இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, February 11, 2014

பத்தாம் வகுப்புத் தேர்வுன மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க ஆசிரியர்களுக்குப் பயிற்ச

பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்காக மாநிலம் முழுவதும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதும் மாணவர்கள் முதல்முறையாக பொதுத்தேர்வை எதிர்கொள்ளவுள்ளனர். இந்த மாணவர்களின் தேர்வு அச்சத்தைப் போக்குதல், குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் தாழ்வு மனப்பான்மையைப் போக்குதல், தேர்வு எழுதுவதற்கான அறிவுரைகள் தொடர்பாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து மாநில அளவில் இந்தப் பயிற்சியை வழங்க உள்ளன. முதல் கட்டமாக, கல்வி மாவட்டத்துக்கு 2 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தம் 130 ஆசிரியர்களுக்கான பயிற்சி சென்னையில் பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த ஆசிரியர்கள் தங்களது கல்வி மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சியை வழங்குவார்கள். மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பதன் மூலம், அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் 8 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

TET candidates to know your roll number 2013

டி.இ.டி., புதிய மதிப்பெண்: டி.ஆர்.பி., இணையத்தில் விவரம்

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப்பின், புதிய மதிப்பெண் விவரம், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த 3ம் தேதி, டி.இ.டி., தேர்வில், 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்து, முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்வர் பெற்ற மதிப்பெண் விவரங்களை, மீண்டும், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது.

முதல்வர் அறிவிப்பின்படி, 55 சதவீத மதிப்பெண் (150க்கு 82) எடுத்து, தேர்ச்சி பெற்றதை, இணையதளத்தில் பார்த்து, உறுதி செய்து கொள்ளலாம். மேலும், பல தேர்வர்கள், தங்கள் தேர்வு பதிவு எண்ணை தவறவிட்டு விட்டதாகவும், இதனால், மதிப்பெண் விவரத்தை அறிய முடியவில்லை என்றும், டி.ஆர்.பி.,யிடம் தெரிவித்தனர். இப்படிப்பட்ட தேர்வர்கள், தங்கள் விண்ணப்ப எண்களை பதிவு செய்தால், தேர்வு பதிவு எண்களையும், மதிப்பெண் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். முதல்வர் அளித்த சலுகையினால், தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை, 40 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம், தெரிவித்தது. இவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்துவது குறித்து, அதிகாரிகள், தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Monday, February 10, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேறினாலும் 15 ஆண்டுகள் கழித்தே வேலைவாய்ப்பு : புலம்பும் ஆசிரியர்கள dinamalar

்"தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு 2013--14 க்குள் வேலை உத்தரவாதம் கிடைக்காவிடில், குறைந்தது 15 ஆண்டு கழித்தே வாய்ப்பு இருக்கும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொடக்கக் கல்வித்துறையில், 1 முதல் 5 ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற அரசாணை உள்ளது. 6 முதல் 10 ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கலாம் என்பதால், இவர்களுக்கான காலியிடங்களை பொறுத்து, அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கிறது. இது போன்ற நிலை, இடைநிலை ஆசிரியர்களுக்கு இல்லாததாலும், தகுதித்தேர்வு தேர்ச்சி அவசியம் என்பதாலும் ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் குறைந்து வருகிறது

. அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களை கூட, நிரப்ப முடியாமல் உள்ளது. இந்நிலையில், 2012ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது, தகுதித்தேர்விற்கான கட்ஆப் தளர்வு 55 சதவீதமாக குறைந்துள்ளதால், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் என, மொத்தம் 57 ஆயிரம் பேர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏற்கனவே 27 ஆயிரம் பேருக்கு, சான்று சரிபார்த்த நிலையில், மேலும், 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் சான்று சரிபார்த்தல் நடக்கவிருக்கிறது. இவர்களில் 80 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என, கல்வித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தாலும், அந்தளவிற்கு ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை என்பதால், தகுதித்தேர்வில் தேறிய ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

அதிகாரி ஒருவர் கூறுகையில், " 2013--14ம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வித்துறையில் ஏராளமானோர் பணி ஓய்வு பெறுகின்றனர். இவர்களுக்கு பதில் பணி வாய்ப்பு பெறுவோர் தவிர, மற்றவர்களுக்கு கிடைக்க, பல ஆண்டுகள் ஆகிவிடும் சூழல் உள்ளது. 2013--14 ல் பணி ஓய்வு பெறுவோருக்கு பின், அடுத்தடுத்த ஆண்டில் ஓய்வு எண்ணிக்கை மிக குறைவு. காரணம், தற்போது பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பலர் சிறு வயதினர். இவர்கள் ஓய்வு பெற 15 முதல் 20 ஆண்டுகளை கடக்க வேண்டும். இதை கணக்கிட்டு தான், சிலர் தங்களது பிள்ளைகளை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்க்க தயங்கி உள்ளனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இந்நிலை தொடர்கிறது. 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என, அரசு வெளியிட்டாலும், அதற்கான காலியிடங்கள் மிக குறை என, கல்வித் துறையினர் கூறுகின்றனர். சான்று சரிபார்த்தவர்களுக்கான பணி நியமனமும் 2014 ஜூனை தாண்டும்,” என்றார்.

பி.எப்., நிரந்தர கணக்கு எண் அமைச்சகம் புதிய திட்டம

தொழிலாளர் சேம நல நிதியகத்தில் (இ.பி.எப்.ஓ.,) உள்ள, ஐந்து கோடி உறுப்பினர்களுக்கும், நிரந்தர கணக்கு எண் வழங்கும் படி, தொழிலாளர் நல அமைச்சகம், சேம நல நிதியகத்திடம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, தொழிலாளர் நலத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:தொழிலாளர் சேம நல நிதியகத்தில், தற்போது, 5 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு, அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் வாயிலாக, கணக்கு எண்களை, சேம நல நிதியகம் வழங்கியுள்ளது.

இவர்கள், ஒரு நிறுவனத்திலிருந்து, மற்றொரு நிறுவனத்துக்கு செல்லும் போது, அவர்களின் கணக்கு மற்றும் எண்ணும் மாறுகிறது. இதனால், அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளும் பாதிக்கப்படுகின்றன.குறிப்பாக, கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், ஒப்பந்தம் முடிந்ததும், வேறொரு நிறுவனத்திற்கு பணியாற்றச் செல்வர். இதனால், தொழிலாளர் சேம நல நிதியின் பயன்கள், இவர்களுக்கு முழுமையாக கிடைப்பது இல்லை.இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 5 கோடி உறுப்பினர்களுக்கும், நிரந்தர கணக்கு எண் வழங்கும் படி, சேம நல நிதியகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, தொழிலாளர் நலத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து ரயில்வே தொழிலாளர்களுக்கு விலக்கு: ரயில்வே அமைச்சகம் பரிந்துரை

புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து ரயில்வே தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசிடம் ரயில்வே அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதனையடுத்து வேலை நிறுத்த கோரிக்கைகளை அரசு ஏற்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 52 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரயில்வே தொழிலாளர்களிடையே காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. விஆர்எஸ் கொடுக்கும் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்குவது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

பிப்ரவரி 17-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் பொது மகா சபையைக் கூட்டி வேலை நிறுத்த நோட்டீஸ் மற்றும் காலவரையற்ற வேலை நிறுத்ததுக்கான தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தை கடந்த வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அந்தப் பேச்சவார்த்தையில் ரயில்வே அமைச்சரால் நியமிக்கப்பட்ட ரயில்வே வாரிய தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவர் புரோகித், பொதுச் செயலாளர் எஸ்.ஜி.மிஸ்ரா ஆகியோருடன் நிர்வாகத் தலைவரான நானும் கலந்துகொண்டேன். பேச்சுவார்த்தையின் முடிவில் ராணுவத்துக்கு இணையாக ரயில்வே தொழிலாளர்களையும், புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து விலக்கி மத்திய அரசிடம் ரயில்வே அமைச்சகம் கேட்டுக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் வாரிசுகளுக்கு வேலை தரும் திட்டத்தில் வேலை வழங்கும்போது ஏற்கெனவே உள்ள குடியிருப்பை வாரிசுகளுக்கு மாற்றி தருவது என்றும், மொத்த பணிக்காலம் 20 ஆண்டுகள் இருந்தால் போதும் என முடிவெடுக்கப்பட்டது. இதர கோரிக்கைகளில் அடிப்படை சம்பளத்தோடு டி.ஏ. வை இணைப்பது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவை அறிவிக்கும் எனவும், மற்ற கோரிக்கைகளில் உடன்பாடு காணப்பட்டு கூட்டுக் குழு ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  எனினும் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்த இறுதி முடிவு பிப்ரவரி 17-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றார் என்.கண்ணையா.

யுபிஎஸ்சி தேர்வு: அனைத்து பிரிவினரும் கூடுதலாக 2 முறை தேர்வு எழுதலாம்

யுபிஎஸ்சி எனப்படும் இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வை இந்த ஆண்டு முதல் அனைத்துப் பிரிவினரும் கூடுதலாக இரண்டு முறை எழுதலாம். இது குறித்து மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில், "2014-ம் ஆண்டு முதல் அனைத்துப் பிரிவினரும் 2 முறை கூடுதலாக தேர்வு எழுதுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேவையெனில், அனைத்துப் பிரிவிலும் இத்தேர்வை எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பிலும் தளர்வு செய்யப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"வயது வரம்பில் தளர்வு குறித்த குழப்பத்தை தீர்க்க, விரைவில் அறிவிக்கை வெளியிடப்படும்' என்று பணியாளர் நலத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மத்தியப் பணியாளர் தேர்வாணையம் 2013-ம் ஆண்டு வெளியிட்ட அறிவிக்கைப்படி, யுபிஎஸ்சி தேர்வை அதிகபட்சமாக பொதுப்பிரிவினர் 4 முறையும் (30 வயதுவரை), ஓபிசி பிரிவினர் அதிகபட்சமாக 7 முறையும் (33 வயதுவரை) தேர்வு எழுதலாம். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 35 வயதுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுத முடியும். அரசின் புதிய அறிவிப்பு, ஏற்கெனவே தனது 4 வாய்ப்புகளையும் பயன்படுத்திய 30 வயதிலான பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது.

Friday, February 07, 2014

ஆசிரியர்கள் ஆன்-லைன் பதிவை பள்ளிகளிடம் ஒப்படைக்கக்கூடாது: தொடக்க கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை

''ஒன்றிய அளவிலான, தொடக்க, நடுநிலைப்பள்ளி, ஆசிரியர்களின் விபரங்களை, ஆன்-லைனில் பதிவேற்றம் செய்வதை, அந்தந்த பள்ளிகளிடம் ஒப்படைக்கக்கூடாது, என தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. "ஒன்றிய அளவில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், 25 வகையான விபரம், உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் செயல்படும் கல்வி தகவல் மேலாண்மை முறை (இ.எம்.ஐ.எஸ்.,) மூலம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதை உள்ளீடு செய்யும் அதிகாரம், அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு, மட்டுமே உள்ளது. ஆசிரியர்களால் அளிக்கப்படும் விபரங்கள், உதவி கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்படும், ஆசிரியர்களின் பணிப் பதிவேட்டுடன், சரிபார்த்த பின்னரே, இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். ஆனால், சில ஒன்றியங்களில், துவக்க மற்றும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, நேரடியாக உதவி கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள, 'யூசர் ஐ.டி., பாஸ்வேர்டு' வழங்கப்பட்டு, அப்பள்ளியில் பணிபுரியும், ஆசிரியர்களின் விபரங்கள், இணையதளத்தில் உள்ளீடு செய்யப்படுகிறது. இது குறித்து, தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு, பல்வேறு தரப்பில், புகார் சென்றது. இதையடுத்து, தொடக்க கல்வி இயக்குனரகம் சார்பில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள உத்தரவில் 'தேசிய தகவல் மையத்தால், உதவி தொடக்க கல்வி அலுவலகங்கள் மட்டுமே, பயன்படுத்தும் வகையில், மென்பொருள் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது

. பள்ளி தலைமை ஆசிரியர்கள், நேரடியாக அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விபரங்களை, இணையதளத்தில் உள்ளீடு செய்தல் கூடாது. ஒன்றிய அளவில் செயல்படும் 'இ.எம்.ஐ.எஸ்' குழுக்கள் மூலம், மட்டுமே மேற்கொள்ள வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

G.O 234

Thursday, February 06, 2014

TNPSC Group II Notification &online Apply

தமிழகத்தில் +2 செய்முறைத் தேர்வுகள் இன்று தொடக்கம

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவியர் செய்முறைத் தேர்வில் பங்கேற்கின்றனர். பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் நடத்துவது வழக்கம்.

இன்று தொடங் கும் இந்த ஆண்டுக்கான செய்முறைத் தேர்வுகள், இரண்டு கட்டமாக நடத்தப்படுகின்றன. முதற்கட்டமாக 7ம் தேதி முதல் 14ம் தேதி வரையும், 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் செய்முறைத் தேர்வுகள் நடத்த தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 3000 மேனிலைப் பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவியர் செய்முறை தேர்வில் பங்கேற்க உள்ளனர். சென்னை மாவட்டத்தில் 407 மேனிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளின் மூலம் 53 ஆயிரம் மாணவ மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர்.

அவர்களில் 30 ஆயிரத்து 242 பேர் செய்முறைத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். சென்னையில் செய்முறைத் தேர்வுகள் முதற்கட்டமாக 7ம் தேதி முதல் 14ம் தேதி வரையும், 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை இரண்டாம்கட்டமாகவும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் 299 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுத் தேர்வு பதிவெண் ஒதுக்கீட்டில் மாற்றம் : தொடருது தேர்வுத் துறையின் "புதுமை'-dinamalar

  தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மாணவர்களுக்கு பதிவெண் ஒதுக்கீடு செய்வது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு பொதுத் தேர்வுகளில், அடுத்தடுத்து பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள், சம்பந்தப்பட்ட மாணவரின் "போட்டோ' இருக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது

. தேர்வு எழுதியவுடன், தேர்வு மையத்திலேயே, மாணவர் பெயர், பள்ளி பெயர், பதிவெண் பகுதியை, அறை கண்காணிப்பாளர் கிழித்து வைத்துக் கொள்ளும் வகையிலும், மாணவர் எழுதிய விடைத்தாளை "பார்கோடிங்' முறையில் மட்டுமே, அடையாளம் காணும் வகையிலும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு பதிவெண்கள் வழங்கும் முறையிலும் புதுமை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தேர்வுத் துறையால் ஒதுக்கப்பட்ட மையங்களில், வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் சேர்க்கப்பட்டால், அந்த மையத்தில் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் "ரேண்டம்' முறையில், பதிவெண் ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால், ஒரே பள்ளி மாணவர்களுக்கு, அடுத்தடுத்த தேர்வு எண்கள், இனிமேல் கிடைக்காது. இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: நூறு சதவீதம் தேர்ச்சிக்காக, சுமாராக படிக்கும் மாணவர், நன்றாக படிக்கும் மாணவரை பார்த்து, ஒரு மதிப்பெண் பகுதி கேள்விகளை எழுத, சில பள்ளிகளில் ஏற்பாடு செய்துவிடுகின்றனர்.

மேலும், "அறை கண்காணிப்பாளர்களே ஒரு மதிப்பெண் கேள்விக்கான பதிலை, மாணவர்களுக்கு கூறி விடுகின்றனர்' என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் தான், இந்த புதிய முறையை, இயக்குனர் தேவராஜன், இந்த ஆண்டு அறிமுகப்படுத்தி உள்ளார். பதிவெண்களை அவரே ஒதுக்கீடும் செய்கிறார். வேறு வேறு பள்ளி மாணவர்களை கலந்து உட்கார வைப்பதால், விதிமீறல்கள் தடுக்கப்படும், என்றார்.

2,269 இடங்களை நிரப்ப மே 18ல் குரூப் - 2 தேர்வு

"உதவியாளர், குமாஸ்தா உள்ளிட்ட பணிகளில், காலியாக உள்ள, 2,269 இடங்களை நிரப்ப, மே, 18ல், போட்டி தேர்வு நடக்கும்' என, அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்து உள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில், உதவியாளர், "கிளர்க்' என்ற குமாஸ்தா நிலையில், 2,269 பணியிடங்கள், காலியாக உள்ளன.

2012 - 13ல் ஏற்பட்ட இந்த காலி இடங்களை நிரப்ப, மே, 18ல், போட்டி தேர்வு நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., நேற்று அறிவித்தது. பட்டதாரிகள், www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக, மார்ச், 5 வரை விண்ணப்பிக்கலாம். வங்கி அல்லது அஞ்சலகங்களில், கட்டணம் செலுத்த, மார்ச், 7 கடைசி நாள். கூடுதல் விவரங்களுக்கு, தேர்வாணைய இணையதளத்தை பார்வை இடலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: சலுகைக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பெண் 82

, ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் 150-க்கு 82 மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெறலாம். இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்:

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான தேர்ச்சி மதிப்பெண் (60 சதவீதம்) 150-க்கு 90 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிளித்த முதல்வர் ஜெயலலிதா, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என அறிவித்தார். இந்த மதிப்பெண் சலுகைக்குப் பிறகு இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82.5 ஆகக் குறைகிறது. இந்த மதிப்பெண்ணை முழு மதிப்பெண்ணாக மாற்றுவதற்காக இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82 என நிர்ணயம் செய்யப்படுகிறது. அதேநேரத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற பொதுப்பிரிவினர் 150-க்கு 90 மதிப்பெண் பெற வேண்டும்.
இந்த மதிப்பெண் சலுகையையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. இனி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுகளிலும் பொதுப்பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 90 எனவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் 82 எனவும் நிர்ணயிக்கப்படுவதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பேர் வரை அதிகரிக்கலாம்: இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை 82.5-க்குப் பதில் 82 என நிர்ணயித்துள்ளதால் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக 10 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் மட்டுமே இடம்பெறும். எனவே, 82.5 என்ற மதிப்பெண்ணுக்குப் பதிலாக 82 அல்லது 83 என்ற முழு மதிப்பெண் மட்டுமே தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் வரை பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கென தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். அதன் பிறகே, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் இருக்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

G.O 25 dt 6-2-14 TET Relaxation of 5% marks

Wednesday, February 05, 2014

அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது: ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு கேட்ட வழக்குகள் தள்ளுபடி ஐகோர்ட்டு தீர்ப்பு

தகுதி தேர்வு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவின்படி, மாநில அரசுகள் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தி வருகிறது. ஆந்திரா உள்ளிட்ட 13 மாநில அரசுகள், இந்த ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு முறையை பின்பற்றுகிறது. ஆனால், தமிழக அரசு இடஒதுக்கீடு முறையை பின்பற்றவில்லை. இந்த தகுதி தேர்தவில் 60 சதவீதம் மதிப்பெண்கள் (150 மதிப்பெண்ணுக்கு 90 மதிப்பெண்) எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என்று நிர்ணயம் செய்து, தேர்வை நடத்தி வருகிறது. இது அரசியல் சட்டத்துக்கும், இடஒதுக்கீடு முறைக்கும் எதிரானது.

கொள்கை முடிவு எனவே ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘தரமான ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதில், எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ள முடியாது என்று அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. எனவே ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு வழங்க முடியாது’ என்று கூறியிருந்தது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தனர்.

அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:– அரசின் தீர்க்கமான முடிவு பொதுவாக அரசின் கொள்கை முடிவு என்பது கோர்ட்டின் பரிசீலனைக்கு கீழ் வராது. ஒருவேளை அந்த கொள்கை முடிவு தன்னிச்சையாக இருந்தால் மட்டுமே, அதில் கோர்ட்டு தலையிட முடியும். தரமான கல்வி வழங்குவதற்காக, ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி மதிப்பெண் 60 சதவீதம் என்று அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்த தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்வதில் எந்த சமரசமும் செய்ய முடியாது என்று அரசு தீர்க்கமான முடிவு எடுத்துள்ளது. மேலும், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், தகுதி மதிப்பெண்ணில் எந்த சலுகைகளும் வழங்க வில்லை. ஆனால், சம்பந்தப்பட்ட மாநில அரசு தகுதி மதிப்பெண்ணில் சலுகைகள் வழங்கலாம் என்று கூறியுள்ளது.