புதிய பாடத்திட்டத்தின்கீழ் வடிவமைக்கப்பட்ட பிளஸ் 1 பாடநூல்கள் வரும் 11-ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாகவும் தனியார் பள்ளிகளுக்கு பாடநூல் நிறுவனம் மூலம் நேரடியாகவும், அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனையகங்கள் மூலமாகவும் பாப் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்காக சென்னை டிபிஐ வளாகத்தில் பாடநூல் கழக கவுன்ட்டரிலும், கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு கவுன்ட்டரிலும் விற்பனை செய்யப்படுகின்றன. பிளஸ் 1 புத்தகங்கள் ஜூன் 2-ஆவது வாரம் விற்பனைக்கு கிடைக்கும் என பாடநூல் நிறுவனம் அறிவித்திருந்தது. எனினும் டிபிஐ வளாக பாடநூல் கவுன்ட்டரில் தினமும் ஏராளமான பெற்றோர் பிளஸ் 1 புத்தகங்களை வாங்க வந்து செல்கிறார்கள்.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, பிளஸ் 1 பாடப்புத்தகங்கள் ஜூன் 11 முதல் விற்பனைக்கு கிடைக்கும். பாடநூல் கழக விற்பனை கவுன்ட்டர்களிலும், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையகங்களிலும் வாங்கலாம். மாணவ-மாணவிகளும் பாடப் புத்தகங்களை ஆன்லைன் (www.textbookcorp.in) மூலம் பதிவுசெய்தும் இந்திய அஞ்சல்துறை பார்சல் சேவை, தனியார் கூரியர் சேவை ஆகியவற்றின் மூலமாகவும் பெறலாம்'' என்றார்.
No comments:
Post a Comment