இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, June 05, 2014

2014-15ம் கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் அட்டவணை வெளியீடு: 210 நாட்கள் வேலை நாட்கள் அறிவிப்பு


2014-15ம் கல்வியாண்டிற்கான பள்ளிகளின் வேலை மற்றும் விடுமுறை நாட்கள், தேர்வு தேதிகள் குறித்த அதிகாரபூர்வ பட்டியலை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு கல்வியாண்டும் ஜூனில் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெறும். இந்த கல்வியாண்டில் ஒவ்வொரு மாதமும் வகுப்புகள் நடைபெற வேண்டிய நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் அனைத்து தேர்வுகள் உள்ளிட்டவை குறித்த அட்டவணை குறிப்பை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டில் 210 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது

. இதேபோல் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 220 நாட்கள் பள்ளியின் வேலை நாட்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்புக்கு ஜூன் 16ம் தேதி வகுப்புகள் தொடங்குகின்றன. 10 முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கு காலாண்டு தேர்வும், 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு செப்டம்பர் 17ம் தேதி தொடங்குகிறது. இதேபோல் அரை யாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தேர்வு டிச.12ம் தேதி தொடங்குகிறது. ஆண்டு இறுதித் தேர்வு மற்றும் 3ம் வகுப்பு தேர்வுகள் 2015 ஏப்.10ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்.25ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 2015 ஆண்டு மே 1ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. இதுபோல் கல்வி வளர்ச்சி நாள், பல்வேறு போட்டிகள், அறிவியல் கண்காட்சி, பெற்றோர் ஆசிரியர் கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்த வேண்டிய தினங்கள் குறித்து இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டில் டிசம்பர் மாதம் குறைந்தபட்சம் 17 வேலை நாட்களும், ஜனவரி மாதம் 18 நாட்கள் குறைந்த பட்ச வேலை நாட்களாக உள்ளன. இதுபோல் ஆண்டுத்தேர்வு நடைபெறும் ஏப்ரல் மாதம் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு 13 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக உள்ளன. இந்த அட்டவணைப்படி அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கூடங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment