இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, July 30, 2014

'நடப்பாண்டில் 300 பள்ளிகள் தரம் உயர்வு'

சட்டசபையில், நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்

: 25 மாவட்டங்களில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரின், 128 குடியிருப்புப் பகுதிகளில், 128 துவக்கப் பள்ளிகள் துவக்கப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு இடைநிலை ஆசிரியர் நியமிக்கப்படுவர். பள்ளிக்கு, சத்துணவு சமையலறை, குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்படும். இதற்காக, ஆண்டுக்கு, 19.43 கோடி ரூபாய் செலவாகும

். 19 மாவட்டங்களில் உள்ள, 42 துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இவற்றுக்கு, தலா, மூன்று பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு பள்ளிக்கும், மூன்று கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும். இதற்கு, ஆண்டுக்கு, 9.28 கோடி ரூபாய் செலவாகும். நடப்பு கல்வியாண்டில், 50 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக, தரம் உயர்த்தப்படும். இவற்றுக்கு, தலா ஒரு தலைமை ஆசிரியர், ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இதன்மூலம், 1.20 கோடி ரூபாய் ஆண்டுக்கு செலவு ஏற்படும்

. மேல்நிலைப் பள்ளிகளாக, தரம் உயர்த்தப்பட்ட, மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில், தமிழ், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். நடப்பாண்டில், 100 மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு, 100 தலைமையாசிரியர்கள், 900 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடம் உருவாக்கப்படும். இதற்காக, ஆண்டுக்கு, 31.82 கோடி செலவாகும். விபத்தில் பெற்றோர் இறந்துவிட்டாலோ, நிரந்தர முடக்கம் ஏற்பட்டாலோ, அவர்களின் குழந்தைகளை, பிளஸ் 2 வரை படிக்க வைக்க, அரசு டிபாசிட் செய்யும், 50 ஆயிரம் ரூபாய், 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்

. 2,057 பள்ளிகளின் கழிப்பறைகளை பராமரிக்க, 160.77 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். 1 முதல் 7ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கையெழுத்து பயிற்சி ஏடுகள்; 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஓவியப் பயிற்சி ஏடுகள்; 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் செய்முறை பயிற்சி ஏடுகள், இலவசமாக வழங்கப்படும். நீலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், ஐந்து உண்டு உறைவிட பள்ளிகள் அமைக்கப்படும். இவற்றுக்கு, ஐந்து முழுநேர ஆசிரியர்களும், மூன்று பகுதி நேர ஆசிரியர்களும் நியமிக்கப்படுவர். துவக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு, 72.90 கோடி ரூபாயில், 1,175 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10, பிளஸ் ? மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, நாட்காட்டியுடன் கூடிய குறிப்பேடு வழங்கப்படும். இவ்வாறு, ஜெயலலிதா அறிவித்தார்.

ஆக.,4ல் கல்வி அதிகாரிகள் கூட்டம்

சென்னையில் ஆக.,4ல் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின் நேர்முக உதவியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. பள்ளிகல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், அத்துறை உயரதிகாரிகள், 32 மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின் நேர்முக உதவியாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதில், "மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ், சைக்கிள், காலணிகள், சீருடை உள்ளிட்ட 14 வகை நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது, கடந்த கல்வியாண்டில் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், அதை அதிகப்படுத்துவது எப்படி, கோர்ட்டில் உள்ள வழக்குகள், பள்ளிகளில் மழை நீர் சேகரிப்பு அமைக்கப்பட்டது உள்ளிட்ட, பல்வேறு விபரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக,”கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

128 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் , 42 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி முதல்வர் உத்தரவு

புதிய ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 382 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், தாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்விக்காக வைப்பீடு செய்யப்படும் நிதியானது ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

     இதுகுறித்து, சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:

       நடப்புக் கல்வியாண்டில் 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகமுள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளுக்கு தலா ஒரு தொடக்கப்பள்ளி வீதம் 128 பள்ளிகள் தொடங்கப்படும். இதற்கென 256 ஆசிரியர்கள் (ஒரு தலைமை ஆசிரியர், ஒரு இடைநிலை ஆசிரியர்) நியமிக்கப்படுவர். இந்தப் பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

       இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மூன்று கிலோமீட்டருக்கு ஒரு நடுநிலைப் பள்ளி அவசியம். அதன்படி, பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இதற்கென 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

       மேலும், நடப்பு கல்வியாண்டில் 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இந்தப் பள்ளிகளுக்கென 50 தலைமை ஆசிரியர்கள், 250 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும்.

   ஆயிரம் பணியிடங்கள்: கடந்த மூன்று ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. நடப்பு கல்வியாண்டில் 100 பள்ளிகள் அதுபோன்ற தரம் உயர்த்தப்படுகின்றன. இதற்கென 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் ஆயிரம் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

      வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை விபத்தில் இறந்தாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அவர்களின் குழந்தைகள் கல்வியை தொடர்ந்து கற்கும் வகையில், ரூ.50 ஆயிரம் வைப்பீடாக வைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொகை ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை மாணவ-மாணவியரின் கல்விச் செலவு, பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும்.

       கழிவறைகள் பராமரிப்பு: தமிழகத்தில் கழிவறைகள் இல்லாத 2 ஆயிரத்து 57 பள்ளிகளுக்கு கழிவறை வசதிகள் செய்யப்பட்டன. இந்தக் கழிவறைகளை பராமரிக்க ரூ.160.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதனால், 56 லட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Tuesday, July 29, 2014

தமிழகத்தில் டிஇஓ பதவி உயர்வு : 15 மாவட்ட கல்வி அலுவலர்களாக தலைமை ஆசிரியர்கள் நியமனம-tnkalvi


தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு தாமதம் காரணமாக 15 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கு தலைமை ஆசிரியர்களை கூடுதல் பொறுப்பாக நியமித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்களாக பணியாற்றிய 15 பேருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக கடந்த 25ம் தேதி பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இவர்கள் உடனே புதிய பணியிடங்களில் சேரவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.

இதனால் தமிழகத்தில் 15 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதன் மூலமும், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலமும் நிரப்பப்படுவது வழக்கம்.
பதவி உயர்வு தாமதமாக� வருவதால் தற்போது 15 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கு மேல்நிலைப் பள�ளி, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அந்த நிலையில் பணியாற்றுபவர்களை மாவட்ட கல்வி அலுவலர் கூடுதல் பொறுப்பாக நியமித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் வருமாறு: (அவர்கள் தற்போது வகிக்கும் பணியிடம் அடைப்புக்குறிக்குள்)
1) சுப்பிரமணியன் (மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர், சென்னை) & ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர், சென்னை.
2) சுடலைமுத்து (தலைமை ஆசிரியர், சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி) & மாவட்ட கல்வி அலுவலர், தூத்துக்குடி.
3) முருகானந்தம் (தலை மை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, தருமத்துப் பட்டி, திண்டுக்கல் மாவட் டம்) & மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர், திண்டுக்கல்.
4) வளர்மதி (தலைமை ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை) & மாவட்ட கல்வி அலுவலர், பட்டுக்கோட்டை.
5) ராஜா (தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, தேவீரப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி.
6) சிவஞானம் (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கோவிலூர், திருவண்ணாமலை மாவட் டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், திருவண்ணாமலை.
7) வனஜா (தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கலையம்புதூர், திண்டுக்கல் மாவட்டம்) & மாவட்ட கல்வி அலுவலர், பழனி, திண்டுக்கல் மாவட்டம்.
8) லட்சுமி (தலைமை ஆசிரியர், அரசு மேல்ந�லைப்பள்ளி, இலுப்பூர், புதுக்கோட்டை மாவட்டம்) & மாவட்ட கல்வி அலுவலர், அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம்.
9) நீலவேணி (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, பழையனூர், சிவகங்கை மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், சிவகங்கை.
10) தமிழ்ச்செல்வன் (தலைமை ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி, கடலூர் மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், கடலூர்.
11) பிச்சையப்பன் (மெட் ரிக் பள்ளிகள் ஆய்வாளர், கடலூர்) & மாவட்ட கல்வி அலுவலர், கடலூர்.
12) பவுன் (தலைமை ஆசிரியர், நகராட்சி உயர்நிலைப்பள்ளி, சின்னமனூர், தேனி மாவட்டம்) & மாவட்ட கல்வி அலுவலர், உத்தமபாளையம், தேனி மாவட்டம்.
13) தெய்வசிகாமணி (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, இலந்தைக்கூடம், அரியலூர் மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், அரியலூர்.
14) சங்கரராமன் (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வில்லிசேரி, தூத்துக்குடி மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், தூத்துக்குடி.
15) ஜேக்கப் அருள் மாணிக்கராஜ் (தலைமை ஆசிரியர், இசிஇ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தென்காசி) & மாவட்ட கல்வி அலுவலர், தென்காசி, நெல்லை மாவட்டம்.

பொதுத் தேர்வுகளில் குறைந்த தேர்ச்சி: அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் விளக்கமளிக்க உத்தரவு


ு. பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா ஆகியோர் தலைமையில் மண்டல வாரியான ஆய்வுக் கூட்டங்கள் திருவள்ளூர், விழுப்புரம், கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெற உள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் 70 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் அனைவரும் இந்தக் கூட்டங்களில் பங்கேற்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு முதல் முறையாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் 90 சதவீதத்தைக் கடந்தது. பத்தாம் வகுப்பில் 90.7 சதவீதமும், பிளஸ் 2 வகுப்பில் 90.6 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அரசுப் பள்ளிகளில் 80 சதவீதத்துக்கு அதிகமான மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 97 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

கடந்த ஆண்டு இதேபோன்ற மண்டல ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகுதான் அரசுப் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் குறைந்தபட்சம் தேர்ச்சி பெறுவதற்கான வழிகாட்டி கையேடுகள் தயாரித்து வழங்கப்பட்டன. இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் உயர்ந்ததற்கு இந்தக் கையேடுகளும் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கில வழிப் பிரிவுகள், தமிழ் கற்றல் சட்டம்: 2014-15 ஆம் ஆண்டில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை விவரம், கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தைச் செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரம், பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு போன்றவை குறித்தும் இந்தக் கூட்டங்களில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. அதோடு பள்ளிகளில் உள்ள குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாகவும் மண்டல கூட்டங்களில் ஆய்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு தகவல்

  இந்த ஆண்டு புதிதாக 887 இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டில் 9,692 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதன் காரணமாக, இப்போது இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் குறைவான காலிப் பணியிடங்களே உள்ளன. கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 30 ஆயிரத்து 592 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அவர்களில் 887 பேர் மட்டுமே இந்த ஆண்டு பணி நியமனம் செய்யப்படுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் 42 ஆயிரத்து 109 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் இந்த ஆண்டு சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பள்ளி இடைநிற்றல் விகிதம் குறைந்தது உண்மையா?

தமிழகத்தில், மாணவர்களின் இடைநிற்றல் (டிராப் அவுட்ஸ்) விகிதம் குறைந்து விட்டதாக, தமிழக அரசு தெரிவித்து உள்ளது. கல்வித் துறை புள்ளி விவரப்படி, 2001 - 02ல், தொடக்கநிலை வகுப்பில், மாணவர் இடைநிற்றல், 12 சதவீதமாக இருந்தது, 2013 - 14ல், 0.95 சதவீதமாக குறைந்துவிட்டது என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடுநிலை வகுப்புகளில், 2001 - 02ல், 13 சதவீதமாக இருந்த இடைநிற்றல், 2013 - 14ல், 1.65 சதவீதமாக குறைந்துவிட்டதாகவும், கல்வித் துறை தெரிவித்து உள்ளது. ஆரம்ப, நடுநிலை வகுப்புகளில், மாணவர் சேர்க்கை, 99 சதவீதமாக இருப்பதாகவும், கல்வித் துறை தெரிவித்து உள்ளது. '

மாணவர்களுக்கு, இலவச நோட்டு புத்தகம், பாடப் புத்தகம், இலவச சைக்கிள், 'லேப் - டாப்' உட்பட, 14 வகையான இலவச திட்டங்கள் வழங்கப்படுவதால், மாணவர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். இதன் காரணமாக, கிராமப்புறங்களில், பள்ளி இடைநிற்றல் அளவு, கணிசமாக குறைந்துவிட்டது' என, கல்வித் துறை வட்டாரம் கூறுகிறது. இதுகுறித்து, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது

: இடைநிற்றல் குறித்தும், முழுமையான அளவில், அனைத்து குழந்தைகளும், பள்ளிகளில் சேர்ந்தார்களா என்பது குறித்தும், கல்வித் துறை அல்லாத பிற அமைப்புகளிடம், முழுமையான புள்ளி விவரம் இருக்கிறதா என, தெரியவில்லை. இடைநிற்றல் விகிதம் குறைந்திருப்பது சரியாக இருக்கலாம். ஆனால், பள்ளி சேராத தெருவாழ் சிறார்கள், இன்றும் அதிகளவில் இருக்கின்றனர். சென்னையிலேயே, பல குடிசை பகுதிகள் உள்ளன. அங்குள்ள சிறுவர்கள் அனைவரும் கல்வி கற்கின்றனர் என்பதை, உறுதியாக கூற முடியாது. எனவே, தெருவாழ் சிறுவர்கள், குடிசை பகுதிகளில் வாழும் சிறுவர்கள் மற்றும் பிழைப்பிற்காக, ஒரு பகுதியில் இருந்து, மற்றொரு பகுதிக்கு குடியேறிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஆகிய அனைவரையும், ஆரம்பப் பள்ளிகளில் சேர்ப்பதை, கல்வித் துறை உறுதி செய்ய வேண்டும். அத்துடன், அவர்கள், தொடர்ந்து கல்வி கற்பதையும் கண்காணிக்க வேண்டும். இதை செய்தால் தான், மாணவர் சேர்க்கையில், 100 சதவீதத்தை எட்ட முடியும். இவ்வாறு, பிரின்ஸ் தெரிவித்தார்.

TNPTF Election Form

Monday, July 28, 2014

சிந்திக்கும் திறனை மேம்படுத்த பள்ளிக்கூடங்களில் சதுரங்க போட்டிகள் பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

பள்ளிக்கூடங்களில் சதுரங்கபோட்டியை நடத்தும்படி பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

ஜெயலலிதா
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி, பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பின்படி பள்ளிக்கூட மாணவர்கள், மாணவிகள் திறமையையும் ஆற்றலையும் வளப்படுத்துவதற்கும் அவர்களின் சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும் மிகவும் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு 7 முதல் 17 வயதுள்ள பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கு சதுரங்க விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு சதுரங்கபோட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த வருடமும் போட்டிகள்
அதுபோல இந்த வருடமும் பள்ளிக்கூடம் முதல் மாநில அளவில் வரை சதுரங்க போட்டியை நடத்த வேண்டும். இந்த மாதம் 21–ந்தேதி முதல் 25–ந்தேதிக்குள் பள்ளிக்கூட அளவில் போட்டியை நடத்துங்கள். 25–ந்தேதி பள்ளி அளவில் முதல் 2 இடங்கள் பெற்றவர்கள், வயது பிரிவு வாரியாக ஒரு பிரிவுக்கு 2 பேர் வீதம், உரிய நுழைவு படிவத்தை பூர்த்தி செய்து குறுவட்ட செயலாளர் அல்லது உதவி தொடக்க கல்வி அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். 31–ந்தேதி குறுவட்ட போட்டிகள் நடத்தலாம்.

ஆகஸ்டு மாதம் 7–ந்தேதி குறுவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெற்றவர்களின் விவரத்தை படிவத்தில் பூர்த்தி செய்து, கல்வி மாவட்ட செயலாளருக்கு அனுப்ப வேண்டும். 19–ந்தேதி கல்வி மாவட்ட அளவில் போட்டி நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்களின் விவர பட்டியலை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து மண்டல அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.

செப்டம்பர் மாதம் 2–ந்தேதி மண்டல அளவில் போட்டி நடத்த வேண்டும். இதில் கல்வி மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெற்றவர்கள், வயது பிரிவு வாரியாக பங்கேற்கலாம். செப்டம்பர் மாதம் 9–ந்தேதி மண்டல அளவில் வெற்றி பெற்றவர்கள் விவரம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளருக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

மாநில அளவிலான போட்டி
அக்டோபர் மாதம் மாநில அளவிலான போட்டியை நடத்த வேண்டும். அனைத்து போட்டிகளையும் முறையாக நடத்தி ஒவ்வொரு நிலையிலும் பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கும் அனைத்து முதன்மை கல்வி அலுவலருக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் வி.சி.ராமேஸ்வர முருகன் குறிப்பிட்டுள்ளார்.

ஆக.,1க்குள் ஆசிரியர் தேர்வு பட்டியல் : டி.ஆர்.பி., தகவல்

'ஆகஸ்ட், 1ம் தேதிக்குள், 10 ஆயிரம் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது. 'வரும், 30ம் தேதி, டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்றவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும்' என, ஏற்கனவே, டி.ஆர்.பி., அறிவித்து இருந்தது. இதற்கு, ஒரு சில தினங்களே அவகாசம் இருப்பதால், தேர்வு பட்டியலை எதிர்பார்த்து, தேர்வர்கள் ஆவலுடன் உள்ளனர். இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று மாலை கூறியதாவது: தேர்வு பட்டியலை, இணையதளத்தில் வெளியிடுவதற்கான பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன. திட்டமிட்டபடி, பணி முடிந்தால், வரும், 30ம் தேதி, 10,700 ஆசிரியர்களின் தேர்வு பட்டியல் வெளியாகும். பணி முடிய, சற்று கால தாமதம் ஏற்பட்டால், ஒரு நாள் தள்ளிப் போகலாம். எப்படியும், ஆக., 1ம் தேதிக்குள், இறுதி பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது

வெயிட்டேஜ் மதிப்பெண்: சிறப்பு முகாம்களுக்கு 4 ஆயிரம் பேர் வருகை


பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் திருத்தம் கோரி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சிறப்பு முகாம்களுக்கு வந்தனர். இவர்களில் சரியான ஆவணங்களுடன் வந்த சுமார் 600 பேரின் மதிப்பெண்ணில் திருத்தம் செய்யப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கொண்ட தேர்வுப் பட்டியல் சில தினங்களில் வெளியிடப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரத்து 242 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி வெளியிட்டது.  இந்த மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்காக விழுப்புரம், மதுரை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் ஜூலை 21 முதல் 26 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களுக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்காக, ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்ற சுமார் 30 ஆயிரம் பேருக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

INSPIRE award online entry