இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, January 25, 2017

ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவிப்பு


தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதி தேர்வு

ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அவர்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி அமர்த்த வேண்டும் என்று மத்திய அரசு கடந்த 2010–ம் ஆண்டு அறிவித்தது.

அதில் இருந்து தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தான் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி அமர்த்தப்படுகிறார்கள். கடந்த 2014–ம் ஆண்டு சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். காத்திருக்கும் பட்டியலில் இருந்து தான் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று சென்னையில் அமைச்சர் கே.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஏப்ரல் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு

பள்ளி கல்வித்துறையின் அரசு தேர்வுத்துறையால் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பாக சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வு நடைபெறுவது தள்ளிப்போகாது. ஏற்கனவே அறிவித்த அட்டவணைப்படி திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும்.

ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாதம் இறுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் தேர்வு நடக்கும் தேதி அறிவிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதால், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் விரிவான அறிவிப்பு விரைவில் வர உள்ளது.

மார்ச் 25ல் ஸ்டிரைக்: அரசு ஊழியர்கள் அறிவிப்பு


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள் நான்கு கட்ட போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர், செல்வம் கூறியதாவது: கடந்த பிப்ரவரியில் புதிய ஓய்வூதியம் திட்டம் ரத்து, சம்பளக்குழு அமைப்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் போராடினர்.அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சட்டசபை விதி, 110ன் கீழ், புதிய

ஓய்வூதியத் திட்டம் குறித்து நிபுணர் குழு அமைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும், 'புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும்' என அறிவிக்கப்பட்டது; இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.நான்கு லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. எட்டாவது சம்பள குழு அமைக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக, 20 சதவீதம் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இதை கண்டித்து, பிப்., 2ல் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம், மார்ச் 15ல், மாவட்ட தலைநகரங்களில் பேரணி, 18 முதல் 25 வரை, வேலை நிறுத்த ஆயத்த மாநாடுகள், 25 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு கூறினார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் கடன் கிடையாது

தமிழக அரசு பணியில் 200௩ம் ஆண்டு-க்கு பின்சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பங்களிப்பு ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டது. ஊழியர் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம், அரசின் பங்களிப்பாக 10 சதவீதம் சேர்த்து அத்தொகை முழுவதும் தனி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. சில துறைகளில் மட்டும் பிடித்தம் செய்த தொகை 8 சதவீத வட்டியுடன் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. இதுகுறித்து காரைக்குடியை சேர்ந்த செல்வம் என்பவர், தகவல் அறியும் உரிமைசட்டத்தில் விபரம் கேட்டிருந்தார். இதற்கு நிதித்துறை பொது தகவல் தொகுப்பு மையம் அளித்துள்ள பதில் விபரம்: இத்திட்டத்தின் கீழ் பணியாளர் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அரசு பங்குத்தொகை சேர்த்து அரசு நிர்ணயிக்கும் வட்டியுடன் திரும்ப வழங்கப்படும். இத்திட்ட நிதி, நிரந்தர அரசு கணக்கில் வரவு வைக்கப்படவில்லை; தற்காலிக கணக்கில் தான் வரவு வைக்கப்பட்டு உள்ளது.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 2015--16 வரை பணியமர்த்தப்பட்டவர்கள், 4 லட்சத்து 54 ஆயிரத்து 999 பேர். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் 2003 ஏப்.,1 முதல் தற்போது வரை (2015--16) பணியாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை ஐந்தாயிரத்து 114 கோடி 42 லட்சத்து 98 ஆயிரத்து 616 ரூபாய். அரசு பங்கு தொகையாக, அதே அளவு தொகை வரவு வைக்கப் பட்டுள்ளது. மொத்தம் 10 ஆயிரத்து 222 கோடி 85 லட்சத்து 97 ஆயிரத்து 232. இதுவரை பணி ஓய்வு, இறப்பு போன்றவற்றால் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்கள் 1873 பேர்; இவர்களுக்கு தொடர் ஓய்வூதியம் கிடையாது.10 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு, இருப்பு தொகையில் கடன் வழங்க இயலாது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து செல்வம் கூறியதாவது:பத்து ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு, பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் 25 சதவீதம் கடன் வழங்க, ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டன் வழங்க இயலாது என்றும், எவ்வித அரசாணையும் வெளியிடவில்லை எனவும் மறுக்கப்பட்டுள்ளது.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யும் கோரிக்கைக்காக குழு அமைக்கப்பட்டு, அரசு அதை கிடப்பில் போட்டுள்ளது. ஓய்வு பெறும் ஊழியருக்கு, பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்ப பெறும் வழிமுறைகளை அரசு செய்யவில்லை. இதனால் ஓய்வு பெற்றவர்கள், இறந்தவர்களின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.இவ்வாறு கூறினார்.

Tuesday, January 24, 2017

பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்ரவரி 2ல் துவக்கம்


பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ல் துவங்குகிறது; இதில், எட்டு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். அறிவியல் பாட மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்துவது குறித்த வழிமுறைகளை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.அதில், 'பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 2 முதல், 24ம் தேதிக்குள், செய்முறை தேர்வு, கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். தனி தேர்வர்களுக்கு, பிப்., 23 முதல், 25க்குள் நடத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்

இன்று, தேசிய வாக்காளர் தினம்!

ஆண்டுதோறும் ஜன.,25ம் தேதி, தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஒரு மையக் கருத்தை முன் வைத்து, இந்நாளை கொண்டாடும்படி, தேர்தல் கமிஷன் வலியுறுத்துகிறது. அதன்படி, இன்று, ஏழாவது தேசிய வாக்காளர் தினத்தின் மையக்கருத்து, 'மாணவர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கு அதிகாரம் அளித்தல்' என்பதாகும். 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களும், இதுவரை, ஓட்டளிக்காத இளைய வாக்காளர்களும், ஓட்டளிக்கும் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற ஊக்குவிக்கிறது தேர்தல் கமிஷன். வாக்காளர் பட்டியலில் பெயர் இணைத்து, ஓட்டளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த, மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன; பள்ளிகள் தோறும் பல்வேறு போட்டிகளும், சிந்திக்க வைக்கும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. 'புதியதோர் உலகம் செய்வோம்' என்கிற பாடல் வரிகளை உண்மையாக்க, இளைய சமுதாயமே, இன்றைய நாளை, உங்களின் நாளாக்கிக் கொள்ளுங்கள். வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்து கொள்ளுங்கள்...! ஓட்டளிக்கும் கடமையை நிறைவேற்ற, உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள்!

குடியரசு தின விழா கொண்டாடுவது குறித்த செயல்முறைகள்


Sunday, January 22, 2017

சென்னை காவல்துறை அறிவுரை

EMIS details

ரூ.2 லட்சத்துக்கு மேல் டிபாசிட் செய்தால் வருமானவரி நோட்டீஸ்


செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின், இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வங்கிகளில், 'டிபாசிட்' செய்தவர்களுக்கு, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பி வருகிறது.

மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு திட்டம், நவ., 8ல் அறிவிக்கப்பட்டது; இதை யடுத்து, பழைய நோட்டுகளை வங்கிகளில் டிபாசிட் செய்து கொள்ள அனுமதி வழங்கப் பட்டது. இதை பயன்படுத்தி, கறுப்புப் பண பதுக்கல் கும்பல், பல கோடி ரூபாயை வங்கிகளில் டிபாசிட் செய்து, 'வெள்ளை' ஆக்கியது.

இதையடுத்து, 2 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக
டிபாசிட் செய்யப்பட்ட வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் பணியை, மத்திய அரசு முடுக்கிவிட்டுள் ளது. இதுகுறித்து, மத்திய நேரடி வரிகள் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஏழை மக்களின், 'ஜன்தன்' வங்கி கணக்குகள் உட்பட,மற்றவர்கள் வங்கி கணக்குகளில், கறுப்பு பணமாக இருந்த, பழைய நோட்டுக்களை, 'டிபாசிட்' செய்து பெரும் தொகையை வெள்ளையாக்கியது உறுதியாகி உள்ளது.நாடு முழுவதும், செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின், 2 லட்சம் ரூபாய்க்கு மேல், டிபாசிட் செய்யப்பட்ட வங்கி கணக்குகளின் எண்ணிக்கை, 60 லட்சம்; இவற்றில், 7.34 லட்சம் கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு, விளக்கம் கோரி, வருமான வரித்துறையின் சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பும் நடவடிக்கைதுவங்கியுள்ளது.வட கிழக்கு மாநிலங்களில் உள்ள வங்கிகளில், 10,700 கோடி ரூபாய் டிபாசிட் ஆகியுள்ளது. கூட்டுறவு வங்கி களில், 16,000 கோடி ரூபாயும், மண்டல கிராம புற வங்கிகளில், 13 ஆயிரம் கோடியும் டிபாசிட் ஆகியுள்ளது.

இந்த வங்கி கணக்குகளில், முறைகேடாக, பணம்,
'டிபாசிட்' செய்யப்பட்டது குறித்து, வருமான வரித்துறையுடன் இணைந்து, அமலாக்க பிரிவும், சி.பி.ஐ., எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பும் விசாரணையை துவக்கிஉள்ளது.

வங்கிகளில், சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு மட்டுமின்றி, கடன் கணக்குகளிலும், செலுத்தப் பட்ட தொகை குறித்து முழுமையாக விசாரணை நடைபெறும். இதில், முறைகேடு செய்யப்பட்டது உறுதியானால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இன்றைய தினமலர்-வாரமலர் "இது உங்கள் இடம்" பகுதியில் இரண்டாயிரம் பரிசு பெற்ற எனது பதிவு நன்றி:தினமலர்

ஜல்லிக்கட்டி: தமிழக அரசின் விதிமுறைகள்

ஜல்லிக்கட்டு : தமிழக அரசின் விதிமுறைகள்

1. எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ, குழுவோ ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம். நடைபெறும் இடம், நேரம் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

2. போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகள், நபர்கள் குறித்த தகவல்களை மாவட்ட ஆட்சியரிடம் முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் போட்டியில் கலந்து கொள்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ஏற்கனவே பதியப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

3. போட்டி நடக்கும் இடத்தைப் பார்வையிட்ட பின் மாவட்ட ஆட்சியர் அனுமதி தரலாம்.

4. வருவாய்த்துறை அதிகாரிகள், கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், காவல்துறையினர், சுகாதாரத்துறையினர் உள்ளடங்கிய ஜல்லிக்கட்டு குழுவை மாவட்ட ஆட்சியர் உருவாக்குவார். ஜல்லிக்கட்டு போட்டிகள் சட்டப்படி நடப்பதை இந்தக் குழு மேற்பார்வையிடும்.

5. கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளின் முறைப்படியான பரிசோதனைகளை ஒவ்வொரு மாடும் ஈடுபடுத்தப்படுவதை நிகழ்ச்சி நடத்துநர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஊக்க மருந்து கொடுத்தல், எரிச்சலூட்டும் மருந்துகளை உட்புகுத்தல் உள்ளிட்ட எந்த விதமான நடவடிக்கைகளும் எந்த விதத்திலும் மாடுகளின் மீது உபயோகப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது.

6. மாடுகள் ஆக்ரோஷம் கொள்ளும் அளவிற்கு எந்தவொரு நோய் தாக்கத்திலும் இருக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளப்பட வேண்டும்.

7. திறந்த வெளி மைதானத்தில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். அங்கே கொண்டு வரப்படுவதற்கு முன்பு மாடுகள் குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது ஓய்வில் இருந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60 சதுர அடி இடத்தில் ஒவ்வொரு மாடும் இருக்க வைக்க வேண்டும். அங்கே அவற்றுக்குத் தேவையான தண்ணீரும், சாப்பாடும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். மாட்டின் சொந்தக்காரர் அதன் அருகிலேயே இருக்க வேண்டும். கால்நடைப் பராமரிப்புத்துறை மருத்துவர்களின் கண்காணிப்பிலும், காவல்துறையினரின் தொடர் கண்காணிப்பிலும் மாடுகள் இருக்க வேண்டும். மாட்டின் உடலில் எவ்விதமான காயங்களும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அதனை போட்டியில் அனுமதிக்கக் கூடாது. மழை, வெயிலிலில் இருந்து மாடுகளைப் பாதுகாக்க அந்த காத்திருப்பு இடத்தில் மேற்கூரை இருக்க வேண்டும். சுத்தத்துடன் அந்த இடம் பராமரிக்கப் பட வேண்டும். முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

பரிசோதனைகள் :

1. அனைத்து மாடுகளும் கால்நடைப் பராமரிப்புத்துறை மருத்துவர் மூலம் கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

2. அவற்றின் உடல்நலனைப் பரிசோதித்து எதுவும் பிரச்னை என்றால் அவற்றை போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது.

3. மாட்டிற்கு மது கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கப்பட வேண்டும். அப்படி இருந்தால் போட்டியில் அனுமதிக்கக் கூடாது.

4. வாடிவாசல் வரையில் கொண்டு செல்லப்படும் மாடுகளின் மூக்கணாங்கயிறை அதன் சொந்தக்காரர் அவிழ்த்து மாட்டினை போட்டிக்களத்தில் இறங்கச் செய்ய வேண்டும்.

போட்டிக் களம் :

1. குறைந்தபட்ச 50 சதுர அடி பகுதியாக இருக்க வேண்டும். இந்த 50 அடி பகுதிக்குள் தான் மாடுபிடி வீரர்கள் மாட்டினைப் பிடிக்க வேண்டும்.

2. மாடுகள் களத்தில் உள் நுழையும் போது அதன் முன் நிற்க வீரர்களுக்கு அனுமதி இல்லை. வழியை மறித்து நிற்க அனுமதி இல்லை. மாடுகள் வெளியான 30 விநாடிகளுக்குப் பிறகோ அல்லது அவை துள்ளிக் குதிக்க ஆரம்பித்த பிறகு 15 மீட்டர் தொலைவிலேயோ தான் அதனைப்பிடிக்க முயல வேண்டும். கொம்பு, வால் போன்றவற்றை பிடிக்க அனுமதி இல்லை. அவற்றின் கால்களைக் கட்டிப்பிடித்து அதனை நகரவிடாமல் தடுக்கவும் கூடாது. இதனை மீறும் போட்டியாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள். முதல் 15 மீட்டர் தொலைவு தூரத்தில் மெத்தென்ற தளமாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

மாடு ஓடும் பகுதி :

1. மாடு ஓடும் பகுதியில் இரண்டு கட்ட தடுப்புகள் அமைக்கப்பட்டு அதன் பிறகே பார்வையாளர்கள் 15 மீட்டர் தொலைவில் அனுமதிக்கப்பட வேண்டும். மாடுகள் வெளியாகும் சமயத்தில் கூக்குரலிட்டு அதனை மிரளச் செய்வதற்காக இந்த ஏற்பாடு.

2. 15 மீட்டர் தூரத்தைக் கடந்து ஓடும் இடத்தை மாடு அடைந்தால் அதன் பிறகு அதனை வீரர்கள் தொட அனுமதி இல்லை. குறைந்தபட்சம் 100 மீட்டர் தொலைவிற்கு ஓடி மாடு வெளியாகி விட வேண்டும். மாடு உள்நுழைவதிலிருந்து வெளியாவது வரையிலான நிகழ்வு ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடங்களுக்குள் முடிந்து விட வேண்டும்.

Saturday, January 21, 2017

ஆசிரியர்களிடம் பிற வேலைகள் வாங்க எதிர்ப்பு: மத்திய அரசின் ஆய்வுகுழு பரிந்துரை


ஆசிரியர்களுக்கு, கல்வி சாராத மற்ற பணிகளை வழங்கி, அவர்களது நேரத்தை வீணடிப்பதை பள்ளிகள் நிறுத்த வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடியால் நியமிக்கப்பட்ட, செயலர்கள் அடங்கிய ஆய்வு குழு பரிந்துரைத்து உள்ளது. இதையடுத்து, பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்களை, புதிதாக வரையறுக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாராகி வருகிறது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், கல்வி பணியை தவிர, பல்வேறு பணிகளையும் செய்து வருகின்றனர். பள்ளிகளிலும், கல்வி சாராத மற்ற பணிகளை செய்கின்றனர்; அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணிகள் போன்றவற்றில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், கல்வியில் ஆசிரியர்களின் கவனம் குறைவதாக, புகார் கூறப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்வதற்காக, பல்வேறு துறை சார்ந்த செயலர்கள் அடங்கிய குழு ஒன்றை, பிரதமர் மோடி அமைத்தார். இக்குழு தன் ஆய்வை முடித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அடிப்படை பணி : இது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: மாணவ, மாணவியருக்கு தரமான கல்வி வழங்குவது மட்டுமே, பள்ளி ஆசிரியர்களின் அடிப்படை பணி. பாடம் நடத்துவது உட்பட, கல்வி தொடர்பான பணிகளில் மட்டுமே, அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், அவர்கள் வேறு பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றனர். கால்நடை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, போலியோ ஒழிப்பு, ரேஷன் கார்டு சரிபார்ப்பு என, வெவ்வேறு அரசு மற்றும் பொது பணிகளில், பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் நேரம் குறைந்து, கல்வியில் அவர்கள் கவனம் இருப்பதில்லை; மாணவர்களின் கல்வி பெருமளவு பாதிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும், இந்நிலை காணப்படுகிறது. ஆசிரியர்கள், கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர். மேலும், பள்ளி நிர்வாகங்களின் கட்டளைப்படி, வேறு சில பணிகளையும் செய்கின்றனர்.

தடுக்க வேண்டும் : பல்வேறு துறை செயலர்களை கொண்ட குழு நடத்திய ஆய்வில், இந்த தகவல்கள் உறுதியாகி உள்ளன. பள்ளி ஆசிரியர்களை, கல்வி அல்லாத மற்ற பணிகளுக்கு பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என, அக்குழு பரிந்துரைத்து உள்ளது.

கல்வியை தவிர மற்ற பணிகளில், ஆசிரியர்களின் கவனம் செல்லக் கூடாது என, அறிவுறுத்தி உள்ளது. இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், பள்ளி ஆசிரியர்களுக்கான பணி விதிமுறைகளை வகுக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது; விரைவில், இதற்கான அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கல்வி உரிமை சட்டம் : கல்வி உரிமை சட்டத்தின்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, பேரழிவு மீட்பு நடவடிக்கை, தேர்தல் பணிகள் ஆகிய மூன்று பணிகளுக்கு மட்டுமே, பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது; மற்ற பணிகளுக்கு, அவர்களை பயன்படுத்துவதை, அரசு நிறுத்த வேண்டும் என, அச்சட்டம் கூறுகிறது.

பஸ்களில் ஏற்றும் ஆசிரியர்கள்! : பிரதமர் மோடி அமைத்த குழு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் பற்றி கூறியுள்ளதாவது:அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும், ஆசிரியர்களும், கல்வி அல்லாமல், மற்ற பணிகளை செய்யும் சூழல் நிலவுகிறது. கட்டணம் வசூலிப்பது, குழந்தைகளை பள்ளி பஸ்களில் ஏற்றி அனுப்புவது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர்.

இவ்வாறு அந்த குழு கூறியுள்ளது.

Friday, January 20, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆசிரியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று அந்தந்த மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல்,  ஜாக்டோ அமைப்பில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்களும் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த ஊழியர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சென்ைன மாவட்ட தலைவர் தேவன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை மத்திய அரசு நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் அவசர சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டு நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். மாலை 4.30 மணிக்கு டிபிஐ வளாகத்தில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவகத்தின் முன்பு கூடிய தொடக்க கல்வித்துறை பணியாளர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

குரூப்–2 ஏ தேர்வு: போலி சான்றிதழ் சமர்ப்பித்தவர் 7 ஆண்டு தேர்வு எழுத தடை


தேர்வாணைய இணையதளத்தில் இருந்து எழுத்து தேர்வு முடிவுகளை தேர்வு எழுதிய சூ.பிரேம் என்பவர் தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதை திருத்தி போலி மதிப்பெண் சான்றிதழை தயாரித்து அதை தேர்வாணையத்திற்கு அனுப்பி உள்ளார். இவ்வாறு சமர்ப்பித்த காரணத்தால் அவர் 7 ஆண்டுகள் தேர்வாணையம் நடத்தும் அனைத்து விதமான போட்டித்தேர்வுகளில் இருந்தும், தெரிவுகளில்இருந்தும் கலந்துகொள்வதற்கு தேர்வாணையத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் மேல் குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாநகர போலீஸ் ஆணையரிடத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Thursday, January 19, 2017

முதல்வர் அறிக்கை


NMMS details


அடுத்த ஆண்டு வருகிறது கற்றல் திறன் மதிப்பிடல் முறை

அடுத்த கல்வியாண்டில் வருகிறது
மாணவர்கள் 'கற்றல் திறன் மதிப்பீடல் முறை"
-பிரகாஷ் ஜவடேகர்

*வகுப்பு வாரியாக பள்ளி மாணவர் கற்றல் திறன் மற்றும் வளர்ச்சியை அளவிட உதவும்

*1முதல் 8வரை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு கருத்துரு ஆசிரியர்,பெற்றோர்,மக்களிடம் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளது

*மார்ச் மாதம் இறுதி செய்யப்பட்டு அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும்

*தொகுக்கப்பட்ட கற்றல் திறன் மதிப்பிடல் முறையை கல்வி திட்டத்தில் இணைக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும்

*இந்த வரைவு அறிக்கை தொடக்க நிலை வரையில் மொழிப்பாடங்கள்,கணிதம்,சுற்றுசூழல் கல்வி,அறிவியல்,சமூகவியல் பாடங்களாக தொகுக்கப்பட்டுள்ளது.

*பல்வேறு படிநிலைகளில் மாணவர் நிலையை தனிப்பட்ட முறையிலும்,ஒட்டுமொத்த அளவிலும் ஆசிரியர்கள் மதிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது என்றார்

*G.O Ms : 14 (13/01/2017)- நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்தல் -மாவட்ட வாரியாக பள்ளிகளின் பட்டியல் - அரசாணை வெளியீடு*

Click below

https://app.box.com/s/ejiox50j14vjxqcfsti72hkja6r0xmge

Wednesday, January 18, 2017

பொதுத் தேர்வு: 104 -இல் ஆலோசனை


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கான மனநல ஆலோசனைகள் தமிழக அரசின் 104 சேவை மூலம் புதன்கிழமை முதல் வழங்கப்படுகிறது. இந்த ஆலோசனை வழங்குவதற்கான உளவியல் மருத்துவ நிபுணர்கள், உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட குழுவினர் தயாராக உள்ளனர். மாணவர்கள் 24 மணி நேரமும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதில் தேர்வுக்குத் தயாராகுதல், தேர்வு காலத்தின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், தேர்வு முடிவுகளை எதிர்கொள்வது என்று 3 பிரிவுகளாக ஆலோசனை வழங்கப்படும். மேலும் உணவு முறை, மனஅழுத்தத்தைப் போக்குவது, நினைவாற்றலைப் பெருக்குவது, தேர்வு பயத்தைப் போக்குவது, தேர்வு முடிவுகளை எதிர்கொள்வது, தவறான முடிவுகளைத் தவிர்த்தல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை வழங்கப்படும் என்று தமிழக அரசின் 104 மருத்துவ சேவையை அளித்து வரும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டுகளில் தேர்வு சமயத்தில் ஒரே நாளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த சேவையின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நுழைவுத்தேர்வுகளுக்கு அரசு பள்ளியில் பயிற்சி


அரசு பள்ளிகளில், 8ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் துவங்கியுள்ளன. நுழைவுத்தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளில், தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. இதை சரி செய்யும் வகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் படி, 1,440 பள்ளிகளில், சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. இதற்காக, டில்லியைச் சேர்ந்த, பிரபல நிறுவனத்தின் புத்தகங்கள், தமிழக அரசு பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு உள்ளன. இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு, இன்ஜி., படிப்புக்கான, ஜே.இ.இ., தேர்வு, கல்வி உதவித்தொகை பெற உதவும், தேசிய திறனாய்வு தேர்வு மற்றும் தேசிய ஊரக திறனாய்வு தேர்வுகளுக்கு, சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. 8ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், இதில் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.