இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, February 18, 2014

பிளஸ்2 பொதுத்தேர்வுக்கு தட்கலில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

நடப்பு கல்வி ஆண்டிற்கான மேல்நிலை பொதுத்தேர்வு எழுத தேர்வுத்துறையால்   அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும்  விதமாக சிறப்பு  அனுமதி திட்டத்தில் ஆன் லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்  ஆகும்.  தேர்வு செய்யப்பட்ட மையங்களில் இதற்காக விண்ணப்பிக்கலாம். தனியார்  பிரவுசிங் சென்டர்கள் மூலம்  விண்ணப்பிக்க இயலாது. சிறப்பு மையங்கள் பற்றிய  விபரத்தை www.tndge.in என்ற  இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணத் தொகை பதிவுச் சீ ட்டில் குறிப்பிடப்பட்டிருக் கும். 

சிறப்பு மையத்தில் உரிய கட்டணங்களுடன் தேவையான சான்றிதழ்கள் மற்றும்  பாஸ்போர்ட் அளவு  புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும். உரிய தேர்வு கட்டணத்துடன் ரூ.  ஆயிரம் சிறப்பு கட்டணம் மற்றும்  ஆன்லைன்பதிவு கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.  இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறையினர்  செய்துள்ளனர்.

உயிரியல், புவியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு

உயிரியல், புவியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன. உயிரியல், புவியியல், ஹோம் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி ஆகிய பாடங்களுக்கும், உடற்கல்வி இயக்குநர் கிரேடு -1 பணியிடத்துக்குமான தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது.

இந்தத் தேர்வு முடிவு அக்டோபர் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வுக்கான முக்கிய விடைகளில் மாற்றம் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. புதிதாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மாதம் நடத்தப்பட்டது. போட்டித் தேர்வு மதிப்பெண் மற்றும் பணி அனுபவம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றி இந்த 4 பாடங்களுக்கும், உடற்கல்வி இயக்குநர் பணியிடத்துக்குமான தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வந்த பிறகு பிற பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலும் வெளியிடப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Monday, February 17, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் சார்பான அனைத்து வழக்குகளும் மீண்டும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைப்ப

ு. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் சார்பான அனைத்து வழக்குகளும் மீண்டும் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1,  அனைத்து வழக்குகளும் 17.02.14 பிற்பகல் நீதியரசர். ஆர் .சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மீண்டும் அடுத்த வாரத்துக்கு வழக்கு விசாரணையை நீதியரசர் ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடைக்கால பட்ஜெட்: 9 லட்சம் மாணவர்களின் கல்விக் கடன் வட்டியில் சலுகை

'கல்விக்காக கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் நீட்டிக்கப்படுகிறது. 31.03.2009 ஆண்டு வரை கல்விக் கடன் பெற்றவர்கள் மற்றும் 31.12.2013 ஆம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள கடன்களுக்கு இது பொருந்தும். 31.12.2013-ன் கணக்கின்படி, நிலுவையில் உள்ள வட்டியை செலுத்துவதற்கான பொறுப்பை அரசு எடுத்துக் கொள்ளும். 01.01.2014க்குப் பிறகு கொடுக்கப்பட வேண்டிய வட்டியை கடன் பெற்றவர்கள் செலுத்த வேண்டும். இதன்மூலம் கிட்டத்தட்ட 9 லட்சம் மாணவர்கள் சுமார் 2600 கோடி ரூபாய் அளவிற்கு பயன் பெறுவார்கள். நடப்பு நிதியாண்டிலேயே 2600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்தத் தொகை கனரா வங்கிக்கு மாற்றித்தரப்படும். 01.04.2009-க்குப் பிறகு வழங்கப்பட்ட கல்விக் கடன்களுக்கான மத்திய வட்டி மானிய திட்டம் 2009-10ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, எனினும் 31.03.2009-க்கு முன்பு கடன் பெற்றவர்கள் வட்டியை செலுத்த இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால் அவர்களுக்கு உதவி அளிக்க வேண்டியது அவசியமாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு மேல் நிலையில் இருந்த சில ஆயிரக்கணக்கான மாணவர்கள் மட்டுமே கல்விக் கடனைப் பெற முடிந்தது. 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகள் 25 லட்சத்து 70 ஆயிரத்து 254 மாணவர்களுக்கு 57 ஆயிரத்து 700 கோடி ரூபாய் பெறுமானம் உள்ள கடன்களை வழங்கியுள்ளன' என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

NMMS Admition card

Login Page click below

http://tndge.in/login.aspx

மத்திய பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்

*2014 - 2015 ஆம் ஆண்டுக்கான வருமானவரி உச்ச வரம்பில் மாற்றம் இல்லை.

*அடுத்த  30 ஆண்டுகளில் உலகின் 3 வதுபொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்.

* 2016-2017 ஆம் ஆண்டு நிதி  ஆண்டில்  நிதி பற்றக்குறைய 3 சதவீதமாக குறைக்க இலக்கு.

*வடகிழக்கு மாநிலங்களுக்கு 1200 கோடிகூடுதல் நிதி ஒதுக்கிடு.

*பொதுத்துறை  வங்கிகளில் பெறப்பட்ட கல்வி கடன்களுக்கு வட்டிச்சலுகை வழங்கப்படும்.

*2009 ஆம் ஆண்டு  மார்ச் மாதத்துக்கு முன் கல்விக்டன் பெற்றவர்களுக்கு வட்டிசசலுகை.

*கல்விக்கடன் வட்டிச்சலுகையால் 9 லட்சம் பேர் பயனடைவார்கள்.

*அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க புதிய சலுகை வழங்கப்படும்.

*தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு புதிய வரி ஏதும் விதிக்கப்படவில்லை.

*உற்பத்தி வரி 12 சதவீகத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படுள்ளடு.

*சிறியவகை கர்கள், பைக் உற்பத்தி வரி 12 சதவீத்தில் இருந்து 8 சதவீதமாக குறைப்பு.

*நெல்லுக்கான சேவை வரி முற்றிலும் நீக்கம்.

*34 வது நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும்.

*கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வறுமை  பெருமளவு குறைந்துள்ளது.

*செல்போன் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைவு

*ஊரக வீட்டு வசதி நிதியாக 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

Sunday, February 16, 2014

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய விளக்கங்கள


* தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.
* பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய
விடுப்பினை ஒப்படைத்து பணமாகப் பெறலாம். ஆண், பெண் இருவரும்.

* தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும்.

* ஒரு நாள் மட்டும் EL தேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.

* வருடத்திற்கு 17 நாட்கள் EL. அதில் 15 நாட்களை ஒப்படைத்து பணமாகப் பெறலாம் .

* மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும் அதை ஓய்வுபெறும் பொழுது ஒப்படைத்து பணமாகப் பெறலாம்.

* 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும்.

* வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.இதை 17ஆல் (EL) வகுத்தால் 365/17=21.

* எனவே 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.

* அரசு ஊழியர்களுக்கு மட்டும் வருடத்திற்கு 30 நாட்கள் EL (ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே). அதில் 15 நாட்களை ஒப்படைக்கலாம்.
மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச் சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம். அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.

- தோழமையுடன் - 
தேவராஜன், தஞ்சாவூர் .

Saturday, February 15, 2014

ஆசிரியர் பணி நியமனம் தாமதமாகும், புதிய நியமனம் ஜூன் மாதம் நடைபெறும்

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் குறைப்பதில் அரசு எடுத்த தாமத முடிவால் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனமும் தாமதமாகும். பிளஸ்2 பொதுத் தேர்வு முடிந்த பின்னர் சான்றிதழ் சரிப்பார்ப்பு நடக்கும். அதன் பின்னர் வெயிட்டேஜ் மதிப்பெண் நிர்ணயித்து ஜூன் மாதம் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.இதனால் அரசு வேலை நம்பி வேலை வாய்ப்பை இழந்த ஆசிரியர்கள் அல்லாடி வருகின்றனர். இந்த முறை நடைபெற்ற தேர்விலும் பல குளறுபடிகள் ஏற்பட்டது. குறிப்பாக வினாத்தாளில் பல தவறுகள் இருந்தன. இதனால் பலர் வழக்கு தொடர்ந்தனர். எனவே தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த பிரச்சனைகளை கடந்து ரிசல்ட் வெளியானது. வழக்கமாக ரிசல்ட் வெளியான சில மாதங்களில் பணி நியமனம் வழங்கப்படும்.

 ஆனால் இந்த முறை ரிசல்ட் வெளியான பின்னர் பலர் வழக்கு தொடர்ந்தனர். இதனால் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் பாதித்தது.  இதற்கிடையில் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணை இடஒதுக்கீட்டு அடிப்படையில் குறைக்க வேண்டும் என்று பல அமைப்புகள் அரசை வலியுறுத்தியது.இது தொடர்பாக தேர்வு வாரியம், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதாவுக்கு பரிந்துரைத்தது. ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. தகுதியை மட்டும் பார்க்க வேண்டும். இதில் இடஒதுக்கீடு முறை கூடாது. மதிப்பெண் குறைப்பு இல்லை என்பதில் கண்டிப்புடன் இருந்தார். இதனால் 90 மதிப்பெண் பெற்ற 25 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது.

அவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட இருந்தது. இந்த நிலையில் கடைசி கட்டத்தில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இந்த பிரச்சனையில் தலையிட்டது. இடஒதுக்கீட்டு அடிப்படையில் மதிப்பெண் குறைக்கப்பட வேண்டும். இல்லையென்றால் வன்கொடுமை சட்டம் பாயும் என்று எச்சரித்தது. இது அரசுக்கு நெருக்கடியை தந்தது. இதனால் 5சதவீத மதிப்பெண் குறைப்பை முதல்வர் அறிவித்தார். இதனால் இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. அதாவது 90 மதிப்பெண் பெற்று 25ஆயிரம் பேரும், இப்போது 82 மதிப்பெண்ணாக குறைத்துள்ளதால் கூடுதலாக 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதிதாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்க வேண்டும். இப்பணியில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள் ஈடுபடுவார்கள

். இப்போது அவர்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மார்ச் 3ம் தேதி பொதுத் தேர்வு தொடங்குகிறது. இந்த பணிக்கு முன்பாக பல ஆய்வு கூட்டம் நடக்கும். இதற்கு துறையின் இணை இயக்குனர்கள் இருக்க வேண்டும். எனவே தேர்வு முடியும் வரையில் சான்றிதழ் சரிபார்க்க முடியாது. பிளஸ்2 தேர்வு முடிந்ததும் மார்ச் மாத இறுதியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கும். எப்படியும் 10 நாட்களுக்கு மேல் இப்பணி நடக்கும். ஏப்ரல் மாதம் வெயிட்டேஜ் மதிப்பெண் பார்க்கப்படும். அதன் பின்னர் லோக்சபா பொதுத் தேர்தல் இருப்பதால், அடுத்த கல்வியாண்டில், அதாவது ஜுன் மாதம் தான் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இவாறு அவர் கூறினார்.

தமிழகத்தில், 1,851 பள்ளிகளில், புதிய வகுப்பறைகள், கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு

ு. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், மத்திய, -மாநில அரசுகளின் பங்களிப்புடன், அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் கட்டுவதற்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த 2010--11 ல், பள்ளி தகவல் மேலாண்மை அறிக்கையின் படி, ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான வகுப்பறைகள் கட்டுவதற்கு, அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் 1,851 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் புதிய வகுப்பறைகள்; 698 ஆய்வகங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுவரை, அந்தந்த பள்ளி தலைமை ஆரியர்கள் மேற்பார்வையில், கட்டடங்கள் கட்டப்பட்டு வந்தன. இனி, 'பொதுப் பணித்துறைக்கு நிதி வழங்கப்பட்டு, புதிய வகுப்பறைகள் கட்டப்படும்' என, அனைவருக்கும் இடைநிலை கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடக்கக் கல்வித் துறையில், நிறுத்தி வைக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வை வழங்க வேண்டும், என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தொடக்கக் கல்வித் துறையில், ஆண்டுதோறும், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்டவை வழங்கப்படும். கடந்த, 2013ம் ஆண்டு மே மாதத்தில் நடந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சிலிங்கில், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில், இரட்டை பட்டம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு நிறுத்தப்பட்டது. இதனால், பதவி உயர்வு கிடைக்காத பட்டதாரி ஆசிரியர் பலரும், பணியிட மாறுதல் பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், கடந்த வாரம், இரட்டை பட்டம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வை, உடனடியாக நடத்தி முடிக்க வேண்டும், என தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பணியிட மாறுதல் நடைபெறும் ஒவ்வொரு முறையும், நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி, பதவி உயர்வு மறுக்கப்பட்டு வந்தது. தற்போது, வழக்கு முடிவுக்கு வந்து, பல நாட்களாகியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கு, தொடக்கக் கல்வித் துறையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், பதவி உயர்வை எதிர்நோக்கியுள்ள ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், இந்த கல்வியாண்டில் பதவி உயர்வு வழங்கவே முடியாத நிலை உருவாகும். இதனால், உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வை வழங்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Friday, February 14, 2014

Panel Form 2014

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கையேடு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கையேடு

ஆசிரியர் தகுதித் தேர்வு: 90 மதிப்பெண்ணுக்குக் குறைவாக பெற்றவர்க்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்: அரசு உத்தரவ

. பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா இது தொடர்பாக வெள்ளிக்கிழமை ஓர் அரசாணை வெளியிட்டுள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வில் 150-க்கு 90 மதிப்பெண் (60 சதவீதம்) எடுத்தால் தேர்ச்சி பெறலாம். இந்த நிலையில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை வழங்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 82 மதிப்பெண் (55 சதவீதம்) எடுத்தாலே தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்பட்டது.

ஆசிரியர் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட். ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல், ஆசிரியர் தகுதித் தேர்வு, பிளஸ் 2, பட்டயப்படிப்பு ஆகியவற்றின் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வை பொருத்தவரை இதுவரை 90 மதிப்பெண் மற்றும் அதற்கு அதிகமாக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டது.

இப்போது தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்கப்பட்டுள்ளதால் 82 முதல் 89 மதிப்பெண் வரை எடுத்தவர்களுக்கு 36 மதிப்பெண்ணை வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனம் இருக்கும் என பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளார்.

17 முதல் 19 வரை பிளஸ் 2 தனித்தேர்வர்கள்: தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்

: தேர்வுத் துறையில் அறிவிக்கப்பட்ட நாள்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, இப்போது விண்ணப்பிக்க விரும்புவோர் தத்கல் அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களுக்குச் சென்று தனித்தேர்வர்கள் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். வேறு இடங்களில் இருந்து ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க முடியாது. இந்த சிறப்பு மையங்கள் தொடர்பான விவரத்தை ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மண்டலத் தேர்வு துணை இயக்குநர் அலுவலகங்கள் மூலமாகவும் அறிந்துகொள்ளலாம்.

வழக்கமான தேர்வுக்கட்டணமான ஒரு பாடத்துக்கு ரூ.85, நேரடித் தனித்தேர்வர்களுக்கு ரூ.187 கட்டணங்களுடன் சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000-ஐ பணமாக மட்டுமே சிறப்பு மையத்தில் செலுத்த வேண்டும். தனித்தேர்வர்கள் ("எச்'வகையினர்), தேர்வுக் கட்டணத்துடன் சான்றொப்பமிடப்பட்ட மதிப்பெண் நகல், பள்ளித் தலைமையாசிரியரிடம் பெற்ற தகுதிச் சான்றிதழ் (பள்ளி மாணவராக பதிவு செய்து தேர்வு எழுதாதவர்கள் மட்டும்), செய்முறை மதிப்பெண்களுக்கான ஆவணம் (செய்முறை அடங்கிய பாடங்களைத் தேர்வு எழுதுவோர் மட்டும்), ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றோடு சிறப்பு மையங்களுக்குச் செல்ல வேண்டும். நேரடி தனித்தேர்வர்கள் ("எச்பி' வகையினர்), தேர்வுக் கட்டணத்துடன் பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாறுதல் சான்றிதழின் அசல், இடம்பெயர்வு சான்றிதழ் அசல் (வெளி மாநிலத் தேர்வர்கள் மட்டும்), ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் செல்ல வேண்டும்.

இவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதற்கான தேதி பிறகு அறிவிக்கப்படும். இந்தத் தேர்வர்களுக்கான தேர்வு மையம் அந்தந்த மாவட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் என என தேவராஜன் அறிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை எதிர்த்து வழக்கு

சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சி.பிரியவதனா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: நான் பி.ஏ.ஆங்கிலத்தில் 64.5 சதவீதம் மதிப்பெண்களும், பி.எட். படிப்பில் 82 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ளேன். தற்போது எம்.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறேன். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்று, 104 மதிப்பெண்கள் பெற்றேன். 2012-ஆம் ஆண்டு அரசு ஆணையின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் வெயிட்டேஜ் மதிப்பெண்களை வழங்குகிறது. அதில் மேல்நிலைப் படிப்புக்கு 10 சதவீத மதிப்பெண்ணும், டிகிரி மற்றும் பி.எட். படிப்புக்கு தலா 15 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்கள் மொத்தம் 150. இந்தத் தேர்வில் 136 மதிப்பெண் பெற்றால் அதற்கு 60 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படுகிறது. 120 முதல் 135 மதிபெண்ணுக்கு 54 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படுகிறது. 105 முதல் 119 மதிப்பெண்ணுக்கு, 48 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 90 முதல் 104 மதிப்பெண்ணுக்கு 42 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. நான் தேர்வில் 104 மதிப்பெண்கள் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றேன். ஆனால், ஆசிரியர் பணி நியமனத்துக்கு நான் தேர்வாகவில்லை.

இதற்கு மேற்குறிப்பிட்ட நான்கு தேர்வுகளில் நான் பெற்ற உண்மையான மதிப்பெண்களுக்கு ஏற்ற விகிதத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படாததே காரணம். தகுதி உள்ள நபர்கள் பணி நியமனத்துக்கு பரிசீலனை செய்யபடவில்லை. அதனால் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை மாற்ற வேண்டும். அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு வெள்ளிக்கிழமை (பிப்.14) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் எஸ்.நமோநாராயணன் ஆஜராகினார். மனுவை விசாரித்த நீதிபதி பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

G.o 29 dt 14.2.14 TET weightage marks released

Thursday, February 13, 2014

TNPSC DEO Post Notification 2014

மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.

விளம்பர எண்-04/2014
அறிவிப்பு நாள் - 14.02.2014  விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014
வயது வரம்பு இல்லை
தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014
எண்ணிக்கை 11

QUALIFICATION
PG (Tamil, English, Mathematics, Physics, Chemistry,
Zoology, Botany, History & Geography)WITH B.ED
AGE
NO AGE LIMIT
REVISED SCHEMES OF EXAMINATION 

PRELIMINARY EXAMINATION: (OBJECTIVE TYPE) (DEGREE STANDARD)
General Studies 200 items / 300 marks / 3 hours
General Studies ‐ 150 items
Aptitude & Mental Ability Test ‐ 50 items(S.S.L.C Std.)
Total Marks ‐ 300
Preliminary Examination Minimum Marks:
OC                  ‐ 120
Other than OC ‐ 90

MAIN WRITTEN EXAMINATION (DEGREE STANDARD)
Paper ‐ I (Descriptive type) : General Studies ‐ 300 Marks /3 Hours
Paper ‐ II (Descriptive type) : General Studies ‐ 300 Marks / 3 Hours
Paper ‐ III (Objective type) : Education ‐ 200 Items/ 300 Marks/3 Hours (B.Ed. course syllabus)
Interview & Record – 120 Marks
Total Marks ‐ 1020 Marks
Main Examination Minimum Marks:
OC                   ‐ 408
Other than OC ‐ 306

பள்ளிக் கக்வித் துறைக்கு 17,731 கோடி

மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி வழங்கிட, 2014-15 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.17,731 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இது தொடர்பாக கூறியுள்ளதாவது:

பள்ளிக் குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் மாநில அரசின் நிதி மூலமாக நிறைவு செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்துள்ளது.

நலத்திட்டங்களுக்காக ரு.1,631 கோடி: இதற்காக 2014-15 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மாணவர்களின் நலத் திட்டங்களுக்காக ரூ.1,631 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

1 கோடியே 11 லட்சம் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக ரூ.264 கோடி.

77 லட்சம் மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்கள் வழங்குவதற்காக ரூ.106 கோடி.

20 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்காக ரூ.323 கோடி.

46 லட்சம் மாணவர்களுக்கு நான்கு சீருடைகள் வழங்குவதற்காக ரூ.409 கோடி.

90 லட்சம் மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்குவதற்காக ரூ.120 கோடி.

77 லட்சம் மாணவர்களுக்கு காலணிகள் வழங்குவதற்காக ரூ.120 கோடி.

9.39 லட்சம் மாணவ, மாணவியருக்கு வரைபடப் புத்தகங்கள், ஜியாமென்ட்ரி பாக்ஸ் வழங்குவதற்காக ரூ.6.77 கோடி.

31 லட்சம் மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்குவதற்காக ரூ.216 கோடி.

மலைப் பகுதிகளில் படிக்கும் 1 லட்சம் மாணவ, மாணவியருக்கு கம்பளி ஆடைகள் வழங்க ரூ.3.71 கோடி.

36 லட்சம் மாணவியர்களுக்கு சானிடரி நாப்கின் வழங்க ரூ.56 கோடி.

இலவச லேப்-டாப் வழங்கும் திட்டத்துக்கு ரூ.1,100 கோடி: கடந்த 3 ஆண்டுகளில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் 22 லட்சம் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப் வழங்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் ரூ.1,100 கோடியில் பிளஸ் 2 மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 5.5 லட்சம் லேப்-டாப் வழங்கப்படும்.

பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை நிறைவு செய்ய ரூ.250 கோடி: வரும் நிதியாண்டில் பள்ளிகளின் கட்டமைப்புத் தேவைகளை நிறைவு செய்ய நபார்டு வங்கியின் மூலம் ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக ரூ.700 கோடியும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்துக்கு ரூ.384 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இடைநிற்றலைக் குறைப்பதற்கான ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.381 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.