இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, December 05, 2016

பொது விடுமுறை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழகத்தில் இன்று (டிசம்பர் 6) பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்த ஜெயலலிதாவின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரது இறப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் 7 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களுக்கு இன்று (டிசம்பர் 6) பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எட்டாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கான செய்திக்குறிப்பு

Click below

https://app.box.com/s/nceyhuippbg4acphpblwzq414y7qdkuc

Sunday, December 04, 2016

ANNAMALAI UNIVETSITY B.ED NOTIFICATION


posted from Bloggeroid

தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையில்லை... மாஃபா பாண்டியராஜன்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, தமிழகத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை என்று தகவல்கள் பரவியதை அடுத்து கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று திங்கட்கிழமை வழக்கம் போல் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்றும் அறிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு அருகில் தின்பண்ட கடைகளுக்கு தடை


பள்ளிகளுக்கு அருகில் சுகாதாரமற்ற தின்பண்டங்களை விற்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குனர், கண்ணப்பன், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்: பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு, முற்றிலும் துாய்மையாக சமைக்கப்பட வேண்டும்.

அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள், துாய்மையான நீரில் சுத்தம் செய்யப்பட வேண்டும். சமையல் கூடம், உணவு அருந்தும் இடத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும். மதிய உணவை, துாய்மையான முறையில் வினியோகம் செய்ய வேண்டும். மாணவர்கள் உணவு அருந்தும் தட்டு, டம்ளர் போன்றவற்றை, கழுவி சுத்தமாக பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். உணவு சமைத்தல் மற்றும் பரிமாறும் முறைகளை, தலைமை ஆசிரியர், தினமும் கண்காணிப்பது அவசியம்.

விழா நாட்களில், தன்னார்வ நிறுவனங்கள் வெளியிலிருந்து கொண்டு வரும், உணவின் தரத்தை சோதித்த பின்பே, மாணவர்களுக்கு வழங்க வேண்டும். பள்ளி வளாகத்திற்கு அருகில் விற்கப்படும், சுகாதாரம் இல்லாத தின்பண்டங்களை உண்ணக் கூடாது என, மாணவர்களுக்கு, தினமும் அறிவுறுத்த வேண்டும். பள்ளிகளின் முன், சுகாதாரமற்ற உணவு விற்கும் கடைகளை அனுமதிக்க கூடாது; முற்றிலும் தடை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

Saturday, December 03, 2016

அரசு பள்ளிகளில் 'அட்மிஷன்' அபாரம்! எப்படி நடந்தது இந்த 'மாஜிக்?'


கோவை மாவட்ட அரசு துவக்கப்பள்ளிகளில் உள்ள ஆங்கில வழிப்பிரிவில், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி அடைய துவங்கியதால், சுதாரித்துக் கொண்டது அரசு. ஆங்கில வழிக்கல்வித் திட்டத்தை துவங்கி, அரசுப்பள்ளிகள் மீண்டும் எழுந்து நிற்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.

இதன் விளைவால், இன்று கோவை மாவட்ட அரசு துவக்கப்பள்ளிகளில் உள்ள ஆங்கில வழிப்பிரிவில், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த, 2012 - 2013ல், ஆங்கில வழிப்பிரிவு துவங்கப்பட்டபோது, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை வெறும், 107 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை, 2016 -2017 ல், 29 ஆயிரத்து 837 ஆக உயர்ந்துள்ளது. 2013 -2014 ல், 248 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை துவங்கியபோது, முதல் வகுப்பில், 4,455 மாணவர்கள், இரண்டாம் வகுப்பில் 101 மாணவர்கள், ஆறாம் வகுப்பில், 298 பேர் என மொத்தம், 4,864 பேர் சேர்ந்தனர். அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளில், 21 ஆயிரத்து 132 ஆக உயர்ந்த எண்ணிக்கை, 2016 -2017 ம் ஆண்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 29 ஆயிரத்து 837 மாணவர்களாக உயர்ந்துள்ளது.

'டி.சி.,' கட்டாயமில்லை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் காந்திமதி கூறுகையில், ''மாவட்டத்தில், 611 பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது.தனியார் பள்ளிகளில் இருந்து, கல்வியாண்டின் நடுவே மாணவர்கள் வந்தாலும், மறுக்காமல் சேர்த்துக் கொள்கிறோம்;'டி.சி.,' கட்டாய மில்லை,'' என்றார். ஆசிரியர்கள் கூறுகையில், 'இன்று அனைத்து ஆரம்பப்பள்ளிகளிலும், 'டெட்' உட்பட, அனைத்து தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்ற, ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.எங்கள் அர்ப்பணிப்பு மிக்க பயிற்சியுடன், எஸ்.எஸ்.ஏ., அளித்துள்ள செயல்வழி கல்வி அட்டைகள், பயிற்சிகள், கல்வி உபகரணங்களும் சேர்க்கை உயர காரணம். அரசுப்பள்ளிகளில்வழங்கப்படும் விலையில்லா பொருட்களும், தனியார்பள்ளிகளின், கல்விக் கட்டணமும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை'என்றனர்.

'நீட்' தேர்வு: அடுத்த வாரம் விண்ணப்ப பதிவு


மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வுக்கு, அடுத்த வாரம் முதல் விண்ணப்பப் பதிவு துவங்க உள்ளது. மத்திய, மாநில அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்களில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அத்துடன், 'மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரி களிலும், மாணவர்களை சேர்க்க, நீட் தேர்வு தேர்ச்சி கட்டாயம்' என, உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இதற்கு, தமிழகம் உட்பட பல மாநிலங்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களிலுள்ள, அரசு கல்லுாரிகளில், மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்களில், கடந்த ஆண்டு சேர்க்கைக்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதே நேரத்தில், தனியார் கல்லுாரி இடங்களை, 'நீட்' தேர்ச்சி பெற்றவர்களை கொண்டே நிரப்ப உத்தரவிடப்பட்டது.

இந்த ஆண்டு, அரசு மற்றும் தனியார் கல்லுாரி களுக்கும், 'நீட்' தேர்வு கட்டாயம் என்ற நிலையே உள்ளது. கடைசி நேரத்தில், மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 'நீட்' தேர்வில் விலக்கு அளிக்கப்படலாம். இந்நிலையில், வரும் கல்வி ஆண்டுக்கான, 'நீட்' தேர்வுக்கு, அடுத்த வாரம் முதல், ஆன்லைன் விண்ணப்பப் பதிவு துவங்கும் என, தெரிகிறது. ஜன., முதல் வாரம் வரை, விண்ணப்பத்தை பதிவு செய்ய, அவகாசம் வழங்கப்படலாம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., ஒரு வாரத்திற்குள் வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, December 02, 2016

போலி சான்றிதழ்களை தடுக்க புகைப்படம், ரகசிய பார்கோடுடன் சாதி சான்றிதழ் அறிமுகம்


தமிழகம் முழுவதும் இ சேவை மையங்கள் மூலம் வழங்கப்படும் சாதி சான்றிதழ்களில் விண்ணப்பதாரரின் பெயர், மாவட்டம், தாலுகா, கிராமம், எந்த வகுப்பை சேர்ந்தவர், தந்தை பெயர் மற்றும் முகவரியுடன் அரசின் முத்திரை பதித்து வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் சான்றிதழ்களில் போலியான சான்றிதழ்களும் வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

குறிப்பாக சான்றிதழ் அவசரத்துக்காக தாலுகா அலுவலகங்களில் நடமாடும் இடைத்தரகர்கள் கையில் பணத்தை கொடுத்து ஏமாந்துவிடுகின்றனர். இடைத்தரகர்கள் தாங்கள் போலியாக தயாரித்து வைத்துள்ள அரசின் முத்திரையுடன், வருவாய்த்துறை அதிகாரிகளின் கையெழுத்தையும் தாங்களே போட்டு சான்றிதழ்களை வழங்குகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இனி, ரகசிய பார்கோடு எண்ணுடன் சம்பந்தப்பட்டவரின் புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ்கள் இ சேவை மையங்களில் வழங்கப்படும்.

தமிழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறை அடுத்த வாரம் அல்லது ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பான சுற்றறிக்கை தமிழகத்தில் எல்லா இ சேவை மையங்களுக்கும் நேற்று வந்துள்ளது. அதில், ‘சாதி சான்றிதழ்களை வழங்குவதில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து வருபவர்களிடம் ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்றிதழ், மாணவர்களாக இருந்தால் பள்ளியின் மாற்றுச்சான்றிதழ் நகல்களுடன் கட்டாயமாக உரியவர்களின் புகைப்படம் கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சத்துணவு தூய்மையாக சமைக்கப்பட வேண்டும்; பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு


மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு தூய்மையாக சமைக்கப்பட வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஓரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தூய்மையாக சமைக்கவேண்டும்

* மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு முற்றிலும் தூய்மையாக சமைக்கப்பட வேண்டும்.

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் சமைக்கும் முன்னதாக தூய்மையான நீரில் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

* சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் ஒவ்வொரு நாளும் சுத்தப்படுத்துதல்.

* உணவு தயார் செய்யும் சமையல் கூடம் சுத்தமாக பராமரிக்கப்படுதல் வேண்டும்.

* சமையலர், சமையல் உதவியாளர்கள் தூய்மையான முறையில் சமையல் செய்தல்.

* மாணவர்கள் உணவு அருந்தும் இடம் சுத்தமாக வைப்பதுடன் உணவு அருந்தும்போது பறவைகள், நாய்கள் அருகில் வராமல் இருக்க ஏற்பாடு செய்தல் வேண்டும்.

கெடாத முட்டை

* சத்துணவு திட்டத்தின் கீழ் முட்டை வழங்கப்படும் போது, முட்டை கெடாமல் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

* மதியம் உணவு இடைவேளை விடப்பட்டவுடன் மாணவ, மாணவியர்களை வரிசைப்படுத்தி உணவு வழங்க வேண்டும்.

* கொதி நிலையில் உள்ள சாம்பார், உணவு வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் அருகில் மாணவர்கள் சென்று விடாமல் இருக்க வேண்டும்.

* பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில் உதவி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் சுழற்சி அடிப்படையில் நாள்தோறும் இப்பணியினை கண்காணித்தல்.

கை கழுவ வேண்டும்

* மாணவர்கள் உணவு சாப்பிடும் முன்பாக தங்களின் கைகள், சாப்பாட்டு தட்டு, குடிநீர் குடிக்கும் டம்ளர் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்துதல்.

* பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்திற்கு அருகில் உள்ள கடைகளில் சுகாதாரமற்ற திண்பண்டங்களை வாங்கி உண்ணக்கூடாது.

தரமான உணவா?

* பள்ளி ஆண்டு விழா, சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா போன்ற நாட்களில் தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு போன்ற உணவு பொருட்கள் அளிக்கும் நிகழ்வுகளில் பள்ளிக்கு வெளியில் சமைத்து எடுத்து வரப்படும் உணவுப் பொருட்களின் தரத்தினை நன்கு சோதித்தப் பின்னரே பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

மேற்குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தங்கள் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் பின்பற்ற தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தக்கல் முறையில் விண்ணப்பம் வரவேற்பு



எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் தத்கல் முறையில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2017-ஆம் ஆண்டு ஜனவரியில் நடத்தப்பட உள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 25-ஆம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டது.
கடைசித் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு, தத்கல் முறையில் விண்ணப்பிக்க இப்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வருகிற 5,6,7ஆகிய தேதிகளில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று, ஆன்-லைன் மூலம் பதிவு செய்துகொள்ளலாம்.
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

posted from Bloggeroid

Minority scholarship detail



posted from Bloggeroid

HRA slab


posted from Bloggeroid

SSA மாநில திட்ட இயக்குநர் அவர்கள் அதிகாரப்பூர்வமாக SLAS தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவித்துள்ளார். அதற்காரபூர்வ ஆணை


posted from Bloggeroid

தொடக்கக் கல்வி - விருது - சிறந்த பொது நிர்வாகத்திற்கான "பிரதமர் விருது" - 2015-16ஆம் ஆண்டுக்கான தகுதியுடையோர் விண்ணப்பங்கள் அனுப்ப கோரி இயக்குனர் உத்தரவு


posted from Bloggeroid

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற எண்ணிக்கை விபரத்தை பதிவு செய்தல் சார்பு


posted from Bloggeroid

Thursday, December 01, 2016

NMMS exam application and notification

Click below

https://app.box.com/s/0ym57g418lpgkw3d0uo1ahwuvqs7wmat

ஆதார் எண் பதிவு டிச., 20 வரை கெடு


மாணவர்களின் ஆதார் எண்ணை, டிச., 20க்குள் பதிவு செய்ய, பள்ளிகளுக்கு, 'கெடு' விதிக்கப்பட்டு உள்ளது. அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கும், ஆதார் எண் பதிவு செய்து, அதை பள்ளி ஆவணங்களில் குறித்து வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள், இரு ஆண்டுகளாக நடந்து வருகின்றன.

பல காரணங்களால், பல லட்சம் மாணவர்களுக்கு, இன்னும் ஆதார் எண் கிடைக்கவில்லை. எனவே, ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்ட, மின்னணு கல்வி மேலாண்மை திட்டமான, எமிஸ் திட்டத்திலும், மாணவர்களின் விபரங்களை, முழுமையாக பதிவேற்ற முடிவதில்லை. இந்நிலையில், அனைத்து பள்ளி மாணவர்களும் ஆதார் எண் பெறும் வகையில், பள்ளிகளில், தமிழ்நாடு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில், சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. யாரும் விடுபடாமல், டிச., 20க்குள், ஆதார் எண் பதிவு செய்ய, பள்ளிகளுக்கு, 'கெடு' விதிக்கப்பட்டு உள்ளது.

கட்டாய கல்வி உரிமை--- சட்டம் : மாணவர்களுக்கு போட்டிகள்


அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பெண் கல்வி, கட்டாய கல்வி உரிமை சட்டம், சுகாதாரம் குறித்து எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை போட்டிகளும், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகளும் நடத்தப்படுகிறது.

போட்டிகள் பள்ளி, வட்டாரம், மாவட்ட அளவில் என, மூன்று கட்டமாக நடக்கிறது. பள்ளி அளவில் முதல் மூன்று இடம் பேறுவோருக்கு சான்றிதழ் மட்டும் வழங்கப்படும். வட்டாரம், மாவட்ட அளவில் போட்டிகளில் வெல்பர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படவுள்ளது. டிச., இறுதிக்குள் போட்டிகளை நடத்தி முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகளில் 'டெக்னோ கிளப்'


மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், அறிவியல் அறிவை வளர்க்க பள்ளிகளில் 'டெக்னோ கிளப்' துவக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6,7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், அறிவியல் அறிவை வளர்க்கும் வகையில் தொழில் நுட்ப கழகம் எனும் 'டெக்னோ கிளப்' துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அறிவியல், கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்களில் ஆர்வம் உள்ள மாணவர்கள் ஐந்து பேர் உறுப்பினர்களாகவும், எட்டாம் வகுப்பு மாணவர் கிளப் தலைவராகவும் நியமிக்கப்படுவார். கிளப்பை வழி நடத்துபவர்களாக கம்ப்யூட்டர் ஆசிரியர் அல்லது அறிவியல் ஆசிரியர் நியமிக்கப்படுவர்.

போட்டி : சிறப்பாக செயல்படும் 'டெக்னோ கிளப்'களுக்கு இடையே தேர்வு போட்டி நடத்தப்படும். போட்டிகளில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் வட்டாரம், மாவட்டம், மாநில போட்டிகளில் பங்கேற்பர்.

1,260 கலையாசிரியர் பணியிடம் விரைவில் நிரப்ப அரசு திட்டம்


''ஆசிரியர் தேர்வு வாரியத்தால், 1,260 கலையாசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும்,'' என, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், கண்ணப்பன் தெரிவித்தார்.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், உடற்கல்வி, ஓவியம், தையல், இசை உள்ளிட்ட, கலைப் பாடப் பிரிவுகளுக்கு, 1,260 பணியிடங்கள் காலியாக உள்ளன; நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் உள்ளன. பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், ''அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, கலை ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப, ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

''அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 1,260 கலையாசிரியர் பணியிடங்களை நிரப்ப, இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும். இத்தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும்,'' என்றார்.

Social science worksheet fourth week

Click below

https://app.box.com/s/33stj4yuvuqoeqfnzgveyhxjd7vkm8kc

Science worksheet fourth week

Click below

https://app.box.com/s/h31y2j6p0h6sw8bdkbvetuytjs4jdoei

Maths worksheet fourth week

Click below

https://app.box.com/s/werovv4c5eo04a5p6fflw8imbrkzd923

English fourth week worksheet

Click below

https://app.box.com/s/g6n2rrq25mletzivnpfllgptu22ij2vg

Tamil forth week worksheet

Click below

https://www.mediafire.com/download/888qi2rdvru0az9