தமிழகத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, மதிப்பூதியம் வழங்குவதற்காக, 53.78 கோடி ரூபாய், 29 மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறுகின்றனர். அவற்றில் உள்ள விபரம் சரியா என்பதை விசாரிக்க, கள ஆய்வுக்கு செல்கின்றனர். வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது, 'பூத் சிலிப்' வழங்குவது போன்ற பணிகளையும் செய்து வருகின்றனர்.இப்பணிக்காக, தேர்தல் கமிஷன் சார்பில், மதிப்பூதியம் வழங்கப்படுகிறது.
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, ஆண்டுக்கு, 7,150 ரூபாய்; மேற்பார்வையாளர்களுக்கு, 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.நடப்பு நிதியாண்டில், 67 ஆயிரத்து, 669 ஓட்டுச்சாவடி அலுவலர்கள்; 6,414 மேற்பார்வையாளர்கள், பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக, 56.08 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தர்மபுரி, அரியலுார், நீலகிரி மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களுக்கு, 53.78 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. வரும், 31க்குள், ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment