பாடப் புத்தகத்தில் கி.மு., கி.பி. என்ற நிலையே நீடிக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு அதிமுக உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை இந்தப் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினார்.
அப்போது பேசிய அவர், பொதுவாக வரலாற்றில் நாம் ஆண்டுகளை கி.மு., கி.பி., என்று குறிப்பிடுவது வழக்கம். இப்போது நமது புதிய கல்வித் திட்டத்தில் பொது ஆண்டுக்குப் பின், பொது ஆண்டுக்கு முன் என்று குறிப்பிட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன.
அவ்வாறு குறிப்பிட்டால் அது வரலாற்றுப் பிழையாக அமைந்து விடும் என்றார். இதே பிரச்னையை காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் எழுப்பினார். இதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளிக்கையில், இந்த அரசைப் பொருத்தவரையில், கி.மு., கி.பி. என்ற நிலைதான் நீடிக்குமே தவிர, வேறு ஒன்றும் நீடிக்காது என்றார்.
No comments:
Post a Comment