இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, September 07, 2012

பிளஸ் 2: அக்டோபர் சிறப்புத் தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்ப

    பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அக்டோபர் சிறப்புத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

இந்தத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 7) முதல் புதன்கிழமை (செப்டம்பர் 12) வரை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அந்த இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும்.

இணையதளத்திலிருந்து பூரத்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான சலானை மட்டுமே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய இறுதி தேதி செப்டம்பர் 13-ம் தேதி ஆகும்.

இந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தாலும், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் தனித்தேர்வரின் புகைப்படத்தை ஒட்டி, அவர் இறுதியாகப் பயின்ற பள்ளி அல்லது அருகிலுள்ள மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரின் சான்றொப்பம் பெற வேண்டும். அதன் பிறகு, அரசுத் தேர்வுகள் மண்டல அலுவலக முகவரிக்கு இந்த விண்ணப்பம், தேர்வுக் கட்டணம் செலுத்திய ரசீது மற்றும் உரிய இணைப்புகளை பதிவஞ்சல் மூலமாகவோ, நேரடியாகவோ செப்டம்பர் 18-ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கத் தகுதி: மேல்நிலைத் தேர்வு எழுதியோர், தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் (எச் வகை). பத்தாம் வகுப்பு தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் பெற்று இரண்டு ஆண்டு இடைவெளியும் செப்டம்பர் 1-ம் தேதியோடு பதினாறரை வயது பூர்த்தி அடைந்தவர்கள் நேரடித் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம் (எச்பி வகை). நேரடித் தேர்வர்கள் பகுதி 1, பகுதி 2 மொழிப்பாடங்களுடன் பொருளியல், வணிகவியல், கணக்கியல், இந்தியக் கலாசாரம் போன்ற 4 தொகுப்புகளில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

தேர்வுக் கட்டணம்: மறுமுறை தேர்வு எழுதுவோர் (எச் வகை) - ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதரக் கட்டணமாக ரூ.35-ம் செலுத்த வேண்டும். நேரடித் தனித்தர்வர்கள் (எச்பி வகை) - தேர்வுக் கட்டணம் ரூ.150, இதரக் கட்டணம் ரூ. 35, கேட்டல், பேசுதல் திறன் தேர்வு ரூ.2 மொத்தம் ரூ.187.

கட்டணம் செலுத்தும் முறை: ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செலானை மட்டுமே தேர்வுக் கட்டணம் செலுத்த பயன்படுத்த வேண்டும். அந்த சலானில் குறிப்பிட்டுள்ள தொகையை கோர் பேங்கிங் சேவை உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை-6 என்ற பெயரில் தேர்வுத் தொகையைச் செலுத்தலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தில் உள்ள விண்ணப்ப எண்ணை தவறாமல் குறித்துக் கொள்ள வேண்டும். இந்த விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வுத் துறையிடம் எந்தவொரு சந்தேகத்துக்கும் முறையீடு செய்யவோ, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டைப் பெறவோ முடியும். எனவே, பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து தனித்தேர்வர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்துடன்

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்: எச் வகையினர் - தேர்வுக் கட்டணம், இதரக் கட்டணம் செலுத்தியதற்கான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சலான், சான்றொப்பமிடப்பட்ட மதிப்பெண் சான்றிதழின் நகல், பள்ளித் தலைமையாசிரியரிடம் பெற்ற தகுதிச் சான்றிதழ் (பள்ளி மாணவர்களாக பதிவு செய்து தேர்வு எழுதாதவர்களுக்கு மட்டும்). எச்பி வகையினர் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சலான், பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாறுதல் சான்றிதழின் அசல், இடப்பெயர்வு சான்றிதழின் அசல் (வெளி மாநிலத் தேர்வர்கள் மட்டும்). பதிவஞ்சல் அல்லது நேரடியாக சமர்ப்பிக்க வேண்டிய முகவரி மாவட்டங்கள்: அரசு மண்டல தேர்வு இயக்கக அலுவலகங்களின் முகவரி நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி - அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம், தீயணைப்பு சாலை, கவுண்டம்பாளையம், கோவை-641030. திருவண்ணாமலை, வேலூர் - அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம், 872, ஆர்க்காடு சாலை, சத்துவாச்சாரி, வேலூர் - 632009.

இணையதளத்தில் அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு

     சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் கீழ்க்கண்ட படிப்புகளுக்கு மே 2012 எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணையதள முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் செப்.7-ந் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் ஏ.ரகுபதி தெரிவித்துள்ளார்.

   வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: (சிதம்பரம் கோடு எண்: 04144) - 237356, 237357, 237358, 237359  மேலும் மொபைல் போனில் RCQ Enr.no RCQ Reg.no G என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

வெளியிடப்பட்ட முடிவுகள்:

பி.லிட்., பிஏ தமிழ்,  பிஎஸ்சி விலங்கியல்,  பிஎஸ்சி கணிதம், பிஎஸ்சி கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், பிஎஸ்சி என்டர்பிரைஸ் நெட்வொர்க் மற்றும் செக்யூரிட்டி மேனேஜ்மெண்ட், பிஎஸ்சி    டிஜிட்டல் பிரிண்டிங், பிஎஸ்சி விஷ்வல் மீடியா, பிஎஸ்சி கன்ஸ்ட்ரக்ஷன் மேனேஜ்மெண்ட், பிஎஸ்சி கம்ப்யூட்டர் எய்டட் டிசைன், பேச்சுலர் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன், பேச்சுலர் ஆஃப் பிலிம் அன்ட் டெலிவிஷன் டெக்னாலஜி. பிஎல்ஐஎஸ்., பி.பி.ஏ,  எம்.ஏ- எக்னாமிக்ஸ், ரூரல் மேனேஜ்மெண்ட், போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன், பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், வரலாறு மற்றும் டூரிசம் மேனேஜ்மெண்ட், யோகா, மீடியா கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன், எம்.எல்.ஐ.எஸ்., எம்.எல்.எம்.

Thursday, September 06, 2012

"2,895 முதுநிலை ஆசிரியர் விரைவில் பணி நியமனம்'  

""புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள, 2,895 முதுநிலை ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்,'' என, பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உமா தெரிவித்தார்.

இது குறித்து, பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உமா (மேல்நிலைக் கல்வி) கூறியதாவது:

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 900 பணியிடங்களில், 50 சதவீதம், பதவி உயர்வு மூலமும்; 50 சதவீதம் நேரடி பணி நியமனம் மூலமும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், பதவி உயர்வுப் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அவர்களுக்கு, நிதித் துறையின் ஒப்புதல் பெறப்பட்டு, சம்பளம் வழங்கப்பட்டு உள்ளன.

எந்த மாவட்டத்திலும் பிரச்னை கிடையாது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், ஆறு பள்ளிகளில் சேர்ந்த முதுநிலை ஆசிரியருக்கு, சம்பளம் கிடைக்கவில்லை என, தகவல் வந்துள்ளது. அவர்களுக்கும், ஓரிரு நாளில் சம்பளம் வழங்கப்படும்.புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள, 2,895 முதுநிலை ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.இவ்வாறு உமா தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்றும், நாளையும் சான்றிதழ் சரிபார்ப்பு

   ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 7) நடைபெறுகிறது. முதல் தாளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சனிக்கிழமை (செப்டம்பர் 8) நடைபெற உள்ளது.

இதற்காக சென்னை, மதுரை, கோவை, திருச்சி என 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மண்டலத்திலும் ஓர் இடத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 2,448 பேரும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். முதல் தாளில் 1,735 பேரும், இரண்டாம் தாளில் 713 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

எடுத்து வர வேண்டிய ஆவணங்கள்: முதல் தாள், இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, அழைப்புக் கடிதங்களைக் கொண்டு வர வேண்டும். முதல் தாளில் வெற்றி பெற்றவர்கள்: எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஆசிரியர் பட்டயத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள், தமிழ் வழியில் முன்னுரிமை கோருபவர்கள் தமிழ் வழி பயின்றதற்கான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை (புதுப்பிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்), மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அதற்குரிய சான்றிதழ், நடத்தைச் சான்றிதழ் ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும்.

இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்கள்: எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், இளநிலைப் பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள், பி.எட். மதிப்பெண் சான்றிதழ், தமிழ் பண்டிதர்களாக இருந்தால் அந்தத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ், தமிழ் வழியில் முன்னுரிமை கோருபவர்கள் அதற்கான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அதற்கான சான்றிதழ், நடத்தை சான்றிதழ் ஆகிய ஆவணங்களை உடன் கொண்டு வர வேண்டும். அனைத்தும் அசல் சான்றிதழ்களாக இருக்க வேண்டும்.

4 மண்டல அதிகாரிகள் நியமனம்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் இந்தப் பணிகளில் ஈடுபடுகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் இந்தப் பணியை மேற்பார்வையிட 4 மண்டலங்களுக்கும் தலா ஓர் மண்டல அதிகாரி வீதம் 4 மண்டல அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் (மண்டலம், மாவட்டங்கள், மண்டல அதிகாரி, நடைபெறும் இடம்):

1. கோவை மண்டலம் - கோவை, ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி - ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் எஸ்.அன்பழகன் - ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குகை, சேலம்.

2. சென்னை மண்டலம் - சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர்,திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் - ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் க.அறிவொளி - ஜெய்கோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை.

3. திருச்சி மண்டலம் - அரியலூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கரூர் - ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ஏ.சங்கர் - அனைவருக்கும் கல்வித் திட்ட கருத்தரங்க அறை, திருச்சி.

4. மதுரை மண்டலம் - கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி - ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் எஸ்.சேதுராமவர்மா - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மதுரை.

மறுதேர்வு எழுதுவோருக்கு திங்கள்முதல் ஹால் டிக்கெட் ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுதுவோருக்கு வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 10) முதல் ஹால் டிக்கெட்டுகள் அனுப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பாக, அந்த வட்டாரங்கள் மேலும் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான மறுதேர்வு அக்டோபர் 3-ம் தேதி நடைபெறுகிறது. சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆசிரியர் தகுதித் தேர்வில் வினாத்தாள் மாற்றம் போன்ற தவறுகள் நடைபெற்ற 5 தேர்வு மையங்கள் இந்தமுறை மாற்றப்பட்டுள்ளன. அதேபோல், புதிதாக 10-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 400 முதல் 600 தேர்வர்கள் மட்டுமே இருக்கும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மறுதேர்வுக்கான 90 சதவீதப் பணிகள் இப்போது நிறைவடைந்துள்ளன.

அரசாணை வெளியீடு: மறுதேர்வு நடைபெறும் அக்டோபர் 3-ம் தேதி புதன்கிழமை ஆகும். அனைத்து ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதும் வகையில் அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியாகியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

NEW HEALTH INSURANCE FORM - 2012

 Click download

துறைத்தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தப்படும் துறைத் தேர்வுகள் செப்.,1ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துறைத்தேர்வு டிசம்பர் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. (25.12.12ம் தேதியை தவிர), இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.09.12 அன்று 16 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணத்தை அஞ்சலக பற்றுச் சீட்டாக மட்டுமே செலுத்த வேண்டும். தேர்வாணையத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக ரூ.300 பதிவுக் கட்டணத்துடன் ஒவ்வொரு தேர்வுக்கும் ரூ.50 தேர்வுக்கட்டணமும் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் நடைபெறும் இத்தேர்வுகள் மொத்தம் 33 மையங்களில் நடைபெறவிருக்கின்றது.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலும் விரிவான தகவல்களை அறிய இணையதளத்தை பார்க்கவும். தேர்வுகளின் முடிவினை தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாகவும் அறியலாம். இது அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.

Justice Thiru S.R Singaravelu, Chairman Private Schools Fee Determination Committee: Fee Fixed and Refixed for the year 2012-2013 for CBSE and Maticulation

Justice Thiru S.R Singaravelu, Chairman Private Schools Fee Determination Committee: Fee Fixed and Refixed for the year 2012-2013 for CBSE and Maticulation

Wednesday, September 05, 2012

பள்ளிக் கல்வித்துறை குறித்த புதிய இணையதளம் துவக்கம்!

   தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை குறித்த நிலை, தேர்வு தேர்ச்சி சதவீதம், மாணவ, மாணவியரை பற்றிய விவரம் அடங்கிய, புதிய இணையதளத்தை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

இணையதளம் குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளில் பயிலும், 1.25 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்த தகவல்கள் இந்த இணையத்தில் இடம் பெற்றுள்ளன. www.tnschools.gov.in என்பது அந்த இணையதளம்.

அனைத்து மாணவ, மாணவியருக்கும், "ஸ்மார்ட் கார்டு" கொடுக்க திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக, முதல்வரின் தொகுதியில், ஐந்து பள்ளிகளை சேர்ந்த மாணவருக்கு, "ஸ்மார்ட் கார்டு" வழங்கப்பட்டுள்ளது. மற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கும், விரைவில் இந்த கார்டு வழங்கப்படும்.

மாணவரின் புகைப்படத்துடன், அவர் பயிலும் பள்ளி குறித்த விவரங்கள், இந்த கார்டில் இருக்கும். இந்த கார்டை, "பார் கோடு ரீடர்" முறையிலோ அல்லது, கார்டில் உள்ள குறியீட்டு எண்ணை, இணைய தளத்தில் பதிவு செய்தால், மாணவரைப் பற்றியும், அவரது குடும்பத்தைப் பற்றியும் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த, ஐ.டி., கார்டு, "டிசி"க்குரிய தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கும். மேலும், பயிற்சி பெறும் ஆசிரியர், தன் அனுபவம் குறித்த தகவல்களை, இந்த இணைய தளத்தில் பதிவு செய்யலாம். அது குறித்து, மற்ற ஆசிரியர் கருத்துக்களை பறிமாறிக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை, இந்த இணைய தளம் மூலம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு தேவராஜன் கூறினார்.

மாநிலத்தின் வரைபடம், மக்கள் தொகை, மொத்தப் பள்ளிகள் எண்ணிக்கை, புதிய மாணவர் சேர்க்கை விவரம், தேர்ச்சி விவரம், மாநிலத்தின் எழுத்தறிவு நிலவரம் உட்பட, 30 தலைப்புகளில், ஏராளமான தகவல்கள் இணையதளத்தில் தரப்பட்டுள்ளன.

பள்ளி கல்வி அறிவிப்புகள்-2012-13

இனச்சுழற்சி முறையில் அருந்ததியினருக்கான இடஒதுக்கீடு 1:4 அரசாணை

பள்ளி கல்வி துறைக்கு புதிய இணையதளம்

   தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை குறித்த நிலை, தேர்வு தேர்ச்சி சதவீதம், மாணவ, மாணவியரை பற்றிய விவரம் அடங்கிய, புதிய இணைய தளத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று துவக்கி வைத்தார்.

இணைய தளம் குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் கூறியதாவது:

அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளில் பயிலும், 1.25 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்த தகவல்கள், தீதீதீ.tணண்ஞிடணிணிடூண்.ஞ்ணிதி.டிண இணையத்தில் இடம் பெற்றுள்ளன. அனைத்து மாணவ, மாணவியருக்கும், "ஸ்மார்ட் கார்டு' கொடுக்க திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக, முதல்வரின் தொகுதியில், ஐந்து பள்ளிகளை சேர்ந்த மாணவருக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட்டுள்ளது.

மற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கும், விரைவில் இந்த "கார்டு' வழங்கப்படும். மாணவரின் புகைப்படத்துடன், அவர் பயிலும் பள்ளி குறித்த விவரங்கள், இந்த கார்டில் இருக்கும். இந்த கார்டை, "பார் கோடு ரீடர்' முறையிலோ அல்லது, கார்டில் உள்ள குறியீட்டு எண்ணை, இணைய தளத்தில் பதிவு செய்தால், மாணவரைப் பற்றியும், அவரது குடும்பத்தைப் பற்றியும் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த, ஐ.டி., கார்டு, "டிசி'க்குரிய தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கும். மேலும், பயிற்சி பெறும் ஆசிரியர், தன் அனுபவம் குறித்த தகவல்களை, இந்த இணைய தளத்தில் பதிவு செய்யலாம். அது குறித்து, மற்ற ஆசிரியர் கருத்துக்களை பறிமாறிக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வரும் காலங்களில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை, இந்த இணைய தளம் மூலம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு தேவராஜன் கூறினார்.

மாநிலத்தின் வரைபடம், மக்கள் தொகை, மொத்தப் பள்ளிகள் எண்ணிக்கை, புதிய மாணவர் சேர்க்கை விவரம், தேர்ச்சி விவரம், மாநிலத்தின் எழுத்தறிவு நிலவரம் உட்பட, 30 தலைப்புகளில், ஏராளமான தகவல்கள் இணைய தளத்தில் தரப்பட்டுள்ளன.

பிளஸ் 2: அக்டோபர் சிறப்புத் தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும

   பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அக்டோபர் சிறப்புத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

இந்தத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 7) முதல் புதன்கிழமை (செப்டம்பர் 12) வரை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அந்த இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும். இணையதளத்திலிருந்து பூரத்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான சலானை மட்டுமே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய இறுதி தேதி செப்டம்பர் 13-ம் தேதி ஆகும்.இந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தாலும், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் தனித்தேர்வரின் புகைப்படத்தை ஒட்டி, அவர் இறுதியாகப் பயின்ற பள்ளி அல்லது அருகிலுள்ள மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரின் சான்றொப்பம் பெற வேண்டும்.

அதன் பிறகு, அரசுத் தேர்வுகள் மண்டல அலுவலக முகவரிக்கு இந்த விண்ணப்பம், தேர்வுக் கட்டணம் செலுத்திய ரசீது மற்றும் உரிய இணைப்புகளை பதிவஞ்சல் மூலமாகவோ, நேரடியாகவோ செப்டம்பர் 18-ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கத் தகுதி: மேல்நிலைத் தேர்வு எழுதியோர், தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் (எச் வகை).

பத்தாம் வகுப்பு தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் பெற்று இரண்டு ஆண்டு இடைவெளியும் செப்டம்பர் 1-ம் தேதியோடு பதினாறரை வயது பூர்த்தி அடைந்தவர்கள் நேரடித் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம் (எச்பி வகை). நேரடித் தேர்வர்கள் பகுதி 1, பகுதி 2 மொழிப்பாடங்களுடன் பொருளியல், வணிகவியல், கணக்கியல், இந்தியக் கலாசாரம் போன்ற 4 தொகுப்புகளில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தேர்வுக் கட்டணம்: மறுமுறை தேர்வு எழுதுவோர் (எச் வகை) - ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதரக் கட்டணமாக ரூ.35-ம் செலுத்த வேண்டும். நேரடித் தனித்தர்வர்கள் (எச்பி வகை) - தேர்வுக் கட்டணம் ரூ.150, இதரக் கட்டணம் ரூ. 35, கேட்டல், பேசுதல் திறன் தேர்வு ரூ.2 மொத்தம் ரூ.187. கட்டணம்

செலுத்தும் முறை:

ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செலானை மட்டுமே தேர்வுக் கட்டணம் செலுத்த பயன்படுத்த வேண்டும். அந்த சலானில் குறிப்பிட்டுள்ள தொகையை கோர் பேங்கிங் சேவை உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை-6 என்ற பெயரில் தேர்வுத் தொகையைச் செலுத்தலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தில் உள்ள விண்ணப்ப எண்ணை தவறாமல் குறித்துக் கொள்ள வேண்டும். இந்த விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வுத் துறையிடம் எந்தவொரு சந்தேகத்துக்கும் முறையீடு செய்யவோ, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டைப் பெறவோ முடியும்.

எனவே, பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து தனித்தேர்வர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்: எச் வகையினர் - தேர்வுக் கட்டணம், இதரக் கட்டணம் செலுத்தியதற்கான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சலான், சான்றொப்பமிடப்பட்ட மதிப்பெண் சான்றிதழின் நகல், பள்ளித் தலைமையாசிரியரிடம் பெற்ற தகுதிச் சான்றிதழ் (பள்ளி மாணவர்களாக பதிவு செய்து தேர்வு எழுதாதவர்களுக்கு மட்டும்). எச்பி வகையினர் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சலான், பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாறுதல் சான்றிதழின் அசல், இடப்பெயர்வு சான்றிதழின் அசல் (வெளி மாநிலத் தேர்வர்கள் மட்டும்).

பதிவஞ்சல் அல்லது நேரடியாக சமர்ப்பிக்க வேண்டிய முகவரி :

காஞ்சிபுரம், திருவள்ளூர் - அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம், டி.பி.ஐ. வளாகம், கல்லூரி சாலை, சென்னை -600006.