இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, September 12, 2012

சமச்சீர் கல்வி முறையில் 2ம் பருவ பாட புத்தகம்: ஆர்வம் காட்டாத மெட்ரிக் பள்ளிகள்  

    சமச்சீர் கல்வி முறையில், இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்களை பெறுவதில், சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளன. தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையில், நடப்பு கல்வியாண்டு முப்பருவ பாடமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியரின் புத்தக சுமையை குறைக்கும் வகையில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையில், மூன்று பிரிவுகளாக பாடப்புத்தகம் பிரிக்கப்பட்டது. "இன்டன்ட்' இதன்படி, முதல் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இதில், ஒன்று அல்லது இரண்டு புத்தகத்தி லேயே தமிழ், ஆங்கிலம், கணிதம்,அறிவியல், சமூக அறிவியல் என, அனைத்து பாடங்களும் அச்சிடப்பட்டு இருந்தன. இம்மாதம், 30ம் தேதியுடன் முதல் பருவத்துக்கான காலம் முடிவடைவதால், அதற்கான தேர்வுகளும் நடந்து வருகின்றன. தேர்வு விடுமுறை முடிந்து, அக்., 1ம் தேதியிலிருந்து, இரண்டாம் பருவத்துக்கான பாடம் நடத்தப்பட உள்ளது.

இரண்டாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள், அக்டோபர் முதல் வாரத்துக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு பள்ளிக்கும் தேவைப்படும் புத்தகங்கள் எண்ணிக்கை குறித்த, "இன்டன்ட்' பெறப்பட்டு, இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் பெரும்பாலானவை, இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள் தேவை குறித்து, எதுவும் தெரிவிக்காமல் அலட்சியமாக உள்ளன.

இதனால், அப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அலட்சியம் : இதுகுறித்து கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது

: மண்டல பாட நூல் கழக குடோன் மூலம் பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பள்ளியும், தன் தேவைப்பட்டியலை வழங்கும் போது, அதற்கேற்ப முன் கூட்டியே தயார் செய்து, சரியான நேரத்துக்குள் பாடப்புத்தகங்களை அனுப்பி வைக்க முடியும். பெரும்பாலான மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள், தங்களுக்கு தேவையான புத்தகங்கள் குறித்து எவ்வித தகவலும் தராமல், அலட்சியப்போக்குடன் உள்ளனர். அக்டோபர் மாதத்தில், ஒரே சமயத்தில், அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் வரும் போது, ஒரு சில பாடப் புத்தகங்கள் பற்றாக்குறை ஏற்பட்டாலும், அவற்றை தருவித்து தர, ஒரு சில நாள் தாமதமாகலாம். இதனால், அப்பள்ளிகளுக்கு அலைச்சலும், மாணவர்களுக்கு தாமதமும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதை தவிர்க்க, சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முன்கூட்டியே புத்தகங்களை பெறுவதற்கான நடவடிக்கை எடுப்பது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

AEEO Panel List Released.1-104

Click Below
https://www.box.com/shared/lkxdpofshcch3egidv8q

Courtesy:teachertn

Justice Thiru S.R Singaravelu, Chairman Private Schools Fee Determination Committee: Fee Fixed for the year 2012-2015 for CBSE and Matriculation

Justice Thiru S.R Singaravelu, Chairman Private Schools Fee Determination Committee: Fee Fixed for the year 2012-2015 for CBSE and Matriculation

Directorate of Government Examinations : NTSE (First Level) Nov' 2012 - Syllabus Contents and Question Distribution

Tuesday, September 11, 2012

எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

    எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் புதன்கிழமை (செப்.12) முதல் திங்கள்கிழமை (செப்.17) வரை அனைத்து நாள்களிலும் தனித்தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பம், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான சலான் ஆகியவற்றை செப்டம்பர் 17 வரை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட

செய்திக்குறிப்பு: அக்டோபர் மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் இந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தனித் தேர்வுக்கான கட்டணம் ரூ.125 ஆகும். கட்டணத்தைச் செலுத்துவதற்கான இறுதி தேதி செப்டம்பர் 18 ஆகும். ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான நடைமுறை:

1. ஆன்-லைனில் வழங்கப்பட்டிருக்கும் இடங்களில் ஒன்றை தேர்வர்கள் தேர்வு மையமாக தேர்வு செய்ய வேண்டும்.

2. புதிய பாடத்திட்டத்தின் (பொதுப்பாடத்திட்டம்) தேர்வு எழுத விரும்புகிறார்களா அல்லது பழையப் பாடத்திட்டத்தின் தேர்வு எழுத விரும்புகிறார்களா என்பதை தேர்வர்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும்.

3. அங்கு கோரப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்த பிறகு இதற்கான நகலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தப் படிவத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணைத் தவறாமல் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே எந்தவொரு சந்தேகங்களுக்கும் தேர்வுத் துறையிடம் முறையீடு செய்ய இயலும்.

4. தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான சலான் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்படும் சலான் படிவத்தை மட்டுமே தேர்வுக் கட்டணம் செலுத்த பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் கோர் பேங்கிங் சேவை உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் எந்தவொரு கிளையிலும் அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை-6 என்ற பெயரில் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
5. தேர்வர்கள் தங்களது புகைப்படத்தை ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். 6. புகைப்படத்தைப் பதிவு செய்த பிறகு தேர்வுக்கான விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இப்படிவமே தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் ஆகும். இதில் ஸ்ரீர்ய்ச்ண்ழ்ம்ஹற்ண்ர்ய் ஸ்ரீர்ல்ஹ் என்று பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆன்-லைன் மூலம் பெறாமல் நேரடியாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படு

Chess Material Purchase 39.47 Lakh sanctioned for high/Middle/Elementary school

Coimbatore Review Meeting-Minute Note

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் கோவை 07.09.2012 அன்று கோவை மண்டல கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்ற ஆய்வுக் கூட்ட நடவடிக்கை குறிப்பு

      *அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு போட்டிகள், ஆண்டு விழாக்களை கட்டாயம் நடத்த வேண்டும்.

*உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாதம் 5 பள்ளிகள் ஆண்டாய்வு மற்றும் 25 பள்ளிகளை ஆய்வு செய்தல் வேண்டும். 
*அரசின் திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் பொருட்கள் தரமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

*ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வருகைபுரிய வேண்டும். *அனைத்து தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் வரும் கோடை விடுமுறையில் ஒவ்வொரு கிராமத்தில் உள்ள வீடு வீடாகச் சென்று கூடுதல் மாணவர்களை சேர்க்க வேண்டும்.
*அதிக நர்சரி  பள்ளிகள் உள்ள கிராமத்தில் ஆங்கில வழிக்கல்வி தொடங்குதல்.
*அனைத்து பள்ளிகளிலும் குறைந்தது 50 மாணவர்களாவது இருக்கும் வகையில் மாணவர்களை சேர்க்க முயற்சிக்க வேண்டும். *அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் செஞ்சுலுவைச் சங்கம் மற்றும் சாரண, சாரணியர் இயக்கம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  *மாதந்தோறும் ஜமாபந்தி முறையில் நிலுவையிலுள்ள ஆசிரியர்களின்  கோரிக்கை மனுக்களை பரிசீலினைச் செய்து உடனுக்குடன் உரிய ஆணைகளை வழங்க வேண்டும். 
*அனைத்து பள்ளிகளிலும் Work Done Register பேணப் பட வேண்டும்.

பொதுத்துறை வங்கிகளில் கல்விக்கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 10 ஆண்டுகளாக நீட்டிப்பு

     ஏழ்மை படிப்புக்கு தடையாக இருந்துவிடக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் மத்திய அரசு கல்விக்கடன் திட்டத்தை கொண்டுவந்தது. இதன்படி, பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு அடிஎடுத்து வைக்கும் ஏழை மாணவ&மாணவிகளுக்கு கல்விக்கடன் பெரும் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.
குறிப்பாக, என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிப்பவர்கள் கல்விக்கடனால் பெருமளவு பயன் அடைந்து வருகிறார்கள்.   கல்விக்கடனின் சிறப்பு என்னவென்றால் மற்ற வங்கிக்கடன்களைக் காட்டிலும் கல்விக்கடனுக்கு வட்டி மிகவும் குறைவு. படித்துக்கொண்டிருக்கும்போது வட்டியை மட்டும் செலுத்தினால் போதும். கடன்தொகையை படித்து முடித்து பின்னர் கட்டினால் போதும். உள்நாட்டில் படிக்கவும், வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கவும் கல்விக்கடன் பெறலாம்.  

தற்போது அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே பொதுத்துறை வங்கிகள் கல்விக்கடன் வழங்குகின்றன. இந்த நிலையில், அரசு ஒதுக்கீடோ, நிர்வாக ஒதுக்கீடோ எந்த பிரிவின் கீழ் சேர்ந்த மாணவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு கல்விக்கடன் மறுக்கப்பட்டுவிடக்கூடாது. அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று இந்திய வங்கிகள் சங்கத்திற்கு மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் உத்தரவு பிறப்பித்தார்.   இதன் எதிரொலியாக, நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு இந்திய வங்கிகள் சங்கம் அறிவுரை வழங்கி உள்ளது.

நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கும் கல்விக்கடன் கிடைக்கும் வகையில் தற்போதைய கடன் நடைமுறைகளை திருத்தி அமைத்து வருகிறது.   மேலும், புதிய முறையின்கீழ், தற்போதைய வங்கிக்கடன் உச்சவரம்பும் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி, உள்நாட்டில் படிப்பதற்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சமும், வெளிநாட்டில் படிப்பதற்கு ரூ.20 லட்சமும் கடன் பெறலாம். அதுமட்டுமல்லாமல் ரூ.7.5 லட்சம் வரையிலான கல்விக்கடனுக்கு 3-வது நபர் ஜாமீனோ, உத்தரவாதமோ வங்கிக்கடன் கேட்கக்கூடாது.

அதோடு, நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களாக இருந்தால் ரூ.7.5 லட்சத்திற்கு மேற்பட்ட கடன்தொகைக்கும் ஜாமீன் உத்தரவாதத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.   கடந்த மார்ச் மாத நிலவரப்படி, அனைத்து பொதுத்துறை வங்கிகளையும் சேர்த்தால் ரூ.45 ஆயிரத்து 787 கோடி அளவுக்கு கல்விக்கடன் நிலுவையில் இருந்து வருகிறது. 23 லட்சம் பேரிடமிருந்து இந்த நிலுவைத்தொகை வரவேண்டியுள்ளது. தற்போது மத்திய அரசு தொடங்க உத்தேசித்துள்ள கடன் உத்தரவாத நிதி கல்வி அறக்கட்டளை மூலம் வங்கிகளுக்கு நிலுவைத்தொகை சுமை குறையும். காரணம், கல்விக்கடன் நிலுவை ஏற்பட்டால் அதில் 75 சதவீத தொகையை இந்த அறக்கட்டளை சம்பந்தப்பட்ட வங்கிக்கு வழங்கிவிடும்.   நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் புதிய திட்டத்தோடு கல்விக்கடனை திருப்பிச்செலுத்தும் காலத்தையும் நீட்டிக்குமாறு அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கு இந்திய வங்கிகள் சங்கம் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.  

தற்போது கல்விக்கடன் பெற்று படித்து முடித்து வேலையில் சேரும் பட்டதாரிகள் 7 ஆண்டுகளில் கடனை திருப்பிச்செலுத்த வேண்டும். ஆனால், புதியமுறையின்படி, கடன்தொகைக்கு ஏற்ப 10 ஆண்டுகளிலோ அல்லது 15 ஆண்டுகளிலோ கடனை திருப்பிச்செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. 

வாக்களர் பட்டியல் பணி : கலெக்டர்களுக்கு உத்தரவு  

    தமிழகத்தில் அக்., 1 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதால், 100 சதவீத வாக்காளர் சேர்க்கையை கணக்கில் கொண்டு, அதிக கவனம் செலுத்த கலெக்டர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஓட்டுச்சாவடி வாரியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், வீடு, வீடாக சென்று வாக்காளர்பட்டியல் சரி பார்க்கும்பணி செய்கின்றனர். இப்பணி, செப்., 15 வரை நடக்கிறது. முன்னதாக செப்., 7, 14, 21 தேதிகளில், சிறப்பு முகாம் நடக்கிறது. அக்.,1ல், வரைவு வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

பின், 2013 ஜன.,1 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்களிடம் புதிய வார்க்காளர்களாக சேர விண்ணப்பங்கள் பெறப்படும். இறுதிவாக்காளர் பட்டியல் 2013, ஜன., 5 வெளியிடப்பட உள்ளது. இதற்குள் 100 சதவீதம் வாக்காளர் சேர்க்கைக்கு கலெக்டர்கள் தீவிர கவனம் செலுத்துமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 தனித்தேர்வு அட்டவணை வெளியீடு

      அக்டோபர், 4ம் தேதி துவங்கும், பிளஸ் 2 தனித்தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டார். இத்தேர்வுக்கு, தேர்வுத்துறை இணையதளம் வழியாக விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். தேர்வுக் கட்டணத்தை, நாளை வரை செலுத்தலாம்.

நேற்று நிலவரப்படி, 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், இன்று, 8,000 பேர் வரை விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்ப்பதாகவும், தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்தார். அடுத்த மாதம், 4ம் தேதி, மொழி முதல் தாள் தேர்வு துவங்குகிறது. அதே மாதம், 16ம் தேதியுடன், தேர்வுகள் முடிவடைகின்றன.

10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவருக்கு இன்று முதல் காலாண்டு தேர்வ

    கடந்த ஆண்டு வரை, மாவட்ட அளவில் நடந்து வந்த, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள், இந்த ஆண்டு முதல், மாநில அளவில், ஒரே மாதிரியாக நடத்தப்படுகின்றன. தேர்வுத்துறை தயாரித்து வழங்கியுள்ள கேள்வித்தாள் அடிப்படையில், இன்று முதல், காலாண்டுத் தேர்வுகள் துவங்குகின்றன.

வருவாய் மாவட்ட அளவில் நடக்கும் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் வழங்கப்படும் கேள்வித்தாளுக்கும், பொதுத்தேர்வில், தேர்வுத்துறை வழங்கும் கேள்வித்தாளுக்கும் வித்தியாசம் இருப்பதாகவும், இதனால் பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர் திணறுவதும், அரசின் கவனத்திற்கு வந்தது. அத்துடன், தேர்வை நடத்தும் முறைகளிலும், தேர்வு அறைகளில் மாணவ, மாணவியர் கடைப்பிடிக்கும் முறைகளிலும், ஒரே சீரான நடைமுறை இல்லாததால், பொதுத்தேர்வில், மாணவர்கள் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காலாண்டு, அரையாண்டுத் தேர்வையும், பொதுத்தேர்வைப் போல், தேர்வுத்துறை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இரு வகுப்பு மாணவ, மாணவியருக்கும், பாட வாரியாக கேள்வித்தாளை தயாரித்து, அதை, "சிடி'யில் பதிவு செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம், தேர்வுத்துறை ஒப்படைத்தது. அவர்கள், "பிரின்ட்' எடுத்து, பள்ளிகளுக்கு வினியோகம் செய்தனர்.

இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி கூறியதாவது:

பொதுத் தேர்வைப் போலவே, கேள்வித்தாளை படித்துப் பார்க்கவும், விடைத்தாளில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்யவும், 15 நிமிடங்கள் வழங்கப்படும். அதன்பின், காலை, 10:15க்கு, தேர்வு துவங்கும். 10ம் வகுப்பு தேர்வு, 12:45க்கும், பிளஸ் 2 தேர்வு, 1:15க்கும் முடிவடையும். தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர்கள், தேர்வுப் பணியை பார்வையிடுவர். இவ்வாறு, வசுந்தரா தேவி கூறினார்.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

     ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகலில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதனை 6.8 லட்சம் பேர் எழுதினார்கள். ஆனால், 2,488 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்ததை அடுத்து, மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதிய யாமினி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு வாரிய தலைவரை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HSC-2012 Octobar Exam. DGE Insructions

Monday, September 10, 2012

பி.எட்., படிப்புக்கு தாவுகின்றனர் மாணவர்கள் ஆசிரியர் பட்டயப்படிப்பில் ஆர்வம் இல்லை

கடினமான  பாடத் திட்டம், குறைந்து வரும் வேலை வாய்ப்பு போன்ற காரணங்களால், ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு படிக்கும் மாணவர்கள் குறைந்து வருகின்றனர். அதற்குப் பதிலாக, பி.எட்., படிப்பில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.

டிப்ளமாவில் சேர ஆள் இல்லாததால், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களும், உயர்நிலைப் பள்ளிகளில் பாட வாரியாக, பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர்.கடின பாட திட்டம்இடைநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு, பிளஸ் 2 முடித்து, இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு முடிப்பவர்கள், மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப் படுகின்றனர்.

பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கு, பி.எட்., முடித்தவர்கள், டி.ஆர்.பி., நேரடித்தேர்வு மூலம் நியமனம் செய்யப் படுகின்றனர்.இரண்டாண்டுக்கு முன், ஆசிரியர் கல்வி டிப்ளமாவுக்கான பாடத் திட்டங்களை, மாநில ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மாற்றி அமைத்தது. பாடத்திட்டம் மிக கடினமாக அமைக்கப்பட்டதால், தேர்வு எழுதுபவர்களில், 40 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், தேர்ச்சி பெற முடியாமல் போனது.துணைத் தேர்வும் நடத்தப்படாததால், அடுத்த ஆண்டு வரை, தேர்வுக்கு காத்திருக்க வேண்டி உள்ளது.

அதேசமயம், அரசு துவக்கப் பள்ளிகளில், ஆண்டுக்காண்டு சரிந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் குறைத்துக் கொண்டே வருகிறது. மாநில அளவில், பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் நடந்தாலும், தற்போது வரை படித்து காத்திருக்கும் ஆசிரியர்களுக்கே, அரசுப்பணி கிடைக்க, 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிடும்.

இதனால், ஆசிரியர் பட்டயப் படிப்பு படித்தால், அரசுப் பணி கிடைப்பது அரிது என்ற, நிலை உருவாகிவிட்டது.இதனால், ஆண்டுக்காண்டு, ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.பி.எட்.,டுக்கு மவுசுஅதுமட்டுமின்றி, பி.எட்., படித்தவர்களுக்கு, தனியார் பள்ளிகளிலும் அதிக வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதனால், ஆசிரியராக விரும்பும் அனைவரும், பி.எட்., படிப்பில் சேரவே விரும்புகின்றனர்.

அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை பாதியாக குறைத்துக் கொண்டாலும், பயிற்சிப் பள்ளிகளில் சேர ஆள் வருவதில்லை. இதனால், பெரும்பாலான ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், மூடு விழா நடத்த முடிவு செய்துள்ளன.இதுகுறித்து, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில்,

"கஷ்டப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சிப் படிப்பு படித்தாலும், அதற்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. தனியார் பள்ளிகளிலும், பி.எட்., படித்தவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். இதனால், அனைவரும், பி.எட்., படிப்பில் சேருகின்றனர்' என, தெரிவித்தனர்.

ஆசிரியர் விருதில் ஏற்படும் சர்ச்சைகளை தவிர்க்க புது திட்டம் : அடுத்த ஆண்டு முத ் அமலாகும்ல

    ""ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியரின் சாதனைகளை, வரும் ஆண்டுகளில் வெளிப்படையாக்க, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும், பாடத்தில் சிறப்பாக செயல்படுவதுடன், பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடும் சிறந்த ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு, தமிழக அரசு சார்பில், 370 பேருக்கு, ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. குற்றச்சாட்டு : ஆளுங்கட்சி பிரமுகர்கள் பலரும், விருதுக்கு பரிந்துரை செய்கின்றனர்.

இதனால், விருதுக்குரிய ஆசிரியரை தேர்வு செய்யும் முறை குறித்து, சர்ச்சை எழுந்து உள்ளது. திறமையான ஆசிரியரை தேர்வு செய்வதில் உள்ள விதிமுறைகளை, தேர்வு செய்யப்படும் அனைத்து ஆசிரியருக்கும் பார்ப்பது கிடையாது என்றும், வேண்டப்பட்ட ஆசிரியராக இருந்தால், எவ்வித விதிமுறைகளையும் பார்க்காமல், கடைசி நேரத்தில் பட்டியலில் சேர்க்கப்படுவதாகவும், ஆசிரியர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

வெளிப்படை தன்மை :

நடப்பாண்டில், 80 சதவீத ஆசிரியர், முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், 20 சதவீத ஆசிரியர், விதிமுறைப்படி தேர்வு செய்யப்படவில்லை. தகுதியற்றவர்களுக்கு, சிபாரிசுகளின் அடிப்படையில், விருதுகளை கொடுத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ராதா கிருஷ்ணன் பெயரில் அமைந்த விருதை, தகுதியான ஆசிரியருக்கு மட்டுமே வழங்க வேண்டும். விருதுக்குரிய ஆசிரியர் செய்த சாதனைகளை, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை, வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
வரும் ஆண்டுகளில்... : ஆசிரியர் விருது பெற்றவர் குறித்த புத்தகத்தில், ஆசிரியர் செய்த சாதனைகள் குறித்து, ஒரு தகவலும் இல்லை; வெறும், பெயர், பள்ளி ஆகிய விவரங்கள் மட்டுமே உள்ளன. இதனால், விருது பெற்ற ஆசிரியரின் சாதனைகளை, அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. ஆசிரியரின் செயல்பாடுகளை, புத்தகத்திலும், இணையதளத்திலும் வெளியிடலாம்.

விருதுக்கு, விண்ணப்பங்களை வரவேற்பது குறித்த அறிவிப்பையும், ஆசிரியருக்கான தகுதிகள், விதிமுறைகள் குறித்த தகவலையும், முன்கூட்டியே நாளிதழ்களில் வெளியிட வேண்டும் என்பதும், ஆசிரியரின் எதிர்பார்ப்பாக உள்ளது. சங்க நிர்வாகிகள், ஆசிரியர்களின் கருத்துகள் குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜனிடம் கேட்டபோது,

""தகுதியான ஆசிரியர்களுக்குத் தான், விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விருது பெறும் ஆசிரியரின் சாதனைகளை, புத்தகத்தில் வெளியிடுவதில், எந்த பிரச்னையும் இல்லை. வரும் ஆண்டுகளில், ஆசிரியர் சாதனைகள், புத்தகங்களில் வெளிப்படையாக வெளியிடப்படும்,'' என்றார்.

சான்றிதழில் குளறுபடி தேர்ச்சி பெற்றும் சிக்கல்  

    ஆசிரியர் தகுதித் தேர்வில், முதல் மற்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களில், 100 பேருக்கு சிக்கல் எழுந்துள்ளது. தேர்ச்சி பெற்றாலும், உரிய கல்விச் சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் சரியாக இல்லை.

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) முதல் தாளில், 1,735 பேர், இரண்டாம் தாள் தேர்வில், 713 பேர் என, 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, 7, 8ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதன்பின் நடத்திய ஆய்வில், இரு தேர்வுகளிலும் சேர்த்து, 50 பேருக்கு, உரிய தகுதிகள் இல்லை என்பது, கண்டறியப் பட்டுள்ளது. சான்றிதழ்கள் இல்லாதது, தேர்வுக்குரிய தகுதியில் பட்டம் பெறாமல், வேறு பாடங்களில் பட்டம் பெற்றிருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்த 50 பேரும், தேர்ச்சிப் பட்டியலில் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளனர். மேலும், 50 முதல், 75 பேரின் கல்விச் சான்றிதழ்கள் குறித்தும், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஆய்வு செய்து, இறுதி முடிவை எடுக்கும் என, துறை வட்டாரம் தெரிவித்தது.

பல தேர்வர்கள், வெளி மாநிலங்களில் உள்ள பல்கலையில் படித்துள்ளனர். அந்த பட்டங்கள், தமிழகத்தின் கல்வித் தகுதிக்கு நிகரானது தானா என்பதை, உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளுக்குப் பின், இறுதி தேர்வுப் பட்டியல், 20ம் தேதிக்குப் பின் வெளியாகும் என, கூறப்படுகிறது.