் அந்த சட்டத்திருத்த மசோதா நிறைவேறியதாக மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி அறிவித்தார்.

மாணவர்களுக்கு விலை இல்லா zeomentary box வழங்குவது குறித்த நெறிமுறைக் கடிதம்

Saturday, December 15, 2012

பிளஸ்-2 மார்க் அடிப்படையில்தான் மருத்துவ படிப்புக்கு மாணவர் சேர்க்கை: தமிழக அரசு உறுதி

  தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு சென்று விடும். எஞ்சிய 85 சதவீத இடங்கள் மாநில அரசின் பொது கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்படும். அந்த வகையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 1,696 எம்.பி.பி.எஸ். இடங்களும், சென்னையில் மட்டும் உள்ள ஒரேயொரு அரசு மருத்துவ கல்லூரியில் 85 பி.டி.எஸ். இடங்களும் கவுன்சிலிங் மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.

2006-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பொது நுழைவுத்தேர்வு மூலமாகவே மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். நுழைவுத்தேர்வு முறையால் கிராமப்புற மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு 2006-ம் ஆண்டு நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு தற்போது வரை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே தொழிற்கல்வி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கிடையே, எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவ, பல் மருத்துவ படிப்புகளுக்கு தற்போது இருந்து வருவதைப் போல பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுமா? அல்லது மத்திய அரசு அறிவித்ததைப் போன்று தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடைபெறுமா? என்று தமிழக மாணவ-மாணவிகளும், பெற்றோரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இன்னும் 2 வாரங்களில் முடிவடைய உள்ளது. எனவே, தேசிய நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதா? வேண்டாமா? தமிழக அரசின் முடிவு என்ன? என்பது தெரியாமல் மாணவ-மாணவிகள் மேலும் கவலை அடைந்தனர். இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு கொண்டுவந்த விதிமுறையில் சொல்லப்பட்டு இருந்தாலும், நுழைவுத்தேர்வை தவிர்ப்பதற்கும் அந்த விதிமுறைகளில் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. எனவே, வரும் கல்வி ஆண்டில் வழக்கம்போல் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். படிப்புகளுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் பொது கவுன்சிலிங் மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உறுதிபட தெரிவித்தனர்.

284 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி

:பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த 2010-11 கல்வியாண்டு தரம் உயர்த்தப்பட்ட 284 நடுநிலைப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால், பள்ளி நிர்வாக பணி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக ஆரம்ப பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும், நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.

கடந்த 2010-11 கல்வியாண்டு, பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழகம் முழுவதும் 284 பள்ளிகள் ஆரம்பப்பள்ளியிலிருந்து நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டன. இப்பள்ளிகளில் தற்போது வரை தலைமை ஆசியர்கள் நியமிக்கப்படவில்லை . பள்ளி ஆசிரியர்களே (பொறுப்பு) தலைமை ஆசிரியராக கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் 18 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மிகவும் குறுகிய காலத்தில, தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொது செயலாளர் முருக செல்வராஜ் கூறியதாவது:

தலைமை ஆசிரியர்கள் பதவி, பள்ளிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பள்ளிகல்வித்துறை சார்பில், நடைமுறைப்படுத்த வேண்டிய அனைத்து செயல்பாடுகளும், நலத்திட்டங்களுக்கும் தலைமை ஆசிரியர்களே பொறுப்பானவர்கள். இதுபோன்ற சூழலில் தலைமை ஆசிரியர் பதவிகள் காலியாக இருப்பது ஏற்புடையதல்ல. மேலும் இப்பொறுப்பிற்கு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படவேண்டும். அவ்வாறு நிரப்பப்படும் போது ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடம் காலியாக அறிவிக்கப்பட்டு அந்த இடத்திற்கு பட்டதாரி ஆசியர்கள் பணிமூப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களின் பணி இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு புதிய பணிநியமனத்திற்கு எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படும

். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இடம் நிரப்பப்படாமல் இருப்பதால் இதுபோன்ற நிர்வாக ரீதியாக பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

ஆசிரியர்கள் பற்றாக்குறையால் தனியார் பள்ளிகளுக்கு நெருக்கடி

தமிழகத்தில், ஒட்டுமொத்தமாக, ஒரே நேரத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, அரசு பள்ளிகளில் பணி கிடைத்துள்ளதால், அவர்கள் ஏற்கனவே வேலைபார்த்த தனியார் பள்ளிகளில் இருந்து பாதியிலேயே வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், தனியார் பள்ளிகள் ஆசிரியர் பற்றாக்குறையால் தவிப்புக்கு உள்ளாகியுள்ளன.

பொது தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தில், கடந்த ஆண்டு வரை, அரசு பள்ளிகளில் காலியாகும் ஆசிரியர் பணியிடங்கள், பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தது. இதனால் ஒவ்வொரு முறையும் அதிக பட்சம், 5,000 ஆசிரியர்கள் வரை மட்டுமே பணிநியமனம் செய்யப்பட்டது. ஆனால், அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, பல மாதங்கள் வரை காலதாமதம் ஆனது. தற்போது பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமின்றி, முதுகலை பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் என, அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் தகுதித்தேர்வு அடிப்படையில் நியமனம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், அக்டோபர் மாதத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில், 18 ஆயிரம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களும், டி.ஆர்.பி., தேர்வின் மூலம், 3,000 முதுகலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும், நேற்று முன்தினம் சென்னையில் நடந்த விழாவில், பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும், டிச., 24ம் தேதி, பணியில் சேர உள்ளனர். இவர்களில், 90 சதவீதத்துக்கும் மேல், தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள், 3,000 ரூபாய் முதல், 8,000 ரூபாய் வரை, மட்டுமே சம்பளமாக பெற்று வந்தனர். தற்போது, அரசு பணியில் சேர்ந்தவுடன், குறைந்தது, 18 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் பெறுவதால், தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைக்கின்றன. இவர்கள் தற்போது பணிபுரிந்து வரும், தனியார் பள்ளிகளில் இருந்து, விலகி அரசுப்பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான தனியார் பள்ளிகளில், 20 சதவீதம் முதல், 50 சதவீதம் வரை, ஆசிரியர்கள் பணியிடம் காலியாகியுள்ளது

. அரசுப்பணி, சம்பளம் அதிகம் ஆகிய காரணங்களால், இவர்களை, தனியார் பள்ளியிலேயே தக்க வைப்பதற்கான முயற்சிகளும் செல்லுபடியாகவில்லை.அதிலும் குறிப்பாக, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பாடம் எடுத்த, பல ஆண்டு அனுபவமுள்ள ஆசிரியர்கள் பலர், கல்வியாண்டில் நடுவில், விலகி போவது, தனியார் பள்ளிக்கு பெரும் பின்னடைவையும், தேர்ச்சி விகிதம் குறையுமே என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் மாணவ, மாணவியர் மத்தியில், புது ஆசிரியர் மூலம் எப்படி தேர்வை சந்திப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித்தேர்வை பொறுத்தவரை, ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிலையில், 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சியடைந்தனர். பள்ளிகளில் தொடர்ந்து பாடம் நடத்தி வருபவர்களால், இத்தேர்வை எளிதில் எதிர்கொள்ள முடிந்தது. இதனாலேயே தேர்ச்சி பெற்றவர்களில் பெரும்பாலானோர் தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களாக உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக அவர்கள் பணியிலிருந்து விலகுவதால், பல பள்ளிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம், தனியார் பள்ளிகளை பொறுத்தவரை மிக முக்கியம். அப்பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பாதி கல்வியாண்டில், விலகுவதால், அந்த இடத்துக்கு பொருத்தமானவர்களை உடனடியாக நியமிப்பதும் கடினம்.அதுமட்டுமின்றி, ஆசிரியருக்கும், மாணவருக்கும் இருந்த அதே தொடர்பு, மீண்டும் உருவாகவே மூன்று மாதம் ஆகிவிடும். அதற்குள் தேர்வு வந்து விடும் நிலை உள்ளது. இதனால் நடப்பாண்டில், பல பள்ளிகள் எதிர்பார்க்கும் தேர்ச்சி விகிதம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.