ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவின், உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ சங்கத்தினர், மூன்று நாட்களாக, சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
'போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும்; வேலைக்கு திரும்ப வேண்டும்' என, தமிழக அரசு தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டது. தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தபோதும், அரசு தரப்பில், பேச்சு நடத்த முன்வரவில்லை. இதையடுத்து, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, ஜாக்டோ - ஜியோ, நேற்று இரவு அறிவித்தது.இது குறித்து, ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர், பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ''அரசின் வேண்டுகோள் அடிப்படையில், போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. ''கோரிக்கையை நிறைவேற்றுவதில், தாமதம் ஏற்பட்டால், மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்,'' என்றார்.
No comments:
Post a Comment