இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, December 14, 2012

6 மாதங்களில் 1,200 முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: ஜனவரியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

  அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள், மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்ற, 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மட்டும், முதலில் பணி நியமன உத்தரவுகள் வழங்குவதாக, திட்டமிடப்பட்டிருந்தது. பின், திடீரென, முதுகலை ஆசிரியர்களும், பட்டியலில் சேர்க்கப்பட்டனர். முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற விழாவில், 2,895 பணியிடங்களில், 2,308 பேரை மட்டும் தேர்வு செய்து, பங்கேற்க செய்தனர். இவர்களுக்கு, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், பணியிட ஒதுக்கீட்டிற்கான உத்தரவு வழங்கப்படவில்லை. இந்த உத்தரவு எப்போது வழங்கப்படும் என்ற தகவல் தெரியாமல், தேர்வு பெற்றவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களின், புகைப்படங்களுடன் கூடிய விவரங்களை, பள்ளிக் கல்வித் துறையிடம், இன்னும் டி.ஆர்.பி., ஒப்படைக்கவில்லை. இதனால், 2,308 பேரின், பணி நியமனம், எப்போது நடக்கும் என, தெரியாத நிலை உள்ளது. கல்வித்துறை வட்டாரத்தினர் கூறுகையில், "டி.ஆர்.பி.,யில் இருந்து, உரிய ஆவணங்கள் வந்ததும், பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற ஆசிரியர்களைப்போல், முதுகலை ஆசிரியர்களும், "ஆன்-லைன்' வழியில், கலந்தாய்வு நடத்தி, பணி நியமனம் செய்யப்படுவர்' என, தெரிவித்தனர். கடந்த, கல்வியாண்டுக்கான, காலி பணியிடங்களுக்குத் தான், தற்போது நியமனம் நடக்கிறது.

2,895 பணியிடங்களில், 2,308 பேர் நியமிக்கப்பட்டால், பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களின் படிப்பில் பாதிப்பு ஏற்படாது. அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள், மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,க்கு, கல்வித் துறை தெரிவித்துள்ளது. எனவே, ஜனவரியில், புதிய முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, போட்டித்தேர்வு அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய வட மாவட்டங்களில் தான், அதிக காலி பணியிடங்கள் உள்ளன. எனவே, அனைத்து ஆசிரியர்களும், மேற்கண்ட மாவட்டங்களில், பணி நியமனம் செய்யப்படுவர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Thursday, December 13, 2012

வாக்காளர் அடையாள அட்டை பெற அதிகாரிகளை கண்டறிய புது வசதி

தமிழகம் முழுவதும் உள்ள, ஓட்டு சாவடி மைய அதிகாரிகளுக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டு, தொகுதி வாரியாக வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஓட்டு சாவடி மையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நேரத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளுக்காக, இந்த மையங்களுக்கான தற்காலிக அதிகாரிகள் நியமிக்கப்படுவர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. தேர்தல் முடிந்தவுடன், வாக்காளர் பட்டியல் சம்பந்தமான பணி என்றால், அந்தந்த தொகுதி தேர்தல் பிரிவு அலுவலகங்களை நாடும் நிலைமை உள்ளது. சில தொகுதிகளில், தாசில்தார் அலுவலகத்தை அடைய, பல கி.மீ., தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பலர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்காமல் விட்டு விடுகின்றனர். இந்நிலையில், சிரமமின்றி, வாக்காளர் பட்டியல் தொடர்பான சேவைகளை பெற வசதியாக, நிரந்த ஓட்டு சாவடி மைய அதிகாரிகளை நியமிக்க, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

இதற்கான அறிவிப்பு, ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அரசியல் சார்பற்றோர், அங்கன்வாடி சத்துணவு பணியாளர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், அதிகாரிகள், பொது துறை நிறுவன ஊழியர்கள், தொண்டு நிறுவனத்தினர், பொதுநல சங்கத்தினர் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. தற்போது, பல தொகுதிகளில், நிரந்தர ஓட்டு சாவடி மைய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விட்டனர். சில தொகுதிகளில் அவர்களை நியமிக்கும் பணி, தொடர்ந்து நடந்து வருகிறது. ஓட்டுசாவடி மைய அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையத்துடன் நேரிடையான தொடர்பு ஏற்படுவதோடு, பொதுமக்களும் அலைய வேண்டியதில்லை. இந்நிலையில், ஓட்டு சாவடி மைய அதிகாரிகளை, பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில், அவர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த அடையாள அட்டையில், புகைப்படம், தொகுதியின் பெயர், நபரின் பெயர், பகுதி எண் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டைகளை தயார் செய்யும் பணி, விரைவாக நடந்து வருகிறது.

8 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர் : தற்காலிக அட்டவணையும் தயார

்  பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை, தேர்வுத்துறை இயக்குனரகம், இறுதி செய்தது. 8 லட்சம் மாணவ, மாணவியர், பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர். மார்ச் 1 அல்லது 4ம் தேதியில், தேர்வை துவக்கும் வகையில், தற்காலிக தேர்வு அட்டவணையை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு, தேர்வுத்துறை அனுப்பியுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு, ஆண்டுதோறும், மார்ச் முதல் வாரத்தில் துவங்கும். முந்தைய தேர்வு, மார்ச், 8ல் துவங்கி, 30 வரை நடந்தது. வரும் மார்ச்சில், பொதுத்தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, தேர்வுத்துறை, மும்முரமாக செய்து வருகிறது. தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை, நவம்பர் இறுதிக்குள் தர வேண்டும் என, ஏற்கனவே, தேர்வுத்துறை கூறியிருந்தது.

கூடுதலாக 46 ஆயிரம் பேர் : அதன்படி, மாவட்ட வாரியாக, மாணவ, மாணவியரின் விவரங்கள் அடங்கிய பட்டியல்கள் பெறப்பட்டு, தற்போது, இறுதி செய்யப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி, எட்டு லட்சம் மாணவ, மாணவியர், பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர். முந்தைய தேர்வை, 7.56 லட்சம் பேர் எழுதினர். வரும் தேர்வை, கூடுதலாக 46 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். அறிவியல் பிரிவு மாணவ, மாணவியருக்கு, பிப்ரவரி இரண்டாவது வாரத்தில், செய்முறைத் தேர்வு துவங்கி விடும். அதற்கு, இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, செய்முறை தேர்வில் பங்கேற்பவர்களுக்கு, பதிவெண்கள் வழங்க வேண்டும். இதே எண்களைத் தான், எழுத்து தேர்விலும், மாணவ, மாணவியர் பயன்படுத்துவர். எனவே, ஜனவரியில், பொங்கல் பண்டிகை முடிந்ததும், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பதிவெண்கள் விவரம், அந்தந்த பள்ளிகளில் அறிவிக்கப்பட உள்ளது. செய்முறைத் தேர்வில், நான்கு லட்சம் மாணவர்கள் பங்கேற்பர் என, கூறப்படுகிறது. இவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

தற்காலிக அட்டவணை : இதற்கிடையே, தேர்வுக்கான தற்காலிக அட்டவணையை, தமிழக அரசின் பார்வைக்கு, தேர்வுத்துறை அனுப்பி உள்ளது. மார்ச் 1 அல்லது 4 ல் இருந்து, தேர்வை துவக்கும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அரசின் ஒப்புதல் கிடைத்ததும், அட்டவணை குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் கருத்து கேட்கப்படும். தேர்வு காலத்தில் விழாக்களோ அல்லது விடுமுறை நாட்களோ அல்லது மாணவருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏதாவது உள்ளதா என, கண்டறிந்து கருத்துக்களை தெரிவிப்பர். அதனடிப்படையில் மாற்றங்கள் இருந்தால், திருத்தம் செய்யப்பட்டு, தேர்வு அட்டவணை இறுதி செய்யப்படும். அதன்பின், மீண்டும் அரசின் ஒப்புதல் பெற்று, அதிகாரப்பூர்வமாக, மாணவ, மாணவியருக்கு அறிவிக்கப்படும். மார்ச் 1ம் தேதி, வெள்ளிக்கிழமை வருவதால், இந்த தேதியில் இருந்து துவங்கும் அட்டவணை இறுதியாவதற்கு, அதிக வாய்ப்புகள் இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

10ம் வகுப்பு நிலை என்ன? : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின் விவரங்கள், பள்ளிகள்தோறும் சேகரிக்கப்பட்டு, கல்வி மாவட்ட அளவில் பொறுப்பில் உள்ள பள்ளிகளிடம், "சிடி'க்களாக வழங்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவ, மாணவியரின் புகைப்படங்களுடன், அவர்கள் பிறந்த தேதி, முகவரி, பெயர், எழுதும் பாடங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன், "சிடி'க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வரும், 20 தேதிக்குள், தேர்வுத்துறை தெரிவிக்கும் தேதியில், சம்பந்தபட்ட "சிடி'க்களை, பொறுப்பு மையங்களில் ஒப்படைக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு பள்ளிகளிலும், மாணவர்கள் விவரங்கள் அடங்கிய "சிடி'க்கள் தயாராக உள்ளன. மாணவரின் பெயர், தலைப்பு எழுத்துக்களில், பெரும்பாலும் தவறுகள் வருகின்றன. மாணவர்கள், உயர் கல்விக்கு செல்லும்போது, பல்வேறு பிரச்னைகள் வருகின்றன. எனவே, மாணவர்கள் விவரங்கள் அடங்கிய படிவத்தில், மாணவர்களிடம் கையெழுத்து வாங்கியுள்ளோம். தயாராக உள்ள, "சிடி'க்களை, தேர்வுத்துறை தெரிவிக்கும் தேதியில், குறிப்பிட்ட மையங்களில் வழங்குவோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கல்லாதவர்களே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்: ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி ஜெயலலிதா பேச்சு

  சென்னையில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை மற்றும் மாணவ மாணவிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் மாணவ, மாணவியருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கற்றவனை கண்ணுடையர் என்றும், கல்லாதவனை புண்ணுடையர் என்றும் கூறியிருக்கிறார் திருவள்ளுவர். மெய்யறிவைத் தரக் கூடியது கல்வி என்று சங்க கால நூல்கள் கூறுகின்றன. சங்க காலம் தொடங்கி இது நாள் வரை தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குவதால் கல்வி சிறந்த தமிழ்நாடு என்று தமிழ்நாட்டை சிறப்பித்து பாடியுள்ளார் மகாகவி பாரதியார்.

கற்றலால் சிறப்பும், கல்லாமையால் இழிவும் வந்தெய்தும் என்று புலவர் இளங்கீரனார் பாடியுள்ளார். ஒருவன் கல்வி கற்றால் அவனிடம் உள்ளத்தால் துணிவும், உடலளவில் பணிவும் வந்து சேரும் என்பது சான்றோர் வாக்கு. கீர்த்தியும் பெருமையும் கிடைப்பது கல்வி என்று கல்வியைப் பற்றி ஒளவையார் எடுத்துரைத்துள்ளார். அனைத்து அணிகலனையும் விட கல்வி அழகே அழகு என நாலடியார் பாடல் தெளிவாக்குகிறது. நன்மையும், தீமையும் விளையக் கூடிய நிலமாக இருப்பது மனம். ஆதலால் ஒழுக்கத்தை வளர்க்கும் கல்வியையே மக்களுக்கு போதிக்க வேண்டும் என்றார் அறிஞர் பிளாட்டோ.

பூசை அறை, சமையல் அறை, படுக்கை அறை வைத்துக் கட்டும் நம் மக்கள் படிக்கும் அறை வைத்து வீடு கட்டும் காலம் என்று வருகிறதோ அன்று தான் நாம் எழுச்சி பெற்றவர்களாவோம் என்று கூறினார் பேரறிஞர் அண்ணா. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த கல்வியை அனைவரும் கற்க வேண்டும்; கல்லாதவர்களே இல்லாத மாநிலமாக தமிழகத்தை ஆக்க வேண்டும் என்ற அடிப்படையில், கல்விக்காக பல்வேறு சலுகைகளை எனது தலைமையிலான அரசு வழங்கி வருகிறது.

ஓன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு கட்டணமில்லா கல்வி வழங்கப்படுகிறது. மாணவ-மாணவியர் பசியின்றி கல்வி கற்க வசதியாக சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சத்துணவுத் திட்டத்தில் மாணவ-மாணவியரின் விருப்பத்திற்கேற்ப உணவு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், 4 ஜோடி சீருடை, காலணிகள், கணித உபகரணப் பெட்டி, வண்ண பென்சில்கள், புத்தகப் பை, புவியியல் வரைபடம் ஆகியவை ஆண்டுதோறும் மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

கிராமப்புற மக்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன. இது தவிர, ஆரம்பப் பள்ளிகள் இடைநிலைப் பள்ளிகளாகவும், இடை நிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், உயர் நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. மேல் நிலை வகுப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கு விலை ஏதுமின்றி மிதி வண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேல் நிலைக் கல்வியில் இடை நிற்றலை தடுக்கும் வகையில், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

மேல் நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக் கணினிகள் வழங்கும் திட்டம் எனது அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கணினி வழிக் கல்வி அளிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1,660 கோடி ரூபாய் செலவில் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. முன் எப்போதும் இல்லாத உயர் அளவாக இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறைக்கென 14,553 கோடி ரூபாய் நிதியினை எனது தலைமையிலான அரசு ஒதுக்கியுள்ளது.

21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: ஜெயலலிதா வழங்கினார்

   முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றதும் மாணவ சமுதாயம் மீது அக்கறை கொண்டு கல்வித்துறைக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளார். மாணவர்களை ஊக்கு விக்கும் வகையில் ஏற்கனவே விலையில்லா சைக்கிள், விலையில்லா லேப்-டாப், சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சத்துணவு திட்டமும் செம்மைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக  விலையில்லா புத்தகப்பைகள், விலையில்லா காலணிகள், விலையில்லா வண்ணப் பென்சில்கள், விலையில்லா கணித உபகரணப்பெட்டிகள், புவியியல் வரைபட புத்தகம் (அட்லஸ்) விலையில்லா சீருடைகள் ஆகியவை இன்று வழங்கப்பட்டது. மொத்தம் 92 லட்சம் மாணவ- மாணவிகள் இதன் மூலம் பயன்பெறுகிறார்கள். மாணவர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா இன்று பகல் 12 மணிக்கு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியில் கல்லூரித் திடலில் நடந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், 20,920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கி பேசினார். முதல்-அமைச்சரைத் தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும், மாவட்ட வாரிய ஆசிரியர்களுக்கான நியமன ஆணைகளை அவரவர் இருப்பிடத்துக்கே சென்று வழங்கினார்கள். முன்னதாக தமிழக அரசின் தலைமைச்செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வரவேற்று பேசினார்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி முன்னிலை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா நன்றி கூறினார்.

விழாவில் கலந்து கொண்டு ஆசிரியர் பணி நியமன ஆணைகளை நேரில் பெற்றுக் கொள்வதற்காகவும், கல்வி உபகரணங்களை பெறுவதற்காகவும் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் தனி பஸ்களில் சென்னை வந்தனர். அவர்கள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த பிரமாண்டபந்தலில் அமர வைக்கப்பட்டனர். விழாவில் கல்வியின் சிறப்புக்களையும், முதல்- அமைச்சர்  ஜெயலலிதா கல்வித்துறைக்கு செய்து வரும் சாதனைகளையும் எடுத்துக்கூறும் வகையில் மேடை நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

Wednesday, December 12, 2012

பிளஸ் 2 தேர்வுக்கு இப்போதே ஏற்பாடுகள் : மார்ச் 1ல் துவங்க வாய்ப்பு

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல்வாரத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கி மூன்றாம் வாரம் வரை நடைபெறும். 2013ம் ஆண்டில் நடைபெற உள்ள பிளஸ் 2 தேர்வுக்கு, இப்போதே தேர்வுத்துறை அதிகாரிகள், இயக்குனர் வசுந்தராதேவி தலைமையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

சமீபத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்தி, அரசின் கருத்தை கேட்டுள்ளனர். மார்ச் 1 அல்லது 4ம் தேதி துவங்கும் வகையில் அட்டவணை தயாரித்துள்ளனர். அரசின் ஒப்புதல் கிடைத்ததும், அட்டவணை குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் கருத்து கேட்கப்படும். தேர்வு காலத்தில் விழாக்களோ அல்லது விடுமுறை நாட்களோ அல்லது மாணவருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏதாவது உள்ளதா என கண்டறிந்து கருத்துக்களை தெரிவிப்பர். அதனடிப்படையில் மாற்றங்கள் இருந்தால் செய்யப்பட்டு பொதுத் தேர்வு கால அட்டவணை முடிவு செய்யப்படும். பெரும்பாலும் மார்ச் 1ம் தேதி அடிப்படையில் உள்ள காலஅட்டவணை இறுதி செய்யப்படலாம் என கருதப்படுகிறது

பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள்: தமிழக அரசு அறிவிப்பு

  சென்னை பெருங்குடியில் நேற்று முன்தினம் பஸ் மீது லாரி மோதியதில் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தார். இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளன என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தர விட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் தலைமை வக்கீல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் படித்து பார்த்தனர். பிறகு அவர்கள் "தமிழக அரசு எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் பாராட்டும்படி உள்ளது. இந்த விதிமுறைகளை இன்று முதல் அமல்படுத்த வேண்டும். இதை அமல்படுத்தினாÖல் 90 சதவீத விபத்துக்களை தடுக்கலாம் என்று கூறினார்கள். அப்போது வக்கீல் நவநீத கிருஷ்ணன், "கடைசி பஸ்சில்தான் மாணவர்கள் செல்வதால் கூட்டம் அதிகமாகி விடுகிறது. பெரும்பாலும் அவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதால்தான் விபத்து ஏற்படுகிறது'' என்றார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க கல்லூரிகள், பள்ளிகளில் விழிப்புணர்வு செய்யப்படும். நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். போக்குவரத்து விதிகளை மீறினால் வழங்கப்படும் தண்டனை விபரம் பற்றி பிரசாரம் செய்யப்படும். படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் முதலில் எச்சரிக்கை செய்யப்படுவார்கள். இதுபற்றி மாணவரின் பெற்றோருக்கும், பள்ளிக்கும் தகவல் தெரிவிக்கப்படும். மாணவர்கள் தொடர்ந்து பஸ் படிக்கட்டில் பயணம் செய்தால் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். பிறகு அவர்களை பள்ளியில் இருந்து நீக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அரசு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, December 11, 2012

6,500 இடைநிலை ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டங்களில் வேலை

ஒரே நாளில், 9,664 இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாநிலம் முழுவதும், நேற்று பணி நியமன கலந்தாய்வு நடந்தது. 6,532 பேருக்கு, அவரவர் சொந்த மாவட்டங்களிலேயே, இடங்கள் கிடைத்தன. டி.இ.டி., தேர்வில், 9,000 இடைநிலை ஆசிரியர்கள், தேர்வு பெற்றனர். இவர்கள் அனைவரும், தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு ஆரம்பப் பள்ளிகளில், பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, 32 மாவட்டங்களிலும், நேற்று நடந்தன.

காலையில், மாவட்டத்திற்குள் பணி நியமனத்திற்கான கலந்தாய்வும், பிற்பகலில், வெளி மாவட்டங்களில், பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வும் நடந்தன. மொத்த ஆசிரியரில், 6,532 பேருக்கு, அவரவர் சொந்த மாவட்டங்களிலேயே, பள்ளிகளை தேர்வு செய்தனர் என்றும், மீதமுள்ள 3,132 பேர், வெளி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தேர்வு செய்தனர் என்றும், தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பள்ளி ஆசிரியர்கள் விபரம்: இணையதளத்தில் பதிவு : கணக்கெடுப்பு தீவிரம

்  தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர்களின் விபரம், கல்வி துறை இயக்குனரகம் மூலம், சேகரித்து இணையதளத்தில் பதிவு செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள், தற்போது பணியில் உள்ளவர்கள், பெயர், பிறந்த தேதி, பாலினம், பணியில் சேர்ந்த தேதி, பாடம், தற்போதைய பள்ளியில் சேர்ந்த தேதி, காலிபணியிடங்கள், ஆசிரியர்கள் அதிகம் அல்லது குறைவு போன்ற விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனி "ஐ.டி.' வழங்கப்பட்டு, விபரங்கள் tண.ஞீண்ஞு.ஞிணிட்ல் பதியப்படுகிறது. ராமநாதபுரம் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறை விபரத்தை, சென்னையிலிருந்தே உயரதிகாரிகள் நேரடியாக தெரிந்து கொள்ள முடியும். தலைமை ஆசிரியர்கள் பதவியேற்றவுடன், இந்த முகவரியில் பள்ளியின் நிலையை, அவ்வப்போது "அப்டேட்' செய்ய வேண்டும், என்றார்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள்: இறுதிப் பட்டியல் வெளியீடு

  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,308 பேர் அடங்கிய இறுதிப்பட்டியல் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவரும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை அணுகி, புதன்கிழமையே சென்னைக்குப் புறப்பட்டு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே பணியிடங்களைத் தேர்வு செய்த பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுடன் சேர்த்து இவர்களுக்கும் சென்னையில் முதல்வர் தலைமையில் வியாழக்கிழமை (டிசம்பர் 13) நடைபெறும் விழாவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

எனவே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஏற்பாடு செய்துள்ள வாகனங்கள் மூலம் இவர்கள் அனைவரும் சென்னைக்கு வர வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களுக்கான பணியிடங்களைத் தேர்வு செய்வதற்கான ஆன்-லைன் கலந்தாய்வு வேறொரு தேதியில் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். தாவரவியல் பாடத் தேர்வு தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கிற்காகவும், தமிழ் வழியில் படித்தவர்களுக்காகவும்  500-க்கும் அதிகமான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மொத்தம் 2,895 பணியிடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மே மாதம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட சரியான விடைகளில் பல தவறானவை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் இந்தப் பட்டியலை ரத்து செய்ய உத்தரவிட்டது. புதிய விடைகளின் அடிப்படையில் அனைத்து விடைத்தாள்களையும் மறுமதிப்பீடு செய்யவும் உத்தரவிட்டது. மறுமதிப்பீட்டுக்குப் பிறகு இப்போது இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.