இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, December 07, 2014

தரமான ஆரம்பக் கல்வி தேவை By எஸ். பாலசுந்தரராஜ் -dinamani


தமிழக அரசு அனைவருக்கும் பள்ளிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவார்கள் என அறிவித்துள்ளது. தற்போது 9-ஆம் வகுப்பிலும் தேர்ச்சி செய்திட வேண்டும் என வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.

இங்கேதான் கோளாறு உள்ளது எனக் கல்வி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் தேர்ச்சி நிச்சயம் உண்டு. அவர்கள் படித்தால் என்ன படிக்காவிட்டால் என்ன என நினைக்கும் ஆசிரியர்கள் பலர் உள்ளனர் என கல்வித் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

பல ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து கையெழுத்து இட்டுவிட்டு தங்களது சொந்த வேலையைப் பார்க்கச் சென்று விடுகிறார்கள். சில ஆசிரியர்கள் பல தனியார் நிறுவனங்களில் பகுதிநேரப் பணியாளர்களாக வேலை செய்து வருகிறார்கள்.

இவர்களை ஒன்றும் செய்ய இயலாது. சஸ்பெண்டு போன்ற நடவடிக்கை எடுத்தால் சங்கம் போராட்டத்தில் இறங்குகிறது என வேதனையுடன் கூறினார் ஓர் அதிகாரி.

ஒவ்வொரு ஆசிரியரும் மனசாட்சியுடனும், சேவை மனப்பான்மையுடனும் வேலை செய்தால்தான் மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பிக்க இயலும்.

அடுத்து பாடத் திட்டங்களை எடுத்துக் கொள்வோம். அப்போதெல்லாம் தேர்வில் சாய்ஸ் என்பது மிகமிக குறைவாகவே இருக்கும்.

மேலும் ஒரு கேள்விக்கு 4 பதிலைக் கூறி, இதில் எது சரி எனக் கூறு என்ற கேள்விகள் இருக்காது. தற்போது உள்ள இந்த இரு முறைகளினால் மாணவர்கள் படிக்கும் திறன் குறைந்து விடுகிறது. அவர்களின் ஞாபகத் திறன் மழுங்கடிக்கப்படுகிறது.

மேலும், தற்போது மனக்கணக்கு என்கிற பாடம் இல்லை. இந்த மனக் கணக்கு ஞாபக சக்தியை வளர்ப்பதோடு, பிற்காலத்தில் பல வேலைகளை சுலபமாகச் செய்ய வழி செய்யும்.

தற்போது கால்குலேட்டர் வந்துவிட்டது. அந்த காலத்தில் பின்னல் கணக்கு, அல்ஜீப்ரா கணக்கு என எதையும் எழுதி பார்த்து தான் விடையளிக்க முடியும். இதனால் மாணவர்களின் சிந்திக்கும் திறன் வளர்ந்தது. தற்போது கால்குலேட்டர் பயன்படுத்தப்படுவதால், இந்தத் திறன் வளர்க்கப்படுவதில்லை.

மேலும், நோட்ஸ் புத்தகம் வாங்கி அக் காலத்தில் யாரும் படிப்பதில்லை. வகுப்பில் ஆசிரியர் கற்பிக்கும்போதே கேள்வி பதிலைக் கூறிவிடுவார். அதனை நோட்டுப் புத்தகத்தில் எழுதி படிக்க வேண்டும்.

தற்போது எங்கும் நோட்ஸ். எதற்கும் நோட்ஸ் என மாணவர்களின் கற்கும் திறனை மிகவும் குறைத்து விடுகிறது.

அடுத்து அந்தக் காலத்தில் ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு ஒரு பயம் கலந்த மரியாதை இருந்தது. தற்போது அது இல்லை. காரணம் பள்ளியில் தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்க இயலாது. அப்படி கண்டித்தால் ஆசிரியர் அடித்து விட்டார் என புகார் எழும்.

மாணவர்களை அடிக்கக் கூடாது என அரசு கூறியுள்ளதை மாணவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் பல ஆசிரியர்கள் மாணவர்களின் தவறுகளைக் கண்டும் காணாதது போல இருந்து விடுகிறார்கள்.

தற்போது பள்ளியில் வகுப்பறையை மாணவர்கள் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்தால் சிலர் மாணவர்களின் நிலை பாரீர் எனக் கூக்குரலிடுகின்றனர். இதுபோன்ற பல காரணங்களால் மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் பயமும், மரியாதையும் இல்லாமல் போய் விட்டது.

இப்படிப் படிப்பவர்கள் பின்னாளில் ஆசிரியர்களாக பணிபுரிய நேர்ந்தால் எப்படி இருக்கும்? இது போன்ற காரணங்களால்தான் ஆரம்பக் கல்வியின் தரம் குறைந்து வருகிறது.

நம் பிள்ளைகள் நம்மைவிட பல மடங்கு புத்திசாலி எனக் கூறி வருகிறோம். அப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு சிறப்பான கல்வி அளித்தால் அவர்களது வாழ்க்கை சிறப்பாக அமைவதோடு, வருங்கால சமுதாயமும் மேம்படும்.

உதவிப் பேராசிரியர் நியமனம்: டிசம்பர் 15 முதல் நேர்காணல்

அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்துக்காக தமிழ், பொருளாதாரம் உள்ளிட்ட 12 பாடங்களுக்கு நேர்காணல் டிசம்பர் 15 முதல் 19 வரை நடைபெற உள்ளது. அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்டப் பாடங்களில் விண்ணப்பித்தோருக்கான நேர்காணல் முடிந்து இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ், பொருளாதாரம், புவியியல், வணிகவியல், வணிகவியல் (சி.ஏ.), வணிகவியல் (ஐபி), வணிகவியல் (இ-காம்), தொழில் நிர்வாகம் (பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன்), தொழில் மேலாண்மை (பிசினஸ் மேனேஜ்மென்ட்), பொது நிர்வாகம், அரசியல் அறிவியல், உடற் கல்வி ஆகிய 12 பாடங்களுக்கான நேர்காணல் டிசம்பர் 15 முதல் 19 வரை நடைபெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அழைப்புக் கடிதங்கள் கிடைக்கவில்லையென்றாலும், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலிருந்து இந்தக் கடிதங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். சான்றிதழ் சரிபார்ப்பின்போது கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு, அதனடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் தேர்வர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பிற பாடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மை குழுவினருக்கு பயிற்சிதேர்வு நேரத்தில் சிக்கல்

   பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்க அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது. 6-14 வயது வரை உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை இக்குழு கவனிக்கிறது. இக்குழு உறுப்பினர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் மேலாண்மை குழு சார்பில் தலைமை ஆசிரியர் உட்பட 6 பேர் பங்கேற்க வேண்டும்.

பயிற்சி டிச. 15 முதல் 17 வரை ஒரு பிரிவு, 18 முதல் 20ம் தேதி வரை ஒரு பிரிவாக நடத்தப்படும். சாக்கோட்டை வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் அன்பரசு பிரபாகர் கூறியதாவது: டிச.15 முதல் 20 வரை தொடக்க பள்ளி மாணவருக்கான 2-ம் பருவ தேர்வு நேரம். ஈராசிரியர் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பயிற்சிக்கு சென்றால், தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்படும். இந்த மாதத்தில் 18 வேலை நாட்கள் மட்டுமே உள்ளன. அதில் 3 நாள் இப்பயிற்சிக்கும், மேலும் 2 நாள் பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய கூட்டத்திலும் கழிந்துவிடும். இதனால் தேர்வுக்கு மாணவரை தயார்படுத்துவதில் சிரமம் உள்ளது. வரும் காலங்களிலாவது இதை தவிர்க்க வேண்டும், என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பால் மாநகராட்சி பள்ளிகள் தனியாருக்கு விடுவது தற்காலிக நிறுத்தம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பால் மாநகராட்சி பள்ளிகள் தனியாருக்கு விடுவது தற்காலிக நிறுத்தம்

சென்னை மாநகராட்சி 7 பள்ளிகளை தனியாரிடம் கொடுக்க திட்டமிட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பால், அந்த முடிவை மாநகராட்சி ஒத்தி வைத்துள்ளது என்று அக்கட்சியின் அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிபிஎம் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி நடத்திவந்த 7 மாநகராட்சி பள்ளிக்கூடங்களை தனியாருக்கு ஒப்படைப்பது என்று முடிவெடுத்திருப்பதாக டிச.1அன்று பத்திரிகைகளில் செய்தி வெளியானது. பள்ளியை பொறுப்பேற்கும் தனி யாருக்கு, ஒரு மாண வருக்கும் 10 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உத வியை அளிக்கப்படும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டி ருந்தது. அதேநேரத் தில் எந்தெந்தபள்ளிகள் என்று பெயர் அறிவிக்கப்படவில்லை.மாநகராட்சியின் இடம் , கட்டிடம் உள்ளிட்ட கட்ட மைப்புகளை தனியார் பயன்படுத்த அனுமதிப்பதுடன், பணத்தையும் தனியா ருக்கு கொடுக்கும் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி வன்மையாக கண்டித் ததுடன், போராட்ட அறிவிப்புகளையும் கொடுத்தது.மேலும், கடந்த 29.11.2014 அன்றுஅரசுப் பள்ளி பாதுகாப்பு கருத்தரங்கையும் நடத்தி அதன் மூலம் பள்ளிகளை பாதுகாக்க இயக்கம் நடத்திட அறைகூவல் விடுத்திருந்தது.இந்நிலையில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பால் 7 பள்ளிகளை தனி யாருக்கு விடுவதை மாநகராட்சி தற்காலி கமாக நிறுத்தி வைத் துள்ளது. மாநகராட்சி பள்ளிகளை தனியா ருக்கு விடுவதை நிரந்தரமாக கைவிட வேண்டும். மாணவர் கள் குறைவாக உள்ள பள்ளிகளை பலப்படுத்த தேவையான முயற்சி களை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Saturday, December 06, 2014

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தாயார் பெயர் பதிவு கட்டாயம்: அரசு தேர்வுத்துறை புதுஉத்தரவு

'பிளஸ் 2, 10ம்வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை பதியும் போது தந்தை பெயருடன், தாய் பெயரையும் கட்டாயம் சேர்க்க வேண்டும்' என, அரசு தேர்வுகள்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5, 10ம்வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19ல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 32 மாவட்டங்களில் உள்ள பள்ளி வாரியாக எழுத உள்ளோர் விபரங்களை தேர்வுத்துறையின் தீதீதீ.tணஞீஞ்ஞு.டிண என்ற இணையதளத்தில் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

இதற்காக பள்ளிகளுக்கு அதற்கான சாப்ட்வேர் வழங்கப்பட்டுள்ளது. தந்தை பெயருடன், தாய் பெயரையும் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவால், மாணவரின் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், பாடம், மீடியம் உள்ளிட்ட பல்வேறு விபரங்களுடன் தாய் பெயரும் சேர்த்து புகைப்படத்துடன் ஆப்-லைனில் பதிவு செய்யும் பணி நடக்கிறது. இதன் விபரங்களை 'சிடி'யில் பதிவு செய்து நாளை(டிச.,8க்குள்) மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிரின்ட் அவுட் எடுத்து வகுப்பறைகளில் ஒட்டி மாணவர்களுக்கு தெரியப்படுத்தவும், அதில் திருத்தம் இருந்தால் திருத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், " பொதுத்தேர்வு எழுதும் மாணவரின் பெயருடன் தந்தை பெயர் மட்டுமே பதிவு செய்யப்படும். ஒரு சில மாணவர்களின் தந்தை பெயர், பிறந்த தேதி ஆகியவை ஒன்றாக இருக்கும்போது ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கவும், சட்டரீதியாக தந்தை விவாகரத்து பெற்று பிரிந்த பின் தாயிடம் மாணவர் வளர்ந்தால் அதனடிப்படையில் தாய் பெயரை பதிவு செய்யவும் இந்தமுறை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு மாணவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகொண்டுவர வேண்டும். ஆனால் அது கட்டாயமில்லை. இன்ஷியலில் தாய் பெயரை சேர்ப்பதற்கான அரசாணை ஏற்கனவே உள்ளது,”என்றார்.

பள்ளி மேலாண்மை குழுப்பயிற்சி

Click below

https://drive.google.com/file/d/0B69z3JTclPnxbHpQdEpTMFA3anc/view?usp=sharing

Friday, December 05, 2014

Ignou previous question papers

Click below

http://www.admissioncorner.com/content/ignou-bed-question-papers-download-bed-questions-papers-ignou

பள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு - 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்குதல், அப்பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் - 128 தொடக்கப் பள்ளிகளின் பட்டியல் வெளியீட்டு அரசு உத்தரவு

Click below

https://drive.google.com/file/d/0B7_wDm1_dk21NE1NV2xjaUpQTWM/view?usp=sharing

அறிவியல் பாடங்களுக்கு 50 தலைப்புகளில் விடியோ

தமிழகத்திலுள்ள பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களை விளக்குவதற்காக 50 தலைப்புகளில் விடியோ படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தலைப்பிலும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் வரை இந்தப் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. வேதியியல் பரிசோதனைகள், இயற்பியல் விதிகள் ஆகியவை எடுத்துக்காட்டுகளுடன் இந்தப் படங்களில் விளக்கப்படுகின்றன. இந்த விடியோ படங்கள் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாத இறுதிக்குள் இந்தப் படங்கள் தயாரிக்கப்பட்டு விடும். அதன்பிறகு, கல்வித் தகவல் மேலாண்மை முறைமை மூலம் இணையதளத்தில் இந்தப் படங்கள் பதிவேற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Thursday, December 04, 2014

NMMS ON LINE ENTRY

Click below

http://www.tndge.in/login.aspx

SUJATHA books

click below

https://venkatramanan.wiki.zoho.com/Sujatha-books.html

10&12th exam time table

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
10ம் வகுப்பு அட்டவணை:
தேர்வு நேரம்: காலை 9.15 மணி - மதியம் 12 மணி வரை

மார்ச் 19 : தமிழ் முதல் தாள்
மார்ச் 24: தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 25: ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 26: ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 30 : கணிதம்
ஏப்ரல் 6: அறிவியல்
ஏப்ரல் 10 : சமூக அறிவியல்.

பிளஸ் 2 தேர்வு அட்டவணை:
தேர்வு நேரம் : காலை 10.00 மணி - மதியம் 1.15 மணி வரை
மார்ச் 5: பகுதி ž1 தமிழ் தாள் 1
மார்ச் 6:பகுதி 1 தமிழ் தாள் 2

மார்ச் 9: பகுதி 2 ஆங்கிலம் தாள் 1
மார்ச் 10: பகுதி 2 ஆங்கிலம் தாள் 2
மார்ச் 13: உயிரி வேதியியல், சிறப்பு மொழி தாள்.
மார்ச் 16 : புவியியல், மணையியல் அறிவியல்,புவியியல்
மார்ச் 18: கணிதம்,
மார்ச் 20: அரசியல் அறிவியல், நர்சிங் புள்ளியியல்,
மார்ச் 23 : வேதியியல், கணக்குப்பதிவியல்,
மார்ச் 27: இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 31: உயிரியியல் வரலாறு , தாவரவியில், வணி்கக்கணக்கு,

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகளை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதன்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2015ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி துவங்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடைபெறும். பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 5ம் தேதி துவங்கி மார்ச் 31ம் தேதி நிறைவடையும்.
10ம் வகுப்பு அட்டவணை:
தேர்வு நேரம்: காலை 9.15 மணி - மதியம் 12 மணி வரை

மார்ச் 19 : தமிழ் முதல் தாள் மார்ச் 24: தமிழ் இரண்டாம் தாள் மார்ச் 25: ஆங்கிலம் முதல் தாள் மார்ச் 26: ஆங்கிலம் இரண்டாம் தாள்மார்ச் 30 : கணிதம் ஏப்ரல் 6: அறிவியல் ஏப்ரல் 10 : சமூக அறிவியல்.

பிளஸ் 2 தேர்வு அட்டவணை:
தேர்வு நேரம் : காலை 10.00 மணி - மதியம் 1.15 மணி வரை
மார்ச் 5: பகுதி ž1 தமிழ் தாள் 1மார்ச் 6:பகுதி 1 தமிழ் தாள் 2மார்ச் 9: பகுதி 2 ஆங்கிலம் தாள் 1மார்ச் 10: பகுதி 2 ஆங்கிலம் தாள் 2மார்ச் 13: உயிரி வேதியியல், சிறப்பு மொழி தாள். மார்ச் 16 : புவியியல், மணையியல் அறிவியல்,புவியியல் மார்ச் 18: கணிதம், விலங்கியல், சத்துணவியல். மார்ச் 20: அரசியல் அறிவியல், நர்சிங் புள்ளியியல், தொழிற்ப்பாடப்பிரிவு கருத்தியியல். மார்ச் 23 : வேதியியல், கணக்குப்பதிவியல், மார்ச் 27: இயற்பியல், பொருளாதாரம் மார்ச் 31: உயிரியியல் வரலாறு , தாவரவியில், வணி்கக்கணக்கு,

Online govt service

�� INDIAN GOVERNMENT INTRODUCED ONLINE SERVICES �� 

*Obtain:
1.  Birth Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1

2.  Caste Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4

3.  Tribe Certificate
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8

4.  Domicile Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5

5.  Driving Licence
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=6

6.  Marriage Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=3

7.  Death Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=2

Apply for:
1.    PAN Card
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=15

2.     TAN Card
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=3

3.     Ration Card
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=7

4.     Passport
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=2

5.     Inclusion of name in the Electoral Rolls
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=10

Register:  
1.    Land/Property
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=9

2.    Vehicle
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=13

3.    With State Employment Exchange
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=12

4.    As Employer
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=17

5.    Company
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=19

6.    .IN Domain
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=18

7.    GOV.IN Domain
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=25

Check/Track:
1.    Waiting list status for Central Government Housing
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=9

2.     Status of Stolen Vehicles
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=1

3.    Land Records
http://www.india.gov.in/landrecords/index.php

4.    Cause list of Indian Courts
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=7

5.    Court Judgments (JUDIS )
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=24

6.    Daily Court Orders/Case Status
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=21

7.    Acts of Indian Parliament
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=13

8.    Exam Results
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=16

9.    Speed Post Status
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=10

10. Agricultural Market Prices Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=6

Book/File/Lodge:
1.     Train Tickets Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=5

2.     Air Tickets Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=4

3.     Income Tax Returns
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=12

4.     Complaint with Central Vigilance Commission (CVC)
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=14

Contribute to:
1.      Prime Minister's Relief Fund
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=11

Others:
1.      Send Letters Electronically
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=20

Global Navigation  
1.     Citizens
http://www.india.gov.in/citizen.php

2.     Business (External website that opens in a new window)
http://business.gov.in/

3.     Overseas
http://www.india.gov.in/overseas.php

4.     Government
http://www.india.gov.in/govtphp

5.     Know India
http://www.india.gov.in/knowindia.php

6.     Sectors
http://www.india.gov.in/sector.php

7.     Directories
http://www.india.gov.in/directories.php

8.     Documents
http://www.india.gov.in/documents.php

9.     Forms
http://www.india.gov.in/forms/forms.php

10.    Acts
http://www.india.gov.in/govt/acts.php

Bhai11.  Rules
http://www.india.gov.in/govt/rules.php
FORWARD TO ALL GROUPS AND FRIENDS.

அகஇ - 06.12.2014 அன்று நடைபெறவுள்ள குறுவள மைய பயிற்சியில் எவ்வித மாற்றமில்லை; பயிற்சி வழக்கம் போல் நடைபெறும் -courtesytnkalvi

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 06.12.2014 அன்று "குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் கார்த்திகை தீப திருவிழா வருவதால், அன்றைய தினத்தில் நடைபெறவுள்ள குறுவளமைய பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

ஆனால் பயிற்சி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு மட்டும் ஒத்திபோக வாய்ப்புள்ளது.

Wednesday, December 03, 2014

அகஇ - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் நடைபெறும் குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு ஈடுசெய்யும் விடுப்புகளாக அனுமதித்து அரசு ஆணை வெளியீடு

Click below

https://drive.google.com/file/d/0B7_wDm1_dk21RlRvRmpCcGo3NkE/view?usp=sharing

பிளஸ் 2க்கு இணையானது ஆசிரியர் பயிற்சி பட்டய சான்று: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், 10ம்வகுப்பு தேர்ச்சிக்குப்பின்னர் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்றினை பிளஸ் 2க்கு இணையாக கருதவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 10, பிளஸ் 2 என்ற கல்விமுறை 1978-79ல் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. 1986-87 வரை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்வதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு. அதன்படியே சேர்க்கை நடந்தது. 1987ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி( எண் 906) 1987-88 முதல் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர குறைந்தபட்ச கல்வித்தகுதி பிளஸ் 2 என நிர்ணயம் செய்யப்பட்டது.இதன் அடிப்படையில் பிளஸ் 2 தேர்ச்சி பெறாமல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் டிப்ளமோ, பட்டம், முதுகலைப்பட்டங்களை பெற்று பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கருத்துருவை ஏற்க இயலாது என பள்ளிக்கல்வித்துறையால் 2011 அக்.,25 ல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் 2011 ,2012 ம்ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல்களில் பிளஸ் 2 தேர்ச்சி பெறாமல் பட்டம் பெற்றவர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்குகளில் 10ம் வகுப்பிற்கு பின் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய சான்றினை பிளஸ் 2க்கு இணையாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அவ்வாறு ஆணை பிறப்பித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "10ம்வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் 1987 ஜூலைக்கு முன் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய சான்றினை பிளஸ்2க்கு இணையாக கருதி முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார். இதன் நகல் அனைத்து முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்து பின்னர் துறை முடிவு செய்யும்,”என்றார்.

இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்!


இந்திய அரசின் அனைவருக்கும் ஓய்வூதிய திட்டத்தைப் பற்றிய போதிய விழிப்புணர்வு நம்மில் பலருக்கு இல்லை. ஆனால், இது அனைத்து வங்கிகளிலும், குறிப்பாக தென் இந்திய வங்கிகளில் அனைத்திலும்  நடைமுறையில் உள்ளது.

இந்த NPS (National Pension System) திட்டத்தில் 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். முதலில் ரூ.600 செலுத்த வேண்டும். பின்னர் மாதாமாதம் ரூ.100 செலுத்த வேண்டும். இந்திய அரசு உங்கள் கணக்கில் வருடம்தோறும் ரூ.1000 செலுத்தும் (முதல் நான்கு ஆண்டுகள் வரை).

உங்களுக்கு 60 வயது ஆகும் பொழுது உங்கள் கணக்கில் உள்ள தொகையில் 60% எடுத்துக்கொள்ளலாம். மீதி தொகையிலிருந்து மாதாமாதம் வாழ்நாள் முழுவதும் பென்சன் கிடைக்கும். இதற்கு 8 முதல் 12% வரையிலான கூட்டுவட்டியும் உண்டு.

அதுமட்டுமல்லாமல், NRI-க்கள் மற்றும் PPF சந்தாதாரர்களும் முதலீடு செய்யலாம். PRAN-Permanent Retirement Account Number உள்ளவர்கள், கீழ்நிலை / ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஓய்வூதியம் பெற இந்தத்  திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாகும்.

மேலும் மகளிர் சுய உதவி குழுக்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள், பகுதி நேர வேலை தேடுபவர்கள் என அனைவரும் இதில் முகவர்களாக சேர்ந்தும் வருமானம் ஈட்டலாம்.

மேலும் விவரங்களை http://pfrda.org.in/index1.cshtml?lsid=86 எனும் இணைய தள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

-இந்துலேகா.சி

பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான நிவாரணைத் தொகை உயர்வு!

பள்ளி மாணவர்களின் தாய், தந்தை இறந்தால் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய், தந்தை விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்கவும், அவர்களது பராமரிப்பு செலவுகளுக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.50 ஆயிரம் அந்த மாணவர்களுக்கு நிவாரணத்தொகையாக வழங்கப்படுகிறது.

இந்த நிவாரணத்தொகை அரசு நிதி நிறுவனங்களில் டெபாசிட் செய்யப்பட்டு, அதில் இருந்து கிடைக்கும் வட்டி தொகை மற்றும் முதிர்வு தொகை அந்த மாணவரின் கல்வி செலவு மற்றும் பராமரிப்பு செலவுக்கு பயன்படுத்தப்படும். இந்நிலையில், கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், பள்ளி மாணவர்களின் தாய் அல்லது தந்தை இறந்தாலோ, விபத்தில் பாதிக்கப்பட்டாலோ மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூ.50 ஆயிரம் நிவாரணத்தொகையை ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதற்கான முறையான அரசு ஆணையை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா இன்று (3ஆம் தேதி) வெளியிட்டுள்ளார். -எம்.கார்த்தி

உயர்கல்வி முன் அனுமதி பெறாமல் பயிலும் கல்வி குறித்த செயல்முறைகள்