இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, October 05, 2016

60 ஆயிரம் மாணவர்களுக்கு அறிவியல் சுற்றுலா


அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறமையை வளர்க்கவும், அறிவியல் கற்கும் ஆர்வத்தை துாண்டவும் அறிவியல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் 2,000 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்டத்திற்குள் உள்ள அறிவியல் ஆய்வகங்கள், மீன் ஆராய்ச்சி நிலையங்கள், விவசாய, தோட்டக்கலை பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் செல்லலாம். சுற்றுலா செல்ல வாகன வசதி, உணவு இலவசமாக வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 7.42 லட்சம் ரூபாய் வீதம் அனைவருக்கும் கல்வி திட்டம் செயல்படும் 30 மாவட்டங்களுக்கு 2 கோடியே 22 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.

'எங்க ஊருக்கு வாங்க; படிக்கலாம், பழகலாம்'


'எங்க ஊருக்கு வாங்க; படிக்கலாம், பழகலாம்' என்ற அடிப்படையிலான புதிய திட்டத்தை, தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்டம் செயல்படுத்தப் படுகிறது.

இதில், செயல்வழி கற்றல் உள்ளிட்ட, பல பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில், புதிதாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளி மாணவர்களை இணைத்து, புதிய கற்றல் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள, தலா ஒரு பள்ளி, ஒரு குழுவாக இணைக்கப்படுகிறது. கிராமப்புற பள்ளியின், எட்டாம் வகுப்பு மாணவர்கள், நகர்ப்புற பள்ளிக்கு சென்று, அங்குள்ள மாணவர்களுடன் சேர்ந்து படிப்பர்.

பின், பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றி பார்ப்பர். நகர்ப்புற மாணவர்களும், தங்களுடன் இணைந்த கிராமப்புற பள்ளிக்கு சென்று, கிராமத்தை சுற்றி பார்ப்பர். 'மாணவர்களுக்குள் நட்புறவு ஏற்படுத்துதல், நகரம் மற்றும் கிராமப் புறங்கள், அங்குள்ள பள்ளிகளின் வசதிகளை மாணவர்கள் தெரிந்து கொள்வதே இத்திட்டத்தின் நோக்கம்' என, ஆசிரியர்கள் கூறினர். இதற்கு, 'எங்க ஊருக்கு வாங்க; படிக்கலாம், பழகலாம்' என, ஆசிரியர்கள் பெயர் வைத்துள்ளனர்.

5 வயது குழந்தைகளுக்கு 'ஆதார்' அடுத்த வாரம் துவக்கம்


மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி உட்பட எட்டு மாவட்டங்களில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 'ஆதார்' கார்டு எடுக்கும் பணி அடுத்த வாரம் துவங்க உள்ளது. அரசின் அனைத்து நலத்திட்டங்கள் பெற 'ஆதார்' கார்டு முக்கியம்.

தற்போது ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே 'ஆதார்' எண் வழங்கப்படுகிறது. அடுத்த வாரம் துவக்கம்: தற்போது ஐந்து வயதிற்கு உட்பட்டோருக்கும் 'ஆதார்' கார்டு வழங்கப்பட உள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, சென்னை, விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை உட்பட எட்டு மாவட்டங்களில் 'ஆதார்' கார்டு எடுப்பதற்கு, 'யுனைடெட் டேட்டா சர்வீஸ்' நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் அடுத்த வாரம் முதல் 'ஆதார்' பதிவுபணியை துவக்க உள்ளது; இதில் குழந்தைகளின் போட்டோ மட்டும் பதிவு செய்யப்படும். தாய் அல்லது தந்தையின் கை ரேகை பதிவு செய்யப்படும். தாய், தந்தை இல்லாதவர்களுக்கு பாதுகாவலர் பெயர், எண் பதிவு செய்யப்படும்.

வாக்காளர் அடையாள அட்டையில் அழகான உருவத்தை பதிவு செய்யலாம்


தமிழகத்தில் உள்ள, 300க்கும் மேற்பட்ட, 'இ - சேவை' மையங்களில், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன் கிடைக்கும்; அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான முகத்தைப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம்.

இது குறித்து, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, இ - சேவை மையங்களில், தற்போது, 100 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன; இந்த ஆண்டுக்குள், சேவைகளின் எண்ணிக்கை, 300 ஆக உயர்த்தப்படும். அதன் ஒரு பகுதியாக, வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வழங்கப்பட உள்ளது. அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின் கீழ், 486 இ - சேவை மையங்கள் உள்ளன.

இந்த நிறுவனத்தின் சார்பில், சென்னையில், சில இடங்களில், இந்த சேவை நேற்று துவங்கியது. அதற்காக, வாக்காளர்களின் புகைப்படம் உள்ளிட்ட முழு விபரங்கள், தகவல் தொழில்நுட்ப துறையிடம், தேர்தல் துறை வழங்கி உள்ளது. வாக்காளர்கள் மையங்களுக்கு சென்று, வாக்காளர் அட்டை எண்ணை கூறியதும், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை, அச்சிட்டு தரப்படும்; 25 ரூபாய் செலுத்த வேண்டும். வாக்காளர் அட்டை தொலைந்தாலும், இந்த மையத்தில், அடையாள அட்டை எண்ணை தெரிவித்து, புதிய அட்டை பெறலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அழகாக தெரிய வேண்டுமா? : வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படங்கள், மிக மோசமாக தெரிவதாக புகார்கள் உள்ளன. இ - சேவை மையங்களில், வாக்காளர்களை புகைப்படம் எடுத்து, அதை, வண்ண அடையாள அட்டையில் பதிந்து தர வசதிகள் உள்ளன. தேர்தல் கமிஷன் தந்த அட்டையில் உள்ள புகைப்படத்தை, விருப்பம் உள்ளோர், இந்த மையங்கள் வாயிலாக மாற்றிக் கொள்ளலாம்.

ஓய்வூதிய விவகாரம்: நிபுணர் குழுவுடன் ஓய்வூதிய ஆணையக் குழு இன்று முக்கிய ஆலோசனை


அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத்தின் அம்சங்களை ஆராய அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுடன், ஓய்வூதிய ஆணையத்தின் அதிகாரிகள் வியாழக்கிழமை (அக்.6) ஆலோசனை நடத்துகின்றனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதிலாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தும் அம்சங்கள் குறித்து ஆராய, முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் தலைமையிலான நிபுணர் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. ஓய்வூதிய ஆணையம்: தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள் சங்கங்களின் கருத்துகளை இந்தக் குழு கேட்டறிந்துள்ளது.

கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற சங்கங்களின் பிரதிநிதிகள் அனைவரும் பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்து முடிவுகளை எடுக்கும் முன்பாக தங்களது கருத்துகளையும் கேட்க வேண்டுமென தமிழக அரசிடம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, இந்த ஆணையத்தின் அதிகாரிகள் குழுவினரை, தமிழக அரசின் நிபுணர் குழுவானது வியாழக்கிழமை மாலை சந்திக்கிறது.

கோரிக்கை என்ன: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை -மேம்பாட்டு ஆணையமானது, இப்போதுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என தமிழக அரசிடம் ஏற்கெனவே கருத்துத் தெரிவித்துள்ளது. இதே கருத்தை வியாழக்கிழமை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திலும் ஒழுங்கு முறை ஆணையத்தைச் சேர்ந்த குழுவினர் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வூதியம் தொடர்பான விதிமுறைகள், நடைமுறைகளை ஒழுங்குபடுத்தி அவற்றைச் செயல்படுத்துவதுடன், கண்காணிக்கும் பணியையும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை -மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பணி மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தரவு நகல்

TNOU term end exam result june 2016

Click below

http://14.139.186.125/tnou/resultjune2016.htm

Tuesday, October 04, 2016

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: காலி இடங்கள் பட்டியலை இன்று தாக்கல் செய்ய உத்தரவு


தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை புதன்கிழமை (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக ஆசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வாகாத விண்ணப்பதாரர்களில் ஒரு பிரிவினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிவ கீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் வி.கிருஷ்ணமூர்த்தி, நளினி சிதம்பரம், அஜ்மல் கான் ஆகியோர் ஆஜராகி, "தமிழகத்தில் 2012-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் 2013-இல் நடந்தது. அதன் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் வழங்கப்படுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட இரு அரசாணைகள் நியமன விதிகளுக்கு எதிரானது' என்று வாதிட்டனர். ஆனால், தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.பி.ராவ், "அனைத்து சட்ட நடைமுறைகளின்படியே தமிழக அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன' என்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள் கூறியது: தமிழக அரசு வெளியிட்ட இரு அரசாணைகளால் மனுதாரர்களுக்கு ஆசிரியர் பணியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என பலர் முறையிட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். எனவே, தற்போதைய சூழலில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை தமிழக அரசும் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மனுதாரர்கள் தரப்பும் நீதிமன்றத்தில் புதன்கிழமை (அக்டோபர் 5) தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்து புதன்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

பின்னணி: தமிழக அரசு சார்பில் 2012-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) நடத்தப்பட்டது. இதில் குறைந்த நபர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, இடஒதுக்கீடு முறையின்படி தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் சலுகை அளிக்க ஓர் அரசாணையையும், பிளஸ்-2, பட்டப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மற்றொரு அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.

இதையடுத்து, ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெறாமல் பாதிக்கப்பட்டதாகக் கூறி சுமார் 600 பேர் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளைத் தொடுத்தனர். இதில் இரு நீதிமன்றங்களும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கின. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

வங்கிகள் தொடர்ந்து 5 நாள் விடுமுறை


வங்கிகளுக்கு வரும் அக்டோபர் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் வரும் 12-ஆம் தேதி வரை விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8 (இரண்டாவது சனிக்கிழமை), அக்டோபர் 9 (ஞாயிற்றுக்கிழமை), அக்டோபர் 10 (திங்கள்கிழமை-ஆயுதபூஜை), அக்டோபர் 11 (செவ்வாய்க்கிழமை-விஜயதசமி), அக்டோபர் 12 (புதன்கிழமை-மொஹரம்) ஆகியவை விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 5 நாள் விடுமுறை வருவதால் பண பரிவர்த்தனையை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளலாம் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான உள்ளூர் சுற்றுச் சூழல் வளங்களை பயன்படுத்தி அறிவியல் கற்பித்தல் BRC பயிற்சி..

RBSK programme-child details

Click below

https://app.box.com/s/tp7yzre4krh7sucg2hvikuaw6oequ4by

Monday, October 03, 2016

8ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு தபாலில் சான்றிதழ்


எட்டாம் வகுப்பு தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு விரைவு அஞ்சலில் சான்றுகளை அனுப்பியுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எட்டாம் வகுப்பு தேர்வை, தனித் தேர்வர்களாக எழுத விரும்பியோருக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு நடந்தது. தேர்வில் பங்கேற்ற மாணவ- மாணவியருக்கு உரிய சான்றுகள் நேரடியாக விரைவு அஞ்சல் மூலம் 7ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்படுகிறது. சான்றுகள் கிடைக்காதவர்கள், அந்தந்த அரசுத் தேர்வுகள் மண்டலத்துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். இது குறித்து மேலும் விவரம் வேண்டுவோர் dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இட மாறுதல் உத்தரவு பெற்றும் சிக்கல் : போராட தயாராகும் ஆசிரியர்கள்


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, இந்த ஆண்டுக்கான இட மாறுதல் கவுன்சிலிங், ஜூலையில் நடந்தது. தொடக்கப் பள்ளி, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு தனித்தனியாக கவுன்சிலிங் நடந்தது; இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இட மாறுதல் பெற்றனர். அவர்களில், தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களில் பலர், இன்னும் தங்களின் பழைய இடங்களில் இருந்து விடுவிக்கப்படவில்லை.

இதுகுறித்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: கவுன்சிலிங்கில் இட மாறுதல் பெற்றோர், தங்கள் பழைய இடத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற, நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதாவது, தொடக்கப் பள்ளிகளில் மாறுதல் பெற்றோரை, மாற்று ஆசிரியர் வரும் வரை விடுவிக்க கூடாது என்பதே அந்த நிபந்தனை. ஆனால், மாறுதல் பெற்றோருக்குப் பதிலாக, இரண்டு மாதங்களாக, மாற்று ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

பல ஆண்டுகள் காத்திருந்து, ஆசிரியர்கள் விருப்பமான இடத்திற்கு செல்ல ஒதுக்கீடு பெற்றும் போய் சேர முடியவில்லை. மாற்று ஆசிரியரை நியமிக்காமல், அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர். இதேநிலை தொடர்ந்தால், சங்கங்களுடன் சேர்ந்து போராடுவதை தவிர வேறு வழியில்லை.இவ்வாறு அவர் கூறினார்

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் : கல்வி துறைக்கு 6 வாரம் கெடு


சிறப்பு ஆசிரியர்களுக்கு, உயர் கல்வி ஊக்க ஊதியம் வழங்குவது குறித்து முடிவு எடுக்க, பள்ளிக்கல்வித் துறைக்கு, ஆறு வாரம் கெடு விதிக்கப்பட்டு உள்ளது.

அரசு பள்ளிகளில், கலை, ஓவியம், தையல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில், 15 ஆயிரம் பேர் சிறப்பு ஆசிரியர்களாக பணி புரிகின்றனர். இவர்கள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்தால், பதவி உயர்வு வழங்க வேண்டும். காலியிடங்கள் இல்லாததால், பல ஆயிரம் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதேநேரத்தில், ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பின், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படித்திருந்தால், உயர் கல்வி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.

இதில், இளங்கலை பட்டப்படிப்புக்கு மட்டும், ஒரு ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு உள்ளது; முதுகலை படிப்புக்கு வழங்கவில்லை. இது தொடர்பாக, சிறப்பு ஆசிரியர்கள் பல மனுக்கள் அனுப்பியும், கல்வித் துறை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க நிர்வாகியும், வேலுார் மாவட்ட, அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியருமான கமலக்கண்ணன், ஊக்க ஊதியம் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆறு வாரங்களுக்குள் முடிவு எடுக்க, பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டு உள்ளது. ஊக்க ஊதியம் அளிக்க முடிவு எடுத்தால், கடந்த கால பாக்கியையும் சேர்த்து வழங்க வேண்டும் என்பதால், கல்வித் துறை அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Saturday, October 01, 2016

மழைக்கால விபத்தை தடுக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு


'மழைக்கால விபத்துகளை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கு, இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். அனைத்து மாவட்ட, உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் விடுத்துள்ள சுற்றறிக்கை: மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் மழைக்கால விபத்து குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு பகுதியிலும், நல்ல விபரமான மாணவர்களை, மற்ற மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக நியமிக்க வேண்டும் வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்து செல்லும் பாதையில், நீர்நிலைகள் இருந்தால், அந்த பாதையை தவிர்க்க, அறிவுறுத்த வேண்டும் பள்ளிகளில், ஆபத்தான வகையில் எந்த பொருட்களும் இல்லாமல், பார்த்து கொள்ள வேண்டும். மின்கசிவு ஏற்படாமல், மின் உபகரணங்களை சரி செய்வது முக்கியம் பள்ளி வளாகத்தில், நீர் மற்றும் குப்பை தேங்காமல், சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பிறந்த குழந்தைக்கு ஆதார் பெறுவது எப்படி?


பிறந்த குழந்தைகளுக்கு, 'ஆதார்' பதிவு செய்வது குறித்து, மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. கடந்த, 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, ஆதார் எண் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும், ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கும், ஆதார் எண் பதிவு செய்ய, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதார் பதிவு சட்டத்தில் புதிய திருத்தங்களை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

அதன்படி, அனைத்து மாநிலங்களிலும், ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு, ஆதார் எண் பதிவு செய்து கொள்ளலாம். குழந்தைகளின் நலன் கருதியும், உடல் ரீதியான ரேகைகள் வளர்ச்சி குறைந்திருக்கும் என்பதாலும், குழந்தைகளுக்கு மட்டும், 'பயோ மெட்ரிக்' அளவீடு தேவை இல்லை. குழந்தையின் புகைப்படம் மட்டும் பதிவு செய்யப்படும். தாய், தந்தை முகவரி மற்றும் ஆதார் எண், குழந்தையின் ஆதார் எண்ணுக்கு, அடிப்படை தகவலாக சேர்க்கப்படும். குழந்தைக்கும், பெற்றோருக்கும் இடையிலான ரத்த உறவை உறுதி செய்ய, ரேஷன் கார்டு, மத்திய, மாநில அரசுகளின் மருத்துவ அட்டை, பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை ஆவணமாக சேர்க்க வேண்டும்.

மேலும், பெற்றோர், தங்களின் ஆதார் அசல் அட்டை மற்றும் நகல்களை, பதிவு செய்யும் மையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்; இதில், தாயின் ஆதார் எண்ணுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்த பின், ஐந்து வயது ஆனதும், உடல் ரீதியான பயோ மெட்ரிக் பதிவு செய்ய வேண்டும். அதேபோல், அனைத்து குழந்தைகளுக்கும், 15 வயது முடிந்ததும், மீண்டும் பயோ மெட்ரிக் பதிவு மேற்கொள்ள வேண்டும் என, திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

உயர்கல்வி முன் அனுமதி படிவம்

Click below

https://app.box.com/s/oiuhmu0zgllmk83neak4bjzn1c9bxm05

Friday, September 30, 2016

எட்டாவது ஊதிய குழு : அரசுக்கு கோரிக்கை


'எட்டாவது ஊதியக் குழுவை, தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும்' என, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழகத்தில் உள்ள, பல்வேறு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் நடத்தியது. அதில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை, ஜனவரி முதல் வழங்கும் வகையில், உடனடியாக, எட்டாவது ஊதியக் குழு அமைக்க வலியுறுத்தப்பட்டது.

'மேலும், 2003 ஏப்., 1க்கு பிறகு, அரசு பணியில் சேர்ந்தோருக்கும், பழைய ஓய்வூதிய திட்டமே தொடர வேண்டும்; அதுபற்றி ஆலோசிக்க அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழு, தன் அறிக்கையை, விரைவில் முதல்வரிடம் வழங்க வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Thursday, September 29, 2016

பங்குச்சந்தையில் 10% பிஎப் தொகை முதலீடு: பண்டாரு தத்தாத்ரேயா தகவல்


பங்குச்சந்தை திட்டங்களில் (இடிஎப்) முதலீடு செய்யப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) வரம்பை 10 சத வீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் இபிஎப் நிதி ரூ.13,000 கோடி பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச்சந்தை களில் இடிஎப் திட்டங்கள் மூலமாக முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இபிஎப் நிதியிலிருந்து 5 சதவீதம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதை அதிகரிக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎப்ஓ) பரிசீலித்து வந்தது. தற்போது 2016-17-ம் நிதியாண்டில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வரம்பை 10 சதவீதமாக இபிஎப்ஓ உயர்த்தி யுள்ளது.

``இபிஎப்ஓ நிதியை இடிஎப் திட்டங்களில் முதலீடு செய்யும் வரம்பை 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்துவதற்கு நாங்கள் ஏற்கெனவே அறிவிக்கை வெளியிட்டுவிட்டோம்’’ என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். இந்த நிதியாண்டில் முதல் ஆறு மாதங்களில் ரூ.1,500 கோடி இடிஎப் திட்டங்களில் இபிஎப்ஓ முதலீடு செய்துள்ளது.

தற்போது மீதமுள்ள 6 மாதங்களில் ரூ.11,500 கோடி முதலீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. தொழிலாளர் நல அமைச்சகம் இபிஎப்ஓ அமைப்பின் அறங் காவலர் குழுவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறதா? என்று செய்தி யாளர்கள் கேட்டபோது, இது குறித்து இருமுறை அறங்காவலர் குழு கூட்டத்தில் பேசிவிட்டோம். சில உறுப்பினர்கள் இடிஎப் திட்டங் களில் முதலீடு செய்வதற்கு எதிராக உள்ளனர் என்று பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.

அறங்காவலர் குழுவின் ஒப்பு தல் தேவையில்லையா? என்று கேட்டதற்கு, மத்திய அரசு முடிவு எடுத்துவிட்டது. மத்திய அரசின் முடிவே இறுதியானது என்று தொழிலாளர் நலத்துறை செய லாளர் ஷங்கர் அகர்வால் தெரிவித்தார். தொழிலாளர் நலத்துறை எடுத் துள்ள இந்த முடிவை தொழிற் சங்கங்கள் கடுமையாக சாடியுள் ளன. அறங்காவலர் குழு ஒப்புதல் இல்லாமல் ஒருதலைபட்சமான முடிவை தொழிலாளர் நல அமைச் சகம் எடுத்துள்ளதாக தொழிற்சங் கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

INSPIRE AWARD - INSPIRE AWARD NOMINATIONS FOR THE YEAR 2016-

Click below

http://www.inspireawards-dst.gov.in/