பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பல்பொருள் அங்காடிகள் தொடங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் உள்நாட்டு விமான போக்குவரத்தில் வெளிநாட்டு முதலீட்டுக்கும் இக்கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. இதன்மூலம் இந்திய நிறுவனங்களில் 49 சதவீதம் வரை அன்னிய முதலீடு செய்ய முடியும்.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்க்கட்சிகள் மற்றம் வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அமைச்சரவை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவுக்கு மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.