இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, June 26, 2013

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஒரு வாரத்தில் ஹால் டிக்கெட்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகம் முழுவதும் 2,800-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வில் பங்கேற்க மொத்தம் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 654 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களது விண்ணப்பங்கள் இப்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இந்த முறை இணையதளத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படும் எனவும், தபாலில் அனுப்பப்படாது எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Tuesday, June 25, 2013

அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் 9 மற்றும் 10ஆம் வகுப்பு கையாளும் அனைத்து பாட ஆசிரியர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி இரண்டு கட்டங்களாக வழங்க முடிவ:

ு * மாவட்ட கருத்தாளர்களுக்கான 2 நாள் பயிற்சி : 04.07.2013 & 05.07.2013

* கணித பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 10.07.2013, 11.07.2013 மற்றும் 22.07.2013, 23.07.2013  

* தமிழ் பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 12.07.2013, 13.07.2013 மற்றும் 24.07.2013, 25.07.2013  

* ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 15.07.2013, 16.07.2013 மற்றும் 26.07.2013, 27.07.2013

* சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 17.07.2013, 18.07.2013 மற்றும் 29.07.2013, 30.07.2013  

* அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 19.07.2013, 20.07.2013 மற்றும் 31.07.2013, 01.08.2013  இடம்  :

மாவட்ட அளவில் மூன்று அல்லது நான்கு இடங்களில் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
by tnkalvi

TET NOTIFICATION and SYLLABUS -courtesy teachertn

நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

  கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்கு உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

திட்டம் இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டது - அரசு இணை செயலாளர்


Monday, June 24, 2013

குரூப் - 4 தேர்வு எழுதுவோருக்கு, இலவச பயிற்சி வழங்க, வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு துறைகளில் காலியாக உள்ள 5,666 உதவியாளர், சுருக்கெழுத்தர் காலிபணியிடங்களுக்கு, ஆகஸ்ட்டில் தேர்வு நடத்த உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. குரூப் - 4 தேர்வுகளில், அதிகளவில் கிராமப்புற பட்டதாரிகள் தான் விண்ணப்பிப்பர். தேர்வுக்கு தயாராக, அவர்களுக்கு போதிய வசதி இருக்காது. எனவே, குரூப் - 4 தேர்வு எழுதும் பட்டதாரிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த, வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலர் தொண்டீஸ்வரன் கூறுகையில்,""

குரூப்- 4 உட்பட அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கும், அனைத்து தேர்வுகளை சந்திக்கும் பட்டதாரிகளுக்கு, அரசு சார்பில் இலவசமாக பயிற்சி வகுப்புகளை நடத்த, வேலைவாய்ப்புத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக, பயிற்சி அளிக்கும் ஒரு நபருக்கு, ஒரு மணி நேரத்திற்கு ரூ.100 வீதம், மதிப்பூதியம் வழங்கவும், அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மூலம், அரசு பணிகளுக்கு சென்ற, ஊழியர்களை வைத்தும், பயிற்சி அளிக்கலாம்,'' என்றார்.

உதவி பேராசிரியர் நியமனத்தில் பணி அனுபவம் கணக்கிடுவதில் தேர்வு வாரியம் புது நடைமுறை க

  உதவி பேராசிரியர் நியமனத்தில் பணி அனுபவம் கணக்கிடுவதில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் புதிய நடைமுறையால் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பணி அனுபவம், கல்வித்தகுதி, நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணி அனுபவத் துக்கு 15 மதிப்பெண்கள், கல்வித் தகுதிக்கு 9 மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்கள் என மொத்தம் 34 மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் பணி அனுபவத்துக்கு ஆண்டுக்கு 2 மதிப்பெண்கள் வீதம் அளிக்கப்பட உள்ளது. கல்வித்தகுதியில் பிஎச்டிக்கு 9 மதிப்பெண்களும், எம்.பில் பட்டத்துடன் ஸ்லெட் அல்லது நெட் தேர்ச்சி பெற்றிருந்தால் 6 மதிப்பெண்களும், முதுகலை பட்டத்துடன் ஸ்லெட் அல்லது நெட் தேர்ச்சி பெற்றிருந்தால் 5 மதிப்பெண்களும் அளிக்கப்பட உள்ளன. மேலும் இந்த தேர்வில் ஸ்லெட், நெட், பிஎச்டி முடித்த நாளில் இருந்து பணி அனுபவத்தை கணக்கிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது

. இந்த நடைமுறையால் ஏற்கனவே அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் முதல் ஷிப்டில் 500 பேரும், 2வது ஷிப்டில் 1,661 பேரும் கவுரவ விரிவுரையாளர்களாக உள்ளனர். இதில் முதல் ஷிப்டில் 110 பேர், 2வது ஷிப்டில் 250 பேர் என மொத்தம் 360 கவுரவ விரிவுரையாளர்கள் மட்டுமே ஸ்லெட், நெட், பிஎச்டி முடித்துள்ளனர். அதிலும் 250க்கும் மேற்பட்டோர் சமீபத்தில் முடித்துள்ளதால், பணி அனுபவ மதிப்பெண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 2,161 கவுரவ விரிவுரையாளர்களில் அதிக பட்சமாக 100 பேருக்கு மட்டுமே பணி கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்க மறுப்பு, விசாரணை வருகிற ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு -

உயர்நீதிமன்றம் இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று (24.06.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில் ஒரு தரப்பு தனி நீதிபதி தீர்ப்பிற்கு விதித்த இடைகால தடையை நீக்க வலியுறுத்தப்பட்டது, ஆனால் இருதரப்பும் இந்த வழக்கை விரைவில் முடித்து கொள்ள வேண்டும்  என்று தான் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர்.  ஆகையால் வழக்கிற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க அவசியமில்லை என்றும், இவ்வழக்கு அடுத்த மாதம் ஜூலை 16 தேதி முதல் தொடர்ந்து விசாரித்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இரட்டைப்பட்ட வழக்கின் நிலை

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்க மறுப்பு, விசாரணை வருகிற ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம் :

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று (24.06.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில் ஒரு தரப்பு தனி நீதிபதி தீர்ப்பிற்கு விதித்த இடைகால தடையை நீக்க வலியுறுத்தப்பட்டது, ஆனால் இருதரப்பும் இந்த வழக்கை விரைவில் முடித்து கொள்ள வேண்டும் என்று தான் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

ஆகையால் வழக்கிற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க அவசியமில்லை என்றும், இவ்வழக்கு அடுத்த மாதம் ஜூலை 16 தேதி முதல் தொடர்ந்து விசாரித்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடக்க/உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான முதன்மை கருத்தாளர் பயிற்சிகள் பற்றிய விபரம்


Sunday, June 23, 2013

Ele.dir.procedings conduct a P.T test from june last to.july last week


பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் எந்தவிதமாற்றமும் செய்யப்படவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் கூறியுள்ளார்.

மாணவர்களுக்கு யோகா, தியானம், நீதி போதனைகள், உடல் நலம் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை கற்றுத்தரும் வகையில் பாடவேளை நேரத்தில் மட்டுமே மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். பள்ளி வேலை நாள்கள் மற்றும் விடுமுறை நாள்கள், பாடவேளை நேரங்களில் மாற்றம், காலை வழிபாடு முறை, உறுதிமொழிகள் ஏற்பு போன்றவை ஆசிரியர்களுக்கு விளக்கமிக்க பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி நாட்காட்டி தயாரிக்கப்பட்டு்ளது.இந்த நாட்காட்டி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இரண்டு தினங்களுக்கு முன்பாக அனுப்பப்பட்டது.

இதில் பள்ளிகளின் கால அட்டவணை என்ற பெயரில் பள்ளி தொடங்கும் நேரம், ஒவ்வொரு பாடவேளைக்கும் ஒதுக்க வேண்டிய நேரம், யோகா, சுகாதாரக் கல்வி, சுற்றுச்சூழல் கல்வி உள்ளிட்ட பாட இணைச் செயல்பாடுகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது.ஏற்கெனவே நீதிபோதனை வகுப்புகள் போன்றவற்றை நடத்துவதே இல்லை. அவற்றை நடத்த வேண்டும் என்பதற்காக புதிய பாடவேளை அட்டவணையும் வெளியிடப்பட்டது. பள்ளிகள் தொடங்கும் நேரம் காலை 9.30 மணிக்குப் பதிலாக காலை 9 மணிக்குத் தொடங்கப்படும். இதையடுத்து பள்ளி தொடங்கும் நேரம் மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வந்தன.பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது மாதிரி கால அட்டவணை மட்டுமே.

பள்ளிகளின் நேரத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் வெளியிட்ட அறிக்கையில்: பள்ளிகளில் படிக்கும் மணவர்களுக்கு போதிய அளவில் உடற்பயிற்சி, யோகா பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். நீதிபோதனை, உடல் நலக் கல்வி, கலைக் கல்வி, வாழ்க்கைக் கல்வி, சுற்றுச்சூழல் கல்வி, முதல் உதவி பயிற்சிகள், தற்காப்புபள்ளிக் கல்வி மாணவர்களுக்கு போதிய அளவில் உடற்பயிற்சி  மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்படவேண்டும்.  நீதிபோதனை, உடல் நலக் கல்வி , கலைக் கல்வி, வாழ்க்கைக் கல்வி, சுற்றுச்சூழல் கல்வி, முதல் உதவி மற்றும்  தற்காப்பு விதிகள் போன்றவற்றை மாணவர்களுக்கு முழுமையாக கற்றுத்தர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.பள்ளிகளில் காலை வழிபாட்டுக்கூட்டம்  நடத்தப்பட வேண்டிய முறை,  தியானம்,  எளிய  உடற்பயிற்சிகள் மற்றும் யோகா நீதிபோதனை உள்ளிட்ட வகுப்புகளுக்கு இடைவெளியைத் தருவதற்காக பாடவேளைகளில் 5 நிமிஷங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மதிய இடைவேளைக்கு பின்னர் வாய்ப்பாடு சொல்லுதல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்வதைக்கேட்டு எழுதுதல் மற்றும் வெள்ளிக்கிழமை இறுதிவகுப்பில் மாணவர்களின் தனித்திறன் செயல்பாடுகள் போன்றவை நடைபெற வேண்டும் எனவும் கூறப்பட்டது

. இதனை செயல்படுத்த பாடவேளை நேரங்களில் மாற்றம் வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் கூறியுள்ளனர். அதனால், அவர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து பாடவேளைகளை மாற்றி அமைக்கப்பட்டது. அதற்காக ஒரு மாதிரி பாட காலஅட்டவணையும் தயார் செய்யப்பட்டது. இதேபோன்று பாடவேளை நேரங்களை பள்ளிகள் துவங்கும் மற்றும் முடியும் நேரத்திற்குட்பட்டு மாற்றியமைத்துக்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.  பாடவேளை கால அட்டவணையில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டன. எனவே தற்பொழுது வந்துள்ள பள்ளி நேரங்களில் மாற்றம் என்பது தவறான செய்தியாகும்.  பள்ளிகள் துவங்கும் மற்றும் முடியும் நேரம் ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பள்ளிகள் வழக்கமாக தற்பொழுது செயல்படும் நேரங்களிலேயே செயல்படும் என கே.தேவராஜன் கூறியுள்ளார்.

20.06.2013 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களால் நடத்தப்பட்ட ஆசிரிய சங்க பொறுப்பாளர்களுடனான கூட்டத்தின் போது TNPTFஆல் அளிக்கப்பட்ட கோரிக்கை கடிதம்

1.இடைநிலை ஆசிரியருக்கு 9300-34800-4200 ஊதியம் நிர்ணயம் செய்தல்.தற்போது மாதமொன்றிற்கு ரூ4750இழப்பீடு
2.சி.பி.எஸ்.ரத்து
3.ஆசிரியர் மாணவர் விகிதம் 1:10
4.முன்பருவக்கல்வி தொடங்குதல்
5.அலுவலக காலி பணியிடம் நிரப்புதல்
6.தகுதிதேர்வு கைவிடுதல்
7.கல்விக்கான தன்னாட்சி அமைப்பு
8.இலவச கல்வி உபகரணம் நேரடியாக பள்ளிக்கு அனுப்புதல்
9.மகப்பேறு விடுப்பிற்கு பதிலி ஆசிரியர் நியமணம்
10.மருத்துவப்படி ரூ50ஆக குறைத்தல்
11.அரசாணை 400 உரியதிருத்தம்
12.அரசாணை23 திருத்தம்
13.தொகுப்பூதிய கால ஊதியம் வழங்குதல்

20.06.2013 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களால் நடத்தப்பட்ட ஆசிரிய சங்க பொறுப்பாளர்களுடனான கூட்டத்தின் போது TNPTFஆல் அளிக்கப்பட்ட கோரிக்கை கடிதம்

24-6-2013 அன்று நடைபெறவுள்ள தலைமையாசிரியர் கூட்டம் அறிவுரைகள்


Saturday, June 22, 2013

TENTATIVE TRAINING schedule 2013-14

CRC

CCE&SAVL-6-7-13
READING&WRITING skills:26-10-13
simple science concept: 4-1-14

TRAININGS
RTE child protection :20-8-13
social equity:4-9-13
cyber safety:20-11-13
communicative English:4-12-13

Tentative Training schedule for 2013-14. Crc level.40% teachers only attend training


பள்ளிகளில் மதிப்பெண் சான்று பெறும்போதே, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி தவறிய மாணவர்கள், இணைய தளம் மூலம் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்து கொள்ளலாம் என, அரசு அறிவித்துள்ளது

.பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வு முடிவுகள், ஏற்கனவே வெளியான நிலையில், மதிப்பெண் சான்று வழங்கப்படுகிறது. மாணவர்கள், பள்ளிகளில் மதிப்பெண் சான்று பெறும்போது, இணைய தளம் வாயிலாக, வேலை வாய்ப்புக்கு பதிவு செய்து கொள்ள, அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.மாணவ, மாணவியர், ரேஷன் கார்டு நகல், ஜாதிச் சான்று நகல்களையும் கொண்டு செல்ல வேண்டும். ரேஷன் கார்டில், தங்களின் (பதிவுதாரர்) பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி தவறிய மாணவர்களும் பதிவு செய்து, மதிப்பெண் சான்றுடன், வேலை வாய்ப்பு பதிவு அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். 20ம் தேதி முதல், 15 நாட்களுக்கு இந்த சேவை இருக்கும் எனவும், 15 நாட்களில் பதிவு செய்வோருக்கு, ஜூன் 20ம் தேதிப் படியே பதிவு மூப்பு தரப்படும் என, வேலை வாய்ப்புத் துறை தெரிவித்துள்ளது

.வேலை வாய்ப்பு அலுவலங்களில் கூட்ட நெரிசலைத் தடுக்கவும், மாணவர்களின் அலைச்சலைப் போக்கும் வகையிலும், இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, அரசு தெரிவித்துள்ளது.

School wise enrollment class wise XL format

அனைவருக்கும் திட்ட இயக்குநரின்,பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை கேட்டல் சார்பு

school timing change from 24.6.13


Friday, June 21, 2013

பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே, இலவசமாக பயணிக்க அனுமதிக்கலாம்' என, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு, வாய்மொழி உத்தரவு இடப்பட்டுள்ளது

. மாணவ, மாணவியரின் நலன் கருதி, இலவச பஸ் பாஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவருக்கு, இலவச பஸ் பாஸ், ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஆரம்ப காலங்களில், அட்டையாக வழங்கப்பட்ட பஸ் பாஸ், கடந்த ஆண்டு, ஸ்மார்ட் கார்டாக உருமாற்றம் செய்யப்பட்டது. இதனால், தமிழகம் முழுவதும், இலவச பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. எனினும்,சென்னை, மாநகர போக்குவரத்து கழகம்- 3.50 லட்சம்; விழுப்புரம் போக்குவரத்து கழகம்- 4.79 லட்சம்; சேலம் போக்குவரத்து கழகம்- 2.79 லட்சம் பேர் என, அனைத்து போக்குவரத்து கழகங்கள் மூலம், பஸ் பாஸ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், 2013 - 14ம் ஆண்டில், 14.02 லட்சம் பேருக்கு, இலவச பஸ் பாஸ் வழங்க, 323.70 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது. விரைவில் பஸ் பாஸ் வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. தற்போது, போக்குவரத்து துறையிடம் உள்ள, மாணவர்களின் பட்டியல், கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அப்பட்டியலை, சரிபார்க்கும் பணியில், கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. திருத்தப்பட்ட பட்டியல் கிடைத்த உடன், பஸ்பாஸ் தயாரிப்பு பணியில், போக்குவரத்துத் துறை ஈடுபடும் என, தெரிகிறது. காஞ்சிபுரம், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில், பழைய பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவரை, இலவசமாக பயணிக்க அனுமதிக்கின்றனர்; சில பகுதிகளில், டிக்கெட் வசூல் செய்யப்படுகிறது; பல பகுதிகளில், மாணவர்கள், சீருடை அணிந்திருந்தாலே, இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கும்படி, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என, மாறுபட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே, இக்குழப்பமான சூழ்நிலைக்கு தீர்வு காண, பஸ் பாஸ் திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என, பெற்றோரும், ஆசிரியரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு பாட நூல் கழகம்' நிறுவனத்தின் பெயர், "தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என, மாற்றம் செய்யப்பட்ட உள்ளது.

பள்ளி பாடப் புத்தகங்கள், "தமிழ்நாடு பாடநூல் கழகம்' மூலம் அச்சிடப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு, அரசு நிர்ணயித்த விலையிலும் வழங்கப்படுகின்றன. சைக்கிள், லேப் டாப், சீருடை, செருப்பு, புத்தகப்பை உள்ளிட்ட இலவசங்கள், சிறப்பு திட்ட செயலாக்க துறை மூலம் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கான அனைத்து இலவசங்களும், இனி, "தமிழ்நாடு பாடநூல் கழகம்' மூலம் வழங்கப்பட உள்ளன. இதற்காக கழகத்தின் பெயர் மாற்றப்படுகிறது. "தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என, பெயர் மாற்றப்பட உள்ளது. மாவட்டத்திற்கு ஒரு அலுவலகம் அமைத்து, இலவச திட்டங்கள் அனைத்தும், இத்துறையின் கீழ் கொண்டு வரப்படுகின்றன

அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் தேர்வில், தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை மதிப்பெண்களை, தலைமையாசியரிடம் பெற்று, அரசுத்தேர்வுகள் இயக்கத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று, அரசுத் தேர்வுகள் இயக்கம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்கம், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த, இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழுக்கான, பொதுத் தேர்வில், சில தனித்தேர்வர்களின், அறிவியல் பாட செய்முறை மதிப்பெண்கள் பெறப்படவில்லை. எனவே, தேர்வர்கள், நிலுவையில் உள்ள செய்முறை தேர்வு மதிப்பெண்களை உரிய தலைமையாசிரியடம் பெற்று, இம்மாதம், 24ம் தேதிக்குள், அரசு இயக்கத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்கப்பட்ட தேர்வர்களுக்கு, ஒரு வார காலத்திற்குள், மதிப்பெண் சான்றிதழ்கள், தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

காலை 9 மணிக்கு இறைவணக்கம் 24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல் காலை 9 மணி முதல் துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி முறையால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 9 ம்வகுப்பு வரை முப்பருவ பாடநு£ல் முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல், பள்ளிகளின் பாடவேளை சற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பாடவேளை 45 நிமிடமாக இருந்ததை 40 நிமிடமாக  குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி துவங்கும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை 9.30 மணிக்கு துவங்கப்பட்ட பள்ளிகள் இனி காலை 9 மணிக்கே துவங்கும் என பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வரும் 24ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை அன்று கடைசி ஒரு மணி நேரம் மாணவர்களின் பண்முக திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், ஆடுதல், நடித்தல், பாடு தல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு கூறுதல், பொன்மொழி, பழமொழி கூறுதல் போன்ற நடவடிக்கையில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்த வேண்டும்  எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்: காலை 9 மணிக்கு நடைபெறும் காலை வழிபாடு முறை வாரம் தோறும் திங்கள்கிழமை மட்டும் பொது காலை வழிபாட்டு கூட்டமும், மற்ற நாட்களில் அது வகுப்பறை நிகழ்வாகவும் அமைய வேண்டும். அனைத்து மாணவர்களும் சுழற்சி முறையில் தமிழ்தாய் வாழ்த்து பாடலை பாடவேண்டும்.வாக்காளர் தினம் (ஜன 25), தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி (ஜன 30), கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் (மே5), குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி நாள் (ஜூன் 12), நல்லிணக்க நாள் (ஆக 8), பயங்கரவாத ஒழிப்பு நாள் (அக் 31), விழிப்புணர்வு வாரம் (நவ 11), தேசிய ஒருமைப்பாட்டு நாள் (நவ 19),  வரதட்சணை ஒழிப்பு தினம் (நவ 26), எயிட்ஸ் விழிப்புணர்வு நாள் ( டிச 1) ஆகிய நாட்களில் மாணவர்களை உறுதிமொழி எடுத்து கொள்ள செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.