இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, October 14, 2016

பணியிட மாறுதல் கிடைத்தும் பயனில்லை: விடுவிப்பு உத்தரவு கிடைக்காமல் காத்திருக்கும் 5மாவட்ட ஆசிரியர்கள்


தமிழக அரசுப் தொடக்கப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பணியிட மாறுதல் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் ஆகஸ்ட் மாதம் நடந்தது. தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 21ம் தேதி கவுன்சலிங் நடந்தது. ஆன்லைன் மூலம் நடந்த இந்த கவுன்சலிங்கில் பங்கேற்று விரும்பிய  இடங்களுக்கு மாறுதல் கேட்ட ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 22ம் தேதியே பணியிட மாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன.

விரும்பிய இடங்களுக்கே பணியிட மாறுதல் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த ஆசிரியர்கள் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சேர்ந்தனர். ஆனால் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் இன்னும் விடுவிப்பு உத்தரவுகள் கிடைக்கவில்லை. அதனால் அந்த மாவட்ட ஆசிரியர்கள் தங்களுக்குரிய பணியிடங்களில் சேரமுடியாமல் உள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர்களை சந்தித்து முறையிட்டனர். தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வந்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் விடுவிக்க முடியாது. தேர்தல் முடிந்த பிறகுதான் விடுவிப்பு உத்தரவு  வழங்கப்படும் என்று தெரிவித்துவிட்டனர். ஆனால், உள்ளாட்சி அமைப்பு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளும் ரத்தாகிவிட்டது.

எனவே, விடுவிப்பு உத்தரவு வழங்க வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகளிடம் கேட்டனர். உதவி தொடக்க கல்வி அதிகாரியோ, மாவட்ட கல்வி அதிகாரியை பாருங்கள் என்று கூறுகிறார். மாவட்ட கல்வி அதிகாரியை சந்தித்தால், இயக்குநரை சந்தியுங்கள் என்று ஆசிரியர்களிடம் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.  தொடக்க கல்வி இயக்குநரை கடந்த வாரம் ஆசிரியர்கள் சந்தித்து முறையிட்டனர். அரசிடம் இருந்து உத்தரவு வரவில்லை. வந்த பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். இதனால் 5 மாவட்டங்களை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்காணிக்க...'மொபைல் ஆப்!".தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்த முடிவு


அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்காணிக்க, 'மொபைல் போன் ஆப்' கொண்டு வரப்பட உள்ளது.

ஒவ்வொரு தலைமை ஆசிரியரும், தினமும், ஏதாவது ஒரு வகுப்பில், மாணவர்களுடன் அமர்ந்து, ஆசிரியர் பாடம் நடத்துவதை கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் செயல்பாடு, ஆர்வம் ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும். பின், அது பற்றிய குறிப்புகளை, அதற்கான பதிவேட்டில் எழுத வேண்டும். ஆனால், பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள், இதை செய்வதில்லை. பதிவேட்டில் மட்டும், 'ஆசிரியர் சிறப்பாக பாடம் நடத்துகிறார்' என, எழுதி விடுகின்றனர்.

அதனால், ஆசிரியர்களின் திறன், அவர்களின் நிறை, குறைகள் மற்றும் மாணவர்களின்
செயல்பாடுகள் தெரிவதில்லை. இந்நிலையை போக்க, தனியார் பல்கலை உதவியுடன், மொபைல் போன் ஆப் எனப்படும், செயலி உருவாக்கப்படுகிறது. இந்த செயலி மூலம், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், அந்தந்த மாவட்ட மற்றும் மாநில தலைமை அதிகாரிகளுடன் இணைக்கப்படுகின்றனர்.

தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் ஆசிரியர்கள் வகுப்பு எடுப்பதை கண்காணிக்கும் போது, மொபைல் ஆப் வசதியை, 'ஆன்' செய்து, புகைப்படம் எடுக்கலாம்; ஆசிரியர் பாடம்
நடத்துவதை, 'ஆடியோ' பதிவு செய்யலாம்; 'வீடியோ'வும் எடுக்கலாம். அதை அப்படியே,
அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கலாம். விரைவில், இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

'ஆப்' எப்படி செயல்படும்?
* ஆசிரியர் பாடம் நடத்தும் போது, அந்த வகுப்புக்கு செல்லும் தலைமை ஆசிரியர், பாடம்
நடத்தப்படுவதை, மொபைல் ஆப்பில் உள்ள கேமரா மூலம் படம் எடுக்க வேண்டும்
* பின், அதில் கேட்கப்படும், 10 வகையான தகவல்களை, தலைமை ஆசிரியர் பதிவு செய்ய வேண்டும்
* ஆசிரியர் கூறும் அறிவுரை, பாடம் நடத்தும் விதம், என்ன பாடம், மாணவர்களின் கேள்வித் திறன், ஆசிரியர் அளிக்கும் பதில் என, ஒவ்வொன்றையும், தனி பதிவுகளாக நிரப்ப வேண்டும்
* கடைசியில், ஆசிரியர் எப்படி பாடம் நடத்தினார்,
எப்படி நடத்தியிருக்க வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்து, அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்
* உயரதிகாரிகள், புகைப்படம் மற்றும் பதிவுகள் மூலம், ஆசிரியர்களின் திறனை நேரலையாக அறியலாம். தலைமை ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில்
ஈடுபடுகின்றனரா என்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்த தகவல்கள் அனைத்தும், சர்வரில் ஏற்றப்பட்டு, தேவைப்படும் போது, நேரம், தேதியுடன் ஆய்வு செய்ய முடியும்.

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்காக புதிய 'மொபைல் ஆப்' அறிமுகம்


ஓட்டுச்சாவடி அலுவலர்களின் பணிகளை எளிமைப்படுத்துவதற்காக, சென்னை மாவட்டத்தில், சோதனை அடிப்படையில், புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்காக, செப்., 1 முதல், 30 வரை, வாக்காளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன; இரண்டு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டதால், ஒரு மாதத்தில், 21 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றை சரிபார்க்கும் பணி, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் தரப்பட்டு உள்ளது. அவர்கள், உரிய அலுவலகங்களுக்கு சென்று, விண்ணப்பங்களைப் பெற வேண்டும். பின், ஓட்டுச்சாவடி பகுதி களில் உள்ள, விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்குச் சென்று, கள ஆய்வு செய்து தகவல் அனுப்ப வேண்டும்.

இதற்காக மாநகராட்சி மற்றும் தாலுகா அலுவலகங்களுக்கு, பல முறை அலைய நேரிடும். இதை தவிர்க்க, தேர்தல் கமிஷன், 'புதிய ஆப்' ஒன்றை உருவாக்கி உள்ளது. இதன் மூலம், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, அவர்கள் ஆய்வு செய்ய வேண்டிய விண்ணப்பங்கள் அனுப்பப்படும். அவர்கள் கள ஆய்வு செய்து, தகவல் உண்மையா; தவறானதா என, மொபைல் ஆப் மூலம் தெரிவிக்கலாம்.வாக்காளர் விண்ணப்ப படிவத்தில், திருத்தம் செய்ய விரும்பினால், அதையும் ஓட்டுச்சாவடி அலுவலரின், மொபைல் ஆப் வழியே செய்யலாம்.

சோதனை ரீதியாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இது செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, 2,750 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, இந்த வசதி ஏற் படுத்தி தரப்பட்டு, பயிற்சியும் அளிக்கப்பட்டு உள்ளது. இணைய இணைப்பு கிடைக்காத பகுதிகளில், மொபைல் போனில் பதிவுசெய்து, இணைப்பு கிடைக்கும் பகுதிக்கு வந்ததும் அனுப்பலாம். இத்திட்டம் படிப்படியாக, தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர்

CCE 2nd TERM WEEKLY SYLLABUS - I std to VIII STD

Click below

https://docs.google.com/file/d/0ByAIJo2ODgwFRXVtbzZqaGJjZlk/edit

Wednesday, October 12, 2016

மாணவர்கள் வருகைப்பதிவு,வீட்டுப்பாடத்தை SMS மூலம் தெரிவிக்கும் வசதி. 44 அரசு மாதிரி பள்ளிகளில் விரைவில் அறிமுகம்

'நெட்' தேர்வு பதிவு அக்., 17ல் துவக்கம்


தேசிய தகுதித்தேர்வான, 'நெட்' தேர்வுக்கு, அக்., 17ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்குகிறது. பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., விதிகளின் படி, கல்லுாரி உதவி பேராசிரியராகவும், இளநிலை ஆராய்ச்சி மாணவராகவும் சேர, நெட் தேர்ச்சிபெற வேண்டும். இந்த தேர்வு, நாடு முழுவதும், 90 நகரங்களில், 2017 ஜன., 22ல் நடக்கிறது. இதில் பங்கேற்க, சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்ய வேண்டும். அதற்கான ஆன்லைன் பதிவு, வரும், 17ல் துவங்குகிறது; நவ., 16ல் முடிகிறது. இளநிலை ஆராய்ச்சி மாணவராக சேர, 2017 ஜன., 1ல், 28 வயதை தாண்டியிருக்கக் கூடாது. உதவி பேராசிரியர் பணி தேர்வில் பங்கேற்க, வயது வரம்பு இல்லை என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

விரைவில் புது கல்வி கொள்கை; அமைச்சர் ஆலோசனை


மேம்படுத்தப்பட்ட, புதிய கல்விக் கொள்கையை அறிவிக்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இதற்காக, இரண்டு உயர்மட்டக் குழுக்களுடன், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளார்.



எதிர்க்கட்சிகளின் கண்டனம்:

கடந்த, 2014ல், பா.ஜ., தலைமையிலான கூட்டணி, மத்தியில் ஆட்சி அமைத்தது முதல், கல்வி தொடர்பான பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. பள்ளிப் பாடங்களில் சமஸ்கிருதம் சேர்ப்பு உள்ளிட்ட, மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், கல்வி, காவி மயமாக்கப்படுவதாக குற்றஞ்சாட்டின. இதற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மறுப்பு தெரிவித்து வருகிறது.



நிபுணர் குழு

இதற்கிடையே, 30 ஆண்டுகளுக்கு மேலாக, எவ்வித மாற்றம் இன்றி நீடித்து வரும் கல்விக் கொள்கையில், தற்காலத்துக்கு ஏற்ப அதிரடி மாற்றங்களை புகுத்த, மனிதவள மேம்பாட்டுத் துறை முடிவு செய்தது. புதிய கல்விக் கொள்கையை தயாரிக்கும் பணி, டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையிலான, நிபுணர் குழுவிடம், மே மாதம் ஒப்படைக்கப்பட்டது.



உயர்மட்டக் கூட்டம்

புதிய கல்விக் கொள்கையில் இடம்பெறக் கூடிய விஷயங்களின் சாராம்சம், 40 பக்கத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக, பார்லி மென்ட் உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டுப் பெற, மனித வள மேம்பாட்டுத் துறை திட்டமிட்டு உள்ளது. இதற்காக நடக்கவுள்ள உயர்மட்டக் கூட்டத்தில், கல்விக் கொள்கை, தொடர்புடைய பிரச்னைகள், இதுவரை பெறப்பட்ட ஆலோசனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.



விவாதம்:

சி.ஏ.பி.இ., எனப்படும், மத்திய கல்வி ஆலோசனை வாரிய உயரதிகாரிகளுடன், மற்றொரு ஆலோசனைக் கூட்டம், 25ல் நடத்தப்பட உள்ளது. பள்ளி மாணவர்களை, எட்டாம் வகுப்பு வரை, 'பெயில்' ஆக்காமல், தேர்ச்சி பெறச் செய்யும் திட்டம் குறித்து, இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

அனைத்து மாணவர்களுக்கும் ஆதார்:கல்வி இயக்குநர் உத்தரவு

அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் : கல்வி இயக்குநர் உத்தரவு

தொடக்க கல்வி இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: ஆதார் அட்டை பெற இதுவரை பதிவு செய்யாத மாணவர்களை அந்தந்த பள்ளிகளுக்கு அருகில் நடந்துவரும் சிறப்பு முகாம்களுக்கு அழைத்துச் சென்று ஆதார் அட்டை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் ஆதார் அட்டை பெற்றுவிட்டார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்தப் பணியின் முன்னேற்ற அறிக்கையினை, தலைமை ஆசிரியர்களிடம் இருந்து பெற்று, தொடக்க கல்வி அதிகாரிகள் தொகுத்து வைக்க வேண்டும். இந்தப் பணி மிக முக்கியத்துவம் வாய்ந்ததால், இதில் தனி கவனம் செலுத்தி, மாவட்டங்களில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் அட்டை பெற்று 100 சதவீதம் இலக்கை அடைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, October 11, 2016

காலாண்டு தேர்ச்சி பள்ளி வாரியாக ஆய்வு


காலாண்டு தேர்வில், அதிக தேர்ச்சி பெற்ற பள்ளிகள் குறித்து, ஆய்வு நடத்தப்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும், காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மற்றும் மதிப்பெண்கள், மாணவர்களுக்கு காட்டப்படுகின்றன.

தேர்வெழுதிய முறை குறித்தும், தவறுகள் குறித்தும், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பட்டியலை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது; அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள், பள்ளிகளின் காலாண்டு தேர்வு தேர்ச்சி பட்டியலை பெற்று வருகின்றனர்.

பாட வாரியாக தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பாட ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில், பின்தங்கிய பள்ளி மற்றும் பாட ஆசிரியர்களுக்கு, எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட உள்ளது. 'வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்ய வேண்டும். அதிக மதிப்பெண் பெறும் வகையில், சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.

Monday, October 10, 2016

பணிக்கு செல்லாமல் 'ஓபி' அடிக்கும் சங்க நிர்வாகிகள் : அதிரடி ஆய்வு நடத்த அதிகாரிகள் திட்டம்


அரசு பள்ளிகளில், பணிக்கு செல்லாமல், 'ஓபி' அடிக்கும் சங்க நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்க, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அவர்கள் பணியாற்றும் பள்ளிகளில், திடீர் ஆய்வும் நடத்தப்பட உள்ளது.

அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஐந்து லட்சம் ஆசிரியர்கள் சார்பில், 30க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்கள் உள்ளன. அதிக செல்வாக்கு : வருவாய் துறை ஊழியர் சங்கங்களைப் போல, ஆசிரியர் சங்கங்களும் வலுவாக உள்ளன. இந்த சங்கங்கள் நினைத்தால், பள்ளிகளை இயக்கவும், மூடவும் முடியும் என்ற நிலை உள்ளது. ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வில் தலையிடுவது; சாதகமில்லாத அதிகாரிகளுக்கு எதிராக புகார் அனுப்புவது என, ஒவ்வொரு சங்கமும், ஒவ்வொரு விதமாக செயல்படுகின்றன. அதனால், சங்க நிர்வாகிகளுக்கு, கல்வித் துறையில் அதிக செல்வாக்கு உள்ளது.

இடமாறுதல் கவுன்சிலிங்கில், அரசியல் செல்வாக்கு உள்ளோருக்கு சமமாக, சில ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளும், ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்படுகிறது. இதனால், சங்க நிர்வாகிகள் சிலர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளுக்கு, பணிக்கு செல்லாமல், சொந்த பணிகளையும், சங்க பணிகளையும் பார்ப்பதாக கூறப்படுகிறது.

புகார் : சில ஆசிரியர்கள், தங்களுக்கு பதிலாக, வேறு சிலரை, 'உள் சம்பளத்துக்கு' அமர்த்தி, வருகை பதிவேட்டில் மொத்தமாக கையெழுத்திட்டு, சம்பளம் பெறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து, தொடக்க மற்றும் பள்ளிக்கல்வி அதிகாரிகள் தலைமையில், குழு அமைத்து ஆய்வு நடத்த, உயரதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சங்க நிர்வாகிகள் பணியாற்றும் பள்ளிகளின் பட்டியலும் தயார் செய்யப்படுகிறது; விரைவில், அதிரடி ஆய்வு நடக்கும் என, தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து, சில ஆசிரியர்களிடம் விசாரித்த போது, 'பெரும்பாலான சங்க நிர்வாகிகள், பள்ளி விடுமுறை நாட்களிலேயே, சங்க பணிகளை பார்க்கின்றனர்; அதிகாரிகள் செயல்பாட்டை, முதலில் ஆய்வு செய்ய வேண்டும்' என்றனர்.

Sunday, October 09, 2016

முன் பணம் கிடைக்குமா?ஆசிரியர்கள் ஏக்கம்


தீபாவளி பண்டிகைக்கான முன் பணம் அறிவிக்கப்படாததால், ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர்.அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தீபாவளிக்கு போனஸ் கிடையாது. மாறாக, தீபாவளி பண்டிகையை கொண்டாட, வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

பண்டிகை முன் பணம் என்றழைக்கப்படும் இந்த தொகையின் மூலம் ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு, புதிய ஆடைகள் எடுத்து, பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இந்த தொகையானது, மாதந்தோறும், 500 ரூபாயாக, சம்பளத்தில் பிடிக்கப்படும். பெரும்பாலான ஆசிரியர்கள், வீட்டுக்கடன் பெற்றுள்ளதால், சம்பளத்தில் பெரும்பகுதி கடனுக்கு சென்று விடுகிறது. எனவே, பலர் இந்த பண்டிகை முன் பணத்தையே நம்பி உள்ளனர்.

இந்த ஆண்டு, பண்டிகை முன்பணம் குறித்து அரசு தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. ஆசிரியர்கள், பண்டிகை முன்பணம் கேட்டு, தலைமை ஆசிரியர்களிடம் விண்ணப்பித்தால், அரசு அறிவிப்பு வரவில்லை என, விண்ணப்பத்தை வாங்க மறுக்கின்றனர். அதனால், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடுவதில், ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது

Saturday, October 08, 2016

'ஆல் பாஸ்' திட்டம் ரத்து? : அக்., 25ல் ஆலோசனை


எட்டாம் வகுப்பு வரையிலான, 'ஆல் பாஸ்' திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து, வரும், 25ல், டில்லியில், மாநில கல்வித்துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட உள்ளது.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு, கட்டாயமாக இலவச கல்வி அளிக்க வேண்டும். இதன்படி, எட்டாம் வகுப்பு வரை, மாணவர்கள் யாரும், பெயில் ஆக்காமல், பாஸ் செய்யப்படுகின்றனர். இத்திட்டத்தால், மாணவர்களின் கல்வித்தரம் குறைந்துள்ளதாக, மத்திய அரசு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதனால், 'ஆல் பாஸ் திட்டத்தை ரத்து செய்வது அல்லது ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் என்று, மாற்றம் செய்வது, 10ம் வகுப்பு வரை, கட்டாய கல்வி வழங்குவது' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, அனைத்து மாநில பள்ளிக் கல்வி அதிகாரிகள் அடங்கிய, மத்திய ஆய்வு கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கமிட்டி, ஆறு மாதங்களுக்கு முன், மாநிலங்களின் ஆலோசனைகளை பெற்றது. மீண்டும், அக்., 25ல், டில்லியில், அனைத்து மாநில கல்வி அதிகாரிகளிடம் கருத்து கேட்கும் கூட்டத்தை நடத்துகிறது

அஞ்சலகப் பணி

பட்டதாரிகளுக்கு இந்திய அஞ்சல் துறை வங்கியில் 650 உதவி மேலாளர் பணி

இந்திய அஞ்சல் பண அளிப்பு வங்கியில் (IPPB) நிரப்பப்பட உள்ள 650 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Assistant Manager (JMGSI-I) - 650

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.09.2016 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம்: சென்னை, கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.700, மற்ற பிரிவினருக்கு ரூ.150.

விண்ணப்பிக்கும் முறை: http://www.indiapost.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.10.2016

எழுத்துத் தேர்வு: டிசம்பர் 2016, ஜனவரி 2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://govtjobsdisk.com/wp-content/uploads/2016/10/IPPB-650-Assistant-Manager-Officer-Scale-Notification-PDF.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

திருப்பூர் மாவட்ட உயர்நிலை மேல் நிலை பள்ளி ஆசிரியர்கள் செல்போன் கொண்டுவர தடை செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு ...

NOVEMBER month CRC

Friday, October 07, 2016

இனி ஆன்லைனில் ஆர்.டி.ஐ

இனி ஆன்லைனில் ஆர்.டி.ஐ

ஆர்.டி.ஐ ஆர்வலர்களுக்கு அற்புதமான செய்தி. இனி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மக்கள் கேட்கும் கேள்விகள், அதற்கு அளிக்கப்பட்ட பதில்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளத்து. தகவல் பெற்றவரின் தனிப்பட்ட தகவல்கள் வெளியாகாது. அனைத்து மத்திய அரசுத் துறைகளும் இதை கடைபிடிக்க வேண்டுமாம்.

பி.எட்., படிப்பில் மீண்டும் மாற்றம் : கருத்து கேட்கிறது கல்வி கவுன்சில்


ஆசிரியர் பணிக்கான, பி.எட்., படிப்பில், இரு ஆண்டுகளுக்கு முன் தான், மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், மீண்டும் மாற்றம் கொண்டு வர, கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது. கடந்த கல்வி ஆண்டு வரை, பி.எட்., படிப்பு, ஓராண்டாக இருந்தது.

2014ல் அமலான புதிய விதிமுறைகள்படி, இரு ஆண்டாக மாற்றப்பட்டது. அதன்படி, தமிழகத்திலுள்ள, 690 கல்லுாரிகளும், பி.எட்., படிப்பை நடத்துகின்றன. இந்த கல்லுாரிகள், மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் அங்கீகாரத்தை பெற வேண்டும்; பின், தமிழகத்தில் உள்ள, ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், இணைப்பு அந்தஸ்து பெற வேண்டும். இந்த நடைமுறையிலும், பாடத்திட்டம் வரையறை செய்வதிலும் பிரச்னைகள் உள்ளதாக, மத்திய அரசுக்கு, கல்வியாளர்கள் தரப்பில் மனுக்கள் அனுப்பப்பட்டன.

இதை தொடர்ந்து, பி.எட்., விதிகளில், மீண்டும் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, கல்வியாளர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், தங்கள் கருத்துக்களை, அக்., 30க்குள் அனுப்ப வேண்டும் என, டில்லி ஆசிரியர் கல்வி கவுன்சில் தெரிவித்து உள்ளது.

திறந்தநிலை பல்கலையில் பி.எட்., சேர்க்கை துவக்கம்


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. பட்டப்படிப்பு, டிப்ளமோ பயிற்சி முடித்து, ஆசிரியர்களாக பணியாற்றுவோர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பில் சேரலாம். இதற்கான விண்ணப்ப வினியோகத்தை, பல்கலை துணைவேந்தர், பாஸ்கரன் துவங்கி வைத்தார். பி.இ., - பி.டெக்., படிப்பில், அறிவியல் மற்றும் கணிதம் படித் தோரும், பி.எட்., சேரலாம். விண்ணப்பங்கள் மற்றும் விபர புத்தகங்களை, பல்கலையின், மண்டல மையங்களில் பெறலாம்; பல்கலையின், www.tnou.ac.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.