அரசு பள்ளி ஆசிரியர்கள், மூன்று ஆண்டுகளுக்கு பிறகே, பணி மாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்' என, தமிழக பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும், மே மாதம் பணி மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுவது வழக்கம். ஓரிடத்தில், ஓராண்டு பணி முடித்தாலே, இடமாறுதல் கேட்கலாம் என, விதி இருந்தது.இதனால், பள்ளிகளில் பாதிப்பு ஏற்பட்டதால், குறைந்தபட்சம்,மூன்றாண்டுகள் ஓர் இடத்தில் பணிபுரிவோர் மட்டுமே, இடமாறுதல் கேட்க முடியும் என, பள்ளி கல்வி துறை அறிவித்திருந்தது.
இதை எதிர்த்து, ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்ததால், நடப்பு கல்வியாண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, வழக்கு முடிவுக்கு வந்ததால், கவுன்சிலிங் நடத்துவதற்கான, புதிய அரசாணையை, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:அனைத்து ஆசிரியர்களும், தற்போது பணியாற்றும் பள்ளிகளில், குறைந்த பட்சம், மூன்றாண்டுகள் பணி முடித்திருந்தால் மட்டுமே, இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்.
வழக்கு தொடர்ந்த ஆசிரியர்கள் மட்டும், 2017 - 18 மற்றும், 2018 - 19ம் ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்காமல் இருந்தால், இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.இந்த சலுகை, இந்த ஆண்டுக்கு மட்டுமே உண்டு. மற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும், மூன்றாண்டு பணிபுரிய வேண்டும் என்ற, நிபந்தனை கட்டாயம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment