இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, July 06, 2017

பள்ளிக்கூட பராமரிப்புக்கு எம்.எல்.ஏ. தொகுதி நிதி


பள்ளிக்கூடப் பராமரிப்புக்கு சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியைப்பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இந்தப் பிரச்னையை திமுக உறுப்பினர் பி.கே.சேகர்பாபு (திமுக) எழுப்பினார்.

அவர் பேசுகையில், அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்தாலும், சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. இதற்குக் காரணம் பள்ளிக் கட்டடங்கள் சிதிலமடைந்த நிலையிலும், சீரமைக்க போதிய அக்கறை செலுத்தப்படாமலும் இருப்பதே ஆகும். மாநகராட்சியில் இருந்து இதுபோன்ற விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு அரசின் கவனத்துக்கு வரத் தாமதம் ஆகிறது. இதுபோன்ற பள்ளிக் கூடங்களைப் பழுது பார்க்க எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்து பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது:

அரசுப் பள்ளிகளில் வரும் ஆண்டுகளில் சேர்க்கை அளவு அதிகரிக்கும். அதில் இந்தியாவிலேயே சிறந்த நிலையை எட்டும். பள்ளி பழுதுபார்ப்புப் பணிகளுக்கு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்துவது குறித்து முதல்வரின் ஆலோசனையைப் பெற்று முடிவு அறிவிக்கப்படும்.

பிளஸ் 2 அசல் சான்றிதழ் 10ம் தேதி வினியோகம்


பிளஸ் 2 மாணவர்களுக்கு, ௧௦ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தேர்வு முடிவு மற்றும் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவு வந்ததும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை பயன்படுத்தி, மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்தனர்.இந்நிலையில், 'பிளஸ் 2 மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், வரும், 10ம் தேதி காலை, 10மணி முதல், பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும்' என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். தனித்தேர்வர்கள், தேர்வு எழுதிய பள்ளிகளில், சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் சிலை நிறுவுதல் சார்பு


TNPTF- மாநில பொறுப்பாளர்கள் இயக்குனரை சந்தித்து கோரிக்கை குறித்து விவாதிக்கப்பட்ட போது.


Wednesday, July 05, 2017

முதுநிலை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பு 1000 ஆசிரியர் பணிக்கான அறிவிப்பு ரத்து


சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலத்தைச் சேர்ந்த பி.செல்லமுத்து தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் சுமார் 1000 விரிவுரையாளர் பதவிக்கான தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் 16ம் தேதி அறிவிப்பாணையை வெளியிட்டது. அதில், விரிவுரையாளர் பதவிக்கு பொறியியல் பட்டதாரிகள் 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்றும் பொறியியல் முதுநிலைபடித்தவர்கள் இந்த பதவிக்கு போட்டியிட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் விதிகளின்படி விரிவுரையாளர் பதவிக்கு பொறியியல் பட்டப் படிப்பில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும் அதேபோல், பொறியியல் முதுநிலைப் படிப்பில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த நடைமுறையை தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றாமல் பொறியியல் படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றவர்களை விரிவுரையாளர் பதவிக்கான தேர்விலிருந்து நீக்கம் செய்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த நடைமுறை அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கவுன்சிலின் விதிமுறைகளுக்கு முரணாக உள்ளது.

தேர்வு வாரியத்தின் அறிவிப்பால் பொறியியல் படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு இல்லை. எனவே, பாலிடெக்னிக் கல்லூரிகளின் விரிவுரையாளர் பதவிக்கான தேர்வு அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். புதிய அறிவிப்பாணையை வெளியிடுமாறு தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும். இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், புதிய அறிவிப்பாணையை 2 வாரங்களுக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Tuesday, July 04, 2017

விரைவு தபால் சேவை: 18 சதவீத ஜி.எஸ்.டி.,


தபால் போக்குவரத்து மற்றும் பார்சல் சேவைகளுக்கு, ஜி.எஸ்.டி., வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, தபால் துறை அறிவித்துள்ளது. இதன்படி, ஸ்பீடு போஸ்ட், எக்ஸ்பிரஸ் பார்சல், பிசினஸ் பார்சல், கேஷ் ஆன் டெலிவரி, லாஜிஸ்டிக்ஸ் போஸ்ட், பிசினஸ் போஸ்ட், பில் மெயில் சர்வீஸ், டைரக்ட் போஸ்ட், மீடியா போஸ்ட் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும், 18 சதவீத வரியை, மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

கோவை முதுநிலை, தலைமை தபால் அதிகாரி சக்திவேல் முருகன் கூறியதாவது: முன்பு, ஒரு ஸ்பீடு போஸ்ட் அனுப்ப, கட்டணம், 35 ரூபாய், சேவை வரி, ஐந்து ரூபாய் சேர்த்து, 40 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது, 18 சதவீத, ஜி.எஸ்.டி., நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால், சேவை வரி, ஆறு ரூபாய் சேர்த்து, 41 ரூபாய் வசூலிக்கப்படும். அதே சமயம், தபால் துறையின் முக்கிய சேவைகளான, பதிவு தபால், பார்சல், இ - மணியார்டர், இ - போஸ்ட் மற்றும் சாதாரண மணியார்டர் சேவைக்கு இவ்வரி பொருந்தாது.இவ்வாறு அவர் கூறினார்.

Monday, July 03, 2017

ஜூன் மாதம் FA(A) சிறப்பாக செய்த மாணவர்கள் ஆங்கில அகராதி பரிசாக பெற்றபோது... ஊ.ஒ.து.பள்ளி,பூலுவபட்டி திருப்பூர் வடக்கு

தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றக்கோரி மனு: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்ட முறையை பின்பற்றக் கோரிய மனு தொடர்பாக, தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பாபு அப்துல்லா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் தமிழக மாணவர்கள் பின்தங்கினர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களால் கூட நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதன் மூலம் மாநில பாடத்திட்ட முறையில் பயின்ற மாணவர்களால் நீட் போன்ற தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற முடியாதா என்ற கேள்வி எழுகிறது. அண்டை மாநிலமான கேரளத்தில் கூட சிபிஎஸ்இ முறையே பின்பற்றப்படுகிறது. அதனால் கேரளத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறுகின்றனர்.

எனவே தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்ட முறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலர், இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

TNPTF மாநில செயற்குழு முடிவுகள் 2-7-17






RMSA training


பாலியல் வன் கொடுமை விழிப்புணர்வு

Sunday, July 02, 2017

மருத்துவ கல்லூரி இடங்கள்

எம்.பி.பி.எஸ். : மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கிடைக்கும் இடங்கள் எத்தனை?

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,594 இடங்களுக்கு ஜூலை 17-ஆம் தேதி சென்னையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக, மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களும், சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்டத்திட்டங்களில் படித்தவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
22 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசிடம் ஒப்படைக்கப்பட்ட சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரி ஆகியவற்றில் உள்ள இடங்கள் அரசுக்குரியவை.
சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி சுயநிதிக் கல்லூரி.

அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் விவரம்

1. சென்னை மருத்துவக் கல்லூரி 250 38 180 32
2. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி 250 37 181 32
3. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி 150 22 109 19
4. மதுரை மருத்துவக் கல்லூரி 150 22 109 19
5. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி 150 23 108 19
6. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி 150 23 108 19
7. கோவை மருத்துவக் கல்லூரி 150 22 109 19
8. கேஏபி விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி 150 22 109 19
9. தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி 150 23 108 19
10. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி 150 22 109 19
11. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி 100 15 72 13
12. மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம் 100 15 72 13
13. வேலூர் மருத்துவக் கல்லூரி 100 15 72 13
14. தேனி மருத்துவக் கல்லூரி 100 15 72 13
15. தருமபுரி மருத்துவக் கல்லூரி 100 15 72 13
16. விழுப்புரம் மருத்துவக் கல்லூரி 100 1 72 13
17. திருவாரூர் மருத்துவக் கல்லூரி 100 15 72 13
18. சிவகங்கை மருத்துவக் கல்லூரி 100 15 72 13
19. திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி 100 15 72 13
20. அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி 100 15 72 13
21. இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, கோவை 100 15 72 13
22. கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி 100 15 72 13
23. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி 150 22 109 19

மொத்த இடங்கள் 3,050 456 2,203 391

அரசு பிடிஎஸ் இடங்கள்

1. அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை 100 15 72 13
2. ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி 100 15 72 13

மொத்த இடங்கள் 200 30 144 26

தனியார் கல்லூரி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் (சிறுபான்மை அல்லாத கல்லூரிகள்)

1. இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, கே.கே.நகர், சென்னை 100 35 55 10
2. ஐஆர்டி பெருந்துறை மருத்துவக் கல்லூரி, பெருந்துறை 100 35 5 10
3. பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் நிறுவனம், கோவை 150 53 82 15
4. கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி, காஞ்சிபுரம் 100 35 55 10
5. தாகூர் மருத்துவக் கல்லூரி, சென்னை 150 53 82 15
6. வேலம்மாள் மருத்துவக் கல்லூரி, மதுரை 150 53 82 15
7. அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி 150 53 82 15

மொத்த இடங்கள் 900 317 493 90

தனியார் கல்லூரி அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்கள் (சிறுபான்மை அல்லாத கல்லூரிகள்)

நல்லாசிரியர் விருதுக்கான விதிகளில் விரைவில் மாற்றம்


தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கான, விதிகளில் மாற்றம் செய்ய, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. திறமையான ஆசிரியர்களை கண்டறிந்து, விருது வழங்க, விதிகளில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளன. தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் விதிகள் வகுக்கப்பட்டு, நல்லாசிரியர் விருதுக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

பல ஆண்டுகளாக ஒரே நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதில், விருது பெறுவது குறித்து விபரம் தெரிந்தவர்கள், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் மட்டுமே விண்ணப்பிக்கின்றனர். ஆனால், பல ஆசிரியர்கள், திறமையாக பாடம் நடத்தியும், மாணவர்களை நல்வழிப்படுத்தியும், சாதனைகள் நிகழ்த்துகின்றனர்.இதுபோன்ற ஆசிரியர்கள் பலர், விருது பெற முயற்சிப்பது கிடையாது. சிலர் விருது பெற முயற்சித்தாலும், அதற்கான வழிமுறைகள் தெரியாமல் விட்டு விடுகின்றனர்.

எனவே, குறிப்பிட்ட ஒரு குழுவினரே விண்ணப்பித்து, விருது பெறும் நிலை உள்ளது. இந்நிலையை மாற்றவும், பயிற்றுவித்தலில் மற்றும் மாணவர்களை வழி நடத்துவதில், சிறந்த ஆசிரியர்களை மட்டுமே அங்கீகரிக்க, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதனால், நல்லாசிரியர் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த ஆண்டே, புதிய விதிகள் அமலுக்கு வரவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு


சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற, ஆக., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசால், சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், பார்சி, புத்த மதத்தினர் மற்றும் ஜெயின் உள்ளிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசால் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

ஒன்று முதல், 1௦ம் வகுப்பு வரை படிக்கும், மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையும்; பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை படிப்போருக்கு, மேல் படிப்பு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப படிப்பு படிப்போருக்கு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில், உதவித்தொகை தரப்படுகிறது. இதை பெற தகுதி உள்ளவர்கள், ஆக., ௩௧க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே, உதவித்தொகை பெறுவோர், புதுப்பித்துக் கொள்ள, ஜூலை, ௩௧க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இதன் விபரங்கள், www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் உள்ளன. மேலும், www.minorityaffairs.gov.in என்ற தளத்திலும் தெரிந்து கொள்ளலாம் என, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

439 தொடக்க பள்ளிகளுக்கு மின் வசதி செய்து தர உத்தரவு


தமிழகத்தில், மின்சார வசதி இல்லாத, 439 பள்ளிகளுக்கு, மத்திய அரசு திட்டத்தில், மின் வசதி செய்து தர உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், மின் வசதி, குடிநீர், பாதுகாப்பு வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும், அடிப்படை வசதியில்லாத பள்ளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், கிராமப்புறங்களில் உள்ள, ௪௩௯ தொடக்கப் பள்ளிகளில், மின் வசதி இல்லாதது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த பள்ளிகளுக்கு, மத்திய அரசின், தீனதயாள் உபாத்யாய் கிராம ஜோதி திட்டத்தின் கீழ், மின் இணைப்பு வழங்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதனால், மின் வசதியற்ற பள்ளிகளின் விபரங்களை அனுப்பும்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் சுற்ற றிக்கை அனுப்பி உள்ளார்.

டெட்' தகுதி தேர்வில் 4.64 சதவீதம் தேர்ச்சி


ஆசிரியர் பணிக்கான 'டெட்' தகுதி தேர்வு எழுதிய 7.53 லட்சம் பேரில், 4.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி குறைந்துள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கான 'டெட்' தகுதி தேர்வு ஏப்ரல் 29,30ல் நடந்தது.

இதில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தனித்தனியாக தேர்வு நடந்தது. முதல் தாளில் 2.41 லட்சம் பேரும்; இரண்டாம் தாளில் 5.12 லட்சம் பேரும் பங்கேற்றனர். அவர்களில் 4.64 சதவீதமான 34 ஆயிரத்து, 979 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது முதல் தாள் எழுதியவர்களில் 6.71 சதவீதத்தினரும்; இரண்டாம் தாள் எழுதியவர்களில் 3.66 சதவீதத்தினரும் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.குறிப்பிட்ட பாடங்களில் தேர்வு எழுதியோரில் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை தேர்வு செய்தவர்களில் 2.72 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழகத்தில் 2012ல், 'டெட்' தேர்வு அறிமுகமான போது 7.14 லட்சம் தேர்வு எழுதி 2.448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

அதனால் கேள்வித்தாள் மிக கடினமாக இருப்பதாக மறு தேர்வுக்கு பட்டதாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து எளிமையாக்கப்பட்ட வினாத்தாளுடன் துணை தேர்வு நடத்தப்பட்டது. இதில் 2.99 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.பின் 2013ல் நடந்த தேர்வில் இரண்டு தாள்களிலும் சேர்த்து 6.62 லட்சம் பேர் பங்கேற்றதில் 4.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு நடந்த தேர்வில், தேர்ச்சி சதவீதம் 4.64 சதவீதமாக உயர்ந்துள்ளது

பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல்


தென் மாவட்ட அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 5,000 பட்டதாரி ஆசிரியர்களை, வட மாவட்டங்களுக்கு மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும் கவுன்சிலிங் மூலம், அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவர். ஆனால், 2011க்கு பின், பள்ளிகள் திறந்த பின், ஜூலையில், இந்த கவுன்சிலிங் நடத்தப்பட்டது.

இதனால், பாதி பாடங்களை ஒரு ஆசிரியரும், மீதி பாடத்தை மற்றொரு ஆசிரியரும் நடத்தும் நிலை ஏற்பட்டது; மாணவர்களுக்கு கற்பித்தலில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண, இந்தாண்டு, பள்ளிகள் திறக்கும் முன், மே மாதமேஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப் பட்டது. இதில், 10 ஆயிரம் பேர் வரை, இட மாறுதல் பெற்றனர். இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங் களிலும், வேலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரியலுார், பெரம்பலுார் போன்ற மாவட் டங்களிலும், போதிய மாணவர்கள் இருந்தும், பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகஉள்ளன.

அதேநேரத்தில், தென் மாவட்டங்களில், 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாக, பள்ளி கல்விதுறை கண்டறிந்துள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில், தற்போது மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது; ஆக., 31க்குள், மாணவர் சேர்க்கையை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அவர்களின் விகிதத்தை விட அதிகமாக உள்ள உபரி ஆசிரியர்களை, வட மாவட்டங்களுக்கு மாற்ற, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது

அரசு அலுவலகங்களில் மட்டும் இனி ஆதார் மையங்கள்


நாடு முழுதும், செப்டம்பர் முதல், அரசு அலுவலகங்களில் மட்டுமே ஆதார் மையங்கள் செயல்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. மானிய உதவி, வங்கி கணக்கு என அனைத்திற்கும், தற்போது, 'ஆதார்' எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, அனைவருக்கும் முழுமையாக ஆதார் எண் வழங்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

இதற்காக, அரசு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களும், ஆதார் தகவல்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளன.ஆனால், தனியார் ஆதார் மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது; மேலும் பல குளறுபடிகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.எனவே, ஆதார் வழங்கும் பணியை, அரசு மற்றும் அது சார்ந்த நிறுவனங்களிடம் மட்டுமே, வழங்குவது குறித்து ஆதார் வழங்கும் அமைப்பான இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, அதன், தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷண், மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

'செப்டம்பர் முதல் தேவைப்பட்டால், தனியார் ஆதார் ஏஜன்சிகளும், அரசு அலுவலகங்களில், அரசு அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டில் மட்டுமே செயல்பட வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Saturday, July 01, 2017

காலவரையற்ற வேலை நிறுத்தம் அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை


ஜூலை மாதத்திற்குள், ஊதிய மாற்றம் வராத நிலையில், பேச்சின் போது ஒப்புக்கொண்டபடி, 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்காவிட்டால், காலவரையற்ற வேலை நிறுத்தம் உறுதி' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சங்க பொதுச் செயலர் அன்பரசு விடுத்துள்ள அறிக்கை:

அரசு ஊழியர்களின், ஊதிய மாற்றத்திற்காக அமைக்கப்பட்ட, அலுவலர் குழுவின் பதவிக்காலத்தை, மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசுக்கு இணையான, அனைத்து படிகளையும் வழங்க வேண்டும். தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்தை, உடனே அமல்படுத்த வேண்டும். ஊதிய மாற்றம் ஏற்படும் வரை, தற்போது வாங்கும் ஊதியத்தில், 20 சதவீதத்தை, இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்., 25 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தோம்.

போராட்டம் துவங்கிய இரண்டாம் நாள், அமைச்சர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசினர். அப்போது, ஜூலைக்குள், ஊதிய மாற்றம் செய்யப்பட்டு விடும் என, உறுதி அளித்தனர். ஜூன், 30க்குள்,அலுவலர் குழு பரிந்துரைகளை அளிக்காவிட்டால், 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தனர். அதை ஏற்று, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், வேலை நிறுத்தப் போராட்டத்தை, தற்காலிக மாக நிறுத்தி வைத்தது. ஆனால், ஜூன், 30க்குள், அலுவலர் குழு, பரிந்துரை களை வழங்கவில்லை. எனவே, அரசு ஊழியர்களுக்கு, இடைக்கால நிவாரணமாக, 20 சதவீத ஊதியத்தை, ஜூலை, 17க்குள் வழங்க வேண்டும். இல்லையெனில்,தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட, வேலை நிறுத்தப் போராட்டத்தை, தமிழகம் முழுவதும் தொடர வேண்டிஇருக்கும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்